Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiraiyulagam Kandu Varum Thiruppangal
Thiraiyulagam Kandu Varum Thiruppangal
Thiraiyulagam Kandu Varum Thiruppangal
Ebook713 pages4 hours

Thiraiyulagam Kandu Varum Thiruppangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் கடைக்கோடி கிராமவாரிக்கும் கிடைத்துள்ள அருமையான பொழுதுபோக்கு சினிமாதான். ஆரம்பத்தில் புராணம், சரித்திரம் என்று புறப்பட்ட தமிழ் சினிமா, பின்னர் குடும்பத் தகராறுகள், சர்ச்சைக்குரிய குடும்ப உறவுகள், காதல், கிராமியம், வன்முறை... என்று பல திருப்பங்களை கண்டு வந்துள்ளது. ஐந்து லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்கே யோசித்த காலம் மாறி, ‘ஐம்பது கோடி பட்ஜெட் பெரிய விஷயமில்லை’ என்று பேசுமளவு சினிமா பொருளாதாரம் மாறுதல் கண்டுள்ளது. தயாரிப்பாளர் கையிலிருந்த அதிகாரம் மற்றும் ஆதிக்கம், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் வசமெல்லாம் கைமாறி விட்ட சூழல் நிலவுகிறது. அன்றிலிருந்து, தமிழ்த் திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் என்னென்ன? அவை எந்தளவுக்கு ஆரோக்கியமானவை? போன்ற கேள்விகளுக்கு தமிழ் சினிமாவின் அன்றைய, இன்றைய பிரபலங்கள் தங்களின் சுவாரஸ்யமான அனுபவங்களுடன் விடை தேடப் போகிறார்கள். தமிழ் சினிமாவின் ஒவ்வொரு துறை பற்றியும் அலசப் போகும் இத்தொடர், தயாரிப்பு துறையில் இருந்து தனது பயணத்தைத் துவக்குகிறது...

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580154308374
Thiraiyulagam Kandu Varum Thiruppangal

Related to Thiraiyulagam Kandu Varum Thiruppangal

Related ebooks

Reviews for Thiraiyulagam Kandu Varum Thiruppangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiraiyulagam Kandu Varum Thiruppangal - S.J. Idhaya

    http://www.pustaka.co.in

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள்

    Thiraiyulagam Kandu Varum Thiruppangal

    Author :

    எஸ்.ஜே. இதயா

    S.J. Idhaya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sj-idhaya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் - எஸ்.ஜே. இதயா

    சினிமாவில் பல்துறை வித்தகர் எம்.ஜி.ஆர்.

    ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்

    பூஜைக்கு மட்டுமே இரண்டே கால் கோடி ரூபாய்

    சிவாஜிக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்!

    ரஜினி போட்ட

    பாக்கியராஜ் தந்த அதிர்ச்சி!

    கலைஞருக்காக வைக்கப்பட்ட சினிமா டைட்டில்!

    17 நாட்களில் எடுத்த படம்!

    லட்சியங்களை மூட்டை கட்டி விட்டேன்

    சிவாஜி ஸாருடன் நடிக்கும்போது உடம்பு முழுக்க பயம்

    வலியோனே வெல்வான்

    விஸா வாங்க பட்ட பாடு!

    ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதைதான் முக்கியம்

    எங்கள் படங்களில் வில்லன் யார் தெரியுமா?

    என் படம் என்று சொல்லும் உரிமை இயக்குனருக்கு உண்டு

    என்னுடைய படங்களே எனக்குப் பாடங்கள்

    திகிலோடு எம்.ஜி.ஆரைப் பிந்தொடர்ந்தேன்

    சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதினேன்

    வசம் எழுதுவது, கத்தி மேல் நடப்பது போன்றது

    அவ்வை சண்முகி உருவான விதம்

    காவலன் வேடத்தில் வெட்கப்பட்டு நடித்த எஸ்.எஸ்.ஆர்.

    எனக்கு பஸ் டிக்கெட் எடுத்தார் எம்.ஜி.ஆர்

    டான்ஸ் ஆடுறியா, மண்ணு மிதிக்கிறியா?

    பிழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கியே? என்றார் எம்.ஜி.ஆர்

    என்னைத் தொட்டு விஜய்காந்த் நடிக்கக் கூடாது என்று சொன்ன நடிகை

    விஜயகாந்த் சந்தித்த சோதனைகள்!

    ஒரே ஒரு படத்தில் குடிப்பதைப்போல நடித்தேன்

    பஞ்சத்துக்கு ஹீரோ ஆனேன்

    ஏ.வி.எம்.மிற்குள் நுழைய முடியாமல் தவித்த சத்யராஜ்

    நம்பியாரை மிரட்டிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள்

    பட வாய்ப்புகளை இழந்த ராதாரவி

    உதயசூரியன் சின்னத்துக்காகப் போடப்பட்ட நிபந்தனை!

    புதிய தலைமுறைக்கு எஸ்.எஸ். சந்திரன் அட்வைஸ்!

    சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யார்?

    மறக்க முடியாத முதல் நாள் ஷுட்டிங்

    எம்.ஜி.ஆர். படத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்

    என்னை மிரட்டிய இயக்குனர் தயாரிப்பாளர்

    செகண்ட் ஹீரோ – படத்தில் ஒரு செகண்ட்தான் வந்தேன்

    சின்னி ஜெயந்த் சினிமாவுக்கு வந்த விதம்

    சிவாஜியின் கோபத்திற்கு ஆளான வி.எஸ். ராகவன்

    வாலி கொடுத்த அஸ்திரத்தை வீசினேன்

    எம்.ஜி.ஆரின் கோபத்திற்க்கு ஆளான வி.எஸ். ராகவன்

    சினிமா சான்ஸை தட்டிப் பறித்த இளமை

    மறக்க முடியாத எம்.ஜி.ஆரின் பாராட்டு

    கால்ஷீட் பிரச்னை!

    மெல்லிசை மன்னரின் வாழ்க்கைப் போராட்டம்!

    கவிஞர் கிண்டல் செய்து எழுதிய பாடல்

    கவிஞர் தந்த அதிர்ச்சி!

    எம்.ஜி.ஆர். என்னைப் படுத்திய பாடு

    தேவாவுக்கு, ரஜினியிடம் கிடைத்த பாராட்டு!

    ஆட்டோக்காரன் பாட்டு உருவான விதம்!

    இளையராஜா என் பாடலுக்குத்தான் முதன்முதலாக இசை அமைத்தார்

    எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய பாடல்கள்

    எம்.ஜிஆர். கோபப்பட்டார்

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் – 57

    என் மீது இயக்குனர்கள் வைத்த நம்பிக்கை

    டி.எம்.எஸ்.ஸுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?

    எம்.ஜி.ஆர். சிவாஜிக்காக குரலை மாற்றி பாடினேன்

    எனக்கு அமைந்த திருப்பு முனை

    எம்.ஜி.ஆர். அளித்த இன்ப அதிர்ச்சி

    மலேஷியா வாசுதேவனுக்குக் கிடைத்த வாய்ப்பு!

