Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மார்'கிழி' மாதம்
மார்'கிழி' மாதம்
மார்'கிழி' மாதம்
Ebook78 pages27 minutes

மார்'கிழி' மாதம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தூக்கம் கலைந்ததும்.
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.
அறை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. ‘திக்’கென்றது ரேஷ்மாவுக்கு.
அவசரமாக விளக்குகளை உயிர்ப்பித்தாள்.
மேஜையின் மேலிருந்த தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு...
டிபன் முடித்து, அறைக்கு வரும் போது மணி ஒன்பதரை இப்போது ஏழா? இத்தனை நேரமா தூங்கியிருக்கிறேன்?
டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் பார்த்த போது, முகம் சற்று உப்பிச் சிவந்து, தூக்கம் அதிகம் என்பதைக் காட்டியது.
‘எங்கே சௌத்ரி?’
‘ஒரு மணி நேரத்தில் வருவதாக, ஒன்பதரைக்குச் சொல்லிவிட்டுப் போனவர், இன்னுமா வரவில்லை? வந்தால், கதவைத்தட்டி அழைக்க மாட்டாரா?’
திகீரென்றது.
அழுகை உடைத்துக்கொண்டு புறப்பட்டது.
சற்று விலகி நின்ற கதவு திறந்தால், பால்கனி என்று காலையிலேயே கவனித்திருந்தாள்.
திறந்தாள்...
சோடியக் கண்கள் விழித்துக்கொண்டு, இரவு நேரச் சென்னை அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கநிற்கப் பிடிக்காமல் உள்ளே வந்தாள்.
அடி வயிறு கலங்கியது.
‘இத்தனை நேரமாக, சௌத்ரிக்கு என்ன வேலை?’
‘சென்னை எனக்கு புதிது... இந்த ஊர் மொழியும் தெரியாது என்றெல்லாம் புரிந்துமா சௌத்ரி...?’
‘நோ... அப்படி இருக்க மாட்டார் சௌத்ரி!’
‘கோரமாண்டல் எக்ஸ்பிரஸில், என்னைவிட்டு அங்குலம் அசையாத சௌத்ரியா, தனியாக ஓட்டல் அறைக்குள் விட்டு விட்டு?’
‘சௌத்ரிக்கு எதுவும் விபத்தா?’
நினைத்த போதே, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
தடாலெனக் கீழே உட்கார்ந்தாள்.
நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் வரவில்லை சௌத்ரி.
‘ஓட்டல் ரிசப்ஷனில் கேட்கலாமா?’
‘அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும்? ‘விஸிட்டிங் கார்ட்’ அடிக்க, நல்ல பிரஸ்ஸா பார்க்கணும் என்று சொல்லிப் போனவர் தானே?’
‘சென்னையில் எத்தனை பிரஸ்? தெருத்தெருவாகத் தேட முடியுமா?’
‘போலீஸில் புகார் செய்யலாமா?’
‘ஸ்டேஷனில் வைத்து ஒரு பெண்ணை இன்ஸ்பெக்டர் கற்பழித்ததாக போனவாரம் செய்தி படித்ததிலிருந்தே, போலீஸ் மேலிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது‘இந்த ஒரு இரவு, பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் யோசிக்கத் தொடங்கலாம்’ ‘தனக்கெப்படி, இத்தனை தைரியமும் தெளிவும் ஏற்பட்டது என்று ரேஷ்மாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.’
‘தூக்கம் மட்டும் வரவில்லை.’
எப்படியும் சௌத்ரி, நள்ளிரவானாலும் வந்துவிடுவான் என்ற கடைசி நம்பிக்கையும் செத்தபோது இரவு மணி இரண்டு. ஒரு மாதிரி மரத்துப் போயிருந்தாள்.
பகல் வெகு நேரம் உறங்கியதற்கான தண்டனையை விடிய விடிய அனுபவித்தாள்.
ஒரு வழியாக விடிந்தும் விட்டது.
‘இனி யோசிக்க வேண்டும்!’
‘சென்னையில், தனக்கு யாரைத் தெரியும்?’
‘உறவும் இல்லை... ஸ்நேகிதி...’ சட்டென் தன் பேனா நண்பி சுலோவின் நினைவு வந்தது. அவசரமாக டைரியைப் பிரித்து, சுலோவின் விலாசத்தைத் தேடி சேகரித்துக் கொண்டாள்.
‘இதுவரை நேரில் பார்த்திராத சுலோவிடம், முதல் சந்திப்பிலேயே, என் கணவனைக் காணவில்லை என்று சொல்ல முடியுமா?’
‘நேரில் பார்க்காவிட்டாலும், கடிதம் மூலம் சுலோவிடம் அப்படியொரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது நிஜம்தான்’
‘சௌத்ரியை திருமணம் செய்து கொள்ள முடிவானதும், முதலில் சுலோவுக்குத்தானே எழுதினாள்? இனி கல்கத்தாவில் இருக்க மாட்டேன், ஊட்டி போனதும், புது முகவரி தருகிறேன் என்று போன வாரம்தானே எழுதினாள்?’
பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாகத் தயாரானாள். அறையைப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்து, ஆட்டோவை அழைத்து, சுலோவின் விலாசம் சொன்னாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
மார்'கிழி' மாதம்

