Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thamizhkodiyin Kaathal
Thamizhkodiyin Kaathal
Thamizhkodiyin Kaathal
Ebook269 pages1 hour

Thamizhkodiyin Kaathal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thilagavathi, The first women IPS officer from tamilnadu. she is also an exceptional Tamil novelist, written over 100 novels, 100+ short stories, 50+ Articles transulated from verious languages, Readers who love the subjects social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466169
Thamizhkodiyin Kaathal

Read more from Thilagavathi

Related to Thamizhkodiyin Kaathal

Related ebooks

Reviews for Thamizhkodiyin Kaathal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thamizhkodiyin Kaathal - Thilagavathi

    30

    1

    மடியிலிருந்து மலர்கள் சரசரவென உதிர, ‘சட்’டென்று அதிர்ந்து போனவளாய் எழுந்து நின்றாள் கஸ்தூரி. செய்தி கொண்டு வந்தவன், வாசலில் இருந்த தன் சைக்கிளைக் கிளப்பிக் கொண்டு போவதையே பார்த்தபடி நின்றாள்.

    யார் இவன்?

    போலீசா?

    கல்லூரி மாணவனா

    கையில் இருந்த துண்டுச் சீட்டை மீண்டும் ஒரு தடவை - படித்தாள். துண்டுத் தாளைக் கைகள் விரித்ததும் விரல் இடுக்கில் தொத்திக் கொண்டிருத்த மலர்ச்சரம் ‘சொத்’தென்று கீழே விழுந்தது. உள்ளங்கையில் நெருப்பை ஏந்திக்கொண்டு நிற்பது போல சுட்டுக் கொண்டிருந்தது அந்தத் துண்டுச் சீட்டு. உடனே அந்த செய்தியை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு அடுப்படிக்கு ஓடினாள். இரண்டிரண்டாய் முல்லையும் கனகாம்பரமும் நாலு கன்னிகளுக்கு நடுநடுவே ஒரு கிள்ளு மருக்கொழுந்துடன் சிரித்தது சரம். காலருகே இருந்த பாத்திரத்தில் தண்ணீரில் மிதந்தது முல்லை உதிரிப்பூக்களாய்! அந்தப் பூக்களை மட்டும் தனியே தொடுக்கச் சொன்னாள் அம்மா, அம்மனுக்கு சாத்துவதற்காக.

    என்ன வேண்டும் அம்மாவுக்கு.

    ஒன்றுமில்லை அவளுக்கென்று ஒன்றுமில்லை. எனக்குன்னு என்ன கேக்கப் போறேன்? போதுங்கறது பகவான் கொடுத்திருக்கான். ஒரு கொறை வச்சதில்லே உங்கப்பா. ஒரு பூவை கூட என் மேலே வேடிக்கைக்குன்னு கூட அவர் விட்டெறிஞ்சதில்லே இருபத்தாறு வருஷம் குடித்தனம் பண்ணினதிலே ஒருநாள் அதிர்ந்து பேசினதில்லே. வேற, இன்னும் எனக்கு என்ன வேணும் சொல்லு? நீயும் உங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும், அதுபோதும்.

    நன்றாகத்தான் இருந்தார்கள். பெரியவன் சத்தியமூர்த்தி, வேஸ்ட்டா டிகிரி வாங்கி என்னத்துக்கு உபயோகம் என்று சின்னதாய் ‘மாடர்ன் ஃபேன்ஸி ஸ்டோர்’ வைத்திருந்தான். கடை திறந்து நான்கே மாதங்கள்தான் ஆகி இருந்தன. அதற்குள், வியாபார நுணுக்கங்கள் முழுவதும் கரை கண்டுவிட்டவன் மாதிரி பேச்சு. அதைத் தவிர வேறு பேச்சில்லை. வேறு நினைப்பில்லை. செய்தித்தாளிலும், மாதாந்திரப் பத்திரிகைகளிலும் கூட ‘பிஸினஸ்’ காலம் மட்டும்தான் படித்தான். பெரிய பிஸினஸ் மேக்னட் ஆகிவிட்ட மாதிரி பந்தா. விளம்பரங்களை, விளம்பரங்களின் உத்திகளை அலசினான்.

    ஒருநாள் இல்லேன்னா, ஒருநாள் பாரேன்... என்னோட வியாபாரத்தையும், என் தயாரிப்புக்களையும், என் கடையையும், என் பெயரையும் இதே மாதிரி முழுப்பக்க விளம்பரம் பண்ணப் போறேன்.