    என் கனவு நனவானது

    தமிழ்த் திரையுலகின் முதல் பி.ஆர்.ஓ

    ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்

    எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்

    சிவாஜி ஸ்டில் எதுக்கு?

    சிவாஜி ஒரு யதார்த்தவாதி

    நான் அதிர்ந்து போனேன்

    காளையுடன் ரஜினி மோதும் காட்சி படமாக்கப்பட்டது எப்படி?

    துல்லியமாக அமைந்த இரட்டை வேட காட்சிகள்

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்து விட்டான் தேவன்

    சினிமா ரசிகர்கள் ஒளிப்பதிவை கவனிக்க ஆரம்பித்த காலம்

    அபாரமான கற்பனா சக்தி கொண்டவர் பாரதிராஜா

    வினியோகஸ்தர்களைக் கவர்வதில் ‘ஸ்டில்’களின் பங்கு

    ரஜினி கழுத்தில் கயிறு போட்டுக்கொண்ட காட்சி எங்கே?

    ஒரு ஸ்டில்லுக்கு விலை இத்தனை லட்சமா?

    எனது மறக்க முடியாத படங்கள்

    எடிட்டிங் செய்யும் விதம்

    என் வார்த்தைகளை நம்பி விற்பனையான படம்

    எடிட்டிங் என்பது வெறுமனே வெட்டி ஒட்டும் வேலை அல்ல

    லிங்கம் கிடைக்காததால் ஏற்பட்ட பதற்றம்

    எது ஆர்ட் டைரக்டரின் வெற்றி…?

    அன்றைய, இன்றைய நடனக் கலை

    நடனக்காட்சிகள் படமாகும் விதம்

    ஒரே ஷாட்டில் பாடலைப் படமாக்கினோம்

    புகழுக்காக ரிஸ்க் எடுக்கும் வீரர்கள்

    இந்த பெண்ணுக்கு மேக்கப் போட்டது யார்?

    மேக்கப் இவ்வளவு கஷ்டமான வேலையா?

    மேக்கப் மேனுக்கு அப்ஸர்வேஷன் அவசியம்

    மோகனுக்குக் குரல் கொடுத்தேன்

    ப்ரொடக்‌ஷன் மேனேஜரின் பணி

    யானைக்காக அலைந்தேன்

    தமிழ் சினிமா ஆரோக்கியமாகவே இருக்கிறது

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் - எஸ்.ஜே. இதயா

    இந்தியாவின் கடைக்கோடி கிராமவாரிக்கும் கிடைத்துள்ள அருமையான பொழுதுபோக்கு சினிமாதான்.

    ஆரம்பத்தில் புராணம், சரித்திரம் என்று புறப்பட்ட தமிழ் சினிமா, பின்னர் குடும்பத் தகராறுகள், சர்ச்சைக்குரிய குடும்ப உறவுகள், காதல், கிராமியம், வன்முறை... என்று பல திருப்பங்களை கண்டு வந்துள்ளது.

    ஐந்து லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்கே யோசித்த காலம் மாறி, ‘ஐம்பது கோடி பட்ஜெட் பெரிய விஷயமில்லை’ என்று பேசுமளவு சினிமா பொருளாதாரம் மாறுதல் கண்டுள்ளது. தயாரிப்பாளர் கையிலிருந்த அதிகாரம் மற்றும் ஆதிக்கம், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் வசமெல்லாம் கைமாறி விட்ட சூழல் நிலவுகிறது.

    அன்றிலிருந்து, தமிழ்த் திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் என்னென்ன? அவை எந்தளவுக்கு ஆரோக்கியமானவை? போன்ற கேள்விகளுக்கு தமிழ் சினிமாவின் அன்றைய, இன்றைய பிரபலங்கள் தங்களின் சுவாரஸ்யமான அனுபவங்களுடன் விடை தேடப் போகிறார்கள்.

    தமிழ் சினிமாவின் ஒவ்வொரு துறை பற்றியும் அலசப் போகும் இத்தொடர், தயாரிப்பு துறையில் இருந்து தனது பயணத்தைத் துவக்குகிறது.

    ***

    பூஜைக்கு தேங்காய் உடைப்பது முதல் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைப்பது வரை - என்று சிலர் சினிமாவை வரையறை செய்வதுண்டு. ஆனால் உண்மையில், பூஜைக்கு முன்பாகவே தயாரிப்பாளர் தனது சூட்கேஸை திறக்க வேண்டும்.

    நடிகர், டெக்னீஷியன்களுக்கு அட்வான்ஸ், அழைப்பிதழ், பூஜைக்கே போஸ்டர்... என்று செலவு துவங்கி விடுகிறது. பூசணிக்காய் உடைத்த பிறகும் டப்பிங், ரீ - ரெக்கார்டிங்... என்று செலவு தொடரும்.

    ஒருவர் பணப் பெட்டியை திறப்பதால்தான் ஒரு படப்பெட்டி உருவாகிறது. ஒரு தயாரிப்பாளர்தான் ஒரு திரைப்படத்தின் ஆணிவேர். எனவே ஒரு திரைப்படத்தின் முழு அதிகாரம் தயாரிப்பாளர் வசமே இருக்க முடியும். அப்படித்தான் இருந்தது ஒரு காலத்தில்!

    ஏ.வி.எம். சரவணன்

    என் தந்தை காலத்திலெல்லாம் தயாரிப்பாளர்கள் வைத்ததுதான் சட்டம். பிடித்ததை சேர்ப்பது, பிடிக்காததை நீக்குவது எல்லாம் தயாரிப்பாளர் அதிகாரமாக இருந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அது மெல்ல மாறி, இன்று முழுக்க, முழுக்க நடிகர் அல்லது இயக்குநர் வசம் எல்லா முடிவுகளும் போய் விட்டன. இது ஆரோக்கியமான விஷயமா, இல்லையா என்பதை விட, இன்று இதுதான் சாத்தியமானது என்றாகி விட்டது என்கிறார் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன்.

    அந்த காலத்திலெல்லாம் கதையும், அதை வழங்கும் விதமும் மட்டுமே பிரதானமாக இருந்தது. ‘ஏற்கெனவே தெரிந்த கதையாக இருந்தால் கூட, அதை வழங்கும் விதத்தில் (ப்ரசன்டேஷன்) வழங்கினால் ஒரு படத்தை வெற்றிப் படமாக்கி விட முடியும்’ என்று என் தந்தை ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் பலமாக நம்பினார். அப்படி பல பழைய கதைகளை மீண்டும் படமாக எடுத்து வெற்றியும் கண்டோம்.

    Nobody’s Child என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் களத்தூர் கண்ணம்மா. அதே கதையை சின்ன அண்ணாமலை அவர்களும் ‘கடவுளின் குழந்தை’ என்ற பெயரில் படமாக எடுத்து வந்தார்கள். எனவே அந்தப் படம் வெளியாவதற்குள் ‘களத்தூர் கண்ணம்மா’வை வெளியிட்டுவிட வேண்டுமென்ற துடிப்பு எனக்கும், என் சகோதரருக்கும் இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்த என் தந்தையோ சில காட்சிகளை ‘ரீஷட்’ செய்யும்படி உத்தரவிட்டு விட்டார்.

