Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soppana Boomiyil
Soppana Boomiyil
Soppana Boomiyil
Ebook235 pages1 hour

Soppana Boomiyil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thilagavathi, The first women IPS officer from tamilnadu. she is also an exceptional Tamil novelist, written over 100 novels, 100+ short stories, 50+ Articles transulated from verious languages, Readers who love the subjects social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466169
Soppana Boomiyil

Read more from Thilagavathi

Related to Soppana Boomiyil

Related ebooks

Reviews for Soppana Boomiyil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soppana Boomiyil - Thilagavathi

    31

    1

    சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி பெடலை ஒரு அழுத்து அழுத்தி வேகமாய்ச் சுழற்றினான் திவாகர். சைக்கிள் இப்போது தனது முனகல் தொனியை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருந்தது. பெரும் போரிலே வெற்றி கண்ட வீரன் ஒருவன் தனது ப்ரியக் குதிரையைப் பார்ப்பதுபோல பெருமிதத்தோடு, அச்சகத்துக்கு சொந்தமான அந்த சைக்கிளை உரிமையோடு பார்த்தான் திவாகர். அந்த சைக்கிளை ஒரு ஜீவனுள்ள நண்பனாகவே எண்ணிக் கொண்டிருந்தான் அவன். சைக்கிள் சீட்டை செல்லமாகத் தட்டிக் கொடுத்தான்,

    திவாகர் அதட்டலாய்க் கேட்டது உள்ளேயிருந்த மேனேஜரின் குரல்.

    ஒரு நாளும் அவர் குரல் வேறு தினுசாய் ஒலித்து, அவன் அங்கு ஆபீஸ் பையனாக வேலைக்குச் சேர்ந்த கடந்த மூன்று வருடங்களில் கேட்டதேயில்லை. ‘தன்னைப் போலவே, பதினான்கு வயதில் அவருக்கு ஒரு மகன் இருந்தால் அவனையும் கூட அவர் இப்படியேதான் நடத்தியிருப்பாரோ?’ என்று திவாகர் அடிக்கடி நினைத்துக் கொள்வான்.

    எத்தனை தடவை சொல்றது? போன ரெண்டு வருஷ ஆயுத பூஜையையும் பார்த்திருக்கிறே இல்ல. ஒரேயடியா தேவைப்பட்டதுங்களை வாங்கியாரத் தாவலை?

    சற்று தணிவாய் வந்தது மேனேஜரின் குரல்.

    ஒரு நிமிட்லே கொண்டாறேன் சார் என்று சத்தமிட்டுச் சொல்லியபடியே மேனேஜரின் அறைக்குள் நுழைந்தான் திவாகர். அவர் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை உருவி எடுத்தார். அத்தகைய தருணங்களில் அவர் சற்று தன்மையாகவே இருப்பார் என்பதால் மீண்டும் ஒரு முறை அவரிடம் சொல்லிவிட்டு, தப்பித்தால் போதும் என்று அறையில் இருந்து வெளிப்பட்டான் திவாகர், அவனது முகத்தில், நிம்மதி புன்னகையாய் அரும்பி இருந்தது.

    சியாமளா... ‘மதம் என்பது மாயை’ லாஸ்ட் ஃபாரம் ரெடியாயிடுச்சா பாரு. பகுத்தறிவுப் பதிப்பக ஓனர் இத்தோடு ஏழெட்டு தடவை போன் பண்ணிட்டாரு. விஜயதசமி அன்னிக்கு புஸ்தகம் வந்தாகணுமாம். ஐதீகமோ, ஜோஸ்யமோ என்னமோ கேட்டுக்கிட்டே இருக்காரு

    இன்னும் அரை அவர்லே ஆயிரும் ஸார். சியாமளா கீழே விழுந்த லெட்டை எடுக்கக் குனிந்தாள்.

    தேவ கீதம் ப்ரூஃப் திருத்திட்டியா கலா? கேசுக்கு முன்னே நின்றபடி ஒவ்வொருவரையும் விரட்டிக்கொண்டிருந்தார் மேனேஜர். ஒவ்வொருவரின் கைக்கும் முகத்துக்குமாய் அவரது பார்வை அலைந்து பரபரத்தது.

    நீங்க பாட்டுக்கு பூசை முடிஞ்சதுன்னு பொரிப் பொட்டலத்தை வாங்கிட்டு பொறப்பட்டுடுவீங்க! பப்ளிஷர்ஸ் நம்ப உசுரை வாங்கிருவாங்க. மேனேஜர் தொடர்ந்து பொரிந்து கொட்டினார். தரையில் விழுந்து கிடந்த சில டைப்ஸை எடுத்து, கேஸின் அருகே நின்ற கலாவிடம் கொடுத்தார். எரிச்சல் கசிந்தது அவரது பார்வையில்.

