Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

‘Gopu’win Nadaka Aakkam
‘Gopu’win Nadaka Aakkam
‘Gopu’win Nadaka Aakkam
Ebook99 pages20 minutes

‘Gopu’win Nadaka Aakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.

2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.

02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.

இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html

மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.

சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580117902076
‘Gopu’win Nadaka Aakkam

Read more from V. Gopalakrishnan

Related to ‘Gopu’win Nadaka Aakkam

Related ebooks

Reviews for ‘Gopu’win Nadaka Aakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ‘Gopu’win Nadaka Aakkam - V. Gopalakrishnan

    http://www.pustaka.co.in

    'கோபு'வின் நாடக ஆக்கம்

    ‘Gopu’win Nadaka Aakkam

    Author:

    வை. கோபாலகிருஷ்ணன்

    V. Gopalakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-1]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-2]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-3]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-4]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-5]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-6]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-7]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-8]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-9]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-10]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-11]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-12]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-13]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-14]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-15]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-16]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-17]

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-18]

    'கோபு' WIN நாடக ஆக்கம்

    'ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்’'

    (பள்ளிச்சிறுவர்கள் நடிக்க ஏற்ற வகையில்

    ஓர் போட்டிக்காக எழுதி அனுப்பி, அகில இந்திய

    அளவில் பரிசுக்குத் தேர்வான நாடகம்.)

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் நாடகம்[பகுதி-1]

    காட்சி-1

    [சிவபெருமான் அமர்ந்திருத்தல். தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானிடம் வருதல்]

    குழு:

    சிவாய நம ஓம்.. சிவாய நம ஓம். ஸம்போ மஹாதேவா .. ஸாம்பப் பரமேஷ்வரா.. ஸ்வாமி நமஸ்கரிக்கிறோம்.

    [கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்குதல்]

    சிவன்:

    வாருங்கள் மஹரிஷிகளே! வாருங்கள் தேவர்களே!! ஏது இவ்வளவு தூரம்?

    குழு:

    ஸ்வாமீ ! பக்திக்குறைவினால் உலகம் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. உலகத்தை மீண்டும் நல் வழிப்பாதையில் கொண்டு செல்ல தாங்கள் தான் ஏதாவது வழி செய்ய வேண்டும். இதைச்சொல்லவே நாங்கள் இங்கு வந்தோம்.

    சிவன்:

    யாமும் அனைத்தையும் அறிந்தோம். விரைவில் பூலோகத்தில் மனிதனாக அவதரிக்க எண்ணியுள்ளோம். கவலையின்றி சென்று வாருங்கள்.

    குழு:

    ஆஹா! மிக்க மகிழ்ச்சி. தங்களின் பூலோக அவதாரத்தில் எங்களுக்கும் தங்களை தரிஸிக்க சந்தர்ப்பம் அளித்து உதவ வேண்டும், ஸ்வாமீ.

    சிவன்:

    அப்படியே ஆகட்டும். பாரத தேசத்தில், கேரள மாநிலத்தில், காலடி என்ற சிற்றூரில் சந்திப்போமாக!

    என் சிவகணங்களில் ஒருவரான பட்டாபியை பட்டுவாகவும், மற்றொருவரான கிருஷ்ணமூர்த்தியைக் கிட்டுவாகவும் ஆக்கி, யாம் நடத்த உள்ள நாடகத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1