Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottachinungi - Part 2
Thottachinungi - Part 2
Thottachinungi - Part 2
Ebook606 pages4 hours

Thottachinungi - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் காதலித்த பெண்ணே தனக்கு மனைவியாக வந்திருக்கிறாள் என்று தெரிந்தும், அவளை அளவுக்கு அதிகமாக நேசித்தும் அவளிடம் நெருங்க தயங்கும் கணவன்!!தன்னால் சரி செய்யவே முடியாத ஒரு தவறை செய்து விட்டவன், அதன் பின் அவளோடு சேர்ந்து வாழ்ந்தனா இல்லை அவளைப் பிரிந்தானா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580164309802
Thottachinungi - Part 2

Read more from Karthi Sounder

Related to Thottachinungi - Part 2

Related ebooks

Reviews for Thottachinungi - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottachinungi - Part 2 - Karthi Sounder

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தொட்டாச்சிணுங்கி - பாகம் 2

    Thottachinungi - Part 2

    Author:

    கார்த்தி சௌந்தர்

    Karthi Sounder

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karthi-sounder

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    41

    அஸ்வின் எதுவும் தவறாக கேட்கவில்லை தான் ஆனாலும் அர்ச்சனாவால் அந்த கேள்விக்கு பதில் சொல்லவும் முடியவில்லை, அவன் முன் அமர்ந்திருக்க முடியவுமில்லை. எழுந்து வெளியே வந்தவள், ரெஸ்டூரண்ட்டின் வெளியே ஓரம் வழிப்போக்கர்கள் அமரும் பெஞ்ச் இருக்க, அதில் சோர்ந்து போய் அமர்ந்துகொண்டாள். அவளது மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் ஓடியது. ‘ஆம் அவன் கேட்டது தப்பில்லையே, அவன் சொல்வது போல தானே நடந்துகொண்டோம். கிறிஸ் கேட்டபோது, அஸ்வின் அவளுடைய கணவன் என்ற முறையில் எதையும் கேட்கவில்லை என்றுதானே கோபித்தோம். அப்போ அவன் என் மனதில் கணவன் என்று பதிந்துவிட்டானா. அவனை அவ்ளோ சீக்கிரம் மன்னித்துவிட்டேனா. இது உண்மையில் சாத்தியம் தானா. அவனது பண்புகளாலும் அணுகுமுறையாலும் இந்த ஒரு வாரத்தில் என்னை நெருங்கிவிட்டானா. என் மனது ஏன் அவனை பற்றி யோசிக்கிறது. அவனைத் தவிர யோசிப்பதற்கு வேறு இல்லையா எனக்கு’ என்று உச்சிக்கொட்டி திரும்பும்போது அஸ்வின் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் வருவதையே பார்த்துக்கொண்டிருந்தவள் வேறு எதுவும் யோசிக்கவுமில்லை, அவன் தவிர அவளுக்கு வேறு சிந்தனையும் இல்லை. அவள் எதிரே வந்து நின்றவனை அண்ணாந்து பார்க்க, அந்த ஆறு அடி ஆடவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் புன்னகை மட்டும் இருந்தது. அவள் முன் ஒரு காலில் மண்டியிட்டு, தனக்கு பின்னால் வைத்திருந்த ரோஜாமலர்கள் கொண்ட பூச்செண்டை அவள் கைகளில் கொடுத்து,

    சாரி சனா... நான் சரியாய் கவனிக்கல... என் மேலதான் தப்பு... ஐ ஆம் ரியல்லி சாரி... என்று சொல்ல, அர்ச்சனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடக்கிறது, கனவு எதுவும் நாம் காண்கிறோமா, காண்பது எதுவும் காட்சி பிழையா என்று அவள் திருதிருவென முழிக்க,

    உனக்கு உடம்பு சரி இல்லனு கவனிக்க மறந்துட்டேன்... என்று அவளைப் பார்க்க, அவள் திகைத்து, தான் அமர்ந்திருந்த மேஜையில் பின் சாய்ந்து தனக்கு முன் மண்டியிட்டு அமர்ந்திருத்தவனை பார்க்க,

    வா போலாம்... என்று தன் கைகளை அவளுக்காக நீட்டினான். அவள் யோசனையுடன் அவனைப் பார்க்க, ஹ்ம்ம் வா... போலாம்... என்று புருவம் உயர்த்தி அவளை அழைக்க, இன்னும் யோசனையிலேயே அவனுக்கு கைகள் கொடுக்க, அவர்கள் இருந்த மேஜையின் அருகே தாவரத்தில் இருந்து ஒரு லாவெண்டர் பூ அவர்கள் இருவரின் கைகளையும் சேர்த்து முத்தம் கொடுத்து தரையில் விழுந்தது.

    அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு அலுவலகம் செல்ல மணி 3 ஆகிவிட்டது. அங்கே பாதிக்குமேல் எல்லோரும் கிளம்பி இருந்தனர். இன்னும் ஒரு சிலர் மட்டுமே இருக்க, 4 மணிக்கு மொத்த அலுவலகமும் காலியாக, இவர்களும் கிளம்பினார்கள். வரும் வழியில் காரில் அர்ச்சனா அமைதியாய் இருக்க,

    சனா, ஏதாச்சும் வாங்கணுமா... சூப்பர் மார்க்கெட் போகணுமா...

    வேண்டாம்...

    சாக்லேட் ஐஸ்கிரீம் ஏதாச்சும்?

    வேண்டாம்... எனக்கு ரூம்க்கு போனும்... ப்ளீஸ்...

    சரி... போய்டலாம்... 10 மினிட்ஸ்... என்று அறைக்கு வந்து சேர்ந்தனர். அர்ச்சனா சோர்ந்துபோய் இருந்தாள். இடம் மாறியதால் அவளுக்கு இந்த மாதம் உதிரப்போக்கு சற்று அதிகமாய் இருப்பதாய் தோன்றியது. அறைக்கு வந்தவள் குளிக்க போய்விட, அஸ்வின் தனது கவனமின்மையை குறித்து தன்னைத் தானே கடிந்துகொண்டிருந்தான். அர்ச்சனா இப்படி எல்லாம் ஒருவன் தன்னை அணுகும்போது சிணுங்கிக்கொண்டிருக்கும் சிறுபெண் கிடையாது. அதற்கும் மேல் அவனிடம் கத்தியதும் கூட, அவளது இயல்பு கிடையாது என்று அவள் வெளியே எழுந்து சென்ற பின்பே அஸ்வினின் மூலையில் உரைக்க, அவசரமாய் ஒரு பூங்கொத்தை வாங்கிக்கொண்டு அவளிடம் ஓடிவந்தான். பெண்களுக்கு இருக்கும் மூட்ஸ்விங்ஸ்தான் அவளுக்கும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் தானும் அவளுக்கு சரிசமமாய் பேசியதை எண்ணி தலையில் அடித்துக்கொண்டான்.

