Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poonkaatru
Poonkaatru
Poonkaatru
Ebook483 pages3 hours

Poonkaatru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையின் முடிவு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ என்ற எதிர்பார்ப்போடு செல்லுகிறது. இதுபோன்ற கதைகளை ஆங்கிலத்தில் - ENIGMA என்பார்கள்.

மனைவியை இழந்த நடனசபாபதிமீது மகள்கள் யாமினியும் பகவத்கீதையும் பொழியும் பாசமும் பரிவும் அவருடைய மன நிம்மதிக்காகக் கர்வம் பிடித்த வீணை மேதையான இளைஞனின் காலில் விழுந்து அவமானம் ஏற்கும் தியாகமும் -

கலைஞனை அவனது பாதையிலேயே சென்று வென்று காட்டும் யாமினியின் கலையார்வம் நாவலுக்கு வித்தியாசத்தையும் விறுவிறுப்பையும் ஊட்டுகின்றது. அமரர் எஸ். ஏ. பி. அவர்களுக்கு ஒரு 'காதலெனும் தீவினிலே' போல ரா. கி. ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு 'படகுவீடு' போல அவர்களுக்கு “ என்று மெச்சத் தோன்றுகிறது.

பாக்கியம் ராமசாமி, என்ற புனைப்பெயரில் நகைச்சுவையாக எழுதிச் சிரிக்க வைக்கும் பேனாவினால், கலை ஆழமுள்ள நவீனத்தையும் உருவாக்க முடியும் என்பதன் நிரூபணமே பூங்காற்று.

வேகமாக வளர்ந்து வரும் கலை மேதைகளான கலைஞர்களின் கவனத்துக்கு மட்டுமல்ல, சுவையான, பழுதற்ற நல்ல நாவலை நாடுபவர்களுக்கும் பூங்காற்று ஒரு நல்லவிருந்து.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103655
Poonkaatru

Read more from Ja. Ra. Sundaresan

Related to Poonkaatru

Related ebooks

Reviews for Poonkaatru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poonkaatru - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    பூங்காற்று

    Poonkaatru

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja.Ra.Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    பதிப்புரை

    வித்தையில் விற்பன்னராக இருக்கும் கலைஞனுக்குக் கர்வமும் ஓரளவு இருக்கவே செய்யும் என்பார்கள். கலையின் தூய்மையைக் கட்டிக் காக்கும் வேலியாகப் பயன்படுத்துகிற அளவுக்குச் செருக்கு கலைஞனிடம் இருப்பதில் தவறில்லை, ஆனால் அந்த அகங்காரம் மனிதாபிமானத்தை மறக்குமானால் -

    இறைவன் செய்த வித்தையில் உன்னதமானது மனிதனைச் சிருஷ்டித்ததாகும். எந்தக் கலைஞன் மனித தத்துவத்தை அவமதிப்புக் குள்ளாக்குகிறானோ அவனை இயற்கை, கலைப்படிகளில் இடறச் செய்து விடுகிறது.

    இசைக் கலைஞனைப் பற்றிய என்ற இந்த நாவல், ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன் குமுதம் இதழில் தொடர் கதையாக வெளிவந்தது.

    நாவலாசிரியர் ஜ. ரா. சுந்தரேசனின் தனி நடையை பூங்காற்றில் சந்திக்கிறோம்.

    ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையின் முடிவு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ என்ற எதிர்பார்ப்போடு செல்லுகிறது. இதுபோன்ற கதைகளை ஆங்கிலத்தில் - ENIGMA என்பார்கள்.

    மனைவியை இழந்த நடனசபாபதிமீது மகள்கள் யாமினியும் பகவத்கீதையும் பொழியும் பாசமும் பரிவும் அவருடைய மன நிம்மதிக்காகக் கர்வம் பிடித்த வீணை மேதையான இளைஞனின் காலில் விழுந்து அவமானம் ஏற்கும் தியாகமும் -

    கலைஞனை அவனது பாதையிலேயே சென்று வென்று காட்டும் யாமினியின் கலையார்வம் நாவலுக்கு வித்தியாசத்தையும் விறுவிறுப்பையும் ஊட்டுகின்றது. அமரர் எஸ். ஏ. பி. அவர்களுக்கு ஒரு 'காதலெனும் தீவினிலே' போல ரா. கி. ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு 'படகுவீடு' போல அவர்களுக்கு என்று மெச்சத் தோன்றுகிறது.

    பாக்கியம் ராமசாமி, என்ற புனைப்பெயரில் நகைச்சுவையாக எழுதிச் சிரிக்க வைக்கும் பேனாவினால், கலை ஆழமுள்ள நவீனத்தையும் உருவாக்க முடியும் என்பதன் நிரூபணமே பூங்காற்று.

    வேகமாக வளர்ந்து வரும் கலை மேதைகளான கலைஞர்களின் கவனத்துக்கு மட்டுமல்ல, சுவையான, பழுதற்ற நல்ல நாவலை நாடுபவர்களுக்கும் பூங்காற்று ஒரு நல்லவிருந்து.

    -பூம்புகார் பதிப்பகத்தார்

    1

    கல்கத்தா நகருக்குக் களையூட்டும் பெருமிதத்தில் தனக்கும் ஒரு பங்குண்டு என்பது போல, ரவீந்திர சரோவர் என்னும் தக்கூரியா லேக் காற்றில் சிறுசிலுத்துக் கொண்டிருந்தது. ஏரியின் இருபுறத்திலும் சென்ற சாலைகளில், வங்காளி பாபுக்களின் விதவிதமான கார்கள் காற்று வாங்குவதற்காக வந்து கூடிய வண்ணமிருந்தன.

