Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?
Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?
Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?
Ebook229 pages50 minutes

Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருவரிடம் ஒரு தலைவனின் குணங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று மிக எளிதாகக் கண்டறியலாம். அது வாழ்வின் ஆரம்பத்திலேயே தெரிய ஆரம்பித்து விடும். அது ஒரு பார்க்காக இருக்கலாம் அல்லது பள்ளியின் கேஜி கிளாஸில் கூட இருக்கலாம். அங்கே சில குழந்தைகள், சக மாணவர்களோடு கேம் விளையாடுவதிலோ, விளையாட்டுப் போட்டிகளை, ஒழுங்கு படுத்தித் துவக்கி வைப்பதிலோ இல்லை, ஒரு பிக்னிக்கை ஏற்பாடு செய்வதிலோ கூட முன்னிலையில் இருக்கலாம். அப்படிப்பட்ட குணங்கள் தெரிய ஆரம்பிக்கும்போதே அந்தக் குழந்தைகளை சரியான பயிற்சி கொடுத்து நல்ல தலைவனாக அல்லது தலைவியாக முன்னேற்ற வேண்டும்.

“மாணவர்களைத் தலைவர்களாக உருவாக்குவது எப்படி?” என்ற இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம் என்பது மாணவ மாணவிகளை அவர்களது இளம் வயதிலிருந்தே இதுபோன்ற முற்போக்கு குணங்களை வளர்த்து விடுவது தான். இந்த ஆசிரியரின் பிற புத்தகங்களைப் போலவே, இந்தப் புத்தகத்திலும் கூட, மேலாண்மை பற்றிய விஷயங்கள் எல்லாமே மகாபாரதம் எனும் காவியத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580155008932
Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?

Related to Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?

Related ebooks

Reviews for Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi? - Dr. Hare Krishna Chandrasekaran

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    மாணவர்களைத் தலைவர்களாக உருவாக்குவது எப்படி?

    Maanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi?

    Author:

    ஹரே கிருஷ்ணா சந்திரசேகரன்

    Dr. Hare Krishna Chandrasekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-hare-krishna-chandrasekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எடிட்டர் பக்கம்

    அறிமுகம்

    அத்தியாயம் 1

    மதிப்புடன் கூடிய மேலாண்மை தரம் 1

    அனுதாபம்

    நல்லிணக்கம்

    தரம்

    பிற்பட்டோரிடம் அனுதாபம்

    உண்மை

    அத்தியாயம் 2

    தலைமைத்துவம் தரம் 7

    தைரியம்

    தொலை நோக்கு

    செயல்திறன்

    சாதுரியம்

    மேலாண்மைத் திறன்

    தொழில் நுட்பம்

    அத்தியாயம் 3

    செயல் திட்டம் தரம் 13

    நோக்கம் பிறழாமை

    புதுமை

    புதிய அணுகுமுறை

    பொறுப்பு

    எளிய தீர்வு

    எதிரியை திகைப்பூட்டுதல்

    அத்தியாயம் 4

    திட்டமிடுதல் தரம் 19

    முழுமையான ஆதரவு

    வேலையில் துல்லியம்

    பலம் / பலவீன மதிப்பீடு

    முன்னுரிமை

    குறுகிய கால இலக்கு

    நிதிப் பிரச்சினைகளின் தீர்வு

    அத்தியாயம் 5

    ஏற்பாடு தரம் 25

    இரகசியத்தன்மை

    கற்பனை

    ஊக்குவிப்பு

    வளமை

    திறமை

    கடினத்தன்மை

    அத்தியாயம் 6

    செயற்படுத்தல் தரம் 31

    நம்பிக்கை

    எதிரிகளை எதிர்கொள்ளல்

    முன் உதாரணம்

    அறிவார்ந்த முடிவு

    நேரஉணர்வு

    பிரச்சினைக்குத் தீர்வு

    எடிட்டர் பக்கம்

    A person wearing glasses Description automatically generated with medium confidence