    நாங்கள் பதறிப் போனோம். என் தந்தையோ மிக அமைதியாக, ‘வாரியார் சொல்லி ராமாயணம் கேட்டிருக்கியா?’ என்று என்னை வினவினார். ‘இரண்டு தடவை கேட்டிருக்கேன்’ என்றேன். ‘ஏற்கெனவே தெரிந்த ராமாயணம் தானே? ஏன் இரண்டு முறை கேட்டாய்?’ என்று அவர் கேட்க, ‘வாரியார் சொல்ற விதம் நல்லாயிருக்கும்’ என்றேன். ‘அதேதான் சினிமாவிலும், சொல்ற முறை சிறப்பா இருந்தா போதும்... படம் வெற்றி பெறும். ராமாயணம், மகாபாரதம், டென் கமாண்ட்மென்ட்ஸ் எல்லாம், ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிஞ்ச கதைதான். ஆனால் பல பேர் எடுத்தும் திரும்ப, திரும்ப அவை எப்படி வெற்றி பெறுகின்றன?’ என்று கேட்டு எங்களை அயர வைத்தார் அப்பச்சி.

    எனவேதான் ஒரு சின்ன விஷயம் திருப்தி இல்லாமல் தெரிந்தால் கூட, அதை சரி செய்யாமல் படத்தை வெளியிட அப்பச்சி ஒப்புக்கொள்ள மாட்டார். ‘களத்தூர் கண்ணம்மா’வை கூட அவர் விருப்பப்படி ரீ-ஷூட் பண்ணி, தாமதமாகத்தான் வெளியிட்டோம். ஆனாலும் அது இன்று வரை பேசப்படும் படமாக அமைந்து விட்டது.

    ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில்

    அந்தப் படம் எட்டாயிரம் அடி வளர்ந்திருந்தபோதே, சில காட்சிகளை ரீ-ஷூட் செய்ய பணித்தார் அப்பச்சி. ஆனால் அப்போது டைரக்ட் செய்து கொண்டிருந்த பிரகாஷ்ராவுக்கு அதில் உடன்பாடில்லை. திருப்தி இல்லைன்னா என்னை ரிலீவ் பண்ணிடுங்க என்று அவர் கேட்டுக் கொண்டார். அமர தீபம், உத்தமபுத்திரன் ஆகிய வெற்றிப் படங்களை அவர் தந்திருந்த நேரம் அது. கூடுதல் சம்பளமானாலும் பரவாயில்லை என்று நானும், எனது சகோதரரும் அவரை விரும்பி அழைத்து வந்திருந்தோம். ஆனால், அவர் இப்படி சொன்னதும் அப்பச்சி ‘அவரை ரிலீவ் பண்ணிடுங்க’ என்று கூறி விட்டார்.

    ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார்

    நாங்கள் தயங்கினோம். ஆனால் அப்பச்சி, ‘ஒரு அட்டெண்டர் போறேன்னு சொன்னாக்கூட நாம கம்பெல் பண்ணி அவனை வச்சுக்கக் கூடாது. நாளை ‘நான்தான் அப்பவே போறேன்னு சொன்னேன்ல’ என்ற கேள்வி வரும்’ என்று கூறி விட்டார். அதன்பின் மீதிப் படத்தை பீம் சிங் அவர்களை வைத்து எடுத்து முடித்தோம். இப்படி அப்போதெல்லாம் தயாரிப்பாளர் முடிவுதான் இறுதியானதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை.

    சுமார் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் ‘முரட்டுக்காளை’ எடுத்த போதே அதை உணர்ந்து விட்டோம். அப்போது அப்பச்சி எல்லாம் இருத்திருந்தால், கொஞ்சம் தடுமாறித்தான் போயிருப்பார். ஆனால், நாங்கள் இந்த நவீன மாற்றத்திற்கு படிப்படியாக பழகிப் போனோம்.

    சமீபத்திய ‘சிவாஜி’ படம் எடுக்கப்பட்ட விதம், ஏ.வி.எம். நிறுவனத்திற்கு முற்றிலும் அனுபவம் இல்லாத விஷயம். படம் எப்போது முடியும், என்ன பட்ஜெட்டில் முடியும் என்பதெல்லாம் கடைசி வரை தெரியாத விஷயமாகவே இருந்தது. இதை நான் குறையாக சொல்ல வில்லை. இயக்குநர் ஷங்கர் துவக்கத்திலேயே இதை எல்லாம் தெளிவுபடுத்தி விட்டுத்தான் படத்தை ஆரம்பித்தார்.

    நாங்களும் அதற்கு ஒப்புக் கொண்டுதான் சிவாஜி. படத்தில் இறங்கினோம். ஆனாலும் ஒரு பிராந்திய மொழிப் படத்திற்கு இவ்வளவுப் பெரிய செலவு உண்மையில் அதிகம்தான். ஆனால் அதற்கேற்ற வெற்றியும், வசூலும் வந்துவிட்டது. செலவழித்த பணம், படம் முழுக்க பிரம்மாண்டமாக தெரிந்ததும் முக்கியமான விஷயம்.

    இந்த இடத்தில் ரஜினி பற்றி ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். ஏ.வி.எம். மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் அவர். ஏதோ ஒரு விருந்தில் ஒரு நண்பர், ‘இனிமேல் ஏ.வி.எம். எல்லாம் படமெடுத்தால் ஓடாது’ என்று சொன்னதை மௌனமாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, ஓரிரு தினங்களிலேயே எனக்கு ஃபோன் பண்ணி, ‘நாம் படம் பண்றோம்’ என்றார். அதுதான் ‘எஜமான்’.

    சிவாஜியில் கூட, நாங்கள் கடன் வாங்கித்தான் படம் பண்றோம் என்ற நிலையில், ‘கடன் வாங்கி எனக்கு சம்பளம் தர வேண்டாம். பிசினஸ் முடிஞ்சு கொடுத்தால் போதும்’ என்று கூறிவிட்டார். வெறும் 1001 ரூபாய் அட்வான்ஸ் வாங்கியதோடு, முழுப் படத்தையும் முடித்துக் கொடுத்தார் ரஜினி - என்று நினைவு கூர்ந்தார் சரவணன்.

    ஏ.வி.எம். சரவணன் எப்போதும் கைகட்டி, சாந்தமாய் நிற்பதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். அவருக்கு கோபம் வரும் என்றால், பல பேர் நம்பமாட்டார்கள். ஆனால் அவருக்கும் கோபம் வந்திருக்கிறது. ஒருமுறை கோபத்தில் கத்தி, அவரது குரல் நாளமே (வோக்கல் கார்ட்) சேதப்பட்டு, ஒரு வாரம் மௌன சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

    அப்படி என்ன சம்பவம் அது?

