Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
Ebook159 pages36 minutes

ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழக வனத்துறை அமைச்சர் செந்தாமரைக் கண்ணன் டீ.வி. காமிராக்களுக்கு நடுவில், ப்ளட் லைட்டுகள் வெளிச்சத்தில், பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
 "வீரப்பனை எப்ப பிடிப்பீங்க...?"
 "கூடிய சீக்கிரமே...!"
 "கூடிய சீக்கிரம்ன்னா... ஒரு வருஷமா... ரெண்டு வருஷமா?"
 "அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. இரண்டாயிரம் போலீஸார் காட்டுக்குள் புகுந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
 "வீரப்பன் தற்சமயம் தமிழ்நாட்டு - கர்நாடக - கேரள காட்டுப் பகுதிகளில் இல்லையென்றும் இமயமலைப் பக்கம் போய்விட்டான் என்றும் சொல்லப்படுகிறதே...?"
 "பொய்...! இங்கேயிருக்கிற காட்டுப்பகுதிக்குள்தான் ஒளிந்து இருக்கிறான்... விரைவில் அவனைப் பிடித்துவிடுவோம்."
 "பத்திரிக்கை நிருபர்கள் ஏதோ பிக்னிக் போகிற மாதிரி காட்டுப் பகுதிக்குள் போய் வீரப்பனைப் பார்த்து பேசி - அவனோடு ஜமுக்காளத்தில் ஒன்றாய் உட்கார்ந்து மான் கறி விருந்து சாப்பிட்டுக் கொண்டே பேட்டி எடுத்துக் கொண்டு வரும்போது போலீஸாரால் மட்டும் அவனைப் பிடிக்க முடியாமல் போவது ஏன்...?"
 அமைச்சர் செந்தாமரைக் கண்ணன் அந்த நிருபரை கோபமாய்ப் பார்த்தார்.
 "நீ எந்தப் பத்திரிகை...?"சாமரம்..."
 "ஆளும் கட்சிக்கு எதிரான பத்திரிக்கைதானே அது...?"
 "ஸாரி ஸார்... அநியாயத்துக்கு எதிரான பத்திரிக்கை."
 "நீ இனி கேள்வி கேட்டா நான் பதில் சொல்லமாட்டேன். வெளியே போயிடு..."
 "ஸார்... நான் கேட்ட கேள்வி நியாயமானது. அந்த நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை. தமிழ்நாட்டு போலீஸ் திறமை வாய்ந்த போலீஸ். ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையான போலீஸ். அவங்களால ஒரு வீரப்பனையல்ல ஸார்... காட்டுக்குள்ளே பத்து வீரப்பன்கள் இருந்தாலும் பிடிக்கமுடியும்... தப்பு எங்கேயோ இருக்கு...! போலீஸ் வீரப்பனைத் தேடி காட்டுக்குள்ளே நுழைஞ்சா அவன் மீசையை எடுத்துட்டு மொட்டையும் அடிச்சுகிட்டு பெங்களுர் சிட்டிக்குள்ளே வந்துடறானாம் ஸார். இதெல்லாம் உண்மையா...?"
 அமைச்சர் கோபமானார்.
 "யோவ்...! இந்த மாதிரியான நியூஸெல்லாம் உங்களுக்கு எங்கிருந்தய்யா கிடைக்குது...?"
 "ஜனங்க பேசிக்கறாங்க ஸார்..."
 செந்தாமரைக் கண்ணன் ஆத்திரத்தோடு எழுந்தார்.
 "போங்கய்யா... பேட்டியும் கிடையாது. ஒரு வெங்காயமும் கிடையாது."
 "ஸ... ஸார்... ஒரே ஒரு கேள்வி ஸார்..."
 "யோவ்... ராமகிருஷ்ணன்...!"
 பி.ஏ. ஓடி வந்தார்.
 "ஸார்..."
 "எல்லாரையும் வெளியே அனுப்பய்யா. வீரப்பன் கிடைக்கிறவரைக்கும் இனிமே ப்ரஸ் மீட்டிங்கே வேண்டாம்...செந்தாமரைக் கண்ணன் ஒரு கெட்ட வார்த்தையை பிரயோகம் செய்து கொண்டே தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்து மாடிப்படிகளில் ஏறி பர்சனல் அறைக்குள் நுழைந்தார். உடம்பை ஏ.ஸி. தடவியது. எக்ஸிக்யூட்டீவ் நாற்காலியில் சாய்ந்து நெற்றியைப் பிடித்துக் கொண்டார்.
 ஐந்து நிமிஷம் கழித்து பி.ஏ. உள்ளே வந்தார். நிமிர்ந்தார் செந்தாமரைக் கண்ணன்.
 "என்ன... எல்லாரும் போயிட்டாங்களா...?"
 "போய்ட்டாங்க ஸார்..."
 "ராமகிருஷ்ணன்..."
 "ஸார்..."
 "இனிமே பிரஸ்மீட் வைக்கிறதாயிருந்தா ஆளும் கட்சிக்கு ஆதரவாயிருக்கிற பத்திரிக்கைக்காரங்களையெல்லாம் கூப்பிடய்யா."
 "ஸார்... அதுல வந்து..."
 "என்னய்யா...?"
 "இன்னிக்கு தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாப் பத்திரிக்கைகளும் ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் எழுதிகிட்டிருக்கு ஸார்... ஒரு பத்திரிக்கைகூட நமக்கு ஆதரவாக இல்லை..."
 "அப்படீன்னா இனிமே எந்த 'பிரஸ் மீட்'டும் வேண்டாம்...! எந்த பத்திரிக்கைகாரனையும் எனக்குப் பக்கத்துல வரவிடாதே..."
 ராமகிருஷ்ணன் தலையாட்டிக் கொண்டே நகர முயல அமைச்சர் கையமர்த்தினார்.
 "பத்திரிக்கைக்காரங்க வந்து டென்ஷன் பண்ணிட்டுப் போயிட்டாங்க... ஒரு லார்ஜ் ஊத்திக் கொடுத்துட்டு போய்யா..."
 "ஸ... ஸார்..."
 "என்னய்யா...?"இது... இது... பகல் நேரம்...! பனிரெண்டு மணிக்கு செக்ரட்ரியேட்ல ஐ.ஏ.எஸ் ஆபீஸர்ஸ் மீட்டிங் இருக்கு. அதுல சி.எம்.மும் கலந்துக்குறார்... நீங்களும் அதுல கலந்துகிட்டு பேசப்போறீங்க... சி.எம். மோப்பம் பிடிச்சுட்டார்ன்னா பெரிய வம்பாபோயிடும் ஸார்..."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224151042
ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்

