Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyir Thozhi Nee Allavo
En Uyir Thozhi Nee Allavo
En Uyir Thozhi Nee Allavo
Ebook190 pages1 hour

En Uyir Thozhi Nee Allavo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Thuduppathi Ragunathan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466558
En Uyir Thozhi Nee Allavo

Read more from Thuduppathi Ragunathan

Related to En Uyir Thozhi Nee Allavo

Related ebooks

Related categories

Reviews for En Uyir Thozhi Nee Allavo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyir Thozhi Nee Allavo - Thuduppathi Ragunathan

    41

    1

    முரளிக்கு இரண்டு வயசு இருக்கும் பொழுது அவன் தாய் ஒரு விபத்தில் உயிர் இழந்தாள். அப்பொழுது அண்ணன் கதிரேசனுக்கு பதினேழு வயசு இருக்கும். அவர்களுடைய அப்பா கோவிந்தசாமி தாமரைக் குளம் கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

    கோவிந்தசாமிக்கு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. கஷ்டப்பட்டு இரு குழந்தைகளையும் அவரே வளர்த்து வந்தார். கோவிந்தசாமியின் தங்கை மல்லிகா அதே கிராமத்தில்தான் வசித்து வந்தாள். அவளும் அண்ணன் இரண்டு குழந்தைகளை வைத்து கஷ்டப்படுவதைப் பார்த்து தன்னால் ஆன உதவிகளைச் செய்து வந்தாள். பதினேழு வயசு ஆன கதிரேசன் அப்பாவுக்கு குழந்தை முரளியை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தான். எந்த நேரமும் தம்பியைத் தூக்கிக் கொண்டு அலைவான். முரளி குழந்தை பருவத்தில் கொள்ளை அழகு. அதனால் கிராமத்தில் அவன் நண்பர்களிடம் எல்லாம் அவனைக் காட்டிப் பெருமைப்படுவான்.

    அந்தக் கிராமத்தில் ஐந்தாவது வகுப்பு வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க வேண்டும் என்றால் ஐந்து மைல் தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்குப் போய்தான் படிக்க வேண்டும்.

    கோவிந்தசாமிக்கு தன் குழந்தைகளை எப்படியாவது நன்கு படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று ரொம்ப ஆசை. அதனால் கதிரேசனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு உயர் நிலை பள்ளியில் சேர்த்திருந்தார். தினசரி கதிரேசன் ஐந்து மைல் நடந்தே போய் படித்து வந்தான்.

    கதிரேசன் பதினெட்டு வயசில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்து விட்டான். அதற்குப் பிறகு படிக்க வைக்க கோவிந்தசாமிக்கு வசதி இல்லை. வெறும் ஆசையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

    அதனால் கதிரேசனை வேலைக்கு அனுப்பி விட்டு, முரளியையாவது படிக்க வைக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார் கோவிந்தசாமி. தான் படிக்காவிட்டாலும், தான் வேலைக்குப் போய் தன் தம்பியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்று கதிரேசனும் ஆசைப்பட்டான்.

    கதிரேசனுக்கு கோவையில் ஒரு பம்ப்செட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரு ஹெல்பர் வேலை கிடைத்தது.

    கதிரேசன் கோவையில் போய் அந்த வேலையில் சேர்ந்து கொண்டான். அவன் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு சிலரோடு சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டான். சாப்பாட்டிற்கு பக்கத்தில் ஒரு மெஸ்ஸில் ஏற்பாடு செய்து கொண்டான்.

    முரளி கிராமத்தில் ஐந்தாவது படித்தவுடன் கோவிந்தசாமி அவனையும் கொண்டு போய் பொள்ளாச்சியில் சேர்த்து விட்டு வந்தார்.

    முரளியும் நன்றாகப் படித்தான். கதிரேசன் தன் சம்பளத்தில் மிச்சம் பிடித்து, மாதம் தவறாமல் அப்பாவுக்கு அனுப்பி வந்தான். அது கோவிந்தசாமிக்கு ரொம்ப உதவியாக இருந்தது.

