Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Vaasaganin Maranam
Oru Vaasaganin Maranam
Oru Vaasaganin Maranam
Ebook214 pages1 hour

Oru Vaasaganin Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயிருக்குயிராய் பழகிய வாசகர் ஒருவரின் மரணம் தன்னை எவ்வாறு பாதித்தது என தொகுப்பின் தலைப்பு சிறுகதையில் உணர்ச்சிப் பூர்வமாய் சொல்லியிருப்பார் ஆர்னிகா. சுய அனுபவங்களை கதையாக்குவதில் சமர்த்தர் ஆர்னிகா. தொகுப்பின் 25 சிறுகதைகளில் சுய அனுபவசாரங்களும் அரசியல் எள்ளல்களும் பொங்கி வழியும். படித்து சுகானுபவம் பெறுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580111010168
Oru Vaasaganin Maranam

Read more from Arnika Nasser

Related to Oru Vaasaganin Maranam

Related ebooks

Reviews for Oru Vaasaganin Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Vaasaganin Maranam - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு வாசகனின் மரணம்

    (25 சிறுகதைகளின் தொகுப்பு)

    Oru Vaasaganin Maranam

    (25 Sirukathaigalin Thoguppu)

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஜாமீன்தாரர்

    பாப் ஆல்பம்

    ஸ்வாதி டியூஷன் சென்டர்

    காதலர் பூங்கா

    கோரஸ்

    பொய்களுக்கு அப்பால்...

    உயிர்த்தெழு

    ஆனாலும்

    புயல் சின்னம்

    கிரகப்பிரவேசம்

    இரவல் வாழ்க்கை

    முதல் முத்தம்

    இருட்டிலொரு கையொப்பம்

    ஒட்டுண்ணி

    முகத்தில் முகம் பார்க்கலாம்

    இதயத்தில் முதலிடம்

    மனைவிக்காக...

    விருந்தினர் போற்றுதும்

    ஓட்டாதே!

    வன்கொடுமை

    அம்மாக்களும் மகள்களும்

    கெட்ட எண்ணம்

    இப்படியும் அப்படியும்

    அடுத்த பிறவியில்

    ஒரு வாசகனின் மரணம்

    ஜாமீன்தாரர்

    வழக்கறிஞர் தனது இருக்கையில் சரிவாய் அமர்ந்திருந்தார். கண்களில் வெளிப்பட யத்தனிக்கும் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொண்டார்.

    ஒரு பிரைவேட் கம்ப்ளைய்ன்ட். முழு மனதோட செயல்படாம எனக்கு எதிரான தீர்ப்பை வாங்கிக் குடுத்திட்டீங்களே வக்கீல் சார்? ஆறுமாச தண்டனை பத்தாயிரம் ரூபா அபராதம். நீதிக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கு சார். மாஜிஸ்டிரேட்டை எதிர்பார்ட்டி தனியா பாத்துட்டான். கேஸை வேற கோர்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ண மனு போடுவோம்னு கெஞ்சினேன். மறுத்திட்டீங்க. மாஜிஸ்டிரேட் மேல அலிகேஷன் சொல்லி கேஸ் ட்ரான்ஸ்பர் பண்ணினா உங்களோட மத்த கேஸ்கள் தோத்திரும்னு கணக்கு போட்டு ட்ரான்ஸ்பர் வாங்க விடலை நீங்க அழுதான் சங்கரன்.

    மாஜிஸ்டிரேட்டை விமர்சனம் பண்ணக்கூடாது. சட்டப்படி அது குற்றம். ஆஜராகிற எல்லா கேஸ்லயும் ஜெயிச்சிர முடியுமா? தீர்ப்பு உங்களுக்கு எதிரா வந்தாலும் உங்களுக்கு கோர்ட் சொந்த ஜாமீன் வழங்க நான்தானே காரணம்? இதுக்குத்தான் முழுபணத்தை அட்வான்ஸா வாங்கிக்கிரது... தொடர்ந்து சங்கரனின் காதில் விழாவண்ணம் புலம்ப ஆரம்பித்தார் வழக்கறிஞர்.

