Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Guru
Kadaisi Guru
Kadaisi Guru
Ebook151 pages52 minutes

Kadaisi Guru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீ வேதவியாசர் எழுதிய மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகிய நூல்களில் - வியாசர் சொல்லாமல் விட்ட இடங்களை - அல்லது - போதுமான அளவு சொல்லாமல் அவர் கடந்து சென்ற இடங்களை - மூலப் பாத்திரங்களின் புனிதம் குறையாமல் - கொஞ்சம் புனைவு சேர்த்து நிரப்பி எழுதப்பட்ட சிறுகதைச் சித்திரங்கள் அடங்கிய தொகுப்பே "கடைசி குரு"

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580173110626
Kadaisi Guru

Related to Kadaisi Guru

Related ebooks

Reviews for Kadaisi Guru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Guru - Dheepan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடைசி குரு

    Kadaisi Guru

    Author:

    தீபன்

    Dheepan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dheepan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரைக்குக் கனிந்துரை

    முதற் பொழிவு

    1. நான் பூதனை பேசுகிறேன்

    2. இறுதிச் சந்திப்பு

    3. தந்தை யார்?

    4. தேவகிக்கு வந்த தெளிவு

    5. குசேல கீதை

    6. தாய்மைப் பசி

    7. மறை விழி

    8. கீதை பிறந்த கீர்த்திப் பொழுது

    9. அக(ழ்) விழி

    10. வியாச கீதை

    11. கடைசி குரு

    12. ஓராயிரம் நாமம் உருவான நேரம்

    அணிந்துரை

    எழுத்தாளர் சப்தரிஷி லா.ச.ரா.

    கடைசி குரு எனும் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதித் தர இதன் ஆசிரியர் தீபன் அவர்கள் கேட்டபோது நான் சரியென்று சம்மதித்தேன்.

    படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது - இதற்கு அணிந்துரை எழுத முடியாது என்று. வேண்டுமானால் பணிந்துரை எழுதலாம் - முயல்கிறேன்.

    கர்ணன் படம் பார்க்கும் போது - நினைத்தேன் - மகாபாரதம் தமிழ் மொழியில்தான் நடந்திருக்குமோ - என்று.

    அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அதே நினைவுக்குள் திரும்புகிறேன் - கடைசி குரு நூலைப் படித்த பிறகு!

    பாரதப் பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் - அவரவர் வாய் வழி வெளிப்படுவதற்கென்றே வனையப்பட்டதாக இருக்கிறது ‘தீபன்’ தமிழ்!

    காட்சிகளின் விவரிப்பில் -

    காலத்தின் காயகல்பம் மணக்கிறது!

    நான் பூதனை பேசுகிறேன் எனும் கதையில் வரும் வரிகளைப் பாருங்கள் -

    ‘இதோ - நந்தனின் மாளிகை!

    தொட்டில் சங்கிலியைக் கையில் பிடித்தபடி படுத்துறங்கிக் கொண்டிருந்தது ஒரு பளிங்கு முகம்!

    இவள் நந்தனின் மனையாள் -

    தூங்கும் போதும் முகஜோதி அணையாள்!

    வேழச்சிசுவைத் தாங்கிப் பேணும் பேழை இவள்தான்!’

    ‘தொட்டில் மீது அந்தத் துண்டு நிலா!

    வட்ட முகம் - இதன் அழகு என்ன

    வார்க்கப்பட்டதா -

    வனையப் பட்டதா -

    வரையப் பட்டதா?’

    அடுத்ததாக குசேல கீதை கதையில் -

    ‘சுதாமனுடைய குடிசை - நேற்று வரை

    வறுமையும் ஏழ்மையும் பொங்குமிடம் -

    வயிற்றின் கேள்விகள் தொங்குமிடம் -

    வாழ்வின் ஒளியே மங்குமிடம் -

    ஆனால் இன்றோ...

    தங்கமும் வைரமும் தங்குமிடம்!

    எவ்வாறு நேர்ந்தது இந்த மாயம்?

    எங்கே போனது ஏழ்மைச் சாயம்?’