    அம்மா முறத்தில் இருந்த அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டு இருந்தாள். பக்கவாட்டில் குனிந்திருந்தது அவள் முகம். அப்போது தான் உலகைத் தரிசிக்கிற பசுங்கன்றைப் போல பரிசுத்தமாக, சாதுவாக, அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்தத் துண்டுச்சீட்டு சேதியைச் சொல்லி குளத்தில் கல்லெறியத்தான் வேண்டுமா? அவள் அப்பாவின் அறைக்கு ஓடினாள்.

    சத்தியமூர்த்தி கெட்டிக்காரன். பணத்தின் மகிமை புரிந்தவன். எப்படியாவது பணம் பண்ண வேண்டும் என்ற கனவிலேயே எப்பொழுதும் திளைப்பவன். எப்படியும் பணம் பண்ணலாம் என்ற எண்ணத்தை எல்லா நேரமும் ஜெபிப்பவன்.

    இருந்தாலும் அப்பாவுக்கு என்னவோ சுபாஷ் மீதுதான் அளவுகடந்த பாசம்.

    டேய்! சும்மா பொழைக்கத் தெரியாதவன் அப்படி இப்படிப் பேசாதே. புள்ளைன்னா அது புள்ளை. உன்னை மட்டமா சொல்றேன்னு நெனச்சுக்காதே. நெஜத்தைச் சொல்றேன். உனக்கு அவனை மாதிரிப் படிப்பு வந்திருந்தா, நீ இந்தக் கடையை வச்சிருப்பியா? சொல்லு...

    ஆமா... படிப்பு... பெரீய்ய படிப்பு... சும்மா எவனெவனோ எழுதினதை அப்படியே மனப்பாடம் பண்ணி, வெள்ளைத் தாளிலே வாந்தி எடுத்துட்டா ஆச்சா?

    வேற என்ன பண்ணணுங்கறே...?

    உனக்கு அதெல்லாம் புரியாதுப்பா. நீ பாட்டுக்குப் பேசாம உன்னோட பாக்கு வியாபாரத்தைக் கவனி. அய்யாவோட வியாபாரம் சூடு புடிச்சதும் அடுத்த வருஷத்திலே இருந்து உனக்கு ரெஸ்ட்...

    வெண்டைப் பிஞ்சு அளவுக்கு பட்டை பட்டையாக நெற்றி, புஜம் எங்கும் விபூதி அணிந்திருந்தார் அப்பா. திருவாசகத்தை வைத்துக் கொண்டு மனசுக்குள் படித்துக் கொண்டிருந்தார். அது, அப்பா கடவுளோடு பேசும் நேரம். அப்பா மௌனம் காக்கிற நேரம் இது. இல்லையென்றால், இந்நேரம் அப்பாவின் பேச்சாலும், சிரிப்பாலும் வீடு ஹதம் படிந்திருக்கும்.

    கட்டை குட்டையாய், கறுத்துச் சிறுத்த அப்பாவின் புன்னகை, நிலாத் துண்டாய் பிறந்து வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து, வீடு முழுவதையும் மகிழ்ச்சியில் நிரப்புவது போலிருக்கும். கருக்கழியாத கரும்பலகையில் சாக்பீஸால் கிழித்த கோடு மாதிரி பளீரென்று சிரிப்பார் அப்பா.

    எப்போதும் சிரிக்கிற அப்பா, சிரித்த முகமாகவே இருக்கிற அப்பா. ஒருவேளை எல்லாக் குழந்தைகளையும் போல, பிறந்ததும் அழுதிருக்க மாட்டார் அப்பா! ‘குவா குவா’ என்று அழுவதற்குப் பதிலாக ஒரு வேளை கலகலவென்று சிரித்திருப்பாரோ? எல்லாவற்றுக்கும் சிரித்துக் கொண்டிருப்பதோடில்லாமல் எல்லோரையும் சிரிக்கச் சிரிக்கப் பண்ணுகிற அப்பா. சில சமயங்களில் சிரிக்க வேண்டுமென்றே பேசுகிற பேச்சு, பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும் என்ற எண்ணமே இல்லாமல் சொல்லுகிற குழந்தைத்தனமான விஷயங்கள்.

    இந்தச் சேதியை அப்பா தாங்கிக் கொள்வாரா? அப்பா ஒரு பெரிய கறுப்புத் தாமரைப் பூ. அவர் மேலா இந்தப் பாறாங்கல்லைத் தூக்கி வைப்பது. பேய்களுக்கும் இரங்குபவர் அவர். அது பொய் இரக்கமல்ல.