    'லேக்'கின் கரைகளில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில், காதல் பேசும் இணைகளும், ஓய்வு பெறவந்த இடத்திலும் வீட்டுப் பிரச்சினையை அலசும் தம்பதிகளும், புல் தரைகளில் ஓடியாடிப் புரளும் குழந்தைகளும், மூடி, மூடி, என்று கூவியவாறு பொரி விற்கும் சுறுசுறுப்பான வங்காளச் சிறுவர்களும், இவை போதாதென்று, வந்தவர்களைக் கலகலப்பாக வரவேற்கும் கல்யாண வீட்டு ‘ரிஸப்ஷன்' பெண்ணைப் போல இயற்கை தனது பூங்காற்றை லேக்குக்கு வருகிறவர்கள் மேல், அவர்கள் தூரத்தில் வரும் போதே குதூகலமாக வீசி மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

    'சமுத்திரமளவு துன்பமிருந்தாலும் இந்த சரோவருக்கு வந்தால் தீர்ந்துவிடும் என்று கல்கத்தாவாசிகள், குறிப்பாக லேக் கார்டன்ஸ் பகுதியிலுள்ளவர்கள் கூறிக் கொள்வதை அப்படியே எடுத்துக் கொண்டுவிட முடியாது.

    எத்தனையோ விதமான மனிதர்களையும், தொழிலையுடையவர்களையும் ஏரிக்கரையில் பார்க்கிறோம். அங்கே வீசும் மந்த மாருதத்தை ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களா என்றால் அந்தக் கேள்விக்கு நிச்சயமாக ஆமாம் என்று சொல்லிவிட இயலாது.

    அந்தச் சிமிண்ட் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாரே ஒரு பெரியவர், அவரைப் பாருங்கள். பூங்காற்றின் சிலுசிலுப்பிலும், உபசரிப்பிலும் கூட அகலாத துயருடன், மலராத முகமாக அவர் காணப்பட வில்லையா?

    செல்வந்தரைப் போல நன்றாக உடுத்தியிருக்கிறார். கைத்தடியை மோவாய்க்கு முட்டுக் கொடுத்தவாறு அவர் ஏதோ வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே தவிர, தன்னைச் சுற்றிலும் இருக்கும் உலகை அவர் ஜீவனுடன் பார்க்கவில்லை.

    ஐம்பது வயதிருக்கும். ஆனால் எண்பது வயதினரைப் போலக் குறுகித் தளர்ந்து உட்கார்ந்திருந்தார்.

    அவர் அணிந்திருக்கும் பஞ்சாபியையும் தோத்தியையும் பார்த்து அவர் ஒரு முகர்ஜியோ, சட்டர்ஜியோ, பானர்ஜியோ என்று தீர்மானித்தால் அது தவறாகத்தான் இருக்கும்.

    அவர் பெயர் நடனசபாபதி. நீண்ட நாட்களாக, கல்கத்தாவிலேயே வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தமிழர். சணல் காண்டிராக்ட் மூலம் அவர் ஏராளமான பணம் சம்பாதித்தார். பாலிகஞ்சில் வசதியான பங்களாவில் குடியிருக்கும் செல்வந்தர் அவர்.

    ஸ்டேட்ஸ்மேன் பாபு! ஸ்டேட்ஸ்மேன்! என்று பத்திரிகை விற்கும் பையனின் தொந்தரவு கூட அவரது குனிந்த தலையையும் நீர் மல்கிய பார்வையையும் திருப்பவில்லை.

    லேசாகத் தூறத் தொடங்கியது. புல் தரைகளிலும் நாற்காலிகளிலும் இருந்தவர்கள் கிளம்பத் தொடங்கினர் பரபரப்புடன்.

    மழைத் துளிகள் வரவரப் பெரிதாகி நடனசபாபதியை நனைத்தன.

    மழை உரத்துவிட்டது என்ற உணர்வு அவருக்கு ஏற்பட வெகு நேரமாயிற்று. ஒதுங்குவதற்காக அவர் விரைந்து நடக்கவில்லை. எழுந்து மெதுவே நடந்தார், சருகு போல.

    ஏரியின் நடுவே அந்த அழகான குட்டித் தீவை இணைக்கும் இரும்புப் பாலத்தின் வழியே அவர் நடை சென்றது. கால்கள் அவரை எங்கு அழைத்துச் செல்கின்றனவோ அந்த இடங்களுக்கெல்லாம் அவர் செல்லுவார் என்பதைப் போல் தோன்றியதே தவிர, உணர்வுடன், இன்ன இடத்துக்குப் போகிறோம் என்ற மாதிரி அவர் நடக்கவில்லை.

    ஏரிக்கு நடுவிலிருந்த அந்தத் தீவுக்குக் கரையிலிருந்து படகில் உல்லாசமாக எல்லோரும் வந்து போவார்கள். பாலத்தின் வழியாகவும் வரலாம்.

    தீவில் சிறிய மசூதி ஒன்று இருந்ததால், அதை 'மசூதித் தீவு' என்று சில பேர் அழைத்தனர்.

    மழை இப்போது நின்றுவிட்டது. ஆனால் நடனசபாபதியின் கண்களிலிருந்து பெய்து கொண்டிருந்தது.

    தீவின் ஓரமுள்ள நீர்ப்பரப்பில் மீன்கள் ஆவலுடன் எழும்பித் துள்ளிக் கொண்டிருந்தன. வருகிறவர்கள் அந்த மீன்களுக்குப் பொரியும், இதர தீனிகளும், வாங்கிப் போட்டுப் பழக்கிவிட்டதனால், கரையோரத்தில் சந்தடி கேட்டதும், அவை நீரில் கூட்டமாக மொய்க்கத் தொடங்கின. அந்த மீன்களுக்கு நடனசபாபதியின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த்துளிகள் அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏனெனில் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் இதே ஏரிக்கரையில் எவ்வளவு கலகலப்பும் குதூகலமாகவும் இருந்தார். பொட்டலம் பொட்டலமாக மீன்களுக்கு அவைகளுக்கென்று லேக்கில் விற்கும் பிரத்தியேகத் தீனியை வாரிப்போட்டு அவை மின்னல் வேகத்தில் வந்து இரை தின்னும் அழகைக் கண்டு மகிழ்ந்தார்.

