Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponnulagam Nokkip Pohirairgal
Ponnulagam Nokkip Pohirairgal
Ponnulagam Nokkip Pohirairgal
Ebook174 pages1 hour

Ponnulagam Nokkip Pohirairgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851379
Ponnulagam Nokkip Pohirairgal

Read more from Jyothirllata Girija

Related to Ponnulagam Nokkip Pohirairgal

Related ebooks

Reviews for Ponnulagam Nokkip Pohirairgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponnulagam Nokkip Pohirairgal - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    பொன்னுலகம் நோக்கிப் போகிறார்கள்

    Ponnulagam Nokki Pokirargal

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காட்சி 1

    [அந்தச் சின்ன வீடு அன்று கலகலப்பாக இருக்கிறது. காரணம் ராஜா டில்லிக்கு மறுநாள் புறப்பட இருப்பதுதான். ஐ. ஏ. எஸ். எமுத்துத் தேர்வில்தேறிவிட்டு அவன் தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கறான். நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அவன் அம்மா அமிர்தம் அடுக்களையில் வேலையாக இருக்கிறாள். அவன் தங்கையும் அடுக்களையில் வேலையாக இருக்கிறாள். அவன் தங்கையும் அம்மாவுக்கு ஒத்தாசையாக அடுக்களையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ராஜா யாரோ நண்பர்களையும் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லி வெளியே போயிருக்கிறான்.]

    அமிர்தம்: (அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த குழம்பைக் கலக்கிக்கொண்டே) காலையிலே பொறப்பட்டுப் போன பிள்ள-இன்னுமும் காணல்லே. செநேகிதப் பசங்களப் பாத்துட்டா வயத்து நாபகம், வீட்டு நாபகம் ஓன்னுமே வராதே அவனுக்கு!வாயிலே ஈ நொளயறது தெரியாம பேசிக்கிட்டு நிப்பான். . .

    சொல்லி: (சிரித்து. . . ) ஆமாமா. அண்ணனுக்கு ஃப்ரண்ட்ஸோட பேசிக்கிட்டே இருந்தாப் போதும், சோறு வேணும், தண்ணி வேணும். . . அதோ அண்ணனே வந்துக்கிட்டிருக்குது. . .

    [ராஜா வருகிறேன்]

    அமிர்: என்னடாது?காலையிலே போனபிள்ள?மணி பத்தாவுது. ரெண்டு இட்லியத் தின்னுப் போட்டுக் காலை ஆறுமணிக்குக் கௌம்பினவன். இப்ப மணி என்ன ஆகுது?

    ராஜா: (சிரிப்புடன்) ஏன்? பத்துன்னு நீதானே சொன்னே?ஆமா?நம்ம வீட்ல கெடியாரமே இல்லியே-நீ எப்படி இம்புட்டுச் சரியா மணி சொல்றே?

    அமிர்: (பெருமையாகச் சிரித்து) உங்கப்பா சொல்லிக் குடுத்துதான். வெயிலேப் பார்த்து மணி சொல்லுவேன். ராத்திரியிலேயே உங்கப்பா மணி சொல்லுவாரேடா-மானத்தப் பாத்து?

    செ: (தயிரைக் கடைந்து கொண்டே, வருத்தமாக) அப்பா இருந்தா அண்ணன் ஐயேயெஸ் இண்டர் வ்யூவுக்குப் போக இருக்கிறதுக்கு அப்படியே பூரிச்சுப்போயிடுவாரில்லே?

    [அப்போது அங்கே சட்டென்று அமைதி கவிகிறது. முவரும் மேலே பேசாமல் வருத்தமான மௌனத்தில் அமிழ்ந்து சில வினாடிகளைக் கழிக்கின்றனர். அண்ணனும் தங்கையும் முகத்தில் மட்டும் வருத்தம் காட்டி நிற்க, அமிர் தம் கண்களில் பொங்கிய கண்ணீரை இருவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொள்ளுகிறாள்.]

    ரா: (திடீரென்று முகம் இறுக) அம்மா ! நான் இண்டர்வ்யூவுக்குப்போகப்போறதில்லே.

