Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Thol Sera Aasaithan
Un Thol Sera Aasaithan
Un Thol Sera Aasaithan
Ebook332 pages2 hours

Un Thol Sera Aasaithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரயில் பயணத்தில் சந்திக்கும் நாயகன் தமிழும் நாயகி பாரதியும், ஒரே பணியிடத்தில் மீண்டும் சந்திக்கின்றனர். இருவருக்குமிடையே நட்பு மலர்கிறது. தமிழுக்கு நட்பு நேசமாக மாற, அவன் அதை வெளிப்படுத்தும்போது, அவள் உறுதியாக மறுக்கிறாள். அவளுடைய கடந்த காலம் அறிந்து அதிர்ச்சியானாலும், தமிழ் அவளை மணப்பதில் உறுதியாக நிற்கிறான். ஆனால், பாரதி அவனை விட்டு விலகிச் செல்கிறாள். நேசமிருந்தும் அவனை ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் என்ன என்பதை கதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580172210513
Un Thol Sera Aasaithan

Read more from Premalatha Balasubramaniam

Related to Un Thol Sera Aasaithan

Related ebooks

Reviews for Un Thol Sera Aasaithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Thol Sera Aasaithan - Premalatha Balasubramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன் தோள் சேர ஆசைதான்

    Un Thol Sera Aasaithan

    Author:

    பிரேமலதா பாலசுப்ரமணியம்

    Premalatha Balasubramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/premalatha-balasubramaniam

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 1

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

    அம்மு... இப்போ கூட ஒன்னுமில்லடா... இறங்கி வந்துடு... நீ சொல்றபடியே கேட்கிறேன்... இங்கேயே எங்களோடவே இருந்துடுடா...

    தன்னுடைய சகோதரன் விவேகானந்தன், ரயில் கிளம்பும் நேரத்துக்கு சற்று முன்பு கெஞ்சியது பாரதியின் செவிகளில் எதிரொலிக்க, அவளுக்குமே ஒரு கணம், சங்கிலியைப் பிடித்திழுத்து வண்டியை நிறுத்தி விட்டு, அண்ணனோடு வீட்டுக்கு சென்று விட்டால் என்ன என்று தோன்றத் தான் செய்தது.

    ஒரு கணம்தான்! அடுத்த கணமே தன்னை சமாளித்து கொண்டவள், ச்சே... வர வர மனம் பலகீனம் அடைந்து கொண்டே இருக்கிறது! அப்பா கற்றுக் கொடுத்த மனோ தைரியம் எல்லாம் எங்கே போயிற்று பாரதி? என்று தன்னையே அதட்டிக் கொண்டாள்.

    அப்பா... நான் போகும் இடத்தில் நீங்கள்தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்! என்று வேண்டியபடியே, தந்தை எப்போதும் முணுமுணுக்கும் முருகன் துதியை மெல்லியக் குரலில் சொன்னவளின் மனம் அமைதிப் பட்டது.

    அடுத்த ஐந்து நிமிடத்தில் அண்ணன் கைப்பேசியில் அழைத்து, அம்மு... அடுத்த ஸ்டேஷனில் இறங்கிடறியா? நான் வந்து கூட்டிட்டு போயிடறேன்! என்ற போது அவளுக்கு புன்னகை மலர்ந்தது.

    இனிமேல் நான் கோயம்புத்தூர் போய் இறங்கிற வரை, நீ போன் செய்ய கூடாது. நீ போன் செய்தாலும் நான் எடுக்க போறதில்லை...நல்ல பையனாய் அண்ணியைக் கூட்டிக் கொண்டு வெளியே போயிட்டு வா... நானே கோயம்புத்தூர் போய் இறங்கியதும், உன்னைக் கூப்பிடறேன். இன்னொரு முறை நீ போன் செய்தால், நான் போனை அணைத்து வைச்சுடுவேன்! என்று உறுதியான குரலில், அவனை மிரட்டினாலும் அண்ணனின் அன்பில் மனம் நெகிழவே செய்தது.