    கோவிந்தசாமியின் தங்கை மல்லிகா குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். மல்லிகாவுக்கு ஒரே மகள் மாலதி.

    அந்தக் காலத்தில் தாமரைக் குளத்தில் மேற்படிப்புக்கு வசதி இல்லாததால் படிக்க ஆசைப் பட்ட எல்லா மாணவ மாணவிகளும் அந்தக் கிராமத்திலிருந்து நடந்து பொள்ளாச்சி போய் தான் படித்து வந்தார்கள். அதனால் மல்லிகாவும் தன் மகள் மாலதியை பொள்ளாச்சி ஸ்கூலில்தான் சேர்த்திருந்தாள். மாலதி முரளியை விட நான்கு வயசு பெரியவள்.

    முரளி உயர் நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்க்கும் பொழுது, அவள் பத்தாவது வகுப்புக்குப் போயிருந்தாள். அவளுக்கு தன் மாமன் மகன் மேல் பிரியம் அதிகம். தாய் இல்லாக் குழந்தை முரளியை தினசரி மாமன் வீட்டிற்கு வந்து, அவனுக்கு யூனிபார்ம் போட்டு தலைவாரி ஐந்து மைல் பொள்ளாச்சிக்கு நடந்தே கூட்டிக் கொண்டு போய் வருவாள்.

    கதிரேசன் வீட்டிற்கு விடுமுறையில் வரும் பொழுதெல்லாம் அதைப் பார்ப்பான். தம்பிக்கு உதவியாக இருக்கும் மாலதி மேல் அவனுக்கு ரொம்ப மரியாதை.

    அதுவே நாளடைவில் காதலாகவும் மாறி விட்டது. மாலதியை விட பத்து வயசு மூத்தவன் கதிரேசன்.

    நாட்கள் செல்லச் செல்ல கதிரேசன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் கோவையிலிருந்து தாமரைக் குளம் வந்து விடுவான்.

    மாலதி எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன் வீட்டோடு தாய் தந்தைக்கு உதவியாக இருந்தாள்.

    ஒரு மூன்று வருடங்கள் நகர்ந்தன.

    2

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலதி ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு மாமன் வீட்டிற்குப் போய் விடுவாள். பெற்ற தாய்க்கு அது எதற்கு என்று கூடவா தெரியாது? அண்ணனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

    கோயமுத்தூரில் எத்தனை நாட்களுக்கு கதிரேசன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பது...? என்று தங்கை ஆரம்பித்த பொழுதே கோவிந்தசாமி சிரித்தார்.

    இப்ப நீ எதைக் கண்டு சிரிக்கிறே...? என்று அண்ணனிடம் சிணுங்கினாள் மல்லிகா.

    எதற்கு சுத்தி வளைச்சுப் பேசறே...? காலா காலத்தில் செய்ய வேண்டியதை செய்திட்டாப் போச்சு...! என்றார் கோவிந்தசாமி.

    ஒரு நல்ல நாள் பார்க்கப்பட்டது. உள்ளூர் முருகன் கோவிலிலேயே மாலதியின் கையைப் பிடித்தான் கதிரேசன்.

    மல்லிகாவும், அவள் கணவரும் கோவை போய் சிங்காநல்லூரில் ஒரு வீடு பார்த்து, மாலதிக்கு தனிக் குடித்தனத்திற்குத் தேவையான சாமான்கள் வாங்கிக் கொடுத்து கதிரேசனின் இல்வாழ்க்கையைத் தொடங்கி வைத்து விட்டு வந்தார்கள்.

    மிகவும் சந்தோஷமாக கதிரேசன் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

    முரளியும் எஸ்.எஸ்.எல்.சி. நல்லபடியாக எழுதி விட்டான். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேலையில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.

