Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal
Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal
Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal
Ebook171 pages1 hour

Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஐன்ஸ்டீன், ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள் என்ற இந்த நூலில் நிறைய நீதிக்கதைகளும் உண்மைச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. சுவையான கதைகள் மூலம் நிறைய நீதி மொழிகளும் திருக்குறள், சாணக்கிய நீதி நூல்களின் அறிவுரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடை இடையே 16 வகைக் கடற்காற்றுகள், தங்கத்தின் பல வகைகள் முதலிய விஞ்ஞானச் செய்திகளையும் காணலாம். தமிழ் மொழியில் 20,000 பழமொழிகளுக்கு மேல் உள்ளன. அவற்றின் பின்னால் ஒரு கதை அல்லது அனுபவம் இருக்கும். அப்படிப்பட்ட பழமொழிக் கதைகளும் இங்கே எழுதப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580153509107
Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal

Read more from London Swaminathan

Related to Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal

Related ebooks

Reviews for Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஐன்ஸ்டீன், ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்

    Einstein, Hitler, Chanakyan Sonna Kathaigal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

    2. ஹிட்லர் பயம்! ஸ்வஸ்திகா பயம்! மில்லியன் ரூபாய் ‘வேஸ்ட்’

    3. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

    4. சாணக்யன் சொன்ன பெண்மணி கதை

    5. மூன்று பொம்மை கதை, சாணக்கியன் எச்சரிக்கை

    6. ரோமானிய மன்னன் எரித்த அபூர்வ சுவடிகள்

    7. தீர்கதமஸ் பற்றிய சுவையான கதைகள்

    8. முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

    9. சொன்னது எல்லாம் 100% பலிக்கும் ஜோஸியர்!

    10. ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்!

    11. திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன்

    12. இரண்டு கதைகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

    13. சாப்பாட்டு ராமன் கதைகள்

    14. அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- 2 கதைகள்

    15. ஆத்திரக்காரி எழுதிய ‘ஆசிரியருக்குக் கடிதம்’

    16. எதிரிகளுக்கு ரத்தினச் சுருக்கமான கடிதம்

    17. மாதவிலக்கா! பெண்களே கவலை வேண்டாம்!

    18. பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்

    19. ஒரு நடிகையின் விநோத ஆசை!

    20. தள்ளாத வயதில் பொல்லாத ஆசை!

    21. ஒரு குட்டிக்கதை குரு எதற்கு? கோவில் எதற்கு?

    22. மோடி ஒரு மந்திரவாதி, மோடி ஒரு தீர்க்கதரிசி

    23. ஐந்து இடங்களில் பொய் சொல்லலாம்: மஹாபாரதத்தில் வியாசர் புத்திமதி

    24. எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை!

    25. பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

    26. கூப்பிடு தூரத்தில் இறைவன்!

    27. பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது!

    28. அறியாமையே அநீதிக்குக் காரணம்

    29. திருவாதிரைக் களியின் கதை!

    30. சொட்டை, யாராவது வந்திருக்கானா? குருகைக்காவலன் கேள்வி!

    31. பாவாஹரி பாபா கதை! கல் மனமும் கரைந்தது!

    32. ‘நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையான கதை!

    33. உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா?

    34. புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்!

    35. மோடி 'டீ' விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள்

    36. வால்டேர், வெப்ஸ்டர் தப்பித்த விதம்! சூடான பதில்கள்

    37. யூத மத ‘ரப்பை’ ஜோக்குகள்!

    38. கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்!

    39. மன்னர் – முனிவர் இடையே சுவையான உரையாடல்!

    முன்னுரை

    ஐன்ஸ்டீன், ஹிட்லர்,சாணக்கியன் சொன்ன கதைகள் என்ற இந்த நூலில் நிறைய நீதிக்கதைகளும் உண்மைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சுவையான கதைகள் மூலம் நிறைய நீதி மொழிகளும் திருக்குறள், சாணக்கிய நீதி நூல்களின் அறிவுரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடை இடையே 16 வகைக் கடற் காற்றுகள், தங்கத்தின் பல வகைகள் முதலிய விஞ்ஞானச் செய்திகளையும் காணலாம். தமிழ் மொழியில் 20,000 பழமொழிகளுக்கு மேல் உள்ளன. அவற்றின் பின்னால் ஒரு கதை அல்லது அனுபவம் இருக்கும். அப்படிப்பட்ட பழமொழிக் கதைகளும் இங்கே எழுதப்பட்டுள்ளன. முன்னர் நான் எழுதி இங்கே வெளியிட்ட நூல்களில் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பற்றிய வாழ்க்கைத் துணுக்குகள் இடம்பெற்றன. இங்கு சூடான பதில்கள், ஜோக்குகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் பேச்சாளர்களுக்கும் கட்டுரை எழுதும் மாணவர்களுக்கும் பயன்தரும். பள்ளி, கல்லூரி நூலகங்களில் இடம்பெற்றால் அவர்கள் படிப்பது எளிதாகும். அதே போல போட்டிகளில், தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கும் இந்தவகை நூல்களை பரிசாகக் கொடுக்கலாம். ரயில், பஸ்களில் பயணம் எய்யும் பயணிகளுக்கும் பொழுது போக இத்தகைய புஸ்தகங்கள் பயன்தரும். பொழுதுபோக்கு அம்சத்தோடு அறிவு புகட்டும் விஷயங்களும் அடங்கிய நூல் இது.

