Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Linga Puranam
Linga Puranam
Linga Puranam
Ebook581 pages3 hours

Linga Puranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நைமிசாரண்யத்து தவசிரேஷ்டர்கள் சூத முனிவரிடம் லிங்க வழிபாட்டின் மேன்மையை விவரிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சூதர் கூறியதே லிங்க புராணம் ஆகும். வியாச பகவான் எழுதிய பதினென் புராணங்களில் பதினொன்றாவதான லிங்க புராணம் இதன் மூலம் ஆகும். இதை பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்திருப்பர் என்கிறார் சூதர்.
ஆதியும் அந்தமும் இன்றி, பிறப்பு இறப்பு இல்லாது, பேரொளியாக விளங்கும் ஜோதி வடிவிலிருந்து சகல லோகங்களுக்கும் ஆதாரமான லிங்கம் உண்டாயிற்று. அதனிடமிருந்து தோன்றியவர்களே பிர"மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள். தமக்கென வித்து ஏதுமின்றி அனைத்துயிருக்கும் தாமே வித்தாகி வளர்ந்து விஸ்வரூபியான அப்பெருமானின் படைப்பே இப்பிரபஞ்சமாகிய மாயை. பஞ்ச பூதங்களும் அவனே. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்தும் அப்பெருமானுடைய முகங்கள்.
இந்நூலின் மூலம் சிருஷ்டி தத்துவத்தை அறியலாம். சிவலிங்க வழிபாடு செய்து தமது பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொண்டவர்களின் சரிதங்கள் இதில் தரப்பட்டுள்ளன. சிவபெருமானின் அருள் பெற்று உய்ந்தவர்களின் எண்ணிக்கை விவரிக்க இயலாதது. என்றாலும், அப்பாக்கியம் பெற்ற பல முக்கிய புருஷர்களைப் பற்றி இந்நூலைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateFeb 23, 2023
ISBN9788179502433
Linga Puranam

Read more from Karthikeyan S

Related to Linga Puranam

Related ebooks

Related categories

Reviews for Linga Puranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Linga Puranam - Karthikeyan S

    லிங்க புராணம்

    கார்த்திகேயன்

    GIRI

    Linga Puranam

    Karthikeyan

    © 2023 GIRI All rights reserved.

    Published in 2023 by

    GIRI

    372/1, Mangadu Pattur Koot Road, Mangadu, Chennai - 600122.

    Phone: +91 44 66 93 93 93 (Multiple Lines), +91 44 2679 3190, 3100

    No part of the site may be reproduced or copied in any form or by any means [graphic, electronic or mechanical, including photocopying, recording, taping or information retrieval systems] or reproduced on any disc, tape, perforated media or other information storage device, etc., without the explicit written permission of the Publisher.

    e-Book

    ISBN: 978-81-7950-243-3

    Created by: GIRI

    www.giri.in | sales@giri.in

    பதிப்புரை

    ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி’ எனவும் ‘முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே’ என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் சிவன் புகழை இசைக்கிறார். அப்படிப்பட்ட சிவப்பரம்பொருளின் ஜோதி வடிவான லிங்க ஸ்வரூபத்தின் பெருமையை லிங்க புராணம் விவரிக்கிறது.

    ‘உள்ளம் கசிந்துருகி என்னிடம் செலுத்தும் அன்பிற்கு நான் அருள் செய்வேன்’ என்று சிவபெருமான் உமா தேவியிடம் சொன்னதாக லிங்க புராணம் கூறுகிறது. ‘அன்பெனும் கயிற்றில் அகப்படும் மலையே’ என்று அடியார்கள் அவனைத் தொழுவது அதனாலேயே அல்லவா!

    நைமிசாரண்யத்து தவசிரேஷ்டர்கள் சூத முனிவரிடம் லிங்க வழிபாட்டின் மேன்மையை விவரிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சூதர் கூறியதே லிங்க புராணம் ஆகும். வியாச பகவான் எழுதிய பதினென் புராணங்களில் பதினொன்றாவதான லிங்க புராணம் இதன் மூலம் ஆகும்.  இதை பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்திருப்பர் என்கிறார் சூதர்.

    ஆதியும் அந்தமும் இன்றி, பிறப்பு இறப்பு இல்லாது, பேரொளியாக விளங்கும் ஜோதி வடிவிலிருந்து சகல லோகங்களுக்கும் ஆதாரமான லிங்கம் உண்டாயிற்று. அதனிடமிருந்து தோன்றியவர்களே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள். தமக்கென வித்து ஏதுமின்றி அனைத்துயிருக்கும் தாமே வித்தாகி வளர்ந்து விஸ்வரூபியான அப்பெருமானின் படைப்பே இப்பிரபஞ்சமாகிய மாயை. பஞ்ச பூதங்களும் அவனே. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்தும் அப்பெருமானுடைய முகங்கள்.

    இந்நூலின் மூலம் சிருஷ்டி தத்துவத்தை அறியலாம். சிவலிங்க வழிபாடு செய்து தமது பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொண்டவர்களின் சரிதங்கள் இதில் தரப்பட்டுள்ளன. சிவபெருமானின் அருள் பெற்று உய்ந்தவர்களின் எண்ணிக்கை விவரிக்க இயலாதது. என்றாலும், அப்பாக்கியம் பெற்ற பல முக்கிய புருஷர்களைப் பற்றி இந்நூலைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    ஸ்ரீராமன் அவதரித்த ரவி குலத்தைப் பற்றியும், பாண்டவர்களின் சந்திர வம்சத்தைப் பற்றியும், பகவானிடம் கொண்ட அசைக்க முடியாத பெரும்பக்தி காரணமாக பேறு பெற்ற துருவன், அம்பரீஷன் ஆகியோரின் வாழ்க்கை உள்ளிட்ட பல சரித்திரங்கள் இதில் உண்டு. பஞ்ச பூத ஸ்தலங்கள், அட்டவீரட்டான ஸ்தலங்களின் விபரங்கள் அடங்கிய, நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூலை அடியார்கள் வாங்கிப் படிப்பதால் பெரும்பயன் கிட்டப் பெறுவார்கள் என்பது உறுதி.