    கோவிந்தசாமி வழக்கமாக ஊரில் ஒதுக்குப்புறம் இருக்கும் ஒரு கிணற்றுக்குப் போய் துணியெல்லாம் துவைத்துக் கொண்டு, குளித்து விட்டு வருவது வழக்கம். அன்றும் வழக்கம் போல் கிணற்றுக்குப் போயிருக்கிறார். மழை பெய்திருந்ததால் கிணற்றைச் சுற்றி ஒரே சகதியாக இருந்தது. கிணற்றைச் சுற்றி ஓரமாகப் போகும் பொழுது, எதிர்பாராத விதமாக சகதி வழுக்கி அப்படியே கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.

    அந்த நேரம் குளிக்க வந்த சிலர் சத்தம் போட, கூட்டம் சேர்ந்து கொண்டது. அவசர அவசரமாக சிலர் உள்ளே இறங்கினார்கள். கோவிந்தசாமி விழும்பொழுது பாறையில் உரசியதாலும், கிணற்றில் குறைந்த தண்ணீர் மட்டும் இருந்ததால் பாறையில் தலை ஏற்பட்டு, ரத்தம் நிறையப் போய் விட்டதால், உயிர் போன நிலையில்தான் கோவிந்தசாமியை மேலே கொண்டு வந்தார்கள்.

    உடனே கோவைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கதிரேசனும், மாலதியும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

    ஒரு பத்து நாள் அது இழவு வீடாக இருந்தது. மல்லிகாவும், அவள் கணவன் குமாரும் கதிரேசனுக்கும், முரளிக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள்.

    அடுத்த வாரமே கதிரேசன் முரளியைக் கூட்டிக் கொண்டு கோவைக்குப் பயணமானான்.

    3

    கோவிந்தசாமி குடியிருந்த வீடு பூர்விக வீடு. பெரிய விசாலமான வீடு. மெயின் ரோட்டில் இருந்தது. அதனால் அதில் முன் பகுதியில் கோவிந்தசாமி மளிகைக் கடை வைக்க வசதியாக இருந்தது.

    கதிரேசன், முரளி, மாலதி மூன்று பேர்களும் கோவைக்கு கிளம்பும் பொழுது, கதிரேசன் அத்தை...! வீட்டை பார்த்துக் கொள்ளுங்க...! யாராவது வாடகைக்கு கேட்டால் விட்டு விடுங்க...! முரளியை கோயமுத்தூரிலேயே ஒரு பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுகிறேன். இரண்டு மாசத்திற்கு ஒருமுறை நாங்க வந்து போகிறோம். நீங்களும் வசதிப்பட்ட பொழுதெல்லாம் கோயமுத்தூருக்கு வாங்க...! என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

    கோவைக்கு போனவுடன் முரளியை கதிரேசன் பக்கத்தில் இருக்கும் ஒரு ஸ்கூலில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்து விட்டான்.

    முரளியும் நடந்த சோகத்தை மறந்து படிப்பில் மூழ்கினான். பொள்ளாச்சி ஸ்கூலை விட கோவை அவனுக்கு ரொம்ப வசதியாக இருந்தது. மாலதி பெற்ற தாயைவிட அதிகமாக கவனித்து பார்த்துப் பார்த்து செய்தாள்.

    இரண்டு வருஷக் குழந்தையாய் முரளியின் தாய் அவனை விட்டு விட்டுப் போனதிலிருந்து மாலதிக்கு அவனைத் தெரியும்! அதனால் அவனை பெற்ற குழந்தையை விட மேலாகக் கவனித்து வந்தாள்.

    குறைந்த சம்பளத்திலேயே நிறைவாக வாழக் கற்றுக் கொண்ட குடும்பம் கதிரேசன் குடும்பம். கதிரேசன் மனைவி மாலதி ஒரு குடும்பப் பாங்கான பெண்.

    கதிரேசன் மாலதி தம்பதிகளுக்கு ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை! முரளியை அவர்கள் குழந்தையாக நினைக்கக் கற்றுக் கொண்டார்கள்...