    இவர்கள் இருவரும் இந்த சூழ்நிலையை கையாளுவார்களா என்று தெரிய வாய்ப்பில்லை. அதற்குள் நாம் தீரனின் நிலையை பார்க்க வேண்டும். அஸ்வின் இல்லாமல் அவனுக்கு பொழுது போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு நாட்கள் VVயில்தான் வேலை சரியாக இருந்தது. இரவு தூங்கும் முன் அஸ்வினுக்கு பேசிவிட்டு அடுத்த நாள் அவனது தகவல்களுக்கு ஏற்ப வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டில் இருந்து இவனை அழைத்துபார்த்து வெறுத்துப்போய், வேணி அம்மாவிடம் புகார் கொடுக்க, வேணி அம்மா அவனை திட்டி அவன் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். வார இறுதியில் இங்க என்ன பண்ணப் போற... அஸ்வின் இருந்தா பரவா இல்ல... சும்மா இங்க வீட்ல உக்காந்துட்டு அந்த ஸிஸ்டெமையே தட்டிட்டு இருக்குறதுக்கு வீட்டுக்கு போய் அம்மா அப்பாவை பாத்துட்டு வா என்று அனுப்பி வைத்துவிட்டார்.

    தனது வீட்டில் தனது அறையில் தனது படுக்கையில் என்று தனக்கு சொந்தமான எல்லாமும் தன்னை சுற்றி இருந்தும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் யாமினிதான். வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளைக் காட்டி தனது பெற்றோர் ஏதாகிலும் தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்திருக்க, வந்ததில் இருந்து அவளை ஒரு தடவைகூட பார்க்கவில்லை. மாலையில் வந்தவனுக்கு காபி பலகாரம் கொடுக்க இரவு உணவு பரிமாற என்று எதற்குமே அவள் அவன் முன் வரவில்லை. அவன் ஹாலில் இருந்தால், அவள் சமையலில் இருந்தாள், அவன் சாப்பிட வந்தாள், அவள் தனது அறைக்குள் அடைந்துகொண்டாள். ஏனோ தீரனுக்கு கஷ்டமாக இருந்தது. தன்னால் அவள் சங்கடப்படுகிறாளோ என்று வருந்தி தூக்கம் இல்லாமல் இருந்தான். ஆனால் யாமினியோ எங்கே அவன் முன்வந்தால், அவன் வருந்துவானோ இல்லை அவன் பெற்றோர் அவளைக் காட்டி ஏதாகிலும் அவனை காயப்படுத்திவிடுவார்களோ என்று அவள் ஒதுங்கியே இருந்தாள். தூக்கம் வராமல் மணி பார்க்க அது இரவு 12 மணி என்று காட்டியது. படுக்கையில் இருக்கப் பிடிக்காமல், மொட்டைமாடி எழுந்து செல்ல, அங்கே நிலவை வெறித்தபடி யாமினி நின்றுகொண்டிருந்தாள். இந்த நேரத்தில் இவள் இங்கே என்ன செய்கிறாள் என்று கேள்வியாய் அவளை நோக்கி முன்னேற, சரியாய் அவனது மொபைல் அலறியது. இரவின் சத்தமும் அதற்கு சாட்சியாய் நிலவும் மட்டுமே இருக்க, திடீரென்று கேட்ட சத்தத்தில் யாமினி அதிர்ந்து திரும்ப, தீரன்தான் வந்துகொண்டிருந்தான். அழைப்பை எடுக்க, அஸ்வின் தான் அழைத்திருந்தான். யாமினியை பார்த்து புன்னகைத்தபடியே அழைப்பை எடுத்து,

    சொல்லு மச்சி... என்ன இந்நேரம் கூப்டுற...

    சும்மாதாண்டா கூப்பிட்டேன்... fridayனு சீக்கிரம் வந்துட்டோம்... அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல... டயர்டா இருக்குனு படுத்துட்டா... அதான் உனக்கு போன் பண்ணேன்... தூங்கிட்டியா என்ன...

    இல்ல மச்சி... வீட்டுக்கு வந்தேன். தூக்கம் வரல... என்று அவர்கள் அலுவலகம் பற்றி பேசிக்கொண்டிருக்க, அதை அரைகுறையாய் கேட்டபடி அவள் இருட்டை வெறித்துக்கொண்டிருந்தாள். அதிக நேரம் நின்றதால் கால் வலித்து தூங்கச் செல்லலாம் என்று இறங்கப் போக, வேலை விஷயமாய் பேசிக்கொண்டிருந்தவன் ஒரு கையை நிலையில் பாதிக்கும் மேலே உயரத்தில் பிடித்துக்கொண்டு ஒருபக்கம் நிலையோடு சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தான். போவதா வேண்டாமா என்று தயங்கியபடி நிற்க, அவன் இன்னும் அவளுக்கு முதுகு காட்டி பேசிக்கொண்டிருந்தான். யாமினி போவதென்றால், அவன் குறுக்கே வைத்திருக்கும் கையின் கீழ் குனிந்துதான் போக வேண்டும் என்று குனியப்போக, அதற்குள் பேசிமுடித்து அவன் கைகளை இறக்கிவிட்டு திரும்ப, அதை எதிர்பாராதவள் சற்று தடுமாற, ஏய் பாத்து... என்று அவள் கைபிடித்து நிறுத்தினான். தன்னை நிலைப்படுத்திக்கொண்டு ஒரு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு அவள் கீழே இறங்க போக,

    தூக்கம் வருதா யாமினி... என்ற தீரனின் கேள்வி அவளை நிறுத்தியது. அவனுக்கு பதில் சொல்லுமுன் அவனே தொடர்ந்தான். நான் வந்துட்டேன்னு கெளம்புறியா... என்று வேதனையுடன் கேட்க, அவள் அதிர்ந்து,

    மாமா... என்ன வார்த்தை சொல்றீங்க... நான் உங்களுக்கு தொந்தரவா இருக்க கூடாதுன்னுதான் கீழ போலாம்னு பாத்தேன்...

    நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல... வரவேண்டாம்னுதான் பாத்தேன். முடியல... வேணி அம்மா கண்டிப்பா போகணும்னு அனுப்பி விட்டுட்டாங்க...

