Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavil Vazhkkai
Vanavil Vazhkkai
Vanavil Vazhkkai
Ebook71 pages26 minutes

Vanavil Vazhkkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், வானவில்லாய் வந்து அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் வண்ணம் சேர்த்த கதை. வாழ்க்கையா, பிரிவா என்று தத்தளிக்கும் நிலையில் வானவில்லாய் வந்தவளின் கதை.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580148207506
Vanavil Vazhkkai

Read more from Latha Subramanian

Related to Vanavil Vazhkkai

Related ebooks

Reviews for Vanavil Vazhkkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavil Vazhkkai - Latha Subramanian

    https://www.pustaka.co.in

    வானவில் வாழ்க்கை

    Vanavil Vazhkkai

    Author:

    லதா சுப்ரமணியன்

    Latha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    இருள் சூழ்ந்து காலைப் பனி படர்ந்து லேசான மழைத்தூறல் சிலுசிலு என்ற காற்றோடு காலை நேர பரபரப்பில் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் இருந்தது.

    மெதுவாக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் ப்ளூ மௌன்டன் எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. ரயில் நின்றதும் முதல் வகுப்பு ஏசி கோச் வாயிலில் நின்றபடியே எட்டிப் பார்த்தாள் ராதிகா..

    மக்கள் அங்கும் இங்குமாய் பரபரப்போடு நடந்து கொண்டிருந்தனர். கூலிகள் முதல் வகுப்பு போகிகளை சூழ்ந்து கொண்டு இறங்குவோரிடமிருந்து பெட்டிகளை வாங்க நான் முந்தி நீ முந்தி என்று கூப்பாடு போட்டுக்கொண்டு இருந்தனர்.

    என்னிடம் ஒரு பெட்டி தான் என்றபடியே தன் பெட்டியோடு மெதுவாகக் கீழே இறங்கி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் ராதிகா.

    ரயில் நிற்கும் முன்பே பல்துலக்கி முகம் அலம்பி தலை முடியைக் கோதி ரப்பர் பேன்டை சரியாக இறுக்கமாகப் போட்டுக் கொண்டதால் திருத்தமாக வெளியே வந்தாள். டிராலியை உருட்டியபடியே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள். அங்கும் இங்கும் பார்த்து ரசித்தபடியே வெளியே வரவும் அவளது பெயரை தாங்கிய படி வெள்ளை நிற சீருடையில் நின்று கொண்டு இருந்த கார் ஓட்டுநர் அவள் கண்களில் பட்டான்.

    அவனை நோக்கித் தன் பெட்டியை தள்ளிக்கொண்டு சென்றாள் அவள்.

    காலை வணக்கம் மேடம்.

    ஊட்டிக்கு உங்களை வரவேற்கிறேன். என்று கூறியபடி அவளிடமிருந்து பெட்டியை வாங்கக் கை நீட்டினான்.

    வணக்கம் என்று சிரித்தபடித் தன் பெட்டியை நீட்டினாள் அவள்.

    சாகர் ஹாலிடே ரிசார்ட் என்ற தங்கும் விடுதியின் பெயரைத் தாங்கியபடி அங்கே ஒரு வெள்ளை நிற மாருதி எஸ்டீம் காரின் டிக்கியைத் திறந்து பெட்டியை வைத்து விட்டு அவளுக்காக காரின் பின் கதவைத் திறந்தான்

    நன்றி என்றவாறு காரின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் அவள்.

    உங்கள் பெயர் என்ன?

    வெங்கடேசன் மேடம்.

    என்னை உங்களது காரோட்டியாக ஐந்து நாட்கள் அமர்த்தியிருக்கிறார்கள் எங்கள் ஹோட்டல் நிர்வாகம் என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தான்.

    காரை எடுக்கட்டுமா? மேடம் என்ற கேள்வியை முன்வைத்தான்.

    சரி வெங்கடேசன்

    குளிருக்கு இதமாக போட்டிருந்த ஸ்வெட்டர் மேல் கிடந்த ஸ்டோலை எடுத்து தன் தலையை சுற்றி போட்டுக் கொண்டாள்.

    ஊட்டிக்குப் போக எவ்வளவு நேரம் பிடிக்கும் வெங்கடேசன்?

    மூன்று மணி நேரத்தில் போய் விடலாம் மேடம்.

    கார் ரயில்வே ஸ்டேஷனை விட்டு தேசிய நெடுஞ்சாலையைத் தொட்டது. சீரான வேகத்தில் கார் ஓடத் துவங்கியது.

    அத்தியாயம் 2

    பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பெங்களூருவில் வேலைப் பார்க்கும் ராதிகா ஐந்து நாட்கள் அலுவலக விஷயமாக ஊட்டிக்கு முதல் முறையாக வந்து இருக்கிறாள். சொந்த வேலையாக சென்னைக்கு இரண்டு நாட்கள் வந்து விட்டு அங்கிருந்து மேட்டுப்பாளையம் வந்தாள்.

    மேற்குத் தொடர்ச்சி மலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1