Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Girivalam
Girivalam
Girivalam
Ebook111 pages1 hour

Girivalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த கதையான் நாயகன் கிரி. தனது அம்மாவின் ஆசைக்காக, கொழுந்து விட்டெரியும் சினிமா ஆசையை அடக்கிக் கொண்டு கல்லூரியில் கால் பதிக்கிறான். படிப்பு ஏறவில்லை என்று சொல்லியும் அம்மா அவளது எண்ணத்தை மாற்றிகொள்ளாமல் இருக்கிறாள். அம்மாவின் ஆசையான படிப்பில் வலம் வந்தானா? இல்லை, தனது கனவான சினிமா கிரியை, சுற்றி வலம் வந்ததா? என்பதை படித்து அறிவோம்!

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580100610539
Girivalam

Read more from Devibala

Related to Girivalam

Related ebooks

Reviews for Girivalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Girivalam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கிரிவலம்

    Girivalam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 15.

    அத்தியாயம்: 16.

    அத்தியாயம்: 17

    அத்தியாயம்: 18.

    அத்தியாயம்: 19.

    அத்தியாயம்: 20.

    அத்தியாயம்: 01.

    இந்த கதையின் நாயகன் கிரி. அவனை பற்றி, அவன் குடும்பம் பற்றி, அவனது குணாதிசயங்கள் பற்றி கொஞ்சம் சொல்லி விட்டால், கதைக்குள் போவது சுலபமாக இருக்கும்.

    அப்பா கேசவன், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தலைமை மானேஜர். அவரது சம்பளம் அதிக பட்சம் முப்பதாயிரம். வைப்பு நிதி போன்ற பிடித்தமெல்லாம் இல்லை. சம்பளம் அப்படியே கைக்கு வரும். ஏழரைக்கு கடை திறக்கும் போது கேசவன் இருக்க வேண்டும். இரவு பத்தரைக்கு கடையை இவர் தான் மூட வேண்டும். வாரத்தில் திங்கள் மட்டும் விடுமுறை. மாடு போல உழைப்பு. இந்த சம்பளத்தில் குடும்பம் நடத்துவதே கஷ்டம். எங்கிருந்து சேமிப்பு? அவர் அதிர்ஷ்டம் அரசாங்க பள்ளியில் வேலை பார்க்கும் யோகிதா மனைவியாக அமைந்தது. அவளுக்கு இன்றைய தேதிக்கு கைக்கு ஐம்பதாயிரம் வரை சம்பளம் வரும். சண்டை, சல்லாபம் நிறைந்த குடும்பம். யோகிதா தான் நிர்வாகம். சிக்கனமான, கறாரான குடும்ப தலைவி.

    மூத்த மகன் நம் நாயகன் கிரி. சுமாரான பர்சனாலிட்டி. படிப்பும் சுமார் தான். பள்ளிக்கூட நாட்களில் நிறைய கட் அடித்து ஒரு சினிமாவை விட மாட்டான். அதனால் நாலு பாடங்களில் சுலபமாக பெயில் ஆவான். அவனே அப்பா கையெழுத்தை போட்டு எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் செய்வான். பிற பிள்ளைகளுடன் சேர்ந்து சிகரெட் போன்ற ‘நல்ல’ பழக்கங்களை, ஆறாம் வகுப்பிலேயே கற்றுக்கொண்டு விட்டான். தாராளமாக பொய் சொல்லுவான். எப்படியோ தத்தி, தடவி பள்ளியில் அறுபது சதவீதத்தில் பாசாகி விட்டான். இந்த மதிப்பெண்ணுக்கு எந்தக்கல்லூரியில் இடம் கிடைக்கும்? ஆனால் யோகிதா, அந்த பகுதி அரசியல்வாதியை பிடித்து, பொறியியல் கல்லூரியில் கிரிக்கு இடம் வாங்கி விட்டாள்.

    வேண்டாம்மா. ஸ்கூல்ல நான் தேறி வந்ததே பெரிசு. என்ஜினியரிங் காலேஜ்ல கண்டிப்பா எல்லா சப்ஜெக்ட்லேயும் அரியர் வைப்பேன். என்னை பி.ஏ. சேர்த்துடு.

    அதுக்கு நீ சும்மா வீட்ல இருக்கலாம். அந்த கவுன்சிலர் மகனை நான் தேத்தி விட்ட காரணமா, அந்த நன்றிக்கு அவர் உனக்கு, தன் செல்வாக்கை உபயோகிச்சு பொறியியல்ல சீட் வாங்கியிருக்கார். இத்தனை நாள் ஊர் சுத்தினது போதும். உனக்கு அதிர்ஷ்ட ஜாதகம். இப்ப சுக்ர தசை ஆரம்பம். இருபது வருஷம். நிச்சயமா மேலே வருவே. இனி நல்லா படி.

    அம்மா! நான் சினிமால சாதிக்கணும்னு ஆசைப்படறேன். என் கூட படிச்ச குணாவோட மாமா பெரிய டைரக்டர். அவர் கிட்ட நான் அசிஸ்டென்டா சேர நினைச்சேன்.

    கொன்னுடுவேன். சினிமா பார்த்து தான் படிக்காம நீ கெட்டு போனே. பெரிய டைரக்டர் உன்னை சேர்த்துப்பாரா?