    அடுத்ததாக - வியாச கீதை எனும் கதையில் -

    ‘இவர்களின் பாடை நிழலிலா நாங்கள் பட்டம் சூட வேண்டும்?

    இவர்கள் குருதியில் நனைந்தா நாங்கள் கோட்டை ஏற வேண்டும்?’

    கீதை பிறந்த கீர்த்திப் பொழுது கதையில் -

    ‘கீதை - விஜயனுக்கு உரைக்கப் படவில்லை -

    உணர்த்தப் பட்டது -

    பகரப் படவில்லை - பகிரப் பட்டது -

    அவன் நெஞ்சில் பதிக்கப் பட்டது’

    வியாச கீதை கதையில் -

    ‘உண்மையில் இது வெற்றியா? பாண்டவர் தரப்பில் எஞ்சியிருப்பது எட்டே பேர்! அந்த எண்மரைத் தவிர - பல லட்சம் பரிதாபர்களின் பரலோகப் பயணத்திற்கு இத்தனை பாராட்டா?

    குரு ஷேத்திரம் - எனும் பெயரையே

    குருதி ஷேத்ரமாக மாற்றிய குருதி!

    யுத்த ரத்தத்தின் மொத்த வித்தையையும் இந்தப் பதினெட்டு நாட்களில் பார்த்து முடித்து விட்டேன்!

    வலிமையை நிலைநாட்டும் போரல்ல இது -

    வக்ரத்தை நிலைநாட்டும் போர்! இது வெறும்

    யுத்த ரத்தம் மட்டுமல்ல; இது

    யுகத்தின் ரத்தம்! ஜெகத்தின் ரத்தம்!’

    மேலும் மேலும் - எழில் எழுத்தால் - எழுத்து எழிலால் - நம்மை அசர வைத்தபடியே இருக்கிறார்.

    அதே வியாச கீதையில் -

    ‘அந்தப் போர் -

    பிணங்களின் பேரெழுச்சி -

    சாவின் சாம்ராஜ்யம் -

    சவங்களின் சந்நிதானம் -

    சடலங்களின் சமுத்திரம்!

    கோடிக்கணக்கான உயிர்களைக்

    கொள்ளை கொண்டோம் பாட்டனாரே!

    உயிரின் உண்மை அர்த்தத்தை உணர வையுங்கள்’

    நர்த்தன வார்த்தைகளின் நட்டுவனார்

    ‘தீபன்’ அவர்களின் நட்டுவாங்கத்தை நல்குகிறேன்!

    நான் பூதனை பேசுகிறேன் கதையில் -

    ‘அந்தக் குழந்தையின் அதரம் - என் மார்புக் காம்பில் பட்டதுதான் தெரியும் - தாய்முலை என்று எண்ணி அது உறிஞ்சத் தொடங்கியது -

    உறிஞ்சுகிறான் – நான்

    ஊதப்பட்டேன் -

    உறிஞ்சுகிறான் – நான்

    இசைக்கப் பட்டேன்

    உறிஞ்சுகிறான் – நான்

    வாசிக்கப் பட்டேன்

    உறிஞ்சுகிறான் – நான்

    மீட்டப் பட்டேன்!

    அந்த அழகு அதரங்களால் இசைக்கப்பட்ட முதல் இசைக்கருவி நான்தான்!’

    தந்தை யார் என்கிற கதையில்...

    ‘பிரகலாதன் - ஆஹா!

    அசுர வீணையின்

    அரிநாத நரம்பு!

    அரக்க வயல் விளைந்த

    ஆன்மீகக் கரும்பு!

    அவன் கண்ணெதிரே அவன் தந்தையைக் கொல்வதா?

    பக்தனின் பிதாவைக் கொல்வதுதான்

    பரமாத்ம லட்சணமா?

    அடியவனின் அன்னையை

    அமங்கலி ஆக்குவதுதான்

    அவதார அநுக்கிரகமா?’

    குசேல கீதை எனும் கதையில்

    ‘கைப்பிடி அவலில் எனக்கு

    மெய்ப்பிடி ஞானம் -

    அர்ச்சுனனுக்கு அதரம் வலிக்கச் சொன்னதை - இந்த அநாமதேயனுக்கு இதழ் திறவாமல் - இதயம் திறந்து சொன்னான்.

