Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbaana Anuvirkku
Anbaana Anuvirkku
Anbaana Anuvirkku
Ebook61 pages28 minutes

Anbaana Anuvirkku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் மனம்போன போக்கில் இருக்கும் சிவாவின் கண்களில் படுகிறாள் நாயகி அனு. அனுவால் பலமுறை திட்டு வாங்கி அவமானப்படும் சிவாவிற்கு அவனையும் மீறி அனு மீது நேசம் உண்டாகிறது. அந்த நேசம் அவனுக்கு வாழ்வைப் புரிய வைக்கிறதா?

வேலைக்குச் சென்றவன் மூன்று வருடங்கள் கழித்து அனுவைப் பார்க்க அளவற்ற காதலுடன் மீண்டும் வருகிறான். அங்கே என்ன நடக்கிறது? நாயகனை அது எப்படி பாதிக்கிறது?

உங்களை உடன் அழைத்துச்செல்லும் எழுத்து நடையில் நாயகனுடன் அன்பான அனுவைக் காண நீங்களும் பயணியுங்கள். பரவசமடையுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580145507438
Anbaana Anuvirkku

Read more from Gavudham Karunanidhi

Related to Anbaana Anuvirkku

Related ebooks

Reviews for Anbaana Anuvirkku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbaana Anuvirkku - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    அன்பான அனுவிற்கு

    Anbaana Anuvirkku

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    சென்னை சென்ட்ரல்.

    சேரன் எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபார்ம் ஆறில் நின்றுகொண்டிருக்க ஓடினேன். இன்னும் இரண்டு நிமிடங்களில் ரயில் புறப்பட்டுவிடும்.

    என் கம்பார்ட்மெண்ட் எஸ் 2. ஏறிவிட்டேன். ரயில் நகரத் தொடங்கியது.

    புன்னகையுடன் போய் அமர்ந்தேன்.

    எதிரில் அமர்ந்திருந்தவர் மலையாளி போல். கையில் மாத்ருபூமி நாளிதழ் வைத்திருந்தார்.

    என்னைப் பார்த்தார்.

    புன்னகைத்தேன்.

    எவிடெ ? கேட்டார்

    கோயம்பத்தூர் சொல்லிவிட்டு நிங்ஙள்? என்று பார்த்தேன்.

    எர்ணாகுளம் என்றார்.

    சேட்டன் ஒரு வல்லிய ரைட்டராணு. ஒரு தேன்குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். சந்தன நிறத்தில் சந்தனப் பொட்டு வைத்தபடி சந்தனப் பெண். புன்னகைத்தாள்.

    பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

    ரயில் வேகமெடுத்தது.

    நான் சிவா. இருபத்தெட்டு வயது. வேலை புனேயில். ஹிஞ்ச்வாடி தெரியுமா?  தெரியாதென்றால் அதுதான் ஐடி ஹப். அங்கே ஃப்ளூயன்ட் சாஃப்ட்வேர்ஸில் என் பணி. இணைந்து மூன்று வருடங்களாகின்றன.

    அப்பா ஆறுமுகம் ஆசிரியர்.அம்மா கமலம். ஒரு தங்கை திவ்யா. மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு. எங்கள் வீடு இருப்பது பெரியநாயக்கன்பாளையம்.

    ஆறு மாசத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து போனேன் என்றாலும் இன்றைய என் பயணம் என்னை இயல்பாக இருக்க விடவில்லை. மனம் முழுக்க ஒரு பரவசம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

    ஒரு காரணம் என்று சொல்வதை விட ஒரே ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.

    அந்தக் காரணம் அனு.

    அந்தப் பெயரை உச்சரிக்கும்போது என் முகம் அவ்வளவு அழகாக இருக்குமாம். என் நண்பன் வருண் சொல்வான்.

    முகம் அழகாக இருக்கிறதோ இல்லையோ அது தெரியாது. என் அகம் நெகிழும்.

    இன்று நானும் சமூகத்தில் ஒரு நிலையில் இருக்க அனுதான் காரணம்.

    சிவா

    ம்

    மூணு வருஷம் கழிச்சுத்தான் என்னை நீ பார்க்கணும்

    ம்

    இந்த மூணு வருஷத்துல யாருக்கு எப்படிப்பட்ட மாற்றம் வந்தாலும் அதை மற்றவங்க ஏத்துக்கணும்.

    ம்

    கிளம்பு ஆல் தி பெஸ்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1