Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Asathal Nirvagikku Arputha Vazhigal 31
Asathal Nirvagikku Arputha Vazhigal 31
Asathal Nirvagikku Arputha Vazhigal 31
Ebook271 pages1 hour

Asathal Nirvagikku Arputha Vazhigal 31

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பழைமையின் பெருமையில் மட்டுமல்ல...

பகவத் கீதையின் சுலோகங்களில் இன்றைய நிர்வாக இயலின் கருத்துக்களை காண்பது இன்று எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் கீதை என்றில்லை. சுமந்திரா கோஷல், பீட்டர் டிரக்கர், சி.கே.பிரஹலாத் போன்ற நிர்வாக இயல் சிந்தனையாளர்கள் இன்று சொல்வதில் உள்ள யதார்த்தங்கள் பல, காலங்காலமாக நாம் கேட்டு வரும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பாட்டி சொன்ன கதைகளிலும் ஒளிந்துள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இதிகாசங்கள் என்றில்லாமல் உலகம் முழுக்க அனேகமாக அனைத்து சான்றோர் வாக்குகளிலும், கதைகளிலும் இன்றைய நிர்வாக இயலின் பல அடிப்படைகளை இனம் கண்டுகொள்ளலாம்.

பண்டைய கால இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் என்னும் அந்த சமுத்திரத்தில் முங்கி எடுக்கும் முத்துக்களுடன், இன்றைய நிர்வாக இயலில் விவரிக்கப்படும் பல கருத்துக்களை ஒப்பிட்டு அந்த யதார்த்தங்கள் இன்றும் பிரதிபலிப்பதை விவரிப்பது இந்த புத்தகத் தொகுப்பின் நோக்கம். அந்தக் காலத்திலேயே நம்மிடம் எல்லா வித்தையும் இருந்தன என்று பழங்கணக்கு பார்ப்பதோ அல்லது Old is gold என்று பழைய பெருமை பேசி மார்தட்டுவதோ நோக்கமல்ல இங்கு.

மாறாக மனித வள மேம்பாட்டுக்கு எப்படி சில அடிப்படையான சித்தாந்தங்கள் காலங்காலமாக வலுவூட்டுகின்றன என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வது இன்றைய சவால் நிறைந்த வேலை சூழ்நிலைக்கு மிக அவசியம்.

இலக்கிய இதிகாசங்கள் மட்டுமல்ல; கிராமப்புறங்களில் சொல்லப்படும் கதைகள், மற்றும் நீதிக்கதைகள், பழங்கதைகள் (folklore and fables) இவற்றிலும் கூட ஊன்றி கவனித்தால் நிறைய கதைகளில் இன்றைய கருத்துக்களின் பிரதிபலிப்பு தெரியும். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுத்து புதியதில் பழசின் பிம்பத்தை தேடும் முயற்சி இது.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135105680
Asathal Nirvagikku Arputha Vazhigal 31

Related to Asathal Nirvagikku Arputha Vazhigal 31

Related ebooks

Reviews for Asathal Nirvagikku Arputha Vazhigal 31

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Asathal Nirvagikku Arputha Vazhigal 31 - Aruna Srinivasan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31

    Asathal Nirvagikku Arputha Vazhigal 31

    Author:

    அருணா ஶ்ரீனிவாசன்

    Aruna Srinivasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aruna-srinivasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உள்ளே இருக்கு வெற்றியின் ரகசியம்

    2. பாதை மாற்றிப் பார்

    3. உங்கள் பலம் என்ன?

    4. காற்றுள்ளபோதே...

    5. உந்து சக்தி

    6. முடிவெடுப்பது எப்படி?

    7. விற்பனை கலை

    8. எண்ணம் வெளிப்படும் தோரணை

    9. ரைட் சாய்ஸ்...

    10. நீ உன்னையறிந்தால்...

    11. நான் செய்யும் குழப்பம்

    12. நான் செய்யும் நன்மை

    13. வேலை செய்யும் இடத்தில் சில நெறிகள்

    14. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

    15. யூனிபார்ம் பின்னே இருக்கும் மனிதர்கள்

    16. நாம்பதான் கொஞ்சம் உஷாராக இருக்கணுங்க...