    அந்த நடனசபாபதியா இவர்?

    கரையோரமிருந்த கிராதியைப் பற்றிக்கொண்டு நின்றிருந்த அவரது காதுகளில் கலகலவென்று இளம் தம்பதிகளின் சிரிப்பொலி வந்தது. அவர்களும் தீவுக்கு வந்தவர்கள்தான். மழை தூறியதால் சற்று ஒதுக்குப்புறமாக ஒண்டிக் கொண்டிருந்தனர். அந்தத் தம்பதிகளுடன் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கையில் கொட்டாங்கச்சி வாத்தியத்தைத் தட்டியவாறு விளையாடிக் கொண்டிருந்தது.

    மழை மறுபடியும் பெய்யுமா அப்பா.... என் டில்லீனெல்லாம் போச்சு... என்றது குழந்தை.

    குழந்தை சொல்றதைக் கேட்டீங்களா? என்ற பெண்மணி, என்னடா கண்ணு நனைந்துவிட்டது? என்றாள்.

    டில்லீன் என்றது குழந்தை.

    தம்பதிகள் சிரித்தவாறு குழந்தையை அணைத்துக் கொண்டனர்.

    அந்தத் தம்பதிகள் படகில் புறப்பட்டுக் கரைக்குப் போய் விட்டனர். நடனசபாபதி உணர்வற்று இவ்வளவு நேரமிருந்தவரின் வாய் என்னவோ முணுமுணுத்தது. அவரது தொய்ந்து தளர்ந்துபோன உடலில் ஒரு கடுமை பரவியது. கண்களில் கோபமான ஒளி தெரிந்தது. யாருடனோ சண்டை போடக் கிளம்பினவர் மாதிரி, கைத்தடியை அவர் கரம் கப்பென்று பற்றியது. வேகமாக நடக்கலானார்.

    சிநேகிதி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பிய யாமினிக்கு, அவளுடைய தங்கை பகவத்கீதா கவலைக்குரிய செய்திகளை வைத்திருந்தாள். வேலைக்கார செங்குப்தா செய்த தவறினால் அப்பாவைக் காணோம். அத்துடன் சற்றுமுன் மின்சாரம் வேறு நின்றுவிட்டது. டெலிபோன் வேலை செய்யவில்லை. சமையல்காரிக்கு ஜூரம்.

    யாமினி சுபாவத்திலே சற்று முன்கோபக்காரி. சட்டென்று எரிச்சல் கொள்கிறவள். அடுக்கடுக்காகத் தங்கை பல விஷயங்களைச் சொன்னதும் அவள் கொதித்துப் போய்விட்டாள்.

    நீ என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்? அப்பா போனது உனக்குத் தெரியாது? நாளைக்கு விடிந்தால் எனக்குப் பரீட்சை. என் நோட்ஸைத் திரும்ப வாங்கி வர சிநேகிதி வீட்டுக்குப் போய் வருவதற்குள் இத்தனை அமர்க்களமா? புத்தகத்தைத் தொப்பென்று மேஜை மீது போட்டாள். அந்த வேகத்தில், எரிந்து கொண்டிருந்த மெழுகு வத்திகளில் ஒன்று அணைந்தது.

    அக்காவின் எரிச்சலை பகவத்கீதா எதிர்பார்த்தது தான். ஆகவே சமாதானம் சொல்லத் தொடங்கினாள். அப்பாவைப் பார்த்துக் கொள்வதற்காகச் செங்குப்தாவை அமர்த்தியிருப்பதென்ன? அவன் உஜாலா தியேட்டருக்குச் சினிமா பார்க்கப் போவதென்ன? சினிமாவுக்குப் போகிறவன் என்னிடம் சொல்லிவிட்டு போயிருக்கக் கூடாதா? அவனை முதல் காரியமா வேலையை விட்டுத்தள்ள வேண்டும் அக்கா. அப்பாவை வாக் கூட்டிப் போயிருக்கிறானாக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்புறம் என்னடாவென்றால் மாட்டினிஷோ போயிருந்தேன் என்று தைரியமாக வந்து நின்றான்.

    பெருமூச்சுவிட்டாள் யாமினி. நாளைய பரீட்சையைப் பற்றிக் கவலைப்படுவேனா? அப்பாவைப் பற்றிக் கவலைப்படுவேனா?

    தப்புதான் அக்கா, தப்புதான். அந்த செங்குப்தா பண்ணின பழி. அவனை நான் திட்டியிருக்கிறேன் பார் அப்படித் திட்டியிருக்கிறேன். எவ்வளவு நேரமானாலும் சரி, அப்பாவைத் தேடிக் கூட்டி வந்து வீட்டில் சேர்த்து விடுவதாகப் போயிருக்கிறான்.

    யாமினி கவலையுடன், பரீட்சையில் நான் முதல் வகுப்பில் தேறாவிட்டால் போகிறது. குறைந்த பட்சம் பாஸாவது செய்ய வேண்டுமில்லையா? படிக்கவே நேரமில்லை என்று நான் கவலைப்பட்டுக்கொண்டே வீட்டில் நுழைந்தால்.. அப்பாவைக் காணோம், கரண்ட் இல்லை, டெலிபோன் ரிப்பேர், சமையல்காரி ஜூரம் அடுக்கடுக்காக இப்படியா?