    டீச்சர் வேலைக்குப் போறதுக்குன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

    [அம்மாவுக்கு பெண்ணும் தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை நிறுத்தி விட்டு வியப்புடன் அவனை நோக்குகிறார்கள்.]

    அமிர்: ஏண்டா, உனக்கேன்ன பயித்தியமா பிடிச்சிருக்குது?டீச்சர் வேலை பார்த்து உங்கப்பா குப்பை கொட்டினதைப் பார்த்துப்போட்டா நீ இப்படி ஒரு முடிவுக்கு வந்தே?நேத்து வரைக்கும் டில்லிக்குப் போறதாத்தானே இருந்தே?(அமிர்தத்தின் குரலில் ஏமாற்றமும் சிறிது கோபமும் இழையோடுகின்றன. )

    [ராஜா உடனே பதில் சொல்லாமல் தரையைப் பார்க்கிறான்.]

    சே: ஏண்ணு? நீ ஐயேயெஸ் பாஸ் பண்ணிவிட்டுப் பெரிய ஆபீசரா வருவேன்னு

    அம்மா ஆசை ஆசையா எதிர்பார்த்துகிட்டிருக்குறாங்க. . .

    ரா: எனக்குத் தெரியாதா என்ன?

    அமிர்: பின்னே ஏண்டா?

    ரா: மக்களுக்குச் சேவை செய்யறதுக்கு டீச்சர் வேலையில தாம்மா நிறைய சந்தர்ப்பம் இருக்கு.

    [அமிர்தமும் செல்லியும் பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக் கொள்ளுகிறார்கள்]

    அமிர்: (மகனின் பிடிவாதம் பற்றி நன்றாக அறிந்திருந்த மனச்சோர்வுடனும் ஏமாற்றத்துடனும்) ராஜா !உனக்கும் உங்கப்பா புத்தி வந்திருச்சா?

    இது மாதிரியான பயித்தியக்கார எண்ணங்களால தான் உங்கப்பா தன்

    தலையில தானே மண்ண அள்ளிப் போட்டுக்கிட்டாரு. அவர நான்

    கலியாணம் கட்டிக்கிட்டப்ப கலெக்டர் ஆபீசிலே ஏதோ நல்ல வேலை

    கிடைச்சிச்சு. அப்ப நமக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கல்லே.

    வெள்ளைக்காரனுக்குக்குக் கீழே வேலை செய்ய மாட்டேன்னு வாத்தியார்

    வேலைக்குப் போனாரு. நீயாவது புத்தியாப் பொளப்பேன்

    நம்பிக்கிட்டிருந்தேன். நீயும் இப்படி என் ஆசியல மண்ண அள்ளிப்

    போடறே.

    ரா:      அம்மா! பெரிய வேலைக்குப் போனா கைநிறயைக் காசு கிடைக்கும்கிறத்

    தவிற வேற என்னம்மா பெருமை இருக்குது?

    அமிர்: மக்களுக்குச் சேவை செய்யிறதுக்கு எல்லா உத்தியோகத்துலயும் தான்

    வழி இருக்குது. வாத்தியார் வேலையில மட்டுந்தானா?அந்தந்த

    தொழிலுக்குரிய கடமைங்களை ஒழுங்காச் செய்யறதே பெரிய மக்கள்

    செவைதான்.

    ரா:      (வியப்பாய் விழிகள் விரிய) அம்மா!நீங்க அழகாப் பேசுறீங்க. இந்த

    அளவுக்கு விஷயம்தெரிஞ்சவங்களாய் இருப்பீங்கன்னு நான் நினைக்கலே. . .

    அமிர்: (குறுகிட்டு) அப்புறம் உங்கம்மான்னு சொல்லிக்கிறதுக்கு எனக்கு

    என்ன தகுதி இருக்கும்?

    ரா:      (சிரித்து) அம்மா!நீங்க சொல்றது ரொம்பவும் உண்மை அவங்கவங்க

    ஒழுங்காச் செய்யிறதே பெரிய தேச சேவைதான். ஆனா நம்ம நாட்டிலே அந்தக் கடமை உணர்ச்சி உள்ளவங்க ரொம்பக் குறைச்சலாய் இருக்கிறாங்க. பெரிய பெரிய பதவிகள்ளே பெரிய பெரிய அதிகாரங்களோட இருக்குறவங்க ஒழுங்கா இல்லைன்னா மத்தவங்கல்லாம் ஒழுங்கா இருந்து பிரயோசனமே இல்லை.

