Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி
திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி
திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி
Ebook419 pages6 hours

திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

தளபதி அண்ணாதுரை மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செளிணிது கொண்டார் ஈ.வெ.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.
ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செளிணியப்பட்டது. புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தீர்மானிக்கப் பட்டது. அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல.
பிரபல வழக்கறிஞரான வி.பி. ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.
பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல,அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க..,
ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.

Languageதமிழ்
Release dateApr 25, 2019
ISBN9789383826445
திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி

Related to திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி

Related ebooks

Reviews for திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி

Rating: 3 out of 5 stars
3/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி - Subbu

    Chapter 1- பதிப்புரை

    வணக்கம்,

    கல்விச் சிறப்பும், கலைச் சிறப்பும், கடவுள் சிறப்பும்,பொருநிதியமும் கொண்டது தமிழகம். இந்த ஒளி மிகுந்த தமிழகத்தின் சிறப்புகள் வெளித் தெரியாதவாறு அரை நூற்றாண்டு காலமாக ஒரு கருமேகம் மூடியிருக்கிறது. அதன் பெயர் திராவிட இயக்கம்.

    தமிழகம் மாசுநீங்கி மறுபடியும் ஒளி பெற வேண்டும் என்பதற்காகப் பலியானவர்கள் பலர் இரத்தம் சிந்தியவர்கள் இன்னும் பலர் திராவிடத்தின் கொடூரத் தாக்குதலுக்கு அஞ்சாது துணிச்சலோடு தோள் தட்டி நின்ற தமிழர்கள் பலர் தமிழறிஞர் சாமி சிதம்பரனார், பத்திரிக்கையாளர் மாஜினி,பொதுவுடைமையாளர் பி. ராமமூர்த்தி, நாமக்கல் கவிஞர்,நெல்லை ஜெபமணி என்று பெருமைப்படத்தக்க வரிசை இது.

    இதில் சமீபத்திய வரவு சுப்பு. இவருடைய திராவிட மாயை -ஒரு பார்வை முதல் பகுதி வெளிவந்து தமிழர்களின் கருத்துலகத்தில் அதிர்வலைகளையும், சிலருக்கு அசௌகரியங்களையும் ஏற்படுத்தியது.

    இடைவெளி இல்லாதபடி இந்திய தேசியத்தில் தமிழகம் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தமிழின் தெளிணிவீகத் தன்மையை தலைமேல் வைத்துக் கொண்டாடு கிறவர்களுக்கும், பயன்படக்கூடிய வரலாற்று ஆவணம் இந்த நூல். இது இரண்டாம் பகுதி.

    தார்மீக விஷயங்களுக்குச் தமிழகர்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்கிற நம்பிக்கையில்,

    அன்புடன்

    பதிப்பாளர்வரவண

    Chapter 2- முன்னுரை

    திராவிட மாயை முதல் பகுதி பிப்ரவரி 2010இல் வெளிவந்தது. ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இரண்டாம் பகுதி உங்களிடம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட என்றே பொதுவெளியில் நான் அறியப்படுகிறேன். அடையாளங்கள் அனைத்தையும் தவிர்த்து விட்டு ஏகாந்தமாக வாழ வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இருந்தாலும் இன்னும் சில காலங்களுக்கு இந்த முன்னொட்டைத் தவிர்க்க முடியாது.

    சரி, நம்முடைய எழுத்துக்கு ஏதாவது பலன் உண்டா அல்லது அறிவுஜீவிகளின் பாஷையில் சொன்னால், சமூகத் தாக்கம் உண்டா என்று யோசித்துப் பார்த்தால், இருக்கிறது என்பதுதான் விடை. முதலில் எதிர்தரப்பைப் பற்றி சொல்லிவிடுகிறேன். திராவிட இயக்கத்தின் சொத்துக்கு வாரிசாக இருப்பவரும், திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு சொத்து சேர்த்தவரும், இரண்டு பேரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்திருக்கிறார்கள் என்பது ஒரு செளிணிதி.

