Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pooncholai Kiliye…
Pooncholai Kiliye…
Pooncholai Kiliye…
Ebook384 pages3 hours

Pooncholai Kiliye…

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580109204395
Pooncholai Kiliye…

Read more from Infaa Alocious

Related authors

Related to Pooncholai Kiliye…

Related ebooks

Reviews for Pooncholai Kiliye…

Rating: 4.052631578947368 out of 5 stars
4/5

19 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 4 out of 5 stars
    4/5
    infaa mam novels all are very interesting and very nice. super...

    2 people found this helpful

Book preview

Pooncholai Kiliye… - Infaa Alocious

http://www.pustaka.co.in

பூஞ்சோலைக் கிளியே...

Pooncholai Kiliye…

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

1

பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, சாய்வு கம்பியில் தலை சாய்த்திருந்தான் பிரபாகர். பார்வையை பேருந்துக்கு வெளியே நிலைத்திருந்தாலும், கடந்து செல்லும் எதுவும் அவன் கவனத்தில் பதியவில்லை. இதுவே வேறு நேரமாக இருந்திருந்தால் எப்படியோ? ஆனால், இப்பொழுது அவன் இருக்கும் மனநிலையில் எதுவும் அவனைக் கவர முடியாது.

அவனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன், அப்பா... இந்த இடம் எல்லாம் எவ்வளவு கிரீனா இருக்குல்ல? இந்த புல் எல்லாம் யாருப்பா நட்டா? ரொம்ப அழகா இருக்குப்பா வெளியே தெரிந்த இயற்கை அழகை சிலாகிக்க, அவை அவன் அனுமதியின்றியே பிரபாகரின் செவிகளுக்குள் அவை இறங்கியது.

அந்த வார்த்தைகள், அந்த நிலையிலும் அவன் இதழ்களில் மெல்லிய புன்னகையை தோற்றுவித்தது.

அந்த சிறுவனின் தந்தையோ, அது புல் இல்லடா கண்ணா... வயல்... அந்த சிறுவனின் தந்தை விளக்க முயன்றார்.

வயல்ன்னா...?.

நாம சாப்பிடும் அரிசி இதில் இருந்துதான் கிடைக்கும்....

இப்போ அது எங்கே இருக்குப்பா? எனக்கு காட்டு... மெல்லியதாய் அடம் பிடிக்கும் குரலில் கேட்க, பிரபாகரின் இதழ்களில் புன்னகை விரிந்தது.

இன்னும் கொஞ்ச நாள் போனால்தான் அரிசி... அதாவது நெல் விளையும். நாம அன்னைக்கு மியூசியத்தில் பாத்தோமே... நெல்... அந்த சிறுவனுக்கு புரியவைக்க முயற்சி செய்தார்.

அவர் சொல்வதைக் கேட்ட பிரபாகர் ஒரு நொடி திகைத்து மீண்டும் இயல்பானான். இன்றைய தலைமுறை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கவலை ஒரு நொடி அவனை சிந்திக்க வைக்க அடுத்த நொடி இமைகளை இன்னும் அழுத்தமாக மூடிக்கொண்டான்.

மீண்டுமாக அவர்களது பேச்சை தொடர, அவனது சிந்தைகள் சற்று கலைந்தது. அந்த சிறுவன் உற்சாகமான மனநிலையில் எதையோ கண்டு பிடித்துவிட்ட ஆர்வத்தில்,

அப்பா, அந்த எல்லோ கலர்ல பாத்தோமே அதானே... தன் புரிதலை தந்தைக்கு தெரியப்படுத்த, தந்தையும் மகனும் ஒரு குட்டி உலகத்துக்குள்ளேயே புகுந்துவிட்டாற்போல் இருந்தது.

‘தந்தை மகன் உறவு இப்படித்தான் இருக்குமோ?’ தனக்குள் கேட்டுக் கொண்டான். அந்த உறவைப் பற்றி அவனுக்கு சுத்தமாகத் தெரியாது. தலையை உதறி அந்த நினைவை அகற்றியவன், மீண்டுமாக நனவுலகம் வந்தான்.

