Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sonthamaai Oru Kabarsthan
Sonthamaai Oru Kabarsthan
Sonthamaai Oru Kabarsthan
Ebook161 pages58 minutes

Sonthamaai Oru Kabarsthan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இஸ்லாம் என்றால் ஏழுமலை ஏழுகடல் தாண்டிய அகழிகள் சூழ் மாளிகை என்கிற பொய்புனைவு வெகுஜன பார்வையில் தெரிகிறது. நான் ஒரு மதம் சாராத ஆத்திகன். இஸ்லாமின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் அலசி ஆராய்ந்து பொதுபார்வைக்கு வைத்துள்ளேன். இதன் மூலம் மதநல்லிணக்கம் பெரிய அளவில் மலரும் என் நம்புகிறேன். இச்சிறுகதைகளை வெறும் சுவாரசியமான கதைகளாகவும் வாசிக்கலாம். பைபிள் கதைகள் திருக்குறள் கதைகள்தான் எனது இஸ்லாமிய நீதிக்கதைகளுக்கு முன்னோடி. இத்தொகுப்பை வாசிக்கும் யாவரும் அற்புதமான வாசிப்பு சுகத்தை பெறுவீர்கள்.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580111010463
Sonthamaai Oru Kabarsthan

Read more from Arnika Nasser

Related to Sonthamaai Oru Kabarsthan

Related ebooks

Related categories

Reviews for Sonthamaai Oru Kabarsthan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sonthamaai Oru Kabarsthan - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சொந்தமாய் ஒரு கபர்ஸ்தான்

    (20 இஸ்லாமிய நீதிக்கதைகளின் தொகுப்பு)

    Sonthamaai Oru Kabarsthan

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆர்னிகா நாசர் வாழ்க்கை குறிப்பு

    1. பேரன்

    2. இமாம் மாப்பிள்ளை

    3. மியாவ் மியாவ் பூனை

    4. ஈஸ்வர அல்லா தேரே நாம்

    5. அஹ்லுஸ் சுன்னா

    6. மண்ணறை வாசி

    7. தஹ்னீக்

    8. சொந்தமாய் ஒரு கபர்ஸ்தான்

    9. துஆ

    10. சதக்கத்துல் பித்ர்

    11. குறுக்கே நெடுக்கே

    12. துணை இமாம்

    13. அடைமொழி

    14. முஸிபத்

    15. மதர்ஸா நானா

    16. மஸ்ஜித் சுற்றுலா

    17. வாங்காதே படிக்காதே

    18. புதிய பறவை

    19. கொடுக்கும் கை வாங்கும் கை

    20. தொழுகை அணிவரிசை

    முன்னுரை

    விஞ்ஞானத்தின் உச்சம் ஆன்மிகம். ஆன்மிகத்தின் உச்சம் விஞ்ஞானம். விஞ்ஞானக்கதைகள் எழுதும் போது எனக்கு ஆன்மிக வெளிச்சம் கிடைத்தது. இஸ்லாமிய விழுமியங்கள் கோட்பாடுகளில் லட்சக்கணக்கான கதைகள் ஒளிந்து கிடக்கின்றன. இஸ்லாமிய நீதிக்கதைகள் ஆயிரமாவது எழுதி விட வேண்டும் என்கிற பேரவாவுடன் எழுத ஆரம்பித்து 500ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். மீதியையும் எழுதி முடிக்க இறைவன் கருணை புரியட்டும்.

    இத்தொகுப்பை என் மகள் வழி பேத்தி ஜன்னத்துல் பிர்தௌஸுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    இத்தொகுப்பில் 20 சிறுகதைகள் உள்ளன. தொகுப்பாக்கும் புஸ்தகாவுக்கு நன்றி.

    அன்பும் அபிமானமும் தொடரட்டும்.

    என்றென்றும் அன்புடன்

    ஆர்னிகா நாசர்.