    இது என்னுடைய எழுத்துக்கு மட்டுமே கிடைத்த மரியாதை என்று மார் தட்டிக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள அன்பர்கள் பலர் திராவிட மாயை புத்தகத்தை விற்பதையும்,பரிசளிப்பதையும், அறிமுகப்படுத்துவதையும், சிலாகிப்பதையும் சிறப்பாகச் செளிணிதிருக்கிறார்கள். சமூகத்தின் பலன் ஒருபுறமிருக்க நானடைந்த பலனை சுலபத்தில் சொல்ல முடியாது. அதை என் நெஞ்சோடு பொத்தி வைத்துக் கொள்கிறேன்...

    சேலத்தில் ஒரு திருமண மண்டபம். அங்கே பா.ஜ.க. ஊழியர்களுக்கான பயிற்சி முகாமில் நான் பேசினேன். அடுத்து ரயில் ஏறவேண்டியதுதான். மன்னிக்கவும். சாப்பிட்டுவிட்டு ரயிலேற வேண்டியதுதான். பா.ஜ.க. ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்பதனால் அவர்கள் சாப்பாடு போடும்போது தான் நாம் சாப்பிட முடியும்.

    விருந்தாளிகளுக்கு விதிவிலக்கு கிடையாது. இருந்தாலும் முயற்சி செளிணிது பார்ப்போமே என்று சாப்பிடுமிடத்திற்குப் போனேன். அந்த இடம் சுத்தமாகவும் காலியாகவும் இருந்தது. சமையல்காரரைக் கண்டுபிடித்து என் கோரிக்கையை முன்வைத்தேன்.

    அவர் நீங்க சமையற்கட்டுக்கு உள்ளே வந்துடுங்க, அங்கே சாப்பிடலாம் என்றார். என் அல்ப புத்திக்கு அது அகௌரவமாகப் பட்டது. எதுக்கு உள்ளே வரணும் என்று இழுத்தேன். அவர் சொன்னார், இங்கே இரண்டு பேர் திராவிட மாயை படித்திருக்கிறோம். நீங்கள் உள்ளே வந்துவிட்டால் சாப்பிடும்போது உங்களோடு பேசிக் கொண்டிருக்கலாம் என்றுதான் என்று சொல்லி என்னுடைய பதிலை எதிர்பார்த்தார்.

    நான் பதில் பேசவில்லை. உள்ளே போளிணிவிட்டேன்...

    இன்னொரு அனுபவம்:

    ஸ்ரீரங்கத்தில் ஒரு நண்பர் வீட்டில் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக தோட்டத்துப் பக்கம் போனேன். வேலிக்கு அந்தப் பக்கமிருநது ஒரு குரல் கேட்டது. சார், நீங்க திராவிட மாயை சுப்புதானே என்று.

    ஆமாம் என்று சொன்னேன். நீங்க இங்கே வரலாமே என்று அவரை அழைத்தேன். இல்லை சார், உங்க நண்பருக்கும் நமக்கும் ஆகாது

    என்று சொல்லிவிட்டு அரை மணி நேரம் திராவிடமாயை பற்றிப் பேசினார். தோட்டத்துப் பக்கம் போனவரைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டு வந்தார் நண்பர். என்னுடைய சம்பாஷணையை எப்படித் துண்டிப்பது என்று அவர் யோசிப்பதற்கு முன்பாக நானே நிறுத்திவிட்டேன்...

    கும்பகோணத்தின் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூரில், ஒரு நண்பர் வீட்டில் தங்கி இருந்தேன். காலையில், ரயிலடியில் கொண்டு விட்டார் ஒரு ஆட்டோகாரர். காசு கொடுத்தபோது வாங்க மறுத்து விட்டார்.

    நாங்க தேசபக்தர்கள் கிட்ட காசு வாங்கறது இல்லை என்றார் அவர்.

