Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhalaga Nee Varavendum
Nizhalaga Nee Varavendum
Nizhalaga Nee Varavendum
Ebook128 pages44 minutes

Nizhalaga Nee Varavendum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘நிழலாக நீ வரவேண்டும்’ என்ற இந்த நாவலில் ஹாஸ்டலில் தங்கி தனியாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரும் பிரச்சினைகள், இன்னல்கள், ஆபத்துகள் ஆகியவற்றை விளக்கியுள்ளேன். நாவலின் நாயகியோட அக்காளும் அவ்வாறு ஓர் இக்கட்டில் சிக்கிக்கொண்டு உயிர் துறக்கிறாள். அவள் சாவில் சந்தேகம் கொண்டு தங்கையும் அவளைப் போன்றே ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போகிறாள். பல அடுக்கடுக்கான சோதனைகளுக்கு ஆளாகும் அவளால் தன் அக்காவின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததா? படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580175011119
Nizhalaga Nee Varavendum

Read more from Malarmathi

Related to Nizhalaga Nee Varavendum

Related ebooks

Reviews for Nizhalaga Nee Varavendum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhalaga Nee Varavendum - Malarmathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிழலாக நீ வரவேண்டும்

    Nizhalaga Nee Varavendum

    Author:

    மலர்மதி

    Malarmathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/malarmathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    அந்த மகளிர் கல்லூரியின் மகிழ மரத்தடியில் நித்யாவின் வருகைக்காகக் காத்திருந்தாள் அனிதா.

    துள்ளலாய் வந்து அவளருகில் அமர்ந்தாள் நித்யா.

    வாடீ... இன்னைக்கு டெஸ்ட் இருக்கறது தெரியாதா? இவ்வளவு லேட்டா வர்றே? காலேஜுக்குள்ளாறே இருக்கிற ஹாஸ்டல்லேர்ந்து வர்றதுக்கே இவ்வளவு நேரமா? என்னைப் பார், ‘டே ஸ்காலரா’ இருந்தும்கூட உனக்கும் முன்னாடி வந்திருக் கேன். என்று அவளை வரவேற்றாள் அனிதா.

    வந்ததும் வராததுமாக ஒரு பெரிய கொட்டாவி விட்டாள் நித்யா.

    ராத்திரி ரெண்டு மணிவரை படிச்சுக்கிட்டிருந்தேண்டி. அதான் இப்ப தூக்கமா வருது. – சொல்லிக்கொண்டே மீண்டும் ஒரு கொட்டாவி விட்டாள் நித்யா.

    ராத்திரி பத்து மணிக்கெல்லாம் தூங்கிடணும். காலைல சீக்கிரமா எழுந்து படிக்கணும். அதிகாலைல எழுந்து படிக்கிற படிப்புத்தான் மனசுல நிக்கும்னு என் அக்கா அடிக்கடி சொல்லுவா...

    ஆரம்பிச்சுட்டியா, உன் அக்கா புராணத்தை? என அலுத்துக்கொண்டாள் நித்யா.

    ஆமாண்டி நான் சொல்றதெல்லாம் உனக்குப் புராணமாத்தான் இருக்கும். கொஞ்சம் நேரத்தைப் பாரு...

    வாட்சைப் பார்த்தவள், ஐயையோ...கிளாஸ் ஆரம்பிக்கப்போகுது வாடீ... என்றவாறு அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை நோக்கி விரைந்தாள் நித்யா.

    ஏண்டி, அனிதா... நீ எப்பப்பார் உன் அக்காவைப் பத்தியே பேசிக்கிட்டிருக் கியே, அக்கான்னா உனக்கு அவ்வளவுப் பிரியமா என்ன? என்று கேட்டாள் நித்யா.

    நான் இப்ப இந்த காலேஜ்ல பி.எஸ்.ஸி. படிச்சுக்கிட்டிருக்கேன்னா அது என் அக்காவோட தயவாலத்தான். என் அக்காதான் எனக்கு அம்மா, அப்பா எல்லாம்.

    அது சரிடி, உன் அம்மா அப்பா இறந்த பிறகு உன்னை எடுத்து வளர்த்தது உன்னோட அத்தையும், மாமாவும்தானே?

    நான் மறுக்கலை. அவங்களோட ஆதரவும் எனக்கு இருக்கு. ஆயிரம்தான் இருந்தாலும் கூடப் பிறந்தவங்களோட பாசம் வித்தியாசமாத்தான் இருக்கும்.

    தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்கறியா?

    இப்ப நீ ஆடாதே... என்று நித்யாவை அடக்கிவிட்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள் அனிதா.

    அனிதாவின் அக்கா அம்ருதா சென்னையில் மகளிர் விடுதி ஒன்றில் தங்கி யிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாள். நல்ல சம்பளம். மாதத் தில் ஒரு முறை இரண்டு நாள் விடுப்பில் ஊருக்கு வருவாள். அனிதாவுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். சினிமா, பார்க், ஷாப்பிங் என்று அக்காவுடன் சேர்ந்து கலக்குவாள்.

    அம்ருதாவும், அனிதாவும் குழந்தைகளாக இருந்த காலத்திலேயே ஒரு சாலை விபத்தில் அவர்களுடைய பெற்றோர் பலியாகிவிட்டனர். அப்போதிலிருந்து

    அவர்களை எடுத்து வளர்த்து ஆதரவு கொடுத்து வருபவர்கள் அவர்களுடைய அத்தை ஜெகதாம்பாளும், மாமா வேதாசலமும்தான்.