பிரபாகர் சிறுவனாக இருந்தபொழுதெல்லாம்... இப்படி வயலில் வேலை பார்க்கையில், ரோட்டில் செல்லும் வாகனங்களை, காரை ‘ஆ’வென வாய் பிளந்து வேடிக்கை பார்த்த நினைவு. ஆனால், இன்றைய தலைமுறை, வயலையும், இயற்கை வளங்களையும், பிரமிப்பாய் பார்ப்பதை நினைத்தால், அழுவதா சிரிப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை.

அவர்களது பேச்சு மேலும் தொடர, அவனால் அதற்குமேல் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. நெஞ்சுக்குள் ஒருவித பாரம் அழுத்த, அதன் கனத்தையும், அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆழமாக மூச்சு எடுத்தவன், அவ்வளவு நேரமாக, அழுத்தமாக மூடி வைத்திருந்த இமைகளை பிரித்து வெளியே வெறித்தான்.

தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பிரிந்து சென்று, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. தனக்கென ஒரே உறவாக இருந்த, பெற்ற தாயை கூட பிரிந்து அப்படி என்ன வனவாசம்? என்று அவனுக்கே தெரியவில்லை. திரும்பி வரவே கூடாது என முடிவெடுத்து சென்றாலும், அவனது வேர் கிராமத்தில் இருக்கையில், அவனால் எப்படி வராமல் இருக்க முடியும்?

‘இந்த பயணம், இப்படியே நீடிக்க வேண்டும், ஊர் வந்து சேரவே கூடாது’ என்ன ஒரு மனம் நினைக்க, மற்றொரு மனமோ, எப்பொழுது ஊருக்குள் காலடி எடுத்து வைப்போம்? என்ன பரிதவித்தது.

அவனது மனமே, அவனுக்கு எதிராக இருப்பதுபோன்ற பிரம்மை. ‘அம்மா என்னை பார்த்தவுடன், என்ன செய்வார்? ஏன் இத்தனை வருடம் என்னை விட்டுப் போயிருந்தாய் என சாடுவாளோ? அடிப்பாளோ?’ தனக்குள் கேட்டுக்கொண்டான்.

அந்த மினி பேருந்து, மெயின் சாலையில் இருந்து பிரிந்து, ஊருக்குள் செல்லும் கிளைச்சாலைக்குள் இறங்க, அவன் தேகத்தின் முடிகள் அனைத்தும் சிலிர்த்து எழுந்தது. மதிய நேரத்து வெயில், அவன் முகத்தை தாக்க, அது அவனுக்கு உறைக்கவே இல்லை.

மாறாக மனதுக்குள் ஒருவித பரவசம், பரபரப்பு, பேருந்தின் சக்கரங்கள் ஏற்படுத்திய புழுதியை கூட, ஆழமாக வாசித்தான். அது அவனது மண். அவன் புரண்டு விளையாடி, தவழ்ந்து நடை பழகி, ஓடியாடிய மண். அவனது உயிரில் கலந்து விட்ட மண்.

‘இதைவிட்டு பிரிந்து இருந்து விடலாம் என நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்’ தன்னையே நொந்து கொண்டான். இன்னும் ஆழமாக மூச்சை இழுத்து, அதன் வாசனையை நுகர்ந்து, இத்தனை வருடங்கள் பிரிந்திருந்த தன் ஏக்கத்தை, அந்த ஒற்றை சுவாசத்தில் ஈடு கட்ட முயன்றான். அது என்ன அவ்வளவு சுலபமா?

அவ்வளவு நேரமாக பேருந்துக்குள் கவனிக்காமல் இருந்தவன், முதல்முறையாக தன் பார்வையை செலுத்தினான். ‘தெரிந்த முகங்கள் எதுவும் இருக்கிறதா?’ என பார்க்க, அந்த பேருந்துக்குள் இருந்த அனைவருமே அவனது சொந்தங்களாக தான் இருந்தார்கள்.

அவர்கள் யாரும் தன்னை கவனித்துவிடக் கூடாது என முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, ஆனாலும் அவனை கவனித்துவிட்டார்கள்.

