Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mirukapimanam
Mirukapimanam
Mirukapimanam
Ebook95 pages34 minutes

Mirukapimanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மிருகாபிமானம்' இச்சிறுகதையில் மனிதாபிமானம் போன்ற இச்சொல்லாட்சியை படைப்பாளி உருவாக்கியுள்ளார். சூரிய ஒளி தகதகக்கும் நண்பகலில் ஒளிரும் விளக்கை ஏந்தி ஒரு கிரேக்க ஞானி மனிதர்களின் கூட்டத்தில் "நான் ஒரு மனிதனைத் தேடுகின்றேன்" என்றானாம். மனிதர்கள் விலங்கு மனம் கொண்டிருக்கையில், விலங்கொன்று உயிர் அபிமானம் கொண்டிருக்கிறது. கரு கற்பனையா? இல்லை; கதாசிரியன் படித்த விலங்குகளின் அன்பின் மறு ஓவியமா? என்பதையும், இத்தொகுப்பின்கண் உள்ள கதைகள் அனைத்தும் நடந்த உண்மைச் சங்கதிகளின் மெருகூட்டப்பட்ட அணிகலன்களாகிய சிறுகதைகளாக ஆகியுள்ளதையும் வாசித்து மகிழ்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580170110635
Mirukapimanam

Read more from Rajamani Palaniappan

Related to Mirukapimanam

Related ebooks

Reviews for Mirukapimanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mirukapimanam - Rajamani Palaniappan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மிருகாபிமானம்

    Mirukapimanam

    Author:

    ராஜாமணி பழனியப்பன

    Rajamani Palaniappan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajamani-palaniappan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    பீம புஷ்டி அல்வா

    சௌகந்திகா

    குருபெயர்ச்சி

    நீ இப்படி, அவங்க அப்படி

    மிருகாபிமானம்

    இதயத்துள் இறைவன்

    வாய்மையே வெல்லும்

    சாதுமிரண்டால்

    தாலி பாக்கியம்

    சமர்ப்பணம்

    தன் உதிரத்தைக் கொடுத்து என்னை

    ஆளாக்கிய என் அன்னைக்கும்

    நட்சத்திரமாய் என்னை வழிநடத்தும்

    என் தந்தைக்கும்

    அறிவையும், பண்பையும் போதித்த

    ஆசிரியர்களுக்கும்

    எல்லாம் வல்ல இறைவனுக்கும்

    இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

    - ராஜாமணி பழனியப்பன்

    அணிந்துரை

    முனைவர் இரா. கா. மாணிக்கம்

    தமிழை முதன்மைப் பாடமாகக் கற்ற தமிழறிஞர்கள் பார்வைக்கும், படைப்பிற்கும், தமிழ் ஆர்வம் காரணமாகப் பிற துறைகளில் இருப்போர் தமிழை அணுகும் முறைக்கும், அவர்கள் படைக்கும் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை அறிய முடிகிறது. இனிய சகோதரர் திரு. ராஜாமணி பழனியப்பன் அவர்கள், கற்றது, கற்பித்தது, ஆய்ந்தது அனைத்தும் பொறியியல் பற்றிய செய்திகளையே. ஆனால், அவர் படைத்துள்ள சிறுகதைகள் ஏனைய மரபுச் சிறுகதை எழுத்தாளர்களின் போக்கிலிருந்து வேறு திசையில் பயணிப்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன.

    மனித வாழ்க்கையில் நொடிக்கு நொடி நடக்கும் நிகழ்வுகள் (அவை சிறியனவோ, பெரியனவோ) நடந்து கொண்டேதான் இருக்கின்றன. மிகப்பலர் அதனைச் சட்டை செய்யாதது மட்டுமின்றி அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதை நினைவிலேயே கொள்ள மறந்து விடுகின்றனர். ஆனால், ஒரு படைப்பாளிக்கு இந்த நிகழ்வுகள்தாம் அவனது கதைக்குக் கருப்பொருளாகி விடுகின்றன. இந்த இடத்தில்தான் ஒரு படைப்பாளியும் பிறரும் வேறுபாடு கொள்கின்றனர். அற்பமான நிகழ்வு என்ற மனநிலையில் அதை உள்வாங்கவோ அல்லது அது பற்றிச் சிந்திக்கவோ எண்ணாத சாதாரண மனிதன் அதனைப் புறக்கணித்து விடுகின்றான். ஆனால், ஒரு படைப்பாளிக்கு அந்த நிகழ்வு இதயத்துள் அமர்ந்து அரியணை கொள்கிறது. அந்த நிகழ்வு பற்றிய தாக்கம் அப்படைப்பாளியைத் தூங்கவிடாமல் செய்கின்றது. அதனால் ஏற்பட்ட உணர்வு வீரியம் ஒரு படைப்பாக உருவாகிறது. அப்படியான நிகழ்வுகளால் தாக்குண்ட இந்தப் பொறியாளர் தம்மைப் பாதித்த நிகழ்வுகளின் அழுத்தம் தாளாமல் கதைகளாக ஈன்றெடுத்துள்ளார். இச்சிறுகதைத் தொகுப்பின் கதைகள் அனைத்தும் அவரைப் பாதித்த நிகழ்வுகளின் விளைச்சல்கள். அவரது எண்ணப்பாங்குப்படி அவை முற்றி வெளிவந்துள்ளன.

