Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalaikku Namakku
Naalaikku Namakku
Naalaikku Namakku
Ebook61 pages20 minutes

Naalaikku Namakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466916
Naalaikku Namakku

Read more from Devibala

Related to Naalaikku Namakku

Related ebooks

Reviews for Naalaikku Namakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalaikku Namakku - Devibala

    1

    விமலா டாக்டரை நிமிர்ந்து பார்த்தாள்.

    எதுவானாலும் சொல்லுங்க டாக்டர். நான் வாழ்க்கையை யதார்த்தமா அதோட போக்குல சந்திக்கற தைரியம் உள்ளவள்தான்!

    இதை அத்தனை சுலபமா உங்களால ஜீரணிக்க முடியாதம்மா!

    எதுன்னாலும் ஜீரணிச்சுத்தானே ஆகணும்? ப்ளீஸ் கம் அவுட்!

    உங்க புருஷனுக்கு கேன்சர்!

    இதை நான் எதிர்பார்த்தேன்!

    குறுகின காலத்துல வேகமாய் பரவியிருக்கு. இது கொஞ்சம் துரிதமா இருக்கு. நரம்புகளை அரிக்குது! அதனால ரத்த ஓட்டம் தடைபடுது!

    விஷயத்துக்கு வாங்க டாக்டர்!

    உங்க புருஷன் விசுவநாதன் அதிகபட்சம் நாலுமாசம் உயிரோட இருக்கலாம். இது அதிகப்பட்சம்தான்! நிச்சயமா அதைத் தாண்டமாட்டார்!

    விமலா உடைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

    இதை உங்களுக்கு நான் எப்படீம்மா சொல்லாம இருக்க முடியும்? எந்த ஒரு மனைவியும் தெரிஞ்சுக்கக் கூடாத, தெரிஞ்சுக்க விரும்பாத நிஜம், தன் கணவனோட மரணம்தான்!

    …..

    இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கட்டும்! அப்புறமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க! இனி அவரோட நோய்க்கு மருந்துகள் இல்லை! வாழ்ற நாட்கள் சாதாரணமா இருக்கட்டும்!

    விமலா எழுந்தாள்.

    டாக்டர் ஒரு கேள்வி

    என்னம்மா?

    இந்த உண்மை அவருக்குத் தெரியலாமா?.

    தனக்குத் தேதி குறிக்கப்பட்ட விவரம் ஒரு மனுஷனுக்குத் தெரிஞ்சா, அவன் ரொம்ப வேதனைப்படுவான்! ஆனா தெரிஞ்சும் ஆகத்தான் வேணும்!

    அதை நான் சொல்ல முடியாது டாக்டர். சொல்ற தெம்பும் எனக்கில்லை! என்னை நான் தேத்திக்கவே எத்தனை நாளாகுமோ? அவருக்கு எப்படி சமாதானம் சொல்ல முடியும்?

    சொல்ல வேண்டாமா?

    சொல்லிடுங்க டாக்டர். நாசூக்கா எப்படி சேதி அவருக்குச் சேரணுமோ, அப்படி சேரட்டும்!

    விமலா வெளியே வந்தாள்.

    விமலா மத்திய அரசாங்கத்தில் வேலை பார்ப்பவள். மாதம் பிடித்தம் போக கைக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வந்துவிடும்! வயசு நாப்பத்தி ரெண்டு! 25 வயதில் கல்யாணம். உடனே முதல் குழந்தை! அதுவும் பெண்! ப்ளஸ் டூ படிக்கிறாள் மைதிலி அடுத்தது மூன்று வருஷம் கழித்துப் பிறந்த மோகன்! ஒன்பதாவது படிக்கிறான். விசுவநாதனுக்கு தனியார் நிறுவனமொன்றில் உத்யோகம். இந்தப் பதினேழு வருஷ தாம்பத்தியத்தில் விமலாதான் ராணி விசுவநாதன் எப்போதுமே அவள் சொல்படிதான்!

    விசுவநாதனின் உடன் பிறப்புகளை விமலா அவ்வளவாக நெருங்க விடவில்லை!

    வயதான அம்மா உண்டு.

    பெரும்பாலும் விசுவின் தம்பியிடம்தான் அம்மா இருப்பாள்.

    ரெண்டு மாதங்களுக்கு முன் கடுமையான ஜுரம் வந்து விசுவநாதனை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தாள்.

    ஒரு வாரம் இருக்க நேர்ந்தது.

    எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்து முடிவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி, இருபதாயிரம் ரூபாய் பில்லையும் தந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

    தொடர் மருந்துச் செலவு!

    லீவு! அலைச்சல்!

    இதோ போன வாரம் அதே போல ஜுரம் அதிகமாகி, வாந்தி எடுத்தபோது ரத்தம் வந்தது.

    அட்மிட் செய்து விட்டாள்.

    இதோ டாக்டர் கெடு வைத்துவிட்டார்!

    விமலா

    Enjoying the preview?
    Page 1 of 1