Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bathil Solli Sel Penne!
Bathil Solli Sel Penne!
Bathil Solli Sel Penne!
Ebook337 pages3 hours

Bathil Solli Sel Penne!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580106004835
Bathil Solli Sel Penne!

Read more from Jaisakthi

Related to Bathil Solli Sel Penne!

Related ebooks

Reviews for Bathil Solli Sel Penne!

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bathil Solli Sel Penne! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    பதில் சொல்லிச் செல் பெண்ணே!

    Bathil Solli Sel Penne!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 1

    பொழுது விடிந்து விட்டது!

    கண்விழித்தபடி புரண்டு படுத்தான் சசிசேகரன். சட்டென்று அவனுக்குப் புரிந்து விட்டது. அது அவனுடைய வழக்கமான படுக்கையறை அல்ல.

    மெல்லக் கண்களைத் தேய்த்துக் கொண்டான். சோம்பல் முறித்தான்.

    தன்னைக் குறித்தே அவனுக்குச் சிரிப்பு வந்தது. எப்படித்தான் தனக்குத் தூக்கம் வந்ததோ என்று.

    வேறொருத்தனாயிருந்தால் நொந்து நூலாகியிருப்பான். ஆனால் தனக்குத் தூக்கம் வருகிறதே என்று எண்ணிக் கொண்டான்.

    திரும்பவும் குப்புறப் படுத்துக் கொண்டான். அவனது நீண்ட ஆனால் கட்டு மஸ்தான உருவம் அந்தப் படுக்கையில் பாந்தமாக அழுந்திக் கொண்டது.

    அரைமணி நேரம் மறுபடியும் உறங்கி விட்டான்!

    அண்ணா.. அண்ணா.. என்று மாலினியின் குரல் கேட்கவும் எழுந்து அமர்ந்தான்.

    என்னடா..! என்றான் அன்பான குரலில்.

    அண்ணா.. காஃபி கொண்டு வந்திருக்கேன்.. என்றாள்.

    தங்கையைப் பார்த்தான். ஒரு தாய் வயிற்றில் பிறக்காத பெண் என்றாலும் தன் பாசத்துக்குரியவள். தன் மேல் பாசம் வைத்தவள்.

    நீ எதுக்குடா வந்தே..! சமையல்காரர்கிட்டே கொடுத்தனுப்பறதுதானே

    ஆமா...! இந்த டம்ளர் தூக்க முடியாத கனம். அந்த பங்களாவுக்கும், இந்த அவுட்ஹவுசுக்கும் ஏழுகடல், ஏழு மலை தாண்டி வரணும் பாத்தியா.. ரொம்பக் கஷ்டம்.. என்றாள்.

    அவளது இடக்குப் பேச்சு அவனுக்கு எப்போதும் பிடிக்கும். இப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருந்தாள்.

    சித்தியைப் போல கண்ணழகு. அப்பாவைப் போலவே மூக்கு நெற்றி எல்லாமும் அதனாலோ என்னவோ அவனுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் அப்பா நினைவு பெருகிக் கொண்டு வருகிறது!

    அப்பா மறைந்து நேற்றோடு முப்பது நாள் முடிந்திருந்தது. முப்பதாம் நாள் செய்து முடித்தற்குப் பிறகுதான் வக்கீல் கிருபாகரன் அப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டது.

    அப்பா!

    அருமையானவர்!

    தனது தாய் தன்னை மூன்று வயதில் விட்டுப் பிரிந்து விட்டார்களாம். எப்போதோ பார்த்த சினிமாப் படத்தின் ஒரே ஒரு காட்சி நினைவில் இருப்பதைப் போல் அம்மாவின் முகம் நினைவில் இருந்தது.

    அவனது நான்கு வயது வரை அப்பாவே அவனை வளர்த்திருக்கிறார். ஆனால் பாட்டிதான் வற்புறுத்தி மறுபடியும் ஒரு கல்யாணம் செய்து வைத்தாராம்.

    சித்தி மங்களம் மிகவும் நல்லவர். அப்படித்தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான் நேற்று வரை.

    தன்னை மூத்த மகனாகத்தான் வளர்த்தார். அம்மா இல்லாத குறையே அவனுக்குத் தெரிந்ததில்லை. அதிலும் மாலினி பிறந்ததற்குப் பிறகு அவன் தன்னைத்தானே மாலினியின் பாதுகாவலனாக நினைத்துக் கொண்டதற்குப் பிறகு எல்லாமே எளிதாக இருந்தது.

