Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Athithan
Meendum Athithan
Meendum Athithan
Ebook192 pages1 hour

Meendum Athithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாறையில் பொருத்தப்பட்டிருக்கும் வாளை யார் எடுக்கிறார்களோ அவர்களால் தனக்கு மரணம் என்ற சாபத்தால் அச்சப்படும் வஞ்சக அரசன் அந்த வாளை பிடுங்குபவர்களே அடுத்த அரச வாரிசு என்று அறிவிக்கிறான்.அந்த வாளை உண்மையான வாரிசான இளவரசன் பிடுங்கி விடுகிறான்.அவனை சிறையில் அடைக்கும் போதுதான் வந்தது ஆதித்தன் என்ற கள்வன் என்ற உண்மை தெரிகிறது.ஆதித்தன் வஞ்சக அரசனை கொன்று உண்மையான இளவரசனை அரசனாக்கினானா என்பதே கதை.!

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135305783
Meendum Athithan

Read more from Erode Karthik

Related to Meendum Athithan

Related ebooks

Related categories

Reviews for Meendum Athithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Athithan - Erode Karthik

    http://www.pustaka.co.in

    மீண்டும் ஆதித்தன்!

    Meendum Athithan!

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    http://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    1

    கடம்ப நாட்டின் தலைநகரத்திலிருந்து இருபது காத தொலைவில் இரு புரவிகள் நீண்ட தூர பயணத்தில் களைத்து போய் வந்து கொண்டிருந்தன. அவற்றின் வாயில் தள்ளிய நுரையும், கால்களில் படிந்திருந்த புழுதியும் அப்புரவிகளில் வெகு தொலைவிலிருந்து வருவதன் மறுக்க முடியாத சாட்சியாக விளங்கின.!அப்புரவிகளை விடவும் அதிக களைப்புடன் இருந்தனர் அதன்மீது ஆரோகணித்திருந்த இரு வாலிப வீரர்கள். அவர்களில் இளையவனான ஆதித்தன் புரவியின் இடையில் தொங்கிய குடுவையைதாகம் தணிக்க எடுத்தான். எடுக்கும் போதே அதன் கனம் குறைவாக இருப்பதை வைத்தே தண்ணீர் குறைவாகவே இருப்பதை கண்டு கொண்டவன் அண்ணா! உன்னுடைய குடுவையில் நீர் இருக்கிறதா? என்று வினவினான். தம்பியின் முன் எச்சரிக்கையை மனதிற்குள் பாராட்டிய அரிஞ்சயன் அது முன்பே காலியாகி விட்டது. நீரை நீயே அருந்தலாம்! என்று தம்பிக்கு விடை கூறினான்.

    தண்ணீரை குறைவாகவே குடித்த ஆதித்தன் வழிப்போக்கர்கள் கூறிய சத்திரம் விரைவில் தென்படலாம். அங்கே நம் வயிற்றையும், குடுவையையும் நிரப்பி கொள்ளலாம்! என்றான் குடுவையை பழைய இடத்தில் தொங்க விட்டபடி.

    நாம் பைராகியின் கோரிக்கையை ஏற்று கொண்டிருக்காமல் நம் வழியே பயணித்திருக்க வேண்டும்! என்றான் அரிஞ்சயன்.

    பைராகி நம் நண்பனாகி விட்டான். அவன் வேண்டு கோளை ஏற்று அவன் விருந்தாளியாக இரண்டு திங்கள்கள் தங்கி விட்டோம். நமக்கு வினோதமான ஆயுதங்களை பரிசளித்த பைராகியை தேடி ஒரு பிரச்சனை வரும் என்று அவன் எதிர்பார்த்தவனில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவி மகளோடு இருக்கும் அவன் நிம்மதியை குலைக்க விரும்பாமல் நாம்தானே பிரச்சனையில் தலையிட்டோம்.!

    ஆம்! பைராகியின் மகள் அந்த சின்ன பெண் சித்ராதேவியின் மழலை வேண்டுகோள் அல்லவா நம்மை தலையிட வைத்தது.!

    தந்தையின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட பெண். அவளுக்காகவே இதில் நான் தலையிட முடிவு செய்தேன்.

    பைராகியை தேடி வந்த இளஞ்செழியனும், அவனது வளர்ப்பு தந்தையும்?

    கடம்ப நாட்டினை அடைந்திருப்பார்கள். நமக்காக காத்திருப்பார்கள்.!

    பைராகி தந்த அந்த வாள்?