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் – 2

    சினிமாவில் பல்துறை வித்தகர் எம்.ஜி.ஆர்.

    ஏ.வி.எம். சரவணன் தொடர் தொடர்கிறார்:

    எங்களது ஒரு படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்த நேரம் அது. திடீரென்று டப்பிங் பேச வேண்டிய நடிகர் வரவில்லை. அவரது மேனேஜருக்கு ஃபோன் செய்தேன். அவரோ ‘சம்பள பாக்கி 14 ஆயிரம் ரூபாயை செட்டில் பண்ணினால்தான், டப்பிங் பேச அவர் வருவார்’ என்று கூறினார்.

    அவ்வளவுதான்... எனக்கு கடும் கோபம் வந்துவிட்டது. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கத்தி விட்டேன். அதில்தான் எனது குரல் நாளமே சேதப்பட்டது. பல நாட்கள் யாரிடமும், ஃபோனிலும் நேரிலும் பேச முடியாமல் அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று.

    ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில்...

    சுருளிராஜன், முத்துராமன் ஆகியோர் எங்கள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டனர். ஆனால், அப்போதும் கூட பேசிய தொகையை அவர்கள் வீட்டிற்கே கொடுத்து அனுப்பியவன் நான். எனவேதான் 11 ஆயிரம் ரூபாய்க்காக அந்த மேனேஜர் அப்படி பேசியதுமே, நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.

    எனக்கு அந்த நடிகர் மீது எந்த வருத்தமும் இல்லை. நடிகர்களிடம், தான் விசுவாசமாக இருப்பதாகக் காட்ட, ஒரு சில மேனேஜர்கள் இப்படி தராதரம் தெரியாமல் நடந்து கொள்வது சகஜம்தான். விஷயம் தெரிந்து, அந்த நடிகரும் உடனே வந்து டப்பிங்கை உரிய காலத்தில் முடித்துக் கொடுத்தார். நாங்கள் பட்ஜெட்டிற்குள் படமெடுக்க முயல்வோம் என்பது உண்மைதான். அதற்காக பிறரின் சம்பளத்தில் கை வைக்கமாட்டோம். இன்னும் சொல்லப்போனால், பல சந்தர்ப்பங்களில் பேசிய சம்பளத்தை விட அதிகமாக நாங்களே மனமுவந்து அளித்துள்ளோம்.

    உதாரணமாக, ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்திற்கு விசுவுக்கு பேசிய சம்பளம் ஒன்று. ஆனால், விசுவின் உழைப்பால், அந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது. எனவே அவருக்கு டபுள் சம்பளம் அளிக்க முன்வந்தேன். அப்போது அவர், ‘இதற்கு பதிலாக ஏ.வி.எம். சார்பில் ஒரு படம் தாருங்களேன்’ என்றார். அப்படி அமைத்ததுதான் ஜனாதிபதி விருது பெற்ற ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற திரைப்படம்.

    15 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட பட்ஜெட் படம் அது. அதற்குக் காரணம் விசுவும், அவரது தம்பி கிஷ்முவும்தான். காலை 9 மணி முதல் ஆறு மணி வரை தவறாமல், நேர விரயம் இல்லாமல் ஷூட்டிங் நடந்தது. வீணாக ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடையாது. ஒருநாளும் ஓவர்டைம் கிடையாது. 15 நாட்களில் 4 ரோல்களில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விசு. அந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர் யாரும் முன்வரவில்லை. ‘அடுத்த படம் தர மாட்டேன்’ என்று மிரட்டிதான் வியாபாரம் செய்தேன். ஒரு விநியோகஸ்த நண்பர் ‘இது எனது கிஃப்ட் செக்’ என்று கூறியே பட விலையை தந்தார். ஆனால் அந்தப் படம், எல்லோருக்குமே பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது.

    பட்ஜெட்டிற்குள்ளே படம் எடுப்பதில் எனது அருமை நண்பர் எஸ்.பி. முத்துராமனும் கில்லாடி. ‘முரட்டுக்காளை’ ரயில் சண்டை உட்பட, பல நேரங்களில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கும் குறைவான செலவிலேயே படமெடுத்து தந்து அசத்தியுள்ளார் எஸ்.பி... சினிமாவில் இது சற்று அபூர்வமானது - என்று முடித்தார் ஏ.வி.எம். சரவணன்.

    எஸ்.பி. முத்துராமன்

    சினிமாவில் திட்டமிடும் பட்ஜெட்டிற்குள் படமெடுப்பதே அபூர்வமான விஷயம்தான். பல விதங்களில் அது உயர்ந்து விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. எந்த மாதிரியான சாத்தியங்கள்? நமக்காக பதில் தருகிறார் சத்யா மூவிஸ் மூலம், பல வெற்றிப் படங்களை தந்துள்ள ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.

    தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ்... போன்ற நிறுவனங்கள் எல்லாம் மிகவும் திட்டமிட்டு பட்ஜெட்டிற்குள் படம் எடுப்பார்கள். ஆனாலும் சில நேரங்களில் 10 அல்லது 15 சதவிகிதம் கூடுதலாகிவிடும். சாதாரணமாக ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு ஒரு வாரம் உடம்பு சரியில்லாமல் போனால் கூட, பட்ஜெட் கூடிவிடும். உடனே அடுத்த ஒரு வாரத்தில் எடுத்து விட முடியாது. அவருக்கு வேறு பட ஷூட்டிங் இருக்கும். அவர் ஃப்ரீயாக இருந்தால் மற்றவர்களுக்கு வேறு ஷூட்டிங் இருக்கும்.

    இப்படி சின்ன விஷயத்தினால் கூட பட்ஜெட் உயரும். காட்சி சரியாக அமையவில்லை என்று அதைப் பார்த்த பிறகு தோன்றினால், பழையபடி ஷூட் செய்ய வேண்டி வரும். இப்படியெல்லாம் திடீர் செலவு வரும். அதிலும் எம்.ஜி.ஆர். இதில் கறாரானவர். அவரை வைத்து வேலை வாங்குவது கடினம். தான் முடிவு செய்துவிட்டால் அதில் தீர்மானமாக இருப்பார்.

    எங்களது முதல் தயாரிப்பான ‘தெய்வத்தாய்’ படத்தில் இடைவேளை காட்சி முக்கியமானது. அந்த காட்சிக்கான ரீ - ரிக்கார்டிங் போது. எம்.ஜி.ஆர். உடனிருக்க விரும்பியிருந்தார். ஆனால், டைரக்டர் பி. மாதவனோ எம்.ஜி.ஆர். வரும் முன்பே அந்தக் காட்சிக்கான ரீ - ரிக்கார்டிங்கை முடித்து ஓ.கே. செய்திருந்தார். கோபம் அடைந்த எம்.ஜி.ஆர், இயக்குநர் மாதவனைப் பார்த்து கத்த ஆரம்பித்து விட்டார். பிறகு என்னிடம், ‘இது - யார் படம்னு நினைச்சுகிட்டார். இது என் படம்... என் படம்’ என்று ஆவேசப்பட்டார்.

