Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஐந்து கிராம் நிலவு
ஐந்து கிராம் நிலவு
ஐந்து கிராம் நிலவு
Ebook157 pages39 minutes

ஐந்து கிராம் நிலவு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த ஆணையும் பெண்ணையும் பார்த்ததும் - பரிதியும் சோலையும் மலர்ந்தார்கள். இரண்டு பேர்களின் உதடுகளும் ஒரே நேரத்தில் முணுமுணுத்தன. 'திலக்! அகில்!" லேசர் துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிக் கொண்டு - இருவரும் பரிதியை நெருங்கினார்கள்.
 "இந்திய அரசாங்கத்திற்கு விசுவாசமான இந்த உளவு நாய்களை செக்டார் - ஐந்து ஸ்டேஷனிலிருந்தே பின் தொடர்ந்து வருகிறோம்."
 "நல்ல சமயத்திற்கு வந்தீர்கள்..." சோலை சிரித்தாள்.
 "காசி எங்கே...?"
 "உள்ளே ப்ரோக்ராம் அறையில்... நான் போய் அழைத்து வருகிறேன்..." சோலை உள்ளே போக - திலக், அகில் இரண்டு பேரும் - அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். திலக்கிற்கு முப்பது வயது இருக்கலாம். வளர்ந்த உயரமான உடம்பு. கண்களில் ஒரு குத்துவாளின் கூர்மை. நீல நிறத்தில் இறுக்கமான கால்சராயும், பனியனும் அணிந்திருந்தான். அகில் அளவான உடல் கட்டோடு அழகாய் இருந்தாள். நீள்வட்ட கண்களில் திலக்கிடமிருந்த அதே குத்துவாள் கூர்மை தெரிந்தது. திலக்கைப் போலவே உடை உடுத்தியிருந்தாள். இடுப்பின் வளைவுகளில் கால்சராய் பிதுக்கம் காட்டியது. மார்புகளில் அபார செழுமை.
 காசி உள்ளிருந்து வந்தான் சந்தோஷத்தோடு "அவர்களை கொன்று விட்டீர்களா...? நல்ல காரியம்... செய்தீர்கள்."
 அகில் காசியை ஏறிட்டாள்"காசி! உனக்கு புத்திசாலித்தனம் போதாது... உளவுத் துறை காவலாளிகள் உன்னைப் பின் தொடர்கிறார்கள் என்று தெரிந்த பின்னால் - பரிதியின் வீட்டுக்கு நீ வரலாமா...?"
 "அவர்கள்தான் என்னை பின் தொடரவில்லையே...?"
 "அவ்வளவு சுலபமாக உன்னை விட்டு விடுவார்களா என்ன?"
 பரிதி கேட்டார்.
 "திலக்! அகில்! நீங்கள் எங்கே இவர்களை மோப்பம் பிடித்தீர்கள்...?"
 "செக்டார் - ஐந்து ஸ்டேஷனில்தான். முதலில் காசியைத்தான் பார்த்தோம். அவனுடைய பதட்டம் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மறைவாக நின்று கவனித்ததில் - இந்த உளவு நாய்கள் கண்களுக்கு சிக்கினார்கள். சத்தம் காட்டாமல் பின் தொடர்ந்தோம்... இந்த நிமிஷம் லேசர் பிஸ்டலுக்கு பஸ்பம்..."
 பரிசி சிரித்தார்.
 "நம் இயக்கத்திற்கு ஆயுள் கெட்டி. இந்த இந்திய அரசாங்கத்தின் தலைமையை மாற்றுகிறவரை நாம் சிரஞ்சீவிகள்."
 அகில் கேட்டாள்.
 "அந்த ரோபோட்டை நிர்மாணம் செய்து விட்டீர்களா... பரிதி ஸார்."
 "பிரச்சார ரோபோட்தானே...?"
 "ஆமாம்..."
 "நேற்றுக்கு இரவே அது ரெடி..."
 "பரீட்சித்துப் பார்க்கலாமா...?"
 "தாராளமாக! சோலை! அந்த பிரச்சார ரோபோட்டைக் கொண்டு வந்து... திலக் அகிலுக்கு டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டு...சோலை தலையசைத்துவிட்டு - உள்ளே போய் - நான்கடி உயர ரோபோட்டை நகர்த்திக் கொண்டு வந்தாள். அதன் ஆப்டிகல் லென்ஸை உயிர்ப்புக்கு கொண்டு வந்து - அதன் இருதய பாகத்தில் இருந்த - பேனல் போர்டில் 'ஸ்பீட்' பட்டனைத் தட்டினாள்.
 ரோபோட்டின் தாடைப் பகுதி வேகமாய் அசைய ஆரம்பிக்க - உள்ளிருந்து ஒரு கரகரப்பான குரல் வெளிப் பட்டது. அனைவரையும் ஈர்க்கிற குரல்.
 "ஒரு நிமிஷம் நின்று என் பேச்சைக் கேளுங்கள். அன்பார்ந்த இந்த நாட்டு மக்களுக்கு என் வந்தனம். 2040ஆம் வருஷம் கடைசியாய் நம் நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. அதற்குப் பின்னால் கடந்த பத்து வருஷ காலமாய் தேர்தல் நடத்தப்படவே இல்லை... ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு... இங்கே - இந்த நாட்டில் - ஒரு சர்வாதிகார ஆட்சி அரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த ரகசியம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்...? பிரதமர் தேஜ் மந்திரிசபையை தன் கைக்குள் போட்டுக் கொண்டு - சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நடத்தாததற்கு ஏதேதோ காரண காரியங்களை டெலிவிஷனில் கூறிக் கொண்டிருக்கிறார். அந்தக் காரணங்களை நீங்களும் நம்பிக் கொண்டு... ஆட்டு மந்தையாய் - அவன் பின்னால் போய்க் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மக்களாட்சி வேண்டுமா...? இல்லை தனி மனிதனின் சர்வாதிகார ஆட்சி வேண்டுமா...? இன்றைக்கு நம் நாட்டின் ஜனத் தொகை ஐநூறு கோடி. இந்த ஐநூறு கோடி மக்களையும் - புழுக்களாக எண்ணி ஒரு தனி மனிதன் தேஜ் ஆளலாமா...? ராத்திரி படுக்கைக்குப் போகும் பொழுது யோசியுங்கள். காலையில் ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள். போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர்... வருகிற ஞாயிற்றுகிழமை மாலை ஆறு மணிக்கு - கடற்கரையின் பரப்பில் கூடுங்கள். கடல் அலைகளுக்கு சமமாய் கொந்தளியுங்கள். கோஷியுங்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்ற அணி திரள்வீர் - இப்படிக்கு உணர்ச்சியுள்ள ஒரு இந்தியக் குடிமகன்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223436294
ஐந்து கிராம் நிலவு

