Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vallavanukku Vallabi - Part 2
Vallavanukku Vallabi - Part 2
Vallavanukku Vallabi - Part 2
Ebook329 pages2 hours

Vallavanukku Vallabi - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒழுக்கத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் எப்படி சீர் அழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லத்தான் இந்த நாவல் எழுதப்பட்டது...

பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணை காதலித்து மணம் முடித்து, பின் சில காரணங்களால் அவளை முற்றிலுமாய் வெறுத்துப்போனவனின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கதையை வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580164309798
Vallavanukku Vallabi - Part 2

Read more from Karthi Sounder

Related to Vallavanukku Vallabi - Part 2

Related ebooks

Reviews for Vallavanukku Vallabi - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vallavanukku Vallabi - Part 2 - Karthi Sounder

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வல்லவனுக்கு வல்லபி - பாகம் 2

    Vallavanukku Vallabi - Part 2

    Author:

    கார்த்தி சௌந்தர்

    Karthi Sounder

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karthi-sounder

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    எனக்கு ஒரே ஒரு ஆதங்கம்தான்... உனக்கு அது தப்புனு தோணலையா? உழைச்சு வாங்க வேண்டிய ப்ரோமோஷன் இப்டி வாங்குறோம்னு உனக்கு மனசு குத்தலையா...? எத்தனையோ பொண்ணுங்க அவங்க உழைப்பால முன்னேறும் போது உன்னமாதிரி சில பொண்ணுங்க பண்ற தப்பாலதான் எந்த பொண்ணு நல்ல நிலைமைக்கு வந்தாலும் தப்பா தோண வைக்குது... நீ எஸ்கார்ட்னு சொன்னப்போ எனக்கு அசிங்கமா தெர்லடி. ஆனா வேலைக்காக படுத்தன்னு தெரிஞ்சப்போதான் உண்மையா அசிங்கமா இருந்தது. இன்னொருத்தரோட திறமையை திருடுறதவிட இது ரொம்ப ரொம்ப கேவலம்... என்று அருண் பேச்சை நிறுத்த, சாந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்துகொண்டிருந்தது.

    ராகேஷ் எவ்ளோ பெரிய பொறுக்கியாவேணா இருந்துருக்கட்டும். உனக்கு முன்னாடி அவன் எத்தனை பொண்ணுங்க கூட வேணாலும் கூத்தடிச்சுருக்கட்டும். ஆனா நீ முடியாதுன்னு சொல்லிருந்தா இது வேறமாதிரி இருந்துருக்கும்தான. நீ ஸ்ட்ராங்கா நோ சொல்லிருந்தா அவன் என்ன பண்ணிருக்க முடியும். இன்னும் சொல்லப்போனா அவனை நீ ஏன் காட்டிக்கொடுக்கல. ஒருத்தன் தப்பு பண்ரான்னு தெரிஞ்சும் அவனுக்கு ஏன் ஒத்துழைச்ச. அவன் மேல கம்ப்ளைண்ட் பண்ணிருந்தா நிறைய பொண்ணுங்க மட்டுமில்லாம பசங்களும் அவன்கிட்ட இருந்து தப்பிச்சுருப்பாங்களே... அத ஏன் நீ பண்ணல. நான் அவனை பற்றி எல்லாருக்கும் சொன்னேன். என்கிட்ட ஆதாரம்தான் இல்ல. உனக்கு கண்டிப்பா அப்டி பிரச்சனை இல்லதான. எவிடென்ஸ் இல்லனா கூட ஹாராஸ்மென்ட் கேஸ்ல நீ அவனை கம்பளைண்ட் பண்ணிருக்கலாம்ல. பொண்ணுங்களுக்கு அந்த வசதி இருக்குதான? என்று அருண் கேட்க சாந்தியிடம் எந்த பதிலும் இல்லை.