    எப்போதும் சுற்றிலும் வேலைக்காரர்கள். அப்பாவின் அருகாமை எல்லாமுமாகச் சேர்ந்து அவன் வளர்ந்த விதத்தை ஆனந்தமாகவே அமைத்தது.

    இப்போது இருபத்தைந்தாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தான்.

    எப்போதுமே வேற்றுமை காட்டாமல் இருந்த சித்தி இப்போது ஓட்டு மொத்தமாக வேட்டு வைத்து விட்டார்.

    சித்தி என்று கூப்பிடுவானே தவிர எப்போதும் சித்தியாக நினைத்ததே இல்லை. தாயாகவே கருதினான்.

    தான் டீன் ஏஜில் இருந்தபோது சித்தி மிரட்டும்போது அவனும் பதிலுக்கு

    மங்களம்.. வேண்டாம்! என்று பெயர் சொல்லி மிரட்டுவான்.

    சித்தி ரசித்துச் சிரிப்பார்!

    எப்போதும் வித்தியாசம் காட்டாத சித்தி என்ற நம்பிக்கையினால்தானே சொத்து விவகாரங்களில் அவன் தேவையான பாதுகாப்பு செய்து கொள்ளத் தவறி விட்டான்.

    இன்னொரு மனது சொன்னது.

    கண்டிப்பாக சித்திக்கு இந்த உயிலில் பங்கு இல்லை. ஒதுக்கி வைத்தது அப்பாதான் அவனுக்குக் கோபம் யார் மீதாவது வரவேண்டும் என்றால் அப்பா மீதுதான் வரவேண்டும். இனிமேல் என்ன கோபம் வந்தாலும் காட்டுவதற்கு அவர் இருக்கவில்லை. இனிமேலும் கோபம் காட்டித் தனக்கும் எதுவும் ஆகப் போவதில்லை.

    நேற்றுத் தான் அவுட் ஹவுஸுக்கு வந்தபோது சித்தி அழுத அழுகை பொய்யாகவும் தோன்றவில்லை. ஆனால் உயிலைப் படித்த பிறகு எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

    உலகமே தன்னை ஏமாற்றி விட்டது போல உணர்ந்தான். அப்பாவே தனக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்ததற்குப் பிறகு யாரை நம்பி நமக்கு என்ன ஆகப் போகிறது என்ற எண்ணம்தான் தோன்றியது. அந்தக் கோபத்தில்தான் தங்களது மாளிகையை விட்டு விட்டு இந்த கெஸ்ட் ஹவுஸுக்குப் புறப்பட்டு விட்டான்.

    உடனே வெளியேறுவதும் உசிதம் என்று தோன்றவில்லை.

    சித்தி கதறி அழுதாள்!

    தம்பி! உங்கப்பா என்ன செஞ்சா என்ன இது பூராவும் உன்னுதாப்பா..! நான் எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்திடறேன் என்று கதறினார்.

    அப்போது கிருபாகரன் குறுக்கிட்டுச் சொன்னார்.

    அம்மா..! அது முடியாது. உங்க காலத்துக்கும் எதையும் விக்கவோ, வாங்கவோ வேற யாராவது பேருக்கு மாத்தி விடவோ உங்களுக்கு உரிமை இல்லை. ஆனா.. வர்ற வருமானத்தை ஆண்டு அனுபவிக்க உரிமை உண்டுன்னு மட்டும்தான் எழுதியிருக்காரு என்றான்.

    சசிசேகரன் இதையெல்லாம் ஒரு வெறுமையான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தானே தவிர வாயைத் திறக்கவில்லை.

    இரவே கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து விட்டான். இடையில் ஒரே ஒரு ஏற்பாடு செய்தான்.

    மேனேஜரிடம் பேசினான். சார்! எனக்கு மனசு சரியில்லை. ஒரு ஆறுமாசம் எங்காவது போயிட்டு வர்லாம்னு பாக்கறேன். நிர்வாகம் பண்ணுங்க..! ஏதாவது வித்தியாசமாத் தெரிஞ்சா.. மட்டும் எனக்குத் தெரிவிங்க.. என்றான்.

    தங்கள் குடும்பத்துப் பெரியவர் கிராமத்திலிருந்து சிவஞானம் அய்யாவை மட்டும் ஃபோனில் வேண்டிக் கொண்டான்.

