Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.: Tamil version
Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.: Tamil version
Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.: Tamil version
Ebook81 pages31 minutes

Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.: Tamil version

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமுதாயம் ‘காப்பி பேஸ்ட்' அல்லது 'நகலெடு ஒட்டு' என்ற பண்பு கொண்டசமுதாயமாக மாறி உள்ளது, அதனால் இன்று நாம் ஒரு காப்பி பேஸ்ட் தலைமுறையாகவே காணப்படுகிறோம். ஆக, நம்முடைய காலத்திற்கான ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ், எய்ன்ஸ்ட்டின் மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன்போன்றவர்கள் எங்கே? இன்று நாம், ஆங்கிலத்தில் ‘டெம்ப்ளேட் என கூறும் ஒரு ‘நிரந்தர வகுத்தலை’தான் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பின் பற்றுகிறோம். நாம் நிறுவிக்கும் தொழில்களில், உற்பத்தி செய்யும் பொருட்களில், நாம் செல்லும் பள்ளிக்கூடங்களில், நாம் உட்கொள்ளும் மருந்துகளில், என, இன்று நாம் காணும் பலவற்றிலும் இதே போன்ற ஒரு ஒற்றுமை இருப்பதை காண்கிறோம். இந்த புத்தகம், இந்த ஒரு தேக்கநிலைக்கு சவாலாக, இன்றைய உலகில் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கும் எல்லயற்ற சாத்தியக்கூறுகளை பற்றி உங்களை யோசிக்க வைக்கும்...

Society has transformed itself into a copy-paste culture and we as a generation are now considered a “copy-paste generation”. Where are the Isaac Newton’s, Archimedes’, Einstein’s and Thomas Edison’s of our time? We follow a template in almost every aspect of our lives. From the businesses we establish and the products we make, to the schools we attend and the drugs we take; there seems to be something similar in far too many things that exist today. This book will challenge that status quo and make you think of the endless possibilities in the world today, waiting to be discovered...

Languageதமிழ்
PublisherVeryTales
Release dateNov 21, 2016
ISBN9781370799169
Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.: Tamil version
Author

Eric Landa

VeryTales publishes books and stories from varies authors. We hope you'll enjoy reading their work as much as our authors loved writing it.

Related to Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.

Related ebooks

Reviews for Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு.

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Copy-Paste Generation, தமிழில் மொழி பெயர்ப்பு. - Eric Landa

    அறிமுகஉரை

    நன்றி. இந்த காப்பி பேஸ்ட் தலைமுறை அல்லது நகலெடு ஒட்டு தலைமுறை என்னும் புத்தகத்தை பதிவிறக்கம் – டவுன்லோட் செய்ததற்கு நன்றி. இந்த புத்தகம், நம் சமுதாயம் எவ்வாறு ஒரு 'காப்பி பேஸ்ட்' அல்லது 'நகலெடு ஒட்டு' என்ற பண்பு கொண்ட சமுதாயமாக மாறி உள்ளது, அதனால் நாம் எவ்வாறு ஒரு காப்பி பேஸ்ட் தலைமுறையாகவே மாறி விட்டோம் என்பது பற்றி நிறைய சுவாரசியமான தகவல்களை கொண்டு உள்ளது.

    மனிதர்கள் சுபாவத்திலேயே நகல் எடுக்கும் அதாவது காப்பி அடிக்கும் திறன் உள்ளவர்கள் என்பது வாழ்க்கையின் உண்மை நிலை ஆகும். நாம் பிறந்த தருணம் முதல் நம்மை சுற்றி இருப்பவர்களை பார்த்து அதே போலவே நாமும் நடக்க கற்று கொள்கிறோம். நாம், விஷயங்களை இவ்வாறே கற்றும்புரிந்தும் கொள்கிறோம். நாம் வளர வளர, நம் சமூகமும்பண்பாடும் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை விரைவில் தெரிந்து கொள்கிறோம். நாம் வளரும் சமூகத்தின் கோட்பாடுகளையே பொதுவான வழக்கங்களாக நம்புகிறோம். முன்னோரின் பாதையிலிருந்து நாம் மாறு பட்டால் அது மற்றவரின் முகசுளிப்புக்கு காரணமாகிவிடுகிறது. அதனால் அநேகமாக முன்தயாரித்து வைத்திருக்கும் ஒரு படிவத்திலேயே ஓடி விடுகிறோம். பிறக்கிறோம், பள்ளிக்கூடம் செல்கிறோம், வேலை தேடுகிறோம். பின்பு திருமணம் செய்து, வேலையில் முன்னேறி, ஓய்வு பெற்று, சிறிது காலம் கோல்ப் போன்றவற்றில் ஈடுபட்டு, பின்பு, இறக்கிறோம்