    ஏதாச்சும் பேசுடி... என்று அருண் கோபமாக கேட்க,

    ராகேஷ் கிட்ட போனது என்னோட சுய முடிவுதான்... என்று அழுத்தமாக வந்து விழுந்தது அவளது வார்த்தைகள். அருணிற்கு அவனது காதுகள் உண்மையாக இந்த வார்த்தைகளைத்தான் கேட்டதா என்ற சந்தேகத்தோடு அவளைப் பார்த்தான். அவளது முகம் அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையை சுமந்தபடிதான் இருந்தது.

    நீ என்ன சொல்ற? என்று அருண் அவளிடம் மறுபடியுமாக கேட்க,

    நான் விருப்பப்பட்டுதான் அவன்கூட போனேன்... என்று சொன்னவள் முகம் இப்போது இறுக்கமாக இருந்தது. அழுகை கூட இப்போது நின்றிருந்தது. முகத்தை அழுந்த துடைத்தவள், பேச்சு முடிந்துவிட்டது என்பது போல கல்லில் இருந்து கீழே இறங்க, அவள் இறங்குவதற்கு அன்னிச்சையாக உதவியது அருணின் கரங்கள். அவன் கரங்களையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், ‘இதுதான் நீ... இந்த நல்ல மனசுக்குத்தான் உன்கூட இருக்கணும்னு தோணுது...’ என்று அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். மறந்தும் கூட அதனை வாய் திறந்து அவனிடம் சொல்லவில்லை.

    அருணும் சுமைதாங்கிக் கல்லில் இருந்து கீழே இறங்க,

    உண்மையா சுமைதாங்கிதான். இங்க உக்காந்துருந்த கொஞ்ச நேரத்துல என் மனசுல உள்ளதெல்லாம் கொட்டிட்டேன் பாத்தியா இப்போ மனசு கொஞ்சம் லேசா இருக்கு. ஆனாலும் பாரம் இன்னும் அப்டியேதான் இருக்கு... உன்ன என்ன பண்றதுன்னு எனக்கு தெர்ல... என்று அருண் அந்த கல்லைத் தடவியபடி சொல்ல, சாந்தி எதுவும் பேசாமல் நின்றாள்.

    உன்ன உண்மையாதான் காதலிச்சேன்... என்று ஆரம்பித்தவன், அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு,

    ஆமா காதலிச்சேன்... ஆனா இப்போ... என்று யோசித்தவன்,

    தெர்ல. காதல் இருக்குன்னு உன்கூட வாழவும் முடியல காதல் இல்லைன்னு உன்ன விட்டுக்கொடுக்கவும் முடியல. அதுவும் ஆதாயத்துக்காக படுத்தேன்னு சொல்ற ஒருத்திய என்ன சொல்றதுன்னு தெர்ல... எஸ்கார்ட்டா உன்ன பாத்தாலும் அதுல ஒரு கண்ணியம் இருந்துச்சு. பணத்துக்கு படுக்குறது வேற... இதுவே ராகேஷ் கூட நீ டேட்டிங் போய் அவன்கூட ஜாலியா சுத்திட்டு வந்தன்னு சொன்னாக்கூட என்னால ஏத்துக்க முடியும். இத என்னால எப்படி ஏத்துக்க முடியும்னு தெர்ல. திறமையாவும் உழைப்பையும் மட்டும் நம்புறவன் நான். என்னால ஜீரணிக்க முடியல... என்று பதில் சொல்ல, எங்கோ பார்த்தவள் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டபடி,