    17. உள்ளே பரவும் அந்த அமைதி

    18. ஊழியர் - முதலாளி - உறவின் பலம்

    19. பள்ளிகளில் தொழில்முறை மேலாளர்கள்

    20. வடையை இழக்காத காக்கா

    21. உண்மை கைகொடுக்கும்

    22. நீங்கள் பிஸியா? நிஜமாகவேவா?

    23. மனம் வலிமை பெற

    24. கோலங்களில் தெரியும் புதிய கோணங்கள்

    25. எண்ணம்போல் நாம்

    26. சாதகமா? பாதகமா? எது வேணும்?

    27. மௌனமும் ஒரு கலை

    28. திறமையை இனம் காண்

    29. சிவப்பு நாடாவுக்கு அப்பால்...

    30. ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறன்

    31. அரசனைப் போல் மக்கள்

    தொடரும் யதார்த்தங்கள்

    நிர்வாக இயல்; அன்றும், இன்றும் - ஒரு பார்வை.

    முன்னுரை / அறிமுகம்

    பழமையின் பெருமையில் மட்டுமல்ல...

    பகவத் கீதையின் சுலோகங்களில் இன்றைய நிர்வாக இயலின் கருத்துக்களை காண்பது இன்று எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் கீதை என்றில்லை. சுமந்திரா கோஷல், பீட்டர் டிரக்கர், சி.கே. பிரஹலாத் போன்ற நிர்வாக இயல் சிந்தனையாளர்கள் இன்று சொல்வதில் உள்ள யதார்த்தங்கள் பல, காலங்காலமாக நாம் கேட்டு வரும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பாட்டி சொன்ன கதைகளிலும் ஒளிந்துள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இதிகாசங்கள் என்றில்லாமல் உலகம் முழுக்க அனேகமாக அனைத்து சான்றோர் வாக்குகளிலும், கதைகளிலும் இன்றைய நிர்வாக இயலின் பல அடிப்படைகளை இனம் கண்டுகொள்ளலாம்.

    பண்டைய கால இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் என்னும் அந்த சமுத்திரத்தில் முங்கி எடுக்கும் முத்துக்களுடன், இன்றைய நிர்வாக இயலில் விவரிக்கப்படும் பல கருத்துக்களை ஒப்பிட்டு அந்த யதார்த்தங்கள் இன்றும் பிரதிபலிப்பதை விவரிப்பது இந்த புத்தகத் தொகுப்பின் நோக்கம். அந்தக் காலத்திலேயே நம்மிடம் எல்லாவிதத்தையும் இருந்தன என்று பழங்கணக்கு பார்ப்பதோ அல்லது Old is gold என்று பழைய பெருமை பேசி மார்தட்டுவதோ நோக்கமல்ல இங்கு.

    மாறாக மனித வள மேம்பாட்டுக்கு எப்படி சில அடிப்படையான சித்தாந்தங்கள் காலங்காலமாக வலுவூட்டுகின்றன என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வது இன்றைய சவால் நிறைந்த வேலை சூழ்நிலைக்கு மிக அவசியம்.

    இலக்கிய இதிகாசங்கள் மட்டுமல்ல; கிராமப்புறங்களில் சொல்லப்படும் கதைகள், மற்றும் நீதிக்கதைகள், பழங்கதைகள் (folklore and fables) இவற்றிலும் கூட ஊன்றி கவனித்தால் நிறைய கதைகளில் இன்றைய கருத்துக்களின் பிரதிபலிப்பு தெரியும். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுத்து புதியதில் பழசின் பிம்பத்தை தேடும் முயற்சி இது.

    கதையல்ல, வாழ்க்கை!

    எப்படி?

    இதுதான் இன்று வணிக இந்தியாவின் முன் நிற்கும் கேள்வி.

    வெளிநாட்டு முதலீடு வந்து கொட்டுகிறதே, இதை எப்படி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது? சென்செக்ஸ் குறியீடு உயர்ந்து கொண்டே போகிறதே, இதை எப்படி நம் முதலீட்டுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது? புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்வது எப்படி? தொழிற்கல்வி நிலையங்களில் இருந்து ஆறாகப் பெருகி வந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் மனித ஆற்றலை நம்முடைய தேவைக்கு ஏற்ப செழுமைப்படுத்தி வடிவமைத்துக் கொள்வது எப்படி? அதைவிட முக்கியமாக அவர்களை நம்மிடமே தக்கவைத்துக் கொள்வது எப்படி? உலகமயமாதல் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது? அது கொண்டு வந்திருக்கும் போட்டியை எப்படி சமாளிப்பது? அதன் அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாக மாற்றுவது எப்படி?