    பகவத்கீதா கவலைப்பட்டாள். அப்பா மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறாறோ?

    யாமினி சற்று நேரம் உட்கார்ந்திருந்தாள். அப்பா தேடும் படலம் ஆரம்பமாகிவிட்டால், என் பரீட்சை அவ்வளவுதான்.

    குற்றவாளி போல் பகவத்கீதா, "அக்கா என்னை ரொம்ப மன்னித்துவிடு. என் அஜாக்கிரதையால், ஐயோ பாவம். உனக்கு எவ்வளவு கஷ்டம்? இந்த அப்பா ஏன்தான் இப்படி ஆகிவிட்டாரோ? என்னைக் கேட்டால், பேசாமல் அவர் இரண்டாம் கல்யாணம் ஒன்று பண்ணிக் கொண்டு தானும் சந்தோஷமாக இருந்து, நம்மையும் சந்தோஷமாக இருக்க விடலாம்.

    யாமினி தங்கையைக் கடிந்து கொள்வது போலப் பார்த்தாள். பதினைந்து வயசாகவில்லை உனக்கு, அதற்குள் பாட்டி மாதிரி யோசனைகளாகக் கொட்டுகிறாயே, அப்பாவுக்குப் பெண் கூடப் பார்த்து வைத்திருக்கிறாயோ?

    இல்லை அக்கா. பின்னே என்ன? அம்மா இறந்து போய்க் கிட்டத்தட்ட ஆறு மாசமாகிறது. அப்பா பாரேன், பிரமை பிடித்தவர் மாதிரி. எப்போது பார்த்தாலும் ஒரே சோகமாகவே இருக்கிறார், அவருக்கு நாம் குழந்தைகளா, நமக்கு அவர் குழந்தையா? நமக்கு அவர் தைரியம் சொல்ல வேண்டியதற்குப் பதில், நாமல்லவா அவரைப் பற்றிச் சதா காலமும் கவலைப்பட வேண்டியதிருக்கிறது? வெறும் பிரமை பிடித்திருந்தாலும் பரவாயில்லை. நினைத்த இடத்தில் அப்படியே மயக்கம் வேறு போட்டு விடுகிறார்.

    யாமினி சிறிது நேரம் மெளனமாக மெழுகுவத்தியையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு தங்கையைப் பார்த்து, நீ இன்னும் சின்னப் பாப்பாதான். இல்லறம், குடும்பம் என்றால் உனக்கு என்ன என்று தெரியாது, என்றாள்.

    உனக்குத் தெரியுமாக்கும்?

    உன்னை விட எனக்கு அவைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். அப்படித் தெரியாவிட்டாலும் அப்பாவைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும், அவர்கள் எப்படி அன்னியோன்னியமாக இருந்தார்கள் என்பது பற்றியும் உன்னைவிட எனக்கு நன்றாக தெரியும். அம்மா போன துக்கத்தை தாங்கிக் கொண்டு இந்த நிலையிலாவது அப்பா இருக்கிறாரே என்று நான் சந்தோஷப்படுகிறேன்.

    எனக்கு மட்டும் அப்பாகிட்டே பிரியம் இல்லையென்று நினைத்துக் கொண்டாயா? செங்குப்தாவை நம் பினது தவறாகப் போய்விட்டது. அவன் வரவர ரொம்ப இவனாகத்தான் போய் விட்டான், ஒரு லெட்டர் போஸ்ட் செய்யச் சொன்னேன். அதற்குக்கூட.. என்று படபட வென்று ஆரம்பித்த பகவத்கீதா டக்கென்று பாதியிலேயே நிறுத்திக் கொண்டுவிட்டாள்.

    லெட்டரா? யாருக்கு எழுதினாய்? என்று யாமினி கேட்டதும், அவள் தடுமாறிப் போய்விட்டாள். வந்து... லெட்டர்... இல்லை... இல்லை... வாழ்த்துச் செய்தி. என் சினேகிதி ஒருத்திக்கு வாழ்த்து- க்ரீட்டிங்க்ஸ் அனுப்பினேன். அதைக் கொண்டு போய்த் தபாலில் போட்டு வா என்றால் அவன் கவனிக்கவே இல்லை. நானே போய்ப் போட்டுவிட்டு வந்து பார்த்தால், அப்பாவைக் காணோம். செங்குப்தாவைக் காணோம். சரி, வாக்தான் கூட்டிப் போயிருக்கிறான் என்று பார்த்தால். அவன் பொறுப்பில்லாமல்.

    மேலே ஏதும் பேசுமுன் மின்சார விளக்குகள் பளிச்சென்று எரிந்தன. விளக்கு வந்துவிட்டது? நான் காரில் போய் ஒரு ரவுண்ட் சுற்றி பார்க்கிறேன். அப்பா எங்கே இருக்கிறார் என்று. எங்கும் போய்விட மாட்டார். எங்கோ பத்திரமாக இருப்பார், என்றாள் யாமினி..

    "அப்படியே வருகிறபோது சமையல்காரியின் ஜூரத்துக்கு ஏதாவது மருந்து வாங்கிக் கொண்டு வருகிறாயா?

