Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhandapani Vaaththiyaar Vagaiyaraa
Dhandapani Vaaththiyaar Vagaiyaraa
Dhandapani Vaaththiyaar Vagaiyaraa
Ebook268 pages1 hour

Dhandapani Vaaththiyaar Vagaiyaraa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Balabharathi
Languageதமிழ்
Release dateMar 16, 2020
ISBN9781043466640
Dhandapani Vaaththiyaar Vagaiyaraa

Related to Dhandapani Vaaththiyaar Vagaiyaraa

Related ebooks

Related categories

Reviews for Dhandapani Vaaththiyaar Vagaiyaraa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhandapani Vaaththiyaar Vagaiyaraa - Balabharathi

    61

    ஆசிரியர் அறை

    அறை பில்லியன் டாலர் கேள்வி

    வரும், ஆனா வராது என்ற வார்த்தையை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் யார் என்று கேட்டால், அது ரஜினிகாந்த்தான் எனச் சொல்லவும் வேண்டுமா..?

    தனிப்பட்ட முறையில் ரஜினி மிக நல்லவர். ஆனால் வல்லவரா என்று கேட்டால் அதற்கும் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    அதிபுத்திசாலி தன் பலத்தை எதிரிகளிடம் காட்டமாட்டான். மறைந்து தாக்குவான். ரஜினியும் அதேபோல் செய்கிறார்.

    ஒரு காலத்தில் - எம்ஜி.ஆர், கலைஞர் அரசியல் காலத்தில் - எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடியிருந்த கோயிலாக இருந்த அந்த நேரத்தில், கலைஞர் என்ற தனிமனிதர் தன் பேச்சுத் திறமையால் எம்ஜிஆருக்குச் சமமான பலம் கொண்டு அரசியல் செய்தார்.

    தேர்தல் வரும் நேரங்களில் கலைஞரின் பேச்சுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து சந்தேகமே இல்லை, வரும் தேர்தலில் கலைஞர்தான் ஜெயிப்பார் என அரசியல் விமர்சகர்கள் முதல் ஆளுங்கட்சிக்காரர்கள் வரை பேசிக் கொள்வார்கள். தேர்தல் நெருங்க நெருங்க ஏதாவது ஒரு பிரச்சனை கலைஞருக்கு எதிராகக் கிளம்பும்.

    ஒருமுறை தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற வெளிப்படை நிலைமையிருந்தது. அந்த நேரத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. கலைஞர் தன் அரசியல் சாதுர்யத்தால் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்கச் செய்தார். அதனால் எம்ஜி.ஆர் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டு மீண்டும் கலைஞருக்கு வாய்ப்பு நழுவிப் போனது.

    முதல்வராக ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது ஆட்சி உள்கட்சிச் சண்டையால் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கலைஞர்தான் வருவார் என்ற சூழ்நிலை வந்த நேரத்தில் ராஜீவ்காந்தி மரணம். அதனால் ராஜீவ் அலை வீசி கலைஞரின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

    இதை நான் நினைவுபடுத்தக் காரணம்... ரஜினியின் பேச்சு எப்போதும் விஷயமுள்ளதாகவும், விவேகமாகவும் இருக்கும்.

    அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற நிலை மாறி, வந்துவிடுவார் என்ற சூழ்நிலையில் அவரது தற்போதைய வாய்ஸ்...

    ‘நான் அரசியலுக்கு வருவேன், ஆனால் முதல்வராகப் பதவி ஏற்க மாட்டேன், தேர்தலில் நிற்க மாட்டேன்’ என்று கூறியதில் மிகப்பெரிய அரசியல் சாணக்கியத்தனம் உள்ளது.

    தற்போது ஆட்சியில் முதல்வராக உள்ள எடப்பாடியார் சிறந்த ஆட்சி செய்கிறாரா இல்லையா என்பதைவிட, கட்சிக்காரர்களை ஒற்றுமையுடன் வழிநடத்துகிறார். இதனால் உள்குத்து இல்லாமல் உள்ளது. எடப்பாடியார் ஆட்சி எப்படி இருக்கிறது என்று மக்கள் தீர்ப்பு ஒருபுறம், மத்திய அரசின் பொருளாதார மாற்றங்கள் - அதனால் சிறு, குறு வியாபாரிகளின் எதிர்ப்பலை ரொம்பவே இருக்கிறது. இதுதவிர குடியுரிமைச் சட்ட எதிர்ப்பும் தனி பாதையில் போகிறது.

