Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathai Thirudiyavan
Idhayathai Thirudiyavan
Idhayathai Thirudiyavan
Ebook113 pages43 minutes

Idhayathai Thirudiyavan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு சைக்கோ கில்லரை பிடிக்க ஒரு வயதான இன்ஸ்பெக்டர் போராடுவதே கதை.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580135307127
Idhayathai Thirudiyavan

Read more from Erode Karthik

Related to Idhayathai Thirudiyavan

Related ebooks

Reviews for Idhayathai Thirudiyavan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathai Thirudiyavan - Erode Karthik

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    இதயத்தைத் திருடியவன்

    Idhayathai Thirudiyavan

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    https://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    இன்ஸ்பெக்டர் சிங்கமுத்து பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த வீட்டை சுவிட்சை போட்டு வெளிச்சமாக்கியவர் கையில் இருந்த வி.எஸ்.ஓ.பி. கோட்டர் பாட்டிலை காலியாக இருந்த டீப்பாயில் வைத்தார். பூட்டையும் சாவியையும் டீப்பாயில் வைத்துவிட்டு சாப்பாட்டு பார்சலை கிச்சனுக்கு கொண்டு போனார். குடித்துவிட்டு சாப்பிடலாமா இல்லை சாப்பிட்டுவிட்டு குடிக்கலாமா என்ற யோசனையோடு திரும்ப ஹாலுக்கு வந்தவர் வண்டி பையில் எடுக்காமல் விட்டுவிட்டு வந்த முட்டை பார்சலை எடுக்க திரும்ப வாசலை நோக்கி நடந்தார். அதே நேரம் அவரது இடுப்பில் இருந்த வாக்கி டாக்கி அலற ஆரம்பித்தது.

    பீட் நெம்பர் 11. இங்கே ஒரு கார் செக்போஸ்டை உடைத்துவிட்டு போகிறது. கார் நெம்பர் MD S5748. ப்ளூ கலர் அம்பாசிடர் காரை எங்கே பார்த்தாலும் தடுத்து நிறுத்தவும். வாக்கி டாக்கியில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் குரல் விடாது ஒலிக்க ஆரம்பித்தது.

    இன்ஸ்பெக்டர் சிங்கமுத்துவின் மயிர் கால்கள் நிமிர்ந்து கொண்டன. காலையில் தான் மாணிக்கம்பாளையம் ஸ்டேசனில் இந்த கார் காணாமல் போனதாக ரிப்போர்ட் பைலாகியிருந்தது அவரது நினைவுக்கு வந்தது. இது நிச்சயமாக அவன்தான். அவன்தான் கார்களை திருடிவிட்டு பிறகு பெண்களை கடத்தி கொலை செய்து நிர்வாண உடம்பில் எண்களை வரிசையாக கத்தியால் முதுகில் பொறிப்பவன். சிங்கமுத்துவிற்கு தெளிவாக தெரியும். அந்த காரில் முதுகில் 8 என்ற எண் எழுதப்பட்ட ஒரு பெண் பிணமாக பின்சீட்டிலோ டிக்கியிலோ இருக்க கூடுமென. இரண்டு வருடங்களாக சிங்கமுத்து அவனை தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது வாய்ப்பு வலிய வந்து சேர்ந்திருக்கிறது. தாறுமாறாக துடிக்க தொடங்கிய இதயத்தை பெருமூச்சு விட்டு சீராக்கி கொண்டவர் புயலென கிளம்பினார். வீட்டை பூட்டும் முன்பாக சுவரில் மாலையுடன் காட்சியளித்த மனைவி சாவித்திரியின் போட்டோவை ஒருமுறை பார்த்தவர் கண்களை துடைத்து கொண்டு கிளம்பினார்.