    இவ்ளோ நாள் உங்க கோபம் புரியல. இப்போ புரியுது நாம பிரிஞ்சுறலாம்... என்றாள் முடிவாக. அவள் சொன்ன வார்த்தையில் ஆழமாக அவளைப் பார்த்தவன், எதுவும் பேசாமல் சரி என்று ஆமோதிப்பதாக தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்டினான். அருணிற்கும் இப்போதைக்கு அவளோடு தொடர்ந்து வாழ விருப்பமில்லை. வாழ விருப்பம் விருப்பமில்லை என்பதையும் தாண்டி அவளை விட்டு தள்ளி நின்றாலாவது கோபம் குறையுமே என்று யோசித்தான். தனது கோபத்தால் அவளை துன்புறுத்துவதையும் தாண்டி அவனது பண்பு என்ற ஒன்று இருக்கிறது... அவனால் அவளை காயப்படுத்திக்கொண்டே இருக்கவும் முடியவில்லை. பிடிக்கவில்லை என்றால் எதற்கு கூட இருந்து கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். அதற்கு இந்த பிரிவு தேவை என்றும் யோசித்தான். எப்படியும் தனக்கென்று ஒரு கல்யாணம் குடும்ப வாழ்க்கை என்று எப்போதும் அவன் யோசித்தது இல்லை சாந்தியை சந்திக்கும்வரை. அவள் சற்றே அவனது இதயத்தை பாதித்தாள் என்றாலும் அவள் பற்றி தெரிந்தபின் காதலைவிட கோபம் மேலோங்கி நின்றது என்பதால் நிச்சயம் அவளை மனதளவில் நெருங்க முடியவில்லை.

    இந்த சில மாதங்களில் அவளோடு இருந்த ராத்திரிகளிலும் அவளை ஏற்கனவே நிறைய படுத்திவிட்டாகிற்று என்றுதான் நினைத்தான். அவள் பக்கம் என்ன காரணம் என்று கேட்கவில்லை என்றாலும் அவளது முடிவிற்கும் காரணங்கள் இருக்கும் என்ற எண்ணம் வந்துவிட்டது. என்ன காரணம் என்றாலும் அவளால் தான் அனுபவித்த துன்பங்களை கடந்தவர அவனால் முடியவில்லை. திரும்பத் திரும்ப அவளை அருகில் வைத்துப் பார்த்து எதற்காக இன்னும் கசப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே எண்ணினான். ஆனாலும் மனதிற்குள் ஏதோ தோன்ற, இருவரும் நடக்க ஆரம்பித்தபின் அருண் அவள் புறம் திரும்பி,

    நீ ஏதாச்சும் என்கிட்ட சொல்லணும்னு நினைக்குறியா? என்று கேட்டான். அவனை ஒருமுறை ஊன்றிப் பார்த்தவள், ஆம் என்பது போல தலையசைத்து,

    ராகேஷ்கிட்ட போனது என்னோட சுய முடிவுதான். விருப்பப்பட்டுதான் போனேன். அத மட்டும்தான் சொல்லணும்... என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்க, அருண் அவளை புதிராக பார்த்தான்.

    ஆனால் அருணுக்கு அவளின் இந்த வார்த்தைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தனது கோபத்தை புரிந்து கொண்டாள் போலும் என்றுதான் நினைத்துக் கொண்டான். அவளது பிரச்சனை என்னவென்று அவள் ஏற்கனவே சொல்லியிருந்தாள் என்பதால் அவன் அவளது கடந்தகாலம் பற்றி சொல்லும்படி வற்புறுத்தவும் இல்லை.

    இன்னைக்கு நைட் கிளம்பலாமா? என்று அருண் அவளிடம் கேட்டபடி நடக்க,

    எங்க? என்றாள் அவனைப் பார்க்காமல்.

    பெங்களூர்... என்னால அம்மாவை சமாளிக்க முடியல... என்று பதில் சொன்னான். அவனுக்கு ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் சாந்தி தன் போக்கில் நடந்துகொண்டிருந்தாள்.

    உன்கிட்டதான் கேக்குறேன்... என்று பழைய அருண் மறுபடியும் உறும ஆரம்பிக்க,

    நான் வரல. உங்க கூட வர எனக்கு விருப்பம் இல்ல. அதான் பிரியலாம்னு முடிவு பண்ணிட்டோமே... என்றாள்.