    அடையாளம் தெரியாதவகையில் துணியால் சுற்றி வைத்திருக்கிறேன். அந்த வாள் நம்மோடிருப்பது எமன் கூடவே இருப்பது போல்! அந்த வாளை அடையாளம் கண்டால் நம் தலை மண்ணில் உருண்டு விடும்.!

    எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

    கடம்ப நாட்டிற்குள் நாம் நுழைந்த பின் எதிரிகள் இந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.!

    சற்று தூரத்தில் தெரிந்த சத்திரத்தை பார்த்தவுடன் இருவருக்கும் முகம் மலர்ந்தது. சத்திரத்தின் வெளியே நின்ற சில குதிரைகள் ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்த்தின. வரவேற்ற சத்திரத்து நிர்வாகி உணவு தயாராகி விட்டதாகவும் குளித்து விட்டு வரும்படியாகவும் அறிவுறுத்தினான். பின் புறமிருந்த கிணற்றடியில் குளித்து விட்டு குதிரைக்கு தண்ணீர் காட்டிவிட்டு உணவருந்த சென்றார்கள் இருவரும். உணவருந்தி விட்டு இளைப்பாற இருவரும் திண்ணைக்கு வந்தார்கள். ஏற்கனவே அங்கு சம்பாஷணையில் இருந்த இரு முதியவர்கள் தங்கள் சம்பாஷணையை நிறுத்தி விட்டு வாலிபர்களே! நீங்கள் யார்? இப்போது எங்கே போகிறீர்கள்? என்றார் அவர்களில் இளையவர்.

    நாங்கள் தேசாந்திரிகள். கடம்ப நாட்டின் வீர விளையாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம்!

    வீர விளையாட்டிற்கு முன்பாக வாள் பிடுங்கும் வைபவத்தில் நீங்கள் பங்கெடுத்தாக வேண்டுமே? என்றார் முதியவர்.

    அதென்னய்யா வாள் பிடுங்கும் வைபவம்!

    கடம்ப நாட்டின் கோட்டைக்கு முன்பாக பாறையில் சொருகப்பட்ட ஒரு வாள் இருக்கிறது. அதை இதுவரை யாரும் எடுத்ததில்லை.!அதை எடுக்க முயற்சித்த பின்தான் கோட்டைக்குள் அனுமதிப்பார்கள்!

    அதை எடுத்து விட்டால்? என்றான் அரிஞ்சயன்.

    கடம்ப நாட்டின் மன்னன் கார்கோடன் தன் மன்னர் பதவியை எடுப்பவனுக்கே கொடுத்து விடுவான்.!

    ஏன் அப்படி?

    மறைந்த மன்னரின் வாரிசால் மட்டுமே அந்த வாளை எடுக்க முடியும் என்றொரு நம்பிக்கை. கார்கோடன் தற்காலிக மன்னன்தான். மன்னரின் வாரிசை கண்டு பிடிக்கவே இந்த வீர விளையாட்டு!

    வாளை எடுத்தால் மணி மகுடம் நிச்சயம்! என்றான் அரிஞ்சயன்.

    கூடவே மரணமும் நிச்சயம்! என்றபடி மர்ம புன்னகை பூத்தார் முதியவர்.

    2

    என்ன சொல்கிறீர்கள் பெரியவரே? மணிமகுடம் கிடைக்கும் என்று சொன்னீர்கள். இப்போது மரணம் கிடைக்கும் என்கிறீர்களே? என்றான் ஆதித்தன்.

    உண்மையைத்தான் சொல்கிறேன் வாலிபனே. மன்னரை வஞ்சகமாக கொன்று ஆட்சியை பிடித்தவன் கார்கோடன். மக்களின் எதிர்ப்பால் பயந்து போனவன் இளவரசரை கொல்ல திட்டமிட்டான். ராஜ விசுவாசி ஒருவன் கொலை முயற்சியிலிருந்து இளவரசரை காப்பாற்றியதோடு அவரை தூக்கி கொண்டு தலைமறைவாகி விட்டான். அதனால் சக்ரதாரி என்ற மந்திரவாதியின் மூலம் மந்திர உச்சாடனங்கள் செய்து ஒரு வாளை பாறையில் பொருத்தி வைத்தான். அதை மறைந்த மன்னரின் மகனால் மட்டுமே எடுக்க முடியும் என்பது சக்ரதாரியின் கூற்று. அப்படி எடுப்பவனை மன்னராக்குவதாக கூறுவது மேல் பூச்சு வேலை. அவனை கொன்று விடுவதே கார்கோடனின் உடனடி திட்டம்!

    அதற்கும் வீர விளையாட்டுக்கும் என்ன சம்மந்தம்?

