Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellaiyil Oru Ethan
Ellaiyil Oru Ethan
Ellaiyil Oru Ethan
Ebook209 pages1 hour

Ellaiyil Oru Ethan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லையோர கிராமத்திற்கு பன்றி வேட்டையாட வரும் இளவரசன் திடிரென காணாமல் போகிறான்.அவன் அங்குள்ள ஒரு மலைவாசி பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறான். எதிரிகளால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இளவரசனை காப்பாற்ற வந்து சேர்கிறான் ஆதித்தன்.அவன் இளவரசனை காப்பாற்றி அவனது காதலை நிறைவேற்றி வைத்தானா என்பதுதான் கதை.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135305684
Ellaiyil Oru Ethan

Read more from Erode Karthik

Related to Ellaiyil Oru Ethan

Related ebooks

Related categories

Reviews for Ellaiyil Oru Ethan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellaiyil Oru Ethan - Erode Karthik

    http://www.pustaka.co.in

    எல்லையில் ஒரு எத்தன்

    Ellaiyil Oru Ethan

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    http://www.pustaka.co.in/home/author//erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 1

    கடம்பத்தின் அரசவை நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் களை கட்டி கொண்டிருந்தது. அன்று நாட்டு மக்களின் குற்றம் குறைகளை நீக்கும் நீதி வழங்கும் நாள். தனக்கு முன் வந்த வழக்குகளை விசாரித்து அதற்கு தகுந்த தண்டனைகளையும், தீர்வுகளையும் வழங்கி கொண்டிருந்தான் கடம்பத்தின் மன்னனான நரேந்திரவர்மன். வெளிப்பார்வைக்கு உற்சாகமாக காணப்பட்ட நரேந்திரவர்மனின் மனம் வெறுமையில் குழம்பித் தவித்து கொண்டிருந்தது.

    உள்ளுர நரேந்திரவர்மன் குழம்பித் தவித்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தார் மழவராயர். நரேந்திரவர்மன் இக்கட்டான நிலையில் இருக்கும் போதெல்லாம் மழவராயரின் உதவியை நாடி உள்ளம் தெளிந்து தைரியமடைவது வழக்கம். இப்போதும் தைரியமாகவும் உற்சாகமாகவும் நரேந்திரவர்மன் தன்னை காட்டிக் கொள்ள மழவராயரே காரணம்.வர்மன் நீதி வழங்கியபடியே மழவராயரை கவனித்தான்.வர்மன் தன்னை கவனிப்பதை பார்த்த மழவராயர் பொறுமை என்று சைகை காட்டினார்.

    தலைமை காவலனிடம் மழவராயர் சைகை காட்டினார். அவரது குறிப்பை அவன் உடனே புரிந்து கொண்டான்.

    அடுத்த சில நிமிடங்களில் அரசவைக்குள் நுழைந்தான் அந்த வாலிப வீரன். அவன் கண்களில் கேலியும், கிண்டலும் நர்த்தனமாடின. அரசவை என்ற பயம் சிறிதும் இல்லாமல் ஏதோ நந்த வனத்தில் பூக்களை பார்த்து ரசிக்க வந்தவனைப் போல் அவனது நடை இருந்தது. அவனுக்கு பின்புறம் வந்த இரண்டு காவலர்களில் ஓருவன் தன் கையிலிருந்த ஈட்டியால் அவனது முதுகை நெட்டி தள்ளினான். வேகமாக நட என்று வாலிப வீரனை தள்ளியதுடன் மெல்லிய குரலில் உறுமிடவும் செய்தான்.

    நீ பலசாலி என்பதை என்னை தள்ளி விட்டுத்தான் சபைக்கு காட்ட வேண்டுமா? என்றான் வாலிப வீரன்.

    ஆரம்பித்து விட்டான். இனி இவனது வாயை மூடுவது கடினம். என்றான் மற்றோருகாவலன்.

    இவனாயிற்று.இனி மன்னராயிற்று. இவனை இங்கு கொண்டு வருவதுடன் நம் வேலை முடிந்தது என்றான் மற்றொருவன்.

    நரேந்திரவர்மனுக்கு காவலர்கள் இருவரும் பவ்யமாகவணக்கம் தெரிவிப்பதை பார்த்து கொண்டிருந்த வாலிப வீரன் சற்று தாமதமாகவே தன் வணக்கத்தை மன்னருக்கு தெரிவித்தான்.

    மழவராயர் நரேந்திர வர்மனை நோக்கி கண்ணை காட்டினார். தீர்வு நம்மை தேடி வந்திருக்கிறது. திட்டப் படி நடந்து கொள்ளுங்கள் என்று கண்களால் சமிக்சை செய்தார் மழவராயர்.