    பாரதியின் சகோதரன், பிரபல கண் மருத்துவன். தங்கையை விட ஐந்து வயது பெரியவனாக, மருத்துவம் படித்து ஊரார் மதிக்கும் மருத்துவனாக இருந்தாலும், தங்கை என்று வரும்போது, அவன் குழந்தையாக மாறிப் போவதும், பாசத்தைப் பொழிவதும், அவளுக்கு பெருமைதான் என்றாலும், தன் பொருட்டு, அவன் சந்தோஷம் கெடுவதைக் காணச் சகிக்காமல்தான், பாரதி சென்னையை விட்டு கிளம்புவே முடிவு செய்தாள் எனும்போது, சகோதரனின் வேண்டுகோளுக்கு, அவளால் எப்படி செவி சாய்க்க முடியும்?

    தன் நலனை விட தங்கையின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த சகோதரனுக்கு உதவி செய்ய இயலவில்லை என்றாலும், உபத்திரவமாக இருக்க கூடாது என்றுதான், கோயம்புத்தூரில் தன் தோழி வேலை செய்யும் கல்லூரியிலேயே, அவள் உதவியோடு வேலை தேடிக் கொண்டு விட்டாள்.

    இரண்டு நாட்களுக்கு முன்புதான் அண்ணனிடமும் அண்ணியிடமும் விஷயத்தைச் சொன்னாள். முன்பே சொன்னால், தன்னிடம் மிகுந்த பாசம் வைத்திருக்கும் அவ்விருவரும், அனுமதி தர மாட்டார்கள் என்பது அவள் அறிந்ததுதானே!

    அவள் என்னதான் திட்டமிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர் சொன்னாலும், விஷயம் தெரிந்ததும், அவளது அண்ணன் அனுமதி தருவதாயில்லை!

    அண்ணி கங்காவோ, என்னால்தானே இந்த முடிவு எடுத்தாய்? என்று அடி பட்ட பார்வை பார்த்தாள்.

    பாரதி தன் முடிவில் உறுதியாக இருப்பதை உணர்ந்த பிறகு, சரி... அப்போ நானும் அண்ணியும் உன் கூட வருகிறோம்! என்றுதான் விவேகானந்தன் சொன்னான்.

    இருவரையும் சமாதானப் படுத்த முயன்று, தோற்று, இப்போ என்னை போக விடலை என்றால், எங்கே போகிறேன் என்று சொல்லாமலே வேறு எங்கேயாவது கிளம்பி விடுவேன்! என்று மிரட்டித்தான் இருவரையும் தன் முடிவுக்கு சம்மதிக்க வைத்தாள்.

    அவள் அப்படிச் சொன்ன போது, அண்ணன் அதிர்ந்து போய் பார்த்த பார்வை, இப்போதும் அவளுக்கு வருத்தத்தைத் தந்தது.

    அவளுக்கு மட்டும், இருக்கும் ஒரே உறவான, அன்பான சகோதரனைப் பிரிந்து செல்வது உவப்பாகவா இருக்கிறது?

    இப்படி அண்ணனைப் பிரிந்து வேறிடம் செல்வாள் என்று அவள் நினைத்திருக்கவில்லையே? என்று எண்ணும்போதே, இது மட்டுமா? அவள் வாழ்வில், அவள் கனவிலும் நினைக்காததெல்லாம் நடந்து விட்டது.

    இனி வரும் காலம் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போதே மனம் தளர்ந்து போகிறது.

    ஒரு மெல்லியப் பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு, தந்தையின் நினைவு வந்தது.

    தந்தை இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் மனம் இப்படி அடிக்கடி அலைபாயாமல் அமைதியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

    அவளது தந்தை எப்பேர்ப்பட்ட உன்னதமான மனிதர்!

    பாரதியின் தாய் சிவகாமி இறந்த போது, பாரதிக்கு ஐந்து வயது.

    பாரதி பிறந்தது முதலே, சிவகாமிக்கு உடல் நலம் குன்றித்தான் இருந்தது.

    அன்னையின் சீராட்டுதல் அவளுக்கு என்றுமே கிடைத்ததில்லை.

    ஆனால், அந்த ஏக்கம் அவளைப் பாதிக்காத வண்ணம், தந்தை சத்தியமூர்த்தி, தாயுமானவராகவே இருந்தார்.