    எனக்கு என்ன மாமா கஷ்டம்... என்னால நீங்க உங்க அப்பா அம்மாகூட இருக்க முடியலையோன்னு எனக்கு தான் கஷ்டமா இருக்கு... ரெண்டு நாளாச்சும் என் பேச்சு இல்லாம என்ன பத்தி யோசிக்காம நீங்க அவங்ககூட இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன்...

    இந்நேரம் இங்க என்ன பண்ற... அதுவும் தனியா...

    அதெல்லாம் பழகிடுச்சு மாமா... உங்களுக்கு தான் இங்க இருக்குறதுக்கு சிரமமா இருக்கு... எனக்கு இந்த வீடு பழகிடுச்சு...

    ஹ்ம்ம்... என்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது. என்னையே நம்பிட்டு இருந்த பொண்ண காப்பாத்தவும் முடியல... எனக்காக காத்துட்டு இருக்குற பொண்ணுக்கு பதில் சொல்லவும் முடியல... என்று அவன் பார்வை எங்கோ இருட்டில் நிலைக்க,

    நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க மாமா... எல்லாம் விதி...

    எனக்கு அஸ்வதி இல்லனு நான் நெனைக்குறதவிட, அவளுக்கு நான் இல்லாம போய்ட்டேன்னு நினைக்கும்போது எல்லாம் அந்த குற்றவுணர்ச்சி என்ன தினமும் தூங்கவிடாம பண்ணுது...

    எனக்கு தெரிஞ்சு அக்காவா உங்கள மாதிரி வேற எந்த ஆம்பளையும் பாத்துருக்க முடியாது மாமா... சொல்லப்போனா அப்பா அம்மா கூட அவளை ஹோம்ல சேத்துறலாம்னு சொன்னப்போ நீங்க மட்டும் தானே அவளை இவ்ளோ கவனமா பாத்துக்கிட்டீங்க... நீங்க இந்த குற்ற உணர்ச்சில இருந்து வெளிய வாங்க ப்ளீஸ்...

    உன்னை பார்த்து யார் நீன்னு நான் கேட்டா உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும். அந்த வலியெல்லாம் சொன்னா புரியாது யாமினி... சரி விடு... என்னோட வலிய எதுக்கு உனக்கு கொடுக்கணும்... நீ ஏன் இப்டி இருக்குற... இந்நேரம்... தூங்காம தனியா... இங்க...

    இப்போ ஏதோ வலின்னு சொன்னீங்களே... அதே வலிதான்... சரியாய் சொல்ல தெர்ல மாமா...

    அப்பா அம்மா தொந்தரவு பண்ராங்களா... மாமா அத்தை எதுவும் சொன்னாங்களா... எனக்கு புரியல...

    எனக்கும் புரியல மாமா... சரியா சொல்றேன்னானு தெர்ல... இப்டி சொல்றது சரியான்னு கூட தெர்ல மாமா... ஆனா நான் என்னையே அறியாம உங்கள விரும்ப ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்குறேன்... கொஞ்ச நாளா எனக்கு அப்டிதான் தோணுது... சொல்லப்போனா எனக்கே அவமானமா அருவருப்பா கூட இருக்கு... அக்கா ஆசைப்பட்ட அத்தான் மேல நானும் ஆசைபடுறேன்னு நினைக்கும் போது தூக்கம் வரமாட்டேங்குது... ஆரம்பத்துல எனக்கு மனசுல எதுவும் இல்லதான்... ஆனா தெர்ல... நீங்க அக்கா போய் 6 வருஷம் ஆகியும் அவ மேல வச்சுருக்குற காதல் பூரா எனக்கும் வேணும்னு தோண ஆரம்பிக்குது... நான்... நான்... ரொம்ப தப்பு பண்றேன் மாமா... என்று அவர்கள் நின்ற அந்த இடத்திலேயே அவள் அமர்ந்து அழுக ஆரம்பிக்க, தீரன் சுக்குநூறாய் உடைந்துபோனான்.

    என்னால இப்போல்லாம் உங்கள கண் பாத்து பேச முடியல மாமா... என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். அவள் அருகிலேயே என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்துவிட்டான் தீரன்.

    நீங்க போய்டுங்க மாமா... நான் சொன்னதை எதையும் நீங்க யோசிக்காதீங்க... என்று கண்களை துடைத்துக்கொண்டு அவள் எழுந்துகொள்ள, அவள் கரம் பற்றி அங்கேயே அவளோடு அமர்ந்துவிட்டான்.

    நான் கீழ போறேன் மாமா... ப்ளீஸ்... என்று எங்கேயோ பார்த்துச்சொல்ல,

    என்னால நீ இவ்ளோ கஷ்டப்பட வேண்டாம் யாமினி... நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்... என்று தீரன் சொல்ல, அவள் கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டாள். அந்த இருட்டில் அவன் கண்களும் தான் கலங்கி பளபளப்பாய் தெரிந்தது.

    நான் இப்போ சொல்றது தான் கடைசி வரைக்கும்... மாற மாட்டேன் யாமினி... நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்... நானே அப்பாகிட்ட பேசுறேன்...

    மாமா... நீங்க அவசரப்படுறீங்க... நீங்க நான் சொன்னதை மறந்துடுங்க... நான்... நான் உங்கள குழப்பிட்டேன்... இது... இதெல்லாம் வேண்டாம்... என்னால அக்கா இருந்த இடத்துல... வேண்டாம்... நான்... நான் தப்பா யோசிச்சதே என்னால தாங்க முடியல... தப்பாவே முடிவு எடுக்க முடியாது மாமா... வேண்டாம்... என்று அவள் எழுந்துகொள்ள தீரன் அவள் கரம் பற்றி,

    இப்படி ஓர் நிலைமை வரக்கூடாதுன்னு தான் உன்ன விட்டு விலகியே இருந்தேன். என் மேலயும் சரி பாதி தப்பு இருக்கு... உன் மனசுல சலனம் வர்றதுக்கு நானும் தானே காரணம்... நீ என்கிட்ட முகம் கொடுத்து பேசாத போதே எனக்கு தெரியும்... நீ ஆபீஸ் வந்தப்போவே என்னால உன் நிலைமை புரிஞ்சுக்க முடிஞ்சது. நீ சொல்ற மாதிரி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்... எப்போ ரெண்டு பேருக்கும் தோணுதோ அப்போ வாழ ஆரம்பிக்கலாம்... என்று சொல்ல, அவனிடம் இருந்து விலகியவள், எழுந்து யோசனையுடன் போய் தூணில் தலை சாய்ந்து நின்றுகொண்டு, இது சரி வருமா மாமா... பின்னாடி யோசிச்சு வருத்தப்பட்டா ரெண்டு பேருக்கும் கஷ்டம்... என்று கண்களை மூடிக்கொண்டு நிற்க, தீரன் அவளுக்கு எதிரே இருந்த தூணில் சாய்ந்து கொண்டு,

    என் முடிவு மாறாது யாமினி... உன் வாழ்க்கையை கெடுக்கக் கூடாதுன்னுதான் நான் யோசிச்சேன்... ஆனா நான் பயந்தது தான் இப்போ நடந்துருக்கு...

