Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilai Uyarntha Kuttram
Vilai Uyarntha Kuttram
Vilai Uyarntha Kuttram
Ebook121 pages2 hours

Vilai Uyarntha Kuttram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரங்கத்தில் திருட்டுப்போனது யாருடைய பையன்? பார்க்கர் ஸ்மித் மற்றும் ஆனியும் என இருவரும் சேர்ந்து ஏன் வெளிநாட்டிற்குக் கடத்தினார்கள்? மர்மமான முறையில் கடத்தப்பட்ட சிறுவனுக்கு என்னவாயிற்று? என்பதை அறிய "விலை உயர்ந்த குற்றம்" என்னும் நாவலில் வாசித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580100910056
Vilai Uyarntha Kuttram

Read more from Pattukottai Prabakar

Related to Vilai Uyarntha Kuttram

Related ebooks

Reviews for Vilai Uyarntha Kuttram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilai Uyarntha Kuttram - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விலை உயர்ந்த குற்றம்

    Vilai Uyarntha Kuttram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அட்லாண்டிக் அலைகளின் சாமரத்தில், மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ்சின் நனைந்த சீதோஷ்ண நிலையில், ஜனவரியின் நடு மத்தியில் பொங்கல் கொண்டாடாத அமெரிக்காவின் ஏழு முக்கிய நகரங்களில் ஒன்றான நியுயார்க், ஈரமாக கண் விழித்து குட் மார்னிங் சொன்னது.

    பார்க்கர் ஸ்மித் ஜாக்கிங் சூட் அணிந்து மேலே ஒரு ஃபர் கோட் மாட்டியிருந்தார். மீசையில் செம்பட்டை முடிகளுடன் இரண்டறக் கலந்திருந்தன வெள்ளை முடிகள் காது மடல்களில் உற்று நோக்கினால் ரத்த ஓட்டம் தெரிந்தது. மண்டையின் மையத்தில் நெட் கட்டி பிங் - பாங் விளையாடலாம். நெற்றியில் சுருக்கங்கள், பச்சைப் பசேல் என்று நரம்புகளின் ஓட்டங்கள். மூக்கின் நுனியில் குபுக்கென்று அவசர வளைவு, உதடுகளில் ஹோல்டர். ஹோல்டரில் அரையடி நீளத்திற்கு மென்த்தால் மோர் சிகரெட்,

    பார்க்கர் ஸ்மித் தற்போது பயணத்தில் இருந்தார்.

    உத்தியோகத்திலிருந்து போன மாதம் ஓய்வு பெற்ற போது அரசாங்கம் வழங்கிய இள மஞ்சள் நிற லைம்சைன் காரின் பின் சீட்டில் இருந்தார். கையில் அன்றைய தினத்தின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேரம் - வினாடி சுத்தமாய் மாறிக் கொண்டிருந்தது.

    கார் பிராட்வேயின் நூறு கிலோமீட்டர் வேகக் காரர்களுக்கான பாதையில் குலுங்கலோ, சிணுங்கலோ இல்லாமல் விரைந்து கொண்டிருந்தது. வாஷிங்டன். லிங்கன் சிலைகளுக்கு ஹலோ சொல்லித் தாண்டியது. ஐந்தாவது அவென்யுவில் கட் செய்து தொடர்ந்து, மேகத்திற்கு சிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து விட்டு அவென்யு இறுதியில் சென்ட்ரல் பார்க்கில் வேகம் குறைந்து பார்க்கிங் ஸ்லாட் தேடியது. பார்க்கிங் அஸிஸ்டெண்ட் உதவியின் இடம் கிடைத்து நின்று கொண்டது.

    பார்க்கர் ஸ்மித் உள்ளே வந்தார். குழந்தைகள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க... பைக் வேயில் மூன்று இளைஞர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக் கொண்டு பைக் ரேஸ் நடத்திக் கொண்டிருந்தார்கள். மிருகக் காட்சி சாலை பக்கத்தில் காலை நேரமென்பதால் கூட்டமே இல்லாமல், சிங்கமோ எதுவோ அடக்கமாக உறுமிக் கொண்டுடிருந்தது. ஐஸ் ஸ்கேட்டிங் பகுதியில் நாளைக்குத் துவங்கும் இண்டர் – ஸ்டேட்ஸ் போட்டிகளில் பங்குபெறும் புகழ்பெற்ற ஸ்கேட்டர்களின் புகைப்படங்களும், பெயர்களும் போர்டுகளில் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தன.

    பார்க்கர் ஸ்மித் தன் வழக்கமான பூச்செடிகள் பார்டர் போட்ட வாக்கிங் செக்டார் வந்து, ஓரமாக நின்றிருந்த கேபின்களில் ஒன்றைத் திறந்து தன் ஓவர் கோட்டைக் கழற்றி உள்ளே வைத்து விட்டு... தாள நயத்தோடு ஓட ஆரம்பித்தார்.

    ஹெலோ மிஸ்டர் பார்க்கர்.