    இப்படிப் பல வகையான, ருசிகரமான, நெகிழ வைக்கின்ற, அறிவூட்டுகின்ற அனுபவங்கள். இதற்கு மேல் இந்த இரண்டாம் பாக அனுபவங்களை நான் சொல்வது முன்னுரையின் அளவை அதிகப் படுத்திவிடும்.

    வரலாறு பற்றிய செளிணிதிகளைத் தொகுத்து எழுதுகின்ற போது, ஒன்று நடக்கின்ற நிகழ்ச்சிகளை அந்தப் பாதையினூடே பயணித்துக் கொண்டு எழுதுவது ஒரு வகை. இந்தியாவின் விடுதலைப் போரைப் பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் இத்தகைய பதிவுகள் எழுதப் பட்டிருக்கின்றன இரண்டாவது, ஒரு மாபெரும் சரித்திர வரலாற்று நிகழ்வு முடிந்த பிறகு, அதை மறு பார்வைக்கு உட்படுத்தி ஆளிணிவு செளிணிது எழுதுவது.

    இந்திய சமூகத்தின் மீது காந்தீயம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

    மூன்றாவது வகை, ஒரு சமூக மாற்றம் முடிவுக்கு வரும் தருவாயில் எழுதப்படுவது. திராவிட மாயை மூன்றாவது பகுதி எழுதப்படும் போது, இது சாத்தியப்படும் என்று நம்புகிறேன்.

    அவ்வளவுதான்.

    ஜீவனோபாயத்திற்காக உழைக்க வேண்டியதில்லை என்ற முடிவோடு பொதுப் பணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். வீராப்பு நம்முடையது. செலவு நண்பர்களுடையது.

    சென்னையைச் சேர்ந்த திரு.ஆர்.வாசுதேவன், திரு. A.C.சேகர், திரு.உமாமகேஸ்வரன், திரு.ரமேஷ் சேதுராமன், திரு.E. பாலகிருஷ்ணன், டாக்டர் கே.சேஷாத்திரி நாதன், மதுரையைச் சேர்ந்த திரு.P.R.S.சங்கர் ராமன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு.ஜகன்னாதன், சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.பாலமுருகன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.ஸ்ரீனிவாசன், ஈராக்கைச் சேர்ந்த திரு.ஜெயகுமார் ஸ்ரீனிவாசன், அமெரிக்காவைச் சேர்ந்த திரு.கீர்த்திவாசன், திரு.கார்கில் ஜெயக்குமார், திரு.கார்த்திக் ரங்கராஜன் ஆகியோருக்கு என் நன்றி.

    எழுத்துப் பணி இடையூறில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக என்னைத் தங்களூருக்கு வரவழைத்து வசதி செளிணிது கொடுத்த திருவாரூர் நண்பர்கள் காளி சுதன் பாலா, வேல்மயில்ஜி, தஞ்சாவூர் வெ.கோபாலன், பெங்களூர் G.R.விஷ்ணு, கோதூ விஷ்ணு ஆகியோருக்கு நன்றி.

    இந்தப் புத்தகத்தின் தயாரிப்பில் உதவிய திரு.ராம்கோபால ரத்தினம் (ஸ்ரீரங்கம்), திரு.பரமசிவம் (சென்னை), திருமதி ஷி. பிரேமா (சென்னை) ஆகியோருக்கு என் நன்றி.

    என்னுடைய சாரதியாகவும் உதவியாளராகவும் செயல்படும் க்ஷி.ஷி. ரவிச்சந்திரனுக்கு நன்றி.

    Chapter 3- திராவிட மாயை - ஒரு பார்வை!