    விசு

    முடிந்தது முடிந்து விட்டது என்று விடவில்லை எம்.ஜி.ஆர்... மீண்டும் அவர் மேற்பார்வையில் ரீ - ரிக்கார்டிங் நடந்த பிறகு, அவரே ஓ.கே. செய்துவிட்டுதான் கிளம்பினார்.

    இது எம்.ஜி.ஆர். செலுத்திய ஆதிக்கம் என்று கூற முடியாது. காரணம், சினிமாவின் பல்துறைகளிலும் அவர் வித்தகராய் இருந்தார். மக்களின் நாடித் துடிப்பை அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் யாரையும் வீடு தேடிச் சென்று சந்திக்காத திரையுலக ஜாம்பவான் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் கூட, ஒருமுறை எம்.ஜி.ஆரை தேடி வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படமாக்கப்பட்டது. அது ஹிந்திப் படம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்ட படம். காட்சிக்கு காட்சி அந்த ஹிந்திப் படம் மாதிரியே தமிழில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் சண்டைக் காட்சிகளையும் அப்படியே எடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடில்லை. தனது வீரம் வெளிப்படுகிற மாதிரி சண்டைக் காட்சிகளை மெருகேற்ற திட்டமிட்டார் அவர். ஆனால் அதற்கு சுந்தரம் உடன்படவில்லை.

    எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டார். வேறு வழியின்றி எம்.ஜி.ஆரை தேடி வந்தார் சுந்தரம். என்ன மேன், என்ன சொல்றே? என்று சுந்தரம் கேட்டார். மற்ற எல்லா காட்சிகளையும் உங்கள் விருப்பப்படி ஷூட் செய்யுங்கள். எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் சண்டையில்தான் நான் பெயர் வாங்கி வருகிறேன். எனவே அதை மட்டும் என் விருப்பப்படி அனுமதியுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்... அதற்கு உடன்பட்டு எம்.ஜி.ஆரை மீண்டும் நடிக்க கூட்டிப் போனார் சுந்தரம்.

    எம்.ஜி.ஆர். நடித்து முதல் படமாக வந்திருக்க வேண்டிய படம் சாயாதேவி. நாராயணி கம்பெனியின் தயாரிப்பில் இயக்குனர் ஹஷ்வந் நந்தலால் இயக்கிய படம். எம்.ஜி.ஆருடன் டி.வி. குமுதினி, டி.ஏ. மதுரம் ஆகியோர் நடித்தனர். படம் ஓரளவு வளர்ந்த நிலையில், எம்.ஜி.ஆர். மீது தயாரிப்பாளர்களுக்கு திருப்தியில்லை. அவரை மாற்ற வேண்டும் என்று டைரக்டரிடம் கோரினார்கள். ஆனால் டைரக்டர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘எம்.ஜி.ஆரை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் குமுதினியை மாற்றுங்கள்’ என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. எம்.ஜி.ஆரின் முதல் படம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டிய ‘சாயாதேவி’ பாதியிலேயே நின்று போனது என்றார் ஆர்.எம். வீரப்பன்.

    ஆர்.எம். வீரப்பன்

    தனக்காக பரிந்து பேசி, இறுதி வரை பிடிவாதமாக இருந்த டைரக்டர் ஹஷ்வந் நந்தலாலை, எம்.ஜி.ஆர். நிச்சயம் ரசித்திருப்பார். அதனால் தானோ என்னவோ பிற்காலத்தில் எம்.ஜி.ஆரும் பல விஷயங்களில் அதே போல் உறுதியாக நின்றார். அதையும் ஆர்.எம். வீரப்பனே விவரிக்கிறார்.

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் – 3

    ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்

    ஆர்.எம். வீரப்பன் தொடர்கிறார்:

    காவல்காரன் படத்திற்கு ஜெயலலிதாவை ஹீரோயினாக போடலாம் என்று நான் சொன்னேன். எம்.ஜி.ஆரோ சரோஜாதேவிதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்களைப் பொறுத்தவரை அவர் சொல்வதுதான் வேதம்.

    நடிகைகளில் பானுமதி அந்த ரகத்தைச் சேர்ந்தவர். தனது முடிவில் பிடிவாதமாக இருக்கக் கூடியவர். ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் எம்.ஜி.ஆருடன் நடித்து வந்தார். அந்தப் படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை கூட்டி வந்து, ‘காடு வௌஞ் சென்ன மச்சான் நமக்கு’ என்ற அற்புதமான பாடலை எழுத வைத்து, ரிக்கார்டிங் எல்லாம் முடித்து வைத்திருந்தேன்.

    அந்தப் பாடலை ‘பேக் ப்ரொஜக்‌ஷன்’ மூலம் படமாக்க வேண்டும். (‘பேக் ப்ரொஜக்‌ஷன்’ என்பது வெளிப்புற படப்பிடிப்பை தவிர்ப்பதற்காக, வெளிப்புற பின்னணிகளை மட்டும் படமாக்கி வந்து, அதை ஸ்டுடியோவில் திரையிட்டு, அதற்கு முன்னால் நடிகர், நடிகையை நடிக்க வைத்து, வெளிப்புற படப்பிடிப்பு போன்ற தோற்றத்தை தரும் யுக்தி.)

    அப்போது ஏ.வி.எம். ஸ்டுடியோவில் மட்டுமே பேக் ப்ரொஜக்‌ஷன் வசதி உண்டு. எனவே, அந்தப் பாடலை ஷூட் செய்ய வேண்டுமானால், ஏ.வி.எம்.மிற்குத்தான் போய் ஆக வேண்டிய நிலை.

    ஆர்.எம். வீரப்பன்

    ஆனால் அந்த சமயத்தில் பானுமதிக்கும், ஏ.வி.எம்.மிற்கும் மனஸ்தாபம் இருந்தது. ஏ.வி.எம். ஸ்டுடியோவிற்குள் நுழைவதேயில்லை என்பதில் பானுமதி உறுதியாக இருந்தார். (பின்னர் ராசியாகி ஏ.வி.எம்.மின் ‘அன்னை’ படத்தில் பானுமதி நடித்தது வேறு விஷயம்.) எம்.ஜி.ஆரும் பானுமதிக்காக அந்த பாடலை விட்டுவிட சம்மதித்து விட்டார். ஆனால் ஒரு அருமையான பாடலை இழக்க நான் தயாராய் இல்லை. எப்படியும் அந்தப் பாடல், படத்தில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். எனவே நேரே ஸ்டூடியோவிற்கு போய், நாகிரெட்டி அவர்களைச் சந்தித்தேன்.