    அமிர்: அதுக்கு என்னோட இப்ப?நீ வாத்தியார் வேலைக்குப் போறதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

    ரா: சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவசரப் படறிங்களேம்மா?மத்தவேலைகள்ள இல்லாத ஒரு பெரிய சந்தர்ப்பம் வாத்தியார் வேலையில இருக்குது. அதாவது ஒழுங்கு, கட்டுப்பாடு, கடமையுணர்ச்சி

    இவையெல்லாம் கொண்ட பரம்பரைகளை உருவாக்கி வெளி உலகத்துக்கு அனுப்பிவைக்கிற சத்தர்ப்பம். இது வேறு எந்தத்

    தொழில்ல இருக்குது?நீங்களே சொல்லுங்க. . .

    அமிர்: (ஆத்திரமாக)நீ ஒருத்தன் வாத்தியார் வேலைக்குப் போய்ப் பெரிசாக் கிழிச்சுறப் போறியாக்கும்? இப்ப என்ன ஊர்ல உலகத்திலே இல்லாத பள்ளிக்கூடமா? வாத்தியாருங்களா?ஊர்ல இப்ப இருக்கிற பள்ளிக்கூடங்களும், வாத்தியாருங்களும் அந்த வேலையைச் செய்துப்போட்டுப் போறாங்க. இதுக்காக நீ கையிலே கிடைக்க இருக்கிற நல்ல வேலையை ஒதறணுமா?

    ரா:      அம்மா!இப்ப இருக்குற வாத்தியாருங்களப் பத்தி உங்களுக்குத் தெரியாது. அதுதான் இப்படிப் பேசறீங்க. அவங்கெல்லாம் சரியாப் படிக்காம, வேற வேலை கிடைக்கலைங்கிறதுக்காக ட்ரெய்னிங் எடுத்துப்போட்டு இந்த வேலைக்கு வத்திருக்குறவங்க. அவங்களுக்குப் பெரும்பாலும் பாடம் நடத்தக்கூடத் தெரியாது. ஏன்னா அவங்களே சரியாப் படிக்காதவங்க. அதனால இந்தக் காலத்து வாத்தியாருங்கள்ளே பலரும் மாணவர்களுடைய மதிப்பிலே தாழ்ந்து நிக்கிறவங்க. அவங்க பேச்சு எதுவும் மாணவர்கள் கிட்ட எடுபடாது. அவங்களால ஒரு நல்ல பரம்பரையை உருவாக்கிப் பள்ளிக்கூடத்துக்கு வெளியே அனுப்ப முடியாது. ஏன்னா அவங்க கடமைங்களையே அவங்க ஒழுங்காகச் செய்யாதவங்க.

    செ:      அண்ணா!நீ ஒருத்தன் அதைச் சாதிக்க முடியுமா அண்ணா?அதுக்கு வேற எத்தனையோ பேருங்க இருக்குறாங்க. இவ்வளவு நாள் அரும் பாடு பட்டு அம்மா ஒன்னயப் படிக்க வச்சுருக்குறாங்க. அதை நெனச்சுப் பாரு. நீ சொல்றது-உண்மைதான்னாலும் உன்ன மாதிரி நல்ல லட்சியவாதி வாத்திதயாருங்களும்இப்பவும் இருக்கத்தான் செய்யிறாங்க. ஒரேயடியா மட்டந்தட்டாதே.

    ரா:      நான் மட்டந் தட்டல்லே, சொல்லி! ஆனா, அது மாதிரி நல்ல வாத்தியாருங்க ரொம்பக் கொறச்சல்னு சொல்றேன்.

