Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudivedu
Mudivedu
Mudivedu
Ebook129 pages1 hour

Mudivedu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thilagavathi, The first women IPS officer from tamilnadu. she is also an exceptional Tamil novelist, written over 100 novels, 100+ short stories, 50+ Articles transulated from verious languages, Readers who love the subjects social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Mudivedu

Read more from Thilagavathi

Related to Mudivedu

Related ebooks

Related categories

Reviews for Mudivedu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudivedu - Thilagavathi

    8

    1

    வெற்றியின் சூட்சுமம்

    நீங்கள் எதைச் செய்யப் பயப்படுகிறீர்களோ அதைச் செய்வதுதான் மனவலிமை!

    - எட்டி ரிக்கன் பார்க்கர்

    1955, டிசம்பர் மாதம் முதல் தேதி.

    அந்தப் பெண் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காக ஒரு பஸ்ஸில் ஏறுகிறாள். நாள் முழுக்க வேலை பார்த்தக் களைப்பு. ஓர் இருக்கையில் போய் அமர்கிறாள். பஸ் கிளம்புகிறது.

    அன்றைக்கு அந்த பஸ்ஸில் ஏறிய பெண் ஒரு கறுப்பினப் பெண்.

    அது அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலிருந்த அலபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரி நகரம். அந்த நாட்களில் அமெரிக்காவில் இனப்பாகுபாடு மிக மோசமாக இருந்தது. ‘நீக்ரோ’ எனப்படும் கறுப்பின மக்கள், அமெரிக்காவில் இருந்த வெள்ளை இனத்தவர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

    கறுப்பினக் குழந்தைகள் வெள்ளையர்கள் படிக்கும் பள்ளிகளில் படிக்க முடியாது; ஓட்டல்களில் சரிக்குச் சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாது; பேருந்தில் தனி இடம் - அதுவும் வெள்ளையர்கள் வந்துவிட்டால் எழுந்து இடம் கொடுத்துவிட வேண்டும். இப்படி ஏகப்பட்ட கொடுமைகள் கறுப்பின மக்களுக்கு நடந்து கொண்டிருந்தன.

    ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. நான்கு வெள்ளையர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்கள் அமர்வதற்கு இடம் தேடினார்கள். இருக்கைகள் நிரம்பியிருந்தன. நால்வரும் அந்தப் பெண் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகே வந்தார்கள்.

    ம்...! எந்திரிங்க! ஒரு வெள்ளையன் குரல் கொடுத்தான்.

    அந்தப் பெண்ணைத் தவிர மற்ற மூவரும் பயத்தோடு எழுந்து கொண்டார்கள். அவளுக்கு எழுந்திருக்க மனமில்லை. அசதியும், களைப்பும் அவள் உடலை வாட்டிக்கொண்டிருந்தன.

    கூடவே, ‘ஏன் எழுந்திரிக்க வேண்டும்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வெள்ளையர்களுக்காக ஒடுங்கிப்போக வேண்டும்?’ என்ற கேள்வியும் அவளுக்குள் எழுந்தது.

    அவள் அந்தக் கணம் ஒரு முடிவெடுத்தாள்.

    ‘இன்றைக்கு என்ன நடந்தாலும் இருக்கையை விட்டு எழுந்திரிக்கக் கூடாது.’

    சொல்றோம்ல... எந்திரி! இன்னொரு வெள்ளையன் அதிகாரக் குரலில் மிரட்டினான்.

    அந்தப் பெண் பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

    பேருந்தில் இருந்த அத்தனைபேரும் ஆச்சரியத்தோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

    வெள்ளையர்கள் சத்தம் போடுவதைப் பார்த்து டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். அந்தப் பெண்ணின் அருகே வந்தார்.

    ஏய்! எவ்வளவு நேரமா சொல்லிக்கிட்டு இருக்காங்க, எந்திரி!

    முடியாது!

    அந்தப் பெண் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

    ஏய்! என்ன வெளாடுறியா? ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சிடு!

    முடியாது அந்தப் பெண் கைகளைக் கட்டிக்கொண்டு உறுதியான குரலில் சொன்னாள்.

    டிரைவர் கோபத்தோடு தன் இருக்கைக்குப் போனார். பஸ்ஸைக் கிளப்பினார். பஸ் அருகேயிருந்த ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் போய் நின்றது. போலீஸ்காரர்கள் வந்து அந்தப் பெண்ணைத் ‘தரதர’வென்று இழுத்துப் போனார்கள். அவள் மீது வழக்குப் பதிவு செய்தார்கள்.

    ‘அமைதிக்குப் பங்கம் விளைவித்தாள்’ என்று அந்தப் பெண்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

    அந்தப் பெண்ணின் பெயர் ரோஸா பார்க்ஸ் (Rosa Parks). இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுக்கத் தீயாகப் பரவியது. அவளுக்கு ஆதரவாகத் திரண்ட கறுப்பின மக்கள் ஆங்காங்கே கூடிக்கூடிப் பேசினார்கள். நீதிமன்றம் ரோஸா பார்க்ஸ் செய்தது தவறு என்று கூறி பதினான்கு டாலர் அபராதம் விதித்தது.

    இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாத கறுப்பின மக்கள் பேருந்துகளை ஒருநாள் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

    டிசம்பர் 5. அமெரிக்காவில் வழக்கம்போல் பேருந்துகள் ஓடின. ஆனால், கறுப்பின மக்களில் ஒருவர்கூட பேருந்தில் ஏறவில்லை. வெள்ளையர்களை மட்டும் சுமந்தபடி பேருந்துகள் அமெரிக்கா முழுக்க வலம் வந்தன.

