Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovile Then Thedavaa?!
Poovile Then Thedavaa?!
Poovile Then Thedavaa?!
Ebook230 pages2 hours

Poovile Then Thedavaa?!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலுக்கு வார்த்தைகள் தேவையா? ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமலே நேசிக்க முடியுமா? கதை முழுவதும் நாயகன் நாயகி ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமலே இருந்தால்???

கொடைக்கானலின் குளுகுளு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான காதல் கதை!

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580113309641
Poovile Then Thedavaa?!

Read more from Vathsala Raghavan

Related to Poovile Then Thedavaa?!

Related ebooks

Reviews for Poovile Then Thedavaa?!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovile Then Thedavaa?! - Vathsala Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூவிலே தேன் தேடவா?!

    Poovile Then Thedavaa?!

    Author:

    வத்சலா ராகவன்

    Vathsala Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அது அக்டோபர் மாத மலைப் பிரதேசத்து மாலை. இந்த நேரத்தில் கொடைக்கானல் எனும் அந்த மலைப் பிரதேசம் மழைப் பிரதேசமாக மாறிப் போயிருந்தது. சற்றே மனம் கனிந்து மிதமாக ஊசிப் போட்டுக் கொண்டிருந்தது குளிர் காற்று.

    இப்போதைக்கு மழை சற்று ஓய்வு எடுத்து அமர்ந்திருக்க, அவர்கள் தங்கியிருந்த அந்த ரிசார்ட்டின் முகப்பு வாயிலை அலங்கரித்திருந்த மரங்களில் இருந்த மஞ்சள் நிற பூக்கள் தலை துவட்டக்கூட விரும்பாமல் மழைத்துளிகளை தாங்கிக் கொண்டே நின்றிருந்தன.

    சற்றே தூரத்தில் தெரிந்த அந்த சறுக்கு மரத்தில் பெயர் தெரியாத ஒரு பறவை தத்தி தத்தி இறங்கி, பின் பறந்து சென்றது.

    அந்த ரிசார்ட்டின் முதல் மாடியில் இருந்த உணவகத்தில் இருந்து வந்த காபியின் நறுமணம் நாசியை தாலாட்டிக் கொண்டிருந்தது.

    இது எதுவுமே அங்கே முகப்பு பகுதியில் நின்றிருந்த ராதாவின் கருத்தில் பதியவே இல்லை. அவளது பார்வை அங்கிருத்து வளைந்து சென்ற பாதையின் முடிவில் தெரிந்த அந்த ரிசார்ட்டின் கேட்டின் மீதே இருந்தது.

    வெள்ளி நிறத்து ஹோண்டா சிட்டியே என் கண்ணில் பட்டு விட மாட்டாயா?

    பாரு பாரு ஹீரோ சார் உன்னைப் பார்த்ததும் அப்படியே கட்டிப்பிடிச்சு அழுத்தமா ஒரு லிப் லாக் பண்ணப் போறாரு சொல்லியும் விட்டாள் அருகிருந்த மேதினி.

    ஹேய்... போ வெட்க சிரிப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் ராதா.

    இங்கிருந்து போகப் போறியா இல்லையா. அப்போதிலிருந்து பக்கத்திலேயே இருந்து என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா தோழியை செல்லமாக விரட்டினாள் அவள்.

    அதெல்லாம் முடியாது. நான் வேடிக்கை பார்த்தே ஆகணும் மேதினியின் உதடுகளில் ரசிப்பாய் ஒரு சிரிப்பு.

    இப்போ எதுக்கு என்னை கிண்டல் பண்ணி சிரிக்குறே? லேசாக சிணுங்கி அவள் முகம் பார்த்தாள் ராதா. மேதினியின் சிரிப்பு இன்னும் பெரிதானது.

    அவளை ரசிக்காமல் இருக்கவே முடியாது மேதினியால். பள்ளிக் காலம் துவங்கி இப்போது வேலைப் பார்க்கும் கல்லூரி வரை இருவரும் கைகோர்த்துக் கொண்டே கடந்தாகி விட்டது.

