Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minmini
Minmini
Minmini
Ebook212 pages1 hour

Minmini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction written By P.T.Saamy
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466435
Minmini

Related to Minmini

Related ebooks

Related categories

Reviews for Minmini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minmini - P.T.Saamy

    25

    1

    பூசாரிக் கிழவியான கன்னியம்மாவுக்கு ஆவேசமான வெறி வந்துவிட்டது. கொடுவாளைக் கையில் தூக்கிக் கொண்டு ‘நீலி...’ என்று ஓங்காரக் கூச்சல் போட்டாள்.

    பலி கொடுப்பதற்குத் தயாராகக் கொழுத்த ஆடுகள், செஞ்சேவல் - கோழிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    மோகினிப்பாறை என்ற கிராமத்தின் வடக்கு எல்லையில் சக்தி வாய்ந்த ஒரு தேவதையின் கோயில் இருந்தது. அதுதான் நடுக்காட்டு நீலி.

    அந்த தேவதைக்கு இரத்தப்பலி கொடுக்கவே இப்படி ஒரு நள்ளிரவு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து அங்கே கூடியிருந்தார்கள். ஆடு கோழிகளை வெட்டிப் பலி கொடுக்கும் காட்சியைப் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் கொண்டாட்டமாக இருந்தது.

    அது மோகினிப் பாறைக் கிராமத்து இளைஞனான மோகனின் கைங்கர்யம். லாட்டரிச் சீட்டில் பத்து லட்சம் பரிசு பெற்றதற்காக ஆடு, கோழிகளைக் காவு கொடுக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

    மோகன் வெள்ளை உள்ளம் படைத்தவன், சூதுவாது எதுவுமே அவனுக்குத் தெரியாது. கள்ளங்கபடம் தெரியாமலே வாழ்ந்துவிட்ட அவன் இரண்டு ரூபாய் கொடுத்துப் பொங்கல் குலுக்கலுக்காக ஒரே ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியிருந்தான்! எந்தப் பரிசு கிடைத்தாலும் நீலிக்கு விழா எடுத்து இரத்தப்பலி கொடுப்பதாக வேண்டுதல் செய்திருந்தான்

    இன்னும் சில நிமிடங்களில் அந்த வேண்டுதல் நிறைவேறப் போகிறது. கட்டிப் போடப்பட்டிருக்கும் ஆடுகளின் தலை வெட்டி வீழ்த்தப்படும். பீறிட்டுப் பாயும் இரத்தத்தைக் கன்னியம்மா கிழவி வாய் வைத்து உறிஞ்சிக் குடித்துப் பலி எடுத்துக் கொள்வாள்.

    அதன் பிறகு ஒவ்வொரு சேவலாகத் தூக்கி வந்து கழுத்தைக் கடித்து முறித்து இரத்தம் குடிப்பாள். நீலிக்கும் இரத்த அபிஷேகம் செய்வாள்.

    பரம ஏழையாக இருந்து பத்து லட்சம் ரூபாய்க்கு அதிபதியாகி விட்ட மோகன், பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான்.

    நீலியின் அருளால்தான் பத்து லட்சம் ரூபாய் தனக்குக் கிடைத்திருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.

    பக்கத்தில் அவனுடைய அத்தை மகளான சாந்தா நின்று கொண்டிருந்தாள். துடுக்குக்காரியான அவள், கிராமத்து இளைஞர்களின் கனவுக் கன்னி. எடுப்பான உடல் பொலிவாலும், கொல்லும் சிரிப்பாலும் ஆண்கள் என்று சொல்லிக் கொள்ளும் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டாள்.

    அவள் திடீர்ப் பணக்காரனான மோகனைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாளே என்பது ஒவ்வொருவருக்கும் பொறாமையாக இருந்தது.

    ஏக்கத்தால் நெஞ்சு வெடித்து விடுவதைப்போல் பெருமூச்சு விட்டவர்களும் உண்டு.

    சாந்தா கூந்தல் நிறைய மல்லிகைப் பூக்களைச் சூடி இளம் சிவப்பு நிறத்தைக் கொண்ட பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள்.

    அவளுடைய பெரிய கண்கள் சதாவும் ‘துரு துரு’வென்று சுழன்று கொண்டே இருந்தன.