Read more from தேவிபாலா

Related to மார்'கிழி' மாதம்

Related ebooks

Related categories

Reviews for மார்'கிழி' மாதம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மார்'கிழி' மாதம் - தேவிபாலா

    1

    ஹோட்டல் ‘அஜ் நபி’ என்ற நியான் எழுத்துக்களை தலையில் அணிந்து கொண்டு, அந்த நவீன மோஸ்தர் கட்டிடம், காலை வெயிலில் கண்ணடிக்க.

    ஒரு நட்சத்திர ஓட்டல் அந்தஸ்த்துக்கான சகல தகுதிகளுடன் ‘அஜ்நபி’ இயங்கிக் கொண்டிருந்தது.

    தங்கும் பகுதி முதலில் விரிந்திருக்க, அதிலிருந்து இடப்புறம் திரும்பி, குறுகலாகப்போன கான்க்ரீட் ரிப்பனின் முடிவில், கண்ணாடிக் கதவுகளை அணிந்துகொண்டு குளிர்வசதி பொருத்தப்பட்ட உணவகம் இருந்தது.

    வெள்ளுடைச் சேவகர்கள் கல்யாணக் கலகலப்புடன், மெனு கார்டும், செயற்கை சிரிப்புமாக ஓடிக் கொண்டிருக்க, சானல் இசை துரத்திக் கொண்டிருந்தது.

    வாசலில் வந்து நின்ற டாக்ஸியிலிருந்து இறங்கும் அந்த ஜோடியை நாமும் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா?

    முப்பது வயதே நிரம்பியிருந்த அந்த இளைஞன், ஆறடி உயரமும், நல்ல வெள்ளை கோதுமை நிறமுமாக, உருளை உருளையான உடம்புடன், மீசையில்லாத முகமுமாக ஒரு வடநாட்டுக்காரன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். சமீபத்திய ஷேவிங் பச்சை முகவாயில் புதிய வசீகரத்தை அப்பியிருக்க, ரிசப்ஷனை நெருங்கி விட்டான்.

    தன்னை ‘எம். சௌத்ரி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘ஏஸி டீலக்ஸ் டபுள் ரூம்’ கேட்டான். பிற வசதிகளைப் பற்றி விசாரித்தான்.

    உடன் வந்த அந்தப் பெண், அமைதியாக, அவனை உரசிக்கொண்டு நிற்க,

    அட்வான்ஸ் தொகையை, தன் புஷ்டியான பர்ஸ் திறந்து, கரன்ஸிகளை உருவிக் கொடுத்தான்.

    அவன் கையில் ஒரு பெரிய வீலர் சூட்கேஸ்.

    அவளிடம் ஒரு ப்ரீஃப் கேஸ்.

    சாவியைப் பெற்றுக் கொள்ள,

    பணியாளன் பெட்டிகளை வாங்கிக்கொண்டு, லிஃப்டுக்கு போனான்.

    நாலாவது மடியில், இவ்ர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை காத்திருக்க.

    உள்ளே நுழைந்தார்கள்.

    பணியாளன் விலகியதும்.

    கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் வந்து உட்கார்ந்தான் சௌத்ரி.

    அந்தப் பெண்ணை ‘ரேஷ்மா’ என்று அழைத்தான்.

    அவர்கள் பேசிக்கொண்டது அத்தனையும் ஹிந்தியில்தான். நம் வாசக வசதிக்காக அது தமிழாக்கப்படுகிறது.

    குளிப்பதற்கு தயாரானாள் ரேஷ்மா.

    டர்க்கி டவல், சோப், ஷாம்பூ செளகரியங்களுடன் பாத்ரூமுக்குப் புறப்பட்டு விட்டாள்.

    தன் மேலாக்கை நழுவ விட்ட ரேஷ்மாவுக்கு இரண்டு... இரண்டு பத்துகள் வயதிருக்கலாம். மிதமான உயரத்தில், கல்கத்தா ரஸகுல்லா போல தளதளப்பாக இருந்தாள். முகமும், அதிலுள்ள உறுப்புகளும், சமீபத்தில் காய்ச்சி இறக்கப்பட் பால்கோவா போல பளபளப்பாக இருந்தது.

    தன் மொத்த உடைகளுக்கும் விடுதலை கொடுத்துவிட்டு, ஷவரைத் திருக,

    அந்த பூச்சிதறல், பட்டு மேனியில் கோடுகள் வரைய ஆரம்பித்துவிட்டன.

    குளியல் முடித்து, காட்டன் ஹவுஸ் கோட்டில் புது புஷ்பமாக வெளிப்பட்டாள் ரேஷ்மா.

    பெட்டி திறந்து ட்ரையரை எடுத்து, ஷாம்பூ ஈரத்தைப் போக்க மின்சார இணைப்பைத் தேடினாள்.

    சௌத்ரியும் குளித்து முடித்துத் தயாராக,

    அவர்கள் பூட்டிக் கொண்டு, ரெஸ்ட்டாரென்ட் போகும் நேரம் சின்னதாக ஒரு பாரா!-

    கல்கத்தாவில் போன வாரம் காதல் திருமணம் செய்துகொண்டு கையோடு ஊட்டிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு (சௌத்ரிக்கு தனியார் நிறுவனமொன்றில்-எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் வேலை) ஊரைவிட்டுக் கிளம்பியவர்கள். சென்னையில் நாலு நாட்கள் தங்கி, தேனிலவை முடித்துக்கொண்டு, ஊட்டிக்குப்போக, நீலகிரி எக்ஸ்பிரஸில் ரிசர்வும் செய்தாயிற்று.

    ரெஸ்ட்டாரென்டில் டிபனை முடித்துக்கொண்டு, எழுந்த நிமிடம்,

    ‘நீ ரூமுக்குப் போ ரேஷ்மா... எனக்கு வெளில கொஞ்சம் வேலையிருக்கு!’

    ‘நானும் வர்றனே!’

    ‘நான் ஒரு மணி நேரத்துல வந்துர்றன்! விஸிட்டிங் கார்ட் அடிக்கக் கொடுக்கணும். நல்ல பிரஸ்ஸா பார்க்கணும். சீக்கிரம் வந்துர்றன்!’

    அவன் வெளியே போய் ஆட்டோவை அழைக்க,

    ரேஷ்மா லிஃப்டைப் புறக்கணித்து, படிகளில் நிதானமாக ஏறத் தொடங்கிகினாள்.

    அறைக்குள் நுழைந்து, படுக்கையில் உட்கார்ந்தாள்.

    பிரயாண அலுப்பு, சுகமான குளியல். சூடான உணவு மூன்றுமாக இமைகளை அழுத்த,

    அப்படியே சாய்ந்து கொண்டாள்.

    அடுத்த நிமிடமே தூங்கிப் போனாள்.

    நல்ல ஆழமான நித்திரை... கவலையில்லாத உறக்கம்... அத்தனை நிம்மதியாக, நிச்சலனமான நித்திரை இனிமேல் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை என்பது அப்போது தெரியாது ரேஷ்மாவுக்கு.

    2

    தூக்கம் கலைந்ததும்.

    வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

    அறை முழுவதும்

    Enjoying the preview?
    Page 1 of 1