Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நாளைக்கு நமக்கு...
நாளைக்கு நமக்கு...
நாளைக்கு நமக்கு...
Ebook61 pages20 minutes

நாளைக்கு நமக்கு...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவனது உயர் அதிகாரியின் முன் விமலா இருந்தாள்.
 "சொல்லுங்க மேடம்!"
 "அவருக்குத் தேதி குறிச்சாச்சு டாக்டர்! அதிபட்சம் நாலு மாசம்தான் அவர் உயிரோட இருப்பார்!"
 "மைகாட்! விசுவநாதன் எத்தனை நல்லவர்?"
 "நான் அழுது தீர்த்தாச்சு சார். அவருக்கு இன்னும் சேதி தெரியாது. முதல்ல தெரிவிக்கச் சொன்னேன் நான். டாக்டர் தெரிவிக்கலை! நான் தேறிட்டேன். இனிமே என் குழந்தைகளை நான் கரை சேர்த்தாகணும். பிராக்டிகலா வாழ்க்கையை சந்திக்க விரும்பறேன்!"
 "சொல்லுங்கம்மா! என்ன செய்யணும் நான்?"
 "அவரோட சேமிப்பு என்ன வரும்? இன்ஷ்யுரன்ஸ் உண்டு. பி.எஃப், கிராஜுவிட்டி எல்லாமா, வீட்டுக்கடனை கழிச்சுகிட்டு என்ன தேறும்?"
 அவர் மணியடித்தார்.
 பி.ஏ. வர, விவரம் சொன்னார்.
 "நான் தகவல்களை சேகரிச்சு பதினைஞ்சு நிமிஷத்துல ஸ்டேட்மென்ட் தர்றேன் சார்!"
 அவள் போய்விட,
 "வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கினா பெனிஃபிட்டா சார்?"
 "இல்லைம்மா!"
 "மெடிகல் ரிபோர்ட் அவுட் பண்ணினா

"நீங்க வேலைலதானே இருக்கீங்க வேற யாருக்கு அவரோட வேலையை நாங்க தர முடியும்?"
 "என் மகளுக்கு! அவ இன்னும் ரெண்டு மாசத்துல ப்ளஸ் டூ முடிக்கிறா, கம்ப்யூட்டர் பயிற்சி உண்டு! மூணு வருஷமா போறா. அவளுக்கு வேலை தர முடியாதா?"
 "பாக்கணும்மா! மானேஜ்மென்ட்ல என்ன சொல்றாங்கனு கேக்கணும்!"
 பி.ஏ. வந்தாள்..
 "வீட்டுக்கடன் எல்லாம் போக, கையில ரெண்டு லட்சத்து, பதினேழாயிரம் ரூபா வரும்!"
 விமலா எழுந்து விட்டாள்.
 "தேங்க் யு ஸார்! இந்த விவரம் கான்ஃபிடன்ஷியலா இருக்கட்டும். யார்கிட்டேயும் நீங்க சொல்ல வேண்டாம்! நான் வர்றேன்!"
 அவனது சம்பளத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.
 ஹாலில் ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.
 "மைதிலி ஹால்ல ஃபேன் சுத்துது அனாவசியமா! அதை அணைக்கமாட்டியா?"
 "கவனிக்கலைமா!"
 "இனிமே எல்லாம் கவனிக்கணும்!"
 உள்ளே வந்தாள்.
 "போயிட்டு வந்துட்டியா விமலா? எங்க ஆபீஸ்ல என்ன சொன்னாங்க?"
 "அஞ்சு மாசத்துக்கு லீவு இருக்கு உங்களுக்கு, சம்பளத்தோட"
 "பரவால்லை, ஒரு மாசம் அதிகமாவே இருக்கு!"
 "என்ன சொல்றீங்க?"
 "நாலு மாசத்தோட முடிஞ்சிரும்னு நெனச்சேன்!விமலா 'திக்'கென நிமிர்ந்தாள்.
 "என்னது முடியும்?"
 "என் லீவைச் சொன்னேன்!"
 "அம்மா! எஸ்.டீ.டில சித்தப்பா பேசினார். பாட்டி நாளைக்குக் காலைல நீலகிரி எக்ஸ்பிரஸ்ல வர்றாங்களாம்!"
 "மோகனை ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லு"
 "சரிம்மா"
 "நீ போய் சாப்பிடு விமலா! ரொம்ப சோர்வா இருக்கே!"
 "மைதிலி! அப்பாவுக்கு சாப்பாடு போட்டியா?" கேட்டபடி உள்ளே போனாள்.
 பேருக்குச் சாப்பிட்டாள்.
 அக்கடா என சாய்ந்து உட்கார்ந்தாள்.
 "மைதிலி! என்னோட நீல டயரியும், பேனாவும் கொண்டுவா!"
 "தர்றேன்மா!"
 கொண்டு வந்து தந்தாள்.
 மாதாந்திர பட்ஜெட் அதில் இருக்கும்!
 'இனி ஒரு சம்பளம்தான். நாலு மாதம் கழித்து பெரும் இடர்பாடுகளை சந்தித்தாக வேண்டும்'
 'எப்படி?'
 யோசிக்கத் தொடங்கினாள்.
 வேகமாக பட்ஜெட் போடத் தொடங்கினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223286585
நாளைக்கு நமக்கு...