என்ன பிரபாகர்… இப்பதான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா? உங்க அம்மா என்னவோ, நீ பட்டணத்திலேயே பொழப்ப பாக்கப் போயிட்டன்னு சொன்னா. இனிமே அந்த கிராமத்து பக்கமே தலை வச்சு பார்க்க மாட்டான்னு சொல்லிட்டு போனியாம்… இப்போ என்ன திரும்பி வந்து இருக்க? சற்று கோபமும், உரிமையுமாக கேட்டார் அந்த பெரியவர்.

இந்த பயலுகள ஒரு நாலு எழுத்து, படிக்க வச்சா போதும். உடனே பட்டணத்துக்கு பொழப்ப பாக்க போய்விட வேண்டியது. இத்தனை வருஷம், உன்னை காப்பாத்துன மண்ணு, இனிமே உன்னை காப்பாத்தாமல் போயிருமா என்ன? அவனது பதிலை எதிர்பாராமல் சற்று கோபமாகவே இரைந்தார்.

அவரது கோபத்தில், கொஞ்சம் கூட பாதிக்கப்படாமல் அமைதியாக அவரை ஏறிட்டான். அவரது கோபத்தை விட, அவர் சொன்ன வார்த்தைகள், அதிலும் குறிப்பாக, அவனது தாய் சொன்னதாக சொன்ன வார்த்தைகள் மட்டுமே அவனது செவிகளை நிரப்பியது.

அவன் ஊரை விட்டு கோழைத்தனமாக வெளியேறியதைக் கூட மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல், தன் கௌரவத்தைக் காத்த தாயை எண்ணி கண்கள் கலங்கியது. இந்த வயதான காலத்தில், அவரை தனிமையில் போராட விட்டு ஓடிப்போன தன் கோழைத்தனத்தை எண்ணி மனம் நொந்தான்.

ஆனால் எந்த பழிக்கு ஆளாகக் கூடாது என எண்ணினானோ, அதை சாதித்து விட்ட திருப்தி கொஞ்சம் கூட அவன் மனதில் இப்பொழுது இல்லை. அவனை மீறி, கண்கள் கலங்கும் உணர்வு. இமைகளை கொட்டி, அதைத் தடுத்தவன், "இனிமே இங்கேதான் மாமா இருப்பேன். அந்தப் பட்டணத்து வாழ்க்கை எல்லாம் நமக்கு சரி வராது.

அம்மா கூட சேர்ந்து, விவசாயத்தை பாக்கலாம்னு இருக்கேன். இப்ப சந்தோசம் தானே… தன் கவலையை மறைத்து, அவரிடம் இயல்பாக பேசினான்.

அவரது முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்… எலேய்… நெசமாத்தான் சொல்றியா? இல்லன்னா, என்னை சமாதானம் பண்ண சொல்றியா? எப்படிச் சொன்னாலும் சரி… நீ சொல்ற வார்த்த… அப்படியே வெல்ல மாட்டம் இனிக்குது… இதைக் கேட்டா... உன் ஆத்தா அப்படி சந்தோஷப்படுவா… அந்த கிராமத்து வெள்ளை மனிதரின் சந்தோஷத்தை பார்க்க அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஆனால் தான் செய்துவிட்டுப் போன செயல்களின் பலன்கள் தன்னை எப்படி வந்து தாக்குமோ?’ என எண்ணுகையில் அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை.

இந்த மூன்று வருட தலைமறைவு வாழ்க்கைக்கு என்ன காரணம் என தாய் கேட்கப்போகும் அந்தக் கேள்விக்கான பதில், இந்த நிமிடம் வரைக்கும் தன்னிடம் இல்லை என எண்ணுகையில், அவன் மனதின் பாரம் ஏறியது. பதில் இல்லை என்பதைவிட, அதை சொல்ல முடியாத அவனது நிலை தான் அவனை அதிகம் பயம் கொள்ள செய்தது.

அவன் இறங்க வேண்டிய இடம் நெருங்க, வேகமாக தனது பையை கைகளில் எடுத்துக் கொண்டவன், இருக்கையிலிருந்து எழுந்து முன் படிக்கட்டுக்கு நகர்ந்தான்.

டேய் பிரபாகர் நீயா? என்னடா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்ட? முன்னாடி நல்லா சீம கிடா மாதிரி இருப்ப, இப்ப என்னன்னா, சீக்கு கோழி மாதிரி இருக்க? சற்று அதிர்ச்சியாகவே கேட்டான் அவனது நண்பன் ராகவன்.