    அவன் எனக்குத் தந்தது தானம் அல்ல;

    உயிர் மூச்சின் தியானம்!

    ஏழ்மை ஒழிப்பல்ல அது - வாழ்மைச் செழிப்பு!

    உபதேசம் அற்ற உருவேற்றம் -

    உதாசீனம் அற்ற அருளூற்றம்!’

    மறைவிழி எனும் கதையில் -

    ‘இமைத்திரிகள் ஏந்தி வந்த இதய தீபம்

    இறைவனே இயற்றிய கவிதை வெளிச்சம்

    நேத்திர சாத்திர நேயர் விருப்பம் -

    நயன மேடையின் நடன அநுபவம்’

    வியாச கீதை கதையில்

    ‘மரணம் என்பது உயிர்கள்

    அடுத்த அத்தியாயத்தில் நுழைவதற்கான

    அக வாயில் திறப்பு!

    மோட்சம் கூட உயிர்ப் பயணத்தின் முடிவே தவிர - உயிர்களுக்கான முடிவு அல்ல’

    கவிதையை ரசிக்கக் கவிதாரசனை உள்ளவர்களும் - உரைநடையை ரசிக்கக் கருத்து ரசனைக்காரர்களும் இருக்க -

    கவிதா நடையில் காவியச் சித்திரம் படைப்பது - காற்றில் சிற்பம் வடிப்பது போன்று சிக்கலானது!

    எந்த இடத்தில் சற்றே சற்று சுவாரஸ்யம் குன்றினாலும் - அந்தப் பக்கத்தைக் கடந்து விடுவார்கள்.

    ஆனால் - தீபன் அவர்களின் மேதாவிலாசமான எழுத்து நடன நடையில் - ஒரு வரியைக் கூடப் படிக்காமல் கடந்து விட முடியாது.

    அவ்வளவு நுணுக்கம் - நுட்பம் - நூதனக் கவிநடை - சுவாரஸ்யம்!

    என் தாயார் ஹேமாவதி ராமாமிர்தம் அவர்கள் - திருமதி லா. ச. ரா-வின் நினைவுக் குறிப்புகள் எனும் புத்தகம் எழுதியுள்ளார்.

    இதைப் படித்த வண்ணதாசன் ஐயாவின் இரு வரிகள் -

    ‘பருகப் பருகப் பாற்கடல்

    பறிக்கப் பறிக்கப் பாரிஜாதம்’

    இந்த மகத்தான வரிகளை நம் தீபன் வடித்த கர்ணனுக்கு மடை மாற்றுகிறேன்.

    இந்தப் பகுதி மட்டும் - பந்துலு இயக்காமல் - சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதாமல் -

    வி. ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்யாமல் -

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்காமல் - அத்தனை பொறுப்புக்களையும் நம் தீபன் அவர்களே ஏற்றுக்கொண்டு - சிவாஜியை மட்டும் அப்படியே நடிக்க விட்டுவிட்ட நயம் மிகுந்த கர்ணன்!

    ‘நீங்கள் என் தாயாக இங்கு வரவில்லை தாயே! யுத்த வெற்றிக்காக - அதற்கான வழிகளை மட்டுமே சிந்தித்து இங்கு வந்துள்ளீர்கள் தாயே இங்குதான் துரியோதனன் தோள் நிமிர்கிறான் தாயே! நான் எப்படித் துரியோதனனை விட்டு விலக முடியும்? அரண்மனையின் அத்தனை வாய்களும் என்னைப் பார்த்துக் காறி உமிழ்ந்த போது- அந்த எச்சில் என் மீது படாமல் - அரச கவசம் அணிவித்து அந்தஸ்தைத் தந்தவனம்மா துரியோதனன்!

    குலம் அறியாத இந்தக் குப்பை மனிதனைக் கொற்றவனாக்கிக் கொண்டாடியவனம்மா அந்தக் கோயில் தெய்வம்! அவனை விட்டா என்னைப் பாண்டவரோடு இணையச் சொல்கிறீர்கள்?

    ஆ! இது துரோகம் தாயே - துரோகம்!

    இதுவரை

    Enjoying the preview?
    Page 1 of 1