    யாமினி கிளம்பினாள். கேட் வரைக்கும் அவளை வழி அனுப்பிவிட்டு, பகவத்கீதா காரையே பார்த்துக் கொண்டு நின்றாள். பின்

    காரை எடுத்துக்கொண்டு யாமினி பாலிகஞ்ச் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு லேக் கார்டன்ஸ் பகுதியையும் சுற்றினாள். அப்பா ஒருகால் ரவீந்திர சரோவருக்குப் போயிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றாமலில்லை. ஆனால் அவள் அங்கு போனபோது ஏரிக்கரையில் அனேகமாக யாருமே இல்லை. இருள் நன்கு கவிந்து கொண்டுவிட்டது. தினமும் மாலையில் ஏழரை மணிக்குச் சொல்லி வைத்தாற்போல் தாளம் ஒன்றைத் தட்டிக் கொண்டு செல்லும் பௌத்த சாது கூடச் சென்றுவிட்டார். மனத்துக்குச் சாந்தி தருவதே, சில சமயம் அச்சத்தைத் தரும். ரவீந்திர சரோவரின் அமைதி, யாமினிக்கு அந்தத் திகிலைத்தான் கொடுத்தது. 'களக்! களக்! களக்! என்ற சத்தத்துடன் காற்று தண்ணீரைக் கரைக்குத் தள்ளிக் கொண்டிருந்த ஒலி, அவளைப் பயம் கொள்ளச் செய்தது.

    ஒருகால் இவ்வளவு நேரம் அப்பாவைத் தேடிப் பிடித்துச் செங்குப்தா கூட்டி வந்திருந்தாலும் வந்திருக்கலாம் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு, ஏமாற்றமும் அதே சமயம் வீட்டில் இருப்பார் என்ற நம்பிக்கையுடனும் யாமினி காரைத் திருப்பினாள்.

    வீட்டில் ஏமாற்றமும், செங்குப்தா எப்படியும் தேடிக் கூட்டி வந்துவிடுவான் அக்கா... என்ற பகவத்கீதாவின் சமாதானமும் அவளை வரவேற்றன.

    யாமினி வேதனையைச் சகித்துக் கொண்டு பரீட்சைக்குப் படிப்பதற்கு உட்கார்ந்தாள். 'செங்குப்தாவும் வெறும் கையுடன் வந்துவிட்டால்?' என்ற கேள்வியே வளைய வளைய அவள் மூளைக்குள் வந்ததே தவிரப் படிக்க இயலவில்லை."

    பகவத்கீதாவும் எதுவோ எழுதுவதும் படிப்பதும் கிறுக்குவதுமாக இருந்தாள்.

    நீ படுத்துக் கொள்ளலாமே! உன்னால் தூக்கம் விழிக்க முடியாது. அப்பா வந்ததும் எழுப்புகிறேன். என்றாள் யாமினி தங்கையைப் பார்த்து..

    இல்லை. இல்லை. எனக்குத் தூக்கம் வரவில்லை. இப்படியே வராந்தாவில் சற்று உலாவுகிறேன். நீ சொல்வது போல் அப்படியே ஏதாவது கொஞ்சம் தூக்கம் எனக்கு இருந்தாலும் ஓடிவிடும், என்று அக்காவின் பார்வையிலிருந்து வராந்தா பக்கம் வந்தாள். டே -

    இரவு பதினொரு மணிக்கு வாசலில் டாக்ஸி ஒன்று வந்து நின்றது. யானை

    சாய்வு நாற்காலியில் படுத்து ஏதோ சிந்தனை பயுடனிருந்த பகவத்கீதா சட்டென்று விழித்துக்கொண்டு (போர்ட்டிகோ விளக்கைப் போட்டவள், அக்கா! அக்கா! அப்பா வந்துவிட்டார், என்று உற்சாகமாக குரல் கொடுப்பதற்குள் யாமினியே உள்ளிருந்து வந்துவிட்டாள்.

    டாக்ஸியை ஓட்டி வந்த ஸர்தார்ஜி கீழே இறங்கிப் பின் கதவைத் திறந்தார்.

    நடனசபாபதி மட்டுமல்ல, இன்னொரு ஆளும் இறங்கினார், மெதுவா.. மெதுவாக.. என்று நடனசபாபதி சொல்ல, நான் இறக்குகிறேனுங்க, ஜாக்கிரதையாக... என்று கூட வந்த ஆள் ஒரு வீணையை டாக்ஸியிலிருந்து இறக்கினான்.

    கடந்த ஆறு மாதமாக வாயே திறந்து பேசாத நடனசபாபதி, வீணை... வீணையம்மா... என்றார் குரலில் மகிழ்ச்சியுடன். அவரது கண்கள் ஒளிவிட்டன.

    தானே வீணையைக் கையில் தூக்கிக்கொண்டு, மாடி ஏறிப் போய்விட்டார், காத்திருந்த பெண்களிடம் ஏதுமே பேசவில்லை.

    டாக்ஸியின் பின் ஸீட்டிலிருந்து இறங்கிய ஆள் யாமினியைக் கும்பிட்டான். நமஸ்காரம்மா... என்னைத் தெரிகிறதா?

    இருந்த குழப்பத்தில் அவன் யார் என்று யாமினிக்குத் தெரியவில்லை. ஆயினும், பகவத்கீதாவுக்குச் சட்டென்று தெரிந்துவிட்டது. ஓ. நீங்க இன்ஸ்ட்ருமெண்ட் மூர்த்தி அல்லவா? எஸ்பிளனேடில் ட்ராம் ஜங்க்ஷன்கிட்டே வாத்தியக் கடை இருக்கிறதில்லையா?

    ஓ... ஆமாம், ஆமாம், என்று யாமினியும் நினைவு கூர்ந்தாள். "நீங்கள் எப்படி ஐயாகூட.' என்று வினவினாள்.