    யார் தப்பு செஞ்சிருந்தாலும் அவங்களை கடவுள் தண்டிக்காம விட மாட்டான். பேசின காசை குடுக்காம நான் இருக்கமாட்டேன். இந்தாங்க அய்யாயிரம் ரூபா!

    பணத்தை வாங்கி எண்ணிய வழக்கறிஞர், ஜட்ஜ்மென்ட் சர்டிபிகேட் காப்பி வாங்கனும். அய்நூறுரூபா தனியா குடுங்க. ஜுனியர் வக்கீல்களுக்கு குமாஸ்தாக்கும் எதாவது குடுத்துட்டுப் போங்க. சொந்தஜாமீன் ஒருமாச டயம். அதுக்குள்ள நீங்க ஹைகோர்ட்டுக்கு மூவ் பண்ணி ஜாமீன் வாங்கிடனும்.

    சங்கரன் இளைய வழக்கறிஞர்களுக்கும் குமாஸ்தாவுக்கும் பணம் நீட்டினான். அதிருப்தியாய் பெற்றுக் கொண்டனர்.

    சங்கரன் ஊர் திரும்பினான்.

    தொடர்ந்து நான்கு நாட்கள் இருபதுக்கும் மேற்பட்ட தொலைபேசி நினைவூட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு சான்றிதழ் நகல் கூரியரில் வந்து சேர்ந்தது.

    உள்ளூரில் பரிட்சயமான பெண் வக்கீலிடம், நியாயமான பீஸ் வாங்கும் துரிதமாய் ஹைகோர்ட் ஜாமீன் பெற்றுத்தரும் சென்னை வக்கீல் முகவரி தர முடியுமா? என வினவினான் சங்கரன்.

    அந்த பெண் வக்கீல் புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு ஆடிட்டர் முகவரியைத் தந்தார்.

    ஆடிட்டர் தங்கமுத்து மிகமிக திறமையானவர். உங்களுக்கு ஜாமீன் வாங்கித்தருவது மட்டுமன்றி கேஸை முறைமையாக நடத்தி இந்த கேஸை பொய்கேஸ் என நிரூபிப்பார். அவர் எந்த கிரிமினல் லாயரை சொல்கிறாரோ அவரையே அமர்த்துங்கள்!

    சூட்கேஸை எடுத்துக்கொண்டு புதுக்கோட்டைக்கு பறந்தான் சங்கரன்.

    ஆடிட்டர் தங்கமுத்து தனி அலுவலகம் வைத்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். கேஸ்கட்டை முழுதும் வாசித்து பார்த்தார். இந்த பொய் கேஸ்ல கன்விக்ஷன் கிடைக்குதுன்னா கீழ் மட்ட நீதித்துறை எவ்வளவு அழுகிப் போயுள்ளதுன்னு பாருங்க. கவலையே வேணாம். ஜாமீனும் வாங்கிரலாம். ரெண்டு மூணு வருஷம் கழிச்சு விசாரணைக்கு வரும்போது கேஸை நடத்தி ஜெயிச்சிரலாம். சென்னைல ராஜாராம்ன்னு ஒரு வக்கீல் மைலாப்பூரில் இருக்கார். போய் பாருங்க. (சென்னை முகவரி கொடுத்தார்)

    தலையாட்டினான் சங்கரன்.

    ***

    தங்கமுத்து கொடுத்துவிட்ட சிபாசுக்கடிதத்தை வாசித்தார் ராஜாராமன். தீர்ப்பு நகலை மேலோட்டமாக வாசித்தார்.

    கேஸ் நடத்த மொத்தமாய் எண்பதாயிரம் கொடுத்திருங்க. ஜாமீன் வாங்க மட்டும் இருபதாயிரம். கேஸ் கட்டை டைப் பண்ண ரெண்டாயிரத்து அய்நூறு குடுத்திருங்க. செக் வேணாம். கேஷாக் குடுத்திடுங்க!

    ரூ 22,500/- நீட்டினான் சங்கரன்.

    ஜாமீன் எப்ப கிடைக்கும் சார்?

    ஒரே வாரத்ல கிடைச்சிரும்!

    ராஜாராமனின் விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு ஊர் திரும்பினான்.

    முதல் பத்து நாட்களில் முப்பது தடவை தொலைபேசி நினைவூட்டினான். பெயில் மனு பைல் பண்ணிட்டம் நம்பராய்டுச்சு!

