Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanjolai Manmathan
Maanjolai Manmathan
Maanjolai Manmathan
Ebook94 pages38 minutes

Maanjolai Manmathan

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Thuduppathi Ragunathan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466558
Maanjolai Manmathan

Read more from Thuduppathi Ragunathan

Related to Maanjolai Manmathan

Related ebooks

Related categories

Reviews for Maanjolai Manmathan

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanjolai Manmathan - Thuduppathi Ragunathan

    8

    1

    அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அன்று காலையில் நடந்தது என்னவோ அப்படித்தான்!

    நேற்றுவரை அவன் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டான்.

    புறப்படும் பொழுதுகூட அப்பா சொன்னார்.

    டேய்! பாட்டிக்கு உன்மேல் ரொம்ப வருத்தம்டா. உனக்கு காலேஜ் திறப்பதற்குத்தான் இன்னும் இருபது நாட்கள் இருக்கின்றனவே! சேர்ந்தாற்போல் ஒரு வாரம் கிராமத்தில் இருந்து விட்டுத்தான் வாயேன். பெரியவர்களுக்கும் திருப்தியாய் போய் விடும்.

    முணுமுணுத்துக் கொண்டேதான் கார்த்திக் கிராமத்திற்குப் புறப்பட்டான், எப்படியோ மூன்று நாட்களையாவது கிராமத்தில் கழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.

    அந்த சம்பவம் நடந்த பின்பு அவனுக்கு மனமே சரியில்லை. ‘இன்னும் இருபதே நாட்கள். சீக்கிரம் போய்விடுமே’ என்று நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தான் கார்த்திக்.

    மாஞ்சோலை கிராமம் உண்மையிலேயே மனசை மயக்கும் இயற்கையழகு வாய்ந்ததுதான். இருந்தாலும் வாலிபர்களை மயக்கும் அழகும் அங்கு இருக்கும் என்று யார் கண்டார்கள்?

    காவேரிக்கன்னியின் கடைக்கண் பார்வைபட்டு மாஞ்சோலை கிராமம் முழுவதும் பொன்னாக விளைந்தது. கிராமத்திலிருக்கும் நிலபுலன்கள் அனைத்தும் அவனுடைய தாத்தாவின் மேற்பார்வையில்தான் இன்னும் இருக்கின்றன.

    வேறு நல்ல ஆட்களை நியமித்துவிட்டு சென்னைக்கு வரும் படி எத்தனையோ முறை வற்புறுத்திப் பார்த்துவிட்டார்கள் அவனுடைய பெற்றோர்கள். அவருக்கென்னவோ அந்த மாஞ்சோலை கிராமத்தில் அப்படி ஒரு லயிப்பு!

    விடுமுறையில் கார்த்திக் கிராமத்திற்கு வந்ததில் பெரியவர்கள் இருவருக்குமே அளவுகடந்த மகிழ்ச்சி.

    முதல் நாள் வந்த களைப்பில் பெரியவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அப்படியே தூங்கிவிட்டான்.

    மறுநாள் பொழுது புலர்வதற்கு முன்பே எழுந்துவிட்டான். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் முதலில் அவனுக்கு காவேரிதான் நினைவுக்கு வந்தது.

    எந்த நேரமும் ‘களுக் களுக்’ என்று சிரித்துக் கொண்டு படித்துறையோடு விளையாடிக் கொண்டிருக்கும் காவேரி கார்த்திக் குழுவினர் படித்துறையில் இறங்கியவுடன் தன் சிரிப்பை அடக்கிக் கொள்வாள். அதொரு காலம்!

    விடியற்காலை நேரத்தில் காவிரியில் நீந்தி விளையாடுவதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அந்தச் சுவையே ஓர் அலாதி! பழைய நினைவுகளில் மிதந்த வண்ணம் கார்த்திக் காவிரியை நோக்கிக் கிளம்பிவிட்டான்.

    இன்னும் சரியாகக்கூட விடியவில்லை. கிழக்கு அப்பொழுது தான் வெளுத்துக் கொண்டிருந்தது. படிந்துறையை நெருங்கி விட்டான் கார்த்திக்.