    ஆமாம்மா. எதிர்பாராதவிதமாகத்தான் இன்றைக்கு ஐயாவுடன் வந்தேன். நானே வரவேண்டும் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். இன்றைக்கு ஐயாவே கடையைத் தேடி வந்துவிட்டார். சாயந்தரம் ஆறு மணி இருக்கும். கடைக்கு வந்தார். 'வாங்க முதலாளி பாபு' என்று கும்பிட்டேன். அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே நான் பயந்துட்டேன் அம்மா. என்ன எஜமான். என்ன?' என்றேன். 'ஏண்டா மோசக்காரா' என்று ஒரே வார்த்தை தான் சொன்னாங்க. நான் என்ன மோசம் பண்ணினேன்? ஐயா இப்படி எல்லாம் பேசப்பட்டவரல்லவே, அடியோடு மாறிப்போய்விட்டாரே என்று நான் பயந்து கொண்டே, நான் ஒண்ணும் மோசம் பண்ணலியே' என்றேன். 'எங்கேடா என் கோகிலத்தின் வீணை? என்று ஐயா கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது. நம்ம அம்மா உயிரோடு இருந்தப்போ, அவுங்க வீணை மேளம் கலைஞ்சு போச்சுன்னு கட்டுவதற்கு என்கிட்டே வந்ததில்லையா? அதை நான் முக்கால்வாசி கட்டிக்கூட வைத்துவிட்டேன். கொண்டு வருவதற்குள்தான் அந்த வீணைக்கு அதிருஷ்டமில்லாமல் போச்சே. பெரியம்மா அப்படி உசிராக இருந் தாங்க வீணைமேல். அவுங்க போனபிறகு அந்த வீணையை எடுத்துட்டு வந்து இங்கே கொடுக்கறதுக்குக்கூட மனசு கூசிக்கிட்டு கடையிலேயே வச்சிட்டிருந்தேன். மறந்து போச்சு... ஐயா இன்னிக்கிக் கடைக்கு வந்து கேட்டேவிட்டார். 'என்ன நேரமானாலும் அதை மேளம் சரிசெய்து கொடுத்திட்டுத்தான் போகணும் இல்லாட்டி நான் கடையை விட்டுப் போகமாட்டேன். போகமாட்டேன்'னு சொல்லிக்கிட்டே மயக்கமா விழுந்துட்டாரு. எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே. சோடா வாங்கித் தெளிச்சப்புறம் மயக்கம் தெளிஞ்சது. சரி, ஐயாவுக்கு மனம் நிதானத்திலில்லை என்று தெரிந்து கொண்டேன். அவர் சொன்ன மாதிரி எல்லா வேலையையும் விட்டுவிட்டு, இந்த வேலையைச் செய்து முடிச்சேன். ஐயாவையும் கூட்டி வந்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்குங்க அம்மா

    யாமினிக்கு அவன் சொல்லச் சொல்ல உள்ளத்தை வேதனைப்படுத்தியது. மூர்த்தி, நீங்கள் தக்க சமயத்தில் உபகாரம் செய்திருக்கீங்க. எங்கள் வீட்டு மனுஷர் மாதிரி நீங்கள். உங்களிடம் சொல்வதற்கென்ன? ஐயாவுக்கு மனசு பேதலித்துவிட்டது. முன் மாதிரி இல்லை, உங்கள் கடையில் ஏதாவது தப்பா நடந்துகிட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.

    என்னம்மா, இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்றீங்க? மெட்ராஸ்லேயிருந்து நான் கல்கத்தாவுக்கு வருவதற்கே ஐயாதான் காரணமாய் இருந்தாருங்க. என்ன உபகாரம் வேணுமோ சொல்லுங்கள். நான் எப்பவும் செய்யக் காத்திருக்கிறேன்.

    டாக்ஸிக்கார சர்தார்ஜி ஹார்ன் அடிக்கவும், வர்றேன் அம்மா போய்விட்டு, என்று வாத்தியக் கடைக்காரர் விடைபெற்றார்.

    யாமினி தமது ஞாபக மறதிக்கு வருந்தினாள். அம்மாவுடைய வீணையை மேளம் கட்டுவதற்குக் கொடுத்துவிட்டு நாம் அடியோடு மறந்துபோய் விட்டோமே!

    எனக்குக்கூட நடுவில் ஒருதரம் ஞாபகம் வந்தது அக்கா. ஆனால் வீணையைப் பார்த்தால் அப்பாவுக்கு ஏற்கனவே இருக்கிற துக்கம் இன்னும் அதிகமாகப் போகிறது என்று நினைத்துப் பேசாதிருந்துவிட்டேன், என்ற பகவத்கீதா, சரி அக்கா, அப்பாவை நான் ஜாக்கிரதையாக இனிப் பார்த்துக் கொள்கிறேன். நீ பாவம், பரீட்சைக்கு படி. உனக்கு எப்படி நான் தாங்க்ஸ் சொல்வேன்? என்றாள். நான்

    தாங்க்ஸ் எதற்கு? நானா போய் அப்பாவைக் கூட்டி வந்தேன்? வாத்தியக் கடைக்காரருக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். சரி, அப்பாவுக்கு வழக்கம் போலச் சாதம் பிசைந்து ஊட்டிவிடு. அவர் சீக்கிரம் தூங்க வேண்டும். எங்கெங்கேயோ பாவம் அலைந்திருக்கிறார்.

    தூக்கம் வராதிருக்கக் கண்களைக் கழுவிக்கொண்டு யாமினி படிக்க உட்கார்ந்தாள். ஐந்து நிமிடமிருக்கும்.

    யாமினி...

    அப்பா அவளைக் கூப்பிட்டு வெகு மாதங்களாயின. யாமினிக்கு அப்பா தன்னைக் கூப்பிட்டது மகிழ்ச்சியைத் தந்தது. இதோ வந்தேன் அப்பா... நீங்கள் இன்னும் தூங்க வில்லையா? என்று கேட்டவாறே அவரருகில் சென்றாள்.

    இதைக் கொஞ்சம் வாசிக்கிறாயா அம்மா?