    - பதிப்பகத்தார்

    * * * *

    நாரதர் தொடங்கிய பணி

    ரு சமயம் நாரத முனிவர் நைமிசாரண்ணியத்துக்குச் சென்றார். அங்குள்ள முனிவர்கள் அளவற்ற சந்தோஷத்துடன் அவரை வரவேற்று உபசாரங்கள் செய்தனர். முனிவர்களுடைய உபசாரங்களால் மனம் மகிழ்ந்து நாரதர் அவர்களிடம் உரையாடும்போது சிவலிங்கத்தின் மகிமைகளைப் பலவாறு எடுத்துக் கூறினார். அந்த சமயம் சூத முனிவர் அங்கே வந்தார். அவரைக் கண்டதும் முனிவர்கள் எல்லையற்ற குதூகலம் கொண்டவர்களாய் அவரை வரவேற்று நமஸ்கரித்தனர்.

    முனி சிரேஷ்டரே தங்கள் வருகையால் நாங்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்களானோம். சிவலிங்கத்தின் மகிமைகளைத் தாங்கள் எடுத்துக் கூறி எங்களையும் ஈசன் அனுக்கிரகத்துக்குப் பாத்திரர்களாக்க வேண்டும் என்று கோரினர்.

    சூத முனிவருடைய நெஞ்சம் ஆனந்தத்தால் நிறைந்தது. எண்ணற்ற சிவலிங்கங்களையும் வியாச பகவானையும் மனத்தால் தியானித்து அருள்பாலிக்க வேண்டினார். பின்னர் அவர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார்.

    அன்பு நிறைந்த தவசீலர்களே! சோமனைச் சூடும் எம்பெருமானுடைய மகிமை, கூறக்கூற மேலும் விரியுமன்றோ! ஜோதியாய் எங்கும் வியாபித்து சகல லோகங்களையும் படைத்து ரக்ஷித்து அழித்தருளும் பெருமானின் சரிதத்தை முன்னர் பிரமன் நூறுகோடி கிரந்தங்களில் அமைத்தார். பின்னர் உலகத்தோர் படித்துக் கடைத்தேறும் பொருட்டு, அதை சுருக்கி ஒரு கோடிக் கிரந்தங்களில் அமைத்தார். வியாச பகவான் மேலும் அதைச் சுருக்கி நான்கு லக்ஷம் கிரந்தங்களில் எழுதினார். அதை நான் இப்போது பத்தாயிரம் கிரந்தங்களில் உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்தப் புராணத்துக்கு லிங்க புராணம் என்று பெயர். வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் இது பதினொன்றாவது புராணம் ஆகும். இதைப் பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர்.

    இவ்வாறு கூறிய சூதர் நைமிசாரண்ணியத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார்.

    * * * *

    பஞ்ச பூதங்களின் தோற்றம்

    தி அந்தமின்றி பிறப்பு, இறப்பில்லாது, ஒலி முதலான புலன்கள் இல்லாது, பேரொளியாய் விளங்கும் ஜோதி ஸ்வரூபத்துக்கு சிவம் எனப்பெயர். அந்த ஜோதிர் லிங்கத்திலிருந்து சகல லோகங்களுக்கும் ஆதாரமானதும், அவ்வியக்தம் என வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. அதனிடமிருந்து பிரம்மன், நாராயணன், ருத்ரன் என்ற மூவர் தோன்றினர். பிரம்மன் சகல லோகங்களையும் படைத்தார். நாராயணன் அவற்றைக் காத்து ரக்ஷித்தார். ருத்திரன் முடிவில் அனைத்தையும் ஒடுக்கி  அழித்தார்.

    தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்துயிருக்கும் தாமே வித்தாகி வியாபித்திருக்கும் அப்பெருமானின் ஏவலால் மாயையிடமிருந்து மகத் தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டாயிற்று.

    தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. சப்த தன்மாத்திரையான பேரொலியினிடமிருந்து அதன் தன்மை கொண்ட ஆகாயம் உண்டாயிற்று.

    ஆகாயத்தினிடமிருந்து ஸ்பரிச தன்மாத்திரை தோன்றியது. அதனிடமிருந்து அதன் தன்மையைக் கொண்ட காற்று உண்டாயிற்று.

    காற்றினிடமிருந்து ரூப தன்மாத்திரை தோன்றியது. அதனிடமிருந்து அதன் தன்மையைக் கொண்ட நெருப்பு உண்டாயிற்று.

    நெருப்பிலிருந்து ரச தன்மாத்திரை தோன்றியது. அதனிடமிருந்து அதன் தன்மையைக் கொண்ட நீர் உண்டாயிற்று.

    நீரிலிருந்து கந்த தன்மாத்திரை தோன்றியது. அதனிடமிருந்து அதன் தன்மையைக் கொண்ட பூமி உண்டாயிற்று.

    ஆகாயத்தை ஸ்பரிச தன்மாத்திரை சூழ்ந்துள்ளது. அதனைக் காற்று சூழ்ந்துள்ளது. காற்றை ரூப தன்மாத்திரை சூழ்ந்துள்ளது. அதனை நெருப்பு சூழ்ந்திருக்கிறது. நெருப்பை ரச தன்மாத்திரை சூழ்ந்திருக்கிறது. அதனை நீர் சூழ்ந்திருக்கிறது. நீரைக் கந்த தன்மாத்திரை சூழ்ந்திருக்கிறது. அதனைப் பூமி சூழ்ந்திருக்கிறது.

    பூமியானது பஞ்ச பூதங்களின் குணங்களைக் கொண்டிருக்கிறது. நீர் நான்கு பூதங்களின் குணங்களை மட்டுமே கொண்டுள்ளது. நெருப்பு மூன்று பூதங்களின் குணங்களையும், காற்று இரண்டு பூதங்களின் குணங்களையும் கொண்டுள்ளன. ஆகாயமோ ஏகமாய் நிர்மலமாய் இருக்கின்றது.

    வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்க ளுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் எனப்பட்ட அகங் காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் மனமும் உண்டாயின. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் ஞானேந்திரியங்கள். வாக்கு, பாணி, பாதம், பாயு (குதம்), உபஸ்தம் ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள்.