    ஏம்ப்பா... காட்டேரி, முனி, மோகினி, சங்கிலிக் கருப்பன் எல்லாத்தையும் கண்ணாற கண்டாப்பல இத்தனை கதை சொல்றியே, நாங்களுந்தான் நடுச்சாமத்திலே நடமாடறோம். எங்க கண்ணிலே ஒரு நாளும் நீ சொல்றதெல்லாம் தென்படறதே இல்லியே...

    சரியான கேள்வி கேட்டே போ... நம்ப கோடப் பள்ளம் சுடலை இல்லியேன்னு இருக்கு இப்ப. விஷயம் என்னன்னா, எவ்வளவுதான் பேரு பெத்த பேயா இருந்தாலும், ஒரே ஒரு சின்ன ஆணி, இத்தினியூண்டு இரும்புத் துண்டு இருந்தா போதும் ‘கப்சிப்’னு அடங்கிடும். இப்பத்தான் காடு, கழனி, மலை எல்லாப் பக்கமும் கரெண்ட் கம்பம், தந்திக்கம்பம்னு இரும்புமயமா இல்லே இருக்கு? அதுங்க பாவம், ஒண்ட எடமில்லாம என்ன தவிதவிக்குதுங்களோ?

    அப்பாவின் குரலில் நிஜமான இரக்கம். வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாரின் தவிப்பு. சுற்றி இருப்பவர்கள் வீடு அதிரச் சிரிப்பார்கள்.

    அல்பாயுசுலே போனவன் ஆவியா அலைவாம்பாங்க. ஆவியா இருக்கிறதுங்க எங்க அலையுதுங்களோன்னில்லே நீ இப்ப கவலைப்படறே?

    ஆவிகளின் நடமாட்டம் பற்றி, தான் கூறிய விஞ்ஞான பூர்வமான விளக்கத்தில் இப்படி விழுந்து விழுந்து சிரிக்க என்ன இருக்கிறது என்று புரியாதவராய் அப்பா விழிப்பார். அதைப் பார்த்து, அவர் முகத்துக்கு நேரே விரல் நீட்டி, வானத்தை நோக்கி முகத்தை நிமிர்த்திக் கைதட்டியபடி சிரிப்பான் சுபாஷ்.

    அய்யோ! அப்பா! அப்பா - வயிற்றை வலிப்பது போல பாவனை காட்டி முழங்கால்களுக்குள் முகம் புதைத்துச் சிரிப்பாள் கஸ்தூரி. அம்மா! இங்க வாயேன். இந்த அப்பா சொல்றதைக் கேளேன்.

    முறத்தரிசியோடும், சிரிக்கத் தயாரான முகத்தோடும் அம்மா சமையலறையிலிருந்து வெளியே வருவாள்.

    ஆண்டியப்பன் கிணத்து மூலைப் பள்ளத்துலே புல்லட்டை விட்ருச்சிம்மா. தூக்கி அடிச்சதுலே இது மேட்டுல கிடக்குது. ராசியில்லாத வண்டிப்பா. இனிமே பேர்த்துக்கிறதுக்கு உனக்கு முழங்கால் போதாது. வந்த வெலைக்கு வித்துடுன்னா, என்ன சொல்லுது பாரு...

    "டேய்! வண்டி மேல ஏண்டா பழி போடறே. அது பாவம் வாயில்லா ஜீவன். இருந்தாலும் என்ன நன்றி! எவ்வளவு விஸ்வாசம்... தான் குழியிலே விழுந்து, என்னை மேட்டுக்குத் தள்ளிச்சே...’’ - அப்பாவின் குரலில் நிஜமான கனிவு இருக்கும். நசுங்கிக் கிடக்கிற பைக்கைப் பார்க்கிற பார்வையில் கருணை சுரக்கும். தனக்காக உழைத்துச் சம்பாதித்து தந்துவிட்டு ஆனால் நோய்ப்பட்டிருக்கும் உயிருக்குப் போராடும் குதிரையைப் பார்க்கிற ஜட்கா வண்டிக்காரனின் பார்வையில் இருக்கிற பரிவு இருக்கும்.

    நியாயமா பார்த்தா... அந்த புல்லட்டுக்கு நாம்ப நன்றிக் கடன் செலுத்தணும். நிக்கவச்சி, கற்பூரம் கொளுத்தி ஊதுபத்தி ஏற்றித் தேங்கா உடைக்கணும்

    உடைப்பார். வீடு பூராச் சிரிக்கும்.

