Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

February 30
February 30
February 30
Ebook144 pages48 minutes

February 30

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முப்பது வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் கதை. 21ம் நூற்றாண்டுக் கதை இது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிலும் நாம் மேம்பட்டு நின்றாலும், அடிப்படை மனித உணர்வுகளில் மட்டும் அப்படியேதான் இருக்கப் போகிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகும் நாவல் இது.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580100608228
February 30

Read more from Devibala

Related to February 30

Related ebooks

Reviews for February 30

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    February 30 - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிப்ரவரி 30

    February 30

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    அட்சயன் கண்களை விழித்தான். எதிரே பூக்களும், நந்தவனமும் வினைல் திரையில் அமைந்திருக்க, பிரம்மாண்டச் சுவரில் அந்தப் பெண் வந்து காலைவணக்கம் சொல்லிவிட்டுக் காணாமல் போனாள்.

    டிசம்பர் மாதக் குளிர் தெரியாமல் இளம்சூடான கட்டில் காமா கதிர்களை அட்சயனின் உடம்பில் பதமாக செலுத்திக் கொண்டிருந்தது. கட்டிலைவிட்டு எழுந்தான். தரையில் கால்பதிக்க, எஸ்கலேட்டரை தன்னுடன் இணைத்திருந்த அந்த ரோலிங் கார்பெட், அட்சயனை நடக்கவிடாமல் இழுத்துக்கொண்டு பாத்ரூமில் கொண்டு போய்விட்டது.

    ஒரு ரோபோட் வந்து அட்சயனுக்கு பல் தேய்த்து முகம் கழுவிவிட்டது. அவனை குளிப்பாட்டத் தயாரானது.

    விஞ்ஞானம் ஏற ஏற நாணம் குறைந்துகொண்டு வருவதை மனிதன் உணரத் தொடங்கிவிட்ட 21ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் இருந்தான் அட்சயன்.

    காலைக், கடமைகளை முடித்து, உடைமாற்றி, உணவருந்த கீழே வந்து சேர்ந்தான் அட்சயன். காலை உணவாக ஏதோ ஒரு சாண்ட்விட்சும், சிகப்பாக ஒரு விழுதும், கொஞ்சம் திரவப் பொருட்களையும் சுழலும் மேஜை அவனருகே கொண்டு வந்தது.

    எதிரே திரை.

    அன்றைய உலகச் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

    போரடித்தது.

    மாற்றினான். தன் குறியீட்டு எண்களை ஏற்றி, தன் அன்றைய அலுவல்களைத் தெரிந்து கொண்டான்.

    மாஸ்டரிலிருந்து சுருள் சுருளாக டெலிபிரிண்டர் காகிதம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு ஊதா நிற அட்டை வந்து விழுந்தது.

    உனக்குத் திருமண அனுமதி கிடைத்துவிட்டது! என்றது ஒரு அட்டை.

    ஆம்!

    திருமணம் செய்து கொள்வதுகூட சுயவிருப்பமல்ல.

    அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

    தேதியைக் குறித்துத் தரவேண்டும். இல்லையானால் நடத்த முடியாது. சுயவிருப்பத்தில் நடத்தத் தீர்மானித்தால் பிரஜா உரிமையை இழக்க நேரும். ஒவ்வொரு குடிமக்களின் விவரமும் டொமினலில் உண்டு, அவர்களின் திருமண நாள் அங்கே தீர்மானிக்கப்படும்.

    ஆனால் பெண் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் அரசாங்கம் பார்க்கவில்லை.

    ஆனால் அரசாங்கம் கெடுவைத்த நாளைக்குள் துணையைத் தேர்ந்தெடுத்து முடித்தாக வேண்டும். இல்லையானால் இன்னொரு தேதிக்குக் காத்திருக்க வேண்டி வரும்.

    அட்சயன் சந்தோஷப்பட்டான்.

    அவனுக்கு அந்தக் கவலை இல்லை.

    நிருபாவை அவன் இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறான். அவன் வேலை பார்க்கும் விஞ்ஞான மையத்தில் நிருபா மற்றொரு இளம் விஞ்ஞானி.

    அவளது துடிப்பும், இளமையும், கூர்மையும் (புத்திதான்) அவனை ஈர்த்துவிட்ட விவரம் அந்த விஞ்ஞான மையத்துக்கே தெரிந்த சங்கதி! இதெல்லாம்கூட அரசு இயந்திரத்தில் பதிவாகிவிட்ட செய்தி.

    டெலிபோனை நெருங்கி, எண்களைத் தடவ, குட்டித் திரையில் ஒரு ரோபோட்

    நிருபா ப்ளீஸ்!

    காட்சிகள் மாறியது. நிருபா தெரிந்தால்.

    குட்மார்னிங் டார்லிங்!

    உடை மாற்றிக் கொண்டிருந்தாள் நிருபா. பிக்சர் போனில் தெரிந்தது.

    காலை திவ்ய தரிசனம்!

    நீதான் தெரிஞ்சதாலதான் ரிசீவரை எடுத்தேன் சொல்லு!

    எனக்கு கல்யாண அனுமதி கிடைச்சாச்சு.

    எனக்கு இன்னும் கிடைக்கலியே!

    கிடைக்கும். இல்லைனா விவரத்தை சொல்லி, அப்ளை பண்ணு!