    மகத் தத்துவம் முதல் உண்டான தத்துவங்கள் ஓர் அண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன் என்றும், மால் என்றும், சிவன் என்றும் படைத்தல், காத்தல், அழித்தல் என்று அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப அழைக்கப்படுகின்றார்.

    பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கியுள்ளன. அண்டத்தை அதைப் போன்று பத்து மடங்கு அளவுள்ள நீர் சூழ்ந்தி ருக்கும்.  அந்த நீரை, அதைப் போன்று பத்து மடங்கு அளவு நெருப்பு சூழ்ந்திருக்கும். நெருப்பை அதைப் போன்று பத்து மடங்கு அளவு காற்று சூழ்ந்திருக்கும். காற்றை அதைப் போன்று பத்து மடங்கு அளவு ஆகாயம் சூழ்ந்திருக்கும். ஆகாயத்தை அகங்காரம் சூழ்ந்திருக்கும். அகங்காரத்தை மகத் தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதிப் புருஷன் தன்னிடம் லயப்படுத்திக் கொண்டிருப்பான்.

    சிவனருளால் அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் மூவரும் உதிப்பார்கள். ராஜச குணத்தோடு பிரம்மன் சிருஷ்டிப்பார். சிருஷ்டிக்கப்பட்டவற்றை சாத்வீக குணத்தோடு விஷ்ணு ரக்ஷிப்பார். முடிவில் தாமச குணத்தோடு ருத்திரன் அனைத்தையும் தம்முள் லயிக்கச் செய்வார். பிரளயத்தின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவார்கள்.

    * * * *

    கால அளவு

    பிரமன் சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளும் நேரம் அவருக்குப் பகல் பொழுதாகும். அனைத்தும் அறிந்து ஒடுங்கும் காலம் இரவு நேரமாகும்.

    இமைத்தல் பதினைந்து சேர்ந்தது காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டை சேர்ந்தது, ஒரு கலை என்ற கால அளவு ஆகும். முப்பது கலை சேர்ந்தது ஒரு முகூர்த்தம் ஆகும். பதினைந்து முகூர்த்தம் ஒரு பகலாகும். இரவு அதே அளவு கொண்டதாகும். பகலும் இரவும் சேர்ந்தது ஒரு நாள்.

    பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம் எனப்படும். இரண்டு பக்ஷம் சேர்ந்தது ஒரு மாதம். மானிடருக்கு ஒரு மாதம் என்பது பித்ருக்க ளுக்கு ஒரு நாளாகும்.

    பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு வருஷம். இந்தக் கால அளவு தேவர்களுக்கு ஒரு நாள்.

    தேவர்களுக்குச் சொல்லப்படும் கணக்கில் பத்து ஆண்டுகள் சென்றால் அந்தக் காலம் சப்த ரிஷிகளுக்கு ஓர் ஆண்டுக் காலமாகும். அவ்விதம் சப்த ரிஷிகளுக்குப் பத்து ஆண்டுகள் சென்றால் அந்தக் காலம் துருவனுக்கு ஓர் ஆண்டாகும்.

    தேவர்களுக்குச் சொல்லப்படும் கால அளவு: நாலாயிரம் ஆண்டுகள் கொண்டது கிருதயுகம். யுகத்தின் முன்னால் நானூறு ஆண்டுகள் சந்தி என்றும், யுகத்தின் முடிவில் நானூறு ஆண்டுகள் சந்தியம்சம் என்றும் சொல்லப்படும். திரேதா யுகத்துக்கு மூவாயிரம் ஆண்டுகளும் சந்தி, சந்தியம்சம் முறையே முன்னூறு ஆண்டுகள் ஆகும். துவாபர யுகத்துக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் சொல்லப்பட்டுள்ளன. கலியுகத்துக்கு ஆயிரம் ஆண்டுகளும் சந்தி சந்தியம்சம் முறையே முன்னும், பின்னும் நூறு ஆண்டுகளும் சொல்லப்பட்டுள்ளன.

    இவ்விதம் நான்கு யுகங்களின் காலமும் முடிவடைந்தால் ஒரு சதுர்யுகம் முடிந்ததாகச் சொல்வர். எழுபத்தொரு சதுர் யுகங்கள் ஒரு மன்வந்தரம் எனப்படும். அந்தக் காலத்தை ஒரு மனு பரிபாலிப்பான். அவ்விதம் பதினான்கு மனுக்களின் காலம் முடிவடைந்தால் பிரம்மனுக்குப் பகற்பொழுது முடியும். அவருக்கு இரவுக் காலம் எனப்படுவதும் பகலைப் போன்று அதே அளவு கொண்டதாகும்.

    பிரமனுடைய பகற்பொழுது முடிந்ததும் எங்கும் ஒரே ஜலப்பிரவாகமாகி அதில் இருபத்தெட்டுக் கோடித் தேவரும் அழிந்து விடுவர். பதினான்கு மனுக்களும், பதினான்கு இந்திரர்களும் மறைந்து விடுவர். சப்தரிஷிகளும் மஹர் லோகத்திற்கு சென்று அங்கிருப்பவர்களுடன் ஜனலோகத்தை அடைந்து தங்குவர். இரவுப் பொழுது முடிந்து விடிந்ததும் பிரமன் கண் விழித்து மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கி, பகற் பொழுதில் பதினான்கு மனுக்களைக் கொண்டு பரிபாலிப்பார்.

    பிரமனுடைய ஆயுள் நூறு ஆண்டுகளாகும். அதைப் பரம் என்பர். அதில் பாதியை பரார்த்தம் என்று சொல்வர். பிரமனுக்கு நூறு ஆண்டுகள் முடிந்ததும் சகல லோகங்களும் அழிந்து பஞ்ச பூதங்களும் ஒன்றுடன் ஒன்று ஐக்கியப்பட்டு பரம் பொருளைச் சேர்ந்து விடும்.

    படைப்பு

    அனைத்துக்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம்பொருளுக்குத் தோற்றமோ அழிவோ கிடையாது. அனைத்தும் அதனிடமிருந்து உண்டாகி அதனையே அடைகின்றன.