    நான் பத்தாண்டுக்கும் மேலாகத் தொகுத்த கதைகளும் உண்மைச் சம்பவங்களும் என் பிளாக்கில் வெளியான தேதியுடன் இங்கு அச்சாகியுள்ளன; படித்து மகிழுங்கள்; சநதேகம் தெளிய எனக்கு எழுதுங்கள். இந்த நூலிலேயே எனது தொடர்பு முகவரிகள் கிடைக்கும்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர், 2022

    1. ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

    Research Article No. 2033

    Date : 1st August 2015

    ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்க ஒரு கணித வல்லுநர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டு அந்த கொள்கையை விளக்க முற்பட்டார். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த அறிஞர்கள் பொறுமை இழந்தனர்; ஒரு துணிச்சல்காரர் எழுந்து சொன்னார்:

    அன்பரே! ஐன்ஸ்டீனின் தத்துவம் 12 பேருக்கே புரிந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பேசியதோ எங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆகவே நீவீர் ஐன்ஸ்டீனுக்கும் மேலான அறிஞரே!

    (பழிகரப்பு அங்கதம் வாழ்க)

    ***

    நான் கணித மேதை அல்ல!!

    சர் வில்லியம் ராதென்ஸ்டைன் என்ற ஓவியர் ஐன்ஸ்டீனின் ஓவியத்தை வரைந்தார். இதற்காக ஓவியருக்கு முன்னால் ஐன்ஸ்டீன் மணிக்கணக்கில் உட்கார வேண்டி வந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்க வில்லை. அவருடன் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு மூலையில் சிவனே என்று அமர்ந்திருந்தார். அவ்வப்பொழுது ஐன்ஸ்டீன் சில கணிதப் புதிர்களைப் போடுவதும் அதை அவர் விடுவிப்பதுமாக இருந்தது.

    ஓவியம் வரைந்த பின்னர் ராதென்ஸ்டைன், மெதுவாக ஐன்ஸ்டீனிடம் யார் அந்த ஆசாமி என்று கேட்டார். அவரா? அவர்தான் என்னிடம் கணிதமேதையாக வேலை செய்பவர். எனக்கு கணக்கு வராது. ஆகையால் அவ்வப்பொழுது நான் போடும் கணக்குகளைச் சரிபார்க்க அவரை வைத்திருக்கிறேன் என்றார். பணக்காரர்கள் எல்லோரும் கணக்குப்பிள்ளை ஒருவரை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். விஞ்ஞானிகள், கணிதமேதைப்பிள்ளை-களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்!!

    ***

    ஐன்ஸ்டீனுக்கு சின்ன மூளை!!!

    ஆங்கிலத்தில் யாருக்காவது சின்ன புத்தி இருந்தால் "பறவை அளவுக்குதான் மூளை— bird’s brain பேர்ட்ஸ் பிரயின் – என்று கேலி செய்வர். டால்பின் போன்ற பிராணிகளுக்கு மூளை மிகவும் பெரிதாகையால் அவை மிகவும் புத்திசாலிப் பிராணிகளாக இருக்கின்றன என்றும் படிக்கிறோம். ஆனால் வியப்பான செய்தி ஐன்ஸ்டீனுக்கு நம்மைப் போன்ற சாதாரண ஆட்களைவிட மூளை சிறியது என்பது அவர் இறந்தபின்னர் உடலைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது!

    ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டு போட்டு உலகெங்கிலும் உள்ள மூளையியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்தனர். அதை ஆரய்ந்ததில் ஒரு குறிப்பிட்ட (ப்ரீ Fராண்டல் கார்டெக்ஸ்) உறுப்பு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்ததைக் கண்டனர். இதுதான் அவரை உலகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியாக்கி இருக்கிறது ((The researchers noted a uniquely formed pre-frontal cortex and concluded that this would explain the kind of abstract thinking Einstein would have needed for his experiments on the nature of space and time – such as imagining riding alongside a beam of light.))

    ***

    மந்தமான ஐன்ஸ்டீன்!

    ஐன்ஸ்டீன் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். தனியாகவே விளையாடுவார். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியன எல்லாம் வயதுக்கேற்றவாறு இல்லை.பேச்சே வரவில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் இந்தக் குழந்தை – கொஞ்சம் மந்தம்தான் – என்று சொல்லிவிட்டார். பெற்றோர்களுக்கோ பெரும் கவலை.

    ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் மேஜையில் அமர்ந்தனர். திடீரென சின்னப் பயல் ஐன்ஸ்டீன், அம்மா இந்த சூப்பு மிகவும் சூடாக இருக்கிறது என்று தாய்மொழியில் (ஜெர்மன் மொழியில்) கத்தினான். பெற்றோர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பேரானந்தம்! ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

    அடப் பாவி மகனே! தேனே! பாலே! கற்கண்டே! என் அமுதமே! குஞ்சு மணியே! ஏனடா இவ்வளவு காலம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை? என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டனர்.

    சின்னப் பையன் ஐன்ஸ்டீன் சொன்னான்:

    இவ்வளவு காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது! (அதனால் பேசத் தேவை எழவில்லை).

    இதற்குப் பின்னர் இப்படி சிறு வயதில் வளர்ச்சி குன்றி, பிற்காலத்தில் பெரும் மேதைகளாக வரும் நோய்க்கு ஐன்ஸ்டீன் சிந்Dரோம் என்று பெயர் சூட்டினர் மருத்துவ வல்லுநர்கள்.

    உங்கள் பிள்ளை கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவலைப்படாதீர்கள்" யார் அறிவார்? ஐன்ஸ்டீனை விடப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடும்!!!

    ***

    ஐன்ஸ்ட்டீனும் கடவுளும்

    ஐன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அவரே சொன்ன பதில்:–

    ஒரு சிறுவன் ஒரு நூலகத்தில் நுழைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறுவன் வியப்பான் இவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1