    இதுபோன்ற ‘எப்படி?’ கேள்விகள் வணிக இந்தியாவின் முன் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்விலும் பல தருணங்களில், அடுப்படியிலிருந்து அயல்நாட்டுப் பயணம் வரை தலைகாட்டுகின்றன.

    B. Schools எனப்படும் மேலாண்மை (Management) கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளில் சில கோட்பாடுகள் முன்மொழியப்படுகின்றன. நாற்பது வயதுக்கு மேல் கல்லூரி வகுப்பறையில் உட்கார்ந்து கற்றுக்கொள்வது இயலாது என்பதால், நடுநிலை மேலாளர்களுக்கு நிறுவனங்களே பயிற்சிகளை நடத்துகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் நூல்கள் வெளிவருகின்றன. இதற்கென்றே உருவாகியுள்ள இதழ்களில் விவாதங்கள் நடக்கின்றன. சில தொலைக்காட்சிகளும் தங்கள் பங்குக்கு சலனங்கள் எழுப்பி வருகின்றன.

    ஆனால் இவற்றில் பெரும்பாலானவை ‘கற்றுச் சொல்லிகள்’. பல புத்தகங்களிலிருந்து பெறப்பட்ட ஏட்டுச் சுரைக்காய்கள், நன்கு சமைத்துத் தாளித்துப் பறிமாறப்படுகின்றன. அந்தப் புத்தகங்கள் அநேகமாக மேல்நாட்டு அறிஞர்களால் எழுதப்பட்டவை. அந்த சமூக, வணிக, ஆளுகைச் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்டவை. அவற்றில் சில, பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவையாகவும் கூட இருக்கின்றன. ஏராளமான இரவல் ஞானம் இங்கே உலா வந்து கொண்டிருக்கின்றன.

    இந்திய மரபு என்பது 2000 ஆண்டோ, 5000 ஆண்டோ பழமையானது. ஒரு நாகரீகம் (civilisation) இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்து நிற்க வேண்டுமானால், அதனுள்ளே ஒரு பலம் ஒளிந்து கிடக்க வேண்டும். பெரும் காற்றில் அவரைப் பந்தல் சரிந்து விடுகிறது; வாழை மரங்கள் கூட சாய்ந்து விடுகின்றன. ஆனால் பிரம்மஞான சபையின் ஆயிரமாண்டு கண்ட ஆலமரம் அசையாமல் நிற்கிறது. காரணம் கண்ணுக்குத் தெரியாத அதன் வேர்.

    இறக்குமதி செய்யப்பட்ட இரவல் ஞானம், இந்தியா இன்று எதிர்கொள்கிற கேள்விகளுக்கு உதவக்கூடும்; உதவிக் கொண்டிருக்கிறது. அத்தோடு இந்திய ஞானமும் சேர்ந்து கொண்டால், உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு தனி வலு இந்தியர்களான நமக்கே நமக்கு என்று கிடைக்கலாம். அது உலக அரங்கில் நமக்கு ஒரு cutting edgeஐ கொடுக்கலாம். இரவல் ஞானத்தை நாம் எளிதில் ஜீரணித்துக் கொள்வதற்கான ஒரு பக்குவத்தை நமக்குள் இந்தக் கலப்பு கொடுக்கலாம். இது எதுவுமே நடக்காமல் போனாலும் கூட, இரவல் ஞானத்தின் வெளிச்சத்தில் இந்திய ஞானத்தை அலசுவது சுவாரஸ்யம் தரலாம். அட இயாகாகோ, சொல்கிற இந்த விஷயத்தை வள்ளுவரும் சொல்லியிருக்கிறாரே என ஆச்சரியம் நம்முள் மலரலாம்.