    61. மணாஸ் கார்டன்

    ஜி.எம் நகர்.

    தெற்கு உக்கடம்

    கோவை 641 001

    கைபேசி 7358962913

    9442737404

    இடம்: கோவை

    நாள்: 09.11.2023

    ஆர்னிகா நாசர் வாழ்க்கை குறிப்பு

    பெயர் - பி.ச. ஆர்னிகா நாசர்

    பிறந்த ஊர் - மதுரை

    பிறந்த தேதி - 13.11.1960

    பெற்றோர் – பி. சும்சுதீன், ரஹிமா.

    பணி – அண்ணாமலை பல்கலைகழகத்தில் சுகாதார அதிகாரி பணி. (30.04.2018ல் பணி ஓய்வு)

    கல்வித் தகுதி - இளங்கலை முதுகலை மற்றும் இளம்முனைவர் சமூகவியல் பட்டங்கள், முதுகலை மருத்துவமேலாண்மை நிர்வாகம், வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, மருத்துவ நிர்வாகம், குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டய படிப்புகள், யுஜிசி நெட் தேர்வு.

    குடும்பம் – மனைவி வகிதா நாசர்

    மகள்: ஆ. ஜாஸ்மின், மருமகன் எம் அலாவுதீன்,

    பேத்தி: ஜன்னத்துல் பிர்தௌஸ், பேரன் யாக்கூப் பத்ருதீன்

    மகன்: டாக்டர். ஆ. நிலாமகன்,

    மருமகள்: டாக்டர் பஹிமா ஆப்ரின்

    பேரன்: முகமது அர்ஹான்.

    இதுவரை எழுதியுள்ளவை – ஆயிரத்தை நெருங்கும் சமூக கதைகள், 200 அரசியல் நையாண்டி சிறுகதைகள், 200 பாவனை விஞ்ஞான சிறுகதைகள், 500ஐ நெருங்கும் இஸ்லாமிய நீதிக்கதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஐம்பது தொடர் கதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள், பத்துக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், ஒரு மொழிபெயர்ப்பு நாவல், ஒரு தொலைக்காட்சி தொடர்.

    1. பேரன்

    கரூர் ரத்னா மகப்பேறு மருத்துவமனை. அறைவாசலில் அண்ணன் இப்ராகீமும் சம்பந்தி ரபீக் முகமதுவும் நின்றிருந்தனர். அழகிய முகமன்கள் பரிமாற்றம். நானும் வகிதாவும் அறைக்குள் புகுந்தோம்.

    மருமகள் பஹிமா ஆப்ரின் படுத்திருந்தாள். அவளுக்கு அருகே தொட்டிலில் பிறந்த குழந்தை படுத்திருந்தது.

    மகன் நிலாமகனும் சம்பந்தியம்மா பேபிராணியும் எங்களை வரவேற்றனர். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

    வாங்கம்மா... வாங்கத்தா... குழந்தை பிறந்து ஒரு மணி நேரமாகுது. ஆண் குழந்தை. யார் ஜாடையில் இருக்கிறான்?

    குழந்தையை வகிதா வாங்கிக் கொண்டு நிலாமகன் மாதிரி மண்டை. பஹிமா மாதிரி மூக்கு சம்பந்தியம்மாமாதிரி கண்கள். தாதா உங்களை மாதிரி கோரைமுடி! சொல்லிக் கொண்டே போனாள்.

    ஏற்கனவே மகள் வழியாக பேத்தி ஜன்னத்துல் பிர்தௌஸும் பேரன் யாகூப் பத்ருதீனும் இருந்தாலும் கூட புதுவரவு தித்தித்தது.