    ஒரே உதையில் அவரது பைக் சீறிக் கொண்டு கிளம்பியது. இடுப்பின் பின் பக்கத்தில் ரிவால்வர் இருக்கிறதா என்று ஒருமுறை தொட்டு பார்த்து கொண்டார். அவர் மனம் தீவிரமாக கணக்கு போட்டது. பீட் நெம்பர் 11 என்பது திண்டல் மேட்டை குறிப்பது. அவன் பெருந்துறை நோக்கித்தான் போய் கொண்டிருக்க வேண்டும். அவர் சட்டென்று ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருசப்பனுக்கு போன் போட்டார். எடுத்த இருசப்பன் சொல்லுங்க சார் என்றான்.

    இருசு! இப்போது நீ எங்கிருக்கிறாய்?

    மேட்டு கடை பீட் சார்.

    கூட பசங்க இருக்கிறார்களா?

    இருக்கிறார்கள் சார்.

    பேரி கார்ட், இல்லை கல்லை வைச்சு ரோட்டை மறித்து போக்குவரத்தை நிறுத்து. வாக்கி டாக்கி நியூசை கேட்டாய் தானே?

    கேட்டேன் சார். நீங்க சொல்வது போலவே செய்கிறோம் சார்

    கவனமாக கேள் இருசு! நீ டிராபிக்கை நிறுத்தியதும் அவன் வேறு வழியில்லாமல் காரை திருப்பி கொண்டு திரும்ப வந்த வழியாகவே வருவான். கண்டிப்பாக சார்ட் கட்லதான் அவன் வந்தாக வேண்டும். நான் அவனை தேடி கிளம்பிவிட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து கொள்வோம் அப்போது அவன் கண்டிப்பாக என்னிடம் மாட்டுவான்.

    புரியுது சார். ஜாக்கிரதையாக இருங்கள் சார்.

    செல்போனை அணைத்த சிங்கமுத்து ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் முறுக்கினார்.

    சிங்கமுத்து யூனிபார்ம் அணியாத க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர். தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே சீருடை அணிவது அவரது வழக்கம். மனைவியை இழந்துவிட்டு தனிமரமாக இருக்கும் அவரை டிப்பார்ட்மெண்ட் கூப்பிடும் செல்ல பெயர் சிங். பல கேஸ்களை அனாயசமாக தீர்த்து வைத்திருக்கும் சிங்கிற்கு இருக்கும் ஒரே பலவீனம் அவரது இதய பிரச்சனைதான். முதல் அட்டாக் வந்து மயங்கி விழுந்த சிங்கை பரிசோதித்த டாக்டர் இரண்டாம், மூன்றாவது அட்டாக்கில் சிங் தப்பி பிழைப்பது கடினம் என்றும் அவரது இதயத்தின் வெண்டிரிக்கிள் பகுதி மிகுந்த சேதம் அடைந்திருப்பதால் அவரது இதயத்தை மாற்றி வேறு இதயத்தை பொருத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தார்.

    சிங்கிற்கு மாற்று இதயம் பொருத்துவதிலும் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. அவரது ரத்த வகை மிக அரிதான பாம்பே பிளட் வகை. இந்தியாவில் அவர்களுக்கென்று தனியாக சங்கம் கூட இருந்தது. சிங் அந்த சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். மாற்று இருதயம் பொருத்துவதற்குள் இந்த நெம்பர் கொலைகாரனை பிடித்துவிட வேண்டும் என்று சிங் முயன்று கொண்டிருந்தார். கொலைகாரனோ சிங்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.

    சிங் வில்லரசம்பட்டி வழியாக நுழைந்து காரப்பாறை ரோட்டில் வண்டியை திருப்பினார். அவன் டிராபிக்கால் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங் அனுமானித்தார். வேறு சில குறுக்குவழிகள் இருந்தாலும் கொலைகாரன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங்கின் உள்ளுணர்வு கூறியது.

    சிங்கிற்கு அதிர்ஷ்டம் நிறையவே இருந்தது. அவரது அனுமானம் உண்மையாகியிருந்தது. 50 அடி தூரத்தில் அந்த கார் ஹெட்லைட் வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. சிங் பைக்கின் வேகத்தை குறைத்தார். வண்டிபையினுள் கையை

    Enjoying the preview?
    Page 1 of 1