    ஐயா! நான் கொஞ்ச நாள் வெளியூர் போறேன்.. நீங்க வீட்டுக்குத் துணையா வந்து இருங்க.. என்று.

    அவர் அவ்வப்போது அப்பாவோ, அவனோ வெளியூர் போகும்போது வந்து இருப்பவர்தான்.

    இந்தத் தடவை வரும்போது எப்பவுமே இங்க இருக்கற மாதிரி புறப்பட்டு வந்துடுங்க.. எங்களுக்கும் ஒரு ஆதரவா இருக்கும் என்றான்.

    ஒரேயடியாகத் தான் வெளியேறுகிறோம் என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் சித்திக்குப் புரிந்து விட்டாற்போல் தோன்றியது.

    தம்பி! நீ ரொம்ப அமைதியா இருக்கறதைப் பாத்தா எனக்குப் பயமா இருக்குது. எனக்கு இந்த சொத்தே வேண்டாம். நீங்க மூணு பேர் மட்டும் மிஞ்சினாப் போதும் என்றார்.

    அவன் உடனே ஒன்றும் பிரதிபலிப்பைக் காட்டிவிடவில்லை. முகவாய்க் கட்டையை நீவிக் கொண்டான்.

    நாங்க எப்பவும் உங்களை விட்டு விலகிடப் போறதில்லே.. சித்தி.. என்றான்.

    அதற்குப் பிறகுதான் சித்தி நிம்மதியாக உறங்கப் போனார் போல் தோன்றியது.

    அப்பாவின் பிரிவு எல்லாரையும்தான் தாக்கியிருந்தது. அந்தப் பரந்த தோள்களின் மீது ஏறிக் குதித்த அனுபவம் இப்போது கூட அவனுக்கு நினைத்தால் சுகமாக இருந்தது.

    அவன் சிறு குழந்தையாக இருந்தபோது குப்புறப் படுத்தாற் போன்ற தோற்றத்தில் இரண்டு உள்ளங்கைகளாலும் அவனைத் தூக்கிச் சுற்றினால் சற்றும் அச்சப்படாமல் கலகலவெனச் சிரிப்பானாம். தனது மீசையை நீவிக் கொண்டே அப்பா சொல்லிச் சிரிப்பார்.

    சித்தி மங்களத்துக்கு அப்பாவிடம் பயம்தான். பேச்சே உறுமல் மாதிரி இருக்கும். ஆனால் உள்ளம் நிறைய அன்பு. அது அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

    தான் சின்னப் பையனாக இருந்தபோது ஒருமுறை நிகழ்ந்த நிகழ்வு இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

    ஒருமுறை அவன் ஏதோ செய்யக் கூடாத குறும்பு செய்து விட்டான். சித்தி அவனை அடித்து விட்டாள்.

    அப்பா சித்தியிடம் கோபமாகக் கேட்டார்.

    உன் பையனா இருந்தா இப்படி அடிச்சிருப்பியா? என்று.

    என்றைக்குமே அப்பாவை எதிர்த்துப் பேசியதே இல்லை சித்தி. ஆனால் அன்றைக்குப் பேசினார்.

    அவனை நான் என் பையனா நினைச்சதாலதான் அடிச்சேன் என்று.

    அப்பா திகைத்துப் போனார்.

    நான் வந்து மூணு வருஷமாச்சு. இதுவரைக்கும் என்கிட்டே வித்தியாசமான நடத்தை பாத்திருக்கீங்களா? ஆனா, இன்னைக்குப் பள்ளிக் கூடத்துல பக்கத்துல இருக்கிற பையனை குண்டூசியால குத்தியிருக்கான். அந்தப் பையனோட அம்மா ஏழைப்பட்டவ. என்கிட்டே வந்து சொல்லிட்டு அழுதுட்டுப் போனா இதுக்கு அடிச்சுத் திருத்தலேன்னா.. வேற எதுக்கு அடிக்கறது? என்றார்.

    அப்பா சுதாரித்துக் கொண்டார்.

    "சாரி.. மங்களம்! என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். ஆனால் அன்று இரவே இன்னொன்றையும் கண்டார்.

    சாப்பிட மாட்டேன் என்று குப்புறப் படுத்து அழுதபடி முரண்டு பிடித்த மகனிடம் மங்களம் கெஞ்சிக் கொண்டிருந்தார். கடைசியில்

    பாரு.. சசி! நீ சாப்பிடலேன்னா நானும் சாப்பிட மாட்டேன் என்று போய்ப் படுத்துக்கொண்டார்.