    உடல்நலம் குன்றி இருக்கும் மனைவிக்கு பணிவிடை செய்து கொண்டு, மகனையும் மகளையும் எந்தக் குறையும் இல்லாமல் அவர் வளர்த்த விதம், வேறு யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று!

    மனைவி மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தவர் என்றாலும்,, மனைவியின் பிரிவு தந்த வேதனையைக் கூட, தன் மக்களுக்காக உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு இருந்தவர் அவர்!

    தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து எதையும் தனக்கு செய்ய முடியாதிருந்த காரணத்தாலோ, தாய் அன்பை உணராத காரணத்தாலோ, சிவகாமி இறந்த போது ஐந்து வயது பாரதி, தன் தாயின் இழப்பில் வேதனையை உணரவில்லை!

    வெளிப் பார்வைக்கு அமைதியாக இருந்தாலும், சில நேரங்களில் மனைவியின் இழப்பு தந்த வேதனையில், வெறித்து பார்த்த படி அமர்ந்திருக்கும் தந்தையின் தோற்றம்தான் அவளுக்கு வேதனையாக இருந்தது.

    அவர் அவ்வாறு இருக்கும் நேரங்களில், தன் பிஞ்சு விரல்களால், தந்தையின் கன்னத்தை வருடியபடி, என்னப்பா? என்று பயந்த குரலில் பாரதி கேட்கும்போதே, இயல்பு நிலைக்கு திரும்பி விடும் சத்தியமூர்த்தி, எதுவும் இல்லடா கண்ணம்மா! என்று அவளைத் தூக்கி முத்தமிடுவார்.

    தன் வேதனை தன் மக்களைப் பாதிக்கிறது என்று உணர்ந்து, தன் வேதனையைத் தனக்குள் புதைத்துக் கொண்ட அற்புத மனிதர் அவர்.

    சிவகாமியின் தாய் தந்தையரே கூட, குழந்தைகளுக்காகவேனும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தியதைக் காதில் வாங்காமல், உங்களால் முடிந்தால், குழந்தை வளர்ப்பில் எனக்கு துணையாய் இருங்கள்! என்று உறுதியாய் இருந்தவர். அவர்கள் இறப்புக்கு பின்னும், தனக்கென்று ஒரு துணை தேடாமல் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்தவர் அவர்.

    தாய் இல்லை என்று உணராதவண்ணம் பாரதி வளர்ந்ததற்கு, அவள் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்த அவளது அண்ணனும் ஒரு முக்கிய காரணம்!

    சத்யமூர்த்தி மகனிடம் பாசம் மிகுந்தவராக இருந்தாலும், விவேகானந்தனுக்கு அன்னை மேல் கூடுதல் பாசம். பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு ஓடி வரும் பிள்ளையைக் கண்டதும், ஏற்கனவே ஒளி வீசிக் கொண்டிருக்கும் சிவகாமியின் முகம் மேலும் ஒளிரும் என்று அண்ணன் அடிக்கடி சொல்லுவான்.

    ராஜாக் கண்ணு... இன்னைக்கு பள்ளிக் கூடத்தில என்ன புதுசா கத்துக்கிட்டீங்க? என்று கேட்டவாறே, அவனுக்கு பிடித்த பண்டங்களைக் கொடுப்பாராம்.

    அவனும் கையை ஆட்டிக் கொண்டு, பள்ளியில் நடந்ததை எல்லாம் விவரிப்பான்.

    அன்னையின் உடல் நலக் குறைவுக்கு பிறகு, தன் பள்ளிக் கதையெல்லாம் கேட்பதற்கு ஆளில்லாமல், அந்த பிஞ்சு மனதில் ஏக்கம் கூடி இருந்தது.

    அவனது தேவைகள் எல்லாவற்றையும் எந்தக் குறையும் இன்றி தந்தை நிறைவேற்றினாலும், அன்னை தனக்கே தனக்கென்று தந்து வந்த முக்கியத்துவம் குறைந்ததில் அந்தக் குழந்தை வாடிப் போயிற்று.

    அன்னையால் தன்னிடம் இனிமேல் பழையபடி பேச முடியாது எனபதை உணர்ந்து, மனதளவில் ஏங்கி இருந்தவனுக்கு, தன் திராட்சை கண்களால் அவனை விழித்து பார்த்து, பொக்கை வாய் திறந்து சிரிக்கும் குழந்தை பாரதி மருந்தாக இருந்தாள் என்றாள் அது மிகையாகாது.