    மருமகள் பேரனுக்கு ‘முஹம்மது அர்ஹான்’ என பெயர் சூட்டினாள். இமாம் பேரீச்சம் பழத்தை மென்று சாற்றை குழந்தையின் மேலன்னத்தில் ஈஷிவிட்டார். அர்ஹானுக்கு இரு ஆடுகள் அகீகா கொடுத்தோம். தலைமுடியை மழித்து அதன் எடைக்கு சமமான தங்கத்தை சதகா கொடுத்தோம். பேரனுக்கு பிளாஸ்டிபெல் முறையில் மருத்துவமனையில் சுன்னத் செய்தோம்.

    குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் மருமகள் பேரனுடன் கோயம்புத்தூர் திரும்பினாள். அர்ஹான் கழுத்தில் தங்க செயின் இடுப்பில் வெள்ளி அரை ஞாண் கொடி கால்களில் வெள்ளி தண்டட்டை அணிந்திருந்தான்.

    மகன் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு போக மருமகள் கிளினிக்குக்கு போக நானும் வகிதாவும் பேரனுடன் எட்டு பத்துமணி நேரம் சேர்ந்திருக்கும் வாய்ப்பு உருவானது.

    பேத்தி ஜன்னத்துல் பிர்தௌஸ் அவளது ஆறுவயதிலிருந்து எட்டு வயது வரை எங்களிடம் இருந்தாள். பேரன் யாகூப் பத்ருதீன் அமெரிக்காவில் பிறந்தவன். அவனை தொட்டு கொஞ்சும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு அதிகம் வாய்க்கவில்லை.

    அர்ஹானை தூக்கி இடது கன்னத்தில் ஐநூறு முத்தங்கள் வலது கன்னத்தில் ஐநூறு முத்தங்கள் தருவேன். அவனது உமிழ்நீரை விரல்களால் வழித்து நக்கி கொள்வேன். அவனுக்கு புட்டிப்பால் கொடுக்கும் முன் ஒரு உறிஞ்சு நான் உறிஞ்சிக் கொள்வேன். பேரனின் ஜில்லிப்பான உள்ளங்கால்களில் செல்லக்கடி கடிப்பேன். பேரனை முகர்ந்து பார்ப்பேன்.

    மோந்து பாத்தீங்களே பேரன் என்ன வாசனை அடிக்கிறான்?

    குளிச்சிட்டா பேபிசோப் வாசனை குளிக்காத போது அப்படியே நிலாமகன் வாசனை. வகிதா! எனக்கொரு சந்தேகம்!

    என்ன?

    சுன்னத் பண்ணும் போது டாக்டர் குஞ்சை அதிகமா கட் பண்ணிட்டாரோ?

    அதெல்லாம் நார்மலாதான் இருக்கு. தேவையற்ற ஆராய்ச்சிகளை விடுங்க!

    அர்ஹான் ஒரு கிப்ட்டட் பேபி!

    எப்படி?

    அர்ஹானுக்கு நாம எல்லாரும் வாங்கிக்கொடுத்த இருநூறு ட்ரஸ் இருக்கு. ஒரு நாளைக்கு பத்து ட்ரஸ் மாத்றான். ஒவ்வொரு ட்ரஸ்லயும் ஒவ்வொரு வித அழகாய் மினுக்ரான்...

    கண்ணு வைக்காதிங்க. கிழவன் உங்ககிட்டயே 60 சட்டை இருக்கு... உங்க மகன்கிட்ட நூறு சட்டை இருக்கும். பேரன் ஒவ்வொரு தடவை ஒண்ணுக்கு இருக்கும் போதும் ஆய் இருக்கும் போதும் நாப்கின் மாத்ரோம். நாப்கின் மாத்தும் போது ட்ரஸ்ஸும் மாத்ரோம்... அவ்வளவுதான்...

    அர்ஹான் அழும்போது பாத்தியா? எவ்வளவு இனிமையான குரல். எனக்கும் நிலாவுக்கும் முரட்டுக்குரல்.

    அர்ஹானுக்கு குரல் சம்பந்தியம்மா மாதிரி. உங்க மதுரை பெத்தா ஆயிஷா சாச்சி மாதிரி சங்கீதகுரல் அர்ஹானுக்கு!