    இரண்டாவது பத்து நாட்களில் அறுபதுதடவை தொலைபேசி நினைவூட்டினான். எதிர்தரப்புக்கு நோட்டிஸ் சர்வ் பண்ணிருக்காங்க!

    நோட்டீஸை ஏதிர்தரப்பு வாங்கல!

    ஸ்பீட் போஸ்ட்ல திரும்ப நோட்டீஸ் அனுப்ச்சிருக்கம்!

    21-வது நாள்லயிருந்து 29-வது நாள்வரை ஏறக்குறைய உயர்நீதிமன்றத்திலேயே படுத்துத் தூங்கி ஜாமீன் பெற்றான் சங்கரன். ஜுனியர் வக்கீலுக்கு பணம், தீர்ப்பு நகல் வாங்க பணம், குமாஸ்தாவுக்கு பணம் செலவு பண்ணி ஊர் திரும்பினான் சங்கரன்.

    விடிந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெறவேண்டும்.

    இருநபர் ஜாமீன். ஒவ்வொரு ஜாமீன்தாரரும் பத்தாயிரம் பெறுமானமுள்ள சொத்து வைத்திருக்க வேண்டும். சொத்து சான்றிதழை வி.ஏ.ஓ.வும் வட்டாசிரியரும் அட்டஸ்ட் பண்ணியிருக்க வேண்டும்.

    சங்கரன் நண்பர்களையும் உறவினர்களையும் அணுகினான்.

    பலர் ஜாமீன்தாரராக வர பயந்தனர்.

    கடைசியில் ஒரு நண்பர், சங்கரா! நேரா தலையாரி வீட்டுக்குப் போ! கேக்ற தொகையக்குடு. அவரே இரு ஜாமீன்தாரர் ரெடி பண்ணித்தருவார்!

    தலையாரி பேரம் பேசினார். ஒரு ஜாமீன்தாரருக்கு 750 ரூ தந்திடனும். அவங்க பணம் கட்டி வச்சிருக்ற சொத்துவரி ரசீது பணத்தை குடுத்திடனும். அவங்களுக்கு டிபன் சாப்பாடு டீ என்று வழங்கி அவங்களை பசியில்லாம பாத்துக்கிடனும். ஜாமீன் கிடைச்சபிறகு ஆளுக்கு குவார்ட்டர் ஓல்டுமாங்க் வாங்கிக் குடுத்துடனும். வி.ஏ.ஓ. கையெழுத்துக்கு முந்நூறு முந்நூறு அரநூறுரூபா. தாசில்தார் கையெழுத்துக்கு அய்நூறு அய்நூறு ஆயிரம் ரூபா தந்திடனும். எனக்கு எரநூறு எரநூறு நானூறு ரூபா தந்திடனும்!

    தலையாட்டினான் சங்கரன். பணத்தை பட்டுவாடா செய்தான்.

    ஜாமீன் எடுக்க வக்கீலுக்கு போன் பண்ணினான். ஹைகோர்ட் ஜாமீனை நான் சொல்ற வக்கீலை வச்சு எடுக்காம நீங்களே எடுத்துக்கிட்டீங்க. சரி நாளைக்கு காலல எட்டுமணிக்கெல்லாம் என் ஆபிஸ் வந்திடுங்க. ஒவ்வொரு ஜாமீன்தாரும் ரேஷன்கார்டு ஒரிஜினல் ஜெராக்ஸ் சொத்துவரி ரசீது ஜெராக்ஸ் வி.ஏ.ஓ. தாசில்தார் கையெழுத்து கூடிய சொத்து சான்றிதழ் வைச்சிருக்கணும். ஜாமீன்தாரருக்கு ஜட்ஜ் என்னென்ன கேள்வி கேப்பாருன்னு சொல்லிக் குடுத்திருங்க. உங்க பெயர், உங்கப்பா பெயர், உங்களை எப்படி தெரியும், இந்த கேஸ் எந்த மாதிரியான கேஸ் சொத்தின் பட்டா எண் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்குடுங்க. ஜாமீன் எடுக்க எனக்கு பீஸ் ஆயிரம் ரூபா. கோர்ட் ஸ்டாம்பு செலவு 300 ரூ. இதர செலவுகள் ரூ 200 ஆகும். எடுத்திட்டு வந்திருங்க!