    பகல் பொழுது முடிந்ததும் பிரம்மன் இரவுப் பொழுதை நித்திரையில் கழிக்கிறார். திருமால் பாம்பைணயில் துயில் புரிகையில் பூமி முதலான நான்கு லோகங்களும் பிரளய வெள்ளத்தில் அழிந்து விட்டன. இரவுப் பொழுது நீங்கிப் பகல் தோன்றியதும் திருமால் கண் விழித்து நான்கு லோகங்களும் நீரிலே ஆழ்ந்திருப்பதைக் கண்டு பன்றியாக உருவெடுத்து பிரளய நீரில் மூழ்கி அவற்றை மீட்டு வந்து முன்போல அமைத்து சிருஷ்டிகளைத் தொடங்கலானார்.

    சிருஷ்டியைத் தொடங்க பிரமன் எண்ணியபோது தாமச சிருஷ்டிகள் எனப்பட்ட ஐந்து வகை சிருஷ்டிகள் அவரிடமிருந்து தோன்றின. தமசு, மோகம், மஹாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று அவை ஐந்தும் அழைக்கப்பட்டன. விருக்ஷங்கள், புதர்கள், கொடிகள், பூண்டுகள், புற்கள் என்ற ஐந்தினாலும் சாதகம் உண்டாகாதென்று நினைத்து வேறு வகையானவற்றைச் சிருஷ்டிக்க எண்ணினார் பிரமன். அப்போது அவரிடமிருந்து பசு முதலான விலங்குகள் தோன்றின. இவ்வகை சிருஷ்டியாலும் பிரயோஜனமில்லையென்று பிரமன் மீண்டும் எண்ண அவரிடமிருந்து தேவர்கள் உண்டானார்கள்.

    தேவர்கள் தோன்றிய பின்னர் மறுபடியும் படைக்க எண்ணுகையில், பிரமனிடமிருந்து மனிதர்கள் உண்டானார்கள். அதன் பிறகும் சிருஷ்டிக்க எண்ணம் கொண்டவரிடமிருந்து கரிய உடலைக் கொண்ட பூதம், பேய் முதலான சிருஷ்டிகள் உண்டாயின.

    இவ்விதமாக ஐந்து சிருஷ்டிகள் தோன்றிய பின்னர் பிரமனிடமிருந்து சனகர், சனந்தனர், சனத் சுஜாதர், சனத் குமாரர், ருத்திரர் என்ற ஐவரும் உண்டானார்கள். பிரமன் அவர்களை அழைத்து சிருஷ்டித் தொழிலை ஏற்குமாறு சொன்னார். அவர்களுடைய உள்ளம் சிருஷ்டித் தொழிலை ஏற்பதை விரும்பவில்லை. மாதொரு பாகம் வைத்த மகேச்வரனிடம் மனத்தைச் செலுத்தி அவன் தியானத்தில் ஈடுபடவே அவர்கள் விரும்பினர்.

    குமாரர்களுடைய எண்ணத்தை அறிந்த பிரமன், அவர்களால் சிருஷ்டி தொடங்கப்படாது என்பதை உணர்ந்து மீண்டும் ஒன்பதுபேரை உண்டாக்கினார். புலஸ்தியர், கிருது, பிருகு, அத்திரி, மரீசி, புலகர், தக்ஷன், வசிஷ்டர், ஆங்கிரசு, என அவர்கள் அழைக்கப்படலானார்கள். மேலும் சங்கல்பா, தர்மா, அதர்மா என்ற மூவரையும் சேர்த்து மொத்தம் பன்னிருவர். அவர்கள் மூலம் உலகிலே சிருஷ்டியை விஸ்தரிக்க சுவாயம்பு மனு என்ற புருஷனையும் சதரூபை என்ற பெண்ைணயும் பிரமன் தோற்றுவித்தார்.

    சதரூபை சுவாயம்பு மனுவை மணந்து கொண்டு அவன் மூலம் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு புதல்வர்களையும் ஆகூதி, பிரசூதி என்ற இரண்டு பெண்களையும் பெற்றாள்.

    சுவாயம்பு மனு தன் குமாரத்தி ஆகூதியை, ருசி என்பவருக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களுக்கு யக்ஞன் என்ற பிள்ளையும், தக்ஷிைண என்ற பெண்ணும் பிறந்தனர். தக்ஷிைண யக்ஞனையே மணந்து கொண்டு அவன் மூலம் பன்னிரண்டு பிள்ளைகளை பெற்றாள்.

    மனு தன் மற்றொரு குமாரத்தியான பிரசூதியை தக்கனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களுக்கு இருபத்து நான்கு பெண்கள் பிறந்தனர். சிரத்தா, லக்ஷ்மி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை, புத்தி, லஜ்ஜை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி, சதி, கியாதி, சம்பூதி, ஸ்மிருதி, க்ஷமா, அனசூயை, சந்நதி, ஊர்ச்சை, சுவாகா, பிரீதி, அரணி ஆகிய இருபத்து நான்கு பேரும் தக்ஷனுடைய புத்திரிகள். இவர்களில் கீர்த்தி வரை உள்ள பதின்மூன்று பெண்களைத் தக்ஷன் தருமருக்கு மணம் செய்து கொடுத்தான். காமன், தற்பன், நியமன், சந்தோஷன், லோபன், சுருதன், தண்டன், சமயன், போதன், அப்ரமாதன், விநயன், வ்யவசாயன், சுகன், யசஸ், க்ஷோமன் என்று பதின்மூன்று மனைவிகளிடமும் தருமருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.

    வையகம் அனைத்துக்கும் ஆதிகாரனனான ஈசனின் மானசீக படைப்பான சதியை தக்கன் மகளாக தத்தெடுத்து ஈசனுக்கு மணமுடித்தார்.

    கியாதி என்பவள் பிருகு முனிவருக்குப் பத்தினியானாள். அவர் மூலம் அவளுக்கு தாதா, விதாதா என்ற இரு புதல்வர்களும், ஸ்ரீ என்ற பெண்ணும் பிறந்தனர் (அவளே விஷ்ணுவின் பத்தினி).