    அருணா ஸ்ரீநிவாசனின் இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட ஒரு முயற்சி. இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களை எடுத்துக் கொண்டு அவற்றில் விவரிக்கப்படும் பல சம்பவங்களில், நவீன மேலாண்மைக் கருத்துகள் எப்படி வெளிப்படுகின்றன என ரசமாக விளக்குகிறார். நாம் சிறு குழந்தையாகக் கேட்ட கதைகளுக்குள் இப்படி ஒரு விஷயம் ஒளிந்திருக்கின்றனவா என நமக்கு ஆச்சரியம் பிறக்கிறது. ராமாயணம், விழுமியங்களை valuesஐ முன்நிறுத்துகிற காவியம். பாரதம் உத்திகளை Strategies முன் வைக்கிற காவியம். வெற்றிகரமான நிர்வாகத்திற்கு இரண்டும் தேவை.

    நியாய அநியாயங்களைப் புறக்கணித்துவிட்டு, வெறும் உத்திகளைக் கொண்டு எட்டுகிற வெற்றிகள் நிலைத்து இருக்காது. சமயம் வரும்போது போட்டியாளர்கள் பின்னி எடுத்து விடுவார்கள். வெறும் தத்துவம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. எனவே இந்த இரண்டும் வெற்றிக்குச் சரியான விகிதத்தில் தேவை. இந்த இரண்டு காவியங்களையும் அருணா எடுத்துக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஒரு வகையில் இரண்டுமே யுனிவர்சல் எனப்படும் பொதுத் தன்மைகள் கொண்டவை. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் பாரதம் எனக்கு மலைப்பைத் தந்த காவியம். சிறிதும் பெரிதுமாக எத்தனை பாத்திரங்கள்! அவை எல்லாவற்றுக்கும் கதையின் மைய இழையோடு ஏதோ ஒரு வகையில் ஒரு தொடர்பு. கடைசியில், climaxல் அத்தனையும் போர்க்களத்தில் வந்து நிற்கின்றன. இத்தனை பாத்திரங்களை வைத்துக் கொண்டு கதை சொன்னாலும், சொல்லும் விதத்தில் ஒரு குழப்பமும் கிடையாது. ஆனால் இதையெல்லாம் விட பிரமிக்க வைக்கிற அம்சம் என்னவென்றால், உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உண்டோ அத்தனை வகையையும் பாரதத்தில் வருகிற பாத்திரங்களில் பார்க்கலாம். உலகில் எத்தனை வகையான குணங்கள் உண்டோ அத்தனை குணங்களுக்கும் ஒரு பாத்திரம் உண்டு. நவீன மேலாண்மை போன்ற ஒன்றை விவரிக்கிற முயற்சிக்கு, இதுபோன்ற யுனிவர்சல் தன்மை வேண்டும்.

    அருணாவின் புத்தகம் வெறுமனே, பழங்காலத்தை மட்டும் பேசவில்லை. பீட்டர் டிரக்கர், இயாகாகோ, சி.கே. பிரஹலாத், ஸ்டீபன் ஜான்சன் என, நவீன உலகின் குருமார்களும் வந்து போகிறார்கள். திருவள்ளுவரும் வருகிறார். ஆனால் இவை எல்லாவற்றையும்விட சமகால வாழ்க்கையிலிருந்து அவர் கொடுக்கும் உதாரணங்கள் சுவையானவை.

    நடைமுறை வாழ்க்கைக்கு உதவக்கூடிய பல தகவல்கள் பேசப்படுகின்றன. அண்மையில் பெரும் வணிக நிறுவனம் ஒன்று காய்கறிக் கடைகளை நிறுவ முன்வந்ததை அடுத்து, ஆங்காங்கே சில போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பெரிய கடைகளுக்கு இல்லாத small business advantage என்ற ஒன்று, சிறிய நிறுவனங்களுக்கு இருக்கின்றன. சிறு வணிக நிறுவனங்களுக்கு என்ன தனிச் சிறப்பு? நூலில் விவாதிக்கப்பட்டிருக்கிறது... படியுங்கள் தெரியும். வேலை கிடைக்கிறது, ஆனால் மனதுக்கு நிறைவளிக்கவில்லை. நாமும் வேலையில் பிரகாசிக்க முடியவில்லை. எப்படி சரியான வேலையைத் தேர்ந்தெடுப்பது? நம்முடைய core competencyஐ சார்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டால் பிரச்னைகள் குறைவாக இருக்கும். சரி, core competency என்றால் என்ன? நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

