Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Achaani
Achaani
Achaani
Ebook90 pages46 minutes

Achaani

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Thuduppathi Ragunathan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466558
Achaani

Read more from Thuduppathi Ragunathan

Related to Achaani

Related ebooks

Related categories

Reviews for Achaani

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Achaani - Thuduppathi Ragunathan

    15

    1

    அன்று சோமசுந்தரத்தின் வீட்டுக்கு முன் விதவிதமான கார்கள், இண்டிகா, வேகன்-ஆர், ஸ்விப்ட், ஐ10, ஆல்டோ, ஃபிகோ என்று வரிசை வரிசையாக அணி வகுத்து நின்றன.

    வீட்டிற்குள்ளிருந்து வரும் இனிய நாதஸ்வர இசை ஒரு மங்களகரமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

    காஞ்சிரம், பனாரஸ், வர்ணஜாலம், டாட்டூ, வஸ்தரகலா என்று விதவிதமான பட்டுப் புடவைகள் வீட்டிற்குள் ‘சரக்’ ‘சரக்’கென்று இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டிருந்தன.

    சோமசுந்தரமும் அவர் மகன் சேகரும் வீட்டு முகப்பில் நின்று கொண்டு வரும் விருந்தினர்களை உற்சாகமாக வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

    பெரிய ஹாலில் விரிக்கப்பட்டிருந்த ரத்ன கம்பளம் போன்ற விரிப்பில் உட்கார்ந்திருந்த பெண்கள், சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சில் போன சந்திப்புக்கு பிறகு இந்த சந்திப்பு வரை அவரவர் வாங்கிய பட்டுப்புடவைகள் நகைகளின் பட்டியலைப்பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.

    ஆண்கள் பகுதியில் நாற்காலிகள் முழுவதும் நிறைந்திருந்தன. அப்பகுதியில்தான் சோமசுந்தரத்தின் மைத்துனர் அருணாசலம் அமர்ந்திருந்தார்.

    அருணாசலத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்த பல உறவினர்கள் அருணாசலம் சொல்வதற்கெல்லாம் அசட்டுச் சிரிப்பு சிரித்து ‘ஆமாம்’ போட்டு அவர் நட்பை பெற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

    சோமசுந்தரத்தின் மைத்துனர் அருணாசலம் கோவையில் நெ.1 ஸ்டீல் மர்ச்சென்ட். நாளொன்றுக்கு ஐம்பது லட்சத்திற்கு குறையாமல் வியாபாரம் செய்பவர்.

    அவருக்கு ஒரே மகன், ஒரே மகள். இருவருமே கல்யாண வயதில் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சொந்தத்தில் அவருக்கு பலத்த செல்வாக்கு.

    அவர் வீட்டிற்கு பெண் கொடுப்பதற்கும், அவர் வீட்டில் பெண் எடுப்பதற்கும் பிரியப்படாத உறவினர்கள் எவருமே இல்லை.

    அருணாசலத்தின் ஒரே மகள் ரவிக்குமார் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறான். நல்ல கம்பீரமான தோற்றம் நிறமோ நல்ல சிவப்பு, களையான முகம். பெண்களைப் பெற்றவர்களின் கண்களை உறுத்த இது போதாதா?

    அருணாசலத்தின் பெண் சுபத்ரா ஒரு அழகு தேவதை. செதுக்கி வைத்த சிலை போன்ற உருவம். நல்ல உயரம். அதற்கு ஏற்ற பருமன். எந்த நேரமும் சிரித்த முகம். அடக்கமான பண்பு. ஏழை, பணக்காரர் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் உபசரிக்கும் உயர்ந்த குணம். இந்த வருஷம் அவளுக்கு எம்.பி.பி.எஸ் கடைசி வருடம்.

    அருணாசலம் வீட்டில் பெண் எடுத்தால் சீர் சிறப்புக்கு சொல்லத் தேவையில்லை. தங்கத்தின் விலையைப் பற்றி கவலைப் படாத குடும்பம். தங்கத்தில் வைரத்தையும் பதித்து நகைகளால் அவளைப்பூட்டி வைர மங்கையாக அனுப்பி வைத்துவிடுவார்கள்.

    இதையெல்லாம் ஒவ்வொருவரும் மனசில் வைத்துக் கொண்டுதான் அவர்களுடைய உறவினர்கள், அருணாசலத்தை நெருங்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள்.

    அதே சமயம் எல்லோரும் இருக்கும் ஒரே சந்தேகம், அவர் மைத்துனர் சோமசுந்தரம் வீட்டிலும் பையனும், பொண்ணும் இருக்கிறார்கள். அதுவும் தக்க தகுதிகளோடு. உறவு விட்டுப் போகாமல் இருக்க அருணாசலம் தன் சொந்த தங்கை வீட்டிலேயே பெண் எடுத்து, பெண் கொடுத்து விடுவாரோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே உண்டு.

    அருணாசலத்தின் தங்கை, கணவர் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியில் இருக்கிறார். மாதச் சம்பளம் வாங்கும் சோமசுந்தரத்தை என்னதான் நெருங்கிய உறவாக இருந்தாலும் பல கோடிகளுக்கு அதிபதியான அருணாசலம் தன் சம்பந்தியாக ஏற்றுக் கொள்ளமாட்டாரோ என்ற சின்ன சந்தேகம்தான் பணக்கார உறவினர்களிடையே அருணாலத்தோடு சம்பந்தி உறவு கொண்டாட வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கியது.

    ஆரம்பத்தில் ஒரு சாதாரண இரும்பு வியாபாரியாகத்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் அருணாசலம். இப்பொழுது இரும்பு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு உரிமையாளராக மாறி விட்டார். அதன் பின்னர் ஜவுளி பவுண்டரி, கிரைண்டர் தயாரிப்பு என்று பல தொழில்களில் இறங்கி வெற்றிக் கொடி நாட்டி விட்டார். கோவையில் இருக்கும் பல கட்சிப் பிரமுகர்களும் அருணாசலத்தின் தயவை எதிர்பார்க்குமளவுக்கு உயர்ந்து விட்டார்.

    அருணாசலத்தின் மைத்துனர் சோமசுந்தரம் ஒருநிறை குடம். அவர் மனைவி பார்வதி ஒரு நல்ல குடும்பத் தலைவி., அழகான அன்பு நிறைந்த குடும்பம். முத்தான இரண்டு செல்வங்கள். மூத்த மகன் சேகர் எம்.ஈ.(எலக்ட்ரானிக்கல்) முடித்து விட்டு நல்ல கம்பெனியில் உற்பத்திப் பிரிவில் மேலாளராகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது.

    அடுத்த பெண் பானு. ஒரு அழகுச்சிலை. இப்பொழுதுதான் வயசுக்கு வந்திருக்கிறாள். பார்க்க ஒரு ஸ்வர்ண விக்ரகமாக திகழ்வாள்.

    சோமசுந்தரம் இந்த பூப்பு நன்னீராட்டு விழாவை பெரிய அளவில் ஒரு கல்யாணத்தை விட தடபுடலாக நடத்துகிறார். அவர் அருணாசலத்தை மனசில் வைத்துக் கொண்டுதான். இப்படி ஊரைக் கூட்டி ஆடம்பரமாக இந்த விழாவை நடத்துவதாக பல உறவினர்கள் அங்கே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தால் இது போன்ற ஏற்ற தாழ்வுகளைப் பற்றி பேச யாருக்கும் வாய்ப்பு இருந்திருக்காது.

    காரணம் அருணாசலம் பழைய இரும்பு சாமான்களை வாங்கி விற்கும் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1