    பிரபூதி என்பவளை மரீசி முனிவர் மணந்து கொண்டார். அவர் மூலம் துஷ்டி, அபசிதி, திருஷ்டி, கிரிசி என்ற மகள்களும் மற்றும் பூர்ணமாஸா, மரீசன் என்ற மகன்களும் அவளிடம் பிறந்தார்கள்.

    ஸ்மிருதி என்பவள் ஆங்கீரசு முனிவருடைய பத்தினியானாள். அவரிடம் அவள் அனுமதி, சினீவாலி, ராகை, குகு என்ற பெண்களையும் அனுபவன், அக்னி, கீர்த்திமான் என்ற பிள்ளைகளையும் பெற்றாள்.

    க்ஷமை என்பவளுக்குப் புலகரிடம் வரீயான், சகிஷ்ணு, கர்த்தமன் ஆகியோரும் பீவரி என்ற மகளும் பிறந்தார்கள்.

    அனசூயை என்பவள் அத்திரி முனிவரை மணந்து கொண்டு அவரிடம் சத்யநேத்ரன், பவ்யமூர்த்தி, ஆபன், சனைச்சரன், சோமன் ஆகிய பிள்ளைகளையும் ச்ருதி என்ற பெண்ைணயும் பெற்றாள்.

    ஊர்ச்சை வசிஷ்டரை மணந்தாள். அவளுக்கு சுக்ரன், சவனன், ரஜஸ், அனகன், சுகோத்திரன், பாஹு, சுதபஸ் என்பவர்கள் பிறந்தார்கள்.

    புலஸ்தியர் பிரீதியை மணந்தார். அவருக்கு அவளிடம் வேதபாகு, தத்தோர்ணா ஆகியோரும், திருஷத்வதியை என்ற பெண்ணும் பிறந்தனர்.

    சந்ததி, கிருது முனிவரைக் கணவனாக அடைந்தாள். அவளுக்கு தவத்தில் பாலகில்லியர் எனப் புகழப்பட்ட, சிறந்த அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தனர்.

    சுவாகா அக்கினிதேவனை மணந்து கொண்டாள். அவனிடம் அவளுக்கு சுசி, பவமானன், பாவகன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். ஹோாமம், யாகம் முதலான புண்ணிய கர்மாக்களை நடத்துகையில் தேவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவைப் பெற்றுத் தருபவன் சுசி; மற்றக் காரியங்களுக்கு பவமானன்; மழை மேகத்தில் மின்னலிலே தோன்றுபவன் பாவகன்.

    சிரத்தா என்பவள் மானசீக புத்திரியாக மேனையை பெற்றாள். மேனை இமவானுக்குப் பத்தினியானாள். அவள் கங்கை, உமை என்ற இரு பெண்களையும், மைநாகம், கிரௌஞ்சம் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றாள். உமை கைலாசநாதனைக் கரம் பிடித்தாள்.

    ஈசன் அனேக ருத்திரரைத் தோற்றுவித்தார். உலகம் முழுவதும் அவர்கள் நிறைந்தனர். பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் சம்சார பந்தத்தில் சிக்காது, இறப்பு என்பதில்லாது ருத்திரர்களை ஈசன் படைத்ததைக் கண்டு பிரமன் அவர் தாள் பணிந்து அவ்வகை சிருஷ்டி உலகிற்கு ஏற்றதல்லவெனத் தெரிவித்தார். ஈசனும் நான்முகனைப் பார்த்து, நீ குறிப்பிடும் சிருஷ்டிகள் எமக்கு ஏற்றதல்ல; அவற்றை நீயே படைப்பாயாக என்று தெரிவித்தார்.

    நான்முகனும் மாயையைக் கொண்டு சிருஷ்டிகளை வகுத்தார். யோகத்தால் ருத்திரன் தாம் படைத்த சிருஷ்டிகளை உலகை விட்டு மறையச் செய்தார்.

    * * * *

    அஷ்டாங்க யோகம்

    சன் திருவருளால் தெளிந்த ஞானத்தை அடையலாம். அந்த ஞானத்தால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தியைப் பெறலாம்.

    முன்னர் ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரத்தை எடுத்துக் கூறினார். ஜனகர், அத்திரி, வியாசர் முதலானோரால் அந்த அரிய விஷயம் லோகத்திலே பிரசித்தமாயிற்று.

    பற்று இன்றி இருத்தலுக்கு இயமம் என்று பெயர். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதனாலும், உண்மையே பேசுவதினாலும், உயிர் கொல்லாமை, ஒழுக்க விதிகளிலிருந்து வழுவாமை, இரவாதிருத்தல், களவு புரியாமை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதினாலும் பற்றற்று இருக்கும் தன்மை உண்டாகும்.

    வானப்ரஸ்த ஆசிரமம் அனுஷ்டித்து வருபவர், முற்றும் துறந்த சன்னியாசிகள், மனைவியருடன் கானகத்திலே வசிப்பர். பிரம்மசரிய விரதம் கடைப்பிடிப்போர், மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறியாகும். இல்லறத்தில் இருக்கும் கிரகஸ்தன் பிற பெண்களிடம் இச்சை கொள்ளாது ருதுகாலம், பருவ காலங்கள் மற்றும் விலக்க வேண்டிய தினங்களை விலக்கி, மற்ற நாட்களில் தன் மனைவியுடன் சேர்ந்து இருப்பதும் பிரம்மச்சரிய நெறிகளில் ஒன்று.

    மனத்திலே தோன்றியதையும், உணர்வால் அறிந்ததையும், கண்ணால் பார்த்ததையும், காதால் கேட்டதையும் ஒளிக்காது கூறுவது பொய்யாமை ஆகும்.

    சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள யாகம் முதலான கர்மாக்களுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்காக எந்தப் பிராணியையும் வதைக்காதிருப்பது கொல்லா விரதமாகும்.

    எந்தப் பொருளையும், எந்தக் காலத்திலும் விரும்பிக் கேட்காதிருப்பது இரவாதிருத்தலாகும்.

    மனத்தாலும் பிறர் பொருள்மீது ஆசை கொண்டு அதை அடைய விரும்பாதிருப்பது கள்ளாமை.

    பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம் என்பதாகும். இயமங்களைக் கடைப்பிடித்து அதற்குத் தயாரானதும் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவபிரணிதானம் ஆகிய இவற்றால் நியமத்தை அடையலாம்.