    தன் அன்னையின் ஜாடையில் இருந்த பாரதியிடம் அமர்ந்து பேசும்போது, அவனுக்கு என்னவோ தன் அன்னையிடம் பேசுவது போலவே இருக்கும்! தன் ஏக்கத்தைக் குறைத்த பாரதியின் மேல் அவனுக்கு பாசம் மிகுதியாயிற்று.

    தங்கை பிறக்கும் வரை, ஐந்து வருடங்கள் ஒற்றைப் பிள்ளையாய், தாயின் அன்பில் திளைத்திருந்தவனுக்கு, அந்த வயதிலேயே, தனக்கு கிடைத்த தாய்ப் பாசம் எனும் பொக்கிஷம் தங்கைக்கு கிடைக்கவில்லை என்று புரிய, அவனே அவளுக்கு தாயாகிப் போனான் என்றுதான் சொல்லவேண்டும்...

    அவர்களது தந்தை சத்தியமூர்த்தி, மகனுக்கும் மகளுக்கும் நல்ல தந்தையாக மட்டுமன்றி, நல்ல தோழனாகவும் இருந்தார். தன்னிடம் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசலாம், விவாதிக்கலாம் என்ற நம்பிக்கையை, அவர்களிடம் வார்த்தையால் அன்றி செயலால் விதைத்து இருந்ததால், மக்கள் இருவருக்கும் அவருடன் எதைப் பற்றியும் பேசுவது இயல்பாக இருந்தது.

    ஒரு கால கட்டத்தில் பாரதி, தந்தையிடம் அவர் ஏன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூட கேட்டிருக்கிறாள்! அந்த அளவுக்கு அவர்களுக்கிடையே தோழமை நிறைந்து இருந்தது.

    உங்களுக்கு அப்ப அப்படி ஒன்னும் அவ்வளவு வயசாகிடலை! உங்களுக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோணலையாப்பா? என்ற மகளின் கேள்விக்கு, புன்னகையுடன் அவர் சொன்ன பதிலில், அவர் மேல் அவள் கொண்டிருந்த மரியாதை மேலும் பெருகிப் போனது.

    கண்ணம்மா... உங்க அம்மா கூட நான் வாழ்ந்தது குறைந்த காலமா இருக்கலாம்... ஆனால் அது ஒரு அழகான கவிதை மாதிரி என் மனதில் பதிந்து போயிடுச்சு... அவள் உயிரோடு இல்லை என்றாலும், எப்பவும் உணர்வால் என் மனதில் நிறைஞ்சு இருக்கா... அவள் இல்லை என்று மனசு உணர்ந்தால் தானே, மனசு இன்னொரு துணையைத் தேடும்? அத்தோடு உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் அவளைப் பார்க்கிறேன் எனும்போது இன்னொரு துணைக்கு என்ன அவசியம்?

    மனைவி இருக்கும்போதே இன்னொரு துணை தேடுபவர்களும், மனைவி இறந்த ஆறு மாதத்துக்குள்ளாகவே புது மாப்பிள்ளையாகத் துடிப்பவர்களும் நிறைந்திருக்கும் உலகில், மனைவி இறக்கும் தருவாயில், இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தும், தனியாளாய் தங்களை வளர்க்கும் தந்தையின் மேல் மரியாதை மிக, நீங்க ரொம்ப கிரேட் பா! என்று மனம் நெகிழ சொன்ன மகளின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து தலையைப் பரிவுடன் வருடியவர்,

    இங்கே யாரும் கிரேட் இல்லை... அந்தக் கடவுளைத் தவிர! என்று விட்டு, நான் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதால் கிரேட் என்றும், அப்படி இன்னொரு கல்யாணம் செய்துகிறவங்களை மோசமானவர்கள் என்றும் சொல்ல முடியுமா சொல்லு? அது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது! அவங்களோட தனிப்பட்ட விஷயம், பாரதி! யாரையும் குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை! என்று அமைதியான குரலில் கூற,

    சான்சே இல்லப்பா! எப்படிப்பா இப்படி மனசில் நினைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்றீங்க? என்று வியந்தவள் மனதில், தந்தையைப் போன்ற குணம் கொண்ட கணவன், தனக்கும் கணவனாய் அமைய வேண்டும் என்ற விருப்பம், அவளையும் அறியாமல் ஆழமாய்ப் பதிந்தது.