    ஆனால் கடந்த ஆறு மாதம் முன்னால் இருந்த ராதாவுக்கும் இந்த ராதாவுக்கும்தான் எத்தனை வித்தியாசம்?

    இவர்கள் வேலைப் பார்க்கும் அந்த பெண்கள் கல்லூரியில் எப்போதும் இருக்கும் ராதாவுக்கும் இன்றைய இந்த ராதாவுக்கும் எத்தனை வித்தியாசம்?

    காதல் என்று வந்து விட்டால் இப்படி உருகி நிற்கிறதே இந்தப் பெண் ஒரு காதலனுக்காக காத்திருக்கும் போது இப்படியெல்லாமா தவிப்பு மேலோங்கும். நிறையவே வியப்பு மேதினிக்கு.

    ராதாவின் இதயம் பொங்கி பொங்கி வழிந்து கொண்டே இருந்தது. நுரையீரல் முழுவதும் ஒவ்வொரு நொடியும் யாரும் சுவாசிக்காத புத்தம் புது காற்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது போல் ஒரு உணர்வு அவளுக்கு.

    வரப் போகிறான். கிருஷ்ணா வரப்போகிறான்.

    அவன் வந்ததும் நீ என்ன பண்ணுவே? கேட்டும் விட்டாள் மேதினி.

    உன்னை முதலிலே அடிச்சு உள்ளே துரத்துவேன். நான் என்ன பண்ணுவேன்னு எல்லாம் நீ பார்க்கக் கூடாது அவள் முதுகில் ஓங்கி ஒரு அடி வைக்கப் பார்த்தாள் ராதா.

    மேதினி விலக, ராதா வேகமாக பின்னால் நகர, தரை வழுக்க, அவளைத் தாங்கிப் பிடித்து நிற்க வைத்தாள் மேதினி.

    யம்மா தாயி புடவையை வேறே கட்டி ஜிமிக்கி போட்டு சீவி சிங்காரிச்சு நிக்கறே. விழுந்து கையை காலை உடைச்சு வெச்சுக்காதே. இன்னும் ஒரே வாரத்திலே உனக்கும் கிருஷ்ணாவுக்கும் கல்யாணம். அப்புறம் உடைஞ்ச காலோட எப்படி ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாடுறது?

    ஹேய்... ச்சீ வாயை மூடு. இப்போது அடித்தே விட்டாள் மேதினியை. யார் காதிலேயாவது விழப்போகுது சுற்றும் முற்றும் பார்த்து, பொய்யாக கோபித்துக்கொண்ட ராதாவின் முகம் முழுக்க வெட்க மேகங்கள்.

    ராதாவின் கண்கள் அத்தனை அழகு. மனதில் இருப்பதை அட்சரம் பிசகாமல் பேசி விடும் கலை கற்றவை அவை. அதோடு சேர்த்து நீள் கூந்தல். அதன் நடுவில் எப்போதும் ஒற்றை ரோஜா ஒன்று குடி இருக்கும்.

    கிருஷ்ணாவுக்கு முன்னால் இவள் காதலித்தது ரோஜா பூக்களைத்தானோ?

    இந்த வெட்கத்துக்கு எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. உன்னை பெத்தவங்களும் அவனை பெத்தவங்களும் ஆறு மாசம் முன்னாடியே உங்க கல்யாணத்தை நிச்சியம் பண்ணி வெச்சிட்டாங்க. மொபைல், வாட்ஸ் ஆப் அது இதுன்னு எத்தனை இருக்கு. எதிலேயும் பேசிக்கலை ரெண்டு பேரும். முதலிலே ரெண்டு பேரும் ஒரு வார்த்தையாவது பேசிக்கோங்க அப்புறம் ஃப்ர்ஸ்ட் நைட் எல்லாம் கொண்டாடலாம்.

    அதெல்லாம் பேசிக்குவோம் போ சின்ன சிணுங்கலுடன் அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பினாள் ராதா. ஆனாலும் மேதினியின் குறும்பு பார்வை மாறவில்லை.

