Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Confucius, Burma Patriya Ariya Thagavalgal!
Confucius, Burma Patriya Ariya Thagavalgal!
Confucius, Burma Patriya Ariya Thagavalgal!
Ebook174 pages1 hour

Confucius, Burma Patriya Ariya Thagavalgal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூல், அண்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதில் முக்கியமாக இடம்பெறுவது சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றியும் பர்மா வரலாறு பற்றியும் உள்ள சுவையான செய்திகளாகும். இன்று புத்த மத நாடாகக் காட்சி தரும் பர்மா என்னும் மியான்மாரில் (Burma/Myanmar) ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்தோங்கி இருந்தது. அதற்கான சான்றுகளைத் தந்துள்ளேன். சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றி தமிழ் பத்திரிகைகள் கவனம் செலுத்தின; ஆனால் அவருடைய பொன்மொழிகள் அனைத்தும் நமது இந்து மத நூல்களில் உள்ள கருத்துக்கள்தான் என்பதை. இதுவரை யாரும் சுட்டிக் காட்டாததால் அவற்றை ஓரளவுக்கு கீதை, குறள், தமிழ், ஸம்ஸ்க்ருதப் பழமொழிகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580153510301
Confucius, Burma Patriya Ariya Thagavalgal!

Read more from London Swaminathan

Related to Confucius, Burma Patriya Ariya Thagavalgal!

Related ebooks

Related categories

Reviews for Confucius, Burma Patriya Ariya Thagavalgal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Confucius, Burma Patriya Ariya Thagavalgal! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள்!

    Confucius, Burma Patriya Ariya Thagavalgal!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் - 1

    2. ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் - 2

    3. கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1

    4. கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி? - Part 2

    5. கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

    6. இரண்டு முயல்களைத் துரத்தாதே! பரமஹம்சரும் கன்பூசியஸும்

    7. சினம்/கோபம்: கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்! - Part

    8. நல்லவை கேட்க! கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் - 2

    9. நம்பிக்கை: கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் - Part 3

    10. தமிழ்ப் பழமொழிகளில் கன்பூசியஸ் தத்துவம்

    11. அதிகம் அடிபட்டவர் சிவபெருமான்!

    12. அப்பர் பற்றிய அரிய தகவல்கள் - சொ. சொ. மீ. உரை

    13. சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன?

    14. ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை

    15. திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள் -1

    16. திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் - 2

    17. தெரிந்த ஊர், தெரிந்த கதை: புதிய விளக்கங்கள்!

    18. பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு!- 1

    19. பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் - 2

    20. பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள்

    21. பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் - 1

    22. பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் - 2

    23. பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப் பிள்ளையார்!

    24. பிஸினஸ் மேன் Business Man பற்றி குட்டிக்கதை

    25. தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு 45 அர்த்தம்!!

    26. நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்; லண்டனில் சிலை திறப்பு

    27. லண்டன் முருகன் தேர் திருவிழா

    London Skanda Temple Rath Yatra 2023

    28. இலண்டன் திருப்புகழ் விழா

    LONDON THIRUPPUGAZ FESTIVAL

    29. லண்டன் ஹரே கிருஷ்ண ரத யாத்ரா

    30. மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது

    31. ஆரூடம் கேட்பது, குறி சொல்லுவது உண்மையே! பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒப்புதல்

    முன்னுரை

    இந்த நூல், அண்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதில் முக்கியமாக இடம்பெறுவது சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றியும் பர்மா வரலாறு பற்றியும் உள்ள சுவையான செய்திகளாகும். இன்று புத்த மத நாடாகக் காட்சி தரும் பர்மா என்னும் மியான்மாரில் / Myanmar) ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்தோங்கி இருந்தது. அதற்கான சான்றுகளைத் தந்துள்ளேன். சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றி தமிழ் பத்திரிகைகள் கவனம் செலுத்தின; ஆனால் அவருடைய பொன்மொழிகள் அனைத்தும் நமது இந்து மத நூல்களில் உள்ள கருத்துக்கள்தான் என்பதை. இதுவரை யாரும் சுட்டிக் காட்டாததால் அவற்றை ஓரளவுக்கு கீதை, குறள் , தமிழ் , ஸம்ஸ்க்ருதப் பழ மொழிகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