    சரி! என்றான் சங்கரன்.

    இரவு ஏழுமணிக்கு வரச்சொல்லியிருந்தார் வி.ஏ.ஓ. பார்க்கப் போனான் சங்கரன்.

    நான் கையெழுத்து போட்டுட்டேன். ஆனா ஒரு சிக்கல். தாசில்தார் கையெழுத்து நான் வாங்கமுடியாது போல இன்னிக்கி!

    ஏன் சார்?

    தாசில்தாரோட பாட்டி செத்துப்போய்ட்டாங்க. காரியம் பண்ண போய்ட்டார்!

    சார்! நாளைக்கு ஜாமீன் கட்டாயம் எடுத்தே ஆகனும் சார். சொந்தஜாமீன் நாளையோட முடியுது. சொந்த ஜாமீனை நீட்டிக்கமாட்டார். மாஜிஸ்டிரேட்னு வக்கீல் ஸ்ட்ராங்கா சொல்லிட்டார்!

    என்ன செய்றது? கைகளை பிசைந்தார் வி.ஏ.ஓ. டிப்டி தாசில்தார்கிட்ட கையெழுத்து வாங்கலாம்னா அவர் மெடிக்கல் லீவுல தூத்துக்குடி போயிருக்கார்!

    சங்கரன் அழுதான். கேவலம் ஒரு பொய் கேஸ்ல சிக்கி, இத்னி ஆயிரம் செலவு பண்ணி ஹைகோர்ட்ல ஜாமீன் வாங்கியும் நாளைக்கி லாக்கப்ல கம்பி எண்ண வேண்டிவருமோ?

    சொந்த ஜாமீனை ஒரே ஒரு வாரம் எக்ஸ்டென்ட் பண்ணி வாங்கித்தர மாட்டாரா உங்க வக்கீல்? எதிர்ப்பார்ட்டியோட கைகோர்த்து உங்களுக்கு கன்விக்‌ஷன் வாங்கிக்குடுத்ததே அவர் தானோ என்னவோ? சினிமால பாக்ற கோர்ட்டுக்கும் நிஜத்ல இருக்ற கோர்ட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. நீதித்தேவதை மேல ரோடுரோலர் ஓட்டி அவனவன் நசுக்கிட்டுருக்கான்!

    ‘அட, நம்ம வி.ஏ.ஓ. கூட வேதம் ஓதுகிறாரே!’ என காகப்பார்வை பார்த்தான் தலயாரி.

    ஏய்யா தலையாரி! தாசில்தார் பாட்டியோட தகனம் எந்த ஊர்ல என்னைக்கி நடக்குது?

    நைட்டே தகனம் சார்! தகனம் இங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் நடக்குது!

    தாசில்தார் ஸெல்போன் எடுத்துட்டு போயிருப்பாரா?

    தெரியல சார்!

    எடுத்துட்டு போயிருந்தா கூட ஆப் பண்ணி வச்சிருப்பார்!

    எதுக்கும் ட்ரை பண்ணி பாருங்கள் சார்!

    என்னன்னு ட்ரை பண்ணச் சொல்றீங்க? ரெண்டு கையெழுத்து நைட்டோட நைட்டா நீங்க போடனும் சார்னு சொன்னா காரி துப்பிடமாட்டார்?

    என் பிரச்சனையை அவர் மனசு இளகிற மாதிரி சொல்லுங்களேன்!

    போன் பண்ண பணம் வாங்கிக்கொண்டு பப்ளிக் பூத்துக்கு போனார் வி.ஏ.ஓ.

    ஒவ்வொரு தடவை போன் பண்ணும்போது ரிங் போய் கட் ஆனது.

    எட்டாவது தடவை எதிர்முனை உயிர்த்தது. யாரு!

    நான் வி.ஏ.ஓ. பன்னீர்செல்வம் சார்!

    என் பாட்டியின் சிதை முன்னாடி கொள்ளியோட நிக்றேன். இப்ப எதுக்கய்யா போன் பண்ணின?