    "பப்ளிஷருங்க யாராவது மொதலாளி வூட்டுக்கு போன் பண்ணிட்டாங்கன்னா அதைவிடக் கஷ்டம். தப்பித் தவறி அந்தம்மாகிட்ட எதையாவது பேசி வச்சாங்கன்னா கேக்கவே வாணாம். அந்தம்மா நாக்கைப் புடுங்கிக்கிறாப்பல எதையாவது கேட்டு வைக்கும்.’’ மேனேஜரின் குரல் தொடர்ந்து ஒலித்தது. அச்சக உரிமையாளர் திருநீலகண்டத்தின் மனைவி பங்கஜத்தின் குரோதம் கொப்பளிக்கும் முகம் அனைவருடைய மனக் கண்ணிலும் தோன்றியது.

    அச்சகத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அவருடைய கூச்சலையும் அச்சகத்தின் தவிர்க்க முடியாத இயந்திர ஒலிகளில் ஒன்றெனக் கருதியவர்கள் போல எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள்.

    சித்ரா! எவ்வளவு சொன்னாலும் உனக்கு அறிவே இல்லை. எவ்வளவு மோசமா கரெக்ஷன் பாத்திருக்கே பாரு. மீண்டும் அதட்டினார் மேனேஜர் விநாயகம், காலி புரூஃபைக் கையில் வைத்துப் பார்த்தவாறே.

    ஏ கொண்டம்மா. ஒனுக்கு வேறே தனியாச் சொல்லணுமா? மணி ஆறாவுது. சீக்கிரமா சுத்தம் பண்ணு ஆபீசை. எல்லா நாளையும் போல பட்டும் படாம பெருக்காம, வெளிய வச்சிருக்கற போர்டில் இருந்து பின்னாடி இருக்கற லெட்ரீன் வர தண்ணி ஊத்தி சுத்தமா கழுவித் துடை உயர்ந்து கொண்டே போன அவரது குரல் ஒலி டிரெடில் மெஷின் ஓசையைக் கீழே அமுக்கிற்று.

    துருப்பிடித்த பக்கெட்டும், தென்னந் துடைப்பமுமாய் கொண்டம்மா கம்பீரமான உருவத்தோடு வெளிப்பட்டாள். அவள் தனது வழக்கமான பாணியில் மேனேஜரின் மூக்கை உடைப்பது போல எதையும் சொல்லாமல் தன் வேலையில் இறங்கியது கண்டு மற்றவர்கள் சற்று ஏமாந்து போனார்கள். அசுவாரஸ்யமாய் மீண்டும் கம்போஸிங்கைத் தொடர்ந்தார்கள்.

    கொண்டம்மா வெளியே வந்து தெருவை ஒரு அலட்சிய பாவத்தோடு நோட்டமிட்டாள். எப்போதும் போல அவளது பூனைக் கண்களில் ஒரு சோகம் பொதிந்து கிடந்தது.

    நூற்றைம்பது அடி நீளமுடைய அந்தத் தெருவின் ஆறடி நடைபாதையை இருபுறமும் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் ஐந்தடியாகக் குறுக்கி இருந்தன. போக்குவரத்து நெரிசலும் ஜன நடமாட்டமும் மிக்க ஜப்பார் சாகிபு ரோடு எனப்படும் தார்ச்சாலை இவ்வளவு மோசமாக இல்லை. அதன் கிளைச் சாலையாக அமைந்திருந்த இந்த அப்புண்ணித் தெரு மட்டும் எப்போதும் இப்படியேதான் இருந்தது. அச்சகத்தை ஒட்டினாற் போல ஒரு சலூன், இரண்டு வட்டிக் கடைகள், இரு முனைகளிலும் டீக்கடைகள், ஒரு சிறிய ஹோட்டல், லாரி புக்கிங் ஆபீஸ்கள், ஒரு டெய்லர் கடை, ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை. நாலாவிதமான குப்பைகளுக்கும் ஏதுவான கடைகண்ணிகள் நிரம்பிய அந்தத் தெருவில், இடது மூலையில் கடைசிக் கட்டிடமாக அமைந்திருந்தது சந்திரன் அச்சகம். அச்சகத்தை ஒட்டினாற்போல அமைந்திருந்த நீண்ட சுவர் முழுவதிலும் விதவிதமான போஸ்டர்கள். கண்களை உறுத்துகின்ற வண்ணங்கள், மூன்றாந்தர மலையாளப்பட போஸ்டர்களில் போலீசாருக்குப் பயந்து தேவையற்ற இடங்களில் தியேட்டர் பெயர் முதலான விவரங்கள் சொல்லும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    குடலைப் புரட்டி வெளியே கொண்டு வரக்கூடியதான நாற்றம் வியாபித்திருந்தது சுவரோரம் முழுவதிலும். இந்த நாற்றத்தின் கொடுமையைப் பொறுக்க முடியாத குடித்தனக்காரர், சந்திரன் அச்சகத்தின் அருகே இருந்த சுவரில் ‘இங்கே சிறுநீர் கழிப்பவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லப்படும்’ என்று பெரிய எழுத்தில் எழுதியிருந்தார். அப்படிக் கொல்லப்படுவதை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள்தான் அந்தச் சந்திலே நடமாடினார்கள் போல இருந்தது.