    மழவராயரின் பார்வையின் பொருளை புரிந்து கொண்டவர்மன் யார் நீ? என்றான்.

    வர்மனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவனின் விழிகளில் எந்த அச்சமும் தென்படவில்லை.

    கடம்பத்தை கடந்து செல்லும் பல வழிப்போக்கர்களில் நானும் ஓருவன் என்றான் அவன்.

    அந்நியனே! உன்னை தவிர வேறு எந்த வழிப்போக்கர்களும் குற்றம் சாட்டப்பட்டு இங்கு வந்ததில்லை. நீ மட்டும் தான் இங்கே வந்திருக்கிறாய். உன் மீதான குற்றச்சாட்டுகளை நீ அறிவாயா?

    இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நேற்று இரவு தான் நான் கடம்பத்திற்குள் நுழைந்தேன். இங்குள்ள சட்ட திட்டங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.அப்படி சட்டத்திற்கு புறம்பாக நான் எதையும் செய்ததாக நினைவில்லை. என்றான் அவன்.

    நேற்று இரவு இவன் காளி கோவிலில் உறங்கியிருக்கிறான். காலையில் உணவருந்தியவன் சூதாடிகளுடன் பகடையாடியிருக்கிறான். அதில் முறைகேடாக வென்று அனைவரின் பணத்தையும் வென்றிருக்கிறான். என்றான் காவல் வீரர்களின் ஓருவன்.

    நம் நாட்டு சூதாடிகள் வெகு திறமைசாலிகளாயிற்றே? அவர்களை இவன் வென்றானா? என்னால் இதை நம்ப முடியவில்லை. என்றான் வர்மன்.

    ஓருவனை அல்ல. மூவரை வென்று அவர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பி விட்டேன் என்றான் வாலிப வீரன் அலட்சியமாக .

    நீங்கள் நம்ப மறுத்தால் அந்த சல்லி களில் ஓருவனை உங்கள் முன்பு நிறுத்துகிறேன். அவனிடம் விசாரித்து பாருங்கள் என்றான் காவலன்.

    சில நிமிடங்களில் மன்னருக்கு முன் வணக்கம் சொல்லி நின்றான் சூதாடிகளில் ஒருவன்.

    என்ன நடந்ததென்று நீ சொல் என்றான் வர்மன்.

    இந்த அந்நியன் காலையில் எங்களுக்கு அறிமுகமானான். நான்கு பேரும் இணைந்து தாயம் என்னும் பகடையாட்டத்தை துவங்கினோம்.இவன் தன்னுடைய ஓரு காயை வைத்து எங்களின் எல்லா காய்களையும் வெட்டி விடுகிறான். அவனது அருத்தடுத்த காய்கள் எங்களின் காய்களை வெட்டி விடுகின்றன. எங்களால் அவனது ஒரு காயை கூட வெட்ட முடியவில்லை. விருத்தங்களும் அவனது வேகத்திற்கு தகுந்தது போலவே விழுகின்றன. இவனது விசித்திரமான ஆட்ட முறையில் நாங்கள் எங்கள் செல்வத்தை முற்றிலுமாக இழந்து விட்டோம் என்றான் சூதாடி.

    உன் உடலில் உள்ள ஆபரணங்கள் தப்பிவிட்டன நண்பா. அந்த பெருந்தன்மையை நீ சொல்ல மறுக்கிறாயே? என்றான் வாலிப வீரன் புன்முறுவலுடன்.

    இப்படித்தான் இடக்காக பேசுகிறான். வாய் பேச்சில் மட்டுமல்லவாள் வீச்சிலும் இவன் கோடை போகிறவனல்ல. அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வெகு புதுமையாக இருக்கின்றன. என்றான் காவலன்.

    ஆட்டமும் புதுமை. ஆயுதங்களும் புதுமை. இந்த அந்நியன் மிக அபாயகரமானவனாக தெரிகிறான். யார் நீ? என்றான் வர்மன்.

    இதற்கு நான் பொய் கூறுவதா? இல்லை. உண்மையை கூறுவதா?

    நீ இங்கே உண்மை தான் கூற வேண்டும். இங்கே நீ பொய் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டால் உனக்கான தண்டனை கூடுதலாகும். என்றான் வர்மன்.

    அப்படியானால் உண்மையை கூறி விடுகிறேன். என் பெயர் ஆதித்தன். கள்வர்புரத்திலிருந்து வருகிறேன் என்றான் ஆதித்தன். சபை மவுனத்தில் ஆழ்ந்தது.

    அந்த பிரசித்தி பெற்ற கள்வன் நீ தானா? என்றான் வியப்புடன் வர்மன்.