    போ... போ...ங்கிற. அப்படியெல்லாம் உன்னை விட்டு எங்கேயும் போயிட முடியாது. பத்து வயசில் இருந்து உன்னோட சுத்தறேன். நானே இல்லாம போனாக் கூட நம்ம நட்பு இருக்கும் தெரிஞ்சுக்கோ தோழிக்கு செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைத்தாள் மேதினி.

    ஹேய்... வாயை மூடு. நல்ல நேரத்திலே பேசுற பேச்சா இது முகம் சுண்டினாள் ராதா.

    எப்போதிலிருந்து இந்தக் காதல்? தெரியவில்லை மேதினிக்கு. படிக்கும் காலத்தில் இருந்தே ராதாவுக்கு கிருஷ்ணாவின் மீது ஒரு மரியாதை உண்டு. திருமணம் உறுதியான பிறகு அது அவன் மீது இத்தனை ஆழமான காதலாக உருமாறியிருக்க வேண்டும் எனத் தோன்றியது.

    கிருஷ்ணா, ராதா, மேதினி அவர்களோடு சுப்ரஜா கார்த்திக், அனன்யா என அனைவரும் இதே கொடைக்கானலில் இருக்கும் அந்தப் பெரிய கல்லூரியில் எம்.பி.ஏ முடித்தவர்கள்.

    இவர்கள் எல்லாரும் வசிப்பது சென்னையில்தான் என்றாலும் இங்கே கூடி இருப்பது அவர்கள் பேட்ச் மீட்டுக்காக. பழைய மாணவர்கள் சந்திப்புக்காக. இவர்கள் முதுகலை முடித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், ஒரு வருடம் முன்பே திட்டம் போட்ட சந்திப்பு இது.

    இவர்கள் இருவரும் இன்று காலையிலேயே வந்து இறங்கியாகி விட்டது. இன்னும் நான்கு நாட்கள் இங்கேதான். அவர்கள் படித்த கல்லூரி, ஒன்றாக சுற்றிய இடங்கள் என எல்லாவற்றையும் எல்லோருமாக ஒரு சுற்று சுற்றி வர திட்டம்.

    ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருக்க, நலம் விசாரிப்புகளும் உற்சாக கிண்டல்களும் அன்பு பரிமாற்றங்களும் துவங்கியிருக்க, இப்போது கிருஷ்ணாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் இவர்கள்.

    யாராவது ஐந்து நிமிடங்கள் அருகில் வந்து அமர்ந்தாலே அவர்களிடம் அத்தனை கதைகளையும் கொட்டி விடுவது மேதினியின் குணம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கல்லூரியில் ஒன்றாகத்தான் படித்தார்கள் ராதாவும் கிருஷ்ணாவும். ஆனால் இன்று வரை ராதாவும் கிருஷ்ணாவும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டதே இல்லை என்பதுதான் மிகப்பெரிய அதிசயம் மேதினிக்கு.

    ஒரு வேளை நமக்குத் தெரியாம அவன் ரிசார்ட்குள்ளே போயிருப்பானோ? கேட்டு வேறு வைத்தாள் ராதா. அவன் அப்படி போயிருக்கவே முடியாது என்பது அவளுக்கே நன்றாகவே தெரியும்.

    அடியேய் அவன் மதுரையை விட்டு கிளம்பினதிலிருந்து மூணு மணி நேரமா இங்கேயே நிக்குறோம். ஞாபகம் வெச்சுக்கோ சலித்துக் கொண்டாலும் ராதாவின் தவிப்பை ரசிக்கத்தான் செய்தாள் மேதினி.

    திருமணதிற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் ராதாவை இங்கே அனுப்ப அவளது அம்மாவுக்கு கண்டிப்பாக உடன்பாடு இல்லை.

    சரிம்மா நீ சென்னையிலேயே இரு. அம்மா விட மாட்டேங்கிறாங்க இவள் சொன்னவுடன் ராதாவின் முகம் வாடிய வாட்டத்தைப் பார்க்க வேண்டுமே.

    என்ன என்ன எதுக்கு முகம் இப்படி போகுது? பதில் தெரிந்து கொண்டேதான் கேட்டாள் மேதினி.