    உங்க நம்பிக்கையை உடைச்சுட்டேன்ல மாமா...

    இல்ல யாமினி... இப்டிதான் நடக்கும்னு தெரியும்... ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு இதை தடுக்க பாத்தேன்... அவ்ளோ தான்... எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுவியா... என்று அவளிடம் கேட்க, அவள் கேள்வியாய் பார்க்க,

    எனக்கு கொஞ்சம் டைம் கொடுப்பியா... எனக்கு... மனசு... என்று அவன் கைகள் கூப்பி தயங்கி கேட்க, அவன் கைகளில் தன் கைகளை வைத்து முகத்தை புதைத்து அழுதவள்,

    உங்ககூட இருந்தாலே போதும் மாமா... நான் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன். உங்கள தொந்தரவு பண்ணமாட்டேன்... என்று தன் கைக்குள் முகம் புதைத்து அழுத்தவளை, தோளோடு அணைத்து கொண்டு தோழமையாய் அவள் தலையை தடவி ஆசுவாசப்படுத்தினான்.

    சரி நீ போய் படு... எதுவும் யோசிக்காத... நான் நாளைக்கு காலைல அப்பா அம்மா கிட்ட பேசுறேன்... என்று அனுப்பி வைத்தவன், அவள் விட்டு சென்ற இடத்தில் இருந்து நிலவை வெறித்துக்கொண்டிருந்தான்.

    42

    தீரனிடம் பேசிவிட்டு யாமினி கீழே இறங்கப்போக, ஏனோ அவளுக்கு தீரனை காயப்படுத்துவது போல இருந்தது. இத்தனை நாட்கள் மற்றவர்கள் தான் அவன் மனது தெரியாமல் அவனை சங்கடப்படுத்தினார்கள் என்றால், இன்று அவளும் அவனை இக்கட்டில் கொண்டுவிட்டது போல இருந்தது. ஒரு வேளை தன் மனதை மறைத்திருந்தால் அவன் சற்று தைரியமாய் வீட்டில் மறுத்திருந்திருப்பானோ என்று யோசித்தவள் திரும்பிப் பார்க்க, அவன் நிலவை தான் வெறித்துக்கொண்டிருந்தான். மனது தாளாமல் அவனிடம் திரும்ப, அவளின் கொலுசொலியில் திரும்பியவன் கேள்வியாய் அவளை ஏறிட்டான்.

    மாமா... நான் உங்கள காயப்படுத்தறேனோன்னு கஷ்டமா இருக்கு... நான் உங்ககிட்ட தப்பா பேசிருந்தா மன்னிச்சுருங்க...

    ரொம்ப யோசிக்காத... சரியா? என்று அவளை பார்த்து மெலிதாக புன்னகைக்க,

    குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரவா உங்களுக்கு...

    ஹ்ம்ம்... பால் எடுத்துட்டு வா... ஆனா உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வா... என்று அனுப்பிவைத்துவிட்டு அஸ்வினுக்கு அழைத்தான்.

    சொல்லு மச்சி... என்றே அழைப்பை எடுத்தான் அஸ்வின்.

    சாப்டியாடா... என்ன பண்றீங்க...

    இல்லடா... அவளுக்கு முடியல... அநேகமா குளிச்சுட்டு ரூம்லயே இருக்குறான்னு நினைக்குறேன்... வெளிய வரல... சாப்பிட கூட்டிட்டு போனும்... வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்...

    சரி கவனமா பாத்துக்கோ... அப்புறம் இன்னொரு விஷயம் மச்சி...

    என்னடா யாமினியா?

    ஹ்ம்ம்... கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

    நல்ல விஷயம் மச்சான்... கொஞ்சம் முன்னாடியே இந்த முடிவ எடுத்திருக்கலாம். இப்போவாச்சும் ஒரு முடிவுக்கு வந்தியே... சந்தோசம்... வீட்ல தேதி குறிச்சு ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்களா...

    இல்ல மச்சான்... வீட்ல ஒன்னும் சொல்லல... ஆனா யாமினி அவ மனசுல இருந்ததை எல்லாம் சொல்லிட்டா...

    என்னடா சொல்ற...

    ஆமா மச்சான்... அன்னைக்கு ஆபீஸ் வந்திருந்தப்போவே அவ கண்ணுல தெரிஞ்சது... இப்போ வாய திறந்தே சொல்லிட்டா... அந்த பொண்ண இதுக்கு மேல என்னால கஷ்டப்படுத்த முடியாதுடா... அதான் நானே வீட்ல பேசலாம்னு இருக்கேன்...

    சூப்பர் மச்சி... யாமினி நல்ல பொண்ணுடா... உனக்கு அவதான் சரி... இந்த நேரம் நான் அங்க இல்லையேன்னு இருக்குடா... சீக்கிரம் வந்துர்ரோம்...

    நீ இல்லாததாலதான் நாயே இதெல்லாம் நடந்துருக்கு... ஒரு வகைல நீ தான் காரணம்... இல்லனா நிம்மதியா அங்க தூங்கிட்டு இருந்துருப்பேன்... அர்த்த ராத்திரில என்ன புலம்ப உட்டுட்டியே பன்னி...