    பின்னாலேயே ஓடி வந்து அவருக்கு இணையாக ஓட ஆரம்பித்த அந்த இளம் பெண் கண்ணை மறைக்கும் படி முகத்தில் விழுந்த ஒரு கற்றை கோல்டன் சுருளை பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டு, மார்னிங். ஹவ் டு யு டூ? என்றாள்.

    குட் மார்னிங்! ஃபைன். என் நினைவு சக்தி பழுதடையாமல் இருக்கிறதென்றால், இன்றைக்கு நீ டல்லாசில் இருக்க வேண்டியவள். சரிதானா மிஸ் ஆனி?

    சரிதான். நேற்று புறப்படுவதற்கு இரண்டு மணி நேரங்கள் இருக்கும் போது நிகழ்ச்சிகள் ரத்தாகி விட்டதாகச் செய்தி வந்தது. அடுத்த நிகழ்ச்சிக்கு இன்னும் பதினேழு நாட்கள் இருக்கின்றன. அதுவரை சோம்பலாக நிமிடங்களை நிரப்பியாக வேண்டும்.

    ஏன், உனக்கென்ன நண்பர்களுக்குப் பஞ்சமா?

    அப்படியில்லை. உல்லாசமே கூட ஒரு எல்லையில் அலுத்துப் போவதுண்டே!

    எங்காவது வெளியூர் சென்று...

    இந்த அமெரிக்காவில் நான் பார்க்காத ஊரை இனி மேல்தான் நிர்மானிக்க வேண்டும் விடுங்கள். நியூ ஜெர்ச்சியில் போய் மீன் பிடிக்கத் திட்டமிட்டுள்ளேன். என் பதினேழு நாட்களை எப்படியும் கரைத்து விடலாம். உங்கள் திட்டம் என்ன? வேலையில் இருந்து விலகியாயிற்று. இனி? முழுக்க முழுக்க ஓய்வுதானா?

    முடியுமா? அதுவும் என்னால்? ஒரு தினத்தில் பதினேழு மணி நேரங்கள் வேலை பார்த்தவன் நான், ஓய்வாவது? இம்பாஸிபிள்,

    பின்னே? வாட்ஸ் யுர் பிக் ஐடியா?

    கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா?

    ஷ்யூர்.

    புல்வெளியில் அமர்ந்தார்கள்.

    மிஸ் ஆனி - நியு பார்க்கர் என்னும் பத்திரிகையின் விசேஷ நிருபர்களில் ஒருத்தி. லெக்ஸிங்டன் அவென்யுவில் வீடு, கார், போன், கரெண்ட் எல்லாம் பத்திரிகை ஏற்றுக் கொள்கிறது. இரண்டு தடவை திருமணங்கள். இரண்டு தடவை விவாகரத்துகள்.

    சொல்லுங்கள். என்றாள்.

    ஒரு தனியார் ஸ்தாபனத்தில் அழைத்திருக்கிறார்கள்.

    அரசாங்கத்தில் வேலை பார்த்து விட்டு இப்போது தனியாரிடம் என்னும் போது, உங்கள் தன்மானம் இடமளிக்கிறதா?

    தயக்கமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் பதில் சொல்ல ஒரு மாதம் அவகாசம் கேட்டிருக்கிறேன். மிஸ் ஆனி, எனக்கு பணம் நோக்கமில்லை. தேவைக்குச் சற்று அதிகமாகவே சேமித்து வைத்திருக்கிறேன். என்னுடைய நேரங்கள் சுறுசுறுப்பாக, சம்பவங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த யோசனை.

    உங்களுக்குப் பத்திரிகைத் துறையில் ஆர்வம் இருக்கிறதா மிஸ்டர் பார்க்கர்?

    கொஞ்சம்.

    எங்கள் நிறுவனத்துடன் உங்களுக்காக நான் பரிந்து பேச முடியும். போர்ட் லெவலில் இருவரை நன்றாகத் தெரியும் எனக்கு.

    முற்றிலும் புதிய துறை!

    ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் சுறுசுறுப்பு இதில் உண்டு.

    பத்திரிகைகள் சம்பவங்களை ஏற்படுத்துவதில்லை. நடந்த சம்பவங்களைப் பொறுக்கி எடுத்துத் தருகின்றன. யூகம் சொல்கின்றன. அவற்றை விட... அந்த சம்பவங் களையே உருவாக்குவதில் எவ்வளவு மூளைத்திறன் தேவைப்படும் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?

    "அப் கோர்ஸ், பைலட்டாகப் பிறந்தவனை பால் பண்ணையில் தீவணம் எடுத்து வைக்கச் சொல்வது தப்பு தான்,

    "இப்படிக்கூடச் சொல்லலாம் மிஸ் ஆனி. காட்டில் மரங்களைத் தூக்கிப் பழகின யானையை சர்க்கஸில் இரண்டு காலில் நடந்து வரச் சொல்வது

    Enjoying the preview?
    Page 1 of 1