    இ... இல்ல... நான் கிருஷ்ணாவை பார்த்து ஆறு மாசம் ஆச்சு திக்கித் திணறினாள் பெண்.

    ஆமாம் அவன் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன போது பார்த்தது. தெரியுமே எனக்கு. அதனாலே என்ன? இன்னும் ஒரு வாரத்திலே கல்யாணம். அப்போ பார்த்துக்கோ சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்துக் கொண்டே சீண்டினாள் தோழியை.

    இல்ல அதுக்கில்ல... ஒரே ஒரு தடவை பார்த்துக்கறேனே நிஜமாகவே தோழியைப் பார்க்க பாவமாக இருந்தது மேதினிக்கு. இந்தக் காலத்தில் இப்படி ஒரு பைத்தியம்!

    சரி அங்கே வந்தா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கணும் சரியா?

    சரி சரி கண்டிப்பா அவசரம் அவசரமாக சொன்னாள் ராதா. அதில் அத்தனை காதல்.

    அவள் பெற்றோரிடம் கெஞ்சிக் கூத்தாடி கிருஷ்ணாவும் இங்கேதான் வருகிறான் என்றெல்லாம் சொல்லி ஒரு வழியாக இவளை இங்கே அழைத்து வந்திருக்கிறாள் மேதினி.

    ராதாவின் பார்வை கேட்டை விட்டு அகலாமல் இருந்தது. அவளது கையில் ஒரு குடை வேறு இருந்தது... அவர்கள் இருக்கும் இடத்திற்கும், கார் நிறுத்தும் இடத்திற்கும் கிட்டத்தட்ட அரைக் கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

    அவன் வரும்போது மழை வந்துவிட்டால் அவனை நனையாமல் அழைத்து வர வேண்டுமே. அதற்காகவே குடையோடு காத்திருக்கிறாள் கிருஷ்ணாவின் காதலி.

    என்ன செய்வாள்? குடையை தூக்கிக் கொண்டு ஓடுவாளோ?

    ரசித்து சிரித்துக் கொண்ட மேதினியின் மனதின் ஓரத்தில் மெலிதான ஒரு பயமும் குடி கொண்டிருந்தது. கிருஷ்ணா - ராதா திருமணம் நடக்குமா?

    அது நின்று போவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைப் போலவே தோன்றுகிறது மேதினிக்கு.

    காரணம்! அந்த கார்த்திக்!

    இங்கே இருக்கும் இந்த நான்கு நாட்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ‘அந்த சாத்தியக் கூறுகள் பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லையே ராதா! எப்படியும் இன்றோ நாளையோ ராதாவுக்கும் இங்கே இருக்கும் சூழ்நிலை என்னவென்று புரியும். அதை எப்படி எதிர்கொள்வாள் என் தோழி.’

    உள்ளுக்குள் பய அலைகள் எழ ராதாவின் தோள்களை அணைத்துக் கொண்டது மேதினியின் கரம்.

    ‘அப்படி எதுவும் தப்பாக நடக்காமலும் போகலாம்தானே. திருமணம் நல்லபடியாக நடக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன தானே? எல்லாம் கிருஷ்ணாவின் கைகளில் இருக்கிறது’ ஒரு ஆழ் மூச்சு மேதினியினிடத்தில்.

    அப்போது அவர்கள் அருகே வந்து நின்றாள் அவள். சுப்ரஜா!

    சுப்ரஜாவின் முகத்தில் மட்டும் ஒற்றை துளி புன்னகைக்குக் கூட இடம் இல்லை. அவள் அப்படித்தான்!

    அது ஏன்னே தெரியலை சுப்ரஜாவுக்கு என் மேலே காரணமே இல்லாம ஒரு பொறாமை முன்பு சொல்லி இருக்கிறாள் ராதா. அது அத்தனை நிஜம்.

    சுப்ரஜாவுக்கு திருமணம் ஆகி, அழகான குடும்பம் அமைந்து இருக்கிறது. ஆனாலும் அந்த பொறாமை குணம் மட்டும் இன்னும் மாறவில்லை.