    எப்படியோ என் மச்சான் கல்யாணம் பண்ண போறான்... ஹே... ஜாலி... நான் சனா கிட்ட சொல்றேன்... நீ போய் யாமினி கூட பேசி பழகு... பை... என்று அவன் சந்தோசமாய் இணைப்பை துண்டிக்க, ‘என்ன பேச, எப்படி பழக?’ என்று யோசித்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. பெருமூச்சொன்றை விட்டவன் சுவரில் சாய்ந்தபடி படியில் அவளை எதிர்பார்த்து காத்திருந்தான். இருவருக்கும் பால் கலந்து எடுத்துவந்தவள், அவன் பார்வை தன் மேல் இருப்பதை அறிந்து, அவள் விழி தாழ்த்திக்கொள்ள, அந்த பார்வையில் காதலும் இல்லை, அந்த விழிதாழ்த்தலில் வெட்கமும் இல்லை. அவன் இதயம் என்னும் வீட்டில் அறை உண்டு ஆனால் வாசல் தான் இல்லை. யாமினிக்கோ மேகத்திடம் அடம் பிடித்து அடைமழை வாங்கியது போல இருந்தது ஆனால் அதில் நனைந்து கொள்ள விருப்பம் இல்லை. எதுவும் பேசாமல் இருவரும் பால் எடுத்துக்கொள்ள, மௌனம் மட்டுமே அங்கே ஆட்சி செய்தது. குறைந்த பட்சம் யாமினியின் காதலாவது கல்யாணத்தில் முடியப்போகிறது என்று நாம் திருப்தி கொள்ளவேண்டியது தான்.

    அஸ்வின் அங்கே உற்சாகமாக தீரன் பற்றி சொல்வதற்கு அர்ச்சனாவின் அறைக்கதவை தட்ட, அவள் சோர்ந்துபோய் கதவை திறந்தாள்.

    ரொம்ப முடியலையா சனா... டேப்ளெட்ஸ் போடுறியா?

    ப்ச்... என்ன விஷயம்...

    சாப்பிட போலாமா... லேட் ஆச்சுல்ல...

    வேணாம்... நான் கார்ன் பிளாக்ஸ் சாப்பிட்டுக்கிறேன்... நீங்க போயிட்டு வாங்க...

    சரி... உனக்கு கார்ன் பிளாக்ஸ் எடுத்துட்டு வந்து தரேன். ரூம் லாக் பண்ணாத... நான் தட்டிட்டு தான் வருவேன்... ரெஸ்ட் எடு... என்று அனுப்பிவைத்துவிட்டு கொஞ்ச நேரத்தில் எடுத்து வந்து கொடுத்தான்.

    வேற ஏதாச்சும் வேணும்னா கூப்டு... இல்லனா போன் பண்ணு... நான் ரூம் லாக் பண்ணாம வச்சுருக்கேன்... என்று அவன் சொல்லிச்செல்ல, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சரி என்று கூட சொல்லாமல் ஹ்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள். உடல் சோர்வையும் மீறி அவளுக்கு இருந்த கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்று தான். இவனுக்கு எப்படி தெரியும், எவ்வாறு கண்டுகொண்டான். அஸ்வின் அவளுக்கு பூங்கொத்து கொடுத்தப்போது புரியாமல் விழித்தவள் அதன் பின் அவன் நடந்த கொண்டதெல்லாம் வைத்து அவன் தன்னை கண்டுகொண்டான் ஆனால் எப்படி என்றே யோசித்து சோர்ந்துபோனாள். வீட்டிற்கு வந்து, தான் உடுத்தியிருந்த ஆடையை கூட சரிபார்த்தாள். ஒரு வேளை ஆடையில் ஏதும் கரை இருந்து கண்டுகொண்டானோ என்று. ஆனால் அப்படியும் எதுவும் இல்லை என்று அவளுக்கு சங்கடமாய் இருந்தது. தன்னோடு எப்போதும் சுற்றிவரும் விஸ்வா கூட அவளை கண்டுகொண்டது கிடையாது. இவன் எப்படி கண்டுகொண்டான்? தன் தாய்க்கு மட்டுமே தெரியும், அதுவும் தேதி வைத்து தெரியும் விஷயம் இது. இவன் எப்படி கண்டுபிடித்தான். இவனிடம் நான் பேசுவது கூட குறைவுதானே. எனது அறைக்குள், என் அருகில் அமர்ந்து பார்த்தது போல எப்படி ஐஸ்கிரீம் வேணுமா சாக்லேட் வேணுமா என்று கேட்கிறான். மந்திரம் எதுவும் தெரியுமோ என்று தலையே வெடிப்பது போல இருந்தது. யோசனையோடே சாப்பிட்டு முடித்தவள், அசதியில் தூங்கியும் போனாள்.

    இரண்டு மணிநேரம் கூட முழுதாய் தூங்கியிருக்க மாட்டாள், அதற்குள் அடிவயிற்றில் வலிகூட, எழுந்து வெளியே வர, அஸ்வின் ஹாலின் கவுச்சில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். கதவு திறந்த சத்தத்தில் விழித்துக்கொண்டவன், முகத்தை துடைத்து எழுந்துகொள்ள, என்னாச்சு சனா... ஏதாச்சும் வேணுமா... என்று மணி பார்க்க அது 12 மணிக்கு மேல் இருந்தது. அவன் கேட்டதை சட்டை செய்யாமல் அவள் சுடுதண்ணீர் வைக்க போக, அவன் வேகமாய் எழுந்துவந்து,

    இரு இரு... ஏற்கனவே பிளாஸ்க்ல சுடுதண்ணீர் இருக்கு... தெர்மல் பேக்ல ஊத்தி தரேன்... நீ போய் உக்காரு... என்று சொல்ல, வலியோடு எரிச்சலும் சங்கடமும் சேர்ந்துகொண்டது.

    இந்தா சனா... நீயே வச்சுக்கிறியா... நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா... என்று கேட்டவனை முறைத்தவள்,

    உங்களுக்கு விவஸ்தையே இல்லையா... ச்ச... என்று வேறுபுறம் திரும்பிக்கொள்ள,

    நீ என்ன புருஷன்னு நினைச்சாலும் சரி, தோழனா நினைச்சாலும் சரி இல்ல ஏதோ ஒரு முகம் தெரியாத மனிதாபிமானம் உள்ள மனுஷனா நினைச்சாலும் சரி... உனக்கு முடியல... நான் உனக்கு உதவி பண்றேன்... அவ்ளோ தான்... இதுல நீ சங்கட படுற அளவுக்கு ஒன்னும் இல்ல... எனக்கும் அம்மா இருக்காங்க... கல்யாணம் ஆகுற வயசுல ஒரு தங்கச்சி இருக்குறா... நான் அவ்ளோ அசிங்கமானவன் கிடையாது...

    …..