    இதுக்கு மேல உன்ன என் வீட்ல வச்சுக்க எனக்கும் விருப்பம் இல்ல... என்றான் பதிலுக்கு. அவனது அந்த வார்த்தை அவளை காயப்படுத்தியது. அவளால் அருணை விட்டுக்கொடுக்க முடிந்த அளவு மேனகையை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

    எனக்கு இங்க ரொம்ப பிடிச்சுருக்கு. நான்... நான் இங்கயே இருக்குறேனே... எனக்கு அத்தையும் மாமாவும்... என்று தொடர்ந்தவளை குறுக்கிட்டவன்,

    என்னைத் தாண்டிதான் அவங்ககிட்ட நீ போக முடியும். என் பொண்டாட்டிக்குதான் அவங்ககிட்ட உரிமை. எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லனா அவங்களுக்கும் உனக்கும் கூட சம்பந்தம் இல்லனு அர்த்தம்... என்று முடிவாக கூறினான்.

    இதுக்கு மேல நாம ரெண்டுபேரும் சேர முடியும்னு எனக்கு தோணல... என்று சாந்தி சொல்ல,

    அப்போ என்கூட பெங்களூர் வந்துரு. நான் உன்ன கூட்டிட்டு போனதா அவங்க நெனைச்சுப்பாங்க. அங்க இருந்து நீ எங்க வேணாலும் போய்க்கோ. எனக்கு பிரச்சனை இல்ல... என்றான்.

    ஹ்ம்ம்... என்று அவனுக்கு தலையசைத்தவள் அதற்குமேல் எதுவும் பேசாமல் வீட்டினை நோக்கி நடையைக் கட்டினாள். அருணும் அவளிடம் எதையும் பேசவில்லை.

    இருவரும் பேசியபடியே அன்று இரவு பெங்களூர் கிளம்புவதாக சொல்ல, மேனகைக்கும் ரவிக்கும் அத்தனை சந்தோசம். பிள்ளைகள் இருவரும் ஒரு வழியாக பேசி சமாதானம் ஆகிவிட்டார்கள் போலும் என்று மேனகை நினைக்க, அவர்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர் என்று அவருக்குத் தெரியவில்லை பாவம்.

    இருவரும் தங்களுக்கு தேவையான உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்ப, அருண் சாந்தியை அழைத்து,

    இங்க இருக்குற திங்ஸ் எல்லாம் எடுத்துட்டியா...? என்று கேட்க,

    இல்ல எல்லாமே எடுக்கல அத்தை மாமாக்கு சந்தேகம் வரும்ல. அதனால கொஞ்சம் டிரஸ் இங்கதான் இருக்கு... என்றாள். அருணுக்கும் அதுவே சரியென்று பட, இருவரும் பெங்களூர் நோக்கி தங்களது பயணத்தை அந்த ராத்திரியில் தொடங்கினர்.

    மேனகையும் ரவியும் நிம்மதியாக தூங்க, அருணுக்கும் சாந்திக்கும் தூக்கம் என்பது சுத்தமாக இல்லை. வெகுநேரம் பேருந்தில் விழித்தபடியே வர, நடு இரவில் பேருந்து ஒரு சாலையோர மோட்டலில் நின்றது. பயணிகள் இறங்குவதும் ஏறுவதுமாக இருக்க, அருணும் சாந்தியை பார்த்தவன்,

    உனக்கு ஏதாச்சும் வேணுமா? என்று கேட்டான்.

    அவனது கேள்விக்காக காத்திருந்தவள் போல,

    க... கைல காசு இல்ல. கொ...கொஞ்சம் கொஞ்ச நாளைக்கு உங்க கூட இருக்க அனுமதி கிடைக்குமா. எனக்கு ஒரு வேலை தேடிட்டு நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போயிடுறேன். ஒரு வேளை சாப்பாடு போட்டாக்கூட போதும்... என்று அவள் படபடவென்று சொல்ல, அருணிற்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது. அவள் மேல் கோபம்தான் என்றாலும் மனிதத்தன்மை இல்லாதவன் அல்லவே. அவனால் எதுவும் பேச முடியவில்லை. தொண்டையை செறுமியவன், ம்ம்... உனக்கு எவ்ளோ நாள் என் கூட இருக்கணுமா இரு. எனக்கு பிரச்சனை இல்ல. நான் சப்போர்ட் பண்றேன்... என்றான்.