    ஏன் மேதி இன்னும் வரலை? மதுரையை விட்டு அப்போவே கிளம்பிட்டான் தானே. வழியிலே ரொம்ப மழையா இருக்குமோ? ராதாவின் முகமெங்கும் கவலை. ஏதோ அவனுக்காக ஒரு யுகம் காத்திருந்ததைப் போல் இருந்தது அவளது பாவனை.

    வருவான். வருவான் இரு. டிரைவ் பண்ணிட்டு இருப்பான். இப்போ கால் பண்ண முடியாது.

    யாருக்கு வெய்ட்டிங்? கிருஷ்ணாவுக்கா? இது சுப்ரஜா.

    ம். இங்கே மழை தூறுது. நீ உள்ளே போ. நாங்க வந்திடறோம் ஏனோ சுப்ரஜா அங்கே நிற்பது பிடிக்கவே இல்லை மேதினிக்கு.

    இருக்கட்டும் இருக்கட்டும். என்றாள் சுப்ரஜா ஓ அடுத்த வாரம் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் இல்லையா?

    மெல்லத் திரும்பி புன்னகைத்தாள் ராதா ஆமாம். பத்திரிக்கை கொண்டு வந்திருக்கேன். எல்லாருக்கும் கொடுக்கறேன்.

    எல்லாருக்கும்ன்னா? கார்த்திக்குக்குமா? அவள் கேட்க சட்டென நெருப்பை மிதித்து விட்ட அதிர்ச்சி ராதாவின் முகத்தில்.

    என்ன முழிக்குறே? கார்த்திக் இங்கே வந்திருக்கான் உனக்குத் தெரியுமா? இதுவும் சுப்ரஜாதான்.

    ஏன். கார்த்திக் வந்தா என்ன இப்போ? அவனுக்கும் கண்டிப்பா கொடுப்பேன் தன்னை சமாளித்துக் கொண்டு நிதானமாக கேட்டாள் ராதா.

    இப்போ வந்திருக்கிறது கார்த்திக் மட்டும்தான். ஆனா நாளைக்கு? சொன்ன சுப்ரஜாவின் விரல்கள் ஆதி தாளத்தை போட்டன. அந்தத் தாளம், ராதாவுக்கு பல செய்திகளை சொல்லி இருக்க வேண்டும். அவளது முகத்தில் கவலை ரேகைகள் கோலம் போட்டன.

    எரிச்சல் மண்டிப் போனது மேதினியின் முகத்தில்.

    இதே சுப்ரஜாவின் திருமணத்தில்தான் இந்தத் திருமணதிற்கு ஒப்புதல் சொன்னான் கிருஷ்ணா.

    ஆறு மாதங்கள் முன்னால் திடீரென இரு வீட்டு பெற்றவர்களும் சந்தித்துக் கொள்ள அப்போது கூடவே கிளம்பியது ராதா கிருஷ்ணா திருமண பேச்சும்.

    இரண்டு பெற்றவர்களுக்கும் இந்தத் திருமணத்தில் மகிழ்ச்சி என்றாகி விட, இவர்கள் இருவரின் சம்மதத்தைக் கேட்டிருந்தனர். அவர்கள் இவர்களை சந்தித்துப் பேசிக் கொள்ள சொல்ல, அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை ராதாவும் கிருஷ்ணாவும்.

    அப்போது வந்தது சுப்ரஜாவின் திருமணம். அதில் இருவரும் சந்தித்துப் பேசி சம்மதத்தை சொல்லுங்கள் என்று பெரியவர்கள் சொல்லிவிட்டனர்.

    ப்ளீஸ் நீயும் வா மேதி. என்னாலே தனியாவெல்லாம் அவனோட பேச முடியாது இவளிடம் கெஞ்சினாள் ராதா. இத்தனை வருடங்களில் எங்கே தனியாக சென்றிருக்கிறாளாம் இவள்.

    அடியே ஃப்ர்ஸ்ட் நைட்க்காவது தனியா போவியா? இவளை சீண்டினாள் மேதினி.

    "அதெல்லாம் போவேன். நீ இப்போ என்

    Enjoying the preview?
    Page 1 of 1