    யாமினிக்கு பக்கென்றது. அவள் ஒரு நாள் கூட வீணைப் பயிற்சி செய்தவளல்ல. அப்பாவுக்குத் தெரிந்த விஷயம்தானே? தன்னை இப்படி அவர் கேட்டுக் கொண்டது நிதான புத்தியிலா? எனக்கு... எனக்கு... வாசிக்கத் தெரியாதேப்பா....

    "தெரியும்மா.. சும்மாச் சொல்லாதே. கொஞ்சம் நேரம் வாசியம்மா அந்த ‘பக்கல் நிலபடி..அப்பாவின் பிடிவாதம் யாமினிக்கு இன்னும் அவர் பிரமை பிடித்துத்தான் இருக்கிறார் என்பதைத் தெளிவு படுத்தியது.

    தெரியாதேப்பா... என்றாள்.

    பொய் சொல்லாதே, பரவாயில்லை கொஞ்சம் வாசியம்மா. எனக்குத் தெரியாததால்தானே கேட்கிறேன்? என்றவாறு, வா.. வாம்மா... வந்து வாசியம்மா.. என்றார்.

    சமயத்தில் உதவிக்கு வந்தாள் தங்கை. அவள் கையில் அப்பாவுக்கு ஊட்டுவதற்காகச் சாதமிருந்தது. அப்பா.. அக்காவுக்கு விடிந்தால் பரீட்சை... என்று அவள் சற்று அழுத்தமாகக் கூறினாள்.

    பரீட்சையா? சரி சரி. நான் யாரையும் வாசிக்கச் சொல்லக் கூடாது. கோகிலம்தான் எனக்கு வாசிக்க வேண்டும். அவள் வீணை. அவள்தான் வாசிக்கவேண்டும், வேறு யாரையும் நான் கேட்கக்கூடாது, தப்புதான்.

    வீணையை அணைத்துக் கொண்டு அதன்மேல் தலையை ஒருகணித்துக் கொண்டிருந்த நடனசபாபதியின் உடல் குலுங்கியது.

    எனக்குத் தெரிந்தால் நான் வாசிக்க மாட்டேனா அப்பா.. என்றாள் யாமினி குரல் தழுதழுக்க.

    அவளை அந்தப் பக்கம் வருமாறு பிடித்து அழைத்து போன பகவத்கீதா, நீ ஏன் அக்கா அழறே, அப்பாவோடு சேர்ந்து கொண்டு? அப்பா சுயபுத்தியிலா சொல்கிறார்? உனக்கு வீணை வாசிக்கத் தெரியாது என்பதே அவருக்கு மறந்துவிட்டது. நீ அம்மா இருக்கும் போது வீணை வாசிக்கிறேன் என்று ஆரம்பித்து வீணைத்தந்தி அறுந்து உன் கண்ணில் காயம் ஏற்படுத்தியதும், பார்வை போய்விடப் போகிறது என்ற நிலையில் வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டு கடைசியில் கண் வந்ததும், அம்மா நீ வீணையையே தொடவேண்டாம் என்று உனக்குத் தடை போட்டதும்.. எல்லாம் அப்பாவுக்கு மறந்துவிட்டது. நீ ஏன் அதற்காக அழவேண்டும்? உன்னை நான் ரொம்ப வீரதீர அக்கா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டில் அப்பாவின் அழுகை ஒன்றுபோதும். நீயும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டால் எனக்கு அப்புறம் பைத்தியம் பிடித்துப் போய்விடும். நாளைக்கு உனக்குப் பரீட்சையில்லையா? மணி பன்னிரண்டாகப் போகிறது. இன்னமும் நீ தூங்காவிட்டால் நாளை பரீட்சை ஹாலில் தடாலென்று விழுந்து வைத்தாலும் ஆச்சரியமில்லை. நீ போய்ப் படுத்துக்கொள். அப்பாவை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்.

    இவ்வளவு சமாதானம் சொன்னாளே தவிர, பகவத்கீதா கொஞ்ச நேரத்தில் தூங்கத் தொடங்கி விட்டாள்.

    வீணையை அணைத்தவாறு உட்கார்ந்த நிலையில் அதன் மேலேயே மயங்கிக் கிடந்த தந்தையைப் பார்த்த யாமினிக்கு இதயத்தை வேதனை கவ்வியது. அவரது துக்கம் மறைவதற்கு மார்க்கமே இல்லையா என்று அவள் வேதனைப்பட்டாள். பிறகு படிக்கத் தொடங்கினாள்.)

    படிக்க எங்கே முடிந்தது? 'அம்மாவைப் பற்றி அப்பா உருகி உருகிக் கரைவதைத் தடுக்கவே முடியாதா?" என்ற கேள்விதான் பரீட்சைக் கேள்வியாக அவள் முன் நின்றது.

    2

    யாமினி கண்ணை விழித்தபோது பளிச்சென்று விடியத் தொடங்கியிருந்தது. எங்கோ ஒரு பங்களாவில் நீண்ட சங்கொலி கேட்டது. அந்த வங்காளிக்காரர்கள் வீட்டில் என்னமோ நல்ல சமாச்சாரம் போலும். அவர்கள் பொழுது குதூகலமாக விடிந்திருக்கிறது. மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளின் போதும், வைபவத்தின் போதும் அவர்கள் வீடுகளில் சங்கம் ஒலிப்பது வழக்கம்.

    அந்தச் சங்கொலி யாமினிக்கும் கொஞ்சம் தெம்பூட்டுவதாக இருந்தது. காலையில் எழுந்ததும் இனிமையான சகுனம் போல் அந்த ஒலியைக் கேட்டதில் அவளுக்குத் திருப்தி.