    மனைவியின் வைத்திய செலவுக்கே, அவருடைய பெரும்பான்மை சம்பாத்தியம் செலவாகி விட, பிள்ளைகளுக்கென்று பெரிதாக சொத்து சேர்த்து வைக்கா விட்டாலும், நல்ல கல்வியோடு நல்ல குணங்களையும் சொத்தாக கொடுத்தவர், அவளது தந்தை.

    உயர்நிலை பள்ளியில் ஆசியராக பணி புரிந்து, பதவி உயர்வு பெற்று, தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றவர். நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    என்னைப் பொறுத்தவரை, இரண்டே இரண்டு தொழிலுக்குத்தான் சம்பளத்தோடு, மற்றவருக்கு உதவி செய்தோம் என்ற ஆத்மா திருப்தியும் கிடைக்கும்... ஒன்று மருத்துவ தொழில்... மற்றொன்று ஆசிரியர் தொழில்! என்று அடிக்கடி சொன்னாலுமே, தன் கருத்தை தன் பிள்ளைகளிடத்தில் என்றுமே திணித்ததில்லை!

    ஆனால், கல்வியின் அவசியத்தை மட்டும் மனதில் அழுத்தமாக பதிய வைத்தார்.

    அவரது நல்ல குணங்கள் இயல்பாகவே, அவரது பிள்ளைகளுக்கும் அமைந்திருந்தது.

    நன்றாக மதிப்பெண்கள் எடுத்து விவேகானந்தன் மருத்துவ படிப்பை, தந்தையை சிரமப் படுத்தாமல், தன் முயற்சியிலேயே படித்து முடித்தான். பிரபல கண் மருத்துவமனையில் மருத்துவனாக பணி புரிந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் மருத்துவம் பார்த்து, தந்தைக்கும் மன நிறைவைத் தந்தான்.

    பாரதியும் உயர் கல்வி முடித்து ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்ததோடு, தந்தை வகுத்து கொடுத்த பாதையில், ஏழை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இலவச கல்வி அளிக்கும் உன்னதப் பணியைச் செய்யத் துவங்கினாள்.

    தன் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி, தன்னைச் சுற்றி இருந்த ஏழை எளிய மாணவர்களுக்கும், கல்வி அறிவைப் புகட்டியவர் அவளது தந்தை.

    அவரிடம் இலவசமாக பாடம் பயின்ற மாணவர்கள் பெரிய பெரிய படிப்பு படித்து அவரைத் தெய்வமாக மதித்து வந்தனர். அவரது இறுதி யாத்திரையின் போது மரியாதையுடன் கலந்து கொண்ட, அவரால் பயன் அடைந்த ஏராளமான பழைய மாணவர்களைக் கண்ட போது, உண்மையான சொத்து என்று அவர் சொன்னது எது என்று மேலும் தெளிவாக பாரதிக்கு புரிந்தது.

    தந்தைக்கு தந்தையாக, தாய்க்கு தாயாக, ஆசானுக்கு ஆசானாக மட்டுமல்லாமல், அண்ணனுக்கும் தனக்கும் ஒரு நல்ல தோழனாகவும் இருந்த தந்தையின் மறைவு அவளையும் அவளது அண்ணனையும் நிலை குலைய வைத்தது.

    எந்த நிலையிலும் மன தைரியத்தை மட்டும் விட்டு விடக் கூடாது என்பதை, பால பாடமாக பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல், அதற்குத் தானே ஒரு உதாரணமாய் இருந்தவரின் பிள்ளைகள் இருவருக்குமே, அவரது மறைவு, அதனை எளிதாய் ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கவில்லை!

    ஆனால், மன உறுதியை இழந்து வேதனையில் உழல்வது, தந்தைக்கு தாங்கள் செய்யும் அவமானம் என்று உணர்ந்து, இருவரும் தங்களைத் தேற்றிக் கொண்டாலும், தந்தையைப் பற்றி நினைக்கும்போது இருவருக்குமே மனம் கனத்து கண்கள் கலங்கும்.

