Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoruvan
Innoruvan
Innoruvan
Ebook77 pages26 minutes

Innoruvan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு கொலை நடக்கிறது. கொலைகாரனை காவல்துறை கைது செய்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்டவனின் நண்பனுக்கு கொலைக்கு காரணமானவர்கள் இருவர் என்பது தெரிகிறது. ஒருவன் கைதாகி விட்டான். அந்த இன்னொருவன் யார்?

அசோக் & டீம் அசத்தும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் இன்னொருவனை வாசிப்போமா?

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507229
Innoruvan

Read more from Gavudham Karunanidhi

Related to Innoruvan

Related ebooks

Related categories

Reviews for Innoruvan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoruvan - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    இன்னொருவன்

    Innoruvan

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அசோக் டிடெக்டிவ் ஏஜென்ஸி.

    கார்த்தி திவ்யா அழைக்க கார்த்தி புன்னகைத்தான்.

    டீ எடுத்துக்கோ… மூன்று கோப்பைகளை ஒரு ட்ரேயில் வைத்துக்கொண்டு நின்றாள்.

    கார்த்தி ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான்.

    டேவிட்… சத்தமாக அழைக்க மாடியில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த டேவிட்,

    என்ன கார்த்தி?

    கார்த்தி அவனுக்கும் சேர்த்து ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான். திவ்யா கேட்டாள்.

    தலைவர் எங்கே?

    அவர் காலையில் அஞ்சு மணிக்கே எழுந்து ஏதோ ஒரு ஃபைலைத் தேடிக்கிட்டிருந்தார்… கார்த்தி சிரிக்க திவ்யாவும் புன்னகைத்தபடி அறையை நோக்கிப் போனாள். உள்ளே பார்த்தவள் திகைத்தாள்.

    புத்தகங்கள்ஃபைல்கள் இறைக்கப்பட்டிருக்க அசோக் சேரில் அமர்ந்த வண்ணம் உன்னிப்பாக எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

    வாசலில் நிழலாடியதைப் பார்த்தவன் அவளைப் பார்க்காமலேயே,

    குட் மார்னிங் திவ்யா சொன்னான்.

    இந்தா அசோக் டீ…

    தேங்க்யூ…

    என்னாச்சு? காலங்கார்த்தாலே எல்லாத்தையும் இறைச்சுப் போட்டிருக்கே?

    அது வேறொண்ணுமில்லை… நேத்து டிவி யில் பார்த்த அந்த வெப் சீரீஸ்-ல கொலைகாரனைப் பிடிக்க முடியாதுன்னு ஒரு போலீஸ் சொல்றார்.அவன் விட்டுட்டுப் போன எதுவுமே இல்லைன்னு முடிப்பார். ஃபாரன்சிக் சயின்ஸ் படி தடயம் எதுவும் இல்லைன்னாலும் அவன் முடி, விரல், நகம் ரத்தத்துளி இப்படி எது கிடைச்சாலும் அவன் மாட்டிக்குவான்…

    அசோக்… திவ்யா சிரித்தாள்.

    சொல்லு திவ்யா…

    அது ஒரு டிவி நிகழ்ச்சி… அதுக்குப் போய்… சொல்ல வந்தவளை இடைமறித்தான்.

    இல்ல திவ்யா… அது டிவி நிகழ்ச்சியா பார்க்காத எத்தனையோ பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தப்பா ஒரு கான்செப்ட். அதைவிட முக்கியம் சாமர்த்தியமா கொலை பண்ணா போலீஸ்கிட்டே மாட்ட மாட்டோம்ங்கிறது சமூகத்துக்குக் கொடுக்கப்படும் தவறான செய்தி. நிறைய பேரை அறியாமலேயே பாதிக்கும் இந்த மாதிரி நிகழ்ச்சி….

    அசோக் சொல்ல…

    திவ்யா தலையாட்டியபடியே புன்னகைத்தாள்.

    டீட்டெயில்ஸ் கிடைச்சத்துக்கப்புறம் வாங்க…. எல்லாம் நான் எடுத்து வெச்சுக்கறேன்….

    அசோக் புன்னகத்தான். அவன் அலைபேசி அடித்தது.

    ஹலோ…

    அசோக் டிடெக்டிவ் ஏஜென்சி?

    ஆமா சொல்லுங்க…

    என் பேர் வரதன் சார்…. நான் கோயம்புத்தூர்ல இருந்து பேசறேன்…

    சொல்லுங்க வரதன்…

    நேராப் பார்க்கணும் சார்…

    ஆஃபீஸ்க்கு வந்திடுங்களேன்…

    எப்போ வர சார்?

    இப்போ எங்கிருக்கீங்க?

    கோவையில்தான் சார் இருக்கேன். பீளமேட்டில்…

    ஹ்ம்ம்… மதியம் ரெண்டு மணி… ஓகே வா?

    யெஸ் சார்…அவருடன் பேசி முடித்த அசோக் அழைத்தான்.

    கார்த்தி…

    சொல்லு அசோக்… அசோக்கின் முன்வந்து நின்றான்.

    ரெண்டு மணிக்கு ஒரு க்ளையண்ட் வருவார்… ஆள் வந்து அவர் பற்றி எல்லாமே சொன்னவுடன்… அசோக் சொல்லும்போதே கார்த்தி சிரித்தான்.

    ஆள் சொன்னதெல்லாம் கரெக்ட்டான்னு உறுதி செய்யணும்… அதானே…

    அசோக் சிரித்தான்.

    அதேத்தான்…

    ***

    மதியம் ரெண்டு மணி.

    வரதன் நடுத்தரமான வயதில் இருந்தார். சிகப்பு நிறம். அடிக்கடி கைக்குட்டையினால் வியர்வையை

    Enjoying the preview?
    Page 1 of 1