Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal
Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal
Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal
Ebook163 pages1 hour

Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Thuduppathi Ragunathan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466558
Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal

Read more from Thuduppathi Ragunathan

Related to Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal

Related ebooks

Related categories

Reviews for Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal - Thuduppathi Ragunathan

    30

    1

    1958-ஆம் வருடம்.

    திருப்பூர் நகரத்தில் பனியன் பேக்டரிகள் புற்றீசல் போல் தெருவுக்கு நான்கு ஐந்து தோன்றிக் கொண்டிருந்தன.

    திருப்பூரில் தயாராகும் பனியன்களுக்கு மற்ற மாநிலங்களில் ஏகப்பட்ட கிராக்கி. ஆரம்பகாலத்தில் ஸ்பைடர், காதர் என்று தெருவுக்கு ஒன்று இரண்டு கம்பெனிகள்தான் பனியன் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

    அந்தக் கம்பெனிகளின் வளர்ச்சியைப் பார்த்து நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரும் அந்த தொழிலில் ஈடுபடத் தொடங்கினர்.

    ஒரு மிஷின், இரண்டு மிஷின்களை வைத்துக்கொண்டு எல்லாரும் பனியன் கம்பெனிகள் ஆரம்பித்துவிட்டார்கள்,

    கிட்டத்தட்ட அது திருப்பூரில் ஒரு குடிசைத்தொழில் போல் ஆகிவிட்டது. தெருவுக்கு எட்டு பத்து பனியன் பேக்டரிகள்! உற்பத்தியாகும் அத்தனை பனியன்களுக்கும் வெளிமாநிலங்களில் கிராக்கி இருந்தது!

    தனிமனிதன் மட்டும் தன் உழைப்பால் கோடீஸ்வரனாக மாறி விடுவதில்லை!

    மொத்த ஊருமே அப்படி பேரும் புகழும் பெற்று கோடீஸ்வர நகரமாகி விடுவதும் உண்டு!

    அதற்கு உதாரணம் திருப்பூர். கோவை மாவட்டத்தில் பல்லடம் தாலுகாவில் ஒரு கிராமம்தான் திருப்பூர்!

    அந்தக்காலத்தில் திருப்பூரில் தோன்றிய ஆயிரக்கணக்கான பனியன் பேக்டரிகளும், கோவையைப் பார்த்து தோன்றிய சில நூற்பாலைகளும் சேர்ந்து திருப்பூரை ஒரு பெரிய தொழில் நகரமாக குறுகிய காலத்தில் மாற்றி விட்டது!

    கிராமமாக இருந்த திருப்பூர் கிராமம் ரெவென்யூவில் பிர்க்கா என உருமாறி அதன்பின் தாலுகாவாக மாறி, இப்பொழுது மாவட்டமாக தலைநிமிர்ந்து நிற்கிறது!

    அது மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் மிக முக்கிய நகரமாக மாறிவிட்டது!

    திருப்பூர் நகரம் தலைதூக்கிய அதே காலகட்டத்தில் தான், ஒரு ஏழைத்தொழிலாளிக்கு மகனாகப் பிறந்து, அதிகம் படிக்கவும் வாய்ப்பில்லாத சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட காலமும் தொடங்கியது!

    திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் புதியதாக 1958ஆம் வருடம் நான்கு மிஷின்களோடு தொடங்கியதுதான் கார்த்திக் நிட்டிங் கம்பெனி.

    அந்தக் கம்பெனியிலும் பல செக்சன்கள் உண்டு. பனியன் தயாரிக்கும் மிஷன்களை ஒரு நூல் கூட அறுபடாமல் கண்ணும் கருத்துமாக கவனித்து நின்று கொண்டே ஓட்டும் மிஷன் ஆபரேட்டர்கள் ஒரு பிரிவு.

    அங்கிருந்து தயாராகும் பனியன்துணியை நீண்ட சுருள்களாக சுருட்டி கட்டிங் செக்சனுக்கு கொண்டுவந்து தருவார்கள். அங்கு தையல் வேலை தெரிந்த கட்டிங் மாஸ்டர்கள் இருப்பார்கள்.

    அவர்கள் ஒரு நீண்ட மேஜை முன்நின்று கொண்டு கையில்லாத பனியன், கைவைத்த பனியன் என்று வேக வேகமாக வெட்டிப் போடுவார்கள்!

    அதை எல்லாம் அள்ளிக் கொண்டு ஒரு சிறுவன் பக்கத்தில் தையல் மிஷின்கள் இருக்கும் பிரிவுக்கு எடுத்துக் கொண்டுபோய் அதற்காக காத்திருக்கும் டைலர்களிடம் தருவார்கள்.

    டைலர்கள் அந்த மிஷின்களில் கொடுத்து லாகவமாக பனியன்களை தைத்து கீழே தள்ளிக்கொண்டே இருப்பார்கள்! சாதாரண தையல் மிஷின்களை விட துரிதமாக செயல்படும் மிஷின்கள் அவை! வேகமாக ஒருபக்கம் தைத்த பனியன்களை குவிந்துகொண்டே இருக்கும்!

