Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasanthathil Or Naal...
Vasanthathil Or Naal...
Vasanthathil Or Naal...
Ebook111 pages42 minutes

Vasanthathil Or Naal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“வசந்தத்தில் ஓர் நாள்..” என்ற இந்த புத்தகம் 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

இந்த கதைகளில் பெரும்பாலானவை கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதியவை. எனவே இது மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட வாழ்வியல் கதைகள் என்றும் சொல்லலாம்.

“தடயம்”, “குற்றம்.. நடந்தது என்ன?” போன்ற க்ரைம்‌ கதைகள் அளவில் பெரியன. மாறாக “ஆற்றங்கரை பிரசங்கம்”, “போனஸ் வாழ்க்கை” ஆகியவை அளவில் சிறியன என்றாலும் கருத்துச் செறிவானவை.

மொத்தத்தில் இது ஒரு கதம்ப மாலை.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580176010739
Vasanthathil Or Naal...

Related to Vasanthathil Or Naal...

Related ebooks

Reviews for Vasanthathil Or Naal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasanthathil Or Naal... - Arjunan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வசந்தத்தில் ஓர் நாள்...

    Vasanthathil Or Naal...

    Author:

    அர்ஜுனன்

    Arjunan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arjunan

    பொருளடக்கம்

    1. தடயம்...

    2. லவ்...& லவ் ஒன்லி...

    3. போனஸ் வாழ்க்கை...

    4. யாரோ?... யார் இவரோ?...

    5. ஆற்றங்கரை பிரசங்கம்...

    6. யார் உயர்ந்தவர்...?

    7. குடி குடியைக் கெடுக்கும்...

    8. போலீஸு... போலீஸு...

    9. அரசு மரியாதை...

    10. கரு

    11. குற்றம்... நடந்தது என்ன...?

    12. நிர்பயா 2022

    13. தொட்டில் குழந்தை

    14. காலத்தினால் செய்த உதவி...

    15. மீண்டும் காதலிப்போம்

    16. துண்டு... துண்டாய்... குப்பை

    17. நன்றிக் கடன்...

    18. யார் குழந்தை?

    19. ‘மாஸ்டர்’ பிளான்

    20. வசந்தத்தில் ஓர் நாள்...

    1. தடயம்...

    போதைப் பொருள் விற்பனையை உடனடியாக தடுத்தே ஆக வேண்டும். மாநில அரசின் உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பறந்தது.

    அரசு அறிவிப்பு செய்திகளிலும் வந்தது.

    காவல் நிலையத்தில் பணியில் மூழ்கியிருந்த SI தினேஷிற்கு நண்பன் விஜய் அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

    ஃபோனை உயிர்ப்பு நிலைக்கு கொண்டுவந்து...

    சொல்லு விஜய்... என்றார் தினேஷ். விஜய் ஒரு சோஷியல் ஆக்டிவிஸ்ட் என்பதால் சமூக விரோத சக்திகள் பற்றிய செய்திகள் அவ்வப்போது இவன் மூலம் கிடைக்கும்.

    போதைப் பொருள் விற்பனை சம்பந்தமா அரசு செய்தி எல்லோருக்கும் பயங்கரமா பரவுது போல...?

    ஆமா விஜய்... எங்களுக்கும் மேல் இடத்து பிரஷர் ஆரம்பிச்சிடுச்சு...

    ஒரு தகவல் சொல்லத் தான் கூப்பிட்டேன்...

    சொல்லு விஜய்... நீ தேவையில்லாம அலுவல் நேரத்தில கூப்பிட மாட்டேனு தெரிஞ்சது தானே...?

    நம்ம ஊர்ல XYZ ஃபேக்டரி இருக்கில...

    ஆமா விஜய்...

    அதுக்கு பக்கத்தில ஒரு பெட்டி கடை... அந்த கடை ஓனர் சுப்ரமணி என்னோட ஃப்ரெண்ட் தான்... அவர்கிட்ட இன்னைக்கு காலைல நின்னு பேசிக்கிட்டு இருந்தேன்... அவர் கடைக்கு பக்கத்தில ரோட்டு ஓரத்தில இரண்டு பேரு இரகசியமாக போதை பொருளை மாத்திரை வடிவில பரிவர்த்தனை பண்றதை பார்த்திருக்கார்...

    அது போதை பொருள்னு அவருக்கு எப்படி தெரியுமாம்...?

    கவரை வாங்கினவன் உள்ளே மேற்படி மாத்திரை தான் இருக்கானு பார்த்திருக்கான்... கவரை கொடுத்தவன் சீக்கிரம் உள்ள வை... இப்போ போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குனு சொல்லி இருக்கான்... வேறு எந்த மாத்திரைக்கு போலீஸ் கெடுபிடி இருக்கப் போகுது?... இந்த மாதிரி விஷயங்கள்ல அரசு அறிவிப்பு மறைமுகமா இருக்க வேண்டாமா?... அப்படினு புலம்பினார்...

    ஓகே... தகவலுக்கு நன்றி விஜய்... நான் இதை என்னனு பார்க்கிறேன்... என்று சொல்லியபடி அழைப்பை நிறுத்தின SI தினேஷ் அடுத்த பத்து நிமிடங்களில் அந்த கடையில் இருந்தார். நல்ல வேளை, கடையில் கூட்டமில்லை. ஓனர் மட்டும் இருந்தார்.