    அந்த நேரத்திலேயே குளித்துவிட்டு, குடத்தில் நீர் மொண்டு கொண்டு படியேறிக் கொண்டிருந்தாள் ஓர் இளம் பெண்.

    ஒவ்வொரு படியாக அவள் ஏறும் அழகையே ரசித்துக் கொண்டிருந்த கார்த்திக், அந்த நிகழ்ச்சியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    படித்துறையில் படிந்திருந்த பாசி வழுக்கிவிட்டு விட்டது. அவள் அப்படியே படிகளில் உருண்டு கொண்டே சென்றாள். இடுப்பிலிருந்த குடம் ஒவ்வொரு படிகளிலும் ‘ணங்...ணங்’ என்று ஓசையை எழுப்பிக் கொண்டே போய் காவிரியில் ‘பொத்’தென விழுந்தது.

    கார்த்திக் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஒரு வினாடி என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.

    தன் நிலை வந்தவுடன் அவசர அவசரமாய் படிகளில் இறங்கினான். நீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டு படித்துறைக்கு வந்தான் கார்த்திக்.

    மயங்கிக் கிடந்த அவளை மார்போடு சாய்த்தவண்ணம் தரையில் உட்கார்ந்திருந்தான். ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று அவனே முதல் வேலையாக அவள் சேலைத் தலைப்பை மார்பில் பொருத்தினான்.

    அன்னியன் கை படக்கூடாத இடத்தில் பட்டுவிட்டதாலோ என்னவோ அந்த நிலையில் கூட ‘விசுக்’கென எழுந்து விட்டாள் அவள். தன் தலை அவன் மார்பில் சாய்ந்திருப்பதைக் கண்டு வெட்கியவள், மெதுவாக நகர்ந்து உட்கார்ந்தாள்.

    முடிந்தவரை தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டாள் அந்தப் பெண், ஈரச் சேலையால் அவள் எண்ணத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அவள் அழகை மேலும் அது எடுப்பாகக் காட்டியது. குங்குமத்தை முகத்தில் கொட்டியது போல் அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. நாணிக் கொண்டே எழுந்தவள் ஹா... என்று துடிதுடித்துக்கொண்டே காலைப் பிடித்த வண்ணம் மறுபடியும் கீழே உட்கார்ந்து கொண்டாள்.

    அப்பொழுதுதான் கார்த்திக்கும் அவள் காலைக் கவனித்தான். வலது கால் பெருவிரலில் பாதி நகம் பெயர்ந்து போய் இரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. கணுக்காலுக்கு மேல் ஒரு பலத்த காயம். எங்கோ கல்பட்டு சதையைப் பிய்த்து விட்டது.

    உடனே டவலைக் கிழித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கிய கார்த்திக், அதை நன்றாக நனைத்துக் கொண்டு வந்தான். அவள் அருகில் அமர்ந்து அவளுடைய வலது காலை எடுத்து தன் மடியின் மேல் வைத்துக் கொண்டு சுவாதீனமாக ஈரத் துணியை சுற்றி பெரு விரலுக்கு ஒரு கட்டுப் போட்டான்.

    அவள் ஒன்றும் சொல்லவில்லை. கணுக்காலுக்கு மேலிருந்த காயத்திற்குக் கட்டுப்போட, சேலையை முழங்கால்வரை அவன் நகர்த்த முயற்சித்தபோதுதான், திடீரென அவன் கைகளை அவள் பிடித்துக் கொண்டாள்.

    அப்பொழுதுதான் அவள் முகத்தைக் கவனித்தான் கார்த்திக் அந்த முகத்தில் யார் அப்படிக் குங்குமத்தைக் கொட்டியிருப்பார்கள்?

    நான்... நானே கட்டிக் கொள்கிறேன் என்ற அவளுடைய கூச்சத்தைக் கூட பொருட்படுத்தாமல் உறைந்திருந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டு ஈரத்துணியை நன்றாகச் சுற்றிக் கட்டிவிட்டான்.

    மெதுவாக அவன் தோளைப் பிடித்துக் கொண்டுதான் அவளால் எழுந்திருக்க முடிந்தது. கார்த்திக் உடலில் குறுகுறுவென்று ஏதோ ஊர்ந்து சென்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1