    டைலருக்கு பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் கீழே உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் மொத்தமாக மிஷினில் இருந்து கீழேவிழும் பனியன்களை கத்தரிக்கோலை வைத்து தனித்தனியாக வெட்டுவார்கள். அதன்பின் ஒவ்வொரு பனியனில் இருக்கும் பிசிறுகளை வெட்டி சுத்தம் செய்து போடுவார்கள்.

    அதை அப்படியே அள்ளிக்கொண்டு போய் ஒரு சிறுவன் பக்கத்து ரூமில் இருப்பவர்களிடம் கொட்டுவான்.

    அங்கும் இரண்டு சிறுவர்கள் ஊசிகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வைத்திருக்கும் ஊசி பின்னல் முடிய பிரத்தியேகமாக உருவாக்கியது.

    அந்த சிறுவர்கள் ஒவ்வொரு பனியனாக எடுத்துப் பார்த்து, மின்தடை மற்றும் நூலில் இருக்கும் முடிச்சு போன்ற ஏதாவது காரணங்களால், மிசினில் வரும் பனியன் சுருளில் சில இடங்களில் பின்னல் சரியில்லாமல் போய்விடும்! அதை அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து, அதை சில நிமிடங்களில் அந்த ஊசியால் பின்னி அதை சரிசெய்து கீழே போடுவார்கள்.

    பக்கத்தில் ஸ்டூலில் ஒரு பலகையோடு ஒரு சிறுவன் உட்கார்ந்திருப்பான்.

    அவன் அவைகளை எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பனியனாக கைகளில் இருக்கும் பலகையில் சொருகி மேஜையில் தள்ளுவான். அங்கு அயர்ன்பாக்ஸோடு இருக்கும் ஒருவர் அதை அயர்ன் பண்ணி பலகையில் இருந்து கழட்டி மடித்து மடித்து போடுவார்.

    அதை வேறு ஒருவர் லாகவமாக பனியன் பெட்டிகளில் அடங்கும் சைஸில் மடித்துப் போடுவார்.

    இன்னொருவர் ஆறு, ஆறு பனியன்களாக அதற்குரிய கம்பெனி பெயர் போட்ட சிறிய பெட்டிகளில் அடுக்கி கயிற்றால் கட்டி அடுக்குவார்.

    மற்ற ஒரு பையன் அந்த அரை டஜன் பனியன்கள் அடங்கிய பெட்டிகளை கோடவுனுக்கு எடுத்துப்போவான்.

    அங்கிருக்கும் சிலர் ஆர்டருக்கு தகுந்த மாதிரி லாரிகளில் அனுப்பவும், ரயிலில் அனுப்பவும், தக்க பார்சல்களாக ‘பேக்’ செய்து ஆட்டோக்களில் லாரி புக்கிங் ஆபிஸுக்கோ, ரயில் நிலையத்திற்கோ அனுப்பி விடுவார்கள்!

    அங்கு நடப்பது எல்லாம் மாயாபஜார் வேலைதான்! காலையில் கோவை நூற்பாலைகளிலிருந்து ‘கோன்’ வடிவில் திருப்பூரில் லாரிகளில் வந்து இறங்கும் நூல், சில மணிநேரத்தில் பனியன்களாக மாறி திருப்பூரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கிளம்பிவிடும்!

    இப்படி ஷிப்ட் கணக்கில் இருபத்து நான்கு மணி நேரமும் அந்த பனியன் பேக்டரிகளில் வேலை நடக்கும்.

    அப்படித் தோன்றிய பல ஆயிரம் பனியன் பேக்டரியில் வேலை செய்ய எத்தனை பேர் வந்து சேர்ந்தாலும், ஆள் பற்றாக்குறை அதிகமாகிக்கொண்டே போனது!

    எல்லாக் கம்பெனிகளிலும் வாசலை பெருக்கி சுத்தம் செய்யும் ஆயா, பெருக்கி வாசல் தெளித்து சுத்தம் செய்தவுடன், முதல் வேலையாக வாசலில் கொண்டுவந்து வைப்பது வேலைக்கு ஆட்கள் தேவை! என்ற பெரிய பலகைதான்!

    அந்தக் காலத்தில் திருப்பூரில் தண்ணீர் பஞ்சம் இருந்தது! அதைவிட வேலைக்கு ஆட்கள் பஞ்சம்தான் அதிகமாக இருந்தது!

    திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் இருக்கும் அந்த கார்த்திக் நிட்டிங் கம்பெனியில்தான் பேக்கிங் செக்சனில் சத்திய மூர்த்தியின் தந்தை முத்துசாமிக்கு வேலை! வாரக் கூலி பதினைந்து ரூபாய்!

    மாத வருமானம் அறுபது ரூபாய்! அதில் தான் வீட்டு வாடகை, மின் கட்டணம் போக மற்ற குடும்பச் செலவுகள் செய்யவேண்டும்!