    கொண்டம்மா, ஜன்னல் மீது ஏறி நின்றபடி மேலே மாட்டப்பட்டிருந்த அச்சகத்தின் பெயர்ப்பலகையைத் துடைத்தாள். அச்சக வாயிலில் அமைந்திருந்த இரும்பாலான கம்பிக் கதவைச் சுத்தம் செய்தாள். சிறிய நடைபாதையையும் அதற்கு இருபுறமும் அமைந்திருந்த அறைகளையும் சுத்தம் செய்யத் துவங்கினாள். அவளைக் கண்கொத்திப் பாம்பாய்ப் பார்த்தபடி நின்ற புஜங்கராவ் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

    வலது புறம் இருந்த அறை ப்ரூஃப் ரீடருக்காக அமைக்கப்பட்டது. ஆனால், ஒரு மடக்கு நாற்காலியும் டேபிளும் மட்டுமே ப்ரூஃப் ரீடருடைய உபயோகத்துக்கான இடமாய் இருந்தது. அச்சகத்தில் பணி புரிபவர்கள் தங்களுடன் கொண்டு வரும் மதிய உணவுப் பாத்திரங்கள், குடைகள் ஆகியவை ஒரு புறமும், கோணிப் பைகளால் கட்டப்பட்ட பெரிய அளவிலான வெள்ளைத் தாள்கள் ஒரு புறமும், அந்தப் பிரஸ்ஸிலேயே அச்சிடப்பட்ட புத்தகங்களின் வண்ண அட்டைகள் ஒரு புறமும் அறையை அடைத்துக் கொண்டிருந்தன.

    இடதுபுறம் இருந்த மானேஜர் அறையின் கதவு கீழ்ப்பகுதி மரத்தாலும், மேல் பகுதி கண்ணாடியாலும் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே மரத்தால் ஆன பழைய டேபிளின் மீது நீல வண்ண போன். ஜன்னல் ஓரமாக அந்த அறையின் நீளத்தை அடைத்தபடி ஆறடி நீளமுள்ள பெஞ்ச் ஒன்று. பெஞ்சின் நேர் மேலாக ‘வணக்கம். வருக’ என்று கைகூப்பி அழைக்கிற வண்ணப்படம்.

    இரு அறைகளுக்கும் இடைப்பட்ட சிறு நடைபாதையைக் கடந்ததும் பெரிய நீள சதுரமான காற்றோட்டமற்ற இருண்ட ஹால் இருந்தது. அந்த ஹால்தான் அச்சகமாக இயங்கி வந்தது. வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கேஸ்கள் என்ற சின்னஞ் சிறிய புறாக்கூண்டுகள் போன்ற சதுரப்பெட்டிகள் அடங்கிய அமைப்புகள். ஒவ்வொரு சிறுபெட்டிக்குள்ளும் ‘டைப்ஸ்’ எனப்படும் எழுத்துக்கள். டிரெடில் மெஷின்களும், சிலிண்டர் மெஷினும், கேசுகளும் அங்கே பணிபுரிபவர்களின் நடமாட்டத்தைக் கூட சிக்கலாக்கும்படியாக இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன.

    கொண்டம்மா சிரமம் இல்லாமல் எல்லா இடங்களையும் பெருக்கிக் கொண்டே வந்தாள். நிலத்தில் கிடந்த டைப்ஸுகளையும், லெட்டுகளையும் பொறுக்கி எடுத்து தனியாக ஒரு பேப்பருக்குள் பத்திரப்படுத்தினாள்.