    திராவிட இயக்க நூறாம் ஆண்டு விழா கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியன்று (27.3.2012), சென்னையில் தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தொண்டர்களை அழைக்கும் விதத்தில், முரசொலியில் கடிதம் எழுதினார் கலைஞர். அந்தக் கடிதத்தில், திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், 1917-ஆம் வருடம் சென்னை ஸ்பர்டாங்க் சாலையருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆற்றிய உரையைச் சுட்டிக் காட்டி, ‘நம் பத்திரிகைகள் வளர்ந்தால்தான் நம் மக்களுக்கு பலம் வரும்; நம் எதிர்க் கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் - என்று முழங்கியதை நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்’ என்று எழுதியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து நடந்த விழாவிலும், பிராமண எதிர்ப்பைமையப் பொருளாக வைத்து கலைஞர் பேசியிருக்கிறார். அண்ணா எழுதிய தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி,‘நாமெல்லாம் இனத்தால் திராவிடர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

    ஆனால், திராவிட இனம் பற்றிய அண்ணாவின் முக்கியமான கருத்தை உடன்பிறப்புக்களுக்கு எடுத்துச் சொல்ல அவருக்கு சௌகரியப்படவில்லை. இதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை...

    பிராமணர் இனம் வேறு; பிராமணர் அல்லாதார் இனம் வேறு என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. பிராமணர் அல்லாதார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழகத்தில், பிரமணர் உறுப்பினராக முடியாது. ஈ.வெ.ரா.வின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சின்னக் குத்தூசி, ஞானி,

    கமலஹாசன் போன்ற பிராமணர்களுக்குக் கூட அங்கே அனுமதி இல்லை. ஆனால், ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிராமணர்களை உறுப்பினராகலாம். இது எப்படி?

    தளபதி அண்ணாதுரை மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செளிணிது கொண்டார் ஈ.வெ.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.

    ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செளிணியப்பட்டது. புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தீர்மானிக்கப் பட்டது. அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

    தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல.

    பிரபல வழக்கறிஞரான வி.பி. ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.

    பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல,அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க..,

    ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.

    மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு இன்னொரு முக்கியமான பதிவு. ‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார் அவர். பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க. கைவிடாத அந்தக் காலத்திலும், தன்னுடைய உரையில் ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்டுவதற்கு அவர் தயங்கவில்லை.

    இதைவிட சுவாரஸ்யமான செளிணிதி கூட உண்டு. திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செளிணிய விரும்பினார் அண்ணா. ‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

    பல கட்சிகளின் கூட்டணியோடும் வெகுஜன ஆதரவோடும் ஆட்சியைப் பிடிக்க முயன்ற அண்ணாவிடத் தில், பிராமண எதிர்ப்பு இல்லை. ஹிந்தியை எதிர்க்கும் போது கூட ‘இந்த வேலையை ராஜாஜியிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க என்னால் முடியாது. பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் கச்சிதமாக முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’ என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் அண்ணா. முதலமைச்சர் அண்ணாவிடம் பிராமணர் எதிர்ப்பு என்கிற மனோபாவம் இல்லை.

    திராவிட இயக்க வரலாற்றில் அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை கருணாநிதி புறந்தள்ளி விட்டார். தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதி மறந்து விட்டார். இதயத்தைப் பதவியிடமும்,பெட்டிச் சாவியை குடும்பத்தாரிடமும் கொடுத்தவரிடம் பெருந்தன்மையை எதிர்பார்ப்பது வீண் வேலை.

    Chapter 4- கலைஞரின் பழைய வசனம்

    திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ‘திராவிட’ என்ற சொல்லை தானோ, பேராசிரியர் அன்பழகனோ உருவாக்கவில்லை என்றார். இதில் நாட்டின் தேசிய கீதம் ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதிய ரபீந்தரநாத் தாகூர் ‘திராவிட உத்கல வங்கா’ என்று எழுதியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியபோது, அங்கிருந்த உடன் பிறப்புகள் ஆர்ப்பரித்தார்கள்.

    திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, இந்த மண்ணில் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

    ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆளிணிவு வெளிவந்தது. ஃபிரான்ஸில் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (1777-1819)செளிணித ஆராளிணிச்சியின் விளைவு இது.

    இவரைத் தொடர்ந்து வந்தவர் தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆளவேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி, இவர் ஆராளிணிச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

    திராவிட மொழிகள் பேசுவோர் திராவிட இனத்தவர் என்ற மோசடி கால்டுவெல்லால் உருவாக்கப்பட்டது.

    ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம்,

    திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று லட்சிய தி.மு.க, ம.தி.மு.க என்று மேலும் பிளவுபட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல்தான். இந்த இயக்கங்களின் அடிப்படையான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம் கால்டுவெல்லின் கற்பனையில் உருவானதுதான்...

    மொழி உணர்வு என்பது ஒன்றுமைக்குப் பயன்பட வேண்டும். அதை வேற்றுமைக்கெனப் பயன்படுத்தியதுதான் கழகத்தவர்களின் சாதனை. திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் கருணாநிதி, உ.வே.சாமிநாத ஐயரைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மொழி உணர்வு பற்றி, உ.வே.சா.

    கூறியதைப் பார்க்கலாம்:

    1937-ஆம் வருடம் நடந்த இந்திய இலக்கியக் கழகத்தின் முதல் மாநாட்டில், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த உரையில் இந்த பாரதீய சாகித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சி களால் குறுகிய நோக்கங்களும், சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்கள் ஒற்றுமை, திராவிட பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்றே நம்புகிறேன் என்றார்.

    ‘திராவிட மொழி பேசுவோர்’ என்று உவேசா குறிப்பிட்டதற்கும் கால்டுவெல்லின் திராவிட இனத்துக்கும் ஸ்நானப் பிராப்திகூட இல்லை.

    இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், அதற்கு மொழி உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைந்த தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை, தமிழர் பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம். தகர டப்பாவில் தாரை நிரப்பிக் கொண்டு, மொழிகளுக்கிடையே பகைமையை மூட்டிய கழகத்தவரின் செயலை ஏற்றுக் கொள்ள முடியுமா?

    ஆரிய, திராவிட இன வேறுபாடு என்ற கோட்பாடு, வரலாற்று ஆய்வாளர்களால் கைவிடப்பட்ட விஷயம். அதை தி.மு.க. மேடைகளில் தொடர்ந்து பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

    சென்ற மாதம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த ‘உயிரியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள்’ என்ற கருத்தரங்கில், காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் லால்ஜி சிங் பேசினார்.

    பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிற ஆரியப் படையெடுப்பு என்ற கருத்துக்கு அடிப்படையே இல்லை. இன்றைய இந்தியர்கள் அனைவருமே கலப்பினம்தான் என்று மரபனு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரியரும் திராவிடரும் ஒரே பண்பாட்டின் பிரதிநிதிகள் என்றார் அவர்.

    பல்கலைக் கழக கருத்தரங்கில் மட்டும் பேசப்பட்ட கருத்து அல்ல இது. தி.மு.க. ஆட்சியின்போது நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா சிறப்புரையாற்றினார். தெற்காசியாவின் பண்பாடும் கலாசாரமும் வட இந்தியர்களாலும், திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களாலும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

    நாடு பிடிக்கும் ஆசைக்காகவும், மத மாற்ற லாபங்களுக்காகவும் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டதுதான் ஆரிய- திராவிட இன வாதம் என்ற நாடகம். இந்த நாடகம், அரிதாரம் வாங்கக் காசில்லாமல், அவையோர் எவருமில்லாமல் இழுத்து மூடப்பட்டு விட்டது. கலைஞர் மட்டும் பழைய வசனங்களையே பேசிக் கொண்டிருக்கிறார். கழகத்தவர் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Chapter 5- திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா?