    கலைஞருக்குப் பின் தலைமையேற்றுள்ள ஸ்டாலின்,

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டினாலும் சட்டசபைதான் அவருக்கு முக்கியம். தற்போது தமிழக மக்களிடம் செல்வாக்குள்ள தனித்தலைவராக ஸ்டாலின் உள்ளார். ஒருமுறை அவருக்கும் வாய்ப்புத் தரலாமே என்பது ஒரு சார்பு மக்களின் எண்ணம்.

    இந்த இரண்டு மாமலைகளை முட்டி மோதி உடைத்து பாகுபலியாக வெற்றி பெறுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல.

    ரஜினியின் பேச்சு, அவரின் கருத்துகள் வரவேற்கக் கூடியதுபோல் இருந்தாலும் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளது.

    ‘முதல்வர் பதவி வேண்டாம்’, ‘தேர்தலில் நிற்க மாட்டேன்’ என்பதில் பல அர்த்தங்கள் உள்ளது.

    வெற்றி பெற்றால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. தோல்வி என்று வந்தால், ‘நான் முதல்வராக விரும்பவில்லை என்பதை மக்கள் விரும்பாததால்தான் தோல்வி என்று சொல்லிக் கொள்ளலாம். தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அது சாதாரணம், தோல்வி என்று ஏற்பட்டால்..? நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.

    இதை ரொம்ப உணர்ந்து மிகமிக ஜாக்கிரதையாக விஷயத்தைக் கையாண்டுள்ளார்.

    ஐம்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை ஆட்சியில் அமர்த்துவேன் என்ற கருத்து வரவேற்க வேண்டிய ஒன்று. கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, தற்போது மத்தியப்பிரதேசம்.

    முதல்வர் பதவி கிடைக்காததால் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்யும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெரிசுகள் இதற்குச் சம்மதிப்பார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

    இந்தக் கேள்விக்கு ரஜினி பதில் சொல்லிவிட்டால் போதும். மற்றவைகளை மக்கள் முடிவு செய்வார்கள்.

    அதே லவ்வுடன்,

    ஜி.அசோகன்

    அசோகனின் ஆத்திச்சூடி

    அலாரம் அடிக்கும், தூங்காதே!

    ஆயுளைக் குறைக்கும், பதறாதே.

    இரவு பகலை எடுத்துச் சொல்லும்

    ஈருடல் இணைந்தால் ஒரு மணி

    உழைத்தாலும் ஓடிவிடும்

    ஊதாரிகளிடம் உட்கார்ந்து விடும்

    ஏன் என்று கேட்டாலும் இருக்காது

    ஐயோ என்றாலும் திரும்பாது

    ஒரு நிமிடம் ஆயுளின் அணுகுண்டு

    ஓலமிட்டாலும் காலத்தைக் காதலிக்கும்

    ஔவளவுதான்... போன முள் திரும்பாது

    ஃக்கடா என்றாலும் நிக்காதுடா!

    தண்டபாணி வாத்தியார் வகையறா

    1

    பழனி மலைக்கோவில் தெரிய, அதன் பக்கவாட்டில் சின்னதும் பெரியதுமாக பல ஊர்கள் இருக்க, அதில் ஒரு கிராமத்தில் ஊர் முழுக்க வீடுகளில் காப்புக் கட்டிஇருக்க, அங்கு இருக்கும் அம்மன் கோவிலில் கொடி மரம் நடப்பட, பெண்கள் குலவை சத்தம் எழுப்புகின்றனர்.

    தெருக்களில் பெண்கள் கோலம் போட, அம்மன் சப்பரத்தில் ஊர்வலமாக வர, சிலர் தேங்காய்-பழம் உடைத்து சாமி கும்பிட, சிறுவர்கள் வெடிதேங்காய் போட, இளைஞர்கள்- இளம்பெண்கள் தெருக்களில் மஞ்சள்நீராடி விளையாடுகின்றனர்.

    கோவில் வாசலில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கட்டவுட் இருக்க, ஊரெங்கும் தோரணம் கட்டியிருக்க, ராட்டினம், பொம்மைக் கடைகள், பலூன் – பாப்கார்ன் – பஞ்சுமிட்டாய் விற்பவன், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என திருவிழாவுக்கான கோலாகலத்துடன் கோவில் இருந்தது. சில பெண்கள் முளைப்பாரி சுமந்தும், சிலர் தீச்சட்டி ஏந்தியும் கோவிலுக்கு வர, இளைஞர்கள் பட்டாசு கொளுத்த, கோவில் வாசலில் சிலர் அக்கினிக் குண்டம் இறங்குகின்றனர்.