Read more from Devibala

Related to நாளைக்கு நமக்கு...

Related ebooks

Related categories

Reviews for நாளைக்கு நமக்கு...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நாளைக்கு நமக்கு... - Devibala

    1

    விமலா டாக்டரை நிமிர்ந்து பார்த்தாள்.

    எதுவானாலும் சொல்லுங்க டாக்டர். நான் வாழ்க்கையை யதார்த்தமா அதோட போக்குல சந்திக்கற தைரியம் உள்ளவள்தான்!

    இதை அத்தனை சுலபமா உங்களால ஜீரணிக்க முடியாதம்மா!

    எதுன்னாலும் ஜீரணிச்சுத்தானே ஆகணும்? ப்ளீஸ் கம் அவுட்!

    உங்க புருஷனுக்கு கேன்சர்!

    இதை நான் எதிர்பார்த்தேன்!

    குறுகின காலத்துல வேகமாய் பரவியிருக்கு. இது கொஞ்சம் துரிதமா இருக்கு. நரம்புகளை அரிக்குது! அதனால ரத்த ஓட்டம் தடைபடுது!

    விஷயத்துக்கு வாங்க டாக்டர்!

    உங்க புருஷன் விசுவநாதன் அதிகபட்சம் நாலுமாசம் உயிரோட இருக்கலாம். இது அதிகப்பட்சம்தான்! நிச்சயமா அதைத் தாண்டமாட்டார்!

    விமலா உடைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

    இதை உங்களுக்கு நான் எப்படீம்மா சொல்லாம இருக்க முடியும்? எந்த ஒரு மனைவியும் தெரிஞ்சுக்கக் கூடாத, தெரிஞ்சுக்க விரும்பாத நிஜம், தன் கணவனோட மரணம்தான்!

    …..

    இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கட்டும்! அப்புறமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க! இனி அவரோட நோய்க்கு மருந்துகள் இல்லை! வாழ்ற நாட்கள் சாதாரணமா இருக்கட்டும்!

    விமலா எழுந்தாள்.

    டாக்டர் ஒரு கேள்வி

    என்னம்மா?

    இந்த உண்மை அவருக்குத் தெரியலாமா?.

    தனக்குத் தேதி குறிக்கப்பட்ட விவரம் ஒரு மனுஷனுக்குத் தெரிஞ்சா, அவன் ரொம்ப வேதனைப்படுவான்! ஆனா தெரிஞ்சும் ஆகத்தான் வேணும்!

    அதை நான் சொல்ல முடியாது டாக்டர். சொல்ற தெம்பும் எனக்கில்லை! என்னை நான் தேத்திக்கவே எத்தனை நாளாகுமோ? அவருக்கு எப்படி சமாதானம் சொல்ல முடியும்?

    சொல்ல வேண்டாமா?

    சொல்லிடுங்க டாக்டர். நாசூக்கா எப்படி சேதி அவருக்குச் சேரணுமோ, அப்படி சேரட்டும்!

    விமலா வெளியே வந்தாள்.

    விமலா மத்திய அரசாங்கத்தில் வேலை பார்ப்பவள். மாதம் பிடித்தம் போக கைக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வந்துவிடும்! வயசு நாப்பத்தி ரெண்டு! 25 வயதில் கல்யாணம். உடனே முதல் குழந்தை! அதுவும் பெண்! ப்ளஸ் டூ படிக்கிறாள் மைதிலி அடுத்தது மூன்று வருஷம் கழித்துப் பிறந்த மோகன்! ஒன்பதாவது படிக்கிறான். விசுவநாதனுக்கு தனியார் நிறுவனமொன்றில் உத்யோகம். இந்தப் பதினேழு வருஷ தாம்பத்தியத்தில் விமலாதான் ராணி விசுவநாதன் எப்போதுமே அவள் சொல்படிதான்!

    விசுவநாதனின் உடன் பிறப்புகளை விமலா அவ்வளவாக நெருங்க விடவில்லை!

    வயதான அம்மா உண்டு.

    பெரும்பாலும் விசுவின் தம்பியிடம்தான் அம்மா இருப்பாள்.

    ரெண்டு மாதங்களுக்கு முன் கடுமையான ஜுரம் வந்து விசுவநாதனை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தாள்.

    ஒரு வாரம் இருக்க நேர்ந்தது.

    எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்து முடிவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி, இருபதாயிரம் ரூபாய் பில்லையும் தந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

    தொடர் மருந்துச் செலவு!

    லீவு! அலைச்சல்!

    இதோ போன வாரம் அதே போல ஜுரம் அதிகமாகி, வாந்தி எடுத்தபோது ரத்தம் வந்தது.

    அட்மிட் செய்து விட்டாள்.

    இதோ டாக்டர் கெடு வைத்துவிட்டார்!

    விமலா

    Enjoying the preview?
    Page 1 of 1