    சவுசம் இரு வகைப்படும். அவை அகச்சவுசம், புறச்சவுசம் என்ப தாகும். ஆசையின்மை என்ற மண்ணால் ஞானமாகிற நீரிலே உள்ளத்தை நீராட்டி சுத்தம் செய்து கொள்வது அகச்சவுசம் ஆகும். உடலைப் புனித நீரில் நீராட்டி வெண்ணீறு அணிந்து கொள்வது புறச்சவுசமாகும்.

    தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது அமாவாசை அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் பிரதமை அன்று ஒரு கவளம் மட்டும் உணவருந்த வேண்டும். மறுநாள் துவிதியை அன்று இரண்டு கவளம் புசிக்க வேண்டும். இவ்வாறாக நாளுக்கு ஒரு கவளமாகக் கூட்டிவந்து பௌர்ணமி அன்று உபவாசம் இருக்க வேண்டும். பௌர்ணமிக்குப் பிறகு நாள் ஒன்றுக்கு ஒரு கவளமாக உணவைக் குறைத்துக் கொண்டு வந்து அமாவாசை தினம் உபவாசம் இருக்க வேண்டும். இவ்விதம் அனுஷ்டிப்பதை சாந்திராயணம் என்பர்.

    ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப மறைநூல்கள் வகுத்துக் கூறும் விதிமுறை வழுவாது இருந்து வருவது மகிழ்ச்சி ஆகும்.

    ஈசனை தியானித்தலுக்குச் சிவப்பிரணிதானம் என்று பெயர்.

    யோகநிலைக்கு ஆசனமும் ஓர் அங்கமாகும். பத்மாசனம் முதலான ஆசனங்களில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஒரு நிலையில் இருக்கும்.

    ஆசனமிட்டுப் புனித உள்ளத்தோடு அமர்ந்த பின் பிராணாயாமத்தைச் செய்ய வேண்டும். நாம் சுவாசிக்கும் பிராண வாயுவை  அடக்குதலுக்குப் பிராணாயாமம் என்று பெயர். அதனோடு அபானன் என்ற வாயுவை அடக்குவதும் பிராணாயாமமாகும்.

    ஜபம்

    பிராணாயாமத்தை மூன்று விதமாகக் கூறுவர். பிராணாயாமம் செய்கையில் உடலிலே வியர்வை தோன்றுமானால் அது அதமம் ஆகும். மனது ஒரு நிலையில் இல்லாமல் அலைந்தால் மத்திமம்; சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் அதுவே உத்தமம் ஆகும். ரேதஸ் மேல் நோக்கி எழும்.

    மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வதற்குச் சகற்பம் என்று பெயர். மந்திரம் ஏதும் ஜபிக்காது பிராணாயாமம் செய்வதற்கு விகற்பம் என்று பெயர்.

    நம் தேகத்திலே பத்துவித வாயுக்கள் இருக்கின்றன. நாம் சுவாசிக்கும் வாயு பிராணனாக இருதயத்திலே தங்குவதால் அதற்குப் பிராணன் என்று பெயர். அபானன் என்ற வாயு கீழ் நோக்கிப் பிரியும். அதாவது மலஜலங்களை வெளிப்படுத்தக் காரணமாகிறது. வியானன் என்ற வாயு உடலெங்கும் நிறைந்து நிற்கிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடலின் பல பாகங்களுக்கும் உணவு கொண்டு செல்ல உதவுகின்றது. உதானன் என்ற வாயு உறுப்புகள் சேரும் சந்திகளில் தங்கி நடுக்கம் செய்து ஒடுங்கும். சமானன் என்ற வாயு உடலைச் சமனப்படுத்தி வைக்கிறது. கூர்மன் என்ற வாயு கக்கல், விக்கல் முதலான காரியங்களுக்குக் காரணமாக விளங்குகிறது. கிரிகரன் என்ற வாயு தும்மலை உண்டாக்குகிறது. தேவ தத்தன் (க்ரியா) என்ற வாயு கொட்டாவி விடுவதற்குக் காரணமாக இருக்கின்றது. தனஞ்சயன் என்ற வாயு உடலை வீங்கச் செய்து பரபரப்பைக் கொடுக்கிறது. நாகன் வாயு பாடுதல், கண்சிமிட்டுதல், மயிர் கூச்சலுக்கு உதவுகிறது. பிராணாயாமம் செய்வதால் இந்தப் பத்து வாயுக்களையும் நம் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றால் எவ்விதத் துன்பமும் நேராது பார்த்துக் கொள்ள முடியும்.

    கானகத்திலே கட்டுப்பாடுகள் இன்றிச் சுயேச்சையாகத் திரியும் பலம் பொருந்திய யானைகளைப் பிடித்து அவற்றின் சீற்றத்தை அடக்கி சாதுப் பிராணியாக நம் விருப்பத்துக்கு ஏற்ப நடக்கச் செய்வதுபோல, பிராணனை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என வேதாகமங்கள் கூறுகின்றன.

    விஷய சுகங்களில் செல்லும் ஐம்புலன்களையும் தடுத்து நிறுத்து வதற்குப் பிரத்தியாகாரம் என்று பெயர். இவ்வாறு புலன்களை அடக்கி மனத்தைத் தெளியவைத்து ஒரு நிலையில் நிறுத்துவது தாரைணயாகும். பிறகு ஆதியந்தமற்ற பரம்பொருளை மனத்தின் முன் நிறுத்தி நினைப்பதற்கு தியானம் என்று பெயராகும்.

    மூலாதாரத்தில் கரியமேகத்தினின்று வெளிப்படும் பிரகாசமான கதிர்களை உடைய சூரியனைப் போல நான்கு இதழ்களை உடைய தாமரை மீது இருப்பது போலவும், சுவாதிட்டானத்தில் (குய்ய) ஆறு இதழ்களை உடைய தாமரை மீது அமர்ந்திருக்கும் குளிர்ந்த சந்திரனைப் போலவும், உந்தியின் நடுவே பத்து இதழ்களை உடைய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கதிரவனைப் போன்றும் நெஞ்சத்தில் பன்னிரண்டு இதழ்களை உடைய வெண்மையான கமல மலரில் உறையும் பகவானைப் போன்றும், கழுத்திலே உலகைச் சூழ்ந்துள்ள இருள் அகல, சுடர் விரிக்கும் சூரியன் பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையில் வீற்றி ருப்பது போன்றும், புருவ நடுவில் இரண்டு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் உறையும் பசும்பொன் போன்ற சூரியனைப் போன்றும், ஈசனைத் தியானித்து மனம் உருகித் தன்னையும் மறந்த நிலையில் இருப்பது சமாதி எனப்படுவதாகும்.