    ஒரு பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வர, பெண்கள் குலவை சத்தம் போட, பொங்கல் பானை முன்பு கும்பிட்டபடி முருகேசன்-மகேஷ்வரி, சுப்ரமணி-அழகம்மாள் நிற்க, மகேஷ்வரி-அழகம்மா அரிசியை பொங்கல் பானையில் போடுகின்றனர். கோவில் பிரகாரத்தில் வேறொரு இடத்தில் மாணிக்கம்-வைரம் கிராம மக்களோடு சேர்ந்து பொங்கல் வைக்கின்றனர்.

    அப்போது, பழனி வட்டாரம், தமரக்கொளம் கிராமத்துல இருக்கற அருள்மிகு கனகம்மன் கோவில் திருவிழாக் கோலாகலமா நடக்கறதுக்கு நன்கொடை குடுத்தவங்களோட பெயர்களப் படிக்கறேன்! - ஒலிபெருக்கி வழியாக குரல் வர, கோவிலில் கூடியிருந்த எல்லோரும் காதுகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

    ஊர்தலைவர் கணபதி நாடாள்வார் குடும்பத்தார் அன்பளிப்பு பத்தாயிரம்! – ஒலிபெருக்கி ஒப்பிக்க, ஊர்தலைவர் தன்னோட புலிவால்மீசையை தடவியபடி லேசா சிரித்தார்.

    பெரியதனம் சிவலிங்க நாடாள்வார் குடும்பத்தார் அன்பளிப்பு அஞ்சாயிரம்! - அடுத்தாக ஒலிபெருக்கி சொல்ல, பெரியதனம் முகத்தில் பெருமை பொங்கியது!

    கருப்புசாமி அளவுகாரர் குடும்பத்தார் அன்பளிப்பு மூவாயிரம், முனியாண்டி சேர்வை அன்பளிப்பு ரெண்டாயிரம் - அறிவிப்பு வந்ததும், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் புன்னகைக்க, கிராம மக்கள் அறிவிப்பை கேட்டபடி இருந்தனர்.

    2

    இரவில்... வாணவேடிக்கை காட்சி தெரிய, பூ பல்லாக்கில் அம்மன் அலங்காரத்துடன் வர, கிராம மக்கள் சாமி கும்பிடுகின்றனர். கோவிலுக்கு வெளியே சீரியல் அலங்காரத்தில் அம்மன் பிரமாண்டமாக இருக்க, கோவில் சன்னதியில் கந்தசாமி, பூமாலை, தேங்காய், பழம், ஊதுபத்தி, சூடம் என அலங்காரத்துக்கு தேவையான பூஜை பொருட்களை ஒரு தாம்பாலத்தட்டில் வைத்து பூசாரியிடம் கொடுக்க, அதை வாங்கிய பூசாரி அம்மனை அலங்காரத்துக்கு தயார்படுத்துகிறார்.

    ஒரு ஆணின் கை பச்சை பட்டாடையை எடுக்க, ஒரு பெண் பச்சை நிறப்பட்டுபுடவையை கட்டி முடித்து அதை சரி செய்கிறாள்! அவனின் கை வந்து பூக்காரியிடம் பூ வாங்க, பெண்ணின் கை பூவை தலையில் வைக்கிறது! பின், ஆணின் கை குங்குமம் வாங்க, அவள் குங்குமத்தை நெற்றியில் வைக்கிறாள்! பிறகு அவனது கை வளையல் வாங்க, அவள் கைகளில் வலையல் அணிந்து கொள்கிறாள்! அவன் கை ரிப்பன் வாங்க, ரிப்பனை அவள் ஜடையில் கட்டுகிறாள்.

    முத்தையா ஒரு தாம்பாலத்தட்டில் பட்டாடை, பூ, வளையல், குங்குமம், ரிப்பனோடு கோவில் சன்னதிக்குவந்து பூசாரியிடம் கொடுக்க, பச்சைநிற பட்டுப்பாவாடை-தாவணியில், பூச்சூடி, ரிப்பன் கட்டி, கை நிறைய வளையல் அணிந்து, மாவிளக்கு எடுத்து வருகிறாள்.