    இது பெரிய தொல்லை அட்சயா. நான் உன் காதலி, ஆனா எனக்கு அனுமதி கிடைக்கலைனா, நான் உன்னைக் கலயாணம் பண்ண முடியாது. 20ம் நூற்றாண்டு அப்பாக்களைவிட விஞ்ஞானம் மோசமான வில்லனா இருக்கு!

    பதறாதே! நிறைய டயம் தந்திருக்காங்க. உனக்கும் அனுமதி வரும். நான் இன்னிக்கு ஆபீஸ் வரலை. எங்கப்பா, அம்மாவைப் பார்க்கணும் உடனடியா, ஊருக்குப் போறேன்!

    அனுமதி?

    நான் சிறப்புப் பிரஜைதானே. கிடைச்சிடும். சொல்லத்தான் உனக்கு போன்.

    சரிப்பா!

    ரிசீவரை வைத்தான.

    டொமினலின் முன் உட்கார்ந்து சில எண்களை ஏற்ற, திரையில் கேள்விகள் வரத்தொடங்கின. அது ஒருவிதமான படிவம், நிரப்பத் தொடங்கினான் 'கிபோர்டு' உதவியால்.

    ஐந்தே நிமிடங்களில் அனுமதி அட்டை கிடைத்தது. தன் உடைமைகளைச் சேகரித்துக் கொண்டு ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்தான். நாற்பது நொடிகளில் அந்த விசேஷ ட்யூப் வாகனத்தின் மூலம், ரயில் நிலையத்தை அடைந்துவிட்டான். அவனுக்காக அனுமதிக்கப்பட்ட பெட்டி வரும் இடத்தில் போய் நின்றுகொண்டான்.

    அந்த ரயில் வந்து நின்றது.

    அல்ட்ரா வயலட் கதிர்கள் வெண்ணைக் கதவுகளைப் பிளக்க ரேடியம் தரை அவனை உள்ளே செலுத்தியது.

    தன் இருப்பிடத்தில் அமர, ஒரு அதிர்வுகூட இல்லாமல் அந்த ரயில் விசேஷத் தண்டவாளங்களில் பயணித்துக் கொண்டிருந்தது. அரைமணி நேரத்தில் அவன் போக வேண்டிய இடம் வர, வேறு சில வாகனங்கள் மூலம், தன் அப்பா இருந்த முப்பத்தியேழாவது மாடி குடியிருப்பை அடைந்து, கதவின் முன் வந்து நின்றான்.

    கணிப்பொறி உள்ளே செய்தி அனுப்ப, அழைக்கப்பட்டான்.

    அம்மா!

    அம்மா ஆசையுடன் ஓடி வந்தாள்.

    வா அட்சய்! உன்னைப் பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலாச்சு. திடீர்னு வந்து நிக்கறியே!

    அப்பா இல்லையாம்மா?

    இருக்கார். யாரோ அவரை சந்திக்க வந்திருக்காங்க! வந்துடுவார் இப்ப, நீ உட்காரப்பா. என்ன திடீர்னு?

    எனக்கு கல்யாண அனுமதி கிடைச்சிருக்கு!

    அப்படியா பெண் பார்க்கணும் உடனடியா!

    வேண்டாம்மா, நிருபானு ஒரு பெண்ணை நான் காதலிக்கிறேன்.

    அவளுக்கு அனுமதி கிடைச்சாச்சா?

    இல்லமா கிடைக்கும்.

    அம்மாவின் முகத்தில் கவலைக் கோடுகள்.

    அப்பா வந்தவரை அனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.

    வாடா கண்ணா!

    எப்படிப்பா இருக்கீங்க?

    எந்திர உலகத்துல நடத்தற வாழ்க்கை. பிடிக்கவே இல்லைடா, முப்பது வருஷத்துல இப்படியா எல்லாம் மாறிப்போகும்? பழைய வாழ்க்கைக்குப் போகமாட்டமானு இருக்கு.

    அவனுக்குக் கல்யாண அனுமதி கிடைச்சிருக்காம்!

    கொடுமை! கடவுள் தீர்மானிக்க வேண்டிய சங்கதியை கமப்யூட்டர் தீர்மானிக்கற கொடுமை!

    அதுல என்ன கஷ்டம்னா இவன் ஒரு பெண்ணைக் காதலிக்கறானாம்!

    அவளுக்கு அனுமதி இருக்கா?

    இது வரைக்கும் வரலைப்பா!

    பாத்தியா? இது ரிஸ்க் அட்சய் அவளுக்கு வரலைன்னா, உன் கல்யாணம் எப்படி குறிச்ச தேதில நடக்கும்?

    நான் நிருபாவைத் தவிர யாரையும் ஒப்புக்கமாட்டேன் டாடி!

    இப்ப தடை சொல்ற அப்பா, அம்மா யாரும் இல்லை, ஆனா அரசாங்கம் அனுமதிக்கணுமே!

    அனுமதிக்கும்!

    "இதபாரு அட்சய், காத்துட்டு இருக்காதே! நீ விசேஷ பிரஜை. மாஸ்டரைத் தொடர்புகொண்டு, அலையன்ஸ் பீரோல போய்ப்பாரு! நிருபாவுக்கு அனுமதி எப்ப வரலாம்னு தெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1