    இவ்வளவு பெரிய வாஹினி ஸ்டூடியோவில் பேக் ப்ரொஜக்‌ஷன் வசதி இல்லையென்றால், அது நல்லாவா இருக்கு? பெருசா என்ன செலவு வந்திடப் போகுது? ஒரு ரூம், ஒரு ப்ரொஜக்டர், ஒரு திரை அவ்வளவுதானே... என்றெல்லாம் பேசி நாகிரெட்டியாரை சம்பதிக்க வைத்தேன். வாஹினி ஸ்டுடியோவில் பேக் ப்ரொஜக்‌ஷன் வசதியை மளமளவென உருவாக்கி, அங்கு நான் ஆசைப்பட்டபடி அந்தப் பாடலை படமெடுத்து முடித்தோம்.  எம்.ஜி.ஆர். தன் பங்கிற்கு மேலும் ஒரு பாடலையும் அங்கு படமாக்கினார் என்றார் ஆர்.எம்.வீ...

    எம்.ஜி.ஆர், பானுமதிக்காக பாடலையே தியாகம் பண்ண வந்தது பெரிய விஷயம்தான். காரணம், கதாநாயகிகள் விஷயத்தில் கறாராக நடந்து கொள்வதுதான் எம்.ஜி.ஆரின் வழக்கம். அதற்கும் ஆர்.எம்.வீ. அவர்களே ஒரு உதாரணம் தருகிறார்.

    எங்கள் முதல் படமான தெய்வத்தாயில் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் புதியதான ஒரு யூனிட்டை பணியில் அமர்த்தினோம். முதன்முறையாக பி. மாதவன், எம்.ஜி.ஆருக்காக டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர். சில நாட்கள் ஷூட்டிங்கை கேன்சல் செய்தார். பிற்பாடு வேறு தேதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஹீரோயின் சரோஜா தேவியோ அந்த தேதிகளில் சிவாஜியுடன் ‘புதிய பறவை’ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். எனவே எங்கள் ஷூட்டிங்கிற்கு அவரால் வர முடியவில்லை. எம்.ஜி.ஆர். கடும் கோபம் அடைந்து விட்டார். அவர் செய்த மாறுதலால்தான், இந்தக் கோளாறு என்றாலும் அந்த கோபம் மாறவில்லை.

    சரோஜா தேவி எப்படியோ கஷ்டப்பட்டு ஓரிரு நாட்களில் படப்பிடிப்பிற்கு வந்து சேர்ந்தார். ஆனால் அவரிடம் எம்.ஜி.ஆர். பேசவில்லை. இருவரும் சேர்த்து நடிக்க வேண்டிய காட்சிகளை அவர் தவிர்த்தார். இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகளை, தனித்தனியே எடுத்துக் கொள்ளச் சொன்னார். பாவம்... டைரக்டர் மாதவன் ரொம்பவே திணறிப் போனார். அப்புறம் படிப்படியாக சமாதானம் ஆகியது. டைரக்டர் மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து, இயக்கிய முதலும், கடைசியுமான படம் ‘தெய்வத்தாய்’தான்.

    தெய்வத்தாய் படத்தை கூர்ந்து கவனித்தால், அதில் பல புதுமைகள் ஒளிந்திருப்பதை பார்க்கலாம். டைரக்டர் மாதவன் உட்பட பலர் ‘சிவாஜி யூனிட்’ ஆட்கள் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள்; முதன்முறையாக எம்.ஜி.ஆர். படத்தில் பணியாற்றினர். வழக்கமான கண்ணதாசனுக்கு பதிலாக வாலி பாடல்களை எழுதினார். கே. பாலச்சந்தர் வசன கர்த்தாவாக சினிமாவில் காலெடுத்து வைத்த படம். எம்.ஜி.ஆர். படத்தின் சண்டை காட்சிகள் முதன்முறையாக வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். முதன்முறையாக ஏரோப்ளேனை தொட்டுப் பார்க்க வைத்த படம். அப்போதும் கூட விமானத்திலிருந்து அவர் வெறுமனே இறங்கி வரும் காட்சி மட்டுமே படமாக்கப்பட்டது. இப்படி பல புதுமைகளைக் கொண்ட அந்தப் படம், அப்போதைய பஞ்ச காலத்திலும் பெரு வெற்றி பெற்றது என்றார் ஆர்.எம்.வீ...

    ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது போல், எம்.ஜி.ஆர். எடுத்த சில முடிவுகளும், பிடிவாதங்களும் அவருக்கு தோல்வியையும் தந்துள்ளன. அதற்கான உதாரணங்களையும் சொன்னார் ஆர்.எம்.வீ...

    எங்களது இரண்டாவது தயாரிப்பான ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் க்ளைமாக்ஸை மாற்றி அமைக்கும்படி, எம்.ஜி.ஆர். பிடிவாதமாக வற்புறுத்தினார். வினோபா பாவேவின் தத்துவத்தின் அடிப்படையில் வில்லன்களை மன்னிப்பது போல் காட்சியை அமைக்கச் சொன்னார். இந்தக் கதைக்கு இப்படி இரு க்ளைமாக்ஸ் சரி வராது என்று எவ்வளவோ வாதாடினேன். ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்ள வில்லை. கடைசியாக அந்தப் படம் பெரிய வெற்றி பெறாமல் சுமாராகவே ஓடியது.

    கண்ணன் என் காதலன் படத்தில் இரண்டு கதாநாயகிகள். எம்.ஜி.ஆர். காதலிக்கும் நாயகி ஒருவர். நொண்டியாக நடித்து எம்.ஜி.ஆரை ஏமாற்றி மணக்க முயலும் நாயகி மற்றொருவர். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதாவையும், ஏமாற்றுக்கார நாயகி வேடத்தில் அப்போது புதிய நடிகையான வாணி ஸ்ரீயையும் புக் பண்ணியிருந்தேன். திடீரென்று எம்.ஜி.ஆர். ஃபோன் பண்ணி, ‘ஏமாற்றுகிற பெண் வேடத்தில் அம்முவை போட்டுக்கலாம்’ என்றார்.

    எனக்கு அதில் உடன்பாடில்லை. பல படங்களில் ஜோடியாக நல்ல பெண்ணாக நடித்து வரும் ஜெயலலிதாவை, ஏமாற்றுக்கார பெண் வேடத்தில் போட்டால் சரியாக வராது என்று வாதிட்டுப் பார்த்தேன். ‘அந்த ரோலில்தான் நடிப்பதற்கு ஸ்கோப் இருப்பதாக அம்மு நினைக்குது’ என்று பிடிவாதம் பிடித்து விட்டார் எம்.ஜி.ஆர்... வேறு வழியின்றி அப்படியே படமெடுத்தோம். எம்.ஜி.ஆரின் மறக்க முடியாத தோல்விப் படமாக அந்தப் படம் அமைந்தது என்றார் ஆர்.எம்.வீ...

    இப்படி தயாரிப்பாளர்களை ஹீரோக்கள் டாமினேட் செய்வது அந்த காலத்து விஷயம் என்று கூறிவிட முடியாது. இன்றைக்கும் அவ்வப்போது, ஆங்காங்கே நடக்கும் விஷயம்தான்.