    சாந்தா அழகியாக இருந்தபோதிலும் அவள் பக்கத்தில் இளவட்டங்கள் நெருங்கிப் பார்க்காததற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

    யாராவது வாலாட்டினால் அந்த வாலை ஒட்ட நறுக்கிக் கையில் கொடுத்து அனுப்பி விடுவாள்!

    ஆனால், மோகன் மட்டும் அதற்கு விதி விலக்கு. தன் அழகை அவன் ஆசைதீரப் பருக வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவனையே சுற்றி வலம் வந்து கொண்டிருப்பாள்.

    இன்றிரவு அவள் பொது இடமான கோயிலுக்கு வந்து விட்டதால், தடையின்றி அவளுடைய உடலழகை மற்றவர்கள் ரசிக்கலானார்கள்.

    ஆனாலும், ஒரு ஜாக்கிரதை எல்லோருக்கும் இருந்தது. ‘மூஞ்சியையும் மொகரையையும் பாரு... கருங்குரங்கு!’ என்று கூறிக் கன்னத்தில் அறைந்து அவள் அவமானப்படுத்தி விட்டால் என்ன செய்வது?

    மோகன் தன்னைத் திடீர்ப் பணக்காரனாக்கிய நடுக்காட்டு நீலியைத் தரிசித்தவாறு மெய்மறந்து நின்றிருந்தான். பக்கத்தில் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய முறைப்பெண் ஒருத்தி நின்று கொண்டிருக்கிறாளே என்ற கவனம்கூட அவனுக்கு இல்லை.

    கொம்புகள் முழங்கின. தாரை தப்பட்டைகள் அடித்து நொறுக்கப்பட்டன. நையாண்டி மேளம் வாசிக்கப்பட்டது.

    பூசாரி கன்னியம்மா கண்களை முட்டைபோல் உருட்டிக் கொண்டு, நீலித் தாயே... என்று அடிக்கொரு தரம் கூவிக் கொண்டிருந்தாள்

    அவள் கொடுவாளைக்கொண்டு ஆட்டை வெட்டுவதற்குத் தயாரானாள்.

    ஆடுகள் மரண பீதியுடன் அலறிக் கட்டுத்தறிகளில் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றன - முரண்டன.

    ஆனால், பாவம்! உறுதியான கயிற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்ததால் அவை மீள முடியவில்லை. ஆடிக்கொண்டிருந்த பூசாரி கன்னியம்மா கொடுவாளைப் பீடத்தில் போட்டுவிட்டுப் பெரிய சேவல் ஒன்றைத் தூக்கினாள். இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு அந்தச் செஞ்சேவல் கூவியது. கடுகு பொரிவதைப்போல் மேளங்களின் வாசிப்பு. தாயே... நீலி... பலியை ஏற்றுக்கொள்! என்று கூவிய கிழவி, குபீரென்று கோழியின் தலையையும் கால்களையும் இழுத்துப் பிடித்துக்கொண்டு ‘நறுக்’கென்று கழுத்தில் கடித்தாள். கடித்த இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டு அடித்தது.

    உடனே அந்தக் கிழவி, இளநீர் குடிப்பதைப்போல் கழுத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வாயினால் இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தாள். இரத்தம் வயிற்றினுள் செல்லச் செல்லப் பேயாகச் சிரித்தாள்.

    கூடியிருந்த கிராமத்து மக்கள் பக்திப் பெருக்குடன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

    கோழியின் உயிர் ஒடுங்கிப் போனதும், கிழவி அதைத் தூக்கி எறிந்துவிட்டு, கொக்கரித்துக் கொண்டிருந்த இன்னொரு கோழியைத் தாவிப் பிடித்தாள்.

    திடீரென்று ஓர் ஊளைச்சத்தம் அங்கே எழுந்தது! அதைத் தொடர்ந்து தலைவிரி கோலமாய்ச் சாந்தா பயங்கரமாக ஆடத் தொடங்கினாள்!

    அழகி சாந்தா மீது ‘சாமி’ வந்து விட்டது! பூசாரிக்கிழவியான கன்னியம்மா ஆடுவதை நிறுத்தினாள்! கையில் இருந்த சேவல் தானாகத் துள்ளி விழுந்தது! பிரமை தட்டி விட்டதைப் போலானாள்!

    கூடியிருந்த மக்கள் மலைத்து போய் நின்று இருந்தார்கள். சாந்தா மேல் இப்படியொரு ‘சாமி’ வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது! மோகன் திகைத்துப் போய் நின்றான்.