    ஆனால், அடுத்த கணமே, நாங்கள் சத்தியமூர்த்தியின் பிள்ளைகள்! என்ற எண்ணம் தோன்ற, தங்களைத் தேற்றிக் கொள்வார்கள்.

    மனத்தாலும் உடலாலும் ஆரோக்கியமாகவே இருந்த சத்தியமூர்த்தியின் எதிர்பாராத பிரிவுக்கு, சதா அவரை அரித்துக் கொண்டிருந்த தன்னைப் பற்றிய அவரது கவலையே காரணம் என்று அறிந்த பாரதிக்கு குற்ற உணர்வின் காரணமாய், தந்தையின் மறைவில் வேதனை மிகுதிதான்.

    எந்த நிலையிலும் மன உறுதியைக் கை விடாமல் நிமிர்ந்து நின்ற சத்தியமூர்த்தியை, மகளைப் பற்றிய கவலை நிலை குலைந்து போக வைத்திருந்ததை பாரதி அறியாதவள் இல்லை!

    ஐந்து வயதில் அன்னை இறந்த போது தந்தையிடம் கண்ட அதே வேதனையை, வெறித்த பார்வையை, தந்தையின் மறைவுக்கு சில தினங்கள் முன்பு அவரிடம் கண்ட போது, தன்னைப் பற்றிய அவரது வேதனையின் அளவை அவளால் உணர முடிந்தது.

    ஆனால்... அந்த வேதனையைப் போக்கும் சக்திதான் அவளிடம் இல்லாமல் போனது!

    தன்னைப் பற்றிய வேதனையே, அவரின் உயிரைக் குடித்து விட்டது என்று எண்ணம், எப்போதும் போல மனதைப் பிசைய, அவளது சுவாசம் தடுமாறத் துவங்கியது.

    யாரும் எதற்கும் பொறுப்பாக முடியாது... எது நடக்கணும் என்று இருக்கோ அது நடந்தே தீரும்! என்று தந்தை அடிக்கடி சொல்லும் வாக்கியத்தை நினைவில் கொணர்ந்து, நிமிர்ந்து அமர்ந்தவள், கண்களை மூடி, ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப் படுத்த முயன்றாள்.

    ஒரு நிமிடம் கழித்து, அவள் கண்களைத் திறந்த போது, தன் எதிரே, தண்ணீர் பாட்டில் நீட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிமிர்ந்து கேள்வியாய் நோக்க, உங்களுக்கு தேவைப் படும் என்று தோனுச்சு... அதான்! என்று தண்ணீரை நீட்டிக் கொண்டிருந்தவன் கண்களில் கனிவு மட்டுமே இருக்க, ஏனோ அப்போதைக்கு அந்த கனிவை இயல்பாக ஏற்க பிடிக்காமல், நோ... தேங்க்ஸ்! என்றபடி மீண்டும் விழிகளை மூடிக் கொண்டாள் பாரதி.

    அத்தியாயம் - 2

    தன்னுடன் வேலை செய்யும் ஒரு நண்பனின் திருமணத்துக்கு சென்று விட்டு, கடைசி நிமிடத்தில் ரயிலைப் பிடித்து, தன் இருக்கை எண்ணை கண்டுபிடித்து தன் இடத்தில் அமர்ந்த தமிழ்ச்செல்வன் முதலில் கண்டது, எதிர் இருக்கையில் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணைத்தான்.

    உதவி தேவையா என்று கேட்க நினைக்கும்போதே, அவளாகவே கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப் படுத்திக் கொள்ள முயல்வதைக் கண்டு, மனதுக்குள் மெச்சியவாறே, தன் தண்ணீர் பாட்டிலை எடுத்தவன், அவள் கண் திறக்கும் வரை காத்திருந்து, தண்ணீரை நீட்டினால், இப்படியா ஒருத்தி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்? என்று ஒரு கணம் எரிச்சல் வந்தது அவனுக்கு.