    ரொம்ப யோசிக்காத... இந்தா வச்சுக்கோ... நான் உள்ள போறேன்... என்று உள்ளே போய்விட்டான். அவள் தெர்மல் பேக் உதவியுடன் சற்று ஒத்தடம் கொடுத்து தூங்க போக, வலி குறைந்து சற்று நேரத்தில் தூங்கினாள். காலையில் எட்டு மணிக்கு மேல் பொறுமையாய் எழுந்து குளித்து முடித்துவர, சற்றே அசுவாசமாய் இருந்தது. வலி கூட குறைந்து இருந்தது. சூடாக ஏதாகிலும் குடிக்கலாம் என்று வெளியே வர, அஸ்வின் கௌச்சில்தான் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் இருந்த நீளத்திற்கு பாதிக்கும் மேல் அவன் உடல் வெளியே இருக்க, அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். முதல் முறை அவனை மேல் இருந்து கீழ் வரை ஆராயும் பார்வை பார்த்தாள் அர்ச்சனா. தனக்காக இங்கேயே படுத்து தூங்கியுள்ளான் என்று நினைத்தவள், அவனுக்கும் சேர்த்து காபி கலந்து எடுத்து வந்து அவன் முன்னே இருந்த டீபாயில் டொக்கென்று வைத்துவிட்டு பலகணி போய்விட்டாள். அவள் கப் வைத்த சத்தத்தில், அவன் அசைந்துகொடுக்க, காபி வாசம் எழுப்பிவிட்டது. கண்களை தேய்த்து எழுந்துபார்க்க, அவனுக்கு முன் காபி இருந்தது. ‘மேடம் நமக்கு காபி எல்லாம் போட்டு வச்சுருக்கா... பரவா இல்லையே... அப்போ நேத்து ராத்திரி நல்ல பேரு வாங்கியிருக்கேன்...’ என்று மனதிற்குள் நினைத்தவன், எழுந்து சென்று பிரெஷ் ஆகிவிட்டு வந்து காபி எடுத்துக்கொண்டான். அவளை பார்வையாலே தேட, வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் போனவன்,

    இப்போ பரவா இல்லையா சனா... என்று காபி உரிந்தபடி அவள் அருகே இருந்த ஒரு நாற்காலியில் அமர,

    ப்ச்... ஏன் அத பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க...

    ஏய்... நேத்து முடியாம இருந்தியேன்னு கேட்டா ஏன் கத்துற...

    எனக்கு முடியல... உதவி வேணும்னு கேட்டேனா... எனக்கு பேச பிடிக்கல... விடுங்களேன்...

    சரி ஓகே... சாரி... என்று அவன் கோபமாய் எழுந்து அங்கிருந்து கிளம்ப,

    சாரி... எனக்கு இதெல்லாம் ஜென்ட்ஸ் கிட்ட பேசி பழக்கம் இல்ல... தேங்க்ஸ் நேத்து எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு... என்று சொல்ல, அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், பரவா இல்ல... உரிமை மட்டும் எப்போவுமே நாமளா எடுத்தா நல்லா இருக்காது... கொடுத்தாதான் நல்லது, மரியாதையாவும் இருக்கும்... என்று சொல்லிவிட்டு அவன் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான். அர்ச்சனா அவன் சொன்ன வார்த்தையில் வாடிவிட்டாள். உதவி செய்ய வந்தவனை இப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டோமே என்று இருந்தது. அவனை நெருங்கவும் முடியவில்லை விலகவும் முடியவில்லை அவளால். அவள் என்ன நினைத்து இங்கே வந்தாள் ஆனால் இப்போது அவள் நிலை என்ன?!! அஸ்வினை விட்டு எவ்வளவு விலக வேண்டும் என்று நினைக்கிறாளோ அவ்வளவு சீக்கிரம் அவன் அவளை நெருங்குகிறான் என்று யோசித்தாள். ஆனால் அவன் எதையும் வேண்டும் என்று செய்து அவளை நெருங்க முயற்சிக்கவில்லை மாறாக சூழ்நிலை எல்லாம் அவன் பக்கம் அவளை சாயச்செய்கிறதே என்று அவளுக்கு எரிச்சல். இப்போதும்கூட உதவி செய்தவனை எடுத்தெறிந்து பேசியது அவளது தன்மையை தான் மாற்றுகிறது. இது அவள் குணம் அல்ல என்று நினைத்தவள், அவனது அறைக்கதவை தட்டினாள்.

    வரேன் சனா... டிரஸ் பண்ணிட்டு இருக்குறேன்... ஏதாச்சும் வேணுமா...

    ஒன்னும் இல்ல... என்று மறுபடியும் பலகணி வந்து நின்றுகொண்டாள். தயாராகி வந்தவன், என்ன சனா... ஏதாச்சும் வேணுமா... என்று முழுக்கை பனியனை இழுத்துவிட்டுக்கொண்டே வர, அவன் பிம்பம் விழி வழியே இதயம் சென்று சற்று அசைத்து பார்த்தது. இவனா தவறானவன்? இருக்காது, இருக்கவே இருக்காது என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

    என்ன சனா... நான் நல்லவனா கெட்டவனான்னு யோசிக்குறியா...

    இல்ல... அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல...

    உனக்கு ஒன்னு சொல்லட்டுமா... உனக்கு எஸ்பிரஸிவ் ஐஸ்... உன் உதடு பேசுறதுக்கு முன்னாடி உன் கண் நெறய பேசுது... என்று தலையை சாய்த்து ஸ்டைலாக சொல்ல, பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

    ஹ்ம்ம்... நீ இப்டி தலை குனியும் போது மட்டும்தான் என்னால உன்ன ஜட்ஜ் பண்ண முடியல... சரி விடு... எதுக்கு கூப்பிட்ட... பசிக்குதா... சாப்பிட போலாமா... நீ வெளிய வரியா...

    இல்ல... அப்போ... நான் அப்டி பேசியிருக்க கூடாது... என் மேலயும் தப்பு சொல்லமுடியாது... எங்க வீட்ல இப்டி எல்லாம் ஓப்பனா யாரும் பேசமாட்டோம்...