    அய்யோ! அப்பா! அப்பா!

    அப்படித்தான் அப்பா. சமயங்களில் இவர் எப்படி பாக்கு பிடித்து, வியாபாரம் செய்து, காண்டிராக்ட் வேலையை மேற்பார்வை பார்த்து, மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாக, பெரிய குடும்பஸ்தராக இருக்கிறார் என்றிருக்கும்.

    இந்த அப்பாவின் மேல் இந்த வேளையில் கொதிக்கும் வெந்நீரையா அள்ளித் தெளிக்க வேண்டும்? கேட்டியா உம்மவ செஞ்ச வேலையை? எதுக்குத் தெரியுமா அவங்க ஹாஸ்டல்லே என்னைக் கூப்பிட்டு விட்டாங்க. தோழிப் பொண்ணுங்களோட சேர்ந்து செவரேறி குதிச்சி, டெண்ட் கொட்டாயிலே சினிமா பார்த்திருக்காங்க. ‘வெட்கமாயில்லே’ங்கறாங்க கன்யா ஸ்திரீ. ‘வெட்கமில்லாமலியா இருக்கும்?’ போயும் போயும் டெண்ட் கொட்டாயிலே, கிட்டப்பா ஹொன்னப்பா காலத்துப் படத்தைப் பார்த்துகிட்டிருந்தா...

    அப்பாவும் கூடச் சேர்ந்து சிரிப்பார். ஆனால், இப்போது சிரிப்பாரா? வேறு வழியில்லை. அவள் தன் கையில் இருந்த துண்டுச் சீட்டை அவர் படித்துக் கொண்டிருக்கும் திருவாசகத்தின் மேல் வைத்தாள்.

    சுபாஷ் - போலீஸ் காவலில் - உடனே சந்திக்கவும்!

    இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால் அப்பா என்ன செய்வார்?

    கலங்கியபடி நின்றாள் கஸ்தூரி.

    சுளீரென்று முதுகில் லத்தியொன்று தாக்கியது. போலீஸ் லத்தி. தீப்பற்றியதுபோல் முதுகு எரிந்தது. சமாளித்துக்கொண்டு நிமிர்வதற்குள் கன்னத்திலும், மூக்கிலும் நெற்றியிலும் அறைகள் விரலை மடக்கிக் கொண்டு கை முட்டியால் மூர்க்கத்தனமாகத் தாக்குதல். கண்ணுக்குள் பொறி பறந்தது சுபாஷ்க்கு வாய்க்குள் ரத்தம் புளித்தது.

    போலீஸ்காரனுக்காடா நெருப்பு வெக்கறீங்க... முழங்காலின் மேல் சடாரென்று இறங்கியது லத்தி. கண்ணுக்கெட்டிய தூரம் புகை. கண்கள் எரிந்தன. காற்சட்டைப் பையில் இருந்த வெங்காயத் துண்டத்தைக் கண்களில் பிழிந்துவிட்டுக் கொண்டான் சுபாஷ்.

    அவனைப் பின்தொடர்ந்து அணிவகுத்து வந்து கொண்டிருந்த ஊர்வலம் சிதறித் தெறித்திருந்தது. இரும்புத் தொப்பி அணிந்த போலீஸ்காரர்கள், பிரம்புக் கேடயங்களைப் பாதுகாப்பாக ஒரு கையில் பிடித்தபடி விழுந்து கிடந்தவர்களை அருகே நின்ற கூண்டு வண்டிக்குள் அசுரத்தனமான வேகத்துடன் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

    பார்த்தா, எம்மவ புள்ளயாட்டம் இருக்கே, எழுந்திருப்பா... மீசை நரைத்த போலீஸ்காரர் ஒருவர் கைலாகு கொடுத்து சுபாஷை எழுப்பினார்.

    யோவ்! இருநூத்தி நாலு... அவன் கிட்ட என்ன பேச்ச...? திமிர் பிடிச்சவன்யா... அந்த வட்டச் செயலாளரை நெருங்கவுடாம இல்ல பெரிய வீரரு மாதிரி இவரு முந்திக்கிட்டு வந்து நெஞ்சை நிமிர்த்தறாரு... ஓங்கிய லத்தியை மெளனமாக எதிர்த்திசையில் திருப்பினார் வயதான போலீஸ்காரர் ஒருவர்.

    ஏறு தம்பி வண்டியிலே...