    ஒருவரிடம் ஒரு தலைவனின் குணங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று மிக எளிதாகக் கண்டறியலாம். அது வாழ்வின் ஆரம்பத்திலேயே தெரிய ஆரம்பித்து விடும். அது ஒரு பார்க்காக இருக்கலாம் அல்லது பள்ளியின் கேஜி கிளாஸில் கூட இருக்கலாம். அங்கே சில குழந்தைகள், சக மாணவர்களோடு கேம் விளையாடுவதிலோ, விளையாட்டுப் போட்டிகளை, ஒழுங்கு படுத்தித் துவக்கி வைப்பதிலோ இல்லை, ஒரு பிக்னிக்கை ஏற்பாடு செய்வதிலோ கூட முன்னிலையில் இருக்கலாம். அப்படிப்பட்ட குணங்கள் தெரிய ஆரம்பிக்கும்போதே அந்தக் குழந்தைகளை சரியான பயிற்சி கொடுத்து நல்ல தலைவனாக அல்லது தலைவியாக முன்னேற்ற வேண்டும். மாணவர்களைத் தலைவர்களாக உருவாக்குவது எப்படி? என்ற இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம் என்பது மாணவ மாணவிகளை அவர்களது இளம் வயதிலிருந்தே இதுபோன்ற முற்போக்கு குணங்களை வளர்த்து விடுவது தான். இந்த ஆசிரியரின் பிற புத்தகங்களைப் போலவே, இந்தப் புத்தகத்திலும் கூட, மேலாண்மை பற்றிய விஷயங்கள் எல்லாமே மகாபாரதம் எனும் காவியத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

    அறிமுகம்

    பல வருடங்களாக, பலப்பல சந்தர்ப்பங்களில், நமது நாட்டின் பெரிய தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களை, முதலில் பத்திரிகைகளிலும் பின்னர் தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளிலும், பார்த்து, அவர்களது நேர்த்தி மற்றும் சம நிலையினைக் கவனித்து, ஆச்சரியத்துடன் திகைப்புக்குள்ளானேன்.

    அவர்கள் எத்தகைய பயிற்சியை மேற்கொண்டிருந்தால் இவ்வளவு நேர்த்தியான, வெற்றிகரமான தலைவர்களாகத் தங்களது தொழிலில் பிரகாசிக்க முடியும் என இப்பொழுது கூட வியப்பதுண்டு. சந்தைப்படுத்துதலில் சிறந்து விளங்கும் நிறைய உயர்தர மேலாளர்கள், தங்களுக்கான சிறந்த சந்தையினை உருவாக்கிக் கொண்டு, எதிரிகளின் தனி உரிமச் சந்தையினை சிதைத்து, தங்களது முன்னணி நிலையினைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடவும், சிரமப்பட்டு நிர்வகிக்கவும் வேண்டியதாகிறது. மிகச் சிறந்த தலைமை நிர்வாக இயக்குனர், நிர்வாக இயக்குனர், செயல்முறை இயக்குனர், இயக்குனர், தலைமை நிதி அதிகாரி, தலைமை நிர்வாக அதிகாரி, முதன்மை இயக்க அலுவலர், சந்தைப்படுத்தும் மேலாளர், மனித வள மேலாளர், தயாரிப்பு மேலாளர் ஆகியோரை உருவாக்க நிறைய கல்லூரிகள் இல்லை. அப்படி இருக்கும் நிலையில், அவர்கள் அவ்வாறு தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவது எப்படி?

    ஒரு பிரபலமான முதல் மந்திரி தனது பதவியினைத் துறந்து தனது மனைவியை அப் பதவியில் இருத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. அவரது மனைவி அப்பதவிக்கு, ஏன், அரசியலுக்குமே மிகவும் புதிதானவர்; பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர் மற்றும் அதற்குப் பொருத்தமில்லாதவர் எனக் கூடக் கூறலாம். அதைக் குறித்து அவரிடம் வினவிய சமயத்தில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கையில் நிறைய நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் மனைவியின் நாற்காலியே அவருக்குப் பாடம் கற்பிக்கும் என ஒரு கண் சிமிட்டலுடன் பதிலளித்தார்.