Read more from Rajeshkumar

Related to ஐந்து கிராம் நிலவு

Related ebooks

Related categories

Reviews for ஐந்து கிராம் நிலவு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஐந்து கிராம் நிலவு - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    பரிதி, கம்ப்யூட்டர் அறையின் மையத்தில் இருந்தார். சுற்றிலும் அதிசயமான விஞ்ஞானம் சிதறியிருந்தது. ஒரு விநாடிக்கு ஐம்பது மெகா ஃப்ளாப் ஓடக்கூடிய கம்ப்யூட்டர்கள் அவருடைய ஆணைக்காகக் காத்திருந்தன. ஆப்டிகல் காமிராக்கள் பொருத்தப்பட்ட ரோபோட்கள் அவரையே விசுவாசமாய் பார்த்தன. ஒரு மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் கவனமாய் இருந்த பரிதியை - பக்கத்திலிருந்த டெலிபோன் 'முணு முணு' என்று கூப்பிட்டது. ரிஸீவரை எடுத்து பட்டனைத் தட்டியதும் - மானிட்டரின் திரையில் சோலை தெரிந்தாள். சிரித்தாள். அழகான பல் வரிசையில் கேட்டாள்.

    நான் உள்ளே வரலாமா தலைவரே...?

    வா...

    காசி வந்தாயிற்றா...?

    இன்னும் வரவில்லை. அவனுக்கு முக்கியமான ஒரு வேலையை கொடுத்து அனுப்பியிருக்கிறேன்...

    எங்கே...?

    ஏரோடைனமிக்ஸ் நிர்வாகத்தில் ஒரு சிக்கல். சரி செய்யப் போயிருக்கிறான். இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவான்... நீ உள்ளே வா...

    ரிஸீவரை வைத்ததும் மானிட்டரில் சோலையின் அழகான உருவம் வரி வரியாய் கரைந்து போயிற்று.

    சோலைக்காக காத்திருந்த பரிதிக்கு அறுபது வயது இருக்கலாம். அடுத்த வருஷமான 2050 பிறந்தால் அவருக்கு அரசாங்கம் ஓய்வு கொடுத்து விடும். அறுபது வயதுக்குரிய தளர்ச்சி அவரிடம் இல்லை. உடம்பு இன்னமும் கற்பாறை மாதிரிதான் இருந்தது. பல் வரிசையில் எனாமலின் ஆரோக்கியம் தெரிந்தது. மண்டையில் மட்டும் பாதி முடி கொட்டிப் போய் - எவர்சில்வர் பாத்திரத்தின் பளபளப்போடு பாதி மண்டை மின்னியது. கழுத்திலிருந்து முழங்கால் வரை - எந்தப் பிடிப்பும் இல்லாமல் தொள தொளவென்று - ஒரு க்ரே நிற அங்கியைத் தரித்திருந்தார். கால்களில் மிருதுவான ஷூக்களை... மாட்டியிருந்தார்.