    மேலாண்மை நூல்கள் மிக எளிய நடையில், சுவையான குட்டிக் கதைகளுடன் ஆங்கிலத்தில் பல வருகின்றன. ஆனால் தமிழில் அந்த வகை குறைவு. ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறவர்கள், ஆங்கிலத்தில் படிக்கும்போது சீக்கிரம் அயர்ச்சி ஏற்படுகிறவர்கள், இவர்களுக்காகவும் அடித்தளத்தில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பலருக்கு இந்த நூல் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

    இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட அருணா ஸ்ரீநிவாசனுக்கு என் வாழ்த்துகள்.

    மாலன்.

    1

    உள்ளே இருக்கு வெற்றியின் ரகசியம்

    ஒரு வாரமாக விசுவநாதன் தன் மகன் அரவிந்திடம் கேட்டுக்கொண்டிருந்தார். பரண் மேலிருந்து தன் பழைய கோப்புகள் சிலவற்றை எடுத்து தரும்படி. மேலே ஏறுவது போன்ற கடின வேலைகளை அவர் செய்யக்கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. 65 வயதுக்கு மேல் ஏடாகூடமாக விழுந்து வைத்து ரத்த அழுத்தம் அதிகமாகி, கைகால் உடைந்து - இத்தியாதிகளை தவிர்க்க இந்த தடை உத்தரவு.

    ஆனால் ஒரு அவுட்சோர்ஸிங் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரவிந்துக்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் போய் வருவதில் வீட்டில் வேலைகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஏஸி ரூமில் பெரும்பாலும் வேலை செய்யும் அவனுக்கு வீட்டில் இந்த மாதிரி கடின வேலைகள் செய்ய உடல் வணங்கவில்லை என்பது இன்னொரு காரணம். ஜலதோஷம்... பரண் மேல் தூசி ஆகாது... என்று ஏதோ சால்ஜாப்பு சொல்லிக்கொண்டிருந்தான்.

    ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை விசுவநாதனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அரவிந்த் பரண் மேல் ஏறியிருந்தான். மலை போலிருந்த பெட்டிகளை நகர்த்தி, பின்னால் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். அரவிந்த்... என் பைல்கள் இந்த பக்கம் இருக்கும் பெட்டியில் இருக்கு. அங்கே பின்னால் இல்லை... என்றார். அரவிந்த் திரும்பாமலேயே பதிலளித்தான். அப்பா நான் உங்கள் பைல்களை இன்னும் தேடவில்லை. என் பழைய கிரிக்கெட் பேட்டை தேடறேன்... என்றான்.

    விசுவநாதனுக்கு சப்பென்றாகிவிட்டது. மேலே ஏறியவன் எப்படியும் தன் பைல்களையும் எடுத்துவிடுவான் என்பதில் அவருக்கு சந்தேகமில்லை. ஆனால் ஒரு வாரமாக தான் கெஞ்சியும் மசியாதவன், இப்போது தன் கிரிக்கெட் பேட்டை தேடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தையும் விட்டுவிட்டு காலங்கார்த்தாலே பரண் மேல் ஏறி தூசிகளுக்கிடையில் போராடிக்கொண்டிருக்கிறான். ‘இப்போது மட்டும் அவன் ஜலதோஷம் அதிகமாகாதோ...’ என்று மனதுள் பொருமினார்.

    விசுவநாதன் பொருமுவதில் அர்த்தமில்லாமல் இல்லை. அதே சமயம் அரவிந்த் தனக்கு பிடித்த விஷயத்திற்காக உடல் சிரமத்தைப் பொருட்படுத்தாததில் வியக்கவும் ஒன்றும் இல்லை.

    நமக்கு பிடித்த காரியங்களில் மனம் லயித்து செய்யும்போது உடல், மன அசதி கிட்டே நெருங்காது. எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்வரை ஓயவும் மாட்டோம்.

    மேலே காண்பித்த உதாரணம் போல பல சூழ்நிலைகளை சராசரியாக நம் இல்லங்களில் அடிக்கடி சந்திக்கலாம்.

    சூழ்நிலைகள் / மனிதர்கள் சற்று மாறி மாறி இருக்கலாம். ஆனால் அவற்றின் பின்னே இருக்கும் சித்தாந்தம் இதுதான்.