    தேங்க்ஸ்... என்று சொன்னவள் அதன் பின் அவனிடம் எதுவும் பேசவில்லை. தூங்கினாளா இல்லையா என்று தெரியாது ஆனால் நிச்சயம் அதன் பின் தன் கண்களை அவள் திறக்கவில்லை.

    2

    அருணும் சாந்தியும் பெங்களூரில் சர்ஜாபூர் ஏரியாவிலுள்ள அவனது வீட்டினை அடைந்தபோது மணி காலை ஏழு என்று காட்டியது. ஊரில் இருந்த வெப்பத்திற்கும் இங்கே இருந்த வெப்பநிலைக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் இருவருமே இந்த குளிருக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால் எதுவும் பெரிதாக தெரியவில்லை. ஒரு பெரிய கம்யூனிட்டி கட்டடமாக முப்பது தளங்கள் கொண்டு உயர்ந்து நின்ற அப்பார்ட்மெண்டில் பனிரெண்டாவது மாடியில் அருணின் வீடு இருந்தது. சாந்தி அவன் காட்டிய வழியில் மின்தூக்கியின் இடத்திற்கு பயணிக்க, அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் கடைகள் எல்லாமே இருந்தது. அவற்றை நோட்டமிட்டபடி அவனோடு நடந்தவள், மின்தூக்கியின் உள்ளே ஏற,

    நம்ம வீடு 12-th floor (தளம்)... என்று அருண் சொல்லிவிட்டு பனிரெண்டாவது தளத்தின் பொத்தானை அழுத்த, சாந்தி அமைதியாக தனது உடமைகளுடன் மின்தூக்கியின் உள்ளே நின்றிருந்தாள்.

    பனிரெண்டாவது மாடியில் இருந்த ஒரு வீட்டின் உள்ளே நுழைய, சாந்திக்கு அத்தனை ஆச்சர்யமாக இருந்தது. மூன்று படுக்கையறை கொண்ட வீடாக அத்தனை நேர்த்தியாக இருந்தது. தேவையான பொருட்கள் கூட வீட்டினுள் இருந்தது. அருணின் வாழ்க்கை இங்கும் அங்கும் எத்தனை மாறுபட்டு இருக்கிறது என்று யோசித்தாள். இத்தனை பெரிய வீட்டினை எப்படி வாங்கினான். ஒரு வேளை வாடகை வீடோ என்று யோசித்தபடி வீட்டினை நோட்டமிட,

    இந்த வீடு கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி வாங்குனேன். லோன்லதான். அப்பா அம்மாக்கு வீடு பாத்துருக்கேன்னுதான் தெரியும். சொந்தமா வீடே வாங்கிருக்கேன்னு தெரியாது. லோன் போட்ருக்கேன்னு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. அதனால சொல்லல... என்று கூடுதல் தகவல் வேறு சொல்ல, சாந்தி அதற்கு பதிலாக எதுவும் சொல்லாமல்,

    எனக்கு... நான் எங்க தங்கணும்... என்றாள் தயங்கி.

    இது என்னோட ரூம்... actually நம்மளோட ரூம்... என்று ஒரு அறையை காண்பித்தவன்,

    இது தவிர இன்னும் ரெண்டு பெட்ரூம் இருக்கு. உன்னோட விருப்பம்... என்றான். என்னோடு தங்கு என்றும் அவன் சொல்லவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை. அவளிடமே முடிவுகளை விட்டுவிட்டான்.