    அதேநாள் மாலை. ஒரு தேவாலயத்தில் கறுப்பின மக்களின் பெருங்கூட்டமொன்று கூடியது. அன்றைக்கு நடந்த பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் முழு வெற்றி. அடுத்து என்ன செய்வது? இனியும் இப்படி கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் உமிழும் துவேஷத்தைச் சகித்துக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா?

    நமக்குப் பேருந்தில் சம உரிமை கிடைக்கும்வரை பேருந்துகளை புறக்கணிப்போம் என்ற தீர்மானத்துக்கு வருகிறார்கள் கறுப்பின மக்கள். பேருந்து புறக்கணிப்புக் குழுவின் தலைவராக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    அமெரிக்க கறுப்பின மக்கள் நடத்திய அந்த ‘பேருந்து புறக்கணிப்புப் போராட்டம்’ 381 நாட்கள் நடந்தன.

    வேலைக்குப் போகிறவர்கள், கல்லூரிக்கும் பள்ளிக்கும் போகிற மாணவ, மாணவிகள் எல்லோரும் நடந்தே போனார்கள். பத்து கிலோ மீட்டர், இருபது கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் கூட நடந்தே போனார்கள். வயதானவர்கள் கூட தங்களுடைய சிரமத்தைப் பொருட்படுத்தாமல் பேருந்துகளைப் புறக்கணித்தார்கள்.

    ‘சுதந்திரத்திற்கான நடை’ என்று உலகம் முழுவதும் பேசப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

    1956, டிசம்பர் 21. அமெரிக்க உச்ச நீதிமன்றம், கறுப்பின மக்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

    இந்தச் சம உரிமை கிடைப்பதற்கு மூல காரணம் யார்? சந்தேகமே வேண்டாம். ரோஸா பார்க்ஸ்தான்.

    அன்றைக்கு மட்டும் ரோஸா பார்க்ஸ் இருக்கையைவிட்டு எழுந்திருந்தால், கறுப்பின மக்களுக்கு சம உரிமை கிடைக்க வெகுகாலம் ஆகியிருக்கும். சரியான நேரத்தில், மிகச் சரியான சமயத்தில் ரோஸா பார்க்ஸ் எடுத்த முடிவு எத்தனையோ லட்சம் கறுப்பின மக்களைத் தலைநிமிர வைத்தது என்றால் அது மிகையில்லை .

    முடிவெடுப்பது என்பது ஒரு கலை. இப்படி யாராவது சொன்னால் நம்பாதீர்கள். முடிவெடுப்பது ஒன்றும் பெரிய மாய வித்தையில்லை. அதேசமயம், ‘பூவா? தலையா?’ போட்டுப் பார்க்கிற சமாசாரமுமில்லை. எந்த விஷயத்தையும் கொஞ்சம் மெனக்கிட்டால், சில முன் தீர்மானங்களோடு அணுகினால் எளிதாக முடிவெடுத்துவிடலாம்.

    திறமையிருக்கிறது, தகுதியிருக்கிறது. அப்படியும் பலரால் வெற்றியை எட்டிப் பிடிக்க முடிவதில்லை ஏன்?

    காரணம், அவர்களுக்கு முடிவெடுக்கத் தெரிவதில்லை அல்லது சரியான முடிவை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டார்கள்.

    அப்படியானால் முடிவெடுப்பதென்பது அவ்வளவு முக்கியமான ஒன்றா என்ன? நிச்சயமாக.

    எப்படி?

    எனக்கு சின்ன வயசுலயிருந்தே பெரிய நடிகனாகணும்னு ஆசை. ஆனா, எங்க அப்பா என்னை விடலை. இதோ... இங்க பி.டபிள்யூ.டி.யில ஆபீஸரா குப்பை கொட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன்.

    இது ஒரு மனிதரின் புலம்பல். தவறு யார் மீது? நிச்சயமாக அவர்மீதுதான். நடிகனாக வேண்டும் என்ற லட்சியம் மட்டும் இருந்தால் போதாது. சட்டென்று எது முக்கியம் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்க வேண்டும்.

    அவர் மட்டும் ‘நடிகனாவது’ என்ற முடிவில் தீர்க்கமாக இருந்திருந்தால் அவருடைய தந்தையே வளைந்து, வழிவிட்டிருப்பார். சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்காமல் சூழ்நிலையையும் மனிதர்களையும் குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை.

    அவர் மட்டுமல்ல, நம்மில் பலபேர் இப்படித்தான் முடிவெடுக்கத் தெரியாமல் வழிமாறிப் போகிறோம்.

    மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் நிறைவேறாமல் போன ஆசை, லட்சியம் என்று ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். அதற்கான காரணங்களைக் கூர்மையாக அலசினால் சரியான முடிவெடுக்காததுதான் காரணம் என்பது புரிந்துபோகும்.

    இந்த நூலில் முடிவெடுக்கும் வழிமுறைகளை; அதற்கான முக்கியத்துவத்தை, முடிவெடுப்பதால் வரும் பயன்களை, முடிவெடுக்கும் வழிமுறைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

    ஒரு கிராமத்தில் ராமு, சோமு என்று இரண்டு பேர் இருந்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1