    தெருப் பாடகன் என்ற படத்தை தயாரித்தேன். இந்தத் தலைப்பில் நடித்தால் தெருவுக்கு வந்து விடுவாய் என்று சென்டிமென்ட்டாக யாரோ விஜயகாந்த் காதில் போட்டு விட, விஜயகாந்த் படப் பெயரை ‘புதுப் பாடகன்’ என்று மாற்ற வேண்டும் எனக் கூறி விட்டார்.

    விஜயகாந்த்

    இதற்காக ஆரம்ப காட்சியையும், முடிவு காட்சியையும் வேறு வெட்ட வேண்டியதாயிற்று. இதனால் படம் முழுமை அடையாமல் தோல்வியைத் தழுவியது. திரையுலகிற்கு கிடைக்கவிருந்த ஒரு அற்புதமான இயக்குநர், கிடைக்காமல் போய் விட்டார்" என்றார் கலைப்புலி எஸ். தாணு.

    எஸ். தாணு.

    சிரித்தபடியே அவர் குறிப்பிட்ட அந்த இயக்குநர் வேறு யாருமல்ல... தாணுவேதான். அவர் இயக்கிய முதல் படம் அது. அதோடு டைரக்‌ஷனை மறந்து விட்டார்.

    அந்தப் படம் தோல்வி அடைந்தாலும்கூட இன்றைக்கும் கேப்டனோடு இனிய நட்பு தொடர்கிறது என்று குறிப்பிடும் தாணு, விளம்பரங்களில் பிரமாண்டத்தையும், நூதனத்தையும் நுழைக்கச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ‘சூப்பர் ஸ்டார்’ என்றால், ரஜினி காந்தி என்று இன்றைக்கு சிறு குழந்தை கூட சொல்லும். அந்தப் பட்டத்தை ரஜினிக்கு வழங்கியது யார் தெரியுமா? தாணுதான்.

    பைரவி படம்தான் நான் விநியோகஸ்தனாக ரிலீஸ் செய்த முதல் படம். சென்னை நகர உரிமையை வாங்கியிருந்தேன். முதன்முதலாக நாளிதழ் விளம்பரங்களில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ நடிக்கும் பைரவி’ என்று குறிப்பிட்டேன். அன்று மாலையே என்னைத் தேடி கலைஞானம் மற்றும் எம். பாஸ்கர் வந்தார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட பல சீனியர்கள் இருக்கும் போது, ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது அவ்வளவு நல்லதாக இல்லை. ரஜினியே அப்படித்தான் ஃபீல் பண்ணுகிறார். எனவே நாளை முதல் அப்படி விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள் - என்று குறிப்பிடும் தாணு, மறுநாள் விளம்பரத்தில் என்ன செய்தார் தெரியுமா?

    திரையுலகம் கண்டு வரும் திருப்பங்கள் – 4

    பூஜைக்கு மட்டுமே இரண்டே கால் கோடி ரூபாய்

    ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்து செய்யப்பட்ட விளம்பரம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. கலைஞானம் மற்றும் பாஸ்கர் வந்து, அப்படி விளம்பரம் செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்ட பிறகும், மறுநாள் விளம்பரத்தில் ‘தி கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று குறிப்பிட்டு அதிரடி பண்ணினார், தாணு.

    அப்போதெல்லாம் 2 ஷீட், 4 ஷீட் போஸ்டர்தான் ஒட்டுவார்கள். எல்லா நடிகை, நடிகரின் தலைகளும் அதில் இருக்கும். முதன்முறையாக தாணு 6 ஷீட் போஸ்டர் போட்டார். அதிலும் ரஜினி முகம் மட்டுமே இருந்தது. மௌன்ட் ரோட்டில் ரஜினிக்கு 35 அடி உயரத்துக்கு கட் - அவுட்டும் வைத்தார்.

    ஒரு படத்தின் வெற்றிக்கு விளம்பரம் மிக முக்கியம் என்று, நான் திடமாக நம்புகிறேன். ஆரம்ப காலத்தில் நான் பழைய படங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தேன். இரண்டாம் முறை ரிலீஸ் செய்யும் படங்களுக்கு, பெரிதாக யாரும் விளம்பரம் செய்ய மாட்டார்கள். ஆனால் நான் ‘சாரதா’ படத்திற்கு, இரண்டாம் ரவுண்டில் பெரிய விளம்பரம் செய்தேன்.

    விஜயகுமாரி செருப்பைத் தொட்டு அழுவது போன்ற ஸ்டில்லை பெரிதாகப் போட்டு, ‘இந்த பத்தினி பெண்ணிற்கு இப்படி ஒரு பரிதாப முடிவா?’ என்று ஒரு கேள்வியைப் போட்டேன். இப்படி ஓரிரு புதுமையான போஸ்டர்களால், ரிலீஸின் போது பெற்ற வசூலை விட கூடுதலாக அள்ளியது ‘சாரதா’.

    அதே போல், ‘கவலையில்லாத மனிதன்’ ரிலீஸின் போது சரியாக போகவில்லை. நான் இரண்டாவது ரௌண்டில் பெரிய அளவு விளம்பரம் செய்து, முதல் வாரம் நல்ல வசூலைப் பெற்றேன். இரண்டாம் வாரம், சந்திரபாபு கூடையுடன் நிற்கும் படத்தை போஸ்டரில் போட்டு, அருகில் நிற்கும் எம்.என். ராஜம், ‘கடந்த வார வசூலை கோணியிலே வாரிக் கொண்டீர். இந்த வார வசூலுக்கு கூடை எடுத்து புறப்பட்டீரோ’ என்று கேட்பது போல் விளம்பரம் செய்தேன். அது எடுபட்டது. குமுதம் பத்திரிகை ‘நூதன விளம்பரம்’ என்று செய்தி வெளியிட்டு பாராட்டியது என்கிறார் தாணு.

    தாணு

    அன்று ஆரம்பித்ததை இன்னமும் பல ஹீரோக்களுக்கு தாணு செய்து கொண்டுதான் இருக்கிறார். விஜயகாந்த் நடித்த ‘கூலிக்காரன்’ படத்தின் பூஜைக்கு 9 ஷீட் போஸ்டர் போட்டு, பூஜைக்கே போஸ்டர் போடும் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழியிட்டவர் தாணுதான். அர்ஜுன் அவ்வளவாக பிரபலமாகாத சூழ்நிலையிலேயே, அவருக்கு ‘யார்’ படத்திற்காக நூறு அடி உயர கட்அவுட் வைத்தார் தாணு. அர்ஜுன் துப்பாக்கியால் குறி பார்ப்பது போன்ற கட் - அவுட் அது.

    நான் தயாரித்த முதல் படம் ‘யார்’. அந்தப் படத்திற்காக பல ஹீரோக்களை ட்ரை பண்ணினோம். அப்போது ஒரு படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த படத்தின் ஹீரோவை கேட்கலாம் என்று நானும், இயக்குநர் கண்ணனும் கதை சொல்லப் போனோம். அவரோ பாதி கதை கேட்ட நிலையில், ‘நீங்க பாரதிராஜாவிடம் போய் இன்னும் இரண்டு வருஷம் அசிஸ்டென்ட்டாய் ஒர்க் பண்ணிட்டு வாங்க. அப்புறம் படம் பண்ணலாம்’ என்று அவமானப்படுத்தி விட்டார்.