    இது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டியது. இந்தக் கருத்தினை ஏற்றுக் கொண்ட நிலையில், இந்த நிர்வாகிகள் தங்களது உயர் பதவியினை ஏற்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அதற்குப் பதில் அவர்கள் இன்னும் செதுக்கப் படாதவர்கள்; பின் எழும் கேள்வியானது, மெதுவாக ஒளி வீச ஆரம்பித்த அந்த செதுக்கப்படாத வைரங்கள், ஏன் முன்னரே அறியப்படவில்லை? அதாவது அவர்கள் ஏன் இளமையிலேயே அடையாளம் காணப் படவில்லை.

    நான் இந்தப் பிரச்சினையை வழக்கத்திற்கு மாறான முற்றிலும் புதிய கோணத்தில் ஆராய்ந்து பார்த்தேன். உலகின் பெரிய இயற்பியலாளர்களான சர் ஐசக் நியூட்டன், சர் சி வி ராமன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டா. அப்துல் கலாம் ஆகியோர் பளிச்சென்று உதயமாகி என் மனத் திரையில் வந்து போயினர். இத்தகைய ஆளுமை பெற்றவர்கள் பள்ளியில் இயற்பியல் படித்தனரா? ஆமாம், நிச்சயமாக. மேடம் கியூரி தன் பள்ளி வகுப்பில் வேதியியல் படித்தாரா? சந்தேகமின்றி, ஆமாம். நாம் இதனை நம்முடைய சொந்த நிலைக்கு எடுத்துச் செல்வோம். முதுகலைப் பட்டதாரிகள் மட்டுமே ஷேக்ஸ்பியரைப் படிக்கிறார்கள் என்பதில்லை. நாமும் நமது 7 ஆவது அல்லது 8 ஆவது வகுப்பில் படித்துள்ளோம். பல நிர்வாக வெற்றிகளை மிக அலட்சியமாக சம்பாதித்து வைத்திருக்கும் இன்றைய உயர் நிலை மேலாளர்கள் அனைவரும் பள்ளியில் படிக்கும் சமயத்தில் மேலாண்மை குறித்து அறிய முற்பட்டிருப்பார்களா? அப்படி அறியவில்லையெனின், அது ஒரு பெரிய குறைபாடோ அல்லது பெரிய இடைவெளியோ அல்லவா?

    பள்ளி வாழ்க்கையில் மேலாண்மை குறித்த அறிமுகம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் என்னுள் உதித்ததுண்டு. Laugh & Learn Management மற்றும் Laugh & Learn Project Management என்ற , மூத்த குடி மக்களுக்கான இரண்டு புத்தகங்களைப் பதிப்பிட்ட பின், மாணவர்களுக்கான அத்தகைய புத்தகத்தை நான் எழுத முற்பட்டேன். ஆனால், அதற்கான குறிப்புகளை எங்கே தேடுவது?. எனது மேலாண்மை நிபுணத்துவத்தின் ஒரே ஆதாரம் ஜகத் குரு ஆன பகவான் கிருஷ்ணரே.

    இந்தப் புத்தகத்தில் 36 மேலாண்மைப் பண்புகள் 6 தலைப்புகளில் (மதிப்புடன் கூடிய மேலாண்மை, தலைமைத்துவம், செயல் திட்டம்,, திட்டமிடுதல், ஏற்பாடு, செயற்படுத்தல்), மேலாண்மையின் மூலம் மாணவர்கள் வெற்றி இலக்கினை அடையும் நோக்குடன் வகைப்படுத்தப் பட்டுள்ளன. என் மூளையின் மதச் சார்பான பகுதியினை உலுக்கியதில், கிருஷ்ணரின் உயரிய வாழ்க்கையில் இருந்து உயிரோட்டம் மிக்க 36 ஆய்வுகளைக் கண்டெடுத்தேன். நான், மேலாண்மைக் கொள்கைகளையும், கிருஷ்ணரின் செயல்முறைப் பயன்பாடுடன் கூடிய நடைமுறை விளக்கங்களையும் இணைத்தேன். அது, அடிப்படையில், சமநிலைப் படுத்தியோ, நடுநிலையாகவோ இருந்து மாணவர்களைக் கலாச்சார அதிர்ச்சியில் இருந்து காத்தது. உண்மையில்,

    Enjoying the preview?
    Page 1 of 1