    பொன்னுத்தாயி. அவளின் பின்னால் தாய் பச்சையம்மா வருகிறாள்.

    ராட்டினம் மேலே இருந்து கீழே வர, சிறுவர் – சிறுமிகள், குமரிகள் என ராட்டினம் சுற்ற, முத்துப்பல் பளிச்சிட, குடும்ப குத்துவிளக்கு போல ஜொலித்த ஆனந்தி, ராட்டினம் சுற்றுகிறாள். பெட்டியில் இருந்து பாதி உடம்பை வெளியே கொண்டு வந்த அவள், தரையில் கொலுசை வைத்து விளையாடியபடி இருந்தாள்! அவளுக்கு அடுத்த பெட்டியில் இருந்த குகன், கொலுசை வைப்பதும், எடுப்பதுமாக இருந்த ஆனந்தியின் விளையாட்டை ரசித்தபடியே இருந்தான்! ஆனந்தி இருக்கும் பெட்டி கீழே வர, கொலுசு இல்லாமல் இருக்க, அவள் தவிக்க, கொலுசை கையில் வைத்து குகன் ஆட்டம் காட்ட, அவனின் குறும்பை ரசித்தாள் ஆனந்தி.

    ஒருவன் கண்ணாடி பிடிக்க, ஒருபெண் லிப்ஸ்டிக் - கண்மை தடவி, ஜாக்கெட்டை சரி செய்ய, ஓலைக்கீற்று வழியே எட்டிப் பார்த்த ராசாக்கண்ணு - வெட்டுக்கிளி நாக்கால் உதட்டை ஈரமாக்கிக் கொண்டு அவளை ரசிக்க, வயதான சிலர் தள்ளுமுள்ளு செய்தபடி எட்டிப் பார்க்க, அப்போது இரு கைவந்து ‘ஜொள்ளு’ ராசாக்கள், ராசாக்கண்ணு - வெட்டுக்கிளி சட்டையை கொத்தாக இழுக்க, திரும்பிப் பார்த்த வெட்டுக்கிளி திடீரென எகிறிக் குதித்து ஓட,

    எவன்டா? - கடுப்புடன் திரும்பிய ராசாக்கண்ணு, பிறகு மாப்ளைகளா..! - என பம்மியபடி ஒதுங்கி வழி விட்டான்.

    ஓலைக்கீற்றுக் கதவை திறந்து இரண்டு உருவம் உள்ளே வர, கரகாட்டக்காரி கனகா கையில் உள்ள கண்ணாடியில், முத்தையா - குகன் முகங்கள் தெரிந்தது. முகம் மலர்ந்த கரகாட்டக்காரி தாவணியை எடுத்துப் போர்த்திக்கொள்ள, அவளின் கையைப் பிடித்து இழுத்தபடி முத்தையா - குகன் இருவரும் நடக்க, அதற்கு ஏற்ப உருமி சத்தம் கேட்க, ராசாக்கண்ணு உட்பட சில ‘ஜொள்ளு’ ராசாக்கள் வாயைப் பிளந்து, ஏக்கத்துடன் பார்த்தனர்.

    கிரவுண்டுக்கு வந்ததும் முத்தையா, அவளை சுழற்றி விட, பம்பரம் போல சுழன்ற கரகாட்டக்காரி கனகா நெஞ்சு மேல் போர்த்தியிருந்த தாவணியை லாவகமாய் எடுத்து வீச, பறந்து வந்த தாவணையைப் பிடிக்க பெரிய தள்ளு முள்ளு நடந்தது!

    கிரிக்கெட் வீரனைப்போல அதை கச்சிதமாக ‘கேட்ச்’ பிடித்த ராசாக்கண்ணு, இதுபோதும்டா சாமி, மோட்சம் கெடச்சிருச்சு! என தாவணியை முகத்தால் மூடி மோகம் கொண்டான்!

    ஆட்டத்துக்கு தயாரான கரகாட்டக்காரி கனகா, முத்தையாவை ஆட வரும்படி கண்ஜாடை காட்ட, அவன் தயங்கி நிற்க,

    கையப்புடுச்சுக்கிட்டு பகுமானமா வந்தல்ல, எதுக்கு பம்முற? களத்துல எறங்கு, கை வரிசையக் காட்டு! – வழுக்கட்டாயமாக அவனை கனகா இழுக்க,

    முத்தையா – குகனுக்கு ‘சிக்னல்’ தர, அவனும் களத்தில் இறங்க, மேளம் முழங்க, ஆட்டத்துக்குத் தயாராகின்றனர்! கரகாட்டகாரி கனகாவுடன் குகன், முத்தையா, ராசாக்கண்ணு, வெட்டுக்கிளி நான்கு பேரும் குத்தாட்டம் போட, கோவில் முன்பு கூடி இருக்கும் கிராமமக்கள் ஆட்டத்தை ரசிக்க, திருவிழா களை கட்டுகிறது.