    கட்டுரை எழுதிய காலத்தில் வந்த ஜோதிடச் செய்திகளும் ஆயுர்வேதச் செய்திகளும் கட்டுரைகளாக சேர்க்கப்பட்டுள்ளளன.

    இறுதியாக லண்டனில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய சிறிய விமர்சனங்களும் உள்ளன; முப்பது ஆண்டுகளாக நடந்து வரும் ஹரே கிருஷ்ணா இயக்க ரத யாத்திரை, லண்டன் முருகன் கோவில் ரத யாத்திரை, ஆண்டுதோறும் நடந்துவரும் திருப்புகழ் விழா, மற்றும் சகோதரி நிவேதிதா சிலைத் திறப்பு விழா ஆகியவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்; முடிந்த அளவு, படங்களையும் சேர்த்து இருக்கிறேன். அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே நோக்கம்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    Swami_48@yahoo.com

    செப்டம்பர் 2023

    Book Title

    கன்பூசியஸ், பர்மா பற்றிய

    அரிய தகவல்கள்!

    (ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன)

    1. ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் - 1

    Post No. 12,405

    Date uploaded in London – 12 August, 2023

    ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் அல்லோபதி ALLOPATHY என்பது நாம் இன்று டாக்டர்களிடம் பெரும் ஆங்கில சிகிச்சை முறை.

    ஆயுர்வேத சிகிச்சை AYURVEDIC TREATMENT என்பதன் தோற்றம் / ஆரம்பம் ரிக்வேதம், அதர்வண வேதத்திலேயே இருக்கிறது. இதனால் உலகின் பழைய மருத்துவ முறைகள் என்று சொல்ல முடியும்.

    சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் எழுதிய சம்ஸ்க்ருத மருத்துவ நூல்கள் உலகிலேயே பழைய மருத்துவ நூல்கள் ஆகும். இப்போதைய மருத்துவ மாணவர்கள் எடுக்கும் ஹிப்போக்ரடீஸ் உறுதி மொழிக்கும் Hippocratic Oath முன்னதாகவே மருத்துவர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழிகள் நமது நூல்களில் உள்ளன. இந்துக்களைப் பொறுத்தமட்டில் தன்வந்திரிதான் மருத்துவத்தின் தந்தை; கடவுளை டாக்டர் என்று அழைக்கும் ஓர் மதம் இந்துமதம்தான். பேஷஜம் பிஷக் என்று மருந்ததையும் மருத்துவத்தையும் குறிக்கும் சொற்கள் சிவ பெருமானின் பெயர்களாக யஜுர் வேதத்தில் வருகின்றன.

    சமய நூல்களில் குறிப்பிடும் பிணி, நோய் என்பது பவ ரோகம், அதாவது பிறவிப்பிணி (பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் நோய்) என்று எண்ணிவிடக்கூடாது அந்த நோயையும் உடலில் வரும் நோயையும் நமது துதிகள் குறிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி சந்நிதி இருப்பதைக் காணலாம். அவர்தான் மருத்துவத்தின் தந்தை; மேலும் அந்தக் கோவிலில் மருந்தாக மண் உருண்டை, உப்பு, மிளகு கொடுப்பதெல்லாம் பிறவிப்பிணி சம்பந்தப்பட்டதல்ல. உடல் பிணி தொடர்புடையன!

    Bheshajam – That which removes the fear is known as bheshajam. The one which is known by the bhishak(physician), which is helpful in his treatment is known as bheshajam.