    ஐந்தரை மணியைக் காட்டியவாறு ஓடிக் கொண்டிருந்த அலாரத்தைப் பார்த்தாள். விடியற்காலை மூன்று மணிக்கு அலாரம் வைத்திருந்தும் எப்படி அது கடமையைச் செய்யவில்லை? அல்லது அசதி மிகுதியினால் அலாரம் அடித்தும் கூட அவளுக்குத் தெரியவில்லையா?

    அலாரம் முள்ளைப் பார்த்தாள். மூன்றில் அவள் வைத்திருந்தது ஏழில் நின்று கொண்டிருந்தது. பகவத்கீதாவின் வேலையாகத்தான் இருக்கும் என்று யாமினி வினாடி நேரத்தில் ஊகித்துவிட்டாள்.

    திட்டபடி படிக்க முடியவில்லையே என்ற எரிச்சலுடனும் அவசரத்துடனும் குளியல் அறைக்கு விரைந்தாள். அது சாத்தப்பட்டிருந்தது. குளிக்கும் ஓசை கேட்டது.

    பகவத்! பகவத்! என்று கதவைத் தட்டினாள் யாமினி, "ஏற்கனவே நீ எனக்கு உபகாரம் செய்வதாக நினைத்து அலாரம் முள்ளைத் திருப்பிவிட்டாய். இப்போது குளிக்கும் அறையில் புகுந்து கொண்டு..'

    ஷவர்பாத்தின் 'சிர்ர்ர்' என்ற ஒலி நின்றது. பாத்ரூம் கதவு 'டொக்' என்று திறந்தது. உள்ளேயிருந்து சொட்டச் சொட்ட ஈரத்துடன் வெளிவந்தது பகவத்கீதா அல்ல. நடனசபாபதி.

    அப்பா! நீங்களா? என்று யாமினி ஒரு கணம் ஆச்சரியப்பட்டுப் போனாள். ஏனெனில் அவர் இவ்வளவு சீக்கிரமாக ஐந்தரை மணிக்கு எழுந்து குளிப்பார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

    அம்மா இறந்தபிறகு அவருக்கு ஊண் உறக்கம் குளியல், அது இது எல்லாம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டன. வேலைக்கார செங்குப்தா அவரைக் குளிக்கும் அறைக்கு அழைத்துச் சென்று முக்காலியில் உட்கார வைத்து இரண்டு வயசுக் குழந்தைக்குக் குளிப்பாட்டு வதைப்போல் உடம்பு தேய்த்துவிட்டு ஸ்னாநம் செய்வித்து, துடைத்து, டிரஸ் மாட்டுவான். அப்படிப் பட்டவர் இன்றைக்கு அவரே காலையில் எழுந்து குளிப்பதென்றால்?

    'ஆமாம்மா... நான் தான். இன்றைக்குக் கிருத்திகையில்லையா? நம் வீட்டில் பூஜை உண்டென்பதை மறந்துவிட்டாயா? நீயும் சீக்கிரம் குளி. உன் தங்கைகூடக் குளித்து விட்டாள்."

    யாமினிக்குக் கட்டளையிட்டுவிட்டு நடனசபாபதி செங்குப்தா... என்று குரல் கொடுத்தார் உரக்க. டவல் கொண்டார். தோட்டத்தில் போய் இன்னும் பூக்கள் பறித்து வரவில்லையா? எந்த மந்திர சக்தியினாலோ அப்பா இப்படி ஜீவனுடன் இயங்குகிறாரே? விடிகாலையில் ஒலித்த சங்கொலி நிச்சயம் நல்ல சகுணத்தைத்தான் சொல்லியிருக்கிறது. அம்மா இருந்த வரையில் விடாமல் செய்து வந்த கிருத்திகை பூஜை அப்பாவுக்கு டக்கென்று இன்று ஞாபகம் வந்தது போலும்.

    இரவில் தூக்கமில்லாத கண்ணெரிச்சலும், உடல் அசதியும் யாமினிக்குப் போன இடம் தெரியவில்லை. பரீட்சையை இனி அவள் ஊதித் தள்ளிவிடுவாள். உற்சாகமாகக் குளித்தாள். உடை உடுத்திக் கொண்டாள்.

    குளிப்பதற்கு இவ்வளவு நேரமாம்மா? என்று நடனசபாபதி கேட்டார். சீக்கிரம் வா. பூஜை தொடங்க வேண்டாமா?

    இதோ அப்பா என்று நெற்றிக்குத் திலகமிட்டுக் கொண்டாள். தோட்டத்தில் பகவத்கீதா, மலர்ச் செடிகளிலிருந்து பூக்கள் பறித்துக் கொண்டிருப்பது பளிச்சென்று ஜன்னல் வழியே அவள் கண்களில் பட்டது. ஒருகால் அவள்தான் அப்பாவை, 'இன்று கிருத்திகை அல்லவா? நீங்கள் பூஜை செய்யவேண்டாமா?" என்று தூண்டியிருப்பாளோ?

    தங்கையின் புத்திசாலித்தனத்தை யாமினி மனத்துக்குள் பாராட்டினாள்.

    மணி ஏழரை, இன்னும் இரண்டு மணி அவகாசம் இருந்தது பரீட்சைக்கு அவள் கிளம்ப. அப்பாவின் திருப்திக்காகப் பூஜைக்கு ஒரு கால் மணி, சிற்றுண்டி சாப்பிட ஒரு கால் மணி, போனால் கூட இன்னும் ஒன்னறை மணி அவகாசம் இருக்கிறது.

    சிற்றுண்டி என்றதும்தான் சமையல்கார அம்மாள் பார்வதிபாய்க்கு ஜுரம் என்ற விஷயமும், முந்திய இரவுகூட ஓட்டலிலிருந்துதான் சாப்பாடு வந்ததும்,

    Enjoying the preview?
    Page 1 of 1