Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

துணையிருப்பாள் துர்கா!
துணையிருப்பாள் துர்கா!
துணையிருப்பாள் துர்கா!
Ebook103 pages33 minutes

துணையிருப்பாள் துர்கா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மௌலி தனது அலுவலகத்தில் தனி அறையில் இருந்தார்.
போனில் பேசிக்கொண்டிருந்தார்.
வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.
நாளைய ஏற்பாடுகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார்.
இன்டர்காம் ஒலித்தது.
“ஜோசியர் வந்திருக்கார்!”
“உள்ளே அனுப்புங்க!”
சில நொடிகளில் குடும்ப ஜோசியர் உள்ளே நுழைந்து வணங்கினார்!
“ஒக்காருங்க ஜோசியரே! என்ன சாப்பிடறீங்க?”
“எதுவும் வேண்டாம்! பொண்ணு நல்லபடியா வந்துட்டாளா?”
“ம்! வந்தாச்சு! ஓய்வுல இருக்கா! இனிமே பொறுப்புகளை அவதானே சுமக்கப் போறா! சரி... சரி! ஜாதகத்தைப் பார்த்தீங்களா?”
“பார்த்துட்டேன்!”
“பதவி ஏற்கணும். நல்ல ஒரு மாப்பிள்ளை வரணும்! அதெல்லாம் எப்பனு உங்ககிட்ட கலந்துதானே, அடுத்த கட்டத்துக்குப் போகணும்?”
ஜோசியர் கொஞ்சம் கண் மூடி உட்கார்ந்தார்.
“ஜாதகம் கைல இருக்கா?”“நெஞ்சுல இருக்கு! பலமுறை பாத்துட்ட காரணமா, பதிவாயிருக்கு! கல்யாண யோகம் உங்க பொண்ணுக்கு வந்தாச்சு!”
“அப்படியா?”
“ஒரு மாசத்துல நடந்துடும்!”
“ஆச்சர்யமா இருக்கே!”
“பையனைத் தேடிப் புடிங்க! அதுகூட அவசியமில்லை. தானா வரன் வாசல்ல தேடி வரும். யோகம் வந்துட்டா, யார் தடுத்தாலும் நிக்காது!”
“சரி! துர்க்கா வாழ்க்கை எப்படி இருக்கும்?”
“சிக்கலான ஜாதகம். தெளிவா இல்லை! நிறைய குழப்பங்கள் அவ வாழ்க்கைல வரும்!”
“வாய்ப்பே இல்லை!”
“எப்படி சொல்றீங்க?”
“அவ என் மகள் ஜோசியரே! கோடீஸ்வரி! பட்டுக் கம்பளத்துல நடந்த கால்கள்! அவ வாழ்க்கைல எப்படி குழப்பம் வரும்? சான்ஸே இல்லை!”
ஜோசியர் சிரித்தார்.
“ஏன் சிரிக்கறீங்க?”
“மன்னிக்கணும்! பணம் மட்டுமே ஒரு மனுஷனோட வாழ்க்கையைத் தீர்மானிக்கறதில்லை! ஒரு நள மகாராஜா, சமையல்காரனா மாறக் காரணம் அந்த சனீஸ்வர பகவான்தானே? குரு வக்ரமாப் பார்த்தா நல்லதா? சாதகமில்லாத வீட்ல கிரகங்கள் இருந்தா பிரச்னையை தவிர்க்கமுடியுமா?”
“நீங்க ஏன்ன சொல்றீங்க?”
“உங்க பொண்ணுக்கு இப்ப நேரம் சரியா இல்லை! அவளோட ஜாதகம் சொல்லுது! அது தரக்கூடிய பிரச்னைகளை அவ சந்திச்சுத்தான் ஆகணும்!பரிகாரம் தேடிட்டா?”
“தீவிரத்தைக் குறைக்கலாம்! அதுக்காக பிரச்னைகளையே இல்லைனு ஆக்கிட முடியாது!”
“கல்யாணம் நடந்தே தீரும்னு சொல்றீங்க?”
“பிரச்னையோட முதல் அத்யாயமே கல்யாணம்தான். அதுக்காக மாங்கல்ய யோகம் வந்துட்டா, தடுத்து நிறுத்த முடியுமா?
மௌலி தலையாட்டினார்.
“நான் வரட்டுமா?”
“சரி ஜோசியரே! சந்தோஷமா இருந்தேன். பொண்ணு வந்துட்டாளேனு பூரிச்சுப் போயிருந்தேன். அத்தனையும் ஊசிபட்ட பலூன் மாதிரி ஆயிடுச்சு!”
“கவலைப்படாதீங்க! உங்க துர்க்காவுக்கு எதையும் சமாளிக்கற தெம்பு உண்டு. மோசமான ஜாதகம் உள்ளவங்க கூட பலசமயம் நல்லபடியா வாழறதுண்டு. எப்படி?”
“எப்படி?”
“தெய்வ பலம்! அது இருக்கறவங்களை கிரகங்கள் காட்டமாத் தாக்காது! தாக்கினாலும், தாங்கிக்கற சக்தி கண்டிப்பா இருக்கும். உங்க துர்க்கா அந்த ரகம்!”
மௌலி பேசவில்லை!
ஜோசியர் புறப்பட்டுப் போனார்.
பிறகு அலுவலக சம்பந்தமான சந்திப்புகள் நிறைய இருந்ததால், வேறு எதையும் மௌலியால் யோசிக்க முடியவில்லை!
அலுவலகத்தில் ஏழு மணியாகிவிட்டது!
தொலைபேசி அழைத்தது! எடுத்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
துணையிருப்பாள் துர்கா!