    பாடுவானோ?

    அவன் பாடல்லாம் வேணாம்... தாதா மாதிரி கதையும் எழுத வேணாம். ஐஎப்எஸ் படிச்சிட்டு வனத்துறை அதிகாரியாக காட்டில் யானையில் வலம் வரட்டும்!

    நான் தமிழ்ல கதை எழுதுகிறேன் அவன் ஆங்கிலத்தில் கதை எழுதட்டும்...

    ஒரே உறைல எதுக்குங்க ரெண்டு காகித துப்பாக்கி?

    என்னடி... ஓவரா கலாய்க்கிற?

    சரிய்யா... நீங்கல்லாம் காகிததுப்பாக்கி அல்ல ஏகே 56...

    எனக்கொரு ஆசை. என் கழுத்ல அர்ஹானை தூக்கி உக்கார வச்சுக்கிட்டு ஊரெல்லாம் சுத்தி வரனும்னு...

    அர்ஹான் கதறி அழுவான். புள்ளை பிடிக்ற கிழவன்னு உங்களை ஊரார் போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருவாங்க...

    அடிப்பாவி அப்படி ஒரு ஆசை உனக்கிருக்கா?

    ஆறு மாதத்தில் அர்ஹான் உட்கார ஆரம்பித்தான்.

    மருமகள் எனக்கு ஒரு நிபந்தனை விதித்திருந்தாள். மாமா! முகஹமது அர்ஹான் போட்டோவ உங்க முகநூல் பதிவா நாஞ்சொல்ற வரைக்கும் போட்ராதிங்க. கண் பட்டுரும்...

    அர்ஹானுக்கு ஒருவயசு நிறையும்போது அவனுடைய போட்டோவை பேஸ்புக்ல போட்டுக்கவா?

    அப்ப பாத்துக்கிடலாம் மாமா...

    நாம டூர் போறதை பெருமை பீத்தி முகநூல்ல போட்டுபோட்டு எனக்கு கால்வலி வரவழைச்சிட்டீங்க... முறையிட்டாள் வகிதா.

    முகநூல் மகிமை தெரியாதவர்கள் நீங்கள்... சரிசரி... விடுங்க... குட்டிப்பையன் போட்டோவை மருமக பெர்மிஷன் குடுக்ற வரைக்கும் போட மாட்டேன்!

    அர்ஹான் சகட்டி சகட்டி தவழ ஆரம்பித்தான்.

    நான் அவனை தூக்கி வைத்துக்கொண்டு கதை சொல்ல ஆரம்பிப்பேன். ஒரு ஊர்ல முஹமது அர்ஹான் முஹமது அர்ஹான்னு ஒரு பய்யன் இருந்தான். ஒரு நாள் அவங்கத்தாவை ஒரு கொரியாகாரர் பாத்திருக்கார். ‘என்னங்க உங்க பய்யன் கொரியாகாரன் மாதிரி இருக்கான்?’னு கேட்டிருக்கார். உடனே அவங்கத்தா ‘ஹிஹி... நான் நிறைய கொரியன் படங்களும் சீரியலுகளும் பாப்பேன் அதான்’ என்றிருக்கிறான். சிரித்துக் கொண்டே அந்த கொரியாகாரர் ‘அப்படினா உங்க பய்யன் பேர் டுங் டங் அர்ஹான்’னுருக்கார்... எப்படி கதை?

    என் முகத்தை டைட் குளோஸப்பில் முறைத்த அர்ஹான் எனது இடது தோளில் பட்பட் என்று அடித்து வாயை கிழித்து மூக்கை உடைக்க முயற்சித்தான்.

    பாருங்க... ஒரு வயசு பய்யனுக்கே உங்க கதை பிடிக்கல...

    Enjoying the preview?
    Page 1 of 1