    ‘பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம்.நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

    திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம்.நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

    இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்த போது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி.இராமலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி.தியாகராய செட்டியாரும், கே.வி.ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

    வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.’ இந்த அமைப்புதான் ‘ஜஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

    தேசிய எழுச்சிக்குத் தடைபோட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

    டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ்செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று நமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா. நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம்.

    ஜாலியன் வாலாபாக் படுகொலையை இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த காலத்தில், அந்தப் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டி.எம். நாயருக்கு உண்டு என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

    இன வேறுபாடு என்ற ஆயுதத்தைக் கொண்டு, இந்தியர்களுக்கிடையே பிளவை உண்டாக்க வேண்டும் என்பதே டி.எம்.நாயரின் நோக்கம். ஆனால், தமிழ்நாட்டிலேயே அதற்கு ஆதரவில்லை. பெரும்பாலான தமிழறிஞர்கள் இதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள்; அந்த எதிர்ப்பு இந்தத் தலைமுறையிலும் தொடர்கிறது.

    ஆரியர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டி, ‘கடவுள்’ என்றொரு கற்பனை கருத்தைச் சுட்டிக்காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பி விட்டார்கள், என்றார் நாயர்.

    - பக். 220. திராவிட இயக்க வரலாறு.

    கடவுள் சிந்தனையை ஆரியர்கள் திராவிடருக்குக் கொடுத்தனர் என்பது முழுப் பொய்.

    ‘இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம்தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமார்த்ய சென். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் கடவுள் மறுப்பைப் பேசிய சார்வாகனைப் பற்றிய செய்தி இருக்கிறது.

    ‘ஆரியர்கள், கடவுளைக் கொண்டு வந்து திராவிடர்கள் மீது திணித்தார்கள்’ என்று சொல்லும் டாக்டர் டி.எம். நாயருக்கு, தமிழர் வரலாறே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ் அன்னையின் மணிமுடியாகிய திருக்குறளில், கடவுள் வாழ்த்தாக பத்துக் குறட்பாக்கள் உள்ளன. அதில் ஏழு குறட்பாக்கள் திருவடிப் பெருமையைப் பேசுகின்றன. உருவ வழிபாடும், திருவடிப் போற்றுதலும் இஸ்லாத்திலும் கிறிஸ்துவத்திலும் இல்லாதவை. ஆகவே திருவள்ளுவரும் அவர் காலத்துத் தமிழரும், இயல்பாகவே ஹிந்துக்களாக இருந்தனர் என்று அடித்துப் பேசலாம்.

    கடவுள் வாழ்த்து மட்டுமல்ல; இந்திரனைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். கடவுள் வேண்டாம் என்று சொல்லும் டி.எம். நாயரின் வழியில் நடக்கும் திராவிட இயக்கத்தவர், திருவள்ளுவரை சொந்தம் கொண்டாட முடியாது. இந்த மாதிரிப் பிரச்னைகள் எல்லாம் வரும் என்ற எண்ணத்தில் தான், திருக்குறளை ஈ.வெ.ரா. ஒதுக்கி வைத்துவிட்டார். ‘மொத்தத்தில் முப்பது குறளுக்கு மேல் தேறாது’ என்பது ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு.

    Chapter 6- தனித் தமிழ் மாயை

    நீதிக் கட்சியின் தோற்றத்திற்குக் காரணம், 1916-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் என்பதையும், தோல்வி அடைந்த

    வர்கள் பிராமண எதிர்ப்பைக் கொள்கையாக வகுத்துக் கொண்டார்கள் என்பதையும் முந்தைய இதழில் பார்த்தோம்.

    அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இன்னொரு இயக்கமும் துவக்கப்பட்டது. அது தனித் தமிழ் இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தனித் தமிழ் இயக்கமும் ஒரு காரணியாக இருந்தது. எனவே, தனித் தமிழ் இயக்கத்தைப் பற்றித்

    Enjoying the preview?
    Page 1 of 1