    கூண்டு வண்டிக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்புகிற கோஷங்கள். உணர்ச்சியின் சிகரத்திலே நின்று உரத்துக் கேட்கிற ஒலிப்பிரவாகங்கள்.

    மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை

    மாட்ட நினைக்கும் சிறைச்சாலை

    சுபாஷின் குரல் தனித்துக் கேட்டது.

    2

    மிருகங்கள் அடைக்கப்பட்ட கூண்டு வண்டியைப் போல வண்டி நகர்ந்தது. சுபாஷ் போட்ட கோஷத்துக்குப் பதிலாக துரைராஜின் கோஷம் கிளம்பியது. வண்டியின் இன்னொரு மூலையில் இருந்து குரல் எழும்பியது.

    தமிழென்று தோள் தட்டி ஆடு! அந்தத்

    தமிழ் வெல்க! வெல்க என்றே தினம் பாடு

    வண்டிக்குள் இருந்த மாணவர் கூட்டம் ஆர்ப்பரித்தது. தமிழ் வெல்க, வெல்க தமிழ் என்ற ஒலி வண்டியின் இரும்புச் சுவரைத் துளைத்துப் பரவி வானத்தை முட்டியது. கேசவன், பிச்சமுத்து, ஜான்சன். சுபாஷின் பார்வை வண்டிக்குள் அடைபட்டிருந்த மாணவர்களைத் தொட்டு மீண்டது.

    புழுக்கம், வியர்வை, நாற்றம், அடைபட்டுக் கிடக்கும் மனிதக் கூட்டத்திலிருந்து மட்டுமே புறப்படக் கூடிய கலவை மணம். சுபாஷ் மூக்கை விரல்களால் பொத்திக் கொண்டான். மேடு பள்ளங்களில் வண்டி ஏறி இறங்கும்போதெல்லாம் கால்கள் தடுமாறின. விழுந்துவிட இடமில்லாமல் வண்டிக்குள் அடைபட்டிருந்த கூட்டம், பலத்த காற்றில் தலைசாயும் பயிர்க் கூட்டம் போல சாய்ந்து நிமிர்ந்து கொண்டிருந்தது.

    "கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்

    அரபி கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை"

    கரீமின் குரல். ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டம். ஒவ்வொரு மறியலின்போதும், தேர்ந்தெடுத்த மாணவர்கள் இப்படி உற்சாகக் குரல் கொடுத்து, கூட்டத்தில் வீரத்தை விதைப்பது வழக்கம்.

    ஸ்ஸூ! வண்டிக்குள் ஏறினவுட்டு கூட என்னப்பா பேஜாரு...

    காக்கிச் சட்டையின் காலருக்குள்ளிருந்து கட்டம் போட்ட கர்சீஃபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார் ஒரு போலீஸ்காரர்

    "எங்கடா அழைச்சிட்டுப் போறாங்க...’’ யாரோ ஒருவன் கேட்டான். குரலில் லேசான பீதி தெரிந்தது. அநாவசியமான வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்ற அச்சம் தெரிந்தது.

    சுபாஷின் காதருகில் வந்து அவனுக்கு மட்டுமே கேட்பது போல கிசுகிசுப்பான குரலில் ஒருவன் கேட்டான். நம்பளைக் கூட்டிக்கிட்டுப் போக ஸ்டேஷனாண்டை எதுனாச்சும் ஏற்பாடு உண்டா? வுட்டா, விளாசித் தள்ளிடுவாங்க போல இருக்கே. நிக்கோடின் வாடையும், வாய் நாற்றமும்... சுபாஷ் பதில் சொல்லாமல் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டான்.

    சே! என்ன மனுசனுங்க... எவ்வளவு உணர்ச்சி மயமான கோஷங்கள்! அவ்வளவும் வெறும் கோஷங்கள்தானா? வெறும் வாய் வீரம் தானா? சுபாஷின் மனதிற்குள் ஆத்திரம் குமிழிட்டது.

    பிரச்சனை ஏதும் வராது என்ற உறுதியிலேயே எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்வோம் என்று முழங்குகிற வீணர்கள். உயிருக்கு ஆபத்து வராது என்று உறுதிகள் செய்துகொண்டபின் வீரம் பேசுகிற கூட்டம். தக்கை மனிதர்கள்! கோஷங்களைப்போலவே உணர்வுகளையும் இரவலாய்ப் பெற்று எதிரொலியாய் உதிர்க்கும் உதிரிகள்.