    ஒரு பார்ட்டி வந்திருக்குது. நாளைக்கு காலைல அந்தாளுக்கு ஜாமீன் எடுக்கனும். ரெண்டு ஜாமீன்தாரர் சான்றிதழ்ல உங்க கையெழுத்து வேணுமாம். நான் சொன்னேன். அந்தாள் கேக்கல. போன் பண்ணினதுக்கு மன்னிச்சிருங்க சார். காரியங்களை எல்லாம் முடிச்சிட்டு பொறுமையா வாங்க சார். நான் போனை வச்சிடுறேன்!

    வி.ஏ.ஓ. போனை வைக்கப்போக எதிர்முனை பதறியது. அவசரப்பட்டு வச்சிராத. கிழவிக்கு சாகுற வயசுதான்ய்யா. கல்யாண சாவுய்யா இது. நாலுமணிநேரமா நாப்பது கையெழுத்து போட்டு பாக்கட்டை நிரப்பாம இந்த பொட்டைக் கிராமத்ல நிக்ரோமேன்னு நொந்து போய் நிக்றேன். ஒரு கையெழுத்துக்கு ஆயிரம் வாங்கிரு. மொபட்ல தலையாரிய அனுப்பு பணத்தோட சான்றிதழ்களோட. கையெழுத்து போட்டு அனுப்ரேன். ஆபிஸ் அட்டன்டர்கிட்ட எரநூறு ரூபா குடுக்கச்சொல். அவன் கோபுரச்சின்ன சாப்பா போட்டுக் குடுத்திருவான்!

    வெளியில் வந்த வி.ஏ.ஓ., நான் உருக்கமா சொன்ன விதத்ல தாசில்தார் மனிதாபிமானத்தோட கையெழுத்து போட ஒத்துக்கிட்டார். ஹி இஸ் கிரேட்ப்பா!

    பணத்தை எண்ணி நீட்டினான் சங்கரன். ரொம்ப தாங்க்ஸ் சார்!

    இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் படுத்திருக்கும் நீதித்தேவதை செயற்கை சுவாச உபகரணம் பொருத்தப்பட்டிருந்தாள்.

    பாப் ஆல்பம்

    நசுங்கி நெளிந்து போன பற்பசை டியூப்பின் அடிப்பகுதியை கத்திரிக்கோலால் வெட்டினான். உள்ளே ஆட்காட்டி விரல்விட்டுத் துழாவி மிச்சம் மீதியிருந்த பற்பசையை வெளியெடுத்தான். பிரஷ் உபயோகிக்காமல் பற்பசை ஈஷிய விரலாலேயே பல் துலக்கினான். உப்புக்கரிக்கும் நீரால் வாய் கொப்பளித்தான். மேன்ஷனின் வராண்டாவில் நின்று சமிக்கைஞயால் கெஞ்சி தேநீர் வரவழைத்துக் குடித்தான் அவன். கீழ் உள்ளாடையின் உட்புறம் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி அணிந்து கொண்டான். தொடையிலும் புட்டப்பகுதிலும் நிறமாறிய கால்நுனி கிழிந்து திரித்திரியாய் தொங்கும் நீலநிற ஜீன்ஸையும் கறுப்பு நிற டி சர்ட்டையும் உடுத்திக்கொண்டான் அவன்.

    அவனது பெயர் தண்டபாணி. பத்து வருடங்களுக்கு முன் சினிமா ஆசை உந்த சென்னை ஓடி வந்தான். டேபிள் கிளீனர் வேலை. சினிமா கம்பெனிகளில் ஆபிஸ்பாய் வேலை. நடிகர்களுக்கு டச்அப் பாயாய் வேலை. அஸிஸ்டென்ட்களுக்கு எவன் குடியையாவது கெடுத்து சரக்கு வாங்கித்தரும் வேலை. எட்டாவது அஸிஸ்டென்ட்டாக வேலை. இப்போது மூன்றாவது அஸிஸ்டென்ட்டாக வேலை.

    தண்டபாணி பெயரை ‘கோத்தகிரி பாணி’ என மாற்றிக் கொண்டான். இன்று ‘எக்ஸலன்ட்’ பிலிம்ஸ் எஸ்.பி. பத்ரியிடம் கதை சொல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1