    ஆயுத பூஜைன்னா நியாயமா, இந்த கேஸ்களையும் டைப்ஸ், லெட் சக்கை, மிஷினுங்க இதுங்களைத்தான் முக்கியமா சுத்தம் பண்ணணும் என்று பானு சொன்னாள், ராதாவைப் பார்த்தபடியே.

    உடனே ராதா சொன்னாள், பண்ணேன். யாரு ஒன்ன வேணான்னது? குரலில் எரிச்சல் மண்டியது ராதாவுக்கு.

    மூச்சிரைக்க வந்த திவாகர் அக்கா! ஒங்களை வூட்டாண்ட வரச் சொல்றாங்க அம்மா. வெள்ளி சந்தனப்பேலா, தட்டெல்லாம் எங்கிட்ட குடுத்தனுப்ப பயமாயிருக்காம் அவுங்களுக்கு. சாமி படம் மட்டுந்தான் நா எடுத்தாந்தேன் என்றான் கலாவிடம்.

    ம்! பாருங்கடி! இங்க வேலையும் நடந்தாவணும். அங்கயும் ஓடியாவணும். தனியா நா ஒருத்தி மட்டும் போனா அதுக்கும் மொதலாளி திட்டுவாரு. நீயும் வா. கலா ராதாவைத் துணைக்கு அழைத்தாள்.

    இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வேறே நடந்தாகணும் அலுத்துக் கொண்டே கலா சொன்னாள்.

    கமலா வேற ஆறரைக்கெல்லாம் வர்ரேன்னு சொல்லியிருந்தா. வந்தா, இங்கேயே இருக்கச் சொல்லு. இந்த மேட்டரை முடிக்கச் சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு.

    ஹைய்யா! கமலாக்கா வர்றாங்களா? பானு தன் சந்தோஷத்தை உற்சாகமாகத் தெரிவித்தாள். கண்களில் மகிழ்ச்சி ஜொலித்தது.

    ஏங்க்கா! அவுங்க பிரஸ்ல நாளக்கி பூஜைக்கான ஏற்பாடெல்லாம் செய்யமாட்டாங்களா? சுவரில் ஊர்ந்த பல்லியைப் பார்த்தவாறு பானு கேட்டாள்.

    அவுங்க மொதலாளி சுய மரியாதைக்காரரு. பூஜையெல்லாம் பண்ணதில்ல. அப்பிடியே அவரு பண்ணாலும் இவ பண்ணமாட்டா என்று கூறியவாறு கலா அங்கிருந்து புறப்பட்டாள்.

    கமலாவின் ஆரோக்கியமான உடற்கட்டும், தெளிவான பேச்சும், எப்போதும் பளிச்சென்று இருக்கும் முகமும் ராதாவின் மனக்கண்ணில் நிழலாடின. இளம் பெண்களுக்கு ஒரு ஆதர்சமாகத் திகழ்ந்த கமலாவுடன் பேசுவதென்றாலே பானுவுக்கு மிகவும் மகிழ்ச்சி.

    என்ன பானு? கண்ணைத் திறந்து வச்சிக்கிட்டே கனா கண்டுகிட்டிருக்கியா? கமலாவின் கனிவான குரல் வாசற் பக்கம் இருந்து வந்தது.

    பானு பரபரப்படைந்தாள்.

    ஒங்களத்தாங்க்கா நெனச்சுக்கிட்டிருந்தேன். கலாக்காவும், ராதாவும் பூஜை சாமானுங்களை எடுத்தாரதுக்கு மொதலாளி வூட்டுக்கு போயிருக்காங்க. மேட்டர் பாதியிலேயே நிக்குது. ஒங்கள முடிச்சுடச் சொன்னாங்க கலாக்கா.

    கமலாவின் வட்ட முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. கேஸின் அருகே போய் நின்றபடி கமலா பரபரவென்று கம்போஸ் செய்யத் துவங்கினாள். அவளுடைய சுறுசுறுப்பை விழிகள் விரிய வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பானு. பின்னர் மீண்டும் கம்போஸ் செய்ய ஆரம்பித்தாள்.

    அக்கா! ஒங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே உற்சாகமா இருக்கு. நீங்க இந்த பிரஸ்ஸுக்கே வந்துடுங்களேன் ஆர்வத்தினால் கண்கள் படபடக்கக் கேட்டாள் பானு. கமலாவின் பார்வையிலே நேயம் மின்னியது.

    அங்க கொஞ்சம் முக்கியமான வேலைகளை எல்லாம் இழுத்து போட்டுகிட்டிருக்கேன் பானு. அதையெல்லாம் முடிச்சிட்டு அப்புறமா யோசிக்கலாம். கமலா தனது நீண்ட பின்னலை முன்னால் இழுத்து விட்டபடியே சொன்னாள்.