    சற்றுநேரம் வரை தேம்பிக் கொண்டிருந்த சசிசேகரன் பிறகு எழுந்து நின்று

    சரி.. சாப்பிடறேன்.. நீயும்.. வா! என்று அழைத்தபடி எழுந்தான். முத்தமாரி பொழிந்தார் மங்களம்.

    தங்கம்.. இல்லே! ராஜா இல்லே!. தப்பு செஞ்சங்காட்டித்தானே அடிச்சேன்.. யாருமே என்ற தங்கத்தை வந்து குறை சொல்ற மாதிரி நடந்துக்கக் கூடாது. உன்னைக் குறை சொன்னா எனக்கு ரோஷம் பொத்துகிட்டு வருதில்லே.. என்று பேசியபடி அழைத்துக் கொண்டு சென்று சாப்பிட வைப்பதைக் கண்ட நாளில் மருதமுத்து முடிவு செய்து கொண்டார்.

    இவள் சரியான தாய். இனிமேல் இவளது பிள்ளை வளர்ப்பில் தலையிட வேண்டியதில்லை என்று. ஆனாலும் சசிசேகரனுக்குத்தான் அந்த வீட்டில் முதல் உரிமை என்பது போல் எண்ணத்தையும் மனைவிக்கு உண்டாக்கியிருந்தார்.

    பெரியவனானதும் சக தோழரைப் போலவே நடத்தியிருந்தார். ஆனால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனை போய் வந்து கொண்டிருந்தார்.

    இந்த முறை மீண்டு வருவார் என்றுதான் எண்ணினார்கள். வக்கீல் கிருபாகரனிடம் ஒன்றிரண்டு முறை தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இப்படியெல்லாம் உயில் எழுதி வைப்பார் என்பது யாரும் எதிர்பாராதது.

    இத்தனை நினைவுகளும் மனதில் ஓடி மறைய ஒரு ஐந்து நிமிடம்தான் ஆகியது. சசிசேகரன் அந்த அவுட் ஹவுஸின் கூரையின் மேல் கண்களை ஒட்டியபடியே மிக மெதுவாகக் காஃபியை ரசித்துக் குடித்தான்.

    மாலினி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

    மாலு! நல்லாப் படிக்கணும். பெரிய ஆளா வரணும் என்றான் ஆத்மார்த்தமாக.

    மாலினி அவனை கேள்விக்குறியாகப் பார்த்தாள். அண்ணா! திடீர்ன்னு இந்த மாதிரி ஆசீர்வாதத்துக்கு என்ன அவசியம்? நேத்திலருந்தே நீ சரியில்லை அண்ணா! இந்த உயில் என்ன பெரிய விஷயம். நீ சொன்னாலும், சொல்லாட்டாலும் அம்மா உன்னைக் கேட்காம எதுவும் செய்யப் போறது இல்லே! நீ எதுக்கு ஏதோ விதமாவே பேசிகிட்டிருக்கே.. என்றாள் குரலில் கவலை தொனிக்க.

    இல்ல.. மாலு! நான் எந்த விதமான அலசல்களுக்கும் தயாரா இல்லே! முடிஞ்சது முடிஞ்சதுதான். எனக்கு சித்தி மேல எந்த வருத்தமும் இல்லே! நான் வருத்தப்படணும்ன்னா.. என்றவன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான்.

    ஒரு பெருமூச்சு விட்டான். பிறகு சொன்னான்.

    ஃபார் எ சேன்ஜ்.. நான் ஒரு ஆறுமாசம்.. வெளியூர் போலாம்னு இருக்கேன்..

    எங்கே?

    எங்க வேணும்னாலும்..! அது இன்னும் முடிவு செய்யலே..

    அதே நேரம் சித்தி ஒரு விதமான படப்பபோடு உள்ளே வந்தாள்.

    தம்பி! என்னமோ பத்து செட் டிரஸ் எடுத்து வைக்கச் சொன்னியாம். எங்காவது போறியா? என்றாள் மங்களம்.

    ம்..!

    எங்கே?

    சும்மா.. ஒரு ரவுண்ட்..! ஒரு ஆறு மாசம்..

    மங்களம் மகனை ஊடுருவிப் பார்த்தார்.