    சுற்றி நிற்கிற கூட்டம் சோர்ந்தது. கலவரம் பரவியது. உணர்ச்சி மயமான கோஷங்கள் மறைந்து, பெயரற்ற வண்டியின் சிறகொலியாய் ரகசியப் பேச்சுகள் பரவின. துப்பாக்கியைத் தோள்மீது செளகரியமாய்ச் சாய்த்துக்கொண்டு, முழங்காலின் மீது புறங்கையை வைத்து அழுத்தியபடி இருக்கையில் உட்கார்ந்தார் ஒரு போலீஸ்காரர்.

    நிமிர்ந்து நின்றான் சுபாஷ். ‘கூடாது. இந்தச் சோர்வைத் தங்க விடக்கூடாது. இந்தக் கலவரத்தைக் கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் இன்னும் சற்று நேரத்தில் அது விஸ்வரூபம் எடுக்கும். ஒட்டு மொத்தமான கூட்ட உணர்வு மனிதனுக்கு போலி தைரியத்தை உண்டாக்கும். அதற்கான அஸ்திவாரமே முழக்கம். நீ தனியாள் இல்லை. நாங்கள் இத்தனைபேரும் உன்னோடுதான் இருக்கிறோம் என்று தனிமனிதனை ஊக்குவிக்கிற தந்திரம். மறுகணமே சுபாஷ் தொண்டை நரம்புகள் புடைக்க முழங்கினான். முழங்கிக்கொண்டே இருந்தான். அதற்காக கூட்டம், துணைக் குரல் கொடுத்தது. சுபாஷக்குத் தொண்டை எரிந்தது. உட்கார்ந்திருந்த போலீஸ்காரர் எழுந்துவந்து அவனை நெருக்கினாற் போல நின்று கொண்டார். சுபாஷின் மனசுக்குள் யானை கம்பீரமாய்ப் பிளிறியது. சிங்கம் கர்ஜித்தது. தான் கவனிக்கப் படுகிறோம் என்ற உணர்வில் நெஞ்சம் ததும்பியது. ஒரு கூட்டத்திலும் தனித்து அடையாளம் காணப்படுகிறோம் என்ற உணர்வில் இதயம் நிறைந்தது. தான் தலைவனாகிறோம் என்ற பெருமிதத்தில் உள்ளம் மகிழ்ந்தது.’

    இந்தச் சாகசங்களை எல்லாம் தமிழ்க் கொடிக்கு சொல்ல வேண்டும் என்று நினைவுக்குள் குறித்துக் கொண்டான்.

    சொல்லச் சொல்ல, காதோரத்தில் வளையம் வளையமாய்ப் பிரிந்து காற்றிலே அசையும் முடிக்கற்றைகள் அலை பாய உன்னிப்பாய்க் கேட்கும் தமிழ்க் கொடியின் முகம் கண்ணுக்குள் தெரிந்தது. நெஞ்சுக்குள் இனித்தது.

    என்ன செய்து கொண்டிருப்பாள் அவள்?

    அவன் நிலை என்னவாகுமோ என்ற அச்சத்தில் இருப்பாளா? அவனுக்காகக் கவலைப்படுவாளா? போர்க்களம் கண்ட புறநானூற்றுப் பெண் போல அவனைக் குறித்துப் பெருமிதம் கொள்வாளா? தமிழ்க் கொடியும், தன்னைப் போன்றவள்தானே? அவளையாவது அச்சம் நெருங்குவதாவது?

    தமிழ்க்கொடி சுபாஷின் வகுப்பு மாணவி. அவளது சகோதரன் தட்சிணாமூர்த்தி சுபாஷின் நெருங்கிய நண்பன்.

    டேய் சுபாஷ்! கொடிக்கு படிக்க புத்தகம் வேணுமாம். நல்ல புத்தகம். எதை நான் எடுத்துக்கிட்டு வந்தாலும் குப்பைன்னுது. உனக்குத்தான் லைப்ரரி தலைகீழா அத்துப்படியாச்சே. கொஞ்சம் உதவி செய்யேன். நல்லதா ஏதாவது எடுத்துக்குடேன்.

    ஏண்டா! உன் தங்கச்சியவே லைப்ரரியில் மெம்பர் ஆக்கிடேன். அதுவே போய் எடுத்துக்கட்டுமே...

    "சரியாப் போச்சு! ஏதோ பெரிய மனசு பண்ணி காலேஜுக்கு அனுப்பறாங்களே,

    Enjoying the preview?
    Page 1 of 1