    அவள் மற்றவர்களைத்தான் ஆட்டி வைத்திருக்கிறாளே தவிர, அவள் ஒரு போதும் ஆடியது இல்லை.

    சாந்தா முன்னால் பாய்ந்து சென்று, பீடத்தில் கிடந்த கொடுவாளைத் தூக்கினாள். அதைத் தலைக்கு மேல் ஓங்கியவாறு ருத்திரதாண்டவ நடனம் போல் தாவித் தாவி ஆடினாள்.

    அப்போது...

    இளமைக்குப் பராக்குக்கூறும் சதைக்கோளங்கள் குலுங்கின. பின்னழகு பார்த்தவர்களின் கண்களில் உண்டாகியிருந்த பக்திப் பரவசத்தைத் துரத்தியது.

    அழகான ஒரு பெண் ஆடினால் இளமைப் பொலிவு இன்னும் எடுப்பாக அல்லவா விளங்கும்.

    அவள் ஆட்டம் போடுவதைக் கண்டு நிலை தடுமாறிப் போன பூசாரிக் கிழவி, ‘குய்யோமுறையோ’ என்று ஓலமிட்டு ‘அபசாரம்! அபசாரம்!’ என்று கத்தினாள்.

    இரத்தம் குடித்திருந்த அவளுடைய வாய் பயங்கரமாகத் தவளை போல் பிளந்தது.

    குபீரென்று ஒரு துர்வாடை. அழுகிப் போன பிணநெடி. இவளைப் பிடித்துக் கட்டுங்கள். நான் நடுக்காட்டு நீலியம்மா பேசுகிறேன்! என்று கிழவி ஆர்ப்பரித்தாள்.

    துணிந்தவர்கள் கொடுவாளை ஓங்கியபடி ஆடும் சாந்தா பக்கமாக நெருங்கிப் பார்த்தார்கள்.

    ‘ஏய்!’ என்று ஒரு கூச்சல்தான் சாந்தா எழுப்பினாள். பத்தடி தொலைவில் போய் அவர்கள் விழுந்தார்கள்.

    ஏய்! மூடர்களே! எனக்கு உயிர்ப்பலி வேண்டாம். ஊரை ஏமாற்றும் இந்தப் பொல்லாத கிழவியை ஊரை விட்டே துரத்துங்கள்.

    சாந்தா, சொன்ன வார்த்தைகள் கிழவியை ஒரு கணம் பட்டமரம் போலாக்கி விட்டன. என்ன செய்வது என்று தோன்றாதவளாக அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

    அந்த இடைவெளியில் சாந்தா கட்டிப் போடப்பட்டிருந்த ஆடுகளின் கயிற்றை அறுத்து விடுவித்தாள். ஆடுகளையும் சேவல்களையும் துரத்தவும் செய்தாள்.

    கூடியிருந்தவர்கள் செயலற்றவர்களாக நின்று கொண்டிருந்தார்கள். சாந்தா உடம்பில் நீலிதான் புகுந்து ஆட்டுகிறாளோ என்ற எண்ணம் - பயம் வேறு.

    பச்சை இரத்தம் பக்திக்கு உகந்தது அல்ல. இனியும் இதைப்போல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து உங்கள் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள்.

    சாந்தா தன் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட்டதும், பூசாரிக் கிழவிக்கு என்றைக்குமே இல்லாத அளவுக்கு ஆவேசம் வந்துவிட்டது.

    அடியே... பதரே! இந்த நீலியிடமா உன் விளையாட்டு! உன்னை என்ன செய்கிறேன், பார்.

    அவள் இப்படிக் கூவிவிட்டு, பிரமாண்டமான நீலியின் கையில் இருந்த திரிசூலத்தை எடுத்துக்கொண்டு சாந்தா மீது பாய்ந்தாள்.

    சாந்தா சற்று விலகி, காலால் இலேசாகத்தான் தட்டி விட்டாள்.

    அவ்வளவுதான்! எலும்புக் கூடு போலிருந்த பொக்கை வாய்க் கிழவி கொன்று போடப்பட்டிருந்த சேவல் கோழியின்மீது போய் விழுந்தாள்.

    நிலைமை மோசமாகி விட்டதை உணர்ந்த மோகன், அதிகம் கவலையடைந்து, என்ன சாந்தா இதெல்லாம்? என்று அதட்டி, கிழவியின் குச்சுமட்டை போன்ற கையைப் பிடித்துத் தூக்கி விட்டான்.