    ‘நான் என்ன மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டா கொடுத்தேன்? ஏதோ மூச்சு விட சிரமப் படுகிற மாதிரி இருக்கே... தண்ணீர் குடிச்சால் நல்லா இருக்குமேன்னு கொடுத்தால் ரொம்பத்தான் அலட்டிக்கிறாங்க! நல்லதுக்கே காலமில்லை!’ என்று உள்ளுக்குள் சலித்தாலும்,

    அடுத்த கணமே, எதையும் இலகுவாய் எடுத்துக் கொள்ளும் அவனது வழக்கப் படி, ‘நான் உதவி செய்ய நினைத்தேன்... அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும், அவர்களுடைய விருப்பம்தான். அதற்கு ஏன் கோபம் வர வேண்டும்?’ என்று நடந்ததை இலகுவாக எடுத்துக் கொண்டவன், தன்னிடத்தில் சவுகர்யமாக அமர்ந்து கொண்டு, தான் எடுத்து வைத்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்.

    கண்களை மூடி இருந்த பாரதிக்கு, தனக்கு உதவி செய்ய முயன்றவனிடம், முகத்தைத் திருப்பிக் கொண்டது வருத்தமாகவே இருந்தது.

    இப்படி பலரும் பார்க்க கூடிய இடத்தில், வண்டி நின்றதும், கிளம்பியதும் கூட தெரியாமல், தன்னிலை மறந்து யோசனையில் ஆழ்வதும், நிலை தடுமாறுவதும் தன் இயல்பில்லையே என்று பெருமூச்சுடன் எண்ணியவளுக்கு, தன் இயல்பு மாறி வெகு நாட்கள் ஆயிற்றே என்று தோன்றியது.

    அதெப்படி அம்மு... சில சமயம் அப்படியே அப்பா மாதிரி பொறுமையின் சிகரமா இருக்கே? சில சமயம் இப்படி வால் முளைத்த மாதிரி குறும்பு செய்யறே? என்று குரங்கு என்ற வார்த்தையை மட்டும் சொல்லாமல் சொல்லி அண்ணன் கேலி செய்வது மனக் கண்ணில் தோன்றியது.

    ம்... பின்னே... நீயும் அப்பவும்தானே என்னை வளர்த்தீங்க? அதான் உங்க ரெண்டு பேர் குணமும் சேர்ந்து வந்திருக்கு! என்று தன்னை கேலி செய்யும் அண்ணனைத் திருப்பி வாரியபடி குறும்புடன் சிரிப்பாள் அவள்.

    அதானே... திருப்பி கொடுக்கலை என்றால் உனக்கு தூக்கம் வருமா? என்று செல்லமாக அவளது காதைப் பற்றி திருகுவது போல நடிப்பான் அவளது செல்ல அண்ணன். அவளும், ஸ்ஸ்... வலிக்குதுடா அண்ணா! என்று பொய்யாக அலறுவாள்.

    இருவரின் விளையாட்டைப் பார்த்து நிறைவுடன் சிரிப்பார் அவர்களது தந்தை.

    அண்ணன் சொன்னது போல பொறுமையும் துள்ளலும் கலந்த அழகான கலவையாய் அவள் இருந்த காலம் போன ஜென்மமோ என்று தோன்றும் வகையில் அல்லவா அவளது வாழ்க்கை திசை மாறி போய் விட்டது? என்ற எண்ணம் மீண்டும் ஒரு பெருமூச்சை வெளியேற்ற, ப்ச்... இதென்ன இப்படி ஒரு தன்னிரக்கம்? சத்தியமூர்த்தியின் மகளாய் சமர்த்தாய் இரு! என்று மனம் அதட்டிய நேரம்,

    அம்மு... இதென்ன பழக்கம்? எதுக்கு அவரை தொந்தரவு செய்யறே?

    ஒரு பெண்மணியின் அதட்டல் குரல் கேட்க, அம்மு என்ற அழைப்பில் தாமாக அவளது விழிகள் திறந்தன. அவளது அண்ணன் எப்போதும் அவளை அப்படித்தான் அழைப்பான்.

    தொந்தரவு எல்லாம் இல்லைங்க...குழந்தைதானே? என்றபடியே, இங்கே வாங்க... என்றபடி அம்மு என்றழைக்கப்பட்ட குழந்தையை அழைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1