    அக்கா அம்ருதா என்றாலே அனிதாவுக்கு ஒரு பாசமும், பயமும் கலந்த மரியாதை. அம்மா ஸ்தானத்தில் அவளை வைத்திருந்தாள்.

    நித்யாவும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் அடிப்பாள். அது பற்றி அனிதா கண்டுக்கொள்ளவேமாட்டாள். அக்கா-தங்கை பாசம் மட்டும் வலுவாகவே இருந்தது.

    வழக்கம்போல் அடுத்த வாரம் வரப்போகும் அம்ருதாவோடு எங்கெங்கே போவது? என்னென்ன வாங்குவது? என்கிற யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அனிதா.

    ஆனால்...

    முதல் வகுப்பு முடிந்த நேரத்தில் அந்த இடி போன்ற செய்தி தன்னை வந்து தாக்கப் போகிறது என்று அவள் துளிகூட அறிந்திருக்கவில்லை.

    2

    இராயப்பேட்டையின் அமைதியான தெரு ஒன்றில் கடைசியாக இருந்தது அந்த லேடீஸ் ஹாஸ்டல்.

    அனிதாவும், அவள் மாமா வேதாசலமும் வேலூரிலிருந்து பஸ் பிடித்துப் போய் சேருவதற்குள் மதியம் மணி மூன்றாகிவிட்டது.

    ஹாஸ்டல் முழுக்க மயான அமைதி.

    சிலர் அன்று வேலைக்குப் போகாமல் லீவு போட்டுவிட்டு அறையிலே இருந்தார்கள்.

    அம்ருதாவின் உடலை ஒரு பெஞ்சில் கிடத்தி வெள்ளைத் துணியால் போர்த்தி வைத்திருந்தார்கள்.

    வேதாசலமும், அனிதாவும் ஆட்டோவில் போய் இறங்கியதும் ஹாஸ்டல் வார்டன் வேதவல்லி ‘தொம், தொம்’மென்று ஓடி வந்தாள்.

    வாங்க... என்று அவர்களை அழைத்துக்கொண்டு அம்ருதாவின் அறைக்கு விரைந்தாள்.

    மெருகு குலையாத பொலிவுடன் ‘பளிச்’சென்றிருந்த அம்ருதாவின் அந்த குழந்தைத்தனமான முகத்தைக் கண்டதும் அனிதா கதறிவிட்டாள்.

    அக்கா... எங்களையெல்லாம் தனியா விட்டுட்டுப் போயிட்டியே, ஏன்? சொல்லுக்கா, சொல்லு...

    உடைப்பெடுத்த அணையாய் கண்ணீர் பெருக அழ ஆரம்பித்தாள்.

    அவளின் அந்த கதறல் சுற்றி நின்றிருந்த மற்ற பெண்களின் மனதைப் பிசைக்க, அவர்களும் கண்ணீர் வடித்தனர்.

    வார்டன் வேதவல்லி அனிதாவின் தோளை ஆதரவுடன் பற்றினாள்.

    அனிதா... அழாதேம்மா. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. கொஞ்சம் பொறுமையா இரும்மா.

    எனக்கு தாயும், தந்தையுமா இருந்த என்னோட ஒரே அக்கா என்னை இப்படி திடீர்னு விட்டுப்போயிட்ட பிறகு எப்படி மேடம் என்னால் பொறுமையா இருக்க முடியும்?

    அனிதாவின் அழுகை மேலும் வலுத்தது.

    வேதாசலமும் பனித்த தன் கண்களைத் துண்டால் துடைத்துக்கொண்டார்.

    வேதவல்லி அனிதாவைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டுபோய் தன் அலுவலக அறைக்குள் அமரச்செய்தாள்.

    வேதாசலமும் அவர்களுடன் அறைக்குள் நுழைந்து அனிதாவின் அருகில் அமர்ந்தார்.

    இது எப்படி நடந்தது? என்று வேதாசலம் கேட்க, நாற்காலியை இழுத்து அவர் எதிரில் அமர்ந்த வேதவல்லி, காலைல ரொம்ப நேரமாகியும் அம்ருதா எழுந் திருக்காததால் அவள் அறைக் கதவைத் தட்டினேன். கதவு திறக்காததால் எனக்கு சந்தேகம் வந்தது. ஜன்னல் கதவை உடைத்தப் பார்த்தப்பத்தான்... – வார்த்தைகளை முடிக்க முடியாமல் வேதவல்லி நிறுத்த, என்னாச்சு மேடம்? சொல்லுங்க? என்று அவளை உலுக்கினாள் அனிதா.

    அம்ருதா சீலிங் ஃபேன்ல தூக்கு மாட்டி தொங்கிப்போயிருந்தா...

    ‘திடும்’மென அதிர்ந்தாள் அனிதா.

    அதுவரையில் அம்ருதாவின் மரணம் இயற்கையானது என எண்ணியிருந்த வேதாசலமும் ஆடிப்போனார்.

    என்னது, தற்கொலையா? அம்ருதா அந்த அளவுக்கெல்லாம் போகமாட் டாளே...?

    மேஜை டிராயரைத் திறந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் வேதவல்லி.

    அதை வாங்கிப் படித்தாள் அனிதா.

    ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டதால் நானே தேடிக்கொண்ட முடிவு இது.’ – அம்ருதா.

    இது அக்காவோட கையெழுத்துத்தான். இதில் சந்தேகமே இல்லை. என்றாள் அனிதா.

    "அது

    Enjoying the preview?
    Page 1 of 1