    கரகாட்டக்காரி கனகாவுடன் ராசாக்கண்ணு குத்தாட்டம் போட, அவன் ஆடிய அழகைப் பார்த்து எல்லோரும் சிரிக்க, கடுப்பான மனைவி தங்கப்பொண்ணு, ராசாக்கண்ணு காதை திருகி இழுத்து வந்து, அவனை தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். கனகாவுடன் குகன், முத்தையா, வெட்டுக்கிளி ஆடிக் கொண்டு இருக்க, மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்த ராசாக்கண்ணு ஆர்வத்தை அடக்க முடியாமல் தவிக்க, பக்கத்தில் இருந்தவளிடம் தங்கப்பொண்ணு ஊர் கதை அளந்தபடி இருக்க, அந்த ‘கேப்’பில் ராசாக்கண்ணு களத்தில் இறங்கி ஆட்டத்தைத் தொடர்கிறான்.

    ஆட்டத்தின் நடுவே ஆர்வமிகுதியில் ராசாக்கண்ணு, 500 ரூபாயை கனகாவின் நெஞ்சில் குத்தப்போக, அவள் நேக்கா விலகி, தோள் பட்டையைக் காட்ட, அவன் அவளை சுற்றி வர, அவள் திரும்பிக்கொள்ள, அவன் வேறுவழியில்லாமல் தோள்பட்டையிலேயே பணத்தை குத்த, இதை கவனித்த தங்கப்பொண்ணு ஆவேசமாக வந்து அவனது காதை திருகி இழுத்துச்செல்ல, அந்த சந்தடி சாக்கில் கரகாட்டக்காரிக்கு குத்திய பணத்தை ராசாக்கண்ணு அடிக்கிறான்!

    3

    ஊருசனங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடக்க இருக்கறதால எல்லாரும் சன்னதிக்கு வரும்படி விழாக்கமிட்டி சார்பா கேட்டுக்கறோம்! – கொஞ்சம் ஓய்வில் இருந்த ஒலிபெருக்கி மறுபடியும் குரல் கொடுக்க, ஆங்காங்கே சிதறிக் கிடந்தவர்கள் கோவில் சன்னதியில் வந்து கூடினார்கள்!

    அலங்காரத்தில் இருக்கும் அம்மனுக்கு பூஜை நடக்க, கிராமமக்கள் மனம் உருக சாமி கும்பிட, அம்மனுக்கு முன்பு ஐந்து பரிவட்டங்களும், பூரணகும்பங்களும் தயார் நிலையில் இருந்தது.

    இப்ப, முதல் மரியாதை.., குடிகெடுத்தான் வகையறா..! குடிகெடுத்தான் வகையறா…! - ஒலிபெருக்கி சொல்ல, கிராம மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து உதடு பிதுக்க,

    ஏப்பா, குடிகெடுத்தான் வகையறா இன்னும் வரலயா? – ஒலிபெருக்கி குரல் முணு முணுக்க,

    அப்போது, கோவிலுக்கு வெளியே வேகமாக ஒரு சொகுசு கார் வந்து நிற்க, அதிலிருந்து பட்டுப்புடவை, கழுத்து நிறைய நகையுடன் இருளாயி - அமுதா, இன்னும் இரு பெண்கள் இறங்க, பின், இருளாயி தம்பிகள் இருளப்பன் - நாகப்பன், மகன் மருது மூவரும் பட்டு வேட்டி - சட்டையில் இறங்கி கோவிலுக்குள் வர, குடிகெடுத்தான் வகையாறா ஆட்களின் முகங்கள் ‘கடு கடு’வென இருக்க, ஊர்மக்கள் அவர்களை வெறித்தபடி பார்த்தனர்.

    பிறகு மனைவி, குழந்தையுடன் கதிர்வேலு சன்னதி வந்து நிற்க, பெண்கள் குலவை

    Enjoying the preview?
    Page 1 of 1