    சோலை எலக்ட்ரானிக் கதவை - ஒரு சின்ன சங்கீத சத்தத்தோடு திறந்து கொண்டு உள்ளே வந்தாள். மிக அழகாக இருந்தாள். தாமிர நிற பனியனும் - நீளமான கால்சராயும் தரித்திருந்தாள். உடையில்லாத உடம்பின் பாகங்கள் ஒரு அசாதாரணமான மினுமினுப்போடு இருந்தது. அணிந்திருந்த பனியன் இறுக்கமான மார்புகளைக் காட்ட - தலைக்கேசம் அழகான ஒரு கொண்டையாக மாறியிருந்தது. உடம்பின் சகல இடங்களிலும் இளமைக் கொடி பறந்தது.

    வா... சோலை...

    சாப்பிட்டீங்களா தலைவரே...?

    இல்லை... இனிமேல்தான்...

    ஏன் இவ்வளவு நேரம்...?

    மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் ஒரு மகத்தான சிக்கல். அரை மணி நேரமாய் தேடுகிறேன்... தட்டுப்படவில்லை...

    நான் பார்க்கட்டுமா...?

    வேண்டாம். சர்க்யூட்கள் மகா சிக்கல்... குழம்பி விடுவாய்... எனக்கு ரோஸ்ட் செய்த இரண்டு இறைச்சித் துண்டும். பால் கலக்காத டீயும் வேண்டும். தயாரித்துக் கொடு... சோலை...

    இதோ உடனே... - சொன்ன சோலை சுவரோரமாய் இருந்த எலக்ட்ரோ ஓவனுக்குப் பக்கத்தில் போனாள். பரிதி மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் அந்தச் சிக்கலைத் தேடிக் கொண்டிருந்தபோது - டெலிபோன் மறுபடியும் முணு முணுத்தது. இரண்டே எட்டில் போய் ரிஸீவரை எடுத்தார். மானிட்டர் திரையில் - காசியின் முகம் ஊதா நிற வரிகளில் சிறிது கலவரமாய் தெரிந்தது.

    தலைவரே!

    என்ன காசி...?

    "அரசாங்க காவலாளிகளில் இருவர் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்...

    உளவுத்துறையைச் சேர்ந்தவர்களா...? பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களா...?

    "உளவுத்துறை ,,

    ஆபத்தான விஷயம்...! இப்போது நீ எங்கிருந்து பேசுகிறாய்...

    பாதாள ரயில் பாதையில் நூற்றி பதினாலாவது செக்டார் ஸ்டேஷனிலிருந்து...

    பொது டெலிபோனிலிருந்தா பேசுகிறாய்?

    ஆமாம்...

    இப்போது அந்த உளவுத்துறை காவலாளிகள் எங்கே இருக்கிறார்கள்...?

    என்னை ஜனத்திரளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்... அடுத்த சில நிமிஷங்களில் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள். நிலைமை மிகவும் மோசம். என்ன செய்வது தலைவரே...?

    ஸ்டேஷனில் ஜனத்திரள் இருக்கிறதா...?

    இருக்கிறது...

    அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓடி - அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாதா?

    முடியும் என்று தோன்றவில்லை. லேசர் துப்பாக்கிகளோடு அலைகிறார்கள்... தப்பித்து ஓடினால் நான் பஸ்பம்தான்...

    சரி... ஒரு காரியம் செய்...

    சொல்லுங்கள்...

    ஸ்டேஷன் கடிகாரத்தில் இப்போது நேரமென்ன...?

    ஐந்து முப்பத்தி மூன்று...

    சரியாய்... ஐந்து முப்பத்தைந்துக்கு... ‘செக்டார் ஐந்து' ஸ்டேஷனுக்குப் போகும் ரயில் ஒன்று வரும். அதில் எப்படியாவது தொற்றிக் கொள்...

    அதற்குள் அவர்கள் கண்டுபிடித்து விட்டால்...?

    கண்டு பிடிக்காதபடிக்கு மறைந்து கொள்வது உன் சாமர்த்தியம். நம் லட்சியம் நிறைவேற வேண்டும் என்கிற தாகம் உனக்கு இருக்கிறதல்லவா...?

    அதுதானே என் உயிர் மூச்சு...

    அப்படியென்றால் நீ தப்பித்துத்தான் ஆக வேண்டும்... இன்னும் இருபது நிமிட நேரத்திற்குள் நீ என் முன்னால் - முழுதாய் நிற்க வேண்டும்

    ரிஸீவரை பரிதி வைத்துவிட்டு திரும்ப - பேப்பர் பிளேட்டில் இறைச்சித் துண்டுகளோடு சோலை நின்றிருந்தாள்.

    தலைவரே!

    காசி ஆபத்தில் இருக்கிறான்...

    மானிட்டர் திரையில் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். காசியின் மேல் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி சந்தேகம் ஏற்பட்டிருக்கும்...?

    "ஏரோடைனமிக் நிர்வாகத்தில் உள்ள -

    Enjoying the preview?
    Page 1 of 1