    சாந்தாவின் சீற்றம் இன்னும் அடங்கவில்லை. அவள் யாரிடமும் எதுவும் பேசாமல் வேகமாக நடக்கலானாள்.

    அவளுக்கு மூளை குழம்பிவிட்டதோ என்று அஞ்சிய மோகன், உடனே பின் தொடர்ந்து வந்தான்.

    கோவிலைச் சுற்றியிருந்த கும்பல் கிழவியை அங்கேயே விட்டு விட்டுக் கலைந்தது.

    மோகன், சாந்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, என்ன சாந்தா, உனக்கு என்ன வந்தது? ஏன் அப்படி நடந்து கொண்டாய்? நடுக்காட்டு நீலியின் அருளால்தான் எனக்குப் பத்து லட்சம் ரூபாய் கிடைத்தது. நீ பலி கொடுக்க விடாமல் தடுத்து விட்டாயே! என்று வருத்தப்பட்டான்.

    அந்த முரட்டுப் பசுவை அடக்கும் ஆற்றல் அந்தக் காளையிடம் மட்டுமே இருந்தது.

    அவள் சிறிது நேரம் கழித்து, உயிர்ப் பலி கேட்கும் தேவதையே நமக்கு வேண்டாம்! என்று சொன்னாள்.

    நடுக்காட்டு நீலி பொல்லாதவள்! என்றான், அவன் பயந்து கொண்டே.

    நானும் பொல்லாதவள்தான். கதறக் கதறப் பலி கொடுக்கப்பட வேண்டிய வாயில்லாத உயிர்களை நான் விடுவித்து விட்டேன். அந்த மன நிம்மதி ஒன்றே எனக்குப் போதுமானது.

    இப்படிச் சொன்ன அவள் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி வேகமாக நடக்கலானாள்.

    அவன் திகைத்துப் போய் நின்றான். திட்டமிட்டுத்தான் அவள் இப்படியெல்லாம் செய்திருக்கிறாள் என்பதில் ஐயமில்லை.

    அதே நேரத்தில் அவனுக்குப் பயமாகவும் இருந்தது. தெய்வக் கோபத்தின் விளைவு என்னவாகுமோ என்று நினைத்துப் பீதியுற்றான்.

    உயிர் வதையைத் தடுத்து ரத்தப் பலியை நிறுத்தி விட்டோம் என்ற மன நிம்மதியுடன் சாந்தா நடந்து கொண்டிருந்தபோது...

    சாந்தா! நில், என்ற ஒரு குரல் கேட்டது.

    அவள் நின்று குரல் வந்த திசையில் பார்த்தாள். அது என்ன? ‘மினுக் மினுக்’ என்று விட்டு விட்டு மினுமினுக்க வரையப்பட்டதைப் போன்ற மனித உருவம் ஒன்று பறந்து வந்து கொண்டிருந்தது. பறக்கும் மின்மினியா? நினைத்ததும் பீதியொன்று அவளைத் தாக்கியது.

    அது வடிவ அமைப்பில் மனிதனைப் போல் இருந்த போதிலும், நிச்சயமாக மனிதன் அல்ல. ஆனால் அது மனித நிழல்தான்!

    கண்ணுக்குப் புலப்படாத மின் விளக்குகள் சுழன்று கொண்டே விட்டுவிட்டு மின்னுவதைப் போன்ற காட்சி

    நடுக்காட்டு நீலிதான் அதிசயமான மின்மினியாக மாறிப் பறந்து வருகிறாளா?

    அந்த மின்மினி பழி தீர்த்து விடுமோ என்று பயந்ததும் அவள் ஓட எத்தனித்தாள்.

    2

    மின்னல் போல் ஊடுருவிப் பாய்ந்து சென்ற சாந்தா ஓர் இடத்தில் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். ஐயோ... மின்மினி! - மின்னி மின்னி ஒளி சிந்தும் அந்த மின்மினி மனிதனைப் போன்ற தோற்றத்தில் காட்சியளித்தது. அதற்கு முகமோ, உடலோ இல்லை.

    அவள் பீதியுற்றவளாய் மறுபடியும் ஓடினாள். அது விசித்திரமான ஆட்கொல்லி மிருகமாக இருக்கக் கூடுமோ என்று நடுங்கினாள்.

    சாந்தா துணிச்சல் நிறைந்தவள்தான். தனித்து நின்று எத்தனை பேர்களை

    Enjoying the preview?
    Page 1 of 1