Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Phoenix Devathaigal
Phoenix Devathaigal
Phoenix Devathaigal
Ebook107 pages37 minutes

Phoenix Devathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பீனிக்ஸ் தேவதைகள்" என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பெண்களின் பல பரிமாணங்களைச் சொல்லும். இக்கதையில் வரும் பெண்களை நீங்கள் உங்கள் அடுத்த வீட்டில், உங்கள் உறவில், ஏன் உங்களிடமே கூட கண்டிருப்பீர்கள்! தன் அறிவால், அன்பால், சமயோசிதத்தால், தியாகத்தால், ஆக்ரோஷத்தால், தன் முன் வரிசை கட்டி நிற்கும் சவால்களைத் தாண்டி எப்படி மீண்டும் காலூன்றி திடமாய் எழுகிறாள் என்பதையே இந்த 'பீனிக்ஸ் தேவதைகள்' உணர்த்துவார்கள்.

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580162409555
Phoenix Devathaigal

Related to Phoenix Devathaigal

Related ebooks

Reviews for Phoenix Devathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Phoenix Devathaigal - Nithya Sundaram

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பீனிக்ஸ் தேவதைகள்

    சிறுகதைகள்

    Phoenix Devathaigal

    Sirukadhaigal

    Author:

    நித்யா சுந்தரம்

    Nithya Sundaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nithya-sundaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அன்பாலே உருவான கூடு!

    தெளிவு

    திரிபுரசுந்தரியும் தீபாவளி பர்சேஸும்

    விடாது பந்தம்

    கீதா கல்யாண வைபோகமே!

    நான் ராகினி பேசுகிறேன்!

    ஊஞ்சல்

    பிறந்தநாள் பரிசு

    என்னை மீட்ட நான்

    எதிர்பாராதது

    இனி எல்லாம் சுபமே!

    சாட்டையடி

    கண்ணாடி இதயம்

    கலெக்டர் கயல்விழி!

    நந்தினி நான் அது

    நான் ராணி!

    தெய்வ குத்தம்

    பிராயச்சித்தம்

    அன்பாலே உருவான கூடு!

    இங்கே பாருங்கோன்னா! நான் உங்களைதான் கல்யாணம் பண்ணிண்டேன். உங்க ஆத்து மனுஷாளை இல்லை. எந்நேரமும் சமையல் அடுப்பில் கிடந்து வெந்துண்டு இருக்க என்னை எங்காத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்கலை பொரிந்து தள்ளினாள் ரமா!

    இதை எல்லாம் கேட்டுக்கொண்டு வேதனையில் கலங்கினார் தியாகு!

    பெரிய குடும்பம் என்று சொல்லிதான் கல்யாணம் செய்தேன். வரதட்சணை கூட வாங்கவில்லை. தம்பி தங்கைகளை கரையேத்த வேண்டும். இவளுடனா வாழ்க்கை? எப்படி போகுமோ தெரியலையே?

    பார்த்துக் கொண்டிருக்கும் போதே சீரியல் முடிந்து கீழே தொடரும் போட்டுட்டான்.

    சியாமளா டிவியை ஆஃப் செய்துவிட்டு, சோஃபாவைப் பிடித்தபடியே மெதுவா எழுந்து, ஏன்னா! அடுப்புல தோசைக்கல்லப் போடப்போறேன். அதுக்குள்ள மாத்திரையப் போட்டுக்கோங்கோ. என்னோட மெடிக்கல் கிட்டையும் எடுத்துண்டு வாங்கோ.

    நாலு தோசையை மத்யானம் பண்ணின சாம்பார் சகிதம் டேபிள்ள வச்சு நிமிரவும், சந்தானம் இவளிடம் மாத்திரையை நீட்டவும் சரியா இருந்தது.

    சாப்பிடும்போதே, விஸ்வம், குமார், நந்தினி மூணுபேர்கிட்ட கலந்து பேசி எப்போ குழந்தைகளோட லீவுக்கு வரான்னு கேட்டேளா?

    பேசிட்டேன் சியாமளி! அவாளுக்குள்ள கலந்து பேசி எப்போ தோதுப்படும்னு அடுத்த வாரம் சொல்றோம்னு சொல்லியிருக்கா.

    இரவு படுக்கையில் சந்தானத்துக்கு, இரவில் பார்த்த சீரியலும், திருமணமாகி வந்த அந்த பெண்ணின் பேச்சும் மனதில் வந்துபோனது மட்டுமல்லாமல் கூடவே சியாமளா தன்னைக் கரம் பிடித்த நாளும் நினைவில் வந்தது.

    இருபத்தாறு வயதான சந்தானத்துக்கு, அப்பாவின் திடீர் மறைவினாலும், அம்மாவின் உடல்நலக்குறைவாலும் அவசரமாய் பெண்பார்க்கப்பட்டு மனைவியானாள் சியாமளா!