Read more from Rajeshkumar

Related to ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்

Related ebooks

Related categories

Reviews for ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண் - Rajeshkumar

    ebook_preview_excerpt.htmlZKnGJ+H @w1$$vP F "=$efxO骮 9 d#QbUu+қJUzY郒[WJJ/*KYٿ/eϮOkFpsEK;^ii˯-/--o-gwkc{=^G::ѻuUG^u[z QTz_9~2?C{,_'ܵ52 seӮ*"3V/s9GaАuQG=}+íX *(ix3I Uղ+P'3Yj`/3=Z KfBwtY}PXikЀ<(eQp[K?qXgٔ1&hyTVc/\x%'\5F ]*0p*_[|?#Klj-;c_vN빋'޺,mul/mIcr ?4H&#_v "V!O8C )~6L"R`wp(NND<[8DaAYm2CR?h ^ȫSjQq#Ɵ.#)w* o 5" f+ϭ zmMHC L zlLxQw R pW} hNSwK*gC; 2~/8W6x!5s*X bfDzr$Y]&D7Dm# l H.p! Q~TGq‚o+-i;Jb@2v@y; @ P{Í)GS`c|+G*LFb*nZj&^hoAxD&&\Q# xVEOasD-,mO*w P4>a(IVrlDbx18y.}@8nдXoC1d-Bl}W~22YHyFm?MA2o+o saϽ:-YLx>Gz$ME"I0Ơ-gnKM'đ֠u(;J>rS }6tIdmm)+vYSNC#h2_eEwĈ?B\ Wn;b~#HwLP1di dٷ6$؉~G;ǐB깓/n*DNŰ/{<&i1F!#?Wg})e.1Ds2l#'dO4 n* d>M=N'3Df N"Y9 D=bVe u+&gP1F^mxאN<3 54^ݘy$8 `y+=2p$Ǎ&֋wH[l =#ug'Sklpv;b&gtt96WIjι6b!ctwԚ%K m݄X`ډ=1q3Nc8wk[׉HP9#(ԒI1tu0ŶK$ 7d;Lٱ5ɦCX FOlU{ v7 gjqبM:=?@heFEU0R{Bipd6*Oи]H_IGaVN䬇 㗛w'Fe6Asz[`N]بt Db4ur<. Ij>nИէa1M!D0(\'m;yW4z6"TY7ީnH| ~jptxƺ4=T/WcigrH1(A7|BmtM |0gK{t٫n"ِYw|n؁4ޢH> ɻĶ+d(Kd1'MPCJTRb ̃Bڞ6 h!k&iIس "DY/(ѷTc3oi/ljL|RH)ZЇ^ tۍ#Q/}~s?l%,
    Enjoying the preview?
    Page 1 of 1