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதில் படித்து பட்டம் வாங்கியவர்கள் போல் தான் நடந்து கொண்டார்கள் கதிரேசனும், மாலதியும்!

    முரளியை ஒழுக்கத்தோடும், பொறுப்பு உணர்ச்சியோடும் வளர்த்தார்கள்.

    தேவையறிந்து தான், முரளி அண்ணனிடமும், அண்ணியிடமும் எதையும் கேட்பான். இந்தக் காலக் குழந்தைகளை, அதன் பெற்றோர் எந்த நேரமும் ‘படி, படி,’ என்று உயிரை எடுப்பது போல், ஒரு நாளும் மாலதியும், கதிரேசனும் முரளியிடம் சொன்னதில்லை. அவனே யாரும் சொல்லாமல் பொறுப்பு உணர்ந்து நல்ல மார்க் வாங்கி விடுவான்.

    முரளிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவு வந்திருந்தது. நல்ல மார்க் வாங்கி முரளி தேர்ச்சி பெற்றிருந்தான். அப்பொழுது தான், தன் ஆசையை தன் அண்ணனிடம் மெதுவாகச் சொன்னான்.

    அண்ணா... எனக்கு இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து இன்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது...! என்றான்.

    முரளி...! அது ரொம்ப நல்ல விஷயம் தான்...! கல்லூரியில் இடம் பிடிக்கவே பெரிய எடத்து சிபாரிசு வேண்டும். அதுமட்டுமல்ல படிப்பு முடியும் வரை இலட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். நம் வசதிக்கு அது ஒத்து வராது. நீ ஆசைப் பட்டு விட்டாய் யோசிப்போம்...! என்று கதிரேசன் முரளியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

    அதற்குப் பிறகு கதிரேசனும், மாலதியும் தம்பியின் ஆசையை நிறைவேற்ற முடியுமா என்று ஒரு வாரம் தீவிரமாக யோசித்தார்கள்! அந்தளவுக்கு உதவி செய்ய தகுந்த உறவும் இல்லை, நட்பும் இல்லை!

    ஒரே வழி புலப் பட்டது.

    தாமரைக்குளம் வளர்ந்து வரும் கிராமம். கிட்டத்தட்ட ஒரு நகரமாகவே அது மாறி வருகிறது. அங்கு இருக்கும் அவர்கள் வீடு மெயின் ரோட்டில் இருப்பதால் அதை அடமானம் வைத்தால் கனிசமான பணத்தைக் கடனாகப் பெற முடியும். ஆனால் தங்கள் சம்பளத்தில் அதற்கு தவணைத் தொகையும் கட்டி, குடும்ப செலவுகளையும் சமாளிப்பது ரொம்ப கஷ்டம் என்று கதிரேசன், மாலதி இருவருக்குமே தெரியும்! ஏதாவது நல்ல காலம் வந்தால் மீட்டுக் கொள்ளலாம். இல்லா விட்டால் விற்று விடலாம்! என்று முடிவு செய்தனர்.

    சில குடும்பங்களில் பெரியவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அது கொஞ்சம் கூடத் தெரியாமல், தங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். அதன் விளைவு குடும்ப கஷ்ட நஷ்டம் தெரியாத ஊதாரிகளாக அவர்கள் வளர்ந்து விடுவதும் உண்டு.

    கதிரேசனும், மாலதியும் முரளிக்கு குடும்பப் பொருளாதார நிலையும் வரவு செலவும் தெரியும்படி வளர்த்து வந்தார்கள்.

    கடந்த ஒரு வாரமாக அண்ணனும், அண்ணியும் ஆழ்ந்த யோசனையில் இருப்பது முரளியின் மனசை உறுத்தியது.

    அண்ணா...! முடியாவிட்டா விட்டு விடலாம். எதற்கு நீங்க இரண்டு பேர்களும் கப்பல் கவிழ்ந்து விட்டது போல் எந்த நேரமும் யோசித்துக் கொண்டே இருக்கிறீங்க...?

    Enjoying the preview?
    Page 1 of 1