    சாந்தி அவனது அறைக்கு பக்கத்துக்கு அறையில் தனது உடைமைகள் கொண்ட பையை எடுத்துக்கொண்டு செல்ல, அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன் தனதறைக்குள் புகுந்துகொண்டான். மெத்தையில் விழுந்தவனின் எண்ணங்கள் என்னவோ சாந்தியை சுற்றியே இருந்தது. தான் செய்வது சரியா தவறா என்று அவனுக்கே இன்னும் புரியவில்லை. பிரிந்துவிடலாம் என்று அவள் சொன்னபோது அவனுக்கு சரி என்றுதான் தோன்றியது. ஆனால் அவள் நினைவுகள் இல்லாமல் அவனால் இருக்க முடியுமா என்றும் அவனுக்கு தெரியவில்லை. மனதின் ஓரம் பாரம் ஏறிக்கொண்டே செல்வது போல் தோன்றியது.

    சாந்தியின் மேலிருந்த கோபம் அவளது உடல்நலக் குறைவிற்குப்பின் சற்றே மட்டுப்பட்டிருந்தது என்றாலும் அவ்வப்போது அவளைப் பார்க்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறான் என்பதே உண்மை. அதனை அவனாலும் தடுக்க முடியவில்லை. அதே சமயம் அவளை பிறரிடம் விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை. பெற்ற தாய் என்றாலும் அவளை விட்டுக்கொடுக்காமல் இருந்தான், அவளும் கூட தன்னை விட்டுக்கொடுக்காமல் தன் தாயிடம் பேசியது அவனுக்கு இதமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் தெளிந்த நீரோடைபோல ஒரு வாழ்க்கைதான். அவளது இணக்கம், தன் குடும்பத்தோடு அவள் ஒட்டிக்கொண்ட பாங்கு எல்லாம் பிடித்தே இருந்தது. இதெல்லாம் அவனது கல்யாணக் கனவுகளும் கூட. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாளில்தான் அவனுக்கு சாந்தியைப் பற்றி தெரிந்தது. முந்தைய ராத்திரி பரிசம் போட்டு அடுத்த நாள் அதிகாலையில் திருமணம் என்ற முறையில்தான் அவர்கள் திருமணம் நடக்கவிருந்ததால், அருண் முந்தைய நாள் காலையில்தான் ஊருக்கே வந்து சேர்ந்தான். திருமணத்திற்குப்பின் விடுமுறை தேவைப்படும் என்பதாலும் சாந்தியை இங்கே இந்த வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வர வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தாலும் அவனுக்கு திருமணத்திற்குப்பின் அதிக நாட்கள் தேவைப்படும் என்று தோன்றியது. இந்த புது வீட்டில் அவன் காதலியுடன் கணவனாக இணைய வேண்டும் என்று அத்தனை கனவுகளோடு அவன் ஊருக்கு கிளம்பும் நேரம்தான் அவனுக்கு அவனது பழைய கம்பெனியில் ஒன்றாக பணிபுரிந்த நண்பன் அரவிந்திடம் இருந்து அழைப்பு வந்தது.

    மச்சான்... ஆபீஸ் வந்து பத்திரிக்கை வச்சுருக்கேன்... கண்டிப்பா வந்துடு. எப்போ கிளம்புற... என்று உற்சாகமாக அருண் அவனிடம் கேட்க,

    மச்சான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... என்றான் அரவிந்த் குரலில் தீவிரத்துடன்.

    என்னடா..... ஏதாச்சும் பிரச்சனையா... இல்ல கல்யாணத்துக்கு வரமுடியாதுன்னு சொல்றதுக்கு ஐடியா பண்றியா... என்று இயல்பாக கேட்டான் அருண்.

    இல்ல மச்சான். இங்க இப்போ ராகேஷ் குப்தானு என்னோட அக்கௌன்ட் ஹெட் வந்தான்டா. என்னோட டேபிள்ல உன்னோட பத்திரிகை பாத்திட்டு என்னவோ சொல்றான்... என்றதும் ராகேஷின் பெயர் கேட்ட மாத்திரத்தில் அருணின் உடல் விறைத்துவிட்டது.