    அதிக சிரமம் இல்லாமல்தான் முத்துசாமி தன் குடும்பத்தை அதுவரை நடத்தி வந்தார். அவருக்கு ஒருமகன், ஒருமகள். மகன் சத்தியமூர்த்தி தங்கமான பிள்ளை! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவன் பெயர், அவனைவிட வேறு யாருக்கும் அவ்வளவாகப் பொருந்தாது!

    படிப்பு, ஒழுக்கம், நேர்மை, பொறுப்பு அனைத்திலும் சத்தியமூர்த்திக்கு நிகர் யாரும் இருக்க முடியாது!

    அடுத்த பெண் மல்லிகா எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் சின்னஞ் சிறுசிட்டு!

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக சத்தியமூர்த்தி தேர்ச்சி அடைந்தான். அதற்குப் பிறகுதான், முத்துசாமியின் குடும்பத்தில் பிரச்னைகள் சத்தியமூர்த்தியின் படிப்பு விஷயத்தில் உருவாகியது!

    முத்துசாமியும் அவர் மனைவி செல்லம்மாவும் எப்படியாவது சத்தியமூர்த்தியைப் படிக்க வைத்து ஒரு அரசு வேலைக்குச் சேர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

    அதற்கு குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது வேண்டும். எந்த டிகிரி வாங்க வேண்டுமானாலும் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருஷமாவது படிக்க வேண்டும்.

    அந்தக் காலத்தில் கல்லூரி படிப்பு என்றால் கோயம்புத்தூருக்குப் போய்தான் படிக்கவேண்டும், முத்துசாமியின் பதினைந்து ரூபாய் வாரச் சம்பளத்தில் அது எல்லாம் சாத்தியமாகத் தெரியவில்லை!

    1955க்குமேல் தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சி மிக சிறப்பாக இருந்தது!

    கூட்டுறவு மத்திய வங்கி, அர்பன் வங்கி, பண்டக சாலை சேல் சொசைடி என்று பற்பல கூட்டுறவு ஸ்தாபனங்கள் தோன்றி சிறப்பாக இந்தியாவுக்கே முன்மாதிரியாக செயல்பட்டு வந்தன.

    கூட்டுறவு வங்கிகளிலும் அந்தக் காலத்தில் ஷெட்யூல் வங்கிகளைப் போல நல்ல சம்பளம் கொடுத்தார்கள். வேலை வாய்ப்பும் சுலபமாக கிடைத்தது.

    ஆனால் அந்த வேலையில் சேர குறைந்தபட்சம் கூட்டுறவுத் துறையில் ஒரு டிப்ளமா படித்திருக்க வேண்டும் என்று பை லாவில் ஒரு கண்டிஷன் அந்தப் படிப்பு ஒரே வருஷம்தான்! அதை படிப்பதற்கான கல்லூரி தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே கல்லூரிதான் இருந்தது! நல்லவேளை! அந்தக் கல்லூரி கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் சாயிபாபா காலனிக்கு அருகில் ராமலிங்கம் கூட்டுறவு பயிற்சிச் சாலை என்ற பெயரில் இருப்பதாக பண்டக சாலை ஆடிட்டர் சொன்னார்!

    ஒரு வருடம் எப்படியாவது சத்தியமூர்த்தியை படிக்க வைத்து அவனை ஒரு வங்கி பணியில் சேர்த்து விட வேண்டும் என்று முத்துசாமியும் செல்லம்மாவும் முடிவு செய்தார்கள்.

    அன்று கோவையில் தங்கிப் படிக்க மாதம் சுமார் ஐம்பது ரூபாய் செலவு ஆகும். ஒரு வருடத்திற்கு ஆரம்பத்தில் கல்வி கட்டணம், புத்தகங்கள் வாங்க ஆகும் செலவுகள் இருநூறு போக சத்தியமூர்த்திக்கு ரூம் வாடகை சாப்பாட்டுச் செலவுக்கு அறுநூறு ரூபாய் இருந்தால் போதும்!

    மொத்தம் என்னூறு ரூபாய் இருந்தால் சத்தியமூர்த்தி ஒரு டிப்ளமா வாங்கி ஒரு வங்கி ஊழியன் ஆகிவிடுவான்.

    செல்லம்மா போட்டிருந்த தாலி, கைவளையல்கள் எல்லாம் சேர்த்து விற்றால் நிச்சயம் ஐநூறு தேறும்! மொத்தத்தில் முன்னூறு ரூபாய்தான் குறையும்.

    நண்பர்களை எல்லாம் முத்துசாமி கலந்து பேசிப் பார்த்தார்.

    எல்லாரும் முதலில் பையனை கொண்டுபோய் இந்த வருடமே காலேஜில் சேர்த்து விட்டு வா!. ஒரு நாலு மாசம் போகட்டும் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தாவது உதவி செய்கிறோம்...! தைரியமாக பையனை கோயம்புத்தூர் கூட்டிக்கொண்டு போ...! என்று ஆள் ஆளுக்கு தைரியம் கொடுத்தார்கள்!

    முத்துசாமியும் அதை நம்பி

    Enjoying the preview?
    Page 1 of 1