    நம் நாட்டு மருத்துவ முறைக்கும் வெளிநாட்டு ஆங்கில மருத்துவ முறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மூன்று; அவை

    1.ஆங்கில மருத்துவம் , நோய் வந்த பின்னர் சிகிச்சை தருவது. ஆயுர்வேதம் என்பது நோய் வராமலேயே செய்து ஆயுளை வளர்ப்பது; இதையே இன்னும் ஒரு முறையிலும் சொல்லலாம்; வந்த பின்னர் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேல்

    2.ஆங்கில மருத்துவ முறை நோயை மட்டும் தாக்கும் , நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகளைத் தருவார்கள்; ஆனால் ஆயுர்வேத, சித்த மருத்துவம் முழுமையான அணுகுமுறை உடையவை; இதை ஆங்கிலத்தில் ஹோலிஸ்டிக் HOLISTIC என்பர்

    3.பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள்ANTI BIOTICS நம் உடலில் உள்ள ‘நன்மை செய்யும் பாக்டீரியா’க்களையும் கொன்றுவிடும். இந்திய டாக்டர்களாவது அதைச் சொல்லி வைடமின் மாத்திரைகளும் சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்கள்; லண்டன் போன்ற இடங்களில் அதையும் சொல்லுவதில்லை. இங்கு டாக்டர் சீட்டு இருந்தால்தான் அந்த வகை மாத்திரைகள் கிடைக்கும். பாக்டீரியாக்கள் அந்தவகை மாத்திரைகளையும் உண்டு, கொழுத்து, ஏப்பம் விட்டு விடுவதால் மேலை நாடுகளில், இந்தியா போல மருந்துக்கு கடைகளில் ANTI BIOTIC CAPSULES ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகளை வாங்க முடியாது.

    2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மத நூல்களும் பிரபல மருத்துவர்கள் பற்றிப் பேசுகின்றன..வேத காலத்தில் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டை மருத்துவர்கள் ஒரு பெண் கவிஞருக்கு செயற்கைக் கால் பொருத்திய அறுவைச் சிகிசிச்சையை ரிக் வேதம் பாடுகிறது; சங்க காலத் தமிழர்கள் பொற்கைப் பாண்டியனுக்கு தங்கத்தினால் ஆன செயற்கைக் கை பொருத்திய விஷயத்தைப் பேசுகிறது

    ***

    ஹோலிஸ்டிக் HOLISTIC என்றால் என்ன?

    நோயாளியை ஒரு முழு மனிதன் என்று கொண்டு, அவனது உணவு, உடல் வாகு, உறைவிடம், மன நிலை, வாழும் சூழ்நிலை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு சிகிச்சை தருவது இந்திய நாட்டு வைத்தியமாகும்

    characterized by the treatment of the whole person, taking into account mental and social factors, rather than just the symptoms of an illness.

    இதை இன்னும் ஒரு விஷயத்தால் அறியலாம். லண்டன் முதலிய இடங்களில் நான் டாக்டரிடம் போனால் அவர் , மருந்துச் சீட்டை எழுதிக்கொடுப்பார். ஆனால் உணவு பத்திய முறைகள் பற்றி எதுவுமே சொல்ல மாட்டார். சர்க்கரை வியாதி உடையவர்ளுக்கு மட்டும் இனிப்பு சாப்பிடாதீர்கள் என்பார்; கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புச் சத்து மிக அதிகமானால் எண்ணெய், வெண்ணெய் பதார்ர்த்தங்களை சாப்பிடாதீர்கள் என்பார். நம்முடைய முறையில் எல்லா நோய் சிகிச்சைகளிலும் பத்தியம் உண்டு

    சரகர் சொல்லும் அற்புத உவமை

    சரகர் தனது சம்ஹிதையில் ஒரு அற்புத உவமையைச் சொல்கிறார்; அவருக்கு நோய்கள் பற்றி எவ்வளவு ஆழமான அறிவு இருந்தது

    Enjoying the preview?
    Page 1 of 1