Read more from தேவிபாலா

Related to துணையிருப்பாள் துர்கா!

Related ebooks

Reviews for துணையிருப்பாள் துர்கா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    துணையிருப்பாள் துர்கா! - தேவிபாலா

    1

    விமான நிலையத்தில் மகளை வரவேற்கக் காத்திருந்தார் மௌலி!

    வெளிநாட்டுக்குப் போய் பிஸினஸ் மானேஜ்மென்ட் படித்துவிட்டுத் திரும்புகிறாள் துர்க்கா - மௌலியின் ஒரே செல்ல மகள்!

    ஒரு வாரமாகவே மௌலி படபடப்பாக இருந்தார்.

    மகள் வருவதைத் தொடர்ந்து இங்கே பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்! அதற்கான பரபரப்பில் இருந்தார்.

    ஆகாயத்தில் அலுமினியப் புள்ளி தெரிந்தது.

    விமானம் வந்து கொண்டிருப்பதை ஆங்கிலத் தேன் குரல் அறிவித்துக்கொண்டிருந்தது.

    மௌலி பரபரப்பானார்.

    அவரது உதவியாளர்கள் பவ்யமாக முதலாளியின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள்.

    விமானம் பெரிதாகி தாழ்வாகப் பறந்து ஒரு தளத்தைத் தொட்டு சில நொடிகளில் நின்றது.

    எஸ்கலேட்டர் இணைக்கப்பட்டது! கதவு பிளந்தது.

    உச்சியில் பயணிகள் தென்பட்டார்கள்.

    கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடியைத் தந்து, கூந்தல் முதுகில் பிரிந்திருக்க, சேலையுடன் உச்சியில் நின்றாள் துர்க்கா!

    கையை ஆட்டினாள்.

    மௌலிக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை!

    செக்யூரிட்டி பரிசோதனைகள் முடிந்து, பெட்டிகளுடன் துர்க்கா முழுமையாக வெளியே வர, இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. மௌலி காத்திருந்தார்.

    துர்க்கா வெளியே வந்தாள்.

    ஓடி வந்து மௌலியைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

    அப்பா!

    வாடா கண்ணு! நல்லாருக்கியா?

    நல்லா இருக்கேன்பா!

    அவர் சில நொடிகள் பேசியபிறகு கம்பெனி சார்பாக, மாலைகள், சால்வைகள் என வருங்கால முதலாளிக்கு மரியாதைகள் செலுத்தப்பட்டன.

    துர்க்கா திணறிப்போனாள்.

    புகைப்பட வெளிச்சங்கள் நாலு திசையிலிருந்தும்!

    ஒரு பிரதான அமைச்சருக்குத் தரும் வரவேற்பு துர்க்காவுக்கு இருந்தது!

    வெளிநாட்டு சொகுசுக் காரில் அப்பா - மகள் ஏறிக்கொள்ள சார் புறப்பட்டது.

    எதுக்குப்பா இத்தனை பெரிய வரவேற்பு?

    வேண்டாமா? நாளைய முதலாளி நீதான். எதுக்கு ரெண்டு வருஷப் படிப்புக்காக உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு நான் இங்கே துடிக்கணும்?

    அதுக்கில்லைப்பா!

    எனக்கு வயசாகுது! இனிமே உழைக்க முடியாது. என் ஒரே மகள் நீ! கோடிக்கணக்கான இந்த சொத்துக்களுக்கு வாரிசு! உங்கிட்ட நான் பொறுப்புகளை முழுமையா ஒப்படைக்கற நேரம் வந்தாச்சு! நாளைய முதலாளிக்கு இந்த வரவேற்பகூட இல்லைனா எப்படி?