    என்ன சொன்னான்? என்று அமைதியாக அருண் கேட்டான். தன்னைப்பற்றி ஏதாகிலும் தரைகுறைவாக பேசியிருப்பான் என்று நினைத்து அருண் கேட்க,

    மச்சான்... உன் பத்திரிகைல இருந்த உன்னோட போட்டோவும் பொண்ணோட போட்டோவும் பாத்துட்டு ஏதேதோ சொல்றான்டா. எனக்கு பயமா இருக்கு, பொண்ணப் பத்தி நல்லா விசாரிச்சியா... என்று தயங்கித் தயங்கி கேட்க,

    மச்சான்... எங்களுது லவ் மேரேஜ்தான். she had a past (அவளுக்கு கெட்ட கடந்தகாலம் இருக்கு) எனக்கும் தெரியும்... என்று இயல்பாக சொல்ல,

    இல்ல மச்சான்... இவன் வேற ஏதோ சொல்றான்... என்று ராகேஷ் நக்கலாக சொன்னதை சொல்லி முடிக்க, அருண் உண்மையில் அன்று நட்டநடு ராத்திரியில் திக்குத் தெரியாத காட்டிற்குள் தன்னந்தனியே நின்றது போலானான். தனது திறமைக்கு முன் உடலை வைத்து வென்ற பெண்ணைத்தான் விரும்பி, தேடித்தேடி காதலித்து இப்போது மணம்முடிக்கப் போகிறேனா என்ற அவனது குழப்பம் இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவில் வந்து நின்றது.

    அதிகாலையில் வீட்டிற்கு வந்தவனை திருமணக்கோலத்தோடு அவனது வீடு வரவேற்க, ஏற்கனவே வீட்டில் சொந்தபந்தங்கள் எல்லாம் நிறைந்து வழிந்தது. நேரம் பார்த்து தன் அன்னையிடம் தனியாக பேச வேண்டும் என்று நினைத்தவன், அதற்கான சந்தர்ப்பம் அமைந்தபோது, இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்ல, மேனகை அழுதுவிட்டார். பத்திரிக்கை கொடுத்து பந்தி போட்டு சொந்தபந்தம் எல்லாம் கூடிவந்து நின்றபின் ஓர் கிராமத்தில் திருமணம் நின்றால் என்ன ஆகும் என்று அவனுக்கும் புரிந்ததுதான் என்றாலும் அவனால் இதை ஏற்க முடியவில்லை. முக்கியமாக ஏன் இந்த கல்யாணம் வேண்டாம் என்று காரணம் கூட அவனால் சொல்ல முடியவில்லை. அது அவனுக்கும் அசிங்கம் அவளுக்கும் அசிங்கம் என்று அவன் அமைதிகாக்க, அவனது அன்னை அவனிடம் கெஞ்சி மிஞ்சி எப்படியோ இந்த திருமணத்தை நடத்திவிட்டார்.

    திருமணம் நடந்துவிட்டது என்றாலும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. ராகேஷின் மேல் இருந்த கோபமெல்லாம் இப்போது சாந்தியின் மேல் திரும்பிவிட, அவளைத்தான் பந்தாடினான். சாந்தி மட்டும் ராகேஷிடம் மறுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே என்ற எண்ணமும், அவனுக்கு ஒப்புக்கொண்டு இசைந்துகொடுத்த அவளது குணமும் அவனை இன்னுமின்னும் வெறியேற்றிவிட்டது. ஒரு வேளை விஷயம் தெரிந்த நேரத்திற்கும் அவளை சந்திக்கும் நேரத்திற்கும் கால இடைவேளை இருந்திருந்தால்கூட அவனது கோபம் சற்றே மட்டுப்பட்டிருக்கும். ஆனால் அவனுக்கோ விஷயம்

    Enjoying the preview?
    Page 1 of 1