    வேறொரு உதாரணம் - உலக அளவில் பிரபலமானவருடையது. ஸ்டீபன் ஆர். கோவே (Stephen R. Covey) என்பவரின் மன ஊக்கப் புத்தகங்கள் (The 7 Habits of Highly Effective People மற்றும் 7 Habits தொடர் புத்தகங்கள் எழுதியவர்)

    படித்திருப்பீர்கள் / கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு முறை அவர்கள் வீட்டு முன் இருந்த புல்தரை மிகவும் அசிங்கமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இந்த வேலையை தன் மகன் ஸ்டீபன்

    எம்.ஆர். கோவே (Stephen M.R. Covey) செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஒரு நாள் தன் ஏழு வயது மகனை அழைத்து பக்கத்து வீட்டு புல் தரையை காண்பித்தார்.

    பார்த்தாயா அவர்கள் வீட்டு புல் வெளியை? எப்படி அழகாக பசுமையாக, நேர்த்தியாக இருக்கிறது. அது மாதிரி நம் வீட்டிலும் இருந்தால் எப்படி இருக்கும்? சரி. இனிமே நம் வீட்டு புல்தரை உன்னுடையது. தினம் தண்ணீர் விடுவாயோ, டியூபில் விடுவாயோ, விடாமல் இருப்பாயோ, பக்கெட்டில் பிடித்து ஊற்றுவாயோ அல்லது நீர் ஊற்று வைத்து தண்ணீர் பாய்ச்சுவாயோ, என்ன செய்வாயோ தெரியாது, பசுமையாக சுத்தமாக மாற வேண்டும். அதற்கென்று பச்சை நிற பெயிண்ட் அடித்து ‘பசுமை’ காண்பிக்காதே. நீ என்ன செஞ்சாலும் சரி; எனக்கு நம் தோட்டம் பசுமையாக, சுத்தமாக இருக்க வேண்டும். இனி இது உன் பொறுப்பு. இந்த ப்ராஜக்ட் பெயர் ‘பசுமையும் சுத்தமும்’ என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

    அடுத்த நான்கைந்து நாள் சிறுவன் ஸ்டீபன் ஒன்றும் செய்திருக்கவில்லை. ஸ்டீவ், தோட்டம் பசுமையாக ஆகிக்கொண்டிருக்கா? வேலை எப்படி போயிட்டு இருக்கு? என்று பெரிய ஸ்டீபன் விசாரித்தார்.

    ஓ. அதற்கென்ன அப்பா. நல்லாதான் போயிட்டு இருக்கு.

    அப்படியா? சரி. அன்னிக்கு நடந்து போன மாதிரி தோட்டத்துலே ஒரு ரவுண்ட் போலாம். வர்ரியா? என்று வினவியபடி தோட்டத்துக்குள் நடக்க ஆரம்பித்து விட்டார். பின்னால் ஓடி அவருடன் நடந்த சிறுவன் ஸ்டீபனுக்கு தோட்டத்தை கவனித்தபோது ஒரே வெட்கம் பிடுங்கித் தின்றது. பசுமையாவது? சுத்தமாவது? ஒரே குப்பை. காய்ந்த சருகுகள்; வாடி களையிழந்த புல்வெளி... தனக்கே பார்க்க சகிக்காமல் உதடுகள் பிதுங்க அழ ஆரம்பித்துவிட்டான்.

    அப்பா; சாரிப்பா. நானும் இந்த வேலையைச் செய்யணும்தான் பார்க்கிறேன். ஆனால் முடியவேயில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கு.

    கஷ்டமாகவா? ஆனா ஒண்ணுமே செய்யாமலேயே அதெப்படி கஷ்டம் என்று சொல்றே? சரி. நான் உனக்கு எப்படி உதவலாம் என்று சொல்லு.

    சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான். பக்கத்து வீட்டையும் பார்த்தான். மனதில் ஒரு உறுதி வந்து உட்கார்ந்து கொண்டது. மளமளவென்று அப்பாவிடம் என்ன செய்ய வேண்டும் என்று உதவ வேலை கொடுத்துவிட்டு தானும் கூடவே செய்ய ஆரம்பித்தான். அன்றிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1