    ஆக இயமம், நியமம், ஆஸனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரைண, தியானம், சமாதி என்ற இந்த எட்டும் யோகத்திற்கு அங்கங் களாகச் சொல்லப்பட்டுள்ளன.

    யோகம் கடைப்பிடிப்பவருக்குப் பலவித இடைஞ்சல்கள் தோன்றக் கூடும். அவை பத்து விதங்களாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது. அவை முறையே நோய், சிரத்தையின்மை, பிரமாதம், ஐயுறல், விஷயங்களில் இச்சை, துன்பம் அப்பிரதிஷ்டை, பிராநிதி தரிசனம் எனப்படும் ஆதிதெய்வீகம் ஆதிபௌதிகம், ஆத்யாத்மிக துக்கங்கள் ஆகும்.

    காற்று, நீர், உஷ்ணம் இம்மூன்றிலும் உடலினுள் ஏற்படும் அசௌகரியங்கள் நோய் எனப்படும். முக்தி பெறுவது பற்றி மனத்திலே விருப்பமில்லாதிருத்தல் அசிரத்தையாகும்.

    தெளிந்த சமாதிக்கேற்ற காரணங்களை மாறுபடாது உள்ளத்தே கொண்டிராதலுக்குப் பிரமாதம் என்று பெயர். இது சரியா அது சரியா? என்று தடுமாறுவது ஐயுறலாம். புதியனவற்றைக் கண்டு அவற்றின் மீது ஆசை கொண்டு அடைய முயற்சிப்பது விஷயத்தில் இச்சையாகும். மனத்திலே மகிழ்ச்சி இல்லாதிருப்பது துன்பம் எனப்படும். தியானத்திலே மனம் செல்லாது மயங்குவதற்கு அப்பிரதிஷ்டை எனப் பெயர். இந்த தேகம் அழியக்கூடியது தான் என்று எண்ணாதிருப்பது பிராநிதி தரிசனம் ஆகும். இந்திரியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் மனம் போனபடி ஓடவிடுவது ஆத்யாத்மிக துக்கம் ஆகும். பஞ்சபூதங்களால் ஏற்படும் இடையூறுகள் ஆதிபௌதிகங்களாகும். மழை, இடி போன்ற வற்றால் உண்டாகும் இடையூறுகள் ஆதி தெய்வீகமாம்.

    இவை பத்து தவிர, பிரதிபை, தேவ தரிசனம், சிரவணம், வார்த்தை, சுவாதம், இரசனை என்ற குறித்து உணரும் உபசருக்கங்கள் ஆறு உள்ளன.

    மறைந்தது, நுண்ணியதாகி இருப்பது, எங்கும் நிறைந்திருப்பது, தூரத்தில் இருப்பது, உள்ளது, இல்லாதது, இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய இவை அனைத்தையும் தன் சக்தியால் மனத்திலே அறிவதானது பிரதிபை எனப்படும். ஈசன் திருவுருவை மனத்திலே காண்பது தேவ தரிசனமாகும். ஒலியைக் கேட்ட மாத்திரத்திலேயே அதன் பொருளை உணர்வது சிரவணம் என்பதாகும். வேதத்தை நன்கு உணர்ந்து ஓதுதல் வார்த்தையாகும். வாசனையையும் சுவைகள் யாவையும் நன்கு அறிந்திருப்பது சுவாதம்; மண், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், அகங்காரம், பிரம்மம் ஆகிய இந்த எட்டின் குணங்களும் அறிந்திருப்பது இரசனை ஆகும்.

    பேய், பிசாசு ஆகியவற்றின் குணம் கனமில்லாமை, அதாவது உடல் இல்லாதிருப்பது, அரக்கருடைய குணம் போர் செய்வதும் மயங்கிக் கிடப்பதும் ஆகும். யக்ஷர்களுக்குக் குணம் நிலவைப் போலக் குளிர்ந்த பிரகாசத்துடன் விளங்குதல். ஜோதிப் பிரகாசத்துடன் விளங்குவது கந்தர்வர் குணமாகும், வாயுவின் குணமோ எங்கும் நிலையாதிருப்பது.

    வேந்தருடைய சிறந்த குணம் நாட்டைக் காத்து தானம் கொடுத்தலாம். குளிர்ந்த கிரணங்களைக் கொண்டிருப்பது சந்திரனுடைய குணமாம். மனத்தின் சிறந்த குணம் பண்புடன் எதையும் ஆய்ந்து பார்த்தலாகும். பிரம்மனுடைய குணம், கேட்ட வரங்களை அளித்தல்.

    பூமியின் எட்டுக் குணங்கள் அடைந்தவனவற்றோடு நிறைந்து இருத்தல், நீருடன் சேர்ந்து அதன் தன்மையடைதல், நெருப்புடன் சேர்ந்து அதன் தன்மையடைதல், காற்றுடன் சேர்ந்து அதன் தன்மையடைதல், ஆகாயத்துடன் சேர்ந்து அதன் தன்மையடைதல், மனத்தோடு சேர்ந்து அதன் குணத்தை அடைதல், அகங்காரத்தின் குணங்களை அடைதல், பிரம்மத்தின் குணங்களை அடைதல் ஆகியவையாம்.

    நீரிலே ஜீவராசிகள் தோன்றுதல், வாழ்தல், நிறைந்திருத்தல், பரவுதல், பாத்திரங்களில் நிறைந்திருக்கையில் அவற்றின் வடிவைக் கொண்டிருத்தல், கரையும் பொருளைச் சுவையுடன் இருக்கச் செய்தல், பஞ்ச பூதங்களில் மூன்றுடன் கலந்து அவற்றின் வடிவு பெறுதல், தேகத்தில் தங்குதல் ஆகிய எட்டும் நீரின் குணங்களாகும்.