    மனிதர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சுழற்சி முறை இது தானே என்று தோன்றலாம்; ஆனால் அவ்வாறு அல்ல. நாம் எப்படியோ இவ்வாறு ஒரு வாழ்க்கை முறையை பயின்றுள்ளோம். ஆனால், உண்மையில் யாரும் இவை இப்படித்தான் இருக்க வேண்டியவை என குறிப்பிடவே இல்லை. ஆக, நம் காலத்திற்கான ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ், எய்ன்ஸ்ட்டின் மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன்போன்றவர்கள் எங்கே? இன்று நாம் எவ்வாறு ஆங்கிலத்தில் ‘டெம்ப்ளேட்’ என கூறும் ஒரு ‘நிரந்தர வகுத்தலைவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பின் பற்றுகிறோம் என்று கவனித்துள்ளீர்களா? நாம் நிறுவிக்கும் தொழில்களில், உற்பத்தி செய்யும் பொருட்களில், நாம் செல்லும் பள்ளிக்கூடங்களில், நாம் உட்கொள்ளும் மருந்துகளில், என, இன்று நாம் காணும் பலவற்றிலும் இதே போன்ற ஒரு ஒற்றுமை இருப்பதை காண்கிறோம்.

    நாம் எப்போது சக்கரங்களை கண்டுபிடித்தோமோ, அப்போதே மற்ற அனைத்துவிதமான நகரும் முறைகளின் வெளிப்பாடும் முன்னேற்றமும் அப்படியே நின்று போய் விட்டன. இன்றும், ' சக்கரத்தை மீண்டும் கண்டு பிடிக்கத் தேவை இல்லை ' என்னும் கருத்து நம்மை சுற்றி கூறப்படுவதை கேட்கலாம். ஆனால் ஏன் கூடாது? இது ஒரு பின் நோக்கிய, தடுக்குமுறையான எண்ணம் அல்லவோ? ஏன், சக்கரத்தை விட மேலான அல்லது அதேபோன்ற இன்னொரு போக்குவரத்து அல்லது நகரும் முறை இருந்தால் என்ன? நாம் மற்றவர்களின் கருத்து மற்றும் கண்டுபிடிப்புகளிலேயே சுகம் காண பழகிவிட்டோம். அதனால், நாம் தனித்தன்மை வாய்ந்த எதையும் நாமாகவே உருவாக்க முயலுவதில்லை.

    ஒருவேளை எல்லா சிறந்த மற்றும் முக்கியமானவை ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவோ? அப்படிப்பார்த்தால் இன்டர்நெட் என்னும் இணைய தளம் எப்படி உருவானது? மிகப்பெரிய மகத்தான நூலகத்தை சட்டைப்பையில் கொள்ளும் ஒரு கருவியின் மூலம், அனைவரும், எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உபயோகிக்கமுடியும் என்று யாரவது 30 வருடங்களுக்கு முன் யூகித்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை!

    அவற்றை பற்றியதே இந்த புத்தகம்! இந்த தேக்கநிலைக்கு சவாலாக, இன்றைய உலகில் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கும் எல்லயற்ற சாத்தியக்கூறுகளை பற்றி உங்களை யோசிக்க வைக்கும் இந்த புத்தகம், எல்லா முக்கிய வணிக-வர்த்தக கடைகளிலும் கிடைக்கும். www.ericlanda.com மூலமாகவும் கிடைக்கும்.

    இந்த புத்தகத்தை டௌன்லோடு-பதிவிறக்கம் செய்தமைக்கு மீண்டும் நன்றி. நீங்கள் படித்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்!

    எரிக் லாண்டா

    நகலெடு ஒட்டு- காப்பி பேஸ்ட்டால் பாதிக்கப்படும் துறைகள்

    ஒரு ஆரம்பமாக, புதிய படைப்புகள் முடியாமல் இருப்பதால் பழையனவற்றையே பின்பற்றும் சிலவற்றை நாம் பார்ப்போம். காபி பேஸ்ட் எவ்வாறு அகன்று பரவி இருக்கிறது என்பதை காட்ட, இதனால் வெகுவாக பாதிக்கப் பட்ட சிலவற்றை எடுத்துக்காட்டுகிறேன்.

    கல்வியாளர்கள்

    'காபி பேஸ்ட்' 'நகல் எடுத்து ஓட்டுதல்' முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் கல்வி துறை ஒன்றாகும். நிறைய மாணவர்கள், படிப்பு சார்ந்த வேலைகளை, எந்த வித தயக்கமும் இன்றி, ‘கருத்து திருட்டு’ முறையில் செய்து முடிக்கிறார்கள். இதில் விந்தை என்னவென்றால், மூலத்தை குறிப்பிட்டுவிட்டால் இவ்வாறு செய்வது அனுமதிக்கவும்

    Enjoying the preview?
    Page 1 of 1