நண்பனை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்ச்சி முகத்தில் துலங்க, ராகவா... உற்சாகமாகவே அவனை அழைத்தான்.

அட... என் பேரெல்லாம் கூட உனக்கு ஞாபகம் இருக்கா? நொடித்துக் கொண்டவன், பேருந்தை கவனமாக செலுத்தினான். கொஞ்சம் பிசகினாலும் வயலுக்குள் இறங்கிவிடும் என்பதால் அதில் கவனமானான்.

ராகவா… நீ எப்படிடா இந்த பஸ்சில் ஓடுற? நான் உன்னை கவனிக்கவே இல்லை. நைட்டு வேலை முடிந்தவுடன் வீட்டு பக்கம் வா, நாம பேசலாம்… ஓடும் பேருந்தில் அத்தனைபேர் முன்னால் அவனிடம் எதையும் பேச முடியாது என்பதால் சொன்னான்.

உன் மூஞ்சிலேயே முழிக்க கூடாதுனு நினைச்சேன்… இப்படி வந்து நின்னா என்னதான் செய்யறது? கடைசி ட்ரிப் முடிச்சு, வண்டியை விட்டு வர ராத்திரி ஒன்பது மணி ஆயிடும். நீ போ… தன் கோபத்தை இழுத்து வைக்கவும் முடியாமல், நண்பனிடம் கோபத்தை காட்டவும் முடியாமல் ஒரு மாதிரி முறுக்கிக் கொண்டான்.

அதை உணர்ந்த பிரபாகர், உன்கிட்ட நெறைய பேசணும்டா… நீ கண்டிப்பா வர… சொன்னவன், தனது ஊர் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான். கூடவே மேலும் பலரும் இறங்க, அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரித்துவிட்டு, தன் வீடு இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.

அவன் நடந்த பத்தடி தூரத்தில், அவன் படித்த பள்ளிக்கூடம் பார்வைக்கு கிடைக்க, சில நொடிகள், அந்த கேட்டை பார்த்தவாறே நின்றுவிட்டான். பிள்ளைகளின் சத்தம், வீதி வரைக்கும் கேட்க, அவனது வசந்த காலங்கள், நண்பர்களுடனான, அரட்டை விவாதம், செல்ல சண்டைகள் என ஒவ்வொன்றாக அவன் நினைவிற்கு வந்து போனது.

என்ன பிரபாகர்… திருப்பியும் பள்ளிக்கூடம் போக ஆசையா இருக்கா என்ன? எதிரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கண்ணபிரான் குரல் கொடுக்க, அவரை பார்த்து புன்னகைத்தான்.

பேக் நிறைய பணமா வச்சுருக்க? உன் ஆத்தா, நீ கோடி கோடியாய் சம்பாதிக்க, பட்டணம் போயிருக்கன்னு பீத்திகிட்டு திரிஞ்சுச்சு... சற்று, நக்கலாகவே கேட்டார்.

இப்பல்லாம் பொட்டியில் பணம் எடுத்துட்டு வர வேண்டியதில்லை, ஒரு சின்ன கார்ட் போதும். அதில் நிறைய பணம் வைத்திருக்கேன்... உங்க கடைய விக்கிறதா இருந்தா இப்பவே வாங்கிக்கறேன்… எம்புட்டுன்னு சொல்லுங்க… அவன் சொல்ல, அவர் முகத்தில் ஒரு அதிர்ச்சி விரவியது. அதைப் பார்த்தவாறே தன் நடையை தொடர்ந்தான்.

‘இந்த ஊரில் இருந்த அனைவரையும், அவர்களது கேள்விகளையும், ஏளனங்களையும், தன் தாய் எப்படி எதிர்கொண்டிருப்பார்’ என்பதை நினைக்க அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை.

கால்கள் தாமாக அந்தப் புழுதி சாலையில் நடக்க, சட்டென இரண்டாக பிரிந்து நின்ற அந்த சாலையில், அவனது கால்கள் அவனை மீறி வேரூன்றியது. எவ்வளவு தடுத்தாலும் முடியாமல், அவனது பார்வை இடப்பக்கம் பாய, வயல் வரப்பு, வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, அதையும் கடந்து அவனது பார்வை பயணித்தது.