    நான் கள்வனல்ல. இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுத்து சமநிலையை பேணுபவன்.

    அந்த சமநிலையை உன்னுடைய உழைப்பினால் செய்திருக்க வேண்டும் என்றான் வர்மன் இளக்காரமாக.

    என் உழைப்பிற்குத் தான் களவென்று பெயர் வைத்திருக்கிறது உலகம்.

    இவன் தனித்து வந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இவர்கள் மூவர் கொண்ட அணியாகவே செயல்படுவார்கள். இவனது அண்ணன் அரிஞ்சயனும், நண்பன் பைராகியும் சாதாரண ஆட்கள் அல்ல. என்றார் மழவராயர்.

    அவர்களும் என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான். அவர்களுக்கு வேறு வேலை இருப்பதால் நான் மட்டும் தனியாக வந்தேன். என்றான் ஆதித்தன்.

    தனியாக வந்து தான் என் நாட்டு சட்டத்தை மீறியிருக்கிறாய். நீ பகடையாடி ஜெயித்த செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்திருக்கிறாய். அது இங்கே குற்றம்.

    ஏழைகளுக்கு உதவுவது குற்றமா? விசித்திரமாக இருக்கிறது உங்கள் நாட்டின் சட்டம்

    ஏழைகளுக்கு உதவ மன்னர் இருக்கிறார். நீ உதவக்கூடாது. என்றார் மழவராயர்.

    ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும்புண்ணியம் முழுவதையும் மன்னரே மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ? இதென்ன சுயநலம்? என்றான் ஆதித்தன் கேள்விக்குறியோடு.

    மன்னர் மக்களுக்கு தகப்பனை போன்றவர். அவர் தான் ஏழைகளை காப்பாற்றும் உரிமை பெற்றவர். மற்றவர்கள் அதில் பங்குகொள்ள முடியாது. இது இந்நாட்டின் சட்டம் என்றார் மழவராயர்.

    இந்த சட்டத்தை மீறினால் என்ன தண்டனை?

    மீறுபவர்களுக்கு சிறைவாசம் என்றான் நரேந்திரவர்மன் மெல்லிய குரலில்.

    என்னை சிறையில் அடைக்க போகிறீர்களா? அதற்கு நான் மனம் வைக்க வேண்டும் மன்னரே! என்றான் ஆதித்தன் புன்சிரிப்புடன்.

    அதிகமாக பேசுகிறாய். அது உனக்கு ஆபத்தை தரப் போகிறது என்றான் வர்மன் எச்சரிக்கும் குரலில்.

    ஆபத்தும், ஆதித்தனும் ஓட்டிப்பிறந்த இரட்டை பிள்ளைகள். மண்ணில் புதைந்து போன என் எதிரிகளுக்கு பேசும் திறமையிருந்தால் கதை கதையாக உங்களுக்கு சொல்லியிருப்பார்கள்.

    சபை நடுவே தன்னை எதிர்த்து வாயாடும் ஆதித்தனைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றான் நரேந்திரவர்மன்.

    *****

    அத்தியாயம் 2

    நரேந்திரவர்மனின் செய்வதறியாத நிலையை கண்ட ஆதித்தன் விசித்திரமான சட்டம். வித்தியாசமான தண்டனை.என்னை சூதாடியதற்கு தண்டித்திருந்தால் கூட அதை மனதார ஏற்று கொண்டிருப்பேன். சூதாடிகளை தண்டிக்க மறுக்கும் உங்களின் சட்டம் ஏழைகளுக்கு உதவி செய்பவர்கள் மீது மட்டும் பாய்வது வேடிக்கையாக மட்டுமல்ல. வேதனையாகவும் உள்ளது என்றான் இகழ்ச்சியான குரலில்.

    அந்நியனான நீ எங்கள் நாட்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமே தவிர அதை விமர்சனம் செய்யக் கூடாது. அதற்கான உரிமை உனக்கில்லை என்றார் மழவராயர்.

    உம்மை போல் அரசரின் அர்த்தமற்ற கட்டளைக்கு ஒத்து ஊதும் நபர்கள் இருக்கும் வரை ஏழைகள் இந்த நாட்டில் இருக்கவே செய்வார்கள். அவர்களின் ஏழ்மை ஒரு நாளும் ஓழியப் போவதில்லை என்றான் ஆதித்தன்.

    திமிராகப் பேசுகிறாய். மன்னரின் கட்டளையில் நீ என்ன குற்றம் கண்டாய்? என்றார் மழவராயர்.

    "உங்கள் அரசர்

    Enjoying the preview?
    Page 1 of 1