    அவர் மூணு வருஷம் முன்னால ரஜினியை வச்சு ஹிட் கொடுத்தவர். அடுத்தது சூர்யா படம் சுமாரா போச்சு. விஜய்க்கு கதை சொல்லியிருக்கார்.

    இதனால உனக்கென்னடா லாபம்? இதப்பாரு! போகாத ஊருக்கு வழி தேடாதே. உருப்படற வழியை பாரு. உங்கப்பா முறையா படிக்காத காரணமா, முப்பதாயிரம் சம்பளத்துக்கு மூச்சை புடிச்சு ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் உழைக்கறார். அந்த கஷ்டம் உனக்கு வரக்கூடாது. உனக்கு பின்னால பிறந்த உன் தங்கச்சி வெண்பா, எப்படி படிக்கறா பாரு. எட்டாவதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட். பிரமாதமா கம்ப்யூட்டர் கத்துக்கறா. பிரின்சிபல் என்னை கூப்பிட்டு ரொம்ப பெருமைப்பட்டாங்க. தேவையில்லாம திசை மாறி போகாதே. இன்னும் நாலு நாள்ள காலேஜ்ல சேரணும். கேப்பிடேஷனோட ரெண்டு லட்சம் கட்டியிருக்கேன், லோன் போட்டு. குடும்பத்துக்கு மூத்தவன் நீ. பொறுப்பா நடந்துகோ.

    இப்போதைக்கு அம்மாவை எதிர்க்க வழியில்லை. இன்னும் சினிமா கேட்டுக்குள் நுழையவில்லை. அதனால் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முடியாது. அதனால் கல்லூரியில் சேர்வது நல்லது.

    கொழுந்து விட்டெரியும் சினிமா ஆசையை அடக்கிக்கொண்டு, கல்லூரிக்குள் கால் பதித்தான் கிரி. ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரி அது. தொண்ணூறு சதவீதம் வாங்கிய மாணவர்களுக்கே அங்கே இடம் கிடைப்பது அரிது. அரசியல் செல்வாக்கு பேசியது. மிகவும் கண்டிப்பான கல்லூரி அது. கல்லூரிக்கான பேருந்துகள் ஏராளமாக நகரின் பல பகுதிகளிலிருந்து, மாணவ, மாணவியரை ஏற்றி வரும். மாணவருக்கு, மாணவியருக்கு தனித்தனி பேருந்துகள். உணவும் காலை டிபன், மதிய உணவு இரண்டும் உண்டு. மாணவ செல்வங்களை தொழுவத்தில் அடைப்பது போல பேருந்தில் கொண்டு வந்து காலை எட்டு மணிக்கு அடைத்தால், மூன்றரைக்கு விடுவார்கள். அது வரை வெளியே தப்பித்து சினிமா, பீச் என ஓட முடியாது. பெற்றவர்களுக்கு தகவல் பறந்து விடும். முதல் நாள் கிரி வந்ததும் நேராக பெரிய கேன்டீனுக்குள் நுழைந்தான். அம்மாவுடன் ஃபீஸ் கட்ட வந்த போதே சகலமும் பார்த்து விட்டான். பெற்றவர்களையும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். ருசியான, வயிறு நிரம்ப உணவு. கற்கும் பிள்ளைகளின் வயிறு நிரம்பினால் தான், புத்தி வேலை செய்யும் என்ற தத்துவத்தை போதிக்கும் கல்லூரி. கிரி மற்ற மாணவர்களுடன் சாப்பிட்டு, நேராக வகுப்புக்கு வந்தான். சுமார் நாற்பது மாணவர்கள். E&I...என்ற தொழில் நுட்பப்பிரிவு. பேராசிரியர் வந்து அறிமுகம் முடித்த பிறகு பாடத்தை ஆரம்பித்து விட்டார். கிரிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. காலை உள்ளே போன கனமான தோசைகளால் கண்களில் தூக்கம் வேகமாக குடியேறியது. அவனை மறந்து லேசான குறட்டையுடன் உறங்க தொடங்கினான். அதன் விளைவை அடுத்த அரை மணியில் அனுபவித்தான்.

    அத்தியாயம்: 02.

    சக மாணவர்கள் அவனை தட்டி எழுப்ப, ஏதோ உளறலுடன் ஒரு மாதிரி மிரண்டு எழுந்தான். ஏதோ சினிமா கனவில் இருந்தான். அது சுகமான கனவு.

    இருடா. இந்த ஷாட்டை முடிச்சிட்டு வந்திர்றேன். லைட்ஸ் ஆன்…ஆக்ஷன்

    அவனை ஒரு கை முதுகில் தட்ட, படக்கென திரும்பினான். ப்ரொஃபசர் அருகில் நின்றார்.

    உள்ளே வந்த முதல் நீ தூங்க தொடங்கிட்டே. டைரக்ஷன் கனவா? லன்ச் முடிஞ்சு, ப்ரொஃபசர் நரேன்னு சொல்லு. என் ரூமை காட்டுவாங்க. வந்து பாரு.

    மற்ற மாணவர்களின் கேலி சிரிப்பும், துளைக்கும் பார்வையும் அவனை என்னவோ செய்தது. அடுத்த பேராசிரியர் வந்து விட்டார். விழிப்பாக இருந்தான் கிரி. உணவு

    Enjoying the preview?
    Page 1 of 1