    பெட்டி கடை ஓனர் முதலில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது என்று சொன்னவர், விஜய் பெயரை சொன்னதும் வழிக்கு வந்தார்.

    உங்களுக்கு எப்படி அவங்களை கவனிக்கனும்னு தோனுச்சு...? என்றார் SI தினேஷ்.

    ஸார்... அது போதை மாத்திரை பரிமாற்றமானு எனக்கு உறுதியா தெரியாது... என்று பீடிகையோடு தொடர்ந்தவர்...

    அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் இரண்டு நிமிஷம் முன்னாடியே இங்கே வந்துட்டான்... என் கடையை விட்டு நாலஞ்சு அடி தாண்டி போய் வண்டி என்ஜின் மட்டும் நிறுத்திவிட்டு மொபைலை நோண்டிட்டு இருந்தான்... ஏதோ அட்ரஸ்ஸுக்கு கூகிள் மேப் பார்க்கிறான்னு நினைச்சேன்... அப்ப தான் பின்னாடியே ஒருத்தன் வந்து இவன் ஓரமா அவனும் வண்டியை நிறுத்தினான்...

    தினேஷ் குறுக்கிட்டு...

    ஒருவேளை முன்பே பேசி வைத்து இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்... ப்ளீஸ் கண்டினியூ... என்றார்.

    முதல்ல வந்தவன் ஒரு சின்ன கவரை எடுத்து இன்னொருத்தன் கிட்ட கொடுக்கவும், எனக்கும் கடையில அந்நேரம் வேறு யாரும் வர்லைங்கிறதால அவங்க என்ன செய்றாங்கனு பார்க்கலாம்னு தோனுச்சு...

    ஸோ... இரண்டு பேரும் உங்களை தாண்டி நின்னதால அவங்க முகத்தை கவனிச்சிருக்க மாட்டீங்க... கரெக்ட்...?

    எஸ் ஸார்... முதுகுப் புறம் தான் தெரிஞ்சது... கவரை வாங்கியவன் அதை செக் பண்ணி பார்க்கும்போது, கவரை கொடுத்தவன் சொன்ன விஷயத்தை விஜய் கிட்ட கேஷுவலா சொன்னேன்... அவ்வளவுதான்...

    வண்டி நம்பர் ஏதாவது கவனிக்க முடிஞ்ததா...? தினேஷின் அடுத்த கேள்வி.

    ஸார்... மொத்தமே ஒன்னிரண்டு நிமிஷத்துக்குள்ள நடந்தது... விஜய் எனக்குத் தெரிஞ்சவர்... அதனால கேஷுவலா அவர்ட்ட சொன்னேன்... இதுக்கே இந்தக் கேள்வி கேக்குறீங்க... இதுக்கு தான் சாட்சி சொல்லவே எல்லாரும் பயப்படுறாங்க...

    ஸாரி... ஸாரி... ஒரு தகவல் எங்களுக்கு கிடைக்கும்போது குற்றவாளியை எப்படியாவது பிடிக்கணும்னு அக்கறையில சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு...

    என்று தொடர்ந்தவர்...

    ஓகே... அவங்க என்ன கலர் சட்டை போட்டுருந்தாங்க?... அதுவாவது ஞாபகம் இருக்கா...?

    ஸார்... கவரை கொடுத்தவன் டார்க் ப்ளூ கலர் சட்டை போட்டிருந்தான்... வாங்கினவன்.... .... ஏதோ லைட் கலர்ல போட்டுராந்தான்... சரியா ஞாபகம் வர்ல...

    ஓகே... ஓகே...பக்கத்தில் CCTV camera எங்கிருக்கு...? போலிஸ் வழக்கமா கேட்கும் அடுத்த கேள்வி.

    அந்த ஃபேக்டரி வாசல்ல ஒன்னு இருக்கு ஸார்... ஆனா ஃபேக்டரி இந்தப் பக்கமா... அவங்க வந்த திசையில் இருக்கு... அவங்க போன திசையில.... ம்ம்... ஒரு 500 மீட்டர் தள்ளி ஒரு டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் வாசல்ல இருக்கு ஸார்...

    ஓ குட்... இது தினேஷ்.

    ஆனா... அந்த தகவல் எந்த அளவுக்கு உங்களுக்கு யூஸ் ஆகும்னு எனக்குத் தெரியல... ஸார். என்றார் பெட்டிக் கடைக்காரர்.

    SI தினேஷ் ஷாக் ஆகி...

    ஏன்...? என்றார்.

    அது ஃபேக்டரில நைட் ஷிப்ட் முடியற நேரம்... நிறைய பேரு அதே டார்க் ப்ளூ கலர் சட்டை போட்டுட்டு இந்த ரோட்ல போனாங்க... ஒருவேளை அவன் கூட அங்கே வேலை செய்பவனா இருக்கலாம்...

    ***

    பெட்டி கடைக்காரர் சொன்ன தகவலை மனதிற்குள் ஆராய்ந்து பார்த்தார் SI தினேஷ்.

    ஓரளவுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிக்கலான நூல்கண்டு போல உள்ளது.

    Enjoying the preview?
    Page 1 of 1