    இவரது கதைகளைப் படிக்கும்போது, ஏற்கனவே நாம் பயணித்த சிறுகதை உலகத்திலிருந்து மாற்று உலகில் செல்வதான உணர்வு ஏற்படுகின்றது. கதைகளில் கரு உள்ளதா? ஆம் எனவும் சொல்ல முடியும்; இல்லை எனவும் மறுக்க முடியும். ஆனாலும், நாம் கதைகளைப் படிக்காமல் இருக்க முடியாது. ஊக்குவிக்கும் ‘ஏதோ ஒன்று’ கதைகளில் உட்கார்ந்திருக்கிறது. அந்த ஏதோ ஒன்றுதான் இந்த நூலாசிரியரின் கூர்த்த பார்வைக்குக் கட்டியம் கூறுகின்றது.

    படைப்பிலக்கியத்தில் சிறுகதை எழுதுவது என்பது பகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும். ஒரு நிகழ்வை எடுத்த எடுப்பில் வாசகனின் மனம் ஈர்க்கும்படி செய்து தொய்வின்றி ஒரே மூச்சில் வியக்கத்தக்க முடிவோடு முற்றுப்பெறச் செய்வதே சிறுகதையின் இலக்கணமாகும்.

    இத்தொகுப்பின்கண் உள்ள கதைகள் அனைத்தும் நடந்த உண்மைச் சங்கதிகளின் மெருகூட்டப்பட்ட அணிகலன்களாகிய சிறுகதைகளாக ஆகியுள்ளன.

    ‘நீ இப்படி அவங்க அப்படி’ என்ற கதை கடைவீதிக்குச் செல்லும் வழியை இரண்டு பேருக்கு இரண்டு விதமாகச் சொல்வதாக அமைந்துள்ளது. வெறும் வழிகாட்டுதலில் குழந்தைப் பேற்றை உட்புகுத்திய உத்தி கருவாகப் போகின்றது. உலகில் அற்பமான இதுபோன்ற நிகழ்வுகளைச் சுவையான கதையாக ஆக்க முடியுமா? மற்றவர்களால் முடியாது. ஆனால், ராஜாமணி என்ற படைப்பாளிக்கு இது எளிய செயலே.

    தாலியை மையமாக வைத்துப் பெண்களின் மனநிலையைப் பல்வேறு முறைகளில் எழுதப்பட்ட கதைகள் நிறையவே உள்ளன. இங்கு ஓர் ஏழைப்பெண்ணின் ‘தாலி’ நிலைத்ததை மர்மக்கதை போலக் காட்டியுள்ள கதைதான் ‘தாலி பாக்கியம்’.

    ‘குருபெயர்ச்சி’ இந்தக் கதை பகுத்தறிவைப் பேசுவதா? இல்லை ஆன்மீகக் கதையா? எதுவாயினும் நேர்முகச் சிந்தனை கொண்ட முடிவு மகிழ்வைத் தருகிறது.

    ‘நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் ஆர்?’ அறிவானது ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய காலம் தொட்டு இதற்குரிய விடை புரியாத புதிராகவே உள்ளது. ஓர் இளம்வயதுக்காரனின் ஆன்மத் தேடல்தான் இக்கதையின் கரு; உயிர். நூலாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ‘இதயத்துள் இறைவன்’ கதைமூலம் உணர்ந்து கொள்ளுங்கள்.

    ‘மிருகாபிமானம்’ என்பது நூல் தலைப்பைத் தந்த கதை. மனிதாபிமானம் போன்ற இச்சொல்லாட்சியைப் படைப்பாளி உருவாக்கியுள்ளமை போற்றுதற்கு உரியது. சூரிய ஒளி தகதகக்கும் நண்பகலில் ஒளிரும் விளக்கை ஏந்தி ஒரு கிரேக்க ஞானி மனிதர்களின் கூட்டத்தில் நான் ஒரு மனிதனைத் தேடுகின்றேன் என்றானாம். மனிதர்கள் விலங்கு மனம் கொண்டிருக்கையில், விலங்கொன்று உயிர் அபிமானம் கொண்டிருக்கிறது. கரு கற்பனையா? இல்லை; கதாசிரியன் படித்த விலங்குகளின் அன்பின் மறு ஓவியம் இது.

    காதல் இல்லையேல் படைப்பிலக்கியம் இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1