    பரவால்ல... என்னால புரிஞ்சுக்க முடியுது... நான் தப்பா எடுத்துக்கல... அப்போ அப்செட் ஆனேன் தான்... ஆனா பொதுவாவே பெண்களுக்கு இது பத்தி பேச பிடிக்காது... நீயும் அப்டிதான் இருக்குற... ஒன்னும் தப்பில்ல...

    friends... என்று கைகள் நீட்ட,

    ஹேய்... நீ இப்டி எல்லாம் ஷாக் கொடுக்காத. ப்ளீஸ்... எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்... என்று கிண்டல் செய்தவனை பொய்யாய் முறைக்க, அவனே தொடர்ந்தான் விழியில் கூர்மையோடு.

    friends ஓகேதான்... ஆனா சனா... நான் உன்ன என் மனைவியாதான் பாக்குறேன்... அதுல உனக்கு பிரச்சனைனா நீ வாபஸ் வாங்கிக்கோ... என்னால உன்ன friend மாதிரி எல்லாம் பாக்க முடியாது... என்றவனை திகைத்து நோக்கியவள் சற்றே தடுமாறி,

    எனக்கு... இப்போ... இப்போதைக்கு எதுவும் தோணல... சாரி... என்று விலகிச் செல்ல, அவள் கரம் பற்றி,

    விருப்பம் இல்லாமதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சனா... ஆனா இப்போ எல்லாமே மாறிடுச்சு... அது உனக்கும் தெரியும்... என்று சொன்னவன் அவள் கைகள் நடுங்குவதை உணர்ந்து அவள் கைகளை பார்க்க, அவள் தன் கைகளை அவனிடம் இருந்து மெதுவாய் விடுவித்து கொண்டு அவன் புறம் திரும்பாமலே சாப்பிட போலாம்... என்று முடித்துக்கொண்டு தனது அறைக்குள் போய்விட்டாள். அஸ்வின் சற்றும் தளராமல் கிளம்பினான். இதெல்லாம் எதிர்பார்த்தது தான். நண்பர்கள் என்ற ஒன்றை மட்டுமே அவன் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சனா இவ்வளவு சீக்கிரம் தன்னிடம் சமாதானம் பேசுவாள் என்று அவன் நினைக்கவில்லை. அதனால் அவள் சொன்னதும், சந்தோசத்தில் தன் மனதை சொல்லிவிட்டான். அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று தெரியும் இருந்தாலும் ஒரு பால் போட்டு வைப்போம் என்றே முயற்சி செய்தான். அந்த இரண்டு நாட்களும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே அவளுடன் இருந்தான். டெல்போர்ட வந்த முதல் வாரம் எந்த ஆரவாரமும் இல்லாமல் கழிந்தது.

    43

    தீரன் அடுத்த நாளே தன் அப்பாவிடம் பேசிவிட, சந்தோஷத்தில் அவர் அழுதேவிட்டார். எங்கே தன் ஒரே பிள்ளை இப்படியே தன் வாழ்க்கையை கழித்துவிடுவானோ என்று மனதில் டன் கணக்கில் குவிந்திருந்த பாரம் எல்லாம் இப்போது மணலாய் சரிந்துபோனது. அவர் அழுத பின்பே தீரனுக்கு இன்னும் வருத்தமாக இருந்தது. தன் சுயநலத்திற்காக எல்லோரையும் கஷ்டப்படுத்தியுள்ளோம் என்று நினைத்தவன் தன் முடிவு நல்லதுதான் என்று அதில் உறுதி கொண்டான். அவனது அம்மா தான் அவனை கட்டிக்கொண்டு,

    நீ இப்டியே இருந்துடுவியோ... உனக்கு ஒரு நல்லது நடக்காமலே எங்க காலம் போயிடும்னு நெனச்சேன் தீரா... உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாதான் நடக்கும்...

    சரி விடுங்க அத்தை... நீங்க அழுது உடம்பை கெடுத்துக்காதீங்க... என்று யாமினி சொல்ல அவள் உதட்டில் மட்டுமே புன்னகை இருந்தது, அது கண்கள் வரை எட்டவில்லை என்று தீரன் கவனித்திருந்தான்.

    ம்மா... அஸ்வின் திரும்பி வந்ததும் ஏதாவது ஒரு நல்ல நாள் பாருங்க... ஆண்ட்டிகிட்ட நீங்களே சொல்லிடுங்க...

    சரிப்பா... ஊரையே கூட்டி திருவிழா மாதிரி பண்ணிடுவோம்... உனக்கு எப்படி பண்ணனும்னு ஆசை இருந்தா சொல்லுப்பா... என்று அவன் தந்தை ஆசையாய் கேட்க, அவன் பார்வை யாமினியில் வந்து நிலைத்தது. அவன் பார்த்த அடுத்த நொடி அவள் தலையை தாழ்த்திக்கொள்ள,

    யாமினி எப்படி கேக்குறாளோ அப்டி பண்ணுங்கப்பா... அவ விருப்பம் தான் முக்கியம்... என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு எழுந்துசெல்ல, தவிப்போடு அவன் போவதையே ஏறிட்டாள். இன்னும் இந்த திருமணம் முடியுமுன் எத்தனை முறை அவன் இதயத்தை கிழித்துக்கொள்ளுவானோ என்று வருந்தியவள், அவன் போன பின் ஒரு முடிவு எடுத்தவளாய் தன் மாமா அத்தையிடம் பேச ஆரம்பித்தாள்.

    மாமா...

    சொல்லுமா... தீரன் மனசு இவ்ளோ சீக்கிரம் மாறும்னு நான் நினைக்கல... அவன் வாயிலேயே உன் விருப்பம் தான் முக்கியம்னு சொல்லிட்டான்... என்று அவர் சந்தோஷமாய் பேச,

    மாமா... அது வந்து... நம்ம வீட்லயே மனை வச்சு பந்தல் கட்டி, சிம்பிலா பண்ணிக்கலாம்... அப்டியே ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்...

    என்னமா சொல்ற... அவன் ஒரே புள்ளமா எங்களுக்கு. ஊரையே கூட்டி வாய்ல விரல் வைக்குற அளவுக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நெனச்சுட்டு இருக்கோம்... நீ ஏன்டா இப்டி சொல்ற... என்று தீரனின் தாய் ஆதங்கப்பட,

    மாமா இவ்ளோ தூரம் மனசு மாறி வந்ததே பெருசு... இன்னும் அக்கா மாமா மனசுல இருந்து முழுசா மறையல... மாமாவை சங்கப்படுத்துற மாதிரி நம்ம எதுவும் செய்ய வேண்டாமே... அவர் ஒரே புள்ளன்னு நீங்க ஊருக்கே விருந்து வைச்சு அவரை காயப்படுத்த போறீங்களா இல்ல தொலைஞ்சு போய் இருந்த வாழ்க்கை திரும்ப அவருக்கு கிடைக்குறதுக்கு உதவி செய்ய போறீங்களா...

