Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondru Devathaigal
Moondru Devathaigal
Moondru Devathaigal
Ebook83 pages29 minutes

Moondru Devathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திறமையான மூன்று இளம்பெண்களின் கூட்டணி சாதிக்கும் ஒரு பெரும் நிகழ்வே இந்நாவல். அம்முயற்சியில் அவர்கள் சந்திக்கும் நல்ல மனிதர்கள், மற்றும் மக்களுக்கு கூறப்படும் பெருங்கருத்தோடு நிறைவடைகிறது இந்த நாவல்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580170410280
Moondru Devathaigal

Related to Moondru Devathaigal

Related ebooks

Reviews for Moondru Devathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondru Devathaigal - A. Velanganni

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மூன்று தேவதைகள்

    Moondru Devathaigal

    Author:

    அ. வேளாங்கண்ணி

    A. Velanganni

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-velanganni

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    நகரின் பிரதான வீதி.

    ‘இளமதி’ தொலைக்காட்சி நிறுவனத்தின் எட்டு மாடிக்கட்டிடம். வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

    கட்டிடத்தின் முக்கியமான பலஅறைகளில் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கின்ற பல கேம் ஷோக்கள், சமையல் நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், டான்ஸ் ஷோக்கள், காமெடி ஷோக்கள் இவற்றின் படப்பிடிப்புக்கான தயாரிப்புகள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன.

    மற்றும் சில அறைகளில் படப்பிடிப்பு முடிந்தவற்றின் போஸ்ட் புரெடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

    அப்பொழுது கட்டிடத்தின் நுழைவு வாயிலில் ஒரு புது பரபரப்பு தொற்றிக்கொண்டது.

    தொலைக்காட்சி நிறுவனத்தின் ஹெட் - தலைமை அதிகாரி ‘சாருமதி’ உள்ளே வந்து கொண்டிருந்தாள். இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் எட்டாம் இடத்தில் இருப்பவள்.

    தனது தந்தை நிலாவண்ணனின் மறைவிற்குப்பின் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாள் இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்து, புது ரத்தம் பாய்ச்சி, புதுப்புது சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து, இன்று அசுர வளர்ச்சியில் இருக்கும் ‘இளமதி’ தொலைக்காட்சியை வழி நடத்தி வருபவள். பார்க்க நடிகை தேவயானியை ஞாபகப்படுத்தும் தோற்றம். சேலை கட்டிய தேவயானி அல்ல, மாடர்ன் டிரஸ் தேவயானி.

    இன்னும் திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதில் நம்பிக்கையில்லை என்று கூறி வருபவள்.

    சாருமதி எங்கு சென்றாலும் திருமண காதல் அம்புகள் எல்லாத் திசைகளிலும் இருந்து பாயக்காத்திருக்கும். ஆனாலும் தன் பார்வையை அதனைத் தடுக்கும் கேடயமாகப் பயன்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

    நிறுவனத்தின் வளர்ச்சிகண்டு, அதனைச் சீர்குலைக்கவும் எல்லா விதமான சக்திகளும் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் தனது புத்திசாலித்தனத்தினால் எதிரியினைப்போலவும் சிந்திக்கும் திறன் பெற்றிருந்த சாருமதி, எதிரி... அணுகுண்டுக்கான தீயை வைக்கும்முன், அதன் பியூசை பிடுங்கிகிவிடும் அளவுக்கு திறமை பெற்றிருந்தாள். எனவே எதிரி நிறுவனங்களும் இப்பொழுதெல்லாம் அதிகமாய் மோதும் போக்கை கடைபிடிப்பதில்லை. அதனால் ‘இளமதி’ தொலைக்காட்சி நிறுவனத்தின் வளர்ச்சி எவரெஸ்ட் உச்சிக்கு வளர்ந்து கொண்டிருந்தது.

    அதனை மேலும் மேலும் எப்படி முன்னேற்றலாம் என்ற சிந்தனைக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்ட சாருமதி, வழியெங்கும் வாரிவழங்கப்பட்ட குட்மார்னிங்களை புன்னகையுடன் வாங்கிக்கொண்டு, தனது ஏ.சி. அறைக்குள் நுழைந்து கம்பீரமாய் அமர்ந்தவள், பி.ஏ. ரூபாவை இன்டர்காம் மூலமாக அழைத்தாள்.

    குட் மார்னிங் மேம்

    குட் மார்னிங் ரூபா... ஷாலினி, தர்ஷினி, மேகலா மூனு பேரும் வந்துட்டாங்களா?

    எஸ் மேம்... வந்துட்டாங்க

    சரி... அவங்கள உடனடியா என்னைப் பார்க்க வரச்சொல்லு

    ஓகே மேம்

    போனை வைத்துவிட்டு, எல்ஈடி டிவியை ஆன் செய்தாள்.

    கொரோனா செய்திகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா உக்ரைன் போர் விபரங்கள் முன்னுக்கு வந்திருந்தன. 12 முதல் 14 வயது வரையிலான பள்ளிச் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது போன்ற செய்திகளும் வந்து போயின. சமீபத்திய ஹிட் படங்கள் எத்தனை கோடிகள் சம்பாதித்தன, யூடியூப் பிரபலங்களின் கலகல வீடியோக்கள் என ஒவ்வொன்றாக வர வர ஒன்றிலும் ஒன்றாமல் கண்களை மேயவிட்டாள்.

    சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே... மூவரும் வந்துவிட்டனர்.

    குட் மார்னிங் மேம்

    குட் மார்னிங்... குட் மார்னிங்... வாங்க... வாங்க... எப்படி இருக்கீங்க மூனு பேரும்?

    எங்களுக்கென்ன மேம்... சூப்பரா இருக்கோம்... எப்படா அடுத்த புரஜக்ட் கிடைக்கும்... அப்படீனு வெயிட்பண்ணிட்டு இருக்கோம்... இது தர்ஷினி... அழகு கிளி...

    போன தடவை பண்ணின ஆலை திறப்பு போராட்டம் கிரேட் சக்ஸஸ்... நாம ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிலாளி வீட்டுக்கும் போய் போட்ட அப்டேட் எல்லாம் செம வைரலாப் போச்சு... எங்கெங்கேயோ இருக்கற விஐபிஸ் எல்லாம்கூட எங்கள கான்டக்ட் பண்ணி கங்க்ராட்ஸ் பண்ணாங்க... இன்னும் அந்த புரஜக்ட் பண்ணின‌ நாட்கள மறக்கமுடியல மேம்... இது ஷாலினி... பேச்சே ஹனி...

    "மேம்... இனி எதாவது புரஜக்ட்னா பாரீன் அனுப்புங்க...

    Enjoying the preview?
    Page 1 of 1