    "அப்பா! பொறுப்புகளை நான் எடுத்துக்கறேன். சரிசமமா உழைப்போம். நீங்க இப்ப ஆரோக்யமா இருக்கீங்க. நூறு வயசு வாழ்வீங்க! ரெண்டுபேரும் சேர்ந்து பணியாற்றுவோம்!

    அவளையே பார்த்தார் மௌலி.

    என்னப்பா?

    ஆச்சர்யமா இருக்குடா, உன்னைப் பார்த்தா!

    என்ன ஆச்சர்யம்?

    வெளிநாட்ல போய் வாழ்ந்துட்டும் இப்படி சேலைதான் கட்டறே! அப்பானு என்னைக் கூப்பிட்டு அழகா தமிழ்பேசற! நீ மாறலைமா! தமிழ்ப் பொண்ணா போயிட்டு, தமிழைத்தான் கொண்டு வந்திருக்கே!

    அப்பா! ஆங்கிலமும், அறிவை வளர்க்கறதும் தொழிலுக்காக! அடிப்படைல தமிழ்தானே நமக்கு எல்லாம். ஏன் மாறணும்?

    அவர் சிரித்தார்.

    வீட்டை நெருங்க ஒரு கிலோ மீட்டர் இருக்கும்போதே நாதஸ்வரம், பேண்டு வாத்தியம் எல்லாம் முழங்கத் தொடங்கின!

    சாலையில் கூட்டம் சேர்ந்தது.

    அப்பா! எதுக்கு ஊரைக் கூட்டினீங்க?

    இது என் விருப்பம். நீ பேசாம வா!

    வீட்டுக்குள் கார் நுழைந்து நின்றது. இருவரும் இறங்க கம்பெனி ஆட்கள் மாலைகளுடன்.

    துர்க்கா திணறி விட்டாள்.

    ஆரத்தி எடுத்தார்கள்.

    அந்தக் கூட்டம் கலைய அரைமணி நேரம் ஆனது!

    சரி! எல்லாரும் போங்க! என் பொண்ணு ரெஸ்ட் எடுக்கணும்!

    கூட்டம் கலைந்தது.

    மௌலியின் பிரதான உதவியாளன் மட்டும் தயங்கி நின்றான்.

    சொல்லு!

    பிரஸ் மீட்டுக்கு...?

    வேண்டிய ஏற்பாடுகளைச் செய். அப்படியே விருந்தும் தடபுடலா இருக்கட்டும். நாளைக்கு சாயங்காலம் தான். எந்த மாற்றமும் இல்லை!

    சரி சார்!

    நிறைய - நான் சொன்னபடி பரிசுப் பொருட்களை வாங்கி வை. என் பொண்ணு கையால எல்லாருக்கும் தரணும்!

    அவன் போய் விட்டான்.

    உள்ளே வந்தார் மௌலி!

    துர்க்கா சோபாவில் சுருண்டு கிடந்தாள்.

    என்னம்மா? முடியலியா?

    அப்பா! எதுவுமே எனக்குப் பிடிக்கலை!

    என்னம்மா சொல்ற?

    எளிமையா, எல்லாருக்கும் எட்டும்படியா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். நீங்க என்னை எங்கியோ தூக்கி வைக்கப் பாக்கறீங்களே!

    இல்லைம்மா! அதுல எனக்கு உடன்பாடில்லை! ரொம்ப எளிமையா நீ இருக்க வேண்டாம். அது அவசியமில்லை! நீ கோடீஸ்வரி! எல்லாருக்கும் கிடைக்காது இந்த வாழ்க்கை! நீ புண்யம் செஞ்சிருக்கே! கிடைச்சிருக்கு! அதைத் தக்கவச்சுக்கணும். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு! நீ எளிமையா இருக்க நெனச்சா, உன்னை ஏமாளினு எடை போட்ரும். கண்டிப்பும், கறாருமா இல்லைனா, வித்துடுவாங்க! ஜாக்ரதை! அனுபவத்துல இதை நான் சொல்றேன்!

    துர்க்கா சிரித்தபடி எழுந்தாள். அப்பா! எனக்குனு சில கொள்கைகள் இருக்கு! வாழ்க்கையை இப்படித்தான் வாழணும்னு மனசுக்குள்ள ஒரு கோடு போட்டு வச்சிருக்கேன்.

    சரிம்மா! நீ குளிச்சிட்டு வா! சாப்பிடலாம்!

    துர்க்கா குளித்துவிட்டு, ஒரு காட்டன் சேலையைக் கட்டிக்கொண்டு வந்தாள்.

    தலையில் ஈர டவல்!

    பூஜை அறைக்கு வந்தாள். பதினைந்து நிமிடங்கள் அங்கே கழித்தாள்.

    வெளியே வந்தாள்.

    "அப்பா! சாப்பிடலாமா? நான்

    Enjoying the preview?
    Page 1 of 1