    தம்பி! இப்பல்லாம் நீ ரொம்ப மாறிட்டே! மனசுல இருக்கறதை வெளிப்படையாப் பேசமாட்டேங்கறே..!

    எல்லாரும் மனசுல, இருக்கறதை வெளிப்படையா பேசிடறாங்களா.. என்ன?

    தம்பி! உங்க அப்பா எழுதின உயிலுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை..!

    அப்படின்னு நம்பத்தான் நானும் விரும்பறேன் என்று சொல்ல வந்தவன் சொல்லாமலே விட்டு விட்டான்.

    சொல்லி என்னத்துக்கு ஆகப் போகிறது?

    தம்பி! எப்பவும் இதெல்லாம் உன்னோட சொத்துத்தான் என்றாள் மங்களம் கெஞ்சும்விதமாக.

    இப்படி நீ சொல்லி.. நான் கேட்க வேண்டிய நிலைமையே எனக்கு வித்தியாசமா.. இருக்கு..

    "தம்பி..! என்று மங்களம் தவிப்புடன் மறுபடி ஆரம்பிக்க அவன் வலது கையை உயர்த்தினான்.

    உயில் எழுதினது எழுதியதுதான்! எனக்கென்னமோ ஏதோ அன்னியர் வீட்ல, எனக்கு சொந்தமில்லாத இடத்துல இருக்கற மாதிரி ரொம்ப வருத்தமா இருக்கு.. சித்தி..! ஒரு ஆறு மாசம் நான் வெளியூர் போறேன். உங்களுக்குப் பாதுகாப்புக்கு சிவஞானம் தாத்தாவை வரச்சொல்லியிருக்கேன். எப்பக் கூப்பிட்டாலும் செல்ஃபோன்ல கிடைப்பேன். எனக்கு கண்டிப்பாச் சேன்ஜ் தேவை.. சித்தி.. என்றான் கண்டிப்பான குரலில்.

    சித்தி தேம்பித் தேம்பி அழுத போதும், மாலினி கண்கலங்கி அழுத போதும், குணசேகரன் கெஞ்சிய போதும் அவன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

    சித்தி.. உன்மேல எனக்குக் கோபம் இல்லே! கோபம் எல்லாம் எங்க அப்பா மேலதான் என்றான்.

    புறப்பட்டான்!

    தனது சிவப்பு நிற சான்ட்ரோ காரில் ஏறும்போது சித்தியிடம் கிண்டலாகச்

    சித்தி.. இது என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. என்று வேறு சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

    அந்த அதிகாலை நேரத்துக்கே கிருபாகரன் வந்து நிற்க.. மங்களம் கதறினார்.

    பாருங்க.. லாயர் சார்! எவ்வளவு சொல்லியும் கேட்காமப் போறான்.. என்று.

    கிருபாகரன் மௌனமாக அவன் கார் போன திசையைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

    *****

    அத்தியாயம் 2

    எப்போதோ படித்திருக்கிறான்.

    காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று மகன் எழுதி வைத்ததைக் கண்டுதான் பட்டினத்தார் ஞானம் பெற்றார் என்று.

    நேற்று முன்தினம் வரை தன்னுடைய குடும்பமாக இருந்த நிலை எப்படி ஒரே நாளில் மாறியது? ஏன் இப்படி? இதனால்தான் பெண்களை நம்பாதே என்று சொன்னார்களோ?

    சித்தியின் தூண்டுதலின் பேரில்தான் அப்பா அந்த மாதிரி எழுதினாரோ என்று தோன்றியது. ஏதோ ஒரு சினிமாவில் பார்த்திருக்கிறான் சித்தி நல்லவளாகவே நடித்து கடைசியில் மகனுக்கு வேட்டு வைக்கிறாற்போல .அது போல தனது சித்தியும் செய்து விட்டாரோ.

    கதறும் கதறலைப் பார்த்தால் அப்படியெல்லாம் தோன்றவில்லை. யோசனையுடன் காரை ஓட்டினான். எல்லாச் சொத்தையும் கொடுத்து விட்டுக் கால்நடையில் வெளியேறுகிற நிலைமை இல்லை. சொந்தமாக வாங்கிய கார் இருக்கிறது. ஆனால் என்ன? சொந்தத் தொழிலைத்தானே பாக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் அவன் மேலாண்மைக் கல்விக்கோ, கம்ப்யூட்டர் துறைக்கோ போகவில்லை.