    உடலிலே உஷ்ணத்தை உண்டாக்கல், தீயை தன்னுள் கொண்டிருத்தல், நீரிலே உஷ்ணத்தை வைத்துக் காத்தல், வெளிச்சத்தை உண்டாக்கல், போடப்படும் அனைத்தையும் எரித்து சுத்தமாக்குதல், பஞ்ச பூதங்களில் இரண்டுடன் சேர்ந்து அவற்றின் வடிவு கொண்டு விளங்குதல் ஆகியவை நெருப்பின் குணங்களாகும்.

    எங்கும் வீசுதல், பொருளைத் தாங்கிச் செல்லுதல், கண்ணுக்குப் புலப்படாதிருத்தல், மலையுச்சியில் கனமாதல், மேல் நோக்கி வீசுதல், உடலிலே புகுந்திருத்தல், பஞ்ச பூதங்களையும் அசைத்தல், ஒலியுடன் விளங்குதல் ஆகிய இந்த எட்டும் காற்றின் குணங்கள் ஆகும்.

    பழுதிலா உடலெடுத்தல், நித்தியமற்ற அவ்வுடம்புக்கு நிழலிலா வகை செய்திடல், சொர்க்கத்துக்குச் செல்லுதல், பழியாய் இருத்தல், இந்திரியங்களின் செயலை அறிதல், எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருத்தல், கண்ணுக்குத் தெரிதல், உலகிலே நிகழும் ஒலிகள் கேட்டல், அழிவிலாது உறைதல் ஆகிய இவ்வெட்டும் ஆகாயத்தின் குணங்களாகும்.

    நினைத்த இடத்தை நினைத்த மாத்திரத்தில் அடைதல், மீண்டும் திரும்புதல், விரும்பியதை அடைதல் எல்லாப் பொருள்களிலும் பிரதிபலித்தல், எடுத்துச் சொல்ல முடியாததும், மற்றவருக்குத் தெரியாத அரிய பொருள்களைத் தெளிவுறக் காணுதல், மகிழ்ச்சியுடன் வாழ வழிகளைக் காணல், அழகுடன் தோன்றல் எங்கும் தன் இரு கண்களாலும் எளிதில் பார்த்தல் ஆகியவை மனத்தின் குணங்களாகும்.

    வெட்டல், கூற்றினைக் கடந்திடல், மிருத்துவை ஒழித்தல், கட்டல், ஏற்றுதல், கருைண கூர்ந்திடல், பேருலகில் பட்டு வாழுதல், உலகினைப் பழுதற நடத்தல் இந்த எட்டும் அகங்காரத்தின் குணங்களாகும்.

    உலகம் யாவையும் படைத்தல், அவற்றைக் காத்தல், அழித்தல், தலைமை தாங்குதல், தனித்தனி வடிவமாய்ப் படைத்தல், நீதியை உண்டாக்குதல், அதைப் பரிபாலித்தல், முக்தி தருதல் ஆகிய எட்டும் பிரம்மத்தின் குணங்கள்.

    யோகியானவன் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்கு உணர்ந்து அவற்றை விலக்கி எம்பெருமான் திருப்பாதங்களைச் சேவித் தால் அவர் அனுக்கிரகத்துக்கு ஆளாகி முக்தியை அடைவான் என்பது நிச்சயம்.

    யோகத்தை மட்டும் கடைப்பிடித்து ஈசன் அருள் பெற வேண்டும் என்ற விதி இல்லை. நல்லறத்தைக் கடைப்பிடித்து அவ்வழி நின்றோருக்கும் ஈசன் அருள் கிட்டும்.

    ஒரு சமயம் பார்வதி காசியில் உறையும் தன் நாயகனை நோக்கி, நாதா! எந்த வழியில் வழிபட்டால் தங்கள் அருளைப் பெறமுடியும் எனச் சொல்ல வேண்டும் என்று கேட்டாள்.

    அதைக்கேட்டு அழற் சூலமேந்தும் அண்ணல் மெல்லச் சிரித்துச் சொன்னார்.

    தேவி! அரிய தவத்தாலோ அல்லது தெளிந்த ஞானத்தினாலோ உன் அருள் பெற முடியுமா? என்று பஞ்சமூர்த்தமான என்னைப் பிரம்மன் கேட்டான். மஹாமேரு முதல் மங்கையர் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து உருகி என்னிடம் செலுத்தும் அன்புக்கு நான் அருள் செய்வேன்" என்று சொன்னேன்.

    இவ்விதம் சூதர் சொன்னபோது முனிவர்கள், ஈசன் முன்னர் பிரம்மனுக்குத் தரிசனம் அருளிய பஞ்ச மூர்த்தங்களைப் பற்றிக் கூற வேண்டுமென்று கேட்டனர். சூதரும் அந்த விவரத்தைச் சொல்லலானார்.

    * * * *

    ஈசன் கொண்ட ஐந்து தோற்றங்கள்

    ருபத்தொன்பதாவது சுவாதலோகித கற்பத்தில் பிரமன் ஈசனைத் தொழுது அவரைத் தியானித்தபோது ஈசன் அவர் முன்பு அழகிய தோற்றத்துடன் இளம் பாலகனாய்த் தோன்றினார். அத்தோற்றத்துக்கு சத்தியோசாதம் என்று பெயர்.

    உலகத்தை படைத்த மாமலர் வாசன் ஈசனைக் கண்டதும் உள்ளத்திலே அன்பு பெருக்கெடுத்தோட மலர்களைக் கொண்டு ஐயன் திருமலர்ப் பாதங்களை அர்ச்சித்துத் தூய்மையான வேதங்களால் துதித்தார். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் உதித்தார்கள். அவர்கள் நால்வரும் ஈசனைத் துதித்து அவர் திருவடிகளில் பணிந்தனர். இந்தத் தோற்றத்தை மனத்திலே தியானித்து ஈசனை வழிபடுவோர் சிவலோகத்தை அடைவர்.

    முப்பதாவது இரத்த

    Enjoying the preview?
    Page 1 of 1