    என்ன யாமினி சொல்ற... தீரன் உன் விருப்பம்னு சொன்னானே... அப்போ... என்று சந்திரசேகர் கேள்வியாய் கேட்க,

    எல்லாம் சரிதான் மாமா... அவரு என் விருப்பம் முக்கியம்னு சொல்லிருக்காரு... ஆனா அவரை காயப்படுத்தக் கூடாது அப்டின்றது மட்டும் தான் என்னோட முழு நோக்கம் விருப்பம் எல்லாம்... வீட்லயே சிம்பிலா பண்ணிக்கலாம் மாமா... முக்கியமானவங்க மட்டும் கூப்பிடுங்க போதும்... எனக்கு இந்த ஒரு நாள் சந்தோசம் ஆரவாரம் எல்லாத்தையும் விட காலகாலத்துக்கும் வாழுற வாழ்க்கைதான் முக்கியமா படுது... அதுக்குமேல உங்க இஷ்டம்... என்று அவள் நகர்ந்து செல்ல, மாடியில் அவனது அறையில் இருந்து யாமினி பேசுவதை கேட்டு முடித்த தீரன் கண்கள் கலங்கியிருந்தது. அவன் அங்கிருந்து நகரும்போது ஒரே ஒரு பார்வை தானே அவளை பார்த்துவிட்டு வந்தான். தான் பார்த்த ஒரே பார்வையில் இருந்த ஆயிரம் அர்த்தங்களையும் புரிந்து வைத்திருக்கிறாள் என்று திகைத்துதான் போனான். ‘ஹ்ம்ம்... பைத்தியக்காரி... மனசு மரத்துப்போய் இருக்கறவன்கிட்ட போய் மனச பறிகொடுத்துட்டேன்னு சொல்றாளே... இவளுக்கு என்ன செய்ய போற தீரா... உன்ன காதலிச்சு கடன்காரனா ஆகிட்டாளே...’ என்று மனதிற்குள்ளேயே அழுதுகொண்டு அறைக்கதவோடு மனக்கதவையும் சேர்த்து அடைத்துவிட்டு படுத்துவிட்டான். அந்த வார இறுதியிலேயே சந்திரசேகர் வேணிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு இன்னும் யாமினியின் வீட்டிலும் மற்ற முக்கியமான சொந்த பந்தங்களுக்கும் தகவல் சொல்லியிருந்தார். எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திருமண வேலைகள் ஆரம்பித்திருந்தது.

    இங்கே அஸ்வினும் அர்ச்சனாவும் அவ்வளவாய் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் முன்பு போல சண்டைபிடிக்கவில்லை. அவர்கள் இருவருக்குள்ளும் ஒரே ஒரு மாற்றம் மட்டும் வந்திருந்தது. அஸ்வின் அவனது மனதை சனாவிடம் வெளிப்படையாய் சொல்லிவிட்டதால், கொஞ்சம் சேட்டையை ஆரம்பித்திருந்தான். அவர்கள் குவாட்டர்ஸில் இருக்கும்போது, உணவு உண்ணும் போது என அவளோடும் இருக்கும் போதெல்லாம் அவளை சீண்டுவது, பார்வையால் விழுங்குவது என்று படுத்திக்கொண்டிருந்தான். நண்பர்கள் என்று கைகுலுக்க நினைத்தவள், அவனது பேச்சிற்கு பிறகு, அவனிடம் அதிகமாய் தடுமாற வேண்டிய சூழ்நிலையை தான் உருவாக்கிக்கொண்டிருந்தான். உதாரணமாக அந்த வாரம் புதன் கிழமை அவர்களுக்கு பேங்க் ஹாலிடே என்று அலுவலகம் விடுமுறையாய் இருந்தது. அதனால் காலையில் உணவு முடித்துவிட்டு அப்படியே ஊரை சுற்றிவிட்டு வரலாம் என்று அஸ்வின் சொல்ல, அர்ச்சனாவோ நடப்பதே குறைந்தது போல இருக்கிறது அதனால் நடந்து செல்லலாம் என்று சொல்ல, அப்போ The Wrekin Hill போலாம் என்று முடிவு பண்ணி இருவரும் கிளம்பினார்கள்.

    இன்னைக்கு லீவ்தான... எங்கயாச்சும் தூரமா போலாம்னா கேக்குறியா... லண்டன் போயிட்டு வரலாம்னு பாத்தேன்...

    ஒரு நாள் லீவு... அதுல என்ன ஊற சுத்த போறீங்க... எனக்கு இந்த பர்கர் பிஸ்சானு சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு... ஏதாச்சும் இந்தியன் ரெஸ்டாரண்ட் இருக்கா பக்கத்துல...

    ஏன் இல்ல... spiceland போலாம்... ஆனா லஞ்ச் சூப்பரா இருக்கும்... இப்போ ஏதாச்சும் லைட்டா சாப்பிடு... லஞ்ச் கூட்டிட்டு போறேன்... நம்ம ஊரு ஐட்டம் எல்லாமே இருக்கும்...

    ஹம் சரி... என்று இருவரும் காலை உணவை முடித்துக்கொண்டு அந்த wrekin மலைக்கு சென்றனர். டெலிபோர்டில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள மலை அது. ட்ரெக்கிங் போவதற்கு நல்ல இடம். பொதுவாக சுற்றுலா வருபவர்கள் இங்கு அதிகம் வருவார்கள், அதுவும் அவர்கள் குவாட்டர்சில் இருந்து காரில் வந்தால் மிக மிக அருகில் என்று அங்கே அழைத்து வந்தான். மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது சுற்றி இருக்கும் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும் என்று மலையின் மேல் ஏற ஆரம்பித்தனர். அன்று குளிர் இல்லாமல் இளவேனிற்கால வெயில் மட்டுமே இருக்க, அஸ்வின் ஒரு ரவுண்டு நெக் பனியனும் அதன் மேலே ஹூடி ஜெர்க்கினும் அணிந்திருந்தான். அர்ச்சனா ஒரு அரைக்கை சட்டையும், முழங்காலுக்கு கீழ் வரை இருந்த floral skirt அணிந்திருந்தாள்.

    சுற்றி பார்க்க அழகாக இருந்ததால், அர்ச்சனா அந்த இடங்களை ஆர்வமாய் பார்த்துக்கொண்டு வர, அஸ்வினுக்கு ஏற்கனவே பழக்கமான இடம் என்பதால், நன்றாக இருக்கும் இடங்கள் என்று தேடித்தேடி காண்பித்துக்கொண்டிருந்தான். மலை உச்சியில் இருந்து மஞ்சள் நிற பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்கை பார்க்க, மஞ்சள் நிற நதி போல

    Enjoying the preview?
    Page 1 of 1