    பி.ஏ.வில் ஆங்கில இலக்கியமும், எம்.ஏவில் தமிழ் இலக்கியமும் படித்த ஒரே ஆள் நீயாத்தான் இருக்கும் என்று அப்பா கூட கலாட்டா செய்வார். கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தான். தபாலில் எம்.ஏ தமிழ் படித்து முடித்தான்.

    கவிதைகளில் இலக்கியங்களில் மனம் செலுத்தியதாலோ என்னவோ அவனது ரசனைகள் மென்மையானவையாகவே இருந்தன.

    அப்பா எத்தனையோ முறை சொன்னார். தம்பி.. டேய்! நிர்வாகம் பண்ண வாடா என்று தலையால் தண்ணீர் குடித்தார்.

    போங்கப்பா! நிர்வாகம் இருக்கவே இருக்கு. கொஞ்ச நாள் லைஃபை என்ஜாய் பண்றேன். அப்புறம் வந்தர்றேன் என்றான்.

    அவரும் அவன் போக்கில் விட்டு விட்டார்.. ஒருவேளை அந்த இலக்கிய மனம்தான் இத்தனை பெரிய விஷயத்தைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள உதவியதோ?

    கசப்புடன் சிரித்துக் கொண்டான்.

    பாட்டிதான் அடிக்கடி சொல்வார். தம்பி நாம யாருக்காவது உதவி செஞ்சா வேற எங்கிருந்தோ உதவி நமக்கு வரும்.. தர்மம் தலைகாக்கும்னு. பரவாயில்லை. நமக்கும் அப்படித்தான் போல இருக்கிறது.

    உதவி எதிர்பாராத இடத்தில் இருந்து வந்தது.

    நேற்றிரவே வீட்டை விட்டு வெளியேறிவிடுவது என்று முடிவு செய்து விட்டான்.

    எப்போது அப்பா இப்படி உயில் எழுதினாரோ அதற்குப் பிறகு எல்லாவற்றின் மேலும் வெறுப்புத்தான் வரும். சித்தியின் அன்பு உண்மையோ பொய்யேளா தனக்குள் சந்தேகம் வந்துவிட்ட பிறகு அங்கே இருந்து நரக வேதனைப் படக்கூடாது.

    உயில் தனக்கு சாதகமாக இல்லை! அதனால் என்ன? வெளியே கிளம்பலாம். வெளியுலகம் பார்க்கலாம் என்று முடிவு செய்து கொண்டான்.

    பாஸ் புக்கை எடுத்துப் பார்த்தான்.

    ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தது.

    கைவசம் கார் இருக்கிறது!

    பாட்டியின் பணத்தில் வாங்கிய கார்! பாட்டி அவனுக்காகப் போட்டு வைத்த டெபாசிட் இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும்.

    வாழ்க்கையை அடி மட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். அதற்காகத்தான் அந்தக் காலத்தில் அரச குடும்பத்துக்கு குழந்தைகளைக் கூட குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

    ஏழ்மையும் எளிமையும் என்னவென்று பார்க்கவேண்டும். தனக்கென்ன ஆண்பிள்ளை. ஒரு திண்ணையில் படுத்துத் தூங்கினால் கூட ஆயிற்று என்கிற அளவுக்கு யோசித்து வைத்திருந்தான். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போயிற்று.

    இளமை இருக்கிறது. படித்த படிப்பு இருக்கிறது. உழைக்கத் தெம்பிருக்கிறது. இனிமேல் தன்னுடைய பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம்.

    நல்ல வேளையாக அப்பாவுக்கு உடல்நிலை மோசமாக ஆரம்பித்தவுடனே ஏஜென்சி தொடர்பான கடைகளை மட்டுமே வைத்துக் கொண்டார். மில்லை ஏற்கனவே விற்றாயிற்று சொத்துக்களாக மாற்றி வைத்து விட்டார். இப்போது சசிக்குத் தோன்றியது தவறு செய்து விட்டோம் என்று.

    எப்போது நிர்வாகம் பார்க்கச் சொன்னாரோ அப்போதே நுழைந்திருக்க வேண்டும். அப்போது நுழைந்திருந்தால் நிலைமை தன் கட்டுக்குள் இருந்திருக்கும். இனிமேல் பேசி என்னத்துக்கு ஆகப் போகிறது? ஆனால் தந்தை தனது பொறுப்புக்களில் இருந்து தப்பித்தாலும் தான் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சிவஞானம்

    Enjoying the preview?
    Page 1 of 1