    அக்கா! உங்க பிரஸ்லே ஆயுத பூஜை எல்லாம் போடறதில்லியாமே?

    ஆயுதங்கள் பூஜை போடறதுக்கில்லம்மா. பானு பேச்சை நிறுத்தி விட்டுக் குனிந்து தன் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டாள். ஒரேயடியா கால் உளையுதக்கா. சாயங்காலம் ஆக ஆக ஜாஸ்தியாயிருது.

    கமலா பானுவைப் பரிவோடு பார்த்தாள்.

    அரைமணி நேரம் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணறதையே ஒரு பெரிய கம்ப்ளெயிண்டாச் சொல்றாங்க. நாம்ப என்னடான்னா ஒரு நாளைக்கு ஒம்பது மணி நேரம், பத்து மணி நேரம் நின்னபடியே வேலை பார்க்குறோம். அப்புறம் ஏன் காலில் குடைச்சலும், வலியும் வராது.

    என் சித்தப்பா டிராஃபிக்லே போலீசா இருக்காரு. அவர் கூட சொல்லுவாரு, எங்களாலேயே மூணு மணிக்கு ஒரு தரம் ஷிப்டு மாத்தலைன்னா சமாளிக்க முடியலே. நீங்கள்ளாம் எப்பிடிதான் ஒரு நாளைப்போல வருசம் பூரா பிரஸ்ஸுங்கள்ல நின்னபடியே வேலை பாக்கிறீங்களோன்னு என்றாள் பானு.

    சில கணங்கள் மெளனமாய் இருந்துவிட்டு கமலா சொன்னாள், வசதி செஞ்சு குடுத்தா வேல நெதானப் பட்டுடும்னு நெனக்கிறாங்க. உழைக்கறவங்க செளகர்யமாக இருந்தா திறமை அதிகரிக்கும்னு அவுங்க தெரிஞ்சிக்கற காலம் வரும்.

    2

    "சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

    பிரசன்ன வதனம்."

    கணீரென்ற குரலில் ஸ்தோத்திரம் சொல்லியபடி வழக்கம் போல ஆயுதபூஜையை நடத்திக் கொண்டிருந்தார் சாஸ்திரிகள். புங்க மரத்தின் அருகே அமைந்திருந்த சிறிய சந்தின் முனையில் இருந்த ‘சந்திரன் அச்சகம்’ என்ற நீலவண்ண பெயர்ப் பலகை சாமந்திப் பூச்சரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளே நீள வாக்காக இருந்த இயந்திரங்களின் மீது சியாமளா லாகவமாக சந்தனத்தைத் தெளித்துக் கொண்டிருந்தாள். கனகதுர்க்கா தெளிபட்ட சந்தனத்தின் மையத்தில் குங்குமத்தை வெகு சிரத்தையாக வைத்துக் கொண்டிருந்தாள்.

    ஆபீஸ் அறையில் இருந்த மேஜை, தற்காலிக பூஜை மேடையாக மாறியிருந்தது. பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி படங்கள், டைப்ரைட்டரை இடமாற்றம் செய்திருந்தன. எதிரே பொரி, கடலை, பழ வகைகள், ஊதுவத்தி எல்லாம் வாழையிலைகளில் அழகாக வைக்கப்பட்டிருந்தன.

    ஓம் ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராஜ்நி, ஸ்ரீமத் சிம்மாசனேச்வர்யை. சாஸ்திரிகள் கையில் இருந்த மணியால் ஒலியை எழுப்பியவாறே சுவாமி படங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டினார். கற்பூர மணம் எங்கும் பரவிற்று.

    என்னப்பா! எல்லோரும் வந்துட்டாங்களா? மேனேஜர் விநாயகத்தின் குரல் கேட்டதும் அச்சகத்தின் உள்ளிருந்த சியாமளாவும், கனகதுர்க்காவும் முகத்தில் பரபரப்புடன் வெளியே வந்தனர். அந்தச் சிறிய அறையில் ஏற்கெனவே பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த மற்ற பெண்களோடு தாங்களும் சேர்ந்து நின்று கொண்டார்கள். அச்சக உரிமையாளர் திருநீலகண்டனும் அவரது மனைவி பங்கஜமும் ராமகிருஷ்ண சாஸ்திரிகளுக்கு அருகே நின்றனர். நகைகளை. ஏராளமாகப் பூட்டிக் கொண்டு பட்டுச் சரிகையில் பளபளத்த பங்கஜத்தை அச்சக ஊழியர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1