    அமி:      நீ அவங்க கூட்டத்துல சேர்றதால அம்பது அம்பத்தொண்ணு ஆகப் போகுது. அதனாலே பெரிய அதிசயம் வெளஞ்சுறப் போகுதாக்கும்?என்னடா என்னமோ பேத்தறே?என் நகை,நட்டு, நெலம் எல்லாத்தையும் வித்து நான் இந்தக் குடும்பத்துக்குச் சோறு போட்டு உன்னயப் படிக்க வச்சிருக்குறேன். நீ படிச்சது பத்தாதுன்னு உன் தங்கைய வேற உன் கட்டாயத்துக்காகப் படிக்க வச்சுக்கிட்டிருக்குறேன். மலையாட்டமா      உன்னய நம்பி யிருந்தேன். நீ என்னடான்னா இப்படி ஒரு பாறாங்கல்லத் தூக்கி என் தலையில போடறே?அடே. இப்பப் புரியாதுறாஒனக்கு?பிற்காலத்துலே நெனச்சுப்பாப்பே-அம்மா சொன்னது எம்புட்டுச் சரின்னு. லட்சியம் கொள்கை இதெல்லாம் நடைமுறைக்கு எடு படாதுடா, ராஜா. நான் உன்னய மாதிரிப் படிச்சவ இல்லே. ஏதோ தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். அம்புட்டுத்தான். அது கூட ஒங்கப்பா தான் சொல்லிக்குடுத்தாரு எனக்கு. . .

    ரா:      நீங்க நிறையப் படிச்சவங்களாய் இருந்தா இது மாதிரிப் பேச மாட்டீங்கம்மா. ஒரு ஆம்பளை படிக்காம இருக்கிறதால ஏற்படற நஷ்டத்த விட ஒரு பொம்பள படிக்காம இருக்குறதால ஏற்படற நஷ்டம் ரொம்ப அதிகம்ம. . . அது இப்பத்தான் எனக்கு புரியுது. . . அம்மா!பணம், காசு, நகை, நட்டு இதுல எல்லாம் என்னம்மா இருக்குது?நம்மச் சுத்தி எத்தன பேரு அரைவயித்துக்குக் கூடச் சாப்பாடு இல்லாம இருக்குறாங்கன்னு பாருங்க. வானமே கூரை, பூமியே வீடுன்னு வாழ்ந்துக்கிட்டுருக்குறாங்க. இவங்களப் பத்தி நினைச்சுப் பார்க்குற புத்தி-இவங்களுக்காக ஏதாவது செய்யணும்கிற நல்ல மனசு - இதையெல்லாம் இளைஞர்கள்கிட்ட உண்டாக்கணும்மா. அதுதான் இப்ப இருக்குற நிலமையிலே ரொம்ப முக்கியம். குலெக்டர் உத்தியோகம் இல்லே. . .

    அமிர்:            ஏழைகளப் பத்தி நெனச்சுப்பாருன்னு எனக்காடா புத்தி சொல்றே?நாம என்ன பணமும் காசுமாவா கொளிச்சோம்?ஏதோ கொஞ்சம் நகைங்க இருந்திச்சு. கொஞ்சம் நெலம் - எங்கப்பா எனக்கு எழுதி வச்சது - இருந்திச்சு. ரெண்டயும் வித்துக் காசாக்கி வட்டிக்கு விட்டு அதவச்சு மானமாக் குடித்தனம் நடத்தினேன். பக்கத்து வீட்டுப் பொன்னாம்மாவுக்கு வட்டி இல்லாம எத்தினிவாட்டி கடன் குடுத்திருக்குறேன்?என்னயப்பாத்தா அப்படிப் பேசறே?

    ரா:      அம்மா!வட்டி வாங்கறதே பெரிய தப்பு. அநியாயம். அது தெரியுமா உங்களுக்கு?

    அமிர்:            ஆமாண்டா?இப்ப பேசமாட்டே?படிச்சுப் பட்டமும் வாங்கிட்டயில்ல?படிச்சுட்டிருந்த காலத்தில இந்த வார்த்தயச் சொல்லியிருந்தியானா, அது நேர்மை. பட்டம் வாங்கிட்டுல்ல சொல்ற?

    [அம்மாவின் நறுக்கென்ற கேள்வி ராஜாவைப் புண்படுத்திச் சிந்தனையைத் தூண்டுகிறது.]

    சே:      (மாறிப் போன ராஜாவின் முகத்தைப் பார்த்து அஞ்சி) அம்ம!நீங்க ஏதோ

    Enjoying the preview?
    Page 1 of 1