    சியாமளா திருமணத்திற்கு முன் ஒரே ஒரு வேண்டுகோள் சந்தானத்திடம் வைத்தாள். அது அவள் டிகிரி நல்ல மதிப்பெண்களோடு முடித்து, பி.எட்டும் முடிச்சிருப்பதால் டீச்சர் போஸ்ட்-க்கு அப்ளை பண்ணி இண்டர்வ்யூவும் முடிந்ததால் வேலை கிடைத்தால் போவேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டாள்.

    சந்தானத்திற்கு, கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் விஸ்வம், முறையே ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு படிக்கும் குமார், நந்தினி என உடன்பிறப்புகள். இவர்களை ஒரு நிலமைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு வேறு.

    அதையெல்லாம் சமாளிக்கலாம். இப்போ இவர்களை நன்னா படிக்க‌ வைக்கறது முக்கியம். அதுக்கு நானும் துணையா இருப்பேன்னு சியாமளி அவனது கையைப் பிடிச்சு சொன்னது இன்னிக்கும் மறக்கலை.

    நினைத்த மாதிரியே அப்போவே ஒன்பதாயிரம் சம்பளத்தில் வேலை கிடைக்க, ஆறுமணிநேர தூக்கம் போக பாக்கி நேரம் எல்லாம் மாடாய் உழைத்தாள்.

    இவர்கள் மூவரையும் பார்த்து பார்த்து கவனித்ததில் தங்களுக்கு குழந்தை இல்லையே என்பதை நினைக்கக்கூட மறந்துவிட்டது.

    அம்மாவின் காலமும் ஆனபிறகு, இவர்களுக்கு சகலமும் சியாமளி என்று ஆனது.

    சும்மா சொல்லக்கூடாது. சியாமளியின் நிர்மலமான அன்பின் முன்னால் மூவருக்குமே அம்மையப்பன் ஆனார்கள்.

    ஒன்றன்பின் ஒன்றாய் அத்தனையும் நினைவில் வர, கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடியே சியாமளியின் தலையை வருடியபடியே தூங்கிப்போனார் சந்தானம்!

    மறுநாள் பொலபொலவென விடியறபோதே இன்னிக்கு நம்ம கல்யாண நாள். இவருக்கு ஞாபகம் இருக்கா தெரியலை. நாம வளத்த குழந்தைகளுக்கே பெரிய குழந்தைகளாயாச்சு. காலம் றெக்கை கட்டிண்டு பறக்கறது.

    அவருக்கு பிடிச்ச ஸ்வீட் எதானும் பண்ணணும். எனக்கு சுகர்னு பாவம் அவரும் ஏதும் சாப்பிடாம இருக்கார்.

    எல்லா வசதியும் இருக்கு. பணமும் தேவைக்குமேல பகவான் கொடுத்துருக்கார். வீட்டுல வேலை செய்ய, வைக்க ஆட்கள்.

    எல்லாம் பாத்துப் பாத்து செய்யறா குழந்தைகள். சமையலுக்கு மட்டும் ஆள் வேண்டாம். முடியறவரை நானே பாத்துப்பேன். முடியாதபோது எல்லா வேளையும் மங்களமாமி பண்ணி கொடுத்துடுவா. ஆத்துக்கு வேணுங்கறதை ஃபோன்ல கேட்ட உடன் குழந்தைகள் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி கொடுத்துடறா.

    கேட்டா, மன்னி! நீ இரண்டு மடங்கு உழைச்சாச்சு. இங்க எங்ககூட வரச் சொன்னா, அது மட்டும் வேண்டாம்டாங்கறேள்னு சொல்றா.

    ஆமாம், எங்களுக்கு இங்கு என்ன குறைச்சல்? சியாமளி வாயை அடைத்து விடுகிறாள்.

    வாசக்கதவை திறந்து வழக்கம்போல கோவிலைப் பாத்து கும்பிட்டபடியே எல்லாரையும் காப்பாத்து பெருமாளே!ன்னு கண்மூடி பிரார்த்தனை செய்தவள் கண்ணைத் திறக்க...

    மன்னி! கல்யாண நாள் வாழ்த்துக்கள்! என்று குழந்தைகள் காலைத் தொட்டு வணங்க, மாமி, மாமா, பெரியப்பா, பெரியம்மா என்று மருமான்களும், மருமாள்களும் காலைக் கட்டிக்கொள்ள, நெஞ்சம் ஆனந்தத்தில் மிதக்க அணைத்துக்கொண்டனர் சியாமளியும், சந்தானமும்.

    அதற்குள் காஃபி, டீ, பூஸ்ட் சகிதம், எல்லாவற்றுடன் கேட்டரர்

    Enjoying the preview?
    Page 1 of 1