    இளவரசனை தூக்கி சென்ற அந்த ராஜ விசுவாசி சண்டைக்கலையில் வல்லவன். அவன் கண்டிப்பாக இளவரசரை வீரனாகவே வளர்த்திருப்பான். மேலும் வாளை எடுத்தால் அவன்தான் வாரிசு என்பது உறுதியாகி விடுமல்லவா?

    இளவரசருக்கு வேறு அடையாளங்கள் இல்லையா? என்றான் அரிஞ்சயன்.

    ஏன் இல்லை? முதுகில் பச்சை நிறத்தில் நட்சத்திர வடிவ மச்சம் உண்டு.!

    அப்படியா! அந்த வாளை ஏன் யாராலும் எடுக்க முடியவில்லை?

    அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. சக்ரதாரியின் நண்பனாக பைராகி என்பவன் இருந்திருக்கிறான். அவன்தான் அந்த பாறையையும், வாளையும் வடிவமைத்தவன். அவன் இளவரசரை கொண்டு சென்ற ராஜ விசுவாசிக்கும் நெருங்கிய நண்பன். அந்த வாள் ரகசியத்தை அறிந்து கொள்ள அவனை பத்து வருடங்களாக பலர் தேடினார்கள். ஆள் அகப்படவில்லை. அவன் இறந்து விட்டதாக நிறைய பேர் கருதினார்கள். கடைசியில்தான் தெரிந்தது அவன் மகேந்திர புரியில் பத்தாண்டுகளாக சிறைப்பட்டு கிடந்தான் என்று. அவனை தேடும் முயற்சியை எல்லோரும் கை விட்டு விட்டார்கள்!

    அப்படியானால் பைராகிக்கு வாளை எடுக்கும் சூட்சுமம் தெரியும்! அப்படித்தானே?

    ஆம்! அவனை எங்கே சென்று தேடுவது? அவனை தேடி பிடித்தாலும் அந்த சக்ரதாரியை பிடிப்பது குதிரை கொம்பு. அவன் பேச்சை கார்கோடன் தட்டவே மாட்டான்.!

    இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாயினர்.

    சரி பெரியவரே! நாங்கள் கிளம்புகிறோம். வானம் இருட்டி கொண்டு வருகிறது. மழை வலுக்கும் முன்பாக கடம்ப நாட்டை அடைய வேண்டும்.! என்ற ஆதித்தன் அவர்களிடம் விடை பெற்று குதிரையை அவிழ்த்தான். சில மணி ஓய்வுகளில் புத்துயிர் பெற்றிருந்த மோகினி பயணத்திற்கு தயாரானது. இருவரும் குதிரையில் ஏறி அதை கிளப்பினர். அப்போது வலுவாக அடித்த காற்றில் ஆதித்தனின் மேலாடை சற்றே விலக அவன் முதுகில் பச்சை நிற நட்சத்திர மச்சம் மின்னியது. அதை கண்ணுற்ற முதியவர் கடம்பத்தின் இளவரசன் இவனா? என்றார் அதிர்ச்சியோடு!

    3

    ஆதித்தனின் முதுகிலிருந்த பச்சை நட்சத்திர மச்சத்தை பார்த்து முதியவர் வியப்பால் வாய் பிளந்து கொண்டிருந்ததை அறியாமல் ஆதித்தனும், அரிஞ்சயனும் அங்கிருந்து கிளம்பினர். இளைப்பாறுதலாலும், போதுமான உணவை உண்டதாலும் புத்துயிர் பெற்றிருந்த புரவிகள் நாற்கால் பாய்ச்சலில் விளைந்தன. அதன் மேலிருந்த வாலிப வீரர்களின் கண்கள் கறுத்து கொண்டிருந்த வானத்தை கவலையுடன் அடிக்கடி பார்த்து கொண்டன.

    மேகங்கள் கடல் அலை போல் கரை புரண்டு ஓட அவ்வப்போது மின்னல் கீற்று ஒன்று வானத்தை கீறி மறைந்தது. அந்தி நேரத்து பறவைக்கூட்டங்கள் கூடடைய வானில் விரைந்து கொண்டிருந்தன. பேய் பிடித்த பெண் போல மரங்கள் ஓங்காரமாக அசைந்தாடி கொண்டிருந்தன. மிக விரைவாக சென்றால் தவிர கடம்பத்தின் தலைநகரை அடைய முடியாதென்பதையும் மழையும் இருளும் சேர்ந்து விட்டால் வழி தவறும் ஆபத்து இருப்பதையும் இருவரும் உணர்ந்தேயிருந்தனர். தலைநகருக்கு முன்பாக இருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1