    நான் அந்த நடிகர் முன்பாகவே எழுந்து நின்று ‘கண்ணன்... நான் உங்களை டைரக்டர் ஆக்குவதற்காகக் கூட்டி வந்துள்ளேன். இவரோ உங்களை மீண்டும் அசிஸ்டென்டாக போகச் சொல்கிறார். இதுக்கு மேலே இவர்கிட்டே என்ன பேச்சு?’ என்று கூறிவிட்டு, வெளியே வந்து விட்டேன். என் முதல் படத்திலேயே இப்படி ஹீரோ கிடைக்காத கோபத்தில்தான், அந்தப் படத்தை எடுத்து முடித்தபோது, என்னை அவமானப்படுத்திய ஹீரோக்களை எல்லாம் துப்பாக்கியால் குறி பார்ப்பது போல், கட் - அவுட் வைத்து என் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டேன் - என்று சிரித்தார் தாணு.

    அதன் பிறகு பல ஹீரோக்களுக்கு பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்தவர் தாணு. முழுக்க, முழுக்க கதையை நம்பி தாணு படம் தயாரித்த சம்பவங்களும் உண்டு. அதில் ‘கிழக்குச் சீமையிலே’ மிகவும் பேசப்பட்ட படம்.

    ரத்னகுமார் வந்து, அந்தக் கதையைச் சொன்னார். கதை நீளமாகவும், ஐந்தாறு ஹீரோக்கள் வருவது போலவும் இருந்தது. அதை சுருக்கி, மூன்று கேரக்டர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வருகிற மாதிரி ‘ட்ரிம்’ பண்ணிக் கொண்டு வரச் சொன்னேன். ஓரிரு நாட்களிலேயே அந்தக் கதையைச் சுருக்கிக் கொண்டு வந்தார் ரத்ன குமார்.

    கதையை கேட்டதுமே ‘இந்தக் கதை ஐந்து ‘மண்வாசனை’க்கும், மூன்று ‘முதல் மரியாதைக்கு’க்கும் சமமான கதை. ஆனால் இதை பாரதிராஜா டைரக்ட் செய்தால் மட்டுமே, அந்த வெற்றி கிட்டும்’ என்று சொன்னேன். ஆனால், அப்போது எனக்கும் பாரதிராஜாவிற்கும் சுமூகமான சூழல் இல்லை.

    பாரதிராஜா

    எனவே ‘இதை பாரதிராஜா இயக்கத்தில் வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து பண்ணிக் கொள்ளுங்கள்’ என்று கூறி, ரத்னகுமாரை அனுப்பி விட்டேன். பிற்பாடு ரத்னகுமார், பாரதிராஜாவிடம் இந்தக் கதையை கூறியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால், ‘யார் தயாரிப்பாளர்?’ என்று பாரதிராஜா கேட்டுள்ளார். கடந்த விஷயத்தைக் கூறிய ரத்னகுமார், ‘புது தயாரிப்பாளர் தேட வேண்டும்’ என்று கூறியுள்ளார். மறுநாளே எனக்கு ஆள் அனுப்பிய பாரதிராஜா, இருவரும் சேர்ந்து பணியாற்றுவதில் தனக்கு சங்கடம் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். அப்படித்தான் ‘கிழக்குச் சீமையிலே’ எனது தயாரிப்பில் உருவானது என்றார் தாணு.

    சமீபத்தில் நடிகர் விக்ரம், இயக்குநர் சுசி கணேசன் கூட்டணியில் ‘கந்தசாமி’ படத்திற்கு பூஜை போட்டுள்ளார். பிரம்மாண்ட அழைப்பிதழ்; ஐந்தாறு வகை போஸ்டர்; எலெக்ட்ரானிக் ட்ரெய்லர் செட்... என்று பூஜைக்கு மட்டுமே இரண்டே கால் கோடி ரூபாய் செலவு செய்து ஒரு மிரட்டு மிரட்டியிருக்கிறார், தாணு. இது இந்தக் காலம்!

    ஆனால் அந்தக் காலத்தில் செலவை குறைப்பதற்காக சுமாரான ‘செட்’ போட்டதால், சிவாஜி அதிருப்தி அடைந்த சம்பவம் கூட நடந்திருக்கிறது. அதனால் அவருக்கும், இயக்குநர் முக்தா சீனிவாசனுக்கும் மோதல் கூட வந்தது.

    சிவாஜிக்கும், முக்தா சீனிவாசனுக்கும் அப்படியென்ன உரசல் ஏற்பட்டது?

    இயக்குநர் முக்தா சீனிவாசனின் வார்த்தைகளில் ஃப்ளாஷ் பேக் விரிகிறது;

    முக்தா சீனிவாசன்

    ‘எனது இயக்கத்தில் உருவான ‘அந்தமான் காதலி’ படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார். அந்தமானில் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்டது. சிவாஜியை க்ளோசப்பில் சில வசனங்கள் பேச வைத்து, சில ‘பேட்ச் அப்’ காட்சிகள் மட்டும் ஷீட் பண்ண வேண்டியிருந்தது. வெறும் க்ளோசப் காட்சிகள் என்பதால் அதிக செலவில்லாமல், சுமாரான செட் போடப்பட்டிருந்தது. மேக்கப் போட்டுக் கொண்டு செட்டிற்கு வந்த சிவாஜி, சுமாரான செட்டைப் பார்த்ததும் கோபம் கொண்டார். ‘என்ன செட் இது? நான் நடிக்க மாட்டேன்’ என்று கூறி விட்டு மேக்கப்பை கலைத்து விட்டு வீட்டிற்கு போய் விட்டார்.’

    நான் இதை அவமானமாக உணர்ந்தேன். இயக்குநர் என்ற முறையில் என்னிடம் காரணத்தை சொல்லிவிட்டு அவர் புறப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. நேரே தயாரிப்பாளரான எனது அண்ணன் ராமசாமியிடம் சென்று விஷயத்தைக் கூறி விட்டு, ‘இனி நான் சிவாஜியை வைத்து ஷூட் பண்ண மாட்டேன்’ என்று கூறி விட்டேன்.

    "அவரோ ‘நான் போய் சிவாஜியை சமாதானப்படுத்தி ஷூட்டிங்கிற்கு வரவழைக்கிறேன்’ என்றார். நான் விடாப்பிடியாக ‘அவர் வந்தாலும், உதவி இயக்குநர் ஏ.எஸ். பிரகாசத்தை வைத்து ஷூட் பண்ணிக்குங்க’ என்று கூறி விட்டேன். பிறகு என் அண்ணன் போய் சிவாஜியிடம் பேசினார். வெறும் க்ளோசப் காட்சிகள் மட்டுமே எடுக்க உள்ளதால், ‘செட்’ எதுவும் படத்தில் தெரிய வராது என்பதை

    Enjoying the preview?
    Page 1 of 1