‘பார்வையைத் திருப்பு… திருப்பு…’ அவனது அடிமனம் அவனை எச்சரிக்க, அதை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல், அவளது வீடு பார்வைக்கு கிடைத்துவிடாதா?’ அவன் மனம் ஏங்கியது.

‘அவள் வேண்டாம் என விட்டுவிட்டுத் தானே ஓடிப் போனாய்’ அவன் மனசாட்சி அவன் முகத்தில் காறி உமிழ, அதை கொஞ்சம் கூட அவன் கண்டுகொள்ளவில்லை.

‘எப்படி இருப்பாள்? இப்போது இங்கே இருப்பாளா? இல்லையென்றால் கணவன் வீட்டிலா?’ எவ்வளவு முயன்றும் அவன் மனம் அவளையே முதலில் தேட, உச்சி வெயில் தலைக்குமேல் தகிப்பதை, கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல், தவித்துப் போய் நின்றிருந்தான்.

‘இத்தனை வருடங்களில், அவளை மறந்து விட்டேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேனா?’தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

‘அவளைத்தான் பார்க்க முடியாது… அவள் வீட்டையாவது ஒருமுறை பார்த்துவிடேன்…’ காதல் கொண்ட மனம் அவனை நச்சரிக்க, இரண்டு எட்டுகள் எடுத்து வைத்துவிட்டவன், இறுதி நொடியில் சுதாரித்து, வலப்பக்கம் திரும்பி நடந்தான்.

கிட்டத்தட்ட, ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒற்றையடிப் பாதையில் பிரிந்து, வயல்வெளிகளை கடந்து வந்தவன், அந்த ஓட்டு வீட்டை கண்டுகொண்டான். வீட்டைச் சுற்றி அமைத்திருந்த மூங்கில் வேலி, வைக்கோல் போர், என எதுவுமே அங்கே மாறி இருக்கவில்லை.

வீட்டை நெருங்க நெருங்க, காலில் இரும்புக் குண்டை வைத்து கட்டிவிட்டார் போல் நகர மறுத்தது. முயன்று நடந்தவன், மூங்கில் வேலியை திறந்து உள்ளே நுழைய, வவ்… வவ்… என குலைத்துக்கொண்டு ஓடி வந்தது அந்த நாய். அவனைப் பார்த்தவுடன், வ்...வ்… ஒரு மாதிரி குழைந்து, குலைப்பா, அழுகையா என தெரியாமல் சத்தம் எழுப்பியது.

மணி… எப்படிடா இருக்க? என்னை தெரியுதா? தன் மேலேறிய நாயே ஒரு கரத்தால் பிடித்து நடத்தியவாறு முற்றத்தைக் கடந்து வந்தான்.

கூடத்தில் அமர்ந்து, பயிரை புடைத்துக்கொண்டிருந்த வேலம்மாளின் கரம் ஒரு நொடி அப்படியே நின்று விட, அடுத்த நொடி அவர் கையிலிருந்த முறம் தரையில் விழுந்து, பயிர்கள் உருண்டு தரையில் ஓடியது. அடுத்த நொடி எதுவும் நடவாதது போல முறத்தை அவரது கரங்கள் கையில் எடுத்துக் கொண்டன.

முன்னை விட வேகமாக அவரது கரங்கள் செயல்பட்டாலும், கண்களில் கண்ணீர் வழிந்தது. பிரபாகரின் அருகிலிருந்து ஓடி வந்த நாய், வேலம்மாளின் புடவை தலைப்பை பிடித்து இழுக்க, அவரோ கொஞ்சம் கூட அசையவில்லை.

அதை பார்த்த மணி, வேலம்மாளின் கரத்திலிருந்த முறத்தை தட்டிவிட, மணி வெளியே போ… யாரும் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லு… மணியிடம் கத்தியவர், தன் வேலையில் கவனமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்.

ஆனாலும் செவிகள் இரண்டும், தன் மகனது குரலைக் கேட்க தவித்துக் கொண்டிருந்தது. தாயின் பேச்சு அவன் காதில் விழுந்தாலும், அதை கண்டுகொள்ளாமல், திண்ணையில் செருப்பையும், பேகையும் வைத்தவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அம்மா… அவன் அழைக்க அடுத்த நிமிடம், முறத்தை பட்டென தரையில் வைத்தவர், விருட்டென எழுந்து தன் அறையில் புகுந்து கதவை சாத்திக் கொண்டார். அவரது கோபத்தையும் ஏச்சுக்களையும் எதிர்பார்த்து வந்தவனுக்கு அவரது இந்த பாராமுகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2

இருள் பிரியாத காலைப் பொழுது... புல்லின் நுனியில் பனித்துளிகள் இன்னும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க, அடுப்பங்கரைக்குள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் மதி. காலையில் எழுந்தது முதல் அந்த வீட்டில் ஒரே ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது.

புஷ்பம்... நான் சொன்ன வேலையைச் செய்யாமல் நீ என்ன பராக்கு பாத்துட்டு இருக்க? ராத்திரி புருஷன் கூட போட்ட சண்டையை மனசுக்குள் ஓட்டிப் பாத்துகிட்டு இருக்கியா என்ன? வழக்கம்போல் நீதானே ஜெயிச்சிருப்ப? அடுப்படியில் தன்னை மறந்து நின்ற புஷ்பத்தின் தோளில் இடித்தாள் அந்த வீட்டு மருமகள்... இன்றைய மகாராணி மதி.

அவள் இடித்த இடியை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல்... இந்நேரம் எதுக்கு அந்தாளை ஞாபகப்படுத்துற? சலித்துக் கொண்ட புஷ்பம், தன் கை வேலையில் கவனமானாள்.

என்ன நேத்து புருஷனுக்கு விட்ட அடி கொஞ்சம் கூடிப் போச்சோ? ஆள் எழுந்தானா இல்லையா? தன் நக்கலைத் தொடர்ந்தாள்.

அப்படில்லாம் எதுவும் இல்லை... வெள்ளனே எழுந்து வயலுக்கு கிளம்பிட்டார் பட்டென பதில் கொடுத்தாள்.

அப்போ புருஷனை அடிச்சன்னு ஒத்துக்கற... அவளைச் சீண்ட,

உனக்கு இருக்க எகத்தாளம்... என் புருஷனை இழுக்கலன்னா உனக்கு பொழுதே போவாதே... அந்தாளை நான் ஏன் அடிக்கப் போறேன்? அவரு என்னைய அடிக்காம இருந்தா போதாது... சிலுத்துக் கொண்டாள்.

"உன் புருஷனை நான் ஏன் இழுக்கப் போறேன்? வெடுக்கென கேட்டவள்,

"புருஷன் பேச்சுன்னா மட்டும் தாங்கிகிட்டு பேச வருவியே... முதல்ல சொன்ன வேலையைச்செய்... இட்லியை சின்னதா ஊத்து... உன் சைசுக்கு ஊத்தாதே... சட்னியில் உப்பை பாத்து போடு... உன் புருஷன்மேல் இருக்கும் கோபத்தை எங்க மேலே காட்டாதே...

சாம்பாருக்கு பெருங்காயம் போட்டியா இல்லையா? ஐயாவுக்குவாயுத் தொல்லை இருக்கு... நினைவிருக்கா? நீ பாட்டுக்கு கனா கண்டுகிட்டு சமைக்காதே... பால்ல சரியான அளவில் தண்ணி கலந்தியா? வீட்டு மாட்டு பசுன்னு கள்ளிச் சொட்டு மாதிரி காபி கலக்காதே... பெருசுங்களுக்கு ஒத்துக்காது... மதி தன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த புஷ்பத்துக்கு மூச்சடைத்தது.

எம்மா... கொஞ்சம் மூச்சு விட்டு பேசும்மா... எனக்கு பகீர்ன்னு இருக்கு... அவள் இடைபுக,

ஏன்... நான் மூச்சடைச்சு விழுந்தா உன்மேல் பழி விழும்னு பயப்படுதியோ? இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்க,

திக்கென நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள், பொழுது விடியிற நேரத்தில் என்ன பேச்சுத்தா பேசுற? என்கிட்டே ஒருக்கா சொன்னா போதாதா? தினத்துக்கும் பாடம் எடுக்கணுமா? எல்லாம் எனக்கே தெரியும்மா. நான் என்ன இன்னைக்கு நேத்தா இங்கே வேலை செய்யறேன்... சிறு கவலையும், கோபமும் அவள் பேச்சில் எட்டிப் பார்த்தது.

தினத்துக்கும் சொன்னாக் கூட ஏதாச்சும் ஒண்ணை ஏறுக்கு மாறா தானே செய்து வைப்ப... அதான் தினமும் சொல்றேன் மதி விடுவதாக இல்லை.

ஒருக்கா ஒரு வேலை சொல்லும்மா... மொத்தமா சொன்னா மறந்து போகுதா இல்லையா... நொடித்துக் கொண்டாள் புஷ்பம்.

என்னது மறந்து போகுதா? ஒரு வேலை சொன்னா... அதைச் செய்யாமல்... உனக்கு இந்த வாய் மட்டும் இல்லன்னா நீ எங்கேயும் குப்பை கொட்டிக்கிட மாட்ட... சுருக்கா செய்... அவளை விரட்டினாள்.

ஒரு வேலையா? வாய் அலறியதை மதிவின் காதுக்குச் சென்றுவிடாமல் சாமர்த்தியமாக மனதுக்குள் அலறிக் கொண்டாள். பிறகு அதற்கு யார் அவளிடம் பாட்டு கேட்பதாம்?

அடுப்பில் பொங்கிய பாலில் பாதியை இறக்கிவிட்டு, மீதிப் பாலில் சரியான அளவில் தண்ணீர் சேர்க்க, அதில் டீத்தூளை போட்டு, பாதி இனிப்புக்கு சக்கரை சேர்த்து மிதமான சூட்டுக்கு ஆற்றி எடுத்தவள், இரு கப்பில் அதை ஊற்றி எடுத்துக் கொண்டு பெரியவர்களின் அறைக்குச் சென்றாள்.

அவள் செல்லவே, ‘என்னதான் கோவக்காரியா இருந்தாலும் பெரியவங்களை பாத்துக்கிடுததில் இவளை அடிச்சுக்க யாராலும் முடியாது. இவ மட்டும் இல்லன்னா...’ மனம் அதற்குமேலே யோசனையில் மூழ்காமல், வேலை அவளை இழுத்துக் கொண்டது.

மதி பெரியவர்களின் அறைக்கதவை இருமுறை தட்ட, மூன்றாவதாக அவள் தட்டுவதற்கு முன்னர் அறைக்கதவு திறந்து கொண்டது. கதவைத் திறந்த பெரியவள் நாயகியிடம் கப்பை நீட்டாமல், அறைக்குள் நுழைந்து, அங்கே இருந்த டீபாவின்மேல் இரு கப்பையும் வைத்தவள், படுக்கையில் எழுந்து அமர்ந்த பெரியவரை சற்று கோபமாகப் பார்த்தாள்.

கூடவே நாயகியையும் பார்க்க, நாயகியின் பார்வை அவளைச் சுட்டது. அதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல், ஐயா... இன்னைக்கு லோடு ஏத்துற வேலையைப் போய் பாக்கச் சொன்னேனா இல்லையா...? அவரிடம் கேட்க,

இதோ இப்போ போறேம்மா... அவர் பொறுமையாக பதில் சொல்ல, நாயகிக்குதான் ஆத்திரமாக வந்தது.

‘நான் பாத்து வளந்த சிறுக்கி என்ன பேச்சு பேசுதா...’ கோபமாக எண்ணிக் கொண்டாலும், வாயைத் திறந்து அவரால் சொல்லிவிட முடியவில்லை. தப்பித்தவறி சொல்லிவிட்டால், அதற்கும் வாயை மூடாமல் பதிலடி கொடுப்பாள் என்பதால் தன் வாயை இறுக மூடி வைத்துக் கொண்டார்.

ஐயா குளியலறைக்கு எழுந்து செல்லவே... ஏண்டி... வயசான காலத்தில் எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விட மாட்டியா? அந்த டீத் தண்ணியை வெளியில் வச்சே என் கையில் கொடுக்குறது... அதென்ன ரூமுக்குள் வர்ற பழக்கம்? சற்று கோபமாகவே கேட்டார்.

ஏன்... உங்க கூடலை பாதியில் கலச்சுபுட்டனாக்கும்? பட்டென கேட்க, நாயகி குளியலறையின் கதவை மின்னல் வேகத்தில் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

கூடவே, ‘இவகிட்டே வாயைக் குடுக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் முடிய மாட்டேங்குதே...’ மானசீகமாக தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.

குளியலறையின் கதவு பூட்டியிருக்கவே ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டவர், முருகா... காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா? நீ ‘போ’த்தா... நானும் விரசா வர்றேன்... அதற்குமேல் அவளை பேசாவிட்டால் இன்னும் என்ன கேட்டு வைப்பாளோ என்ற பீதி அவருக்கு.

‘அது... அந்த பயம் இருக்கட்டும்’ மிதப்பாக ஒரு பார்வை பார்த்தவள்,

பின்னாடி கீரை பிடுங்கறாங்க... கட்டு சரியா போடுறாங்களான்னு பாருங்க... கூட ஒரு ஆள் இல்லன்னா இஷ்டத்துக்கு கட்டு போடுவாக அவருக்கும் ஒரு வேலை சொல்லிவிட்டே அங்கிருந்து அகன்றாள். அவள் செல்லவே, கதவை சாற்றியவர், கணவன் வெளியே வரக் காத்திருந்தார்.

‘ஹப்பா... ஆளுக்கொரு வேலை சொல்லாமல் இருக்க மாட்டா’ மனம் அதன் போக்கில் எண்ணிக் கொண்டது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் வரைக்கும் நாயகியின் ராஜ்ஜியம் மட்டுமே அங்கே அரங்கேறியது. என்றைக்கு மதி அந்த வீட்டுக்கு அடியெடுத்து வைத்தாளோ, அடுத்த நாள் முதல் அவளது அரசாங்கமே அங்கே ஆட்சியைப் பிடித்து விட்டது.

எழுந்த பெருமூச்சை அவர் வெளியேற்ற, நாயகியின் கணவர் ஐயா வெளியே வந்தார். அவரை அனைவரும் ஐயா என அழைக்கவே, அவரது பெயரை அவரைக் கேட்டால் கூட அவருக்குமே இப்பொழுது தெரியாது.

ஐயா துவாலையால் முகம் துடைக்க, அவரது கரத்தில் டீ கப்பை எடுத்துக் கொடுத்தவர், என்ன பேச்சு பேசுறா பாத்தீங்களா? இதுக்குதான் இவ வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுகிட்டேன், அப்பனும் மவனும் எங்கே என் பேச்சை கேட்டீங்க? வழக்கமான பல்லவியை நாயகி பாட, டீயை ஒரே மடக்கில் குடித்தவர், தன் சட்டையை அணிந்துகொண்டார்.

அவ இந்த வீட்டுக்கு வந்ததில் இப்போ என்னத்த குறைஞ்சு போச்சாம்? மனைவியிடம் திருப்பிக் கேட்க, மருமகள்மேல் காட்ட முடியாத கோபம் அவர்மேல் திரும்பியது.

என்னத்த வாழுதாம்? மூணு வருஷம் ஆச்சு... இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வந்துதா? அவரிடம் கேட்க, மனைவியின் கேள்விக்கு பதில் கொடுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை.

இப்பொழுது அதைப்பற்றி துவங்கினால், மனைவி எப்பொழுது முடிப்பாள் என்பதும் அவருக்குத் தெரியாது என்பதால், தன் வாயை திறக்கவே இல்லை. புத்திசாலி கணவர்கள் இப்படித்தானோ?

"ம்... இப்போ கேட்டது உங்க காதிலேயே விழுந்துருக்காதே. அப்பனுக்கும் மவனுக்கும் எதில் ஒத்துமை இருக்கோ இல்லையோ, இதில் இருக்கு. அவளைப் பத்தி என்னத்த சொன்னாலும், எருமை மாட்டின்மேலே மழை பெஞ்சா

Enjoying the preview?
Page 1 of 1