Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilangaiyil Thuglak
Ilangaiyil Thuglak
Ilangaiyil Thuglak
Ebook206 pages1 hour

Ilangaiyil Thuglak

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலங்கைத் தமிழர் பிரச்னை, 1980களின் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழக அரசியலின் விவாதப் பொருட்களில் ஒன்றாகவும் உருப்பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், இலங்கையில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? அங்கு நடந்த இறுதிக்கட்டப் போரைப் பற்றி அவர்கள் கருத்து என்ன? இப்போது தமிழகத் தலைவர்கள் கூறும் ‘தமிழ் ஈழம்’ பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? வாருங்கள் வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580154308373
Ilangaiyil Thuglak

Related to Ilangaiyil Thuglak

Related ebooks

Reviews for Ilangaiyil Thuglak

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilangaiyil Thuglak - S.J. Idhaya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலங்கையில் துக்ளக்

    Ilangaiyil Thuglak

    Author:

    எஸ்.ஜே. இதயா

    S.J. Idhaya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sj-idhaya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இங்கு நடக்கும் போராட்டங்கள் - அங்கு நிலவும் கருத்துக்கள்

    2. மூன்று வகைத் தமிழர்கள்

    3. தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வார்கள்!

    4. இன்னமும் அகற்றப்படாத கண்ணி வெடிகள்!

    5. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள்

    6. இரக்கமற்ற படுபாவிகள் அவர்கள்

    7. முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

    8. ராஜபக்ஷவை ஜெயிக்க வைத்த தமிழர்கள்!

    9. தமிழர்களை திருப்திபடுத்தாத இலங்கை அரசு!

    10. ‘வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்!’

    11. இலங்கைக்குச் சென்று பாருங்கள்!

    12. விரக்தியின் விளிம்பில் இலங்கைத் தமிழர்கள்

    நேர்மை - ‘துக்ளக்’கின் சிறப்பு! இதயா - ‘துக்ளக்’கிற்கு கிடைத்த சொத்து!

    இலங்கைத் தமிழர் பிரச்னை, 1980களின் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழக அரசியலின் விவாதப் பொருட்களில் ஒன்றாகவும் உருப்பெற்றுள்ளது. இலங்கையில் தமிழ் தீவிரவாதக் குழுக்களால் முன் வைக்கப்பட்ட ‘தமிழ் ஈழ’ கோஷத்திற்கு தமிழகத்தில் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீங்கலாக ஆதரவு தராத கட்சிகளே இல்லை என்று சொல்லி விடலாம். இலங்கையில் அவ்வப்போது ராணுவத்தினருக்கும், தமிழ் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் இலங்கையின் அமைதி குலைந்து, பொருளாதார ரீதியாக அந்நாடு பெரும் சிரமங்களை சந்தித்ததோடு, கணிசமான தமிழர்களும் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக வெளியேறும் நிலை தோன்றியது. இத்தகைய நிலை அங்கு உருவானதில், இலங்கைத் தமிழ் தீவிரவாதக் குழுக்களை ஆரம்பத்தில் ஊக்குவித்து, அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவி புரிந்த இந்திய அரசுக்கும் முக்கிய பங்குண்டு.

    இந்திய அரசின் பொறுப்பற்ற இச்செயலையும், தமிழ் அமைப்புக்களின் ஆயுதப் போராட்ட வழிமுறைகளையும் ஆரம்பம் முதலே ‘துக்ளக்’ ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, விடுதலைப் புலிகள் ஃபாசிஸப் போக்குடன், பிற தமிழ் அமைப்பினரை படுகொலை செய்து வந்ததையும், அமைதிக்கான வழி பிறந்தபோதெல்லாம், அதற்கு முட்டுக்கட்டையாக அதன் செயல்பாடு அமைந்திருந்ததையும், தமிழக அரசியல்வாதிகளும், பத்திரிகை உலகமும் கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், தமிழகத்திற்கே இதனால் உருவாகப் போகிற தீங்கு குறித்து ‘துக்ளக்’ எச்சரிக்கை செய்து வந்திருக்கிறது. தமிழகத்திலேயே பத்மநாபா உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டப் பிறகும் இங்கு புலி ஆதரவு பிரச்சாரம் நிற்கவில்லை. அதன் விளைவு விடுதலைப் புலிகள் இங்கு ஊடுருவி, வேவு பார்த்து, இந்த தேசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக, பாரத பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியையே தமிழ் மண்ணில் படுகொலை செய்யும் பயங்கரமும் நிகழ்ந்தது. இவ்வளவு பெரிய விபரீதம் நடந்தும் கூட, இங்கு நிகழ்ந்து வந்த புலி ஆதரவுப் பிரச்சாரம் சிறிது காலம் அடங்கியதே தவிர, ஓய்ந்து விடவில்லை.

    இந்தப் பின்னணியில், இலங்கையில் 2009-ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, இலங்கை அரசால் பல அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன. ‘பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; தமிழ் இனத்தை இலங்கை அரசு அழித்து விட்டது; எஞ்சியுள்ளவர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்துள்ளது’ என்று ஒரு பெரும் பிரச்சாரம் இங்கு நிகழ்த்தப்பட்டது. அங்குள்ள தமிழர்கள் இன்றும் தமிழ் ஈழத்தையே விரும்புவது போல இங்கு பிரச்சாரம் தொடர்ந்தது.

    இந்த சூழ்நிலையில்தான், இலங்கையில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? அங்கு நடந்த இறுதிக்கட்டப் போரைப் பற்றி அவர்கள் கருத்து என்ன? இப்போது தமிழகத் தலைவர்கள் கூறும் ‘தமிழ் ஈழம்’ பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது பற்றியெல்லாம் அங்கு நேரில் சென்று அறிந்து வர ‘துக்ளக்’கின் தென்மாவட்ட நிருபர் எஸ்.ஜே. இதயாவை அனுப்பி வைத்தோம்.

    அங்கு அவர் ஆறு நாட்கள் தங்கி, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, பொது மக்கள், தமிழர்களுக்கான கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் விடுதலைப் புலிகள், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்தின் பல பிரிவினர் மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்ட அரசுத் தரப்பினர் என்று வெவ்வேறு தரப்பினருடன் பல மணி நேரம் பேசி, அந்த உரையாடல்களையெல்லாம் வீடியோ மற்றும் ஆடியோவில் பதிவு செய்து, அவற்றையெல்லாம் தொகுத்து, உண்மை நிலவரங்களை மிகச் சிறந்த முறையில் 12 கட்டுரைகளாக அளித்தார். அது தற்போது ஒரு புஸ்தகமாக வெளிவருகிறது.

    இதயா மேற்கொண்ட இம்முயற்சி அசாதாரணமானது. இதற்காக அவர் பெரும் உழைப்பையும், முனைப்பையும் செலுத்தி இருக்கிறார். ‘இலங்கை அரசு தமிழர்களை அழித்து வருகிறது என்ற பிரச்சாரத்தின் மயக்கத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன்’ என்று இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள அவர், அந்த மயக்கத்தில் சிக்கியிருந்த இன்னும் பலரை அதிலிருந்து விடுபட வைக்குமளவுக்கு, இதுவரை எந்த பத்திரிகையிலும், சேனலிலும் வெளிவராத பல உண்மைகளை மிக அழுத்தமாக, இத்தொடரில் நேர்மையுடனும், துணிச்சலுடனும் பதிவு செய்திருக்கிறார்.

    இலங்கைத் தமிழர் பிரச்னையில் மாற்றுக் கருத்துடையோரை, ‘இலங்கை அரசின் கைக்கூலி’, ‘இனத் துரோகி’ என்றெல்லாம் முத்திரை குத்தி, தூற்றுவோரைப் பற்றி கவலைப்படாமல், நேரில் கண்டதையும், அங்குள்ள தமிழர்கள் கூறியதையும் அப்படியே எழுதி உண்மையை ஆணித்தரமாக அவர் எடுத்துக் கூறியுள்ள விதம் போற்றுதலுக்குரியது. இத்தொடர் துக்ளக் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, இங்கு புலி ஆதரவாளர்கள் உருவாக்கி வைத்திருந்த விடுதலைப் புலிகள் பற்றிய பிம்பத்தையும் சரிய வைத்துள்ளது. அங்குள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளை எந்தளவுக்குக் கண்டனம் செய்கிறார்கள் என்பதை முதன்முதலில் வெளிக் கொணர்ந்திருப்பது இதயாவின் கட்டுரைகள்தான். இலங்கைக்கு அவருடன் பயணம் மேற்கொண்டிருந்த எ.ஏ. சாமியின் பணியும் பாராட்டுக்குரியது.

    இதயாவின் இலங்கைத் தொடர்பான கட்டுரைகள் மட்டுமின்றி இதற்கு முன், குஜராத்திற்கு நேரில் சென்று வந்து நரேந்திரமோடியின் செயல்பாடுகள் பற்றி குஜராத் மக்கள் உட்பட பலதரப்பட்டவர்களுடன் பேசி அவர் எழுதிய குறுகிய கட்டுரைத் தொடரும் மிகச் சிறந்த தொடராக அமைந்து, வாசகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, மோடி குறித்த மீடியாவில் ஒரு பகுதியினரின் பொய்யான சித்தரிப்பு, எவ்வளவு காழ்ப்புடன் கூடியது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அவருடைய பீஹார் மாநில கட்டுரைத் தொடரும் துக்ளக் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    நேர்மை - துக்ளக்கின் சிறப்பு. இதற்கு பெருமை சேர்த்துள்ள இதயா, துக்ளக்கிற்கு கிடைத்துள்ள சொத்து. அவரது பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, அவரை வாழ்த்துகிறேன்.

    - சோ

    சென்னை

    7-ஜூலை -2013

    விருதுகள் தரப்பட வேண்டும்

    நண்பர் எஸ்.ஜே. இதயாவை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும், ‘துக்ளக்’க்கில் என்னுடன் பணிபுரியும் சகா அவர். அவரது கட்டுரைகள் மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும். அதே சமயம் குழப்பமில்லாமல் தெளிவாகவும் இருக்கும். ஒரு பத்திரிகையாளருக்கு தேவையான அம்சங்கள் இவை.

    பத்திரிகைப்பணியில் எல்லா கட்டுரைகளையும் ஆற அமர்ந்து நிதானமாக எழுத முடியாது. அவசரமாக எழுத வேண்டிய நிர்பந்தங்கள் நிறைய ஏற்படும். பத்திரிகைப்பணியின் நெருக்கடி அப்படி ஆனால் எந்த அவசரத்திலும் நமது மதிப்பீட்டில் தவறு நேர்ந்து விடக்கூடாது. விஷயங்களை தெளிவாக புரிந்து கொண்டு விரைவாக எழுதுபவனே தேர்ந்த பத்திரிகையாளன். இதில் இதயா என்றோ தேர்ச்சியடைந்து விட்டார்.

    இலங்கைத்தமிழர் பிரச்சனையில் 1983-ல் முதல் முதலாக இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறிய காலத்திலிருந்தே ‘துக்ளக்’கின் குரல் தனித்து ஒலித்தது. சகல பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் ஏகோபித்து ஒரே அணியில் நின்று, இலங்கை அரசைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது, விடுதலைப்புலிகள் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்துவது என்றே செயல்பட்டு வந்தனர், ‘துக்ளக்’ ஆசிரியர் ‘சோ’வும், அவரது பத்திரிகையும் இருதரப்பிலுமுள்ள சாதக, பாதகங்களைப் பார்த்தே எழுதி வந்தனர். தனிநாடு என்பது சாத்தியமில்லை என்பதை ‘துக்ளக்’ ஆசிரியர் ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இன்று அதுதான் உண்மையாகியுள்ளது.

    பிரபாகரனின் மரணத்தையடுத்து, இலங்கையின் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் மீடியாவும் முன்பைவிட உரத்த குரலில் ஈழத்தமிழருக்காக அழுது அரற்றினர். வழக்கத்தை விட இலங்கை அரசை கடுமையாகச் சாடினர். சேனல்-4 போன்ற சில வெளிநாட்டு மீடியாவின் செய்திகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு உணர்ச்சிகொப்பளிக்க, கொப்பளிக்க பேசியும், எழுதியும் வந்தனர்.

    வெறும் பொய்யான, கற்பனையான, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மட்டும் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. புகைப்படங்களும், வீடியோக்களும் கூட வந்தன. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை உண்மையாக தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட, தங்களது பொய்யான உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் தகவல்களையும், படங்களையுமே தமிழர்கள் விரும்புவார்கள் என்ற நிலைக்கு வைகோ, நெடுமாறனிலிருந்து கருணாநிதி வரையிலான (காங்கிரஸ்